பின்பற்றுபவர்கள்

16 ஜூன், 2006

பூட்டு - ஒரு அவமானச் சின்னம்

எவரோ செய்யும் தவறுக்கு, பாதுகாப்பு என்ற காரணங்களுக்காக எல்லோரும் துன்பங்களை அனுபவிக்கிறோம். ஒரு துரோக சின்னம் எல்லோரிடத்திலும் இருக்கிறது அதைப்பற்றிய ஒரு சிறு கவிதை.பூட்டு - ஒரு அவமானச் சின்னம்

என்றோ ஒருநாள் நற்குணம் என்னும் மனித
சுவாசம் கெட்டு தன் இறுதிநாட்களை
எண்ணும் தருவாயில்,

அவநம்பிக்கை என்ற அப்பனுக்கும்,
துரோகம் என்ற தாய்க்கும் பிறந்த முதல்
குழந்தை நீ !

உன் பிறப்பே கோளாறு என்பதால்
கள்ள திறவுகோலுக்கும்
கதவை திறந்து விடுவாய் !

எந்த கைகள் பிடித்தாலும், உன் திறவுகோள்
திறக்கும், திறவுகோல் அந்த கைகளுக்கு
உறவா என்பது கூட உனக்கு தெரிவதில்லை !

நீ நம்பிக்கையின் சின்னமா ?
இல்லை இல்லை, எம்குலத்தின்
அவமானச் சின்னம் !

9 கருத்துகள்:

Suka சொன்னது…

கண்ணன்...

பார்த்து திண்டுக்கல்காரர்கள் யாராவது இருக்கப் போகிறார்கள்... :)

காப்பவை/காப்பவர்கள் அனைவருமே ஒருவிதத்தில் பூட்டு தானே ! காத்தல் தானே உயிர் வாழ்க்கை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//காப்பவை/காப்பவர்கள் அனைவருமே ஒருவிதத்தில் பூட்டு தானே ! காத்தல் தானே உயிர்
வாழ்க்கை //
இவற்றை கடமையென்று நினைக்கிறேன். நான் பேசுவது நம்பிக்கையின்மை பற்றி. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

SK சொன்னது…

என்னை வடித்தது நீ!
என்னைப் போட்டது நீ1
என்னை இகழும் முன்னர்
உன்னைத் திரும்பிப் பார்!
உனக்கே தெரியும்
யாரிங்கே அவமானச் சின்னமென்று!

அப்பனும் நீயே!
ஆத்தாளும் நீயே!
என் ஜனனம் பொய்யென்றால்
யாருக்கு அவமானம்
உனக்கே தெரியும் போ!

யார் தொடுத்தாலும்
திறப்பவன் நான்!
அதிலென்ன அவமானம்!
மனித நேயம் புரியவில்லையா?
புனித எண்ணம் விளங்கவில்லையா?

பிறப்பே கோளாறென்றால்
பிறந்தவர் குற்றமா?
பிறப்பித்தவர் குற்றமா?
மறுப்பேதும் சொல்லாமல்
இருப்பதைச் சொல்லிவிடு!

நீ நம்பும் வரையில்
நானும் நம்பிக்கைச் சின்னம்!
நம்பாமல் இகழ்ந்திடிலோ
அவமானச் சின்னம்தான்...
உன் அடையாளமாய்!

பூட்டென்றால் அணிகலன்
அணிகலனை அடைக்கலமாய்ப்
படைத்தது யாரிங்கு?
பெற்றவரை விட்டிங்கு
பூட்டென்னைத் திட்டுவதால்
யாருக்கு என்ன பயன்!?

கோவி.கண்ணன் சொன்னது…

//பூட்டென்னைத் திட்டுவதால்
யாருக்கு என்ன பயன்!? //
எஸ்கே, பூட்டின் பெயரில் அவநம்பிக்கையைப் பற்றித்தான் சாடி இருக்கிறேன். பூட்டு அது என்ன செய்யும் அது ஒரு அஃறிணை பொருளன்றோ.

J.S.ஞானசேகர் சொன்னது…

மேலை நாடுகளில் ஒரு பழமொழி உண்டு : "ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் - பூட்டு".

-ஞானசேகர்

கோவி.கண்ணன் சொன்னது…

அன்பு ஞானசேகர்,
உங்களின் மேற்கோளுக்கும் வருகைக்கும் நன்றி

யாத்திரீகன் சொன்னது…

@sk:
wonderpul...!!! :-)

ப்ரியன் சொன்னது…

அருமையான கவிதை கண்ணன்!

பூட்டு க்கு அப்பன் கதவு!

கோவி.கண்ணன் சொன்னது…

ப்ரியன், யாத்ரீகன் உங்கள் வருகைக்கும், பின்னூட்ட பின்னலுக்கும் நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்