பின்பற்றுபவர்கள்

21 ஜூன், 2006

சிவப்பு ஆறு !

ஆறு போடுங்கள் என்று நண்பர் பச்சோந்தி (திரு.ராம்பிரசாத்) அழைத்ததன் பேரில், அளந்து போடுகிறேன்.

ஆறுபேரில் ஒருவராக பிறந்ததால் ஆறின் மீது ஆறாத மோகம் உண்டு. அம்மாவும் அவருடன் கூடப்பிறந்தவர்களும் அறுவர். என் பெற்றோருக்கு பேரக் குழந்தைகளும் அறுவர்.

மாத,பிதா,குரு ... என்ற அடிப்படையில் ஆசிரியர்கள்.

மறக்கமுடியாத ஆறு ஆசிரியர்கள் :
1. இரண்டாம் வகுப்பு நேசம்மா டீச்சர்
2. நான்காம் வகுப்பு ஹரிதாஸ் வாத்தியார்
3. ஏழாம் வகுப்பு ஆசிரியர் ராஜகோபல் அய்யங்கார்
4. பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் அரங்க.சுப்பையா
5. பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி
6. கின்டிபொறியியல் கல்லூரி விரிவுரையாளர் சண்முகவேலு

இந்த ஆசிரியர்களிடம் படித்த பாடம் என் நினைவை விட்டு நீங்காதவை.


பிடித்த தமிழர்கள்:
1. திரு சுகி.சிவம்
2. திரு டி.எம்.சவுந்தர்ராஜன்
3. திரு. வலம்புரிஜான்
4. கலைஞர்
5. கவிக்கோ.அப்துல்ரகுமான்
6. தென்கச்சி சாமிநாதன்

பிடித்த கவிஞர்கள்:
1. கவியரசு. கண்ணதாசன்
2. கவிஞர்.வாலி
3. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
4. கவிஞர்.நா.காமராசன்
5. கவிதாயினி.தாமரை
6. கவிஞர் வைரமுத்து
(ஆறுக்குமேல் எழுதக்கூடாதா ?)


தமிழ் அறிஞர்கள் அறுவர்:

1. மொழிஞாயிறு.தேவனேய பாவாணர்
2. பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரிகள்
3. தமிழ் தாத்தா உ.வே.சாமினாத அய்யர்
4. வள்ளலார் இராமலிங்க அடிகளார்
5. திருமுருக கிருபாணந்த வாரியார்
6. மறைமலை அடிகளார்

எழுத்தாளர் அறுவர் :

1. புதுமைபித்தன்
2. சிவசங்கரி
3. ராஜேந்திரகுமார்
4. சு.சமுத்திரம்
5. ஜெயகாந்தன்
6. சுஜாதா

பிடித்த ஆறு பாடல்கள்:
1. உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்
2. பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல்
3. துள்ளி துள்ளி நீ பாடம்மா - சிப்பிக்குள் முத்து
4. வெள்ளி பனிமலையில் மீது - கட்ட பொம்மன்
5. காதலின் தீபம் ஒன்று - உன் கண்ணில் நீர்வழிந்தால்
6. ருக்கு ருக்கு ருக்கு - அவ்வை சண்முகி


பிடித்த உணவு :
1. உருளைகிழங்கில் செய்த சைவ உணவு அனைத்தும்
2. தோசையும் வடைகறியும்
3. சரவணபவன் சாப்பாடு
4. தந்தூரி நாண்
5. சைனீஸ் வெஜிடேரியன்
6. மசாலா சுண்டல்

வலைப்பக்கம் தலைவைத்து படுப்பது :
1. தமிழ்மணம்
2. தேன்கூடு
3. தமிழ் ஓவியம்
4. திண்ணை
5. பதிவுகள்
6. புதுமை.காம்

அதிகம் திரும்பி பார்க்கவைக்கும் வலைப்பதிவாளர்கள் :

1.ஞான வெட்டியான்
2.குமரன்
3.பச்சோந்தி
4.முத்து தமிழினி
5.செந்தழல் ரவி
6.மாயவரத்தான்

பொழுது போக்கு :
1. நண்பர்களுடன் நகர்வலம்
2. கவிதை எழுதி இம்சிப்பது
3. கதை எழுத முயற்சிப்பது
4. வலை மேய்வது
5. பாதியின் பதியானதால் பாதிவேலையை பகிர்ந்துகொள்வது
6. ஆறுவயது மகளுடன் விளையாடுவதுசரி தலைப்புக்கு வருவோம்,
எல்லோரையும் போல எனக்கும் பிடிக்காத ஒரு ஆறு உண்டு என்றால் அது இரத்த ஆறுதான்.

சிலருக்கு சில விசயங்கள் மட்டுமே பிடிக்கும் என்று, ஒரு சிலரின் சார்பு நிலைமூலம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அதையும் தாண்டி பிடித்தவிசயங்கள் நிறைய இருக்கலாம், என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது, எனவே தங்களுக்கு பிடித்த ஆறுகளைப் பற்றி 'கவுச்சி' இல்லாமல் எழுதவேண்டும் என்று நான் விருப்புடன் அழைக்கும் வலைப்பதிவாளர்கள் இவர்கள். அவர்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிடுபவர்கள் அவர்களிடம் இந்த அழைப்பை சுட்டினால் நன்று.

1. நல்லடியார் - நல்லடியார் ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... 'ஆறு'தல்
2. நேச குமார்
3. விடாது கறுப்பு - கறுப்பு ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... பகுத்தாறு
4. விட்டது சிகப்பு
5. மியூஸ்
6. சுவனப்பிரியன் - அவர்கள் காட்டிய எனக்கு பிடித்த ஆறு
9 கருத்துகள்:

Chameleon - பச்சோந்தி சொன்னது…

பல விஷயங்கள் உங்கள் பட்டியலுடன் நான் ஒத்துப் போகிறேன்.
'like' mind.

:)

உங்கள் முந்தைய சீனா கோவணக் கவிதைப் படித்துவிட்டு சிவப்பு ஆறு ஏதோ கம்யூனிஸ்ட் தொடர்பாக இருக்கும் என்று எண்ணி ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் முந்தைய சீனா கோவணக் கவிதைப் படித்துவிட்டு சிவப்பு ஆறு ஏதோ கம்யூனிஸ்ட் தொடர்பாக இருக்கும் என்று எண்ணி ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே. //
ஏமாற்றமா ? ஆறு போட நான் அழைத்த பதிவர் பெயர் பட்டியலைப் பாருங்கள் ... புரட்சித் தெரியவில்லையா ?

நாகை சிவா சொன்னது…

நன்றாக உள்ளது.
மகிழ்ந்தது மறைமலை அடிகளாரின் பெயரை கண்டு.
ரசித்தது பாதியின் பதியானதால் பாதிவேலையை பகிர்ந்து கொள்வது மற்றும் கவிதை எழுதி இம்சிப்பது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
நன்றாக உள்ளது.
மகிழ்ந்தது மறைமலை அடிகளாரின் பெயரை கண்டு.
ரசித்தது
//
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சிவா

கோவி.கண்ணன் சொன்னது…

என் அழைப்பை ஏற்று ஆறுகளை கூறுபோட்ட விடாத கறுப்புக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

நேச குமாரின் பதிவில் அவர் இட்ட பின்னூட்டம் ...

At 6:30 PM, நேச குமார் said...
கோவி கண்ணன்,


தற்போது வேலைப்பளுவில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றேன். பிறகு பார்க்கலாம். அழைப்புக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

என் அழைப்பை ஏற்று ஆறு போட்ட விடாது கறுப்பு அவர்களுக்கும் ... நல்லடியார் அவர்களுக்கும் நன்றி !

சுவனப்பிரியன் சொன்னது…

கோவிக் கண்ணன்! உங்கள் விருப்பப்படி பிடித்த ஆறு போட்டாகி விட்டது.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

http://suvanappiriyan.blogspot.com/2006/07/blog-post_10.html

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
கோவிக் கண்ணன்! உங்கள் விருப்பப்படி பிடித்த ஆறு போட்டாகி விட்டது.
//
நன்றி சுவனப்பிரியன் அவர்களே ... உங்கள் ஆற்றில் நீந்தி கரையேறிவிட்டேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்