சில மனிதர்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு சலனம் ஏற்படுகிறது ? இவர்களால் எப்படி வாழ முடிகிறது என்ற கேள்வி இதயத்தை பிழிவது எல்லோருக்குமே ஏற்படும் உணர்வு. சில கேள்விகள் ஏற்படும் பொழுது பதில் அதிலேயே இருக்கும். நாம் தான் புரிந்து கொள்வதில்லை.
குறை ஒன்றும் இல்லை ...
விண் மீன்கள் அருகருகே இருந்தாலும்
கண் மீன்கள் இல்லாததால்,
வண்ணங்களைக் கண்டிடாத
இருண்ட வானம் எனது.
ஐம்புலனில் ஒரு புலன்
பலன் இன்றி புண்ணாகிப் போனாலும்,
தலைகோதும் தாய்விரல் அன்பையும்,
பூக்களின் பரிசம் மென்மையையும்,
வீசும் தென்றல் நறுமண வாசத்தையும்,
வாதியங்கள் இசை அமுதையும்,
கைப் பிடிக்கும் கரங்கள் மூலம்
மனிதநேயத்தையும் அறிந்து கொண்டேன் !
வெற்றி நடைபோட்ட என்னிடம்
கண் இல்லை யென்பதால்
காய்க்காமல் இருந்ததில்லை என
உரசிச் சொன்னது ஒரு மரம்.
விழியில்லை என்று வண்ணமாக
பூக்காமல் இருந்ததில்லை என்று
முட்களால் தைத்துச் சொன்னது
ரோஜாச் செடி !
அகக்கண் திறந்து நாற்புலன்களில்
நானிலம் அறிந்தேன் !
அழகு இலக்கணம் தெரியாத குறை
சிலக்கனங்களாவது உனக்கில்லையா ?
அன்பாக கேட்ட அன்பரிடம்
அன்பாக நான் சொன்னேன்,
விழியில்லை என்பதால்
தொலைந்து போனது
பார்க்கக் கூடாத அவலங்களும் தானே !
என்னிடம்,
குறையொன்றும் இல்லை !
குறையொன்றும் இல்லை !
4 கருத்துகள்:
//பூக்காமல் இருந்ததில்லை என்று
முட்களால் தைத்துச் சொன்னது
ரோஜாச் செடி//
அருமை நண்பரே, புதிய கோணம்.
//
ILA(a)இளா said...
அருமை நண்பரே, புதிய கோணம்.
//
நிறைவாக வாழ்ட்திய இளைய தல "இள" க்கு நன்றி
- இவண் சின்னப்புள்ளையின் எடுபிடி
//விழியில்லை என்பதால்
தொலைந்து போனது
பார்க்கக் கூடாத அவலங்களும் தானே !//
கவிதை பாஸிடிவ்வாக உள்ளது. நிஜத்தில் சிலநேரம் நாம்தான் கண்ணிருந்தும் குருடராய் வாழ்கிறோம்.
//
விண் மீன்கள் அருகருகே இருந்தாலும்
கண் மீன்கள் இல்லாததால்,
வண்ணங்களைக் கண்டிடாத
இருண்ட வானம் எனது.
//
கவிதை அருமை.
கருத்துரையிடுக