பின்பற்றுபவர்கள்

23 ஜூன், 2006

வடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)

வடிவேலு முறுக்கு டின்னை சைக்கிளில் கட்டிக்கொண்டு ஓட்டியபடி, ஒரு குறுக்கு சந்தில் கூவிக் கொண்டே வருகிறார்...

வடிவேலு : முறுக்கு முறுக்கு ... அம்மா முறுக்கு முறுக்கு ... தம்பி முறுக்கு முறுக்கு ... அரிசி முறுக்கு ... நெய் முறுக்கு ... ஐயா வாங்குங்க அம்மா வாங்குங்க ... ஆத்தா பாத்து பாத்து செஞ்ச கைமுறுக்கு...

திடிரென்று சைக்கிள் பஞ்சராக, சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்துகிறார்.

அந்த நேரம் பார்த்து விசிலடித்துக் கொண்டே சைக்கிளில் வரும் பார்த்திபன் வடிவேலுவை பார்த்துவிடுகிறார். அதை வடிவேலு கவனித்துவிட்டு, பார்க்காதது போல் குனிந்து சைக்கிள் டயரை சீரியசாக பார்கிறார்.

நிதானமாக சைக்கிளில் இருந்து இறங்கிய பார்த்திபன், கிடை ஆடு தனியாக மாட்டிய சந்தோசத்தில் வடிவோலுவிடம் பேச்சு கொடுக்கிறார்.

பார்திபன் : வடிவேலு ?
வடிவேலு : ய்ய...யாருப்பா நீ .... என்று பார்க்காத்தது போல் இழுத்துவிட்டு .... நீ.....யா ?
பார்திபன் : சரி நான் தான் இருக்கட்டும் ... நீ எப்படி இங்க ...
வடிவேலு : ம் ... சைக்கிளுக்கு டயரு இருக்கான்னு பாக்கிறேன் ... நீ கொஞ்சம் பாத்துதான் சொல்றது
பார்திபன் : மிஸ்டர் வடிவேல் நீங்க என்னை தப்பா நெனெச்சுக்கிட்டு இருக்கிங்க ...

கெஞ்சியபடி ...
வடிவேலு : யப்பா யப்பா நான் ஒன்னும் தப்பா நினைக்கிலப்பா, என்ன உடு ... நீ எதுக்கு இங்க வந்தே ?
பார்திபன் : எனக்கு மாடுவாங்க பணம் கொடுத்தெ இல்லெ ... அத ...
வடிவேலு : குடு .. குடு ... சீக்கிரமா குடுத்துட்டு போப்பா ... யப்பா.... யப்பா ஒன்ன தப்பு தப்பா நினெச்சிட்டேம்பா.
வடிவேலு : தப்பு ... பண்ணிட்டம்பா தப்பு .... (உருகுகிறார்)

நக்கலாக,
பார்திபன் : இப்பவும் தப்பு தப்பாதான் புரிஞ்சிக்கிட்டே, நான் உன் கிட்ட பணம் கொடுக்கப் போறேன்னு சொல்லவேயில்ல அதுக்குள்ள அவசரகுடுக்கையாட்டம்...

பணம் வராது என்று மிரண்டபடி..
வடிவேலு : சரி நான் தான் தப்பு பண்ணிடேன்னு வெச்சுக்க ...
பார்திபன் : அட நானும் அத தாம்பா தான் சொல்றேன் ...
வடிவேலு : எந்த எழவோ இருக்கட்டும் ... சரி பணம் கொடுக்க வரலை பின்ன எதுக்கு வந்தே ?

பார்திபன் : அப்படி விவரமா கேளு... பணம் அடுத்த மாசம் தரலாம்னு யோசனைப் பண்ணி ... அதை உன்கிங்ட்ட சொல்லத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்.

வடிவேலு : அப்ப நீ பணம் குடுக்க வரலையா ...
வடிவேலு : நாமம் போட்டுடான்யா போட்டுடான் ...
என்று புலம்புகிறார்

பார்திபன் : மிஸ்டர் வடிவேலு ரொம்ப புலம்பாதிங்க ... உன் பணத்தை எண்ணி உன்கிட்ட கொடுத்திடுறேன்... ஆனா ஒரு விசயம் எனக்கு தெரிஞ்சாவனும்
வடிவேலு : என்னப்பா தெரியனும் ?
பார்திபன் : நீ இப்ப ... இங்க... என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
வடிவேலு : ம்... பாத்த தெரியல... முறுக்கு விக்கிறேன் முறுக்கு
பார்திபன் : எங்க இன்னொரு தரம் சொல்லு பார்க்கலாம் என்ன விக்கிற ?
வடிவேலு : கேட்டுத்தான் பாரேன் ... முறுக்கு முறுக்கு
என்று கூவிகாட்டுகிறார்

பார்திபன் : ரெண்டு முறுக்கு விக்கிறியா ?
வடிவேலு : ரெண்டு முறுக்கு இல்லப்ப, மூனு முறுக்கு ரூவாய்கு மூனு முறுக்கு
பார்திபன் : முறுக்கு தானே விக்கிறே, அப்பறம் ஏன் முறுக்கு முறுக்குன்னு ரெண்டு தரம் சொல்ற, முறுக்குன்னு சொல்லி வித்தா விக்காதா ? முறுக்கு முறுக்குன்னு அடுக்கி சொன்னா தான் விக்குமா ?
வடிவேலு : யப்பா யப்பா... ஊரு உலகத்துல உள்ளவங்க எல்லாமே முறுக்கு முறுக்குன்னு தானே விப்பாங்க .. இது என்ன வில்லங்கமா இருக்கு ?
பார்திபன் : சரி சரி இன்னொருதரம் சொல்லு போய்டுறேன்
'விடமாட்டான் போல ... எப்படியோ போய் தொலையிறேன் சொல்கிறானே' என்று நினைத்த வடிவேலு. கூவி காட்டுகிறார்
வடிவேலு : முறுக்கு... முறுக்கு... நெய்முறுக்கு... முறுக்கு வாங்கலையோ முறுக்கு ... போதுமாப்பா ?... நீ கெளம்பு..
பார்திபன் : என்னது கிளம்பனுமா ... என்ன சொன்ன நெய்முறுக்கா ? எங்க ஒன்னு குடு தின்னு பார்கிறேன்

மனதில் அழுதபடி வடிவேலு எடுத்து கொடுக்கிறார். பார்திபன் வாங்கி கடித்துவிட்டு வேகமாக துப்புகிறார்.
பார்திபன் : தூ .. இது நெய்முறுக்கா ?
வடிவேலு : என்ன அப்படி கேட்டுப்புட்ட .... நெய் முறுக்கு இல்லாட்டி வேற என்ன முறுக்காம் ?
பார்திபன் : இது நெய் முறுக்கு இல்ல ... பொய் முறுக்கு
வடிவேலு : என்னப்பு சொல்லுறிய ...?
பார்திபன் : அதான் பாத்தேனே ... கலையில நீ செட்டியார் கடையில ... 'யோவ் செட்டி ..பாமாயில் அஞ்சு லிட்டுருரு.. பாத்து ஊத்து ... ஒரு சொட்டு குறைஞ்சாலும் ஒனக்கு உடம்புல உயிரு தங்காது' ன்னு சவுன்டு உட்டத
வடிவேலு : பாத்துட்டான்யா பாத்துட்டான் ...ஆமாப்பா ... இந்த முறுக்கெல்லாம் பாமாயில்ல செஞ்சது தான் ... ஒரே ஒரு கரண்டி மட்டும் தான் நெய் உத்தினேன். இப்ப என்ன செய்யனும்கிற...
பார்திபன் : அப்ப எதுக்கு பாமாயில் முறுக்க .. நெய்முறுக்குன்னு பொய் சொல்லி விக்கிறே ?
வடிவேலு : ஊரு ஒலகத்துல எல்லாரும் செய்யறத தாம்ப்பா நானும் செய்றேன் ... உட்டுடுபா
பார்திபன் : உடுறதா ... நீ பாமாயில் முறுக்குன்னு கூவி விக்கிறத பாக்காம நான் எடத்த காலிபண்ண மாட்டேன்.
வடிவேலு : நின்னுட்டான்யா .... நின்னுட்டான் ... அப்படியெல்லாம் சொன்ன ஒருத்தனும் வாங்க மாட்டான்யா
பார்திபன் : அப்ப பொய் சொல்லி பொழப்பு நடத்துற ... இல்லே ?

வடிவேலு பற்களை நரநர வென்று கடித்த படி.. முறுக்கு டின்னை எடுத்து தலைகீழாக ரோட்டில் முறுக்குகள் எல்லாவற்றையும் கொட்டி கோபமாக,
வடிவேலு : கெடுத்துட்டான்யா ... கெடுத்துட்டான் ... எம் பொழப்ப கெடுத்துட்டான்
என்று சட்டைய கிழித்துக் கொள்கிறார்

அந்த நேரம் பார்த்து ஒரு மனநல மருத்துவமனை வேன்வர ... பார்திபன் கையை நீட்டி நிறுத்தி வடிவேலுவை காட்டுகிறார்

பார்திபன் : சார் பாருங்க ... யாரோ முறுக்கு காரனை அடித்து துரத்திவிட்டு ... எல்லாத்தையும் கொட்டிட்டு நிக்கிறான் ... அவன் தான் புடிச்சிட்டு போங்க ...

வடிவேலு துள்ள துள்ள அள்ளிச் செல்கிறார்கள்

வடிவேலு : நீ நல்ல இருப்பியா ? ... பாவி பாவி
என்று கத்தியபடி இருக்க வேனில் திணிக்கபடுகிறார்

கீழே கிடந்த முறுக்கு ஒன்றை எடுத்து கடித்த பார்த்திபன்.

பார்திபன் : நல்லா இருக்கே ... நெசமாவே நெய் முருக்குதான் ... வடிவேல் மிஸ்டர் வடிவேல் ...

வேன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டிருந்தது

21 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றாக உள்ளது. சங்கத்தில் சேர்வதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கு. எங்கே தல கைப்பூ.
இப்ப சிங்கையில் மணி 12.30 மேல் ஆகுது. என்ன இது சின்னபுளத்தனமா இருக்கு. அங்கேயும் தண்ணி தெளிச்சு விட்டாச்சா?

பெயரில்லா சொன்னது…

நன்றாக உள்ளது. சங்கத்தில் சேர்வதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கு. எங்கே தல கைப்பூ.
இப்ப சிங்கையில் மணி 12.30 மேல் ஆகுது. என்ன இது சின்னபுளத்தனமா இன்னும் வலைப்பக்கத்தில் சுத்திகிட்டு?. அங்கேயும் தண்ணி தெளிச்சு விட்டாச்சா?

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said... அங்கேயும் தண்ணி தெளிச்சு விட்டாச்சா? //
சிவா, அலுவலகத்தில் நேரமின்மையால் பதிவுகளைப்பார்க்க முடிவதில்லை. நாளைக்கு சனிக்கிழமை பத்துமணிவரைக்கும் தூங்கலாம்

பெயரில்லா சொன்னது…

ஹம்... ஹம்... நடத்துங்க....
கவுண்டர், செந்தில் காமெடி சூப்பர்.
ஹக்கூவும் நச்சுனு இருக்கு...

பெயரில்லா சொன்னது…

அய்யோ, அய்யோ போயே போச்சே!

இவங்க காமெடியில கலக்குறாங்களே. நன்றாக ஆரம்பிச்சாட்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க....

இன்னும் என்னெல்லாம் எழுதி எங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்து படுத்தப்போறாரோ இந்த கண்ணன் தெரியலயே,

யப்பாடி.... இப்பவே கண்ண கட்டுதே.. என்ன சொல்லி என்ன செய்ய ....

சரி சரி நல்லா நடத்துங்க...

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா சைட்...
ஹம்... ஹம்... நடத்துங்க....
கவுண்டர், செந்தில் காமெடி சூப்பர்.
ஹக்கூவும் நச்சுனு இருக்கு... //
மீண்டும் வந்து பாராட்டியதற்கு நன்றி சிவா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜயராமன் said... இன்னும் என்னெல்லாம் எழுதி எங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்து படுத்தப்போறாரோ இந்த கண்ணன் தெரியலயே,//
ஜெயராமன் சார்,
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப்போகுன்னு சொல்லாறங்களே... படிக்கிறவங்க சிரிக்கிறாங்களோ இல்லையோ... இந்த மாதிரி டயலாக் எழுதுறப்ப நிஜமாகவே ஆபிஸ்டென்சன், எல்லா டென்சன் எல்லாம் குறையுது.

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி... அடிக்கடி வந்துட்டு போங்க

பெயரில்லா சொன்னது…

கவுண்டமணி - செந்தில் காமெடிப் பதிவில் இருந்த பஞ்ச் இதில் கொஞ்சம் கம்மி என்றுதான் சொல்லமுடியும்.

வடிவேலு - பார்த்திபன் காமெடியின் உயிர்நாடியே, அடுத்தடுத்து வேகவேகமாக ஒருவருக்கொருவர் [எத்தனை ரெட்டைக்கிளவி!] பரிமாறிக்கொள்ளும் இடக்கல்-மடக்கல்கள்தான்.

கீழே கிடந்த முறுக்கை பார்த்திபன் எடுத்துச் சுவைப்பது, அவர் செய்வது அல்ல!

நன்றாக காமெடி எழுதுகிறீர்கள் என்பதால் கொஞ்சம் உரிமயோடு சொல்லியிருக்கிறேன்.
தவறாக எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நன்றாக காமெடி எழுதுகிறீர்கள் என்பதால் கொஞ்சம் உரிமயோடு சொல்லியிருக்கிறேன்.
தவறாக எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன். //
உங்கள போய் ஏன் தப்பா நினைக்கப் போகிறேன் ?. எதிர் துருவங்கள் இல்லையென்றால் இயக்கம் இல்லை என்று நம்புகிறவன் நான். ஓத்த கருத்துக்களைவிட எதிர் கருத்துகளைத்தான் அதிகம் வரவேற்பேன். நன்றி. (தத்துவம் தப்பா எடுத்துக்காதிங்க :):):)

பெயரில்லா சொன்னது…

கலக்குங்க. நல்லா இருக்கு.

பி.கு: இருப்பது சிங்கையா?

நிஜமாவே அங்கிருந்து நெய்/கை முறுக்கு இப்பத்தான் வந்துருக்கு:-)))

பெயரில்லா சொன்னது…

நிம்மதியா ஒரு முறுக்கு விக்கக் கூட விட மாட்றாங்கைய்யா...ஹ்ம்ம்ம். ஒடனே அத வலைப்பூவுல ஏத்திற வேண்டியது :(

கண்ணன்...காமெடி நல்லாருக்குங்க. கவுண்டமணி காமெடி ட்ராக் வேற எழுதிருக்கீங்களா? அதையும் படிச்சி பாக்குறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கைப்புள்ள said...
நிம்மதியா ஒரு முறுக்கு விக்கக் கூட விட //

கைப்பு, எங்கிட்ட மாட்டிடிங்கல்ல, பாருங்க பாருங்க...
கிளம்பின்டாய்யா ... ஒருதன் புதுசா கிளம்பிட்டான் .... சொல்லத்தான் போறிங்க

கோவி.கண்ணன் சொன்னது…

துளசியக்கா,
வாங்கக்கா, சிங்கையில் தான் இருக்கேன்... நீங்கள் சிங்கை வந்து சென்றது உங்கள் பதிவைப் பார்த்ததும் தான் தெரிந்தது.
ஜெயந்தி அக்காவை கூடத் தெரியும் ... அவுங்களோட புத்தக வெளியீட்டுக்கு நிகழ்ச்சிக்கு போயிருக்கேன். ஆனால் அவுங்களுக்கு என்னைத் தெரியாது.

ஊரிலிருந்து வந்த முறுக்கு அசல் நெய்யினால் செய்யப்பட்ட முறுக்கு தானே. :)

பெயரில்லா சொன்னது…

காமெடி டிராக்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இந்தப் படிச்சுப் பார்த்தா ஏதோ சினிமாவில் நிஜமாவே பார்த்த எஃபெட் கிடைக்குது. பார்த்து ஏதாவது அடுத்த புது சினிமாவில இது வந்துட போகுது.

:)

வயிற்றுவலியுடன்
பச்சோந்தி

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாதே

ஏதோ நம்மலாள முடிஞ்சது..........:)

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாதே ஏதோ நம்மலாள முடிஞ்சது..........:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வயிற்றுவலியுடன்
பச்சோந்தி//
தல,
இது கொஞ்சம் ஓவர் டோஸ் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னுது மின்னல் said...
நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாதே //
அடேங்கப்பா,
கைப்பு கலாய்கனுனே ஒரு கோஸ்டியா அளயுறாங்கெ

பெயரில்லா சொன்னது…

கற்பனையில் வடிவேலு பரிதாபமாக இருக்கிறார். நன்றாக எழுதுகுறீர்கள். சிங்கப்பூர் வாசனா???"தெக்கா" மாக்கட் எப்பிடி இருக்கு!!!
யோகன் பாரிஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//paarvai said...
கற்பனையில் வடிவேலு பரிதாபமாக இருக்கிறார். நன்றாக எழுதுகுறீர்கள். சிங்கப்பூர் வாசனா???"தெக்கா" மாக்கட் எப்பிடி இருக்கு!!!
யோகன் பாரிஸ் //
சிங்கை சொந்த ஊர் அல்ல, வந்த ஊர்... தேகா மார்கெட்... ? எப்பவும் போல ஞாயிற்றுக்கிழமை கூட்டம் தான்.

நாமக்கல் சிபி சொன்னது…

கைப்புள்ளையைக் கலாய்த்து முறுக்கைக் கொட்டவைத்த கோவியார் வாழ்க!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்