பின்பற்றுபவர்கள்

15 செப்டம்பர், 2009

மதங்கள் கிழக்கும் மேற்கும் !

கிறித்துவம், பவுத்தம், இஸ்லாம் ஆகிய பெரிய மதங்கள் அனைத்தும் ஆசிய நிலப்பரப்பில் (ஒரே நிலப்பரப்பில்) தோன்றியவை என்றாலும், இன்றைய பண்பாட்டு கூறுகளில் அவற்றை கிழக்கு மதம் மேற்கு மதம் என்று பிரித்து சொல்வது பொருத்தமானவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேற்குலகில் அறியப்படும் மதங்கள் என்றால் அது கிறித்துவம், இஸ்லாம், தெற்காசிய, தென்கிழக்கு மதங்களான புத்தம், மற்றும் இந்து மதம் ஆகும், இந்து மதமும் புத்தமதமும் பழக்க வழக்க நம்பிக்கைளில் (சொர்கம், நரகம், நிர்வாணம்) ஒற்றுமை நிலவுவதால் அவற்றை இந்தியச் மதம் அல்லது இந்து மதம் என்ற பிரிவுக்குள் அடக்கிவிடுவர். ஆசிய நாடுகள் தவிர்த்து பிற நாடுகளில் மதம் மாறுபவர்கள் கிறித்துவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கோ, இஸ்லாமிலிருந்து கிறித்துவத்திற்கோ தான் மாறுவார்கள். அவர்களைப் பொருத்து மதம் என்றால் இறைத் தூதரால் ஏற்படுத்தப்பட்டதே மதம் என்பதாகவே நினைக்கின்றனர். காரணம் கத்தோலிக்க கிறித்துவம் ஏசு கிறிஸ்து மற்றும் இஸ்லாம் மதம் முகமது நபியால் தோற்றுவிக்கப்பட்டது என்பதே வரலாறு.

ஆன்மிகம் என்பதே மத அடிப்படையிலானது என்பதே மேற்கத்திய புரிதல். உள்ளுணர்வு, தேடல், ஆன்மா என்பதெல்லாம் மேற்கத்திய மதங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடையாது. மதம் என்பது வாழ்க்கை முறை அதை மாற்றி அமைத்துக் கொள்ளும் வழிவகைகளில் மதங்கள் வரையறை செய்து உதவுவதாகவும் கூடவே பலனாக அம்மதத்து சொர்க்கம் கிடைப்பதாகவே மேற்கத்திய நம்பிக்கை.

சீன புத்தர்
இந்திய புத்தர்இந்திய மதங்களை மேற்குலகத்தினர் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் 'உருவ' வழிபாடே, இந்திய கடவுளர்கள் அனைவர் முகமும் இந்தியர்களின் முகங்களைப் போல் இருப்பதால் இந்திய சமயத்திற்கு மாறும் போது இந்தியனை கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டி வருமோ என்கிற ஒவ்வா எண்ணமே இந்திய சமயங்கள் பிற நாடுகளில் பரவாமல் போனதற்குக் காரணம், புத்தரை ஆசியர்கள் ஏற்றுக் கொண்டாலும், புத்தர் சிலைகளில் புத்தரின் முகம் அந்தந்த நாட்டினர் சாயலிலேயே அமைக்கப்படுகிறது. ஏசு கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொள்வதிலும் இதே நிலை என்றாலும் இந்திய மக்களைப் பொருத்த அளவில் கடவுள் உருவங்கள் அது சாணியில் பிடிக்கப்பட்ட பிள்ளையாராக இருந்தாலும் அதை பெரிதாக ஆராய்சி செய்வதில்லை என்பதால் இந்திய கிறித்துவர்களுக்கு ஐரோப்பிய யூத கிறித்துவின் முகமோ, மேரி மாதாவைன் முகமோ உவர்பானது அல்ல.

யூத ஏசுஒரு அரேபியர் ஏசு கிறித்துவையோ, கிறித்துவத்தையோ பின்பற்றாமல் இருப்பதற்கு அவர்கள் இஸ்லாம் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு யூதரை கடவுளாக நினைத்துப் பின்பற்றுவது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, இதே நிலைதான் ரோமானியர் மற்றும் யூதர்களுக்கும் முகமது நபி என்கிற அரபியால் முன்மொழியப்படும் இஸ்லாம் மதத்தை வெகு சிலர் தவிர்த்து பெருவாரியனவர்கள் மதம் என்று அங்கீகரித்தாலும் அவற்றின் கொள்கைகளைப் போற்றி மதம் மாற நினைப்பது கிடையாது.

ஆப்ரிக்க ஏசுஎகிப்து நாகரீகத்திற்கு பிறகு ஆப்ரிக்க கருப்பர்களைப் பொருத்து அவர்கள் இனத்தில் இறைத் தூதர்கள் யாரும் தோன்றாததால் அவர்கள் அறிந்த கிறித்துவம் மற்றும் இஸ்லாம் என்கிற இரு வாய்ப்புகளே அவர்களுக்கு இருக்கிறது. கருப்பர் வடிவ ஏசுஆப்ரிக்க கருப்பர்களே இஸ்லாமிலிருந்து கிறித்துவத்திற்கும், கிறித்துவத்திலிருந்து இஸ்லாமுக்கும் மதம் மாறுபவர்களாக இருக்கிறார்கள். ஆப்ரிக்க நாடுகளில் பல இஸ்லாம் மதம் தழுவியதற்குக் காரணம் அவர்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை என்பதைத் தவிர வெள்ளை ஐரோப்பிய இனத்தின் கட்டுப்பாட்டில்,அன்னை மேரியும், குழந்தை ஏசுவும்ஆளுமைக்காக இருக்கும் கிறித்துவ மதத்தில் இணைய விருப்பம் இல்லாமல் போனதே காரணம். வெள்ளை இனவெறி என்றால் என்ன என்பதை ஆசியர்களைவிட ஆப்ரிக்கர்கள் நன்கு உணர்ந்திருந்ததால் அவர்களுக்கு கிடைத்த மாற்று வாய்ப்பாக இஸ்லாம் மதத்தை தழுவினார்கள்.

ஆசிய நாடுகளில் புத்த மதம் தவிர்த்து சமணம் ஏன் பரவவில்லை ? சமணம் இந்திய சமயங்களைப் போல் சாதியைப் பின்பற்றி இருந்ததும், ஜெயின் அல்லது மார்வாடி சாதியினரின் ஆளுமையில் இருந்ததால் அவர்கள் இந்தியாவைத் தாண்டி சமண மதத்தை எடுத்துச் செல்ல முனையவில்லை. புத்த மதத்தில் சாதிகளும் பழமை வாதங்களுக்கும் இடம் கொடுக்க வில்லை என்பதால் தத்துவங்களை சார்ந்து இருந்தாதால் ஆசியர்களை வெகுவாக கவர்ந்து ஆசிய நாடுகளில் வளர்ந்தது. மத மாற்றம் என்றால் இன்று போல் ஒவ்வொருவராக மாறுவது என்பது ஆசிய நாடுகளின் வழக்கில் இருந்தது கிடையாது, ஒரு மன்னன் மதம் மாறினால் அவனது குடிகளும் அம்மதத்தைச் சேர்ந்தவர்களாக அறிவிக்கப்படுவர். இப்படியாகத்தான் ஆசிய நாடுகளில் பரவியதில் புத்த மதம் முதன்மையாகவும், அதன் பிறகு இந்தோனேசிய, மலேசிய, புருனே போன்ற நாடுகளில் இஸ்லாம் மதமும் பரவியது.

சாதிக் கட்டமைப்புகளையும், உருவ வழிபாடுகளை முதன்மையாக கொண்டிருந்தாதல் இந்திய சமயங்கள் வைதீகம், சைவம், வைணவம், சமணம் போன்றவை இந்தியாவைத் தாண்டி வளர வாய்ப்பில்லாமல் போனது. இந்திய சமயங்களில் புத்த, சமணம் தவிர்த்து பிற சமயங்களைத் தோற்றுவித்தவர்கள் என்று யாரும் கிடையாது, எனவே இவைகள் இறைத் தூதர்கள் அற்ற மதமாக மேற்குலகால் நினைக்கப்படுவதுடன், இவற்றை ஒரு மதமாகவே அவர்கள் அங்கீகரிக்காததும்தான் அவர்கள் இம்மதங்களுக்கு தங்கள் மாறுவதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. மேற்குலனரைப் பொருத்த வரை மதம் என்றால் அது இறைத் தூதர்களால் இறைவனின் ஆணைப்படி ஏற்படுத்தப் பட்டது ஆகும், மற்றவை காட்டுவாசிகளின் மதம் என்பது போல் அவர்கள் நினைக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் மதம் மாறும் போது அவர்களுக்கு கிறித்துவம் அல்லது இஸ்லாம் என்கிற இருவாய்ப்புகளே இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சன் ஏன் புத்த மதத்திற்கு மாறவில்லை ? புத்த மதம் புத்தரால் தோன்றியதென்றாலும் அவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்தவர் அல்லர். கருப்பர் அல்லது வெள்ளையர் என மேற்குலகினரைப் பொருத்து இறைத் தூதர் இல்லாத மதம் மதமே அல்ல. கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை தோற்றத்திலும் கொள்கையிலும் தொடர்சியானவை, தொடர்புடையவை என்பதால் மேற்குலகைப் பொருத்த அளவில் ஆறு நாளில் உலகம் படைக்கப்பட்டது என்பதை நம்புவார்கள். சுய தேடல், அண்டம், பிண்டம் ஆன்மிகத் தத்துவம் இவைகள் அவர்களது சிந்தையிலும் வராது. மத அடைப்படைப் பற்றித் தெரியாதவர்களே மதங்கள் பொதுவானவை எல்லோருக்கும் ஏற்றவை, என்று அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சார்ந்த மதத்தை உயர்வாகச் சொல்லுவார்கள். ஆனால் மதங்கள் அனைத்துமே இன அரசியலை முன்னிருத்துபவை என்பதை வெகு சிலரே உணர்ந்து இருக்கின்றன. ஏனெனில் மதங்கள் இறை நம்பிக்கைகளை உணர்வு பூர்வமாக அணுகுவதால், ஊட்டுவதால் அதில் இருக்கும் மத, இன அடைப்படை வாதம் வெளிப்படையாக தெரியாததும் ஒரு காரணம்.

119 கருத்துகள்:

ராவணன் சொன்னது…

சமணம் பற்றிய உங்கள் புரிந்துணர்வு தவறு......

இப்படிக்கு
ராவணன்

வடுவூர் குமார் சொன்னது…

எனக்கென்னவோ மைகேல் ஜக்ஸன் இவ்வளவெல்லாம் யோசித்திருக்கமாட்டார் என்று தோனுகிறது. (துபாய் விமான நிலையத்தில் இருந்து)

பீர் | Peer சொன்னது…

இஸ்லாம் குறித்து ஏதேனும் எழுதுவதற்கு முன்பு அதை கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லது.

//இஸ்லாம் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால்...//

ஒரு முஸ்லீமை, இஸ்லாமிய நம்பிக்கை தவிர்த்துவிட்டு பார்க்க முடியாது. ஏசு எனச்சொல்லப்படுகிற ஈசாவை இறைவனின் தூதராக நம்புகிறோம். முஸ்லீம்கள் இறைத்தூதரை வணங்குவதில்லை, இதுவே தூதர் முகம்மது ற்கும் பொருந்தும்.

இஸ்லாத்தை தவறாக புரிந்திருக்கிறீர்கள். :(

பீர் | Peer சொன்னது…

//வெள்ளை இனவெறி என்றால் என்ன என்பதை ஆசியர்களைவிட ஆப்ரிக்கர்கள் நன்கு உணர்ந்திருந்ததால் அவர்களுக்கு கிடைத்த மாற்று வாய்ப்பாக இஸ்லாம் மதத்தை தழுவினார்கள்.//

இஸ்லாத்தில் இனவெறி, நிறவெறி (இன்னபிற வெறிகளும்) இல்லை எனச்சொல்லும் இந்தப்பகுதியை வரவேற்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// பீர் | Peer said...
இஸ்லாம் குறித்து ஏதேனும் எழுதுவதற்கு முன்பு அதை கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லது.

//இஸ்லாம் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால்...//

ஒரு முஸ்லீமை, இஸ்லாமிய நம்பிக்கை தவிர்த்துவிட்டு பார்க்க முடியாது. ஏசு எனச்சொல்லப்படுகிற ஈசாவை இறைவனின் தூதராக நம்புகிறோம். முஸ்லீம்கள் இறைத்தூதரை வணங்குவதில்லை, இதுவே தூதர் முகம்மது ற்கும் பொருந்தும்.

இஸ்லாத்தை தவறாக புரிந்திருக்கிறீர்கள். :(
//

அரபுக்களுக்கு அரபு மதம் என்பதைத் தவிர்த்து வேறெதிலும் ஆழ்ந்த நம்பிக்கை இருக்க முடியாது என்பதைத் தானே சொல்லுகிறேன். இதில் என்ன தவறு ? மதங்களைப் போற்றுபவர்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு, இதில் இஸ்லாமியர்கள் மட்டும் தனித்துவம் வாய்ந்தவர்கள் இல்லை. கிறித்துவின் மீது நம்பிக்கை இல்லாத கிறித்துவர்கள் கிடையாது தம்பி !

கார்டூன், உருவப்படம் தடைசெய்யப்பட்ட இஸ்லாமியர்கள் சிலர் டென்மார்க் கார்டூனுக்கு பதிலாக இறைத்தூதர் ஈசாவின் கார்டூன் வெளி இட்டத்தை சரி என்று சொல்லுவீர்களா ? அல்லது அப்படி ஈசாவின் கார்டூன் வெளி இட்டவர்களை இஸ்லாமியர்கள் இல்லைன்னு சொல்லுவீர்களா ?

தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என்று சொல்லுவீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
எனக்கென்னவோ மைகேல் ஜக்ஸன் இவ்வளவெல்லாம் யோசித்திருக்கமாட்டார் என்று தோனுகிறது. (துபாய் விமான நிலையத்தில் இருந்து)
//

அண்ணே விமான நிலையத்தில் தமிழில் தட்டச்ச முடிகிறதா ? நல்லது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
சமணம் பற்றிய உங்கள் புரிந்துணர்வு தவறு......

இப்படிக்கு
ராவணன்
//

இன்றைக்கு சமணத்தை மார்வாடிகள் தவிர்த்து வேறு யார் யார் பின்பற்றுகிறார்கள் ?

ஜோ/Joe சொன்னது…

//கத்தோலிக்க கிறித்துவம் ஏசு கிறிஸ்து மற்றும் இஸ்லாம் மதம் முகமது நபியால் தோற்றுவிக்கப்பட்டது என்பதே வரலாறு.//

இஸ்லாம் முகமது நபியால் நிறுவப்பட்டது என்பது உண்மை .ஆனால் ஏசு கிறிஸ்து எந்த மதத்தையும் அவர் காலத்தில் தோற்றுவிக்கவில்லை.

பீர் | Peer சொன்னது…

//அரபு மதம்//

????

//கிறித்துவின் மீது நம்பிக்கை இல்லாத கிறித்துவர்கள் கிடையாது தம்பி !//

கிறித்துவை (ஈசாவை இறைவனின் தூதர் என) நம்பாதவன் முஸ்லீமாகவும் இருக்க முடியாது.

>காட்டூன்< ஈசாவின் உருவம் வரையப்பட்டதால்தான் அவர் கிறித்துவாகிப்போனார். இதே (உருவ வழிபாட்டு)நிலை இஸ்லாத்தில் கூடாது என்பதாலேயே தூதர் முகம்மது, தன் உருவத்தை வரைய அனுமதிக்கவில்லை.

குடுகுடுப்பை சொன்னது…

கடவுள் இப்பதான் என்கிட்ட தமிழில் பேசினார். நாந்தான் முதல் தூதுவன் இனிமேல் அவர் இன்னும் சில தூதுவர்களிடம் அனைத்து திராவிட மொழிகளிலும் பேசுவதாக சொல்லி இருக்கிறார். திராவிட மொழிகளில் மட்டும்தான் பேசுவதாக சொல்லி இருக்கிறார். யாகவா முனிவர் சொன்னது போன்று அவர் குருவி பாஷையில் எல்லாம் பேசியதில்லை எனவும் சொன்னார்.அடிக்கடி பேசினா தனிப்பதிவா போட்டிரலாம்னு இருக்கேன். ஒருவேலை அவரே தமிழ்மணத்திலேயோ, திராவிட மணத்திலெயோ பதிவா வெளியிடலாம்.

சாட்சி: இந்தப்பின்னூட்டம்

இறைய‌டிமை சொன்னது…

உங்கள் அறிவின் அறியாமையை தெரிகிறது உங்க்கள் பதிவு .ஒரு கம்பனி பொருளை வாங்கும் பொது அதற்க்கு உண்டான கேட்லாக் எனப்படும் ஸ்யெமுரை புத்தகம் கொடுப்பார்கள் அது போல உலகில் மனிதனை தவிர எந்த உயிரினமும் அதிக அறிவுடன் படைக்கப்பட வில்லை அப்படி படைக்கப்பட்ட மிநிதனின் நம்மையின் பக்கம் இறைவனை வணங்கவும் நல வழி அடையவும் வந்தவர்களே இறைத்துவர்கள் , இப்போது கம்லேணி பொருளுக்கு கேட்லக் தேவைதானே,இல்லை அதை தயாரித்தவர் வர வேண்டுமா உலகில் உள்ள இஸ்லாத்தை தவிர மரற எல்லா மதங்களும் குறிபிட்ட காலத்திற்குரிய அடிப்படை அம்சங்களை மட்டுமே கொண்ண்டு இருக்கும் .இஸ்லாம் மனிதனின் முதல் தோற்றத்தில் இருந்து மனித இனம் அழியும் காலம் தொட்டு மேலும் இறப்பிற்கு பின் என்ன என்பதையும் எடுத்து வைக்கிறது , எல்லா காலத்திற்கேற்ப அல்லவித சந்தேகங்களையும் போக்க குடிய மிக சத்திய வேதத்தை கொண்டுள்ள மார்க்கமே இஸ்லாம் . அது ஒரு காலத்திலும் மதமாக மாறி மனிதனை அழிக்க வல்லது அல்ல . இஸ்லாம் தெரிந்து கொள்ளா முயர்ச்சி எடுங்கள் அறிவின் வெளிச்சம் தங்களை வந்து சேரும்

குடுகுடுப்பை சொன்னது…

மேற்குலகில் சிலர் புத்தமதத்திற்கு மாறுவார்கள். ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் மாதிரி சிலர், அதற்கு காரணமெல்லாம் இருக்கிறாதுன்னு தெரியவில்லை.

Robin சொன்னது…

கோவி கண்ணன்,

படிக்காத பாமர மக்கள் டீக் கடை பெஞ்சுகளில் அமர்ந்து பேசுவது போல உள்ளது உங்கள் பதிவு. மதங்களை பற்றிய தகவல்கள் இணைய தளங்களில் கொட்டி கிடக்கும்போது உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வாறு தவறான தகவல்களே கிடைக்கின்றன என்பது எனக்கு புரியவில்லை.

பித்தனின் வாக்கு சொன்னது…

கோ.வீ.கண்ணன் அவர்களுக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டிருக்ககூடும் என நினைக்கின்றேன், பகுத்தறிவு,திராவிடம் மற்றும் இந்து மத கோட்பாடுகளின் மீதான எதிர்ப்பு ஆகிய சிந்தனைகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு அவரால் சுயமாக சிந்திக்கமுடியவில்லை.
ஒரு நானயத்தை இருபக்கமும் பார்த்து அதை எடை போடுவதை போல்,எல்லா கோணங்களிலும் ஆராய்யவேண்டும். மேலை நாட்டவர் பலரும் இஸ்கான் போன்ற இயக்கங்களில் ஆர்வமாக இணைவதை,அவர் மறந்துவிட்டார், நியுயார்க் நகர பிள்ளையார் கோவிலுக்கு பொரும் அளவில் வரும் வெள்ளையர்களையும் பார்க்கவில்லை. அரவிந்தர் ஆசிரமம்,ரமனர் ஆசிரமம்,சத்குரு ஜக்கிவாசுதெவ் ஆசிரமம் ஆகியவற்றில் வந்து குவியும் வெள்ளையரை பற்றி அவர் சிங்கையில் இருப்பதால் தெரியாது என்று நம்புவேம்.(பதிவர் எல்லாரும் கொஞ்சம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் அவர் பகுத்தறிவு பூ சுற்றற்ட்டும்). மைக்கல் ஜான்சன் கூட தன் இறுதி நாட்களில் இந்தியாவிற்கு வரவும்,நமது கலாச்சாரம் பற்றி அறியவும், ரஹ்மான் அவர்கள் கூட ஸேர்ந்து ஒரு பாப் ஆல்பம் செய்யவும் திட்டம் இட்டு இருந்தார். நமது மதத்தில் ஜாதீயம் மற்றும் தீண்டாமை, வன் கொடுமை போன்றவற்றை எதிர்த்து எளுதினால் அது சமுதாய மாற்றம் குறித்த சிந்தனையாக இருக்கும். அதைவிடுத்து ஒரு மதத்தை எல்லாவற்றையும் குற்றமாக சொன்னால் அது பகுத்தறிவு என்னும் திரையுடன் குதிரைக்கு திரையிட்டு ஓடவிட்ட கதைதான். வெள்ளையர்கள் தாங்கள் கூறுவதை போல ஈகோ கொண்டு பார்ப்பது என்பது இளம்வயது மக்களிடம் உள்ள பழக்கம் அதே மக்கள் வயது அல்லது ஒரு மெச்சுரீட்டி வந்தவுடன் இங்க ஓடி வர்ரது வழக்கம், போன ஆண்டு மடெனா வந்தார் அடுத்த ஆண்டு நீண்ட நாள் வருவதாக சொல்லியுள்ளார், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு கெத் வின்ஸ்லெட் வருவாதாக சொல்லியுள்ளார். இவர்கள் அனைவரும் நமது யோகா மற்றும் தியான முறைகளை கற்க வருகின்றனர்.( பிரபலங்கள் என்பதால் இவர்களை குறிப்பிட்டென், இவர்கள் போல் பலரும் நம் நாட்டிற்க்கு வருகின்றனர்)

ஜோ/Joe சொன்னது…

பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றும் வியட்நாமில் இரு நண்பரிடம் "புத்தர் எந்த நாட்டில் பிறந்தார்?" என கேட்ட போது அவர் சந்தேகமே இல்லாமல் சொன்ன பதில் 'சீனா' :)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கிழக்கு மேற்கெல்லாம் இருக்கட்டும். ஒரே பதிவில், அத்தனை முரண்பாடுகளையும் பேசி விட முடியுமா என்ன? நம்ம ஜெய்கிந்துபுரத்துக்காரர் பீர் வந்து, இஸ்லாம் பற்றிப் புரியாமால் பேசினதாகச் சொல்கிறார். இறையடிமை என்பவர் வந்து இஸ்லாம், கேடலாகோடு வந்திருக்கிறது,எல்லா விவரங்களோடும் வந்திருக்கிறது என்று வேறு சொல்கிறார்!

இப்படிச் சொல்பவர்கள்,கொஞ்சம் விவரத்தையும் தந்து சொன்னால் அது நல்லது! மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, முதலில் தாங்களாவது புரிந்துகொள்ள, அது உதவும்.

அப்புறம், சமணம் தமிழ் நாட்டில் மிகப்பரவலாக இருந்தது, இன்னமும் கொஞ்சம் வேலூர், சுற்றுப்புறங்களில் தமிழ்ச்சமணர்கள் இருக்கிறார்கள். மார்வாரிகளில் மட்டும் தான் சமணம் இருக்கிறது என்பது தவறான தகவல்.சைவம் வளர்ந்தது என்பது வெள்ளாளன் தலையெடுத்த அரசியல் நிகழ்வு தான்.

இந்த வலைத்தளத்துக்குப் போய்ப்பாருங்கள்:

http://banukumar_r.blogspot.com/

ஜோ/Joe சொன்னது…

//ஒரு அரேபியர் ஏசு கிறித்துவையோ, கிறித்துவத்தையோ பின்பற்றாமல் இருப்பதற்கு அவர்கள் இஸ்லாம் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு யூதரை கடவுளாக நினைத்துப் பின்பற்றுவது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று//

1. அராபியர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள் ..பாலஸ்தீனியர்களில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

2.இஸ்லாம் ஏற்றுக்கொண்ட பல நபிமார்கள் (இயேசு உட்பட) யூதர்கள் தான் .

இஸ்லாமில் கடவுள் மனித உருவில் வருவார் என்பது ஏற்றுக்கொள்ளப்படவில்லை .. எனவே அவர் அரபியா ,யூதரா என்ற கேள்விக்கே இடமில்லை.

வேண்டுமென்றால் ,இறுதி தூதர் அரபி என்பதால் இஸ்லாமில் அவர்களுக்கு பிடிப்பு அதிகம் என்று சொல்லலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த வலைத்தளத்துக்குப் போய்ப்பாருங்கள்:

http://banukumar_r.blogspot.com///

கிருஷ்ண மூர்த்தி ஐயா,

திரு பானுகுமாரின் பதிவுகளைப் படித்து இருக்கிறேன். அதிகம் உரையாடியது இல்லை. ஆனால் நண்பர் தான். அவரது புதிய பதிவில் எனது பின்னூட்டம் முதலில் இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...
பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றும் வியட்நாமில் இரு நண்பரிடம் "புத்தர் எந்த நாட்டில் பிறந்தார்?" என கேட்ட போது அவர் சந்தேகமே இல்லாமல் சொன்ன பதில் 'சீனா' :)
//

:) புத்தர் ஒரு சீனராக பிறக்கவில்லையே என்று சீனர்கள் வருத்தப்படுவார்களாம்

Bharath சொன்னது…

வடிவேலு ரேஞ்சுல அண்ணன இப்புடி ஆளாளூக்கு கும்மினா எப்பிடி.. அண்ணே அப்படியே பார்சி(Zorastrian) பத்தியும் ஒரு வார்த்தை சொல்லிடீங்கன்னா நல்லதாப் போகும்..

கோவி.கண்ணன் சொன்னது…

//நியுயார்க் நகர பிள்ளையார் கோவிலுக்கு பொரும் அளவில் வரும் வெள்ளையர்களையும் பார்க்கவில்லை. அரவிந்தர் ஆசிரமம்,ரமனர் ஆசிரமம்,சத்குரு ஜக்கிவாசுதெவ் ஆசிரமம் ஆகியவற்றில் வந்து குவியும் வெள்ளையரை பற்றி அவர் சிங்கையில் இருப்பதால் தெரியாது என்று நம்புவேம்.(பதிவர் எல்லாரும் கொஞ்சம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் அவர் பகுத்தறிவு பூ சுற்றற்ட்டும்).//

நீங்க ஏன் டென்சன் ஆகுறிங்கன்னு தெரியவில்லை. வெள்ளையர் ஆசிரமங்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம் உயர்ந்ததாக ஏன் தெரிகிறது ?அவனும் நம்மைப் போல சாதாரண மனிதன். மன அழுத்ததிற்கு மதங்களில் மருந்து இல்லை என்பதால் யோகா செய்து பார்க்கலாம் என்று வெள்ளைக் காரன் வருவதும், அவனை நம்ம ஆட்கள் பணத்தை கறந்து கொண்டு ஏமாற்றுவதும் தான் நடைபெற்றுவருகிறது. ரஜினிஷ் சாமியார் வெள்ளையர்களால் துறத்தப்பட்டதாக படித்தது இல்லையா ? இஷ்கான் அமைப்பில் உள்ளார் மீது சில பாலியல் புகார்களெல்லாம் உள்ளன. உங்களுக்கு பெருமைப் பக்கம் தெரிந்தான் எனக்கு சிறுமைப் பக்கம் தெரியுது ? என்ன செய்வது.

மனிதன் மலத்தையும் வயிற்றுக்குள் சுமக்கிறான் என்பது தானே உண்மை.

//இவர்கள் அனைவரும் நமது யோகா மற்றும் தியான முறைகளை கற்க வருகின்றனர்.( //

யோகா டீச்சருங்க அரைகுறை ஆடைகளுடன் பிரபலமாகி வருவது தங்களுக்கு தெரியாதா ? யோகா கற்றுக் கொள்பவர்களின் நோக்கமும் நடத்துபவர்களின் நோக்கமும் எவை எவை என்பது குறும்படங்களாக, நகைச்சுவையாக வர ஆரம்பித்து இருக்கின்றன.

நான் எந்த மதத்தையும் தாங்கிப் பிடிக்கவோ, தள்ளிவிடவோ இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
கோவி கண்ணன்,

படிக்காத பாமர மக்கள் டீக் கடை பெஞ்சுகளில் அமர்ந்து பேசுவது போல உள்ளது உங்கள் பதிவு. மதங்களை பற்றிய தகவல்கள் இணைய தளங்களில் கொட்டி கிடக்கும்போது உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வாறு தவறான தகவல்களே கிடைக்கின்றன என்பது எனக்கு புரியவில்லை.

12:43 PM, September 15, 2009
//

தவறான தகவல்களாக எதை எழுதுகிறேன். நீங்கள் எந்த மதத்திற்கு எதிரானதாக என் தகவலைப் பார்க்கிறீர்கள், எந்த மதத்தின் தகவல் தவறு என்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன்

வால்பையன் சொன்னது…

ஒரே சிந்தனை!

வால்பையன் சொன்னது…

//
இஸ்லாத்தில் இனவெறி, நிறவெறி (இன்னபிற வெறிகளும்) இல்லை எனச்சொல்லும் இந்தப்பகுதியை வரவேற்கிறேன்.//

ஆமாம் ஷியா, சன்னியெல்லாம் சும்மா பொழுது பொகாமல் சண்டை போட்டுக்குவாங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//இறைய‌டிமை said...
உங்கள் அறிவின் அறியாமையை தெரிகிறது உங்க்கள் பதிவு .ஒரு கம்பனி பொருளை வாங்கும் பொது அதற்க்கு உண்டான கேட்லாக் எனப்படும் ஸ்யெமுரை புத்தகம் கொடுப்பார்கள் அது போல உலகில் மனிதனை தவிர எந்த உயிரினமும் அதிக அறிவுடன் படைக்கப்பட வில்லை அப்படி படைக்கப்பட்ட மிநிதனின் நம்மையின் பக்கம் இறைவனை வணங்கவும் நல வழி அடையவும் வந்தவர்களே இறைத்துவர்கள் , இப்போது கம்லேணி பொருளுக்கு கேட்லக் தேவைதானே,இல்லை அதை தயாரித்தவர் வர வேண்டுமா உலகில் உள்ள இஸ்லாத்தை தவிர மரற எல்லா மதங்களும் குறிபிட்ட காலத்திற்குரிய அடிப்படை அம்சங்களை மட்டுமே கொண்ண்டு இருக்கும் .இஸ்லாம் மனிதனின் முதல் தோற்றத்தில் இருந்து மனித இனம் அழியும் காலம் தொட்டு மேலும் இறப்பிற்கு பின் என்ன என்பதையும் எடுத்து வைக்கிறது , எல்லா காலத்திற்கேற்ப அல்லவித சந்தேகங்களையும் போக்க குடிய மிக சத்திய வேதத்தை கொண்டுள்ள மார்க்கமே இஸ்லாம் . அது ஒரு காலத்திலும் மதமாக மாறி மனிதனை அழிக்க வல்லது அல்ல . இஸ்லாம் தெரிந்து கொள்ளா முயர்ச்சி எடுங்கள் அறிவின் வெளிச்சம் தங்களை வந்து சேரும்
//

இதெல்லாம் அதீத மத நம்பிக்கையில் சொல்கிறீர்கள் என்பதைத் தவிர்த்து என்போன்றோருக்கு இதில் பொருள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

ஆட்டுக்கு கடவுளாக இன்னொரு ஆடு தான் இருக்க முடியும் என்பதே அறிவு அடிப்படையான புரிதல். இதுல மனிதனின் கற்பனையில் உருவான கடவுள்கள், நம்பிக்கைகள், இனம் மொழி சாராது இருந்துவிட முடியாது, அது மட்டுமின்றி அவை அனைத்து மனித இனத்திற்கும் பொதுவானதாக இருந்துவிட முடியாது.

மதங்கள் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்றால் எல்லோருக்கும் ஒரே மதத்தை அமைத்து, அதன் மீது எள்ளளவும் சந்தேகம் கொள்ளாமல் அமைத்து கொடுக்காதது யாருடைய தவறு ?

பீர் | Peer சொன்னது…

அன்பின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, கோவியார் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை தவிர்த்து என்று சொல்லியிருந்ததால் அவருக்கு பதிலளித்தேன்.
உங்களுக்கு எந்தமாதிரியான விபரம் தேவைப்படுகிறது என்று சொன்னால் தருகிறேன்.

பீர் | Peer சொன்னது…

வால், இஸ்லாத்தில் சாதி கிடையாது. கறுப்பன் வெள்ளையன் என்ற பாகுபாடு கிடையாது. இஸ்லாத்திற்கு மாறியவர், அதற்கு முன்னால் எந்த மதத்தில் / சாதியிலிருந்தவர் என்பதை யாரும் தெரிந்துகொள்ள முற்படுவதுமில்லை. இறை வழிபாடு நடக்கும் இடங்களில் முன் சென்றவர் முன் வரிசையில் நிற்பார். பின் வருபவர் நாட்டு மன்னராக இருந்தாலும் பின் வரிசையிலேயே நின்று இறைவணக்கம் செலுத்த வேண்டும். அதே போல, தொழுகை நடத்துபவருக்கும் 'குர்ஆனை கற்றவர், வயதில் மூத்தவர்' என்ற தகுதியே போதுமானது. அரபி, அரபி அல்லாதவரை விட எந்த விதத்திலும் சிறந்தவர் கிடையாது. அரபுநாட்டு பள்ளிவாசல்களிலும் இந்தியர்கள் முன்நின்று தொழுகை நடத்திவைப்பதையும், மற்றயாவரும் பின்னால் நின்று தொழுவதையும் பார்க்க முடியும்.

நீங்கள் சொல்லும் சண்டையை குஜராத்தில் நடந்தது போன்ற வெறுக்கத்தக்க கலவரம் என்றே கொள்ளவேண்டும்.

வால்பையன் சொன்னது…

//இறை வழிபாடு நடக்கும் இடங்களில் முன் சென்றவர் முன் வரிசையில் நிற்பார். பின் வருபவர் நாட்டு மன்னராக இருந்தாலும் பின் வரிசையிலேயே நின்று இறைவணக்கம் செலுத்த வேண்டும்.//


இறை வழிபாடு நடக்கும் இடங்களில் தவிர மற்ற இடங்களில் ஏன் அப்படி இருக்க முடியதில்லை! சாதி வித்தியாசத்திற்கும் , வர்க்க பேதத்திற்கும் எவ்வளவு வித்தியசங்கள் உங்களால் காட்ட முடியும்!, உளவியல் ரீதியாக தான் மதம் மனிதனுக்கு தேவைப்படுகிறதே தவிர எங்கேயும் மதம் நிறுபிக்கப்படவில்லை!

இஸ்லாத்தில் நடக்கும் இஅன சண்டையை குஜராதுடுன் ஒப்பிடுவது சரியல்ல, இது மத சண்டை அதாவது ரெண்டு நாட்டுக்கும் நடக்கும் சண்டை, உள்ளுக்குள் நடக்கும் சண்டையை பற்றி நான் பேசி கொண்டிருக்கிறேன்!

சென்ற மாதம் பாகிஸ்தானில் 48 பேர் பலி இந்த சண்டையில்!

பீர் | Peer சொன்னது…

வால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஷியா, சன்னி இடையே நடப்பது இனச்சண்டை அல்ல... அது அரசியல் சண்டை ஆனாலும் வெறுக்கத்தக்கது.

ஷியா, சன்னி பிரிவினை என்பது யார் இஸ்லாமிய குடியரசுக்கு தலைவராவது என்பதில் எழுந்த கருத்து வேற்றுமையால் உண்டானது. இது அரசியல் ரீதியாக பிளவுபட்ட அமைப்பு.

இஸ்லாத்தில் உள்ள இது போன்ற பிரிவுகளுக்கெல்லாம் பொதுவாக ஒரு இறைவன், ஒரு குர்ஆன், ஒரு நபி என்ற ஒற்றை கோட்பாட்டின் கீழ் வந்து விடுகின்றனர். இவர்களுக்குள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

வால்பையன் சொன்னது…

/இஸ்லாத்தில் உள்ள இது போன்ற பிரிவுகளுக்கெல்லாம் பொதுவாக ஒரு இறைவன், ஒரு குர்ஆன், ஒரு நபி என்ற ஒற்றை கோட்பாட்டின் கீழ் வந்து விடுகின்றனர். இவர்களுக்குள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. //

என் வீட்டிற்குள் எந்த அசிங்கமும் இல்லைன்னு நீங்கள் கட்டமைக்க பாடுபடும் முயற்சியை நண்பன் என்ற முறையில் ரசிக்கிறேன்!

ஆனால் மதம் மற்றும் கடவுளின் வரலாற்று பக்கங்கள் பல ரத்தத்தால் தேய்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை!

மனைதனை காப்பாற்றத்தான் கடவுள் என்று சொல்லி கொண்டாலும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்த மனிதனும் தன் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற செய்யும் தகிடுதத்தங்கள் சிரிப்பை வரவழைக்காமல் இல்லை!

இமத்தையும் சாராதவன் என்ற முறையில், எந்த கடவுளையும் நாடாதவன் என்று முறையில் எல்லா மத மற்றும் கடவுளையும் கேள்விகுள்ளாக்க எனக்கு உரிமை உண்டு!, குரானை தவிர உங்களுக்கு வேறு ஆறுதல் தரும் வேறொன்று இல்லை என்கையில் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//உள்ளுணர்வு, தேடல், ஆன்மா என்பதெல்லாம் மேற்கத்திய மதங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடையாது. //

சூஃபி எங்கிருந்து வந்ததண்ணா??

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ஜெயின் அல்லது மார்வாடி சாதியினரின் ஆளுமையில் இருந்ததால்

//

மார்வாடி என்பது ஜாதி அல்ல. அது ஊரைக்கொண்டு அழைக்கும் சொல்.ராஜஸ்தானின் மார்வாட் என்ற மாவட்டத்தில் இருந்து வந்தவர்களை மார்வாடி என்பர். அதாவது உங்களை நாகப்பட்டிணத்தான் என்பது போல. மார்வாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களில் வைசியன்,தச்சன்,கருமன்.கொல்லான்,ஜாட்,ஜெயின் என அனைத்து சாதியினரும் இருக்கின்றனர்.

இவர்களில் சமண மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஜெயின் மட்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

// எம்.எம்.அப்துல்லா said...
//உள்ளுணர்வு, தேடல், ஆன்மா என்பதெல்லாம் மேற்கத்திய மதங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடையாது. //

சூஃபி எங்கிருந்து வந்ததண்ணா??
//

:)

சூஃபி இஸ்லாம் சேர்ந்தது என்று சொன்னால் ஏகத்துவக்காரர்கள் உங்களுக்கு பாஃத்வா கொடுக்கக் கூடும். எழுதும் முன் யோசித்து எழுதுங்கள்.

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//மார்வாடி என்பது ஜாதி அல்ல. அது ஊரைக்கொண்டு அழைக்கும் சொல்.ராஜஸ்தானின் மார்வாட் என்ற மாவட்டத்தில் இருந்து வந்தவர்களை மார்வாடி என்பர். அதாவது உங்களை நாகப்பட்டிணத்தான் என்பது போல. மார்வாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களில் வைசியன்,தச்சன்,கருமன்.கொல்லான்,ஜாட்,ஜெயின் என அனைத்து சாதியினரும் இருக்கின்றனர்.

இவர்களில் சமண மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஜெயின் மட்டுமே.//

தகவலுக்கு நன்றி !

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு கோவி,

ஒரு பக்கம் நம்ம திரு கோவி அண்ணன், as usual, without any factual basis, காலையில் பல் தேய்க்கும்போது மனதில் தோன்றியதை உமிழ்நீரையும், குழாய் நீரையும், tooth paste கலவையுடன் கலந்து துப்புவதைப்போல கணினிமுன் துப்பியிருக்கிறார். இன்னொரு பக்கம், மதவாதிகளெல்லாம், இந்த அட்டுப்போன analysisஐ seriousஆக எடுத்துக்கொண்டு அரைப்பக்க விளக்கங்களை அள்ளித்தருகிரார்கள்!

திரு கோவி அண்ணன் அவர்களே, உருப்படியாக படித்து எழுதவும்..........வேண்டம் வேண்டம்.........உங்களக்கு இதைச்சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை! நடத்துங்க!

அசாதாரணமான உளறல்கள் நீங்கள் எழுதியது! இந்த அழகுல ஜெமோ எழுதிய புத்தகம் மிக நன்று என்ற விமர்சனம் நீங்கள் எழுதியதாக ஞாபகம்! என்ன சார், எப்படி அப்படி பாராட்டி எழுதினீர்கள், மற்ற ஒருவர் எழுதியதை???? உங்களக்கு நீங்க எழுதுவதுதானே பிடிக்கும்! என்ன கும்மிருட்டுல புத்தகத்த படிச்சீங்களா?

அத்த உடுங்க, இஸ்லாம் பத்திய உங்கள் புரிதல், ஐயோ அபாரம்! The best friend of a theist is an atheist who has hot all his facts wrong!!!! அது எப்படிங்க, இயேசு யூதர் என்பதால் இஸ்லாமியர் அவரை வெறுக்கிறாரா? எப்படி சார் இப்படி போட்டு தாக்குறீங்க???

முடியலடா சாமி!

NO சொன்னது…

1910 இக்கு முன்னர், யூதர்களுக்கும், அரேபியா இஸ்லாமியருக்கும் பெரியதாக சண்டைகள் ஒன்றும் இல்லை! In fact, there were many more Jews living under Islamic regimes, with relative safety and security, when compared to what they got from Christian regimes! உங்களுக்கு தெரியவில்லையென்றால், கேட்டுக்கோங்க, யூதர்கள் இந்திய வந்தபோது (கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்), அவர்களை இன்முகத்தோடு வரவேர்த்து, இருக்க இடம் கொடுத்த, Synagogue கட்ட இடம் கொடுத்து, அவர்களுக்கு தங்களின் கலாச்சாரத்தை காப்பாற்ற எல்லா ஊக்கமும் கொடுத்தவர்கள், இந்துக்களான கேரளத்து சேர மன்னர்கள். கொச்சின் போனீர்களானால் Jewish Synagogue இல், இந்த செய்தியை ஓவியங்கள் மூலம் பார்க்கலாம்! இஸ்லாமியர்கள் அந்த பகுதியை ஆண்ட போதும், யூதர்களை ஒன்றுமே செய்யவில்லை (மும்பையில் இருந்த யூதர்களையும் சேர்த்துதான்)! கடைசியாக இவர்களை அடித்து உதைத்து, கரங்கட்டி prosecute செய்தது , கோவாவில் வந்து இறங்கிய கத்தோலிக்க கிருத்துவ அரசர்கள்!

எனென்றால், யூத சமுதாயத்தை ஒரு traitor சமுதாயமாக இவர்கள் பார்த்தார்கள்! இவர்கள் மட்டும் அல்ல. Russian Orthodox Christianity and almost all catholic regimes of medivial Europe prosecuted Jews, just because they were Jews! Meanwhile, யூதர்கள், பல இஸ்லாமியர் ஆண்ட நாடுகளில் எந்த விதமான பெரிய ஆபத்தும் இல்லாமல் தான் இருந்தார்கள்.

The point is, your blabber of Muslims not liking Jesus because he was a Jew is uttely idotic, foolish and childish and has got no basis! Of course this is the content of most of your writings about any subject and the bulk of the things that you write about religions or any other thing that rushes out of your fame seeking brain!

At the same time, இஸ்லாமியர்கள் யூதர்களை ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லவரவில்லை. முன்பு சொன்னது போல, பாலச்தேனிய பிரச்சனை, அராபியர்களுக்கு யூதர்களின் மேல் ஒரு வெறுப்பை வளர்த்துவிட்டது! அது மட்டும் அல்ல, சந்தேகமில்லாமல், முகமதின் காலக்கட்டத்திலும் பிரச்சனைகள் இருந்தது. Eventhough the initial followers of Islam were known to have been clearly injected with Anti-Jewish ideology, பின்னர் வந்த இஸ்லாமிய சமூகங்கள் அதை ஒரு பொருட்டாக பார்க்கவில்லை.

அதே சமயத்தில், European Renaisance வரும் வரையில், யூதர்களில் நிலைமை மிக பரிதாபமாக இருந்தது! புரிந்துகொள்ளுங்கள், Hitler இன் யூத அழிப்பு சித்தாந்தம், அவராக கண்டுபிடத்தது இல்லை! அது யுதர்களைப்பற்றிய ஐரோப்பிய கிருத்துவ சமுதாயத்தின் கடைசி வெளிப்பாடே!!!!!!!

சொல்லவருவது என்னவென்றால், யுதர்களைப்பற்றிய இஸ்லாமியரின் பார்வை நீங்கள் சொல்வது போல இருக்குமென்றால், யூத அழிப்பில் அவர்களின் பங்கு கண்டிப்பாக இருந்திருக்கவேண்டும்! அனால் நடந்தது அதுவல்ல! இஸ்லாமியரின் பங்கு இந்த விடயத்தில் Zero, meaning your foolish theory is confirmed as foolish!

In fact, I would like to rip apart your equally nonsensical writings about other religions. Especially Hinduism which I understand is your forte and which you claim to have great scholarship which in reality is nothing but half baked nonsense!!!

உங்களைப்போன்ற அரைகுறைகள் மதம் என்றால் என்ன, ஏன் மனிதன் மதத்தை நாடுகின்றான், ஏன், மிக சிறந்த அறிவாளிகள்கூட கடவுள் நம்பிக்கையுடன் இன்றும் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சற்றும் புரிந்துகொள்ளாமல், சரியாக வரலாறு படிக்காமல், காழ்ப்புணர்ச்சி, மற்றும் Superiority complex மட்டுமே கொண்டு வாய்க்கு வந்தபடி மதங்களை தாக்கி, நாத்திகத்திற்கு ஒரு கேட்ட பெயரை மக்கள் மத்தியில் கொடுத்துவிடீர்கள்!

உங்களைப்போன்று ஒரு நாலு பேர் வலை உலகத்தில் எழுதினால் போதும் ( only honourable exception that I could see is திரு தருமி) , கொஞ்சம் நஞ்சம் இருக்கிற, தெளிவான நாத்திகர்கள்கூட நாத்திகத்தை மடமை என்று எண்ணக்கூடும்!

சுவாமி ஓம்கார் : ஆத்திகம் நோக்கி உங்கள் பார்வையை செலுத்துங்கள். நாத்திகம் எவ்வளவு கேவலமானது என்று உணருங்கள்!

கிட்டத்தட்ட நாத்திகன்: அது எப்படிங்க முடியும்?

சுவாமி ஓம்கார்: திரு கோவி அண்ணன் மதம் மற்றும் கடவுள் பற்றி எழுதுவதை கொஞ்சம் படியுங்கள். தெளிவடைவீர்கள்!!

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...
அன்பான நண்பர் திரு கோவி,
//

இருக்கியளா ?

உலகத்துல எதுவும் அசம்பாவிதமாக நடைபெற வில்லை என்று நம்பிக்கையைக் கொடுக்குது !

:)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// No said... //

ஆஹா...நோ அண்ணன் கிளம்பிட்டாரா!!! ஹையா ஜாலி!

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அசாதாரணமான உளறல்கள் நீங்கள் எழுதியது! இந்த அழகுல ஜெமோ எழுதிய புத்தகம் மிக நன்று என்ற விமர்சனம் நீங்கள் எழுதியதாக ஞாபகம்! என்ன சார், எப்படி அப்படி பாராட்டி எழுதினீர்கள், மற்ற ஒருவர் எழுதியதை???? உங்களக்கு நீங்க எழுதுவதுதானே பிடிக்கும்! என்ன கும்மிருட்டுல புத்தகத்த படிச்சீங்களா?//

திருவாளர் இல்லாதவரே,

இந்த உருப்படதாவன் பதிவு ஒவ்வொன்றையும் படிக்கிறியளா ? ஏன் இந்த தற்கொலை எண்ணம் ?

Unknown சொன்னது…

போச்சு போச்சு...

ஏன் கோவி இந்த ஆச?

பாருங்க எல்ல மதத்துகறங்களும் இப்படி உங்களை துரத்துரத... சகட்டுமேனிக்கு இப்படி சொன்னா அப்படிதான். :))

வசமா மாட்டிகிட்டீங்க.... :D

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//சூஃபி இஸ்லாம் சேர்ந்தது என்று சொன்னால் ஏகத்துவக்காரர்கள் உங்களுக்கு பாஃத்வா கொடுக்கக் கூடும். எழுதும் முன் யோசித்து எழுதுங்கள்.

:)))

//

நூறுமுறை சொல்வேன்...சூஃபி உருவானது இஸ்லாமிய ஞானத் தேடலில்தான்.இவர்கள் யார் எனக்கு பத்வா குடுக்க பிளடி ஃபூல்ஸ்.

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//போச்சு போச்சு...

ஏன் கோவி இந்த ஆச?

பாருங்க எல்ல மதத்துகறங்களும் இப்படி உங்களை துரத்துரத... சகட்டுமேனிக்கு இப்படி சொன்னா அப்படிதான். :))

வசமா மாட்டிகிட்டீங்க.... :D//

மஸ்தான்,

உங்களை எல்லோரும் கும்மப்போறாங்கன்னு, நம்ம குடுகுடுப்பை போன் போட்டு சொன்னார். அவரோட வாக்கு பலிக்குது :)

Unknown சொன்னது…

ஒருத்தர் மதத்தை பற்றி எழுதும்போது, அவரின் மதம் பற்றிய நன்மைகளை எழுதுங்கள், மற்றவர்களின் மதத்தை புண்படுத்தியா உங்களின் நம்பிக்கையை உறுதி செய்வது? அடுத்தவர்களை அவர்களின் நம்பிக்கையை தூற்றாமல் எழுதலாம் அல்லவா?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//ஒருத்தர் மதத்தை பற்றி எழுதும்போது, அவரின் மதம் பற்றிய நன்மைகளை எழுதுங்கள்

//

அதைச் செய்யத்தான் அந்ததந்த மதத்துக்காரர்கள் இருக்கின்றோமே.நாம் பதில் சொல்லும் வேலையைப்பார்ப்போம். விமர்சனம் வைக்கும் வேலையை கோவியார் செய்யட்டும் :)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

எங்க ஊர்க்காரர் பீர் சொன்னது:
/உங்களுக்கு எந்தமாதிரியான விபரம் தேவைப்படுகிறது என்று சொன்னால் தருகிறேன்./

நன்றி. தேவைப் படும் விவரங்களை, இணையம் தவிர,தருவதற்கு மார்கத்தில் நம்பிக்கை கொண்ட நல்ல நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள்.

இங்கே வால்பையன் வந்து கேட்ட கேள்விகளிலேயே அடிப்படையான முரண்பாடு இருக்கிறது. பதில் தான் இல்லை.

எந்த ஒரு மதமும் நல்லதைத் தான் சொல்ல முற்படுகிறது.மதக் கோட்பாடுகளில் சொல்வதைவைத்து மட்டும் ஒரு முடிவு சொல்ல முடியாது.

அந்த நம்பிக்கைகள், வரலாற்றில் எப்படி எப்படி சேதங்களை, அழிவுகளை உருவாக்கியிருக்கின்றன என்பதையும் சேர்த்துப் பார்த்தால், நம்பிக்கைகள் சொல்லும் நல்ல விஷயங்கள் எப்படி வெறும் ஏட்டளவிலேயே நின்று விட்டன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

மதி.இண்டியா சொன்னது…

அரேபிய மதங்களுக்கு ஏன்தான் இந்த மதவெறி , பின்னூட்டங்களை பாருங்கள் ,

விமர்சங்களை ஏற்கும் பக்குவமே கிடையாது , (கிறுத்துவர்கள் கொஞ்சம் பரவாயில்லை)

சூபியை பத்தி மட்டும் அப்துல்லா பேசட்டும் , மதம் மண்டைக்கேறினவர்கள் எப்படி வரிந்துகட்டி வர்ராங்க பாருங்க,

ஆயிரம் குறைகள் இருந்தாலும் இந்திய மதங்கள் இப்படி சகிப்பு தன்மை இல்லாத நிலையை இன்னும் அடையவில்லை ,

மதி - இண்டியா

மதி.இண்டியா சொன்னது…

அரேபிய மதங்களுக்கு ஏன்தான் இந்த மதவெறி , பின்னூட்டங்களை பாருங்கள் ,

விமர்சங்களை ஏற்கும் பக்குவமே கிடையாது , (புட்டுக்கோலுக கொஞ்சம் பரவாயில்லை)

சூபியை பத்தி மட்டும் அப்துல்லா பேசட்டும் , மதம் மண்டைக்கேறினவர்கள் எப்படி வரிந்துகட்டி வர்ராங்க பாருங்க,

ஆயிரம் குறைகள் இருந்தாலும் இந்திய மதங்கள் இப்படி சகிப்பு தன்மை இல்லாத நிலையை இன்னும் அடையவில்லை ,

மதி - இண்டியா

NO சொன்னது…

பில்லா படத்துப்பாடல் - Remix

திரு கோவி அண்ணன் பாடுகிறார்:

My name is கோவி கண்ணன், நானொரு ரீல் மன்னன்
நானும் எழுதாத subject இல்ல, அலசாத matter இல்ல ஐயா
எந்த சரக்கும் கைல்ல இல்லேன்னா
வாய்க்கு வந்தத கண்டபடி எழுதுவேன் என் கொய்யா

டொயிங் டொயிங் டொயிங் டொயிங்(அண்ணன் திரு ஸ்டார்ஜன் அவர்களின் background music)

யோசிக்காம எழுதுவது என் வழக்கம், கண்டபடி பிளேடு போடுவது என் பழக்கம்
உளறலுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் உங்க மூளைய முற்றிலும் அறுக்கும்

நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா இந்த பிளாகு
இது புரியாம தெரியாம பேசறவன் எல்லாம் ஒரு dogகு

டொயிங் டொயிங் டொயிங் டொயிங்

தினம்தோறும் internet இல் என் ஆட்டம், அதை படிப்பவர் எல்லாம் எடுப்பார் ஓட்டம்
கிருக்குவதில் எனக்குண்டு நாட்டம், அது இல்லையென்றால் எனக்கேது கொண்டாட்டம்

நீ சொல்ல வந்ததா நான் சொல்ல வந்ததா சரக்கு
ஒரு நாளைக்கு நாலு பக்கம் மட்டும்தானே என்னோட கணக்கு

My name is கோவி, நானொரு அப்பாவி
எனக்கு புரியாத subject இல்ல தெரியாத objectடும் இல்லை ஐயா
என்னோட பதிவ படிக்காம விட்டா
எங்கு போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் ஐயா

நன்றி

Indian சொன்னது…

White sikhs!!!

மணிகண்டன் சொன்னது…

me the 50th

கபிலன் சொன்னது…

யார் பக்கமும் சாய்ந்து பேட்டிங்க் செய்யாமல், ஒரு சீரியசான விஷயத்தை சொல்லி இருக்கீங்க.அதற்காக பாராட்டுக்கள். ஒரு சில வேறுபாடுகள் இருந்தாலும், தைரியமா எடுத்து சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.


"இந்திய மதங்களை மேற்குலகத்தினர் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் 'உருவ' வழிபாடே,"

எனக்கு தெரிந்து இதெல்லாம் கிடையாது....

இந்தியர்கள் எப்பொழுதும் கான்செப்ட்ல ஸ்ட்ராங்க்...ஆனா...மார்க்கெட்டிங்கல வீக்....
அதே போல தான் இந்திய சமயங்களும்.
அதுவும் இல்லாமல்,நம்முடைய விருப்பத்தை மற்ற சமயத்தினரிடம் புகுத்து, அனைவரையும் என்னையே வணங்கச் சொல் என்பது போல இந்திய சமயங்கள் சொல்வது கிடையாது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவி.கண்ணன் said...
//ஜோ/Joe said...
பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றும் வியட்நாமில் இரு நண்பரிடம் "புத்தர் எந்த நாட்டில் பிறந்தார்?" என கேட்ட போது அவர் சந்தேகமே இல்லாமல் சொன்ன பதில் 'சீனா' :)
//

:) புத்தர் ஒரு சீனராக பிறக்கவில்லையே என்று சீனர்கள் வருத்தப்படுவார்களாம்//


புத்தர் இந்தியருங்ளா சாமியோவ்!?

:)

பீர் | Peer சொன்னது…

//வால்பையன் said...
.... என் வீட்டிற்குள் எந்த அசிங்கமும் இல்லைன்னு நீங்கள் கட்டமைக்க பாடுபடும் முயற்சியை நண்பன் என்ற முறையில் ரசிக்கிறேன்!//

வால், இஸ்லாத்தில் இருக்கும் ஏதாவது ஏற்றத்தாழ்வை சொல்லுங்கள்.

//ஆனால் மதம் மற்றும் கடவுளின் வரலாற்று பக்கங்கள் பல ரத்தத்தால் தேய்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை!//

யார் இல்லைன்னு சொன்னா???

//இமத்தையும் சாராதவன் என்ற முறையில், எந்த கடவுளையும் நாடாதவன் என்று முறையில் எல்லா மத மற்றும் கடவுளையும் கேள்விகுள்ளாக்க எனக்கு உரிமை உண்டு!,//

உங்களையாராவது தடுத்தார்களா? கேள்விகுள்ளாக்கும் முன்பு கேள்விக்குள்ளாக்கப்படும் பொருளை கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லது.

//குரானை தவிர உங்களுக்கு வேறு ஆறுதல் தரும் வேறொன்று இல்லை என்கையில் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது!//

ஒரு முஸ்லீமிற்கு குர்ஆன், நபிமொழியை தவிர வேறென்ன வேணும்? இது நம்பிக்கை, நம்பிக்கையாளருடன் விவாதம் செய்து வெற்றிபெற முடியாது.

கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கை.

மணிகண்டன் சொன்னது…

***
நம்பிக்கையாளருடன் விவாதம் செய்து வெற்றிபெற முடியாது.
***

விவாதம் பொழுது போக்க பண்ணுவது. அதில் ஏன் வெற்றி காண முடியாது.

குடுகுடுப்பை சொன்னது…

only honourable exception that I could see is திரு தருமி//

நோவின் இந்த வார்த்தை நூற்றுக்கு நூறு உணமை.

குழு, மதம் ,சாதி என்றும் எதையும் சாராமல் எழுதும் நேர்மையான துணிச்சல் காரர் தருமி.

வால்பையன் சொன்னது…

பீர் கடவுள் என்ற ஒன்று இல்லை என்பது என்னுடய கருத்து!

கடவுள் என்பது தட்டையான சொல்லாக்கம்! எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு பதில் தெரியாத கேள்விகளுக்கு, அது கடவுளுக்கு தான் தெரியும் என்று மழுப்பும் செயலுக்கு உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று பெயர்!, அந்த கேள்விக்கும் விடை தேடுவது என் போன்றோரின் வேலை!

உங்களுக்கு இஸ்லாம் எப்படித்தெரியும், உங்கள் பெற்றோர்கள், அவர்களுக்கு அவர்கள் பெற்றோர்கள், உங்களுக்கு உள்ள நம்பிக்கை பெரியவர்கள் நமக்கு தவறாக எதையும் சொல்லிதர மாட்டார்கள், சரிதான் இல்லையென்று சொல்லவில்லை, எல்லா மதத்தினரும் தமது அறியாமையால் மக்களுக்கு மூளை மழுங்க செய்யும் செயலுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் அடையவில்லை!

குரான் என்ற புத்தகம், ஹதீஸ் என்ற நபி மொழி உங்களுக்கு போதுமானதாக இருக்கிறது, ஆனால் எனக்கு அது போதாது! அடர்ந்த காட்டு பகுதியில் கண்டெடுக்கப்படும் ஒரு பழைய ஓலைசுவடியில் இருக்கும் புனைவு கதைகளை இன்று கூட உண்மை என்று நம்பும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஆனால் எனக்கு தான் மூளை மழுங்கிவிட்டது போல, எல்லாவற்றிர்கும் ஆதாரம் கேட்கிறது!

இது தான் உன் அம்மாவா, அப்பாவா என்ற பழைமை கேள்விகள் ஜீன் டெஸ்ட் முன்னால் அடி பட்டு போயின, மேலும் நீங்கள் அந்த மாதிரி சிறு பிள்ளை கேள்விகளும் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!

வால்பையன் சொன்னது…

இஸ்லாத்தில் தொழுகையின் போது மட்டுமே பிரிவினை இல்லை, அதை நானும் ஒப்பு கொள்கிறேன், ஆனால் வெளியே உண்டா இல்லையா!? இல்லையென்றால் உங்களுக்கு தெரியவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்!

எனக்கு முழுமையாக தெரியாது ஒத்து கொள்கிறேன், நீங்கள் தான் விளக்குங்களேன்!

இதோ கேள்வி!

இஸ்லாம் மட்டுமல்ல, பல மதங்கள் வெற்றியடைய காரணம் மறுமை!
எதன் அடிப்படையில் நீங்கள் மறுமையை நம்புகிறீர்கள்!?

அதற்கு என்ன ஆதாரம்!?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!

நல்ல நாளும் பெரிய நாளுமா சாமி,சாதி,மதங்களை பற்றி எழுதி இருக்கிறீர்களே!?


நீங்க திராவிட பதிவராச்சே!

அண்ணாவப் பற்றி ஒரு பதிவு போடனும் மனசு வந்துச்சா!?

பீர் | Peer சொன்னது…

மணி, இணையத்தில் பொழுதுபோனாலே அது வெற்றிதான், அது பொழுது போக்கிற்காக செய்யப்படும் போது மட்டும்.

பீர் | Peer சொன்னது…

வால், இஸ்லாத்தில் தொழுகைக்கு வெளியே உங்கள் கண்ணுக்குத் தெரியும் பிரிவினையை சொல்லுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கோவியாரே!

நல்ல நாளும் பெரிய நாளுமா சாமி,சாதி,மதங்களை பற்றி எழுதி இருக்கிறீர்களே!?


நீங்க திராவிட பதிவராச்சே!

அண்ணாவப் பற்றி ஒரு பதிவு போடனும் மனசு வந்துச்சா!?
//

ஜோதி,
பதிவில் அண்ணாவின் பகுத்தறிவு பார்வை சிறிதும் இல்லைன்னு சொல்லிறிங்களா ?
:)

பீர் | Peer சொன்னது…

முஸ்லீம்கள் மட்டுமல்ல பல நம்பிக்கையாளர்களும் நேர்வழியில் நடப்பதற்கு காரணம் மறுமை. அதை உங்களால் மறுக்க முடியாது.

கடவுள் இல்லை என்ற ஒற்றை நம்பிக்கையாளர்களிடமே பல கருத்து வேறுபாடுகள் உண்டு. கடவுள் இல்லை என்ற உங்கள் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்டேனா? (அம்மா அப்பா ஜீன் டெஸ்ட்) உங்கள் நம்பிக்கை உங்களோடு இருந்துவிட்டு போகட்டும்.

பீர் | Peer சொன்னது…

கோ, பகுத்தறிவுன்னா என்னா? மதங்களை சாடுவதா? புதசெவி.

பீர் | Peer சொன்னது…

மதி இந்தியா, உங்கள் நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்படும் போது கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பீர்களா? உங்களுக்கு உங்கள் நம்பிக்கையின் மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அதை நாகரீகமாக விளக்கலாம்.

விளக்கமளிக்க வேண்டியது என் கடமை. குழப்பமில்லாத என் நம்பிக்கையை, தெளிவாக்குவது என் உரிமை.

இஸ்லாமிய நம்பிக்கையை சொல்வோர் யாரும் அநாகரீக பின்னூட்டம் இடவில்லை. அடுத்தவர் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கவில்லை / வம்புக்கிழுக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

மதி.இண்டியா சொன்னது…

//வால், இஸ்லாத்தில் தொழுகைக்கு வெளியே உங்கள் கண்ணுக்குத் தெரியும் பிரிவினையை சொல்லுங்கள்.//

ஏன் ,பெண்களை நீங்கள் (உங்க சமூகம்) சமமாக அல்ல மனிதர்களாகவாவது நடத்துகிறதா ?

சமாதானம் சொல்லாதீர்கள் , உங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லிக் கொள்ளுங்கள் ,

எங்களுக்கு ஏற்கனவே பதில் தெரியும்

மணிகண்டன் சொன்னது…

பீர், இஸ்லாம் என்ற சொல்லும் குரான் என்ற சொல்லும் ஒன்றா ? இஸ்லாமில் ஏற்ற தாழ்வு இல்லை என்று சொல்லுவது சரியா, குரான் வேதநூலில் ஏற்ற தாழ்வு இல்லை என்று சொல்வது சரியா ?

இஸ்லாம் என்ற மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்றால், மதத்தின் வேதநூல், மதத்தை பின்பற்றும் சமூகம், அந்த சமூகத்தின் செயல்பாடுகள், மற்ற சமூகத்தின் மேல் உள்ள பரிவு / வெறுப்பு என்ற அனைத்தையும் பார்க்கவேண்டும். குரானில் ஏற்ற தாழ்வு இல்லை என்று சொன்னால் இவற்றில் எதையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. (நான் படித்தது இல்லை.)

ஏற்ற தாழ்வு இல்லை என்பதன் அர்த்தம் என்ன ? மனித இனத்தை முழவதும் ஒன்றாக பார்க்கிறதா ? மற்ற மதங்களின் மார்க்கமும் சரி என்று சொல்கிறதா, இல்லையென்றால் மற்ற மதங்களை தாழ்வாக பார்க்கிறதா ? மற்ற
மதத்தினரை தங்களுடம் சேர்த்துக்கொள்ள தயங்குகிறதா ? இவை எல்லாம் ஏற்ற தாழ்வு கிடையாதா ?

வால்பையன் சொன்னது…

//இஸ்லாத்தில் தொழுகைக்கு வெளியே உங்கள் கண்ணுக்குத் தெரியும் பிரிவினையை சொல்லுங்கள். //

முதலில் பிரிவுக்கும் ,பிரிவினைக்கும் உங்களுகுள்ள பிரிதலை சொல்லுங்கள்!
சன்னி, ஷியாவை அப்பூரம் பார்ப்போம்.
பட்டாணி, ராவுத்தர் என்றால் என்ன?

வால்பையன் சொன்னது…

//முஸ்லீம்கள் மட்டுமல்ல பல நம்பிக்கையாளர்களும் நேர்வழியில் நடப்பதற்கு காரணம் மறுமை. அதை உங்களால் மறுக்க முடியாது. //

அதை தான் நானும் சொல்லிட்டேனே!
மறுமைக்கு என்ன ஆதாரம் அதை சொல்லுங்கள்!
நேர் வழியில் நடப்பதற்கும் மறுமைக்கும் சம்பந்த படுத்தி கொள்வது ஏன் என்று தெரியவில்லை!

மறுமையில் நம்பிக்கையில்லாதவர் நேர் வழியில் நடக்கக்கூடாது என்று எதாவது சட்டம் இருக்கிறதா!?

மணிகண்டன் சொன்னது…

நேர்வழின்னு எல்லாம் ஒன்னும் கிடையாது வால்பையன். அவரவரோட நம்பிக்கை அவரவருடைய வழி.அதலால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பை வைத்து தான் விவாதம் செய்து பொழுதை போக்க முடியும் !

பீர் | Peer சொன்னது…

//மறுமையில் நம்பிக்கையில்லாதவர் நேர் வழியில் நடக்கக்கூடாது என்று எதாவது சட்டம் இருக்கிறதா!? //

சட்டமும் இல்லை, யாரும் அப்படி சொல்லவும் இல்லை. நீங்கள் நேர்வழியில் நடக்க எது சிறந்ததென நம்புகிறீர்களோ அவ்வழியில் நடக்க வேண்டியதுதான். அதில் நான் குறுக்கீடு செய்வது தான் தவறு.

பீர் | Peer சொன்னது…

பட்டாண் என்ற ஊரிலிருந்து வந்து குடியேறியவர்களை பட்டாணி என்றும், குதிரை வியாபாரம் செய்தவர்கள், குதிரை வைத்திருந்தவர்களை ராவுத்தர் என்றும் அழைத்திருக்கின்றனர். திருமணம் முடிப்பதிலும், ஒரே தட்டில் உணவருந்துவதிலும், சமுதாயத்தில் தலைமை தாங்குவதிலும் இவர்களிடையே எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.
இப்போது நான் ராவுத்தனா பட்டாணியா எனக்குத் தெரியாது. என் மகனுக்கும் தெரியாது.

வால்பையன் சொன்னது…

//இப்போது நான் ராவுத்தனா பட்டாணியா எனக்குத் தெரியாது. என் மகனுக்கும் தெரியாது.//

அதே மாதிரி இந்துவா, முஸ்லீமா, கிருஸ்துவனான்னு மறந்து மனுசனாக சொல்றேன் நான்!

வால்பையன் சொன்னது…

//திருமணம் முடிப்பதிலும், ஒரே தட்டில் உணவருந்துவதிலும், சமுதாயத்தில் தலைமை தாங்குவதிலும் இவர்களிடையே எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.//

சொல்லிகலாம் இப்படி!

ராவுத்தர் தமிழ் பேசுபவர்கள் இவர்களுக்கு உருது தெரியாது!
ஆனால் பாத்தியா ஓதத்தெரியும்!

பட்டாணி வீட்டில் உருது தான் பேசுவார்கள்!,

ராவுத்தர்கள் மதம் மாறியவர்கள் என்றும், அவர்களுடன் சம்பந்தம் வைத்து கொள்வதில்லை என்று சிலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!

நான் நாத்திகனானது இன்று நேற்றல்ல, என்னுடய ஒன்பதாவது வயதிலேயே ஏன் கடவுள் எதற்கு கடவுள்னு கேட்டிருக்குறேன்!
இன்று வரை கடவுள் பற்றி உரையாடி கொண்டிருக்கிறேன், எல்லா மத கடவுள் நம்பிக்கையாளர்களிடம்!

நீங்கள் கொஞ்சம் உங்களை விட பெரியவர்களிடம் கேட்டு சொல்வது நல்லது! ஏன்னா நான் சொல்லும் பிரிவினை நாம் பிறந்த மதுரையிலேயே உண்டு!

பீர் | Peer சொன்னது…

மதி இந்தியா,

// எங்களுக்கு ஏற்கனவே பதில் தெரியும்//

முதலில் நீங்கள் யாரென்று சொல்லுங்கள். உங்கள் உண்மை முகம் என்ன காட்டுங்கள்.

மணிகண்டன் said...
... மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பை வைத்து தான் விவாதம் செய்து பொழுதை போக்க முடியும் !

பீர் | Peer சொன்னது…

//வால்பையன் said...
.. அதே மாதிரி இந்துவா, முஸ்லீமா, கிருஸ்துவனான்னு மறந்து மனுசனாக சொல்றேன் நான்!//

இதை மறந்தால் நான் மனிதனாக இருக்க மாட்டேன்.. இப்ப சொல்லுங்க, நான் மறக்கணுமா?

வால்பையன் சொன்னது…

//இதை மறந்தால் நான் மனிதனாக இருக்க மாட்டேன்.. இப்ப சொல்லுங்க, நான் மறக்கணுமா?//

அப்ப என்னைய மாடுன்னு சொல்லாம சொல்றிங்க சரியா!?

பீர் | Peer சொன்னது…

//வால்பையன் said...
.. சொல்லிகலாம் இப்படி!

ராவுத்தர் தமிழ் பேசுபவர்கள் இவர்களுக்கு உருது தெரியாது!
ஆனால் பாத்தியா ஓதத்தெரியும்!

பட்டாணி வீட்டில் உருது தான் பேசுவார்கள்!,

ராவுத்தர்கள் மதம் மாறியவர்கள் என்றும், அவர்களுடன் சம்பந்தம் வைத்து கொள்வதில்லை என்று சிலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!//

பட்டாணியர் வடநாட்டின் ஒரு ஊரான பட்டாணிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லியிருந்தேன். எனவே அவர்களுக்கு உருது தெரிந்திருக்கிறது. எனக்கு உருது தெரியாது, என் சகோதரியுடைய மகளை திருமணம் செய்திருப்பது உருது பேசும் ஒருவர். இப்போது என் சகோதரியுடைய மகளும் உருது பேசுகிறாள்.

பீர் | Peer சொன்னது…

//வால்பையன் said...

//இதை மறந்தால் நான் மனிதனாக இருக்க மாட்டேன்.. இப்ப சொல்லுங்க, நான் மறக்கணுமா?//

அப்ப என்னைய மாடுன்னு சொல்லாம சொல்றிங்க சரியா!?//


இல்லை வால், :)

ஆனா, நீங்க என்னை மாடுன்னு நினைத்து இவ்வளவு நேரம் பேசலையே? :(

பீர் | Peer சொன்னது…

பலர் தன்னுடைய நம்பிக்கையை (அது காட்டும் வழியை) மறந்ததால் தான், மனிதனாக இருப்பதில்லை.

வால்பையன் சொன்னது…

//எனக்கு உருது தெரியாது, என் சகோதரியுடைய மகளை திருமணம் செய்திருப்பது உருது பேசும் ஒருவர். இப்போது என் சகோதரியுடைய மகளும் உருது பேசுகிறாள். //


இந்துக்களில் கலப்பு மணம் இருப்பதால் சாதி ஒழிந்துவிட்டது என கூறலாமா?
பட்டாணி என்ற ஊர் இருப்பது போல் ராவுத்தர் என்ற ஊர் எங்கேயாவது இருக்கிறதா!?

வால்பையன் சொன்னது…

//வால்பையன் said...

//இதை மறந்தால் நான் மனிதனாக இருக்க மாட்டேன்.. இப்ப சொல்லுங்க, நான் மறக்கணுமா?//

அப்ப என்னைய மாடுன்னு சொல்லாம சொல்றிங்க சரியா!?//


இல்லை வால், :)

ஆனா, நீங்க என்னை மாடுன்னு நினைத்து இவ்வளவு நேரம் பேசலையே? :(

***************************

இப்ப நான் மனுசனா இல்லையான்னு சந்தேகம் வருது!,
நீங்க மாடு இல்ல, ஆனா இஸ்லாத்தை மறந்தால் மனுசனா இருக்க மாட்டிங்க!
எனக்கு ஒரு மதமும் கிடையாது, மாடும் இல்லைங்கிறிங்க, அப்ப நான் யார்!?

மணிகண்டன் சொன்னது…

***
அப்ப நான் யார்!
***

ஆன்மீக தேடல் தொடங்கிட்டீங்க வால்.

வால்பையன் சொன்னது…

//பலர் தன்னுடைய நம்பிக்கையை (அது காட்டும் வழியை) மறந்ததால் தான், மனிதனாக இருப்பதில்லை.//

1700 வருசத்துக்கு முன்னாடி இஸ்லாம்னு ஒரு மதம் கிடையாது!
2000 வருசத்துக்கு முன்னாடி கிருஸ்தவம்னு ஒரு மதம் கிடையாது!
ஆரிய வருகைக்கு முன் இந்துன்னு ஒரு மதம் கிடையாது!

மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் மதமே கிடையாது! இன்றும் பூமியில் பல மனித நாகரீகங்கள் மதம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்கிறார்கள்!

அய்யயோ தெரியாமல் அவர்களை மனிதர்கள் என்று சொல்லிவிட்டேனே!
உங்க மத வழக்கப்படி இதற்கு என்ன தண்டனை எனக்கு!

நரகத்தில் சரக்கும், கடிச்சிங்க சைடிஸ்சும் கிடைக்காதோ!?

வால்பையன் சொன்னது…

// மணிகண்டன் said...
***
அப்ப நான் யார்!
***
ஆன்மீக தேடல் தொடங்கிட்டீங்க வால்.//

நீங்க சொல்றதை பார்த்தால் பெண்மீக தேடல்னு ஒன்னு இருக்கும் போலயே!

இந்துத்துவாவுல ”நான் யார்”ன்னு உன்னையே கேளுன்னு வெண்ணை வெட்டிங்க சொல்லும்!
யாராவது திரும்பி ”நீங்க யார்”ன்னு கேட்டால் என்ன பதில் சொல்லும்னு தெரிஞ்சிக்க ரொம்ப நாள் ஆசை!

பீர் | Peer சொன்னது…

//மணிகண்டன் said...

பீர், இஸ்லாம் என்ற சொல்லும் குரான் என்ற சொல்லும் ஒன்றா ? இஸ்லாமில் ஏற்ற தாழ்வு இல்லை என்று சொல்லுவது சரியா, குரான் வேதநூலில் ஏற்ற தாழ்வு இல்லை என்று சொல்வது சரியா ?//

மணி, சொல்லென்று மட்டும் பார்த்தால் இரண்டும் வெவ்வேறுதான். ;)

இஸ்லாத்தைதான் குர்ஆன் சொல்கிறது.

ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று நான் சொல்வது, இஸ்லாமியர்களுக்கிடையில் இல்லை என்பதை.

மதங்கள் ஒவ்வொன்றும் எதிர் எதிர் கருத்துக்களை சொல்கிறது என்ற நினைக்கிறீர்களா?


1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

---

2) நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5 - குர்ஆன்

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

---

3). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

---

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

---

4). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

---

5). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

மணிகண்டன் சொன்னது…

***
நீங்க யார்”ன்னு கேட்டால் என்ன பதில் சொல்லும்னு தெரிஞ்சிக்க ரொம்ப நாள் ஆசை
***

என் கிட்ட கேக்கலியே நீங்க !

பீர் | Peer சொன்னது…

//இப்ப நான் மனுசனா இல்லையான்னு சந்தேகம் வருது!,
நீங்க மாடு இல்ல, ஆனா இஸ்லாத்தை மறந்தால் மனுசனா இருக்க மாட்டிங்க!
எனக்கு ஒரு மதமும் கிடையாது, மாடும் இல்லைங்கிறிங்க, அப்ப நான் யார்!? //

என்னை மனிதனாக வைத்திருப்பது என் நம்பிக்கை, எனவே நான் மனிதனாக இருக்கிறேன் என்று சொல்கிறேன்.

நீங்கள் யாரென்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருப்பதனால் தான் உங்களால் மனிதனாக இருக்க முடிகிறது என்றால்.. அப்படியே இருந்துவிட்டு போங்கள், நல்லது தானே.

நீங்கள் மனிதனாக இல்லை என்றால், தேடுங்கள். எங்கு மனிதம் இருக்கிறது என்று...

(டாஸ்மாக் போயிட்டு வந்தாச்சா?)

பீர் | Peer சொன்னது…

ஷார்ட் கமர்ஷியல் ப்ரேக்...

குடுகுடுப்பை சொன்னது…

பீர் | Peer


//மணிகண்டன் said...

பீர், இஸ்லாம் என்ற சொல்லும் குரான் என்ற சொல்லும் ஒன்றா ? இஸ்லாமில் ஏற்ற தாழ்வு இல்லை என்று சொல்லுவது சரியா, குரான் வேதநூலில் ஏற்ற தாழ்வு இல்லை என்று சொல்வது சரியா ?//

மணி, சொல்லென்று மட்டும் பார்த்தால் இரண்டும் வெவ்வேறுதான். ;)

இஸ்லாத்தைதான் குர்ஆன் சொல்கிறது.

ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று நான் சொல்வது, இஸ்லாமியர்களுக்கிடையில் இல்லை என்பதை.

மதங்கள் ஒவ்வொன்றும் எதிர் எதிர் கருத்துக்களை சொல்கிறது என்ற நினைக்கிறீர்களா?


1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

---

2) நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5 - குர்ஆன்

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

---

3). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

---

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

---

4). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

---

5). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்
1:42 AM, September 16, 2009 //

மேலே சொல்லப்பட்ட யாவும் கடவுள் தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டதா?

இல்லை மனிதன் கடவுளைப்பற்றி சொன்னதா?

என்னமோ போங்கப்பா சண்டை மட்டும் போடாம இருந்தா சரி.

மணிகண்டன் சொன்னது…

***
மதங்கள் ஒவ்வொன்றும் எதிர் எதிர் கருத்துக்களை சொல்கிறது என்ற நினைக்கிறீர்களா?
****

ரிக் வேதத்துல உள்ள சில போதனைகள், குரானில் உள்ள சில போதனைகள் ஒன்றையே சொல்கிறதுன்னு சொல்லலாம். அவ்வளவு தான. அதைத் தவிர இவ்வளவு எடுத்துக்காட்டு எல்லாம் எனக்கு சொல்லவும் தெரியாது.

ஸ்ரீரங்கத்துல வளர்ந்ததுனால ஆழ்வார் பாசுரம் நிறைய கேட்டு இருக்கேன். அதுலயும் பல ஆழ்வார்கள் இப்படி தான் எழுதி இருக்காங்க. ஒரே தெய்வம், வழிப்பாட்டு முறை அவசியம் கிடையாது. மனது தான் முக்கியம் என்று.

வேறு சில பாசுரங்கள் திருமாலை தவிர மற்றவரை வழிபடுபவர்கள் முட்டாள்கள் என்றும் இருக்கிறது.

ஒரே வித்தியாசம் என்னவென்றால் முதலில் நான் சொன்ன பாசுரங்கள் முதல் நூற்றாண்டில் எழுதியது. (சைவம், வைஷ்ணவம் மட்டுமே பிரச்சனையாக இருந்த நேரம்)

இரண்டாவதாக நான் கூறிய பாசுரங்கள் பௌத்த, சமண மதங்கள் வந்த பிறகு எழுதப்பட்டது :)

போட்டி வருவதுவரை flexible. போட்டி வந்தபிறகு fundamentalist.

இல்லையென்றால் எழுதுபவரின் மனநிலையை பொறுத்தது. அவ்வளவு தான்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ராவுத்தர்கள் மதம் மாறியவர்கள் என்றும், அவர்களுடன் சம்பந்தம் வைத்து கொள்வதில்லை என்று சிலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!

//

வால் அண்ணே பட்டான்களும் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்கள் வடநாட்டு ஹிந்துவாய் இருந்து மதம் மாரினார்கள். நாங்கள்(ராவுத்தர்)தென்னாட்டு ஹிந்துக்களாய் இருந்து மதம் மாரியவர்கள். ஒரு அப்பட்டமான உண்மை தெரியுமா?? இன்றைக்கு பாக்கிஸ்தானில் இருக்கும் இஸ்லாமியர்களும்கூட ஒருகாலத்தில் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவரே.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ஒவ்வொருவரையும் ஒரு நம்பிக்கை வழி நடத்துகின்றது.இதில் உயர்வென்ன? தாழ்வென்ன? நான் நாத்திகத்தையும் சேர்த்தே சொல்கின்றேன். மனிதம் எந்த மதத்தையும் விட உயர்ந்தது. ஒருவரை மற்றொருவர் விமர்சித்துக்கொண்டே போகலாம். இனியும் இங்கு இந்த வாதப்பிரதிவாதங்கள் தேவைதானா??

பீர் | Peer சொன்னது…

// எம்.எம்.அப்துல்லா said...

ராவுத்தர்கள் மதம் மாறியவர்கள் என்றும், அவர்களுடன் சம்பந்தம் வைத்து கொள்வதில்லை என்று சிலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!

//

வால் அண்ணே பட்டான்களும் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்கள் வடநாட்டு ஹிந்துவாய் இருந்து மதம் மாரினார்கள். நாங்கள்(ராவுத்தர்)தென்னாட்டு ஹிந்துக்களாய் இருந்து மதம் மாரியவர்கள். ஒரு அப்பட்டமான உண்மை தெரியுமா?? இன்றைக்கு பாக்கிஸ்தானில் இருக்கும் இஸ்லாமியர்களும்கூட ஒருகாலத்தில் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவரே.//

மனிதம் தேடி மதம் மாறிவர்கள்...

மணிகண்டன் சொன்னது…

***
இனியும் இங்கு இந்த வாதப்பிரதிவாதங்கள் தேவைதானா?
***

அப்துல்லா, இது எல்லாம் ஓவரு. உங்களுக்கு வேலை அதிகமா இருந்தா போய் அதை பண்ணுங்க. நாங்க எல்லாம் என்ன பண்ணறது ?

அதுசரி, யாரு அந்த மனிதம் ? ஏதாவது பிகரா ? இல்ல, மனிதம் மட்டும் இருந்தா போதும்ன்னு சொல்றீங்களே ! அதான் ஒரே டவுட்டா இருக்கு :)-

பீர் | Peer சொன்னது…

எச்சூச்மீ மணி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... வர்ட்டா....

குடுகுடுப்பை சொன்னது…

பீர் | Peer


// எம்.எம்.அப்துல்லா said...

ராவுத்தர்கள் மதம் மாறியவர்கள் என்றும், அவர்களுடன் சம்பந்தம் வைத்து கொள்வதில்லை என்று சிலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!

//

வால் அண்ணே பட்டான்களும் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்கள் வடநாட்டு ஹிந்துவாய் இருந்து மதம் மாரினார்கள். நாங்கள்(ராவுத்தர்)தென்னாட்டு ஹிந்துக்களாய் இருந்து மதம் மாரியவர்கள். ஒரு அப்பட்டமான உண்மை தெரியுமா?? இன்றைக்கு பாக்கிஸ்தானில் இருக்கும் இஸ்லாமியர்களும்கூட ஒருகாலத்தில் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவரே.//

மனிதம் தேடி மதம் மாறிவர்கள்...//

மாறாதவர்கள் எல்லாம் மனிதம் இல்லாதவர்களா????

சிரிப்புத்தான் வருகிறது.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கண்ணன் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கண்ணன் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கண்ணன் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கண்ணன் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

வால்பையன் சொன்னது…

ரிக் மற்றும் குரானிலுருந்து கொடுத்துள்ள ஆதாரங்களுக்கு!? நன்றி
இதிலிருந்து ஒன்று நன்றாக தெரிகிறது,
மதம், மத்தியஆசியா அல்லது மத்தியகிழக்கு ஆசியாவிலிருந்து தோன்றியிருக்கிறது!
அவரவர் மொழி தேவைகேற்ப மாற்றி கொண்டீர்கள்!

மக்களின் சூழ்நிலை மற்றும் நம்பிக்கைகேற்ப பட்டி டிங்கரிங் பார்த்து கொண்டீர்கள்!


எங்கிட்ட போய் ரிக் வேத கதையை சொல்றிங்களே! நான் இவ்ளோ நேரம் இந்து மதத்துக்கா சொம்பு தூக்கிகிட்டு இருந்தேன்!

வால்பையன் சொன்னது…

//மணிகண்டன் said...
***
நீங்க யார்”ன்னு கேட்டால் என்ன பதில் சொல்லும்னு தெரிஞ்சிக்க ரொம்ப நாள் ஆசை
***
என் கிட்ட கேக்கலியே நீங்க !//

அண்ணே நான் வெண்ணை வெட்டிகளை பார்த்து கேட்க சொன்னேன்!
உங்களை நான் அப்படி நினைக்கலையே!

வால்பையன் சொன்னது…

//போட்டி வருவதுவரை flexible. போட்டி வந்தபிறகு fundamentalist.

இல்லையென்றால் எழுதுபவரின் மனநிலையை பொறுத்தது. அவ்வளவு தான்.//

எல்லா மதத்திற்கும் இது பொருந்தும்!

வால்பையன் சொன்னது…

//பட்டான்களும் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்கள் வடநாட்டு ஹிந்துவாய் இருந்து மதம் மாரினார்கள். நாங்கள்(ராவுத்தர்)தென்னாட்டு ஹிந்துக்களாய் இருந்து மதம் மாரியவர்கள். ஒரு அப்பட்டமான உண்மை தெரியுமா?? இன்றைக்கு பாக்கிஸ்தானில் இருக்கும் இஸ்லாமியர்களும்கூட ஒருகாலத்தில் ஹிந்துக்களாய் இருந்து மதம் மாறியவரே. //


தகவலுக்கு நன்றி அண்ணே!
பட்டாணிகள் உருது பேசுவதும், ராவுத்தர் தங்கள் தாய் மொழியை மட்டும் பேசுவது உண்மை தானே!
எனக்கு ஆமீனா பேகம்னு ஒரு சித்தி ராவித்தர் குடும்பத்தை சேர்ந்தவங்க, அவுங்க சொன்ன தகவல் இது!

வால்பையன் சொன்னது…

ஒவ்வொருவரையும் ஒரு நம்பிக்கை வழி நடத்துகின்றது.இதில் //உயர்வென்ன? தாழ்வென்ன? நான் நாத்திகத்தையும் சேர்த்தே சொல்கின்றேன். மனிதம் எந்த மதத்தையும் விட உயர்ந்தது. ஒருவரை மற்றொருவர் விமர்சித்துக்கொண்டே போகலாம். இனியும் இங்கு இந்த வாதப்பிரதிவாதங்கள் தேவைதானா??//


உண்மையில் ஆன்மீகம் என்றாலே தேடல் தான்! ஆனால் இன்றும் தேடலை தொடர்ந்து கொண்டே இருப்பது நாத்திகர்கள் தான்! உங்களிடம் நாங்கள் தோற்கும் நாளில் நாங்களும் ஆத்திகர்கள் ஆகிறோம், என்ன கெட்டு போச்சு!
நீங்களும் முடிந்தவரை தேடித்தான் பாருங்களேன், எங்கே உங்கள் கடவுள் என்று!

வால்பையன் சொன்னது…

//மனிதம் தேடி மதம் மாறிவர்கள்... //

உங்களுக்கு நகைச்சுவை நல்லா வருது!

தோழர் அ.மு.செய்யது எழுதியுள்ள ”கருப்பு தினம்” என்ற சிறுகதையை படிக்கவும்!

மதி.இண்டியா சொன்னது…

வால் , எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தேடி குடுங்க இந்த மத சாம்பிராணிகளிடம் ,

அல்லா பூமியை பாய்போல விரித்து அதில் மலைகளை முளைகளாக(ள கரட்டுதான?) நட்டு வைத்தார்,

(பூமி உருண்டை இல்லையாம் , பறக்காமல் இருக்க ஆணி அடிச்சாராம் ),

எல்லாம் தெரிந்த , படைத்த நபி இப்படி எப்படி பூமி உருண்டை இல்லைன்னு சொன்னார் ? அப்ப அவர் தூதர் தானா ? இல்லை போலியா , அப்ப குரான்னில் சொல்லியிப்பது எல்லாமே டுமீல்தானா ?

பூமி உருண்டை என சொல்ல கூடாது , அல்லா பூமியை பிளாட்டுன்னு சொல்லிருக்காருன்னு சமீபத்தில் (1990 ந்னு நினைக்கிறேன் ) பாத்வா விதித்த அரபு நாட்டு முல்லா எவ்வளவு புத்திசாலி ?

குரானை வெறித்தனமா பின்பற்றுகிற இவர்கள் எவ்வளவு புத்திசாலிக ?

மணிகண்டன் சொன்னது…

***
வால் , எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தேடி குடுங்க
***

மதி இந்தியா, நீங்க முதல்ல ஒரு கேள்வின்னா என்னன்னு தெரிஞ்சிகிட்டு வாங்க. அதுக்குக்பிறகு நம்ப மத்தவங்க புத்திசாளித்தனத்த பத்தி பேசலாம்.

ஷாகுல் சொன்னது…

திருமண நாள் வாழ்த்துக்கள் கண்ணன்

Unknown சொன்னது…

@மதி,

உங்களுக்கு யார் மேலும் கோவம் இருந்துச்சுன்னா நேரடியா கேளுங்க... ஏன் இப்படி இரண்டு மதத்தவரிடமும் கலகம் மூட்டிவிட முயற்சிசெய்கிரீர்கள்? வார்தையை மிகவும் கவனமாக உச்சரிக்கவும்.

<<<
பூமி உருண்டை இல்லையாம் , பறக்காமல் இருக்க ஆணி அடிச்சாராம்)
>>>

நீங்கள் கூறியது போல இல்லை.

“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?” (அல்குர்ஆன்: 78:6-7)

“இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்” (அல்குர்ஆன்: 21:31)

“அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அதன்மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான். மேலும், அதன்மீது எல்லாவிதமான பிராணிகளையும் அவன் பரவ விட்டிருக்கின்றான். இன்னும், நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்” (அல்குர்ஆன்: 31:10)

“உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான். இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்)” (அல்குர்ஆன்: 16:15)

கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பு (Outer Crust Of The Earth) மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால், உள்பகுதியில் ஆழமாக செல்ல செல்ல அவைகள் அதிக வெப்பமுடையதாகவும், உருகிய நிலையிலும் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பூமியின் மேற்பரப்பில் உள்ள இந்த இருகிய பகுதி (Outer Crust) பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 முதல் 10 கிலோமீட்டர் வரைதான். அதற்கு கீழே உருகிய நெருப்பு குழம்புகள் இருக்கின்றன.

இவ்வாறு பூமியின் மேற்பகுதி இறுகியும், உட்பகுதி இறுகாமல் உருகிய நிலையிலும் இருப்பதால், பூமியின் சுழற்சியின் காரணமாக மையவிலக்கு விசையால் (Centrifugal Force) பூமியின் மேற்பரப்பு நகர்ந்து இடம் பெயர்ந்தது என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக உலக வரைபடத்தை காட்டுகிறார்கள். உல்கம் முழுவதிலும் வளைந்தும், நெளிந்தும் இருக்கும் பூமியின் நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்தால் அவை கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும் என்கின்றனர்.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் ஒரு காலத்தில் ஒரே துண்டாக இருந்த பூமியின் நிலப்பரப்புகள் எல்லாம் விலகி தனித்தனி துண்டுகளாகியது (Continental Drift) என்பதுதான். பூமியின் மேற்பகுதி கடினமானதாகவும், உட்பகுதி உருகிய நிலையிலும் இருப்பதால் தான் இது நடைபெற்றதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இந்த நிலப்பரப்புகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த வேளையில் ‘Folding Phenomena’ என்ற முறையில் நிலப்பரப்புகளில் மலைகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த மலைகள் பூமியின் மேற்பரப்பில் அல்லாமல் பூமிக்குள்ளும் ஆழமாகச் சென்று முளைகளாக அமைந்தன. அதனால்தான் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கண்டத்தின் நிலப்பரப்புகள் அவ்வாறு வேகமாக நகராமல் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு மலைகளை முளைகளாக நிலைநிறுத்தியதை அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகின்றான்.

தயவுசெய்து, அடுத்தவர்களின் நம்பிக்கையை பற்றி பேசும் போது, நன்றாய் தெரிந்து கொண்டே பேசவும்.

மேலும் விபரத்திற்கு http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/248/

http://islamkural.com

மதி, ஒரு நொடி போதும் அடுத்தவறை துன்புறுத்தவும் பிரிந்துசெல்லவும், ஓராயிரம் நொடி தேவை அடுத்தவறை சந்தோசப்படுத்தவும் சேரவும்.

Unknown சொன்னது…

<<<
எல்லாம் தெரிந்த , படைத்த நபி இப்படி எப்படி பூமி உருண்டை இல்லைன்னு சொன்னார் ? அப்ப அவர் தூதர் தானா ? இல்லை போலியா , அப்ப குரான்னில் சொல்லியிப்பது எல்லாமே டுமீல்தானா ?
>>>

இதுவும் நீங்க தப்ப புரிச்சுக்கிட்டதுதான். நபி ஒரு மனிதர்தான், மனிதனாகத்தான் பிறந்தார் இறந்தார்.

அவர் எப்பவும் தனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னதில்லை.

கடவுளுக்குதான் எல்லாம் தெரியும்.

ஏதாவது தப்பா புரிஞ்சுகிட்டு குய்யோ முய்யோன்னு குதிக்கிறதுதான் மதிவுடைய வேலையோ?

வால்பையன் சொன்னது…

மதி!

இம்மாதிரியான நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் உண்டு!

இந்து மதத்தில் கூட அசுரன் பூமியை பாயாக சுருட்டி கொண்டு ஓடினான் என்று!

சென்ற நூற்றாண்டில் தான், பூமி உருண்டை என்று வாடிகனில் ஒத்து கொண்டார்களாம்!

இஸ்லாத்திலும் தீர்க்கமாக புகைப்பட சாட்சியங்கள் கிடைக்கும் வரை அவர்களுக்கும் பூமியை தட்டை என்றே நம்பி வந்தனர்!
இன்று மலைகள் தான் பூமியை பித்து கொண்டு போகாமல் தாங்குதுன்னு சொல்லலாம், ஆனால் அன்னைக்கு பூமி தட்டைன்னு சொன்னது உண்மை!

வால்பையன் சொன்னது…

மஸ்தான்!

நீங்கள் கொடுத்துள்ள குரான் ஆதாரங்களில் சில இடங்களில் ”அமைத்தோம்” என்று சில இடங்களில் ”அமைத்தான்” என்றும் இருக்கிறது!

அமைத்தோம் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுப்பது யார்?
அமைத்தான் என்று சாட்சி சொல்வது யார்!?

மதி.இண்டியா சொன்னது…

//இம்மாதிரியான நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் உண்டு!

இந்து மதத்தில் கூட அசுரன் பூமியை பாயாக சுருட்டி கொண்டு ஓடினான் என்று!

சென்ற நூற்றாண்டில் தான், பூமி உருண்டை என்று வாடிகனில் ஒத்து கொண்டார்களாம்!

இஸ்லாத்திலும் தீர்க்கமாக புகைப்பட சாட்சியங்கள் கிடைக்கும் வரை அவர்களுக்கும் பூமியை தட்டை என்றே நம்பி வந்தனர்!
இன்று மலைகள் தான் பூமியை பித்து கொண்டு போகாமல் தாங்குதுன்னு சொல்லலாம், ஆனால் அன்னைக்கு பூமி தட்டைன்னு சொன்னது உண்மை!//

நன்றி வால்,

ஆம் , இந்து மத புத்தகங்களில் இம்மாதிரி தவறான புரிதல்கள் உள்ளன , மனு சாஸ்திரத்தை புத்தியுள்ள எந்த இந்துவும் இன்று ஆதரிக்கமாட்டான் ,

சரி , ஆனால் இந்த மாதிரி தவறுகளை கொண்ட ஒரு புத்தகம் , சென்ற நூற்றாண்டு நடைமுறைகளை எழுதிவைத்த புத்தகத்தில் உள்ளது எல்லமே சரி என்று ...

காபிர் , ஜிகாத் , பெண்களை அடிமைகளாக நடத்துவது , பிரார்த்தனையின் போது விரலை நீட்டுவதா , ஆட்டுவதா என சண்டையிடுவது , எந்த சமுதாயத்தினுடனும் இணைந்து வாழாமல் விலகிப் போவது என ஒரு புத்தகத்துக்காக உலக போரை கொண்டுவந்து நிச்சயம் நிறுத்துவார்கள் .

10 வருடம் முன்பு இருந்த அண்டை அயல் நட்புறவு முஸ்ஸீம்கள் இன்று இல்லை ,(உங்கள் அனுபவம் சொல்லுமே , ?)

அரபிகளின் வெறியினால் வாகாபியிசம் பேசி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் , அப்துல்லா அண்ணாச்சி போல மிகச்சில பேர்தான் எஞ்சியுள்ளனர் ,

இன்று முஸ்லீம்களிடம் மதத்தை தவிர எதுவும் மிச்சமில்லை . மூன்றாம் உலகப்போர் இவர்களால்தான் நிகழபோகிறது ,

இஸ்லாம் இன்னும் ஒரு 100 கோடி பலியாவது வாங்காமல் அடங்காது

கோவி.கண்ணன் சொன்னது…

//அரபிகளின் வெறியினால் வாகாபியிசம் பேசி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் , அப்துல்லா அண்ணாச்சி போல மிகச்சில பேர்தான் எஞ்சியுள்ளனர் ,//

உண்மை, தம்பி அப்துல்லா மதங்களைக் கடந்தவர். மனங்களை வென்றவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷாகுல் said...
திருமண நாள் வாழ்த்துக்கள் கண்ணன்
//

நன்றி !

மதி.இண்டியா சொன்னது…

அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன் http://jeyamohan.in/?p=55

இந்த சிறுகதையை கதையாக படிக்க வேண்டாம் என சிபாரிசு செய்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//paalaiyaththaan said...
இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பதற்கு முன் இஸ்லாம் கூறும் இறை நம்பிக்கை,இறை தூதர்,இறை வேதம் போன்றவை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சும்மா நுனிப்புல் மேய்த்து விட்டு விமர்சிப்பது உங்கள் பொறாமையே காட்டுகிறது
//

பழமைவாதங்களுக்கும் இன்றைய அறிவியலுக்கும் தொடர்பில்லை என்று நன்கு தெரிந்தும், அதைத் தொடர்புபடுத்தி மதம் அறிவியல் பேசுவதாகக் கூறுவோர்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் அறிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.

நீங்கள் சொல்வது போல் அனைத்து மதங்களிலும் தனித்தனி சிறப்புகள் உள்ளது என்பதை கண்கொண்டு பார்ப்பதைத் தடுப்பது எது ?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// அப்துல்லா அண்ணாச்சி போல மிகச்சில பேர்தான் எஞ்சியுள்ளனர் ,


//

மதியண்ணே சிலபேர் அல்ல..பலரும் என்னைப்போலதான் இருக்கின்றார்கள். மீடியாக்களின் பொதுக் கருத்தாக்கம் அவ்வாறான தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகின்றது.இதுதான் உண்மை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்