விளக்கு மாற்றுச் சிந்தனைகள், மயிர் பற்றிய சிந்தனைகளை முன்பு எழுதி இருந்தேன். செருப்பு பற்றி கொஞ்சம் பார்ப்போம். ஆடைகள் உடலை மறைக்க என்றாலும் உடலின் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதிலும் முதன்மையாக இருப்பதால், முன்பெல்லாம் ஆடைகள் பணக்காரவர்கத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகத்தான் இருந்தது. ஏழைக்கு கோவணமும், நூல் சேலையும் என்பதே உடை அடையாளங்களாக இருந்தன. அதனால் தான் பணக்கார, உயர்சாதி வர்கம் பிற ஆண்கள் மேல் துண்டு அணிவதைக் கூட சகித்துக் கொள்ளாமல் எதிர்படும் போது அதை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு கூழைக் கும்பிடு போடப் பணித்தது.
பெண்களுக்கு ஜாக்கெட் எனப்படும் ரவிக்கை அணியக் கூடத் தடை இருந்ததாம், வைக்கம் போராட்டத்துக்கு முன்பு வரை தாழ்ந்த சாதி(க்கு தள்ளப்பட்ட சமூகத்து) பெண்களுக்கு ரவிக்கை அணியும் உரிமையை உயர்வர்க்கம் மறுத்தே வந்திருக்கிறது. 400 ஆண்டுகளுக்கு முன்பு "இவன் தாழ்ந்த சாதிக்காரன்" என்று நெற்றியில் பச்சை குத்திவிடுவதும் கூட நடைமுறையில் இருந்திருக்கிறது. சைவ சமயத்தினர் மேலோங்கி இருந்த காலத்தில் மத அடையாளமாக முதுகில் சூளாயுதத்தால் சூடு போடுவதும் வழக்கமாம், அப்பர் முதுகில் அப்படிப்பட்ட சூளாயுதத் தழும்புகள் இருந்ததாகப் பாடல்கள் உண்டு. ஒருவரின் வெளிப்புற அடையாளம் அவரை எதிர் கொள்ளும் நபர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் முனைந்தே அத்தகைய அடையாளங்கள் வைக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்தது. முன்பெல்லாம் வெளிப்புறமாக குலப் பெருமைக்காகப் போடப்பட்ட பூணூலை தற்போது வெளியில் தெரிந்தால் சங்கடம் என்ற நிலைக்கு மறைத்து மறைத்து பாதுகாக்க வேண்டி இருக்கும் நிலைக்குச் சென்றிருப்பது சமூகத்தில் ஏற்பட்ட பெரும் மாறுதல் என்று சொன்னால் மிகை அல்ல. வாழ்க பெரியார் புகழ்.
செருப்புகள் கூடப் பணக்கார உயர்சாதிச் சின்னமாகத்தான் இருந்திருக்கின்றன. தாழ்த்தப்பட்ட குடியானவர்கள் செருப்பணிந்து பொதுவில் நடக்க தடைகள் இருந்திருக்கின்றன. அப்படியும் அணிந்துவருபவர்கள் உயர்சாதிககரர்கள் எதிரே வரும் பொழுது அதைக் கழட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு, அவர்கள் கடந்த பிறகே போட்டுக் கொள்ள வேண்டும். இந்த காலச் செருப்புகள் போல் இல்லாமல் அந்த காலச் செருப்புகள் மிதி அடிகள், பாத அடிகள் எனப்படும் மரக்கட்டைகள் ஆகும், பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கு பிடிப்பாக ஒரு கட்டை இருக்கும் அதன் பிடிப்பில் நடந்து செல்வார்கள். ஒருவர் வீட்டினுள் இருக்கிறாரா இல்லையா என்பதை வீட்டிற்கு வெளியே மிதி அடிகள் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே சொல்லிவிடும் ஒரு குறிப்பாகவும் செருப்புகள் இருந்திருக்கின்றன. செருப்புகள் தாழ்வாக நினைக்கப்படுவதற்கு அதில் கண்டதும் ஒட்டி இருக்கும் என்பதைவிட வருண வே(பே)த மனுஸ்மிருதி படி பிரம்மனின் கால் பகுதி சூத்திரத் தன்மையுடையது என்கிற கருத்தால் காலில் அணியப்படும் செருப்பு தாழ்வாக நினைக்கும் படி அமைந்திருப்பதற்கு வேறொரு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. உடலை வறுத்திக் கொள்ளும் வேண்டுதல்களில் நடை பயண (பாத யாத்ரை) வேண்டுதலும் உண்டு, அப்படிச் செல்லுபவர்களில் பலர் மேலும் உடலை வறுத்திக் கொள்ளும் வேண்டுதலாக செருப்பு அணியாமல் செல்லுவார்கள். சரியான உறை செருப்பு (ஷூ) போடவில்லை என்கிற காரணத்தினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள மறுக்கப்பட்டு இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனராம். அவர்களுக்குத் தெரியுமா ? சித்திரை கத்திரி வெயிலில் கூட நம்ம ஆட்கள் தார் சாலையில் செருப்பே இல்லாமல் நடக்கக் கூடியவர்கள் என்று :) சர்க்கரை நோயாளிகள் செருப்பு அணியாமல் எங்கும் வெளியே செல்வது கால்களுக்கு மிகவும் கெடுதலான ஒன்று, அது போன்றே சர்க்கரை நோயாளிகல் தீமிதி போன்றவற்றிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றன.
ஒருவரின் செருப்பை பிறர் அணியக் கூடாது என்றாலும் மூத்தோர் செருப்புகளுக்கு இளையோரிடம் நல்ல மரியாதை இருந்திருக்கிறது என்பதை இராமயணத்தில் பரதன் இராமனின் செருப்பை (பாது'கைகள்') வைத்தே 14 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறான் என்பதில் இருந்தே தெரிகிறது. செருப்புக்கும் பெரியாருக்கும் தொடர்புகள் நிரம்ப உண்டு என்றாலும் தன்னை நோக்கி வலது கால் செருப்பு வீசியவன் இடது கால்செருப்பு வீசுவான் என்று காத்திருந்து பெரியார் அதனை எடுத்துப் பயனபடுத்தினார் என்ற செய்தி செருப்பை பற்றிய வியப்பு.
மற்றபடி செருப்பு வகைகளைப் பற்றி பலருக்கும் தெரியும் என்பதால் செருப்பு புராணத்தை இத்தோடு முடிக்கிறேன்.
தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் செருப்பிலும் இருப்பானா ? பரப்பிரம்மே எங்கும் நிறைந்திருக்கிறது என்போர் "ஆம்" என்பார்கள்.
என்னைக் கேட்டால் "இல்லை" என்றே சொல்லுவேன்.
பின்பற்றுபவர்கள்
11 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
23 கருத்துகள்:
துடைப்பம், மயிர்க்கு பிறகு செருப்பு.
உங்கள் சிந்தனையின் வரிசை அபாரம்.
அடுத்து என்ன எழுதுவீர்கள் என நினைத்து பார்த்தாலே கிலியாக இருக்கிறது.
ஆன்மீகத்தில் பாதரக்ஷைக்கு ஒரு தனித்துவம் உண்டு. குருவுக்கு சமம் அவரின் பாதரக்ஷை. :)
குருவின் பாதரக்ஷையை அவரின் ஆற்றலை பெற திருடிய கதைகள் உண்டு.
அதனால் இறைவன் செருப்பிலும் இருக்கிறான். சிவனின் செருப்பு(உண்மையான செருப்பு) வைத்து பூஜைசெய்யும் கோவில்கள் உண்டு தமிழகத்தில்.
ஒருவர் நம்மை செருப்பால் அடித்தால் இறைவன் நம்மை ஸ்பரிசித்ததாக கொள்க...!
//ஸ்வாமி ஓம்கார் said...
துடைப்பம், மயிர்க்கு பிறகு செருப்பு.
உங்கள் சிந்தனையின் வரிசை அபாரம்.
அடுத்து என்ன எழுதுவீர்கள் என நினைத்து பார்த்தாலே கிலியாக இருக்கிறது.//
:)
//ஆன்மீகத்தில் பாதரக்ஷைக்கு ஒரு தனித்துவம் உண்டு. குருவுக்கு சமம் அவரின் பாதரக்ஷை. :)//
ஒருபக்கம் உயர்வாகப் போற்றப்படுவது மறுபக்கம் மிகவும் தாழ்வாக நடத்தப்படும் மனித பழக்க வழக்க விந்தை ! :) வேறென்ன சொல்வது !
//குருவின் பாதரக்ஷையை அவரின் ஆற்றலை பெற திருடிய கதைகள் உண்டு.//
குருக்கதைகளில் வருமா ? :)
//அதனால் இறைவன் செருப்பிலும் இருக்கிறான். சிவனின் செருப்பு(உண்மையான செருப்பு) வைத்து பூஜைசெய்யும் கோவில்கள் உண்டு தமிழகத்தில்.//
சிவனின் செருப்பா ? கேள்விப்பட்டது இல்லை
//ஒருவர் நம்மை செருப்பால் அடித்தால் இறைவன் நம்மை ஸ்பரிசித்ததாக கொள்க...!//
திருப்பிக் கொடுக்கும் போது அவ்வாறான மன நிலை இருவருக்கும் இருக்குமா என்பது ஐயமே !
:)
//ஒருவர் நம்மை செருப்பால் அடித்தால் இறைவன் நம்மை ஸ்பரிசித்ததாக கொள்க...!//
சுவாமி ஓம்கார்!
கவனமுங்க ; தட்சணைக்கு பதில் யாராவது போட்டுத் தாக்கப் போராங்க!
அதுசரி துடைப்பம்;மயிர்; செருப்பு சிந்தனைக்கு அப்பார்ப்பட்டதா?
ஆக சங்கராச்சரி போல் "விதவைப் பெண்டுகள்; நடிகைகள் தான்" சிந்தனைக்குரியவர்களோ?
// சித்திரை கத்திரி வெயிலில் கூட நம்ம ஆட்கள் தார் சாலையில் செருப்பே இல்லாமல் நடக்கக் கூடியவர்கள் என்று //
நான்கூட நடந்துருக்கேன் :((((((
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//ஒருவர் நம்மை செருப்பால் அடித்தால் இறைவன் நம்மை ஸ்பரிசித்ததாக கொள்க...!//
சுவாமி ஓம்கார்!
கவனமுங்க ; தட்சணைக்கு பதில் யாராவது போட்டுத் தாக்கப் போராங்க!
அதுசரி துடைப்பம்;மயிர்; செருப்பு சிந்தனைக்கு அப்பார்ப்பட்டதா?
ஆக சங்கராச்சரி போல் "விதவைப் பெண்டுகள்; நடிகைகள் தான்" சிந்தனைக்குரியவர்களோ?//
யோகன் ஐயா,
ஸ்வாமி ஓம்கார் காஞ்சிக்கு இஸ்திரி போட்டு அவர்களெல்லோரும் பரிசுத்தம் என்று சொல்பவர் இல்லை, அவர்களைப் பற்றி இவர் எதுவும் பேசுவதும் இல்லை. சங்கராச்சாரியையும் ஸ்வாமி ஓம்காரையும் தேவையில்லாது தொடர்ப்புபடுத்தி கேள்வி எழுப்பாதீர்கள்.
//SUBBU said...
// சித்திரை கத்திரி வெயிலில் கூட நம்ம ஆட்கள் தார் சாலையில் செருப்பே இல்லாமல் நடக்கக் கூடியவர்கள் என்று //
நான்கூட நடந்துருக்கேன் :((((((//
சுப்பு,
நான் கூடத்தான் +2 படிக்கும் போது பேண்ட் போட வேண்டி இருந்ததால் செருப்பு அணியத் தொடங்கினேன்.
//கோவி.கண்ணன் said..
சுப்பு,
நான் கூடத்தான் +2 படிக்கும் போது பேண்ட் போட வேண்டி இருந்ததால் செருப்பு அணியத் தொடங்கினேன்.
//
நீங்க பரவால்ல நான் Polytechnic போனதுக்கு அப்பரம்ந்தான் போட்டேன் :(((((((((
//SUBBU said...
//கோவி.கண்ணன் said..
சுப்பு,
நான் கூடத்தான் +2 படிக்கும் போது பேண்ட் போட வேண்டி இருந்ததால் செருப்பு அணியத் தொடங்கினேன்.
//
நீங்க பரவால்ல நான் Polytechnic போனதுக்கு அப்பரம்ந்தான் போட்டேன் :(((((((((//
நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் போய் இருப்பிங்க, எனக்கு பாலிடெக்னிக்கில் இடம் கிடைக்காததால் +2 படிக்கப் போனேன் :)
உள்ளேன் ஐயா.
//நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் போய் இருப்பிங்க, எனக்கு பாலிடெக்னிக்கில் இடம் கிடைக்காததால் +2 படிக்கப் போனேன் :) //
:))))))) ஆமாம்
//சரியான உறை செருப்பு(ஷூ)//
நல்ல மொழி பெயர்ப்பு.
எப்படி ரூம் போட்டு உட்கார்ந்து யோசிபிங்களோ?
//தாழ்ந்த சாதி(க்கு தள்ளப்பட்ட சமூகத்து)// மிக அருமை.
செருப்பு புராணம் - nice post
ஆஹா,செருப்பை பற்றியதொரு சிறப்பு பதிவு.
எட்டாப்பு படிக்கும் போது செருப்பை பற்றி நான் எழுதிய ஹைக்கூ.
நீ செருப்பல்ல !!
என் உடல் உறுப்பு.
அப்பவே நாங்கெல்லாம் ரவுடில்ல:))
// Bala Kumaran said...
//சரியான உறை செருப்பு(ஷூ)//
நல்ல மொழி பெயர்ப்பு.
எப்படி ரூம் போட்டு உட்கார்ந்து யோசிபிங்களோ?
//தாழ்ந்த சாதி(க்கு தள்ளப்பட்ட சமூகத்து)// மிக அருமை.
செருப்பு புராணம் - nice post//
மிக்க நன்றி !
// துபாய் ராஜா said...
ஆஹா,செருப்பை பற்றியதொரு சிறப்பு பதிவு.
எட்டாப்பு படிக்கும் போது செருப்பை பற்றி நான் எழுதிய ஹைக்கூ.
நீ செருப்பல்ல !!
என் உடல் உறுப்பு.//
ஆகா ஆகா, பிறவி கவிஜன் !
:) இருங்க ஆசிப் அண்ணாசியிடம் போட்டுக் கொடுக்கிறேன்.
// அப்பவே நாங்கெல்லாம் ரவுடில்ல:))//
:)
சிறப்பு
இதுதான் முதல் முறையா?
செருப்பு பற்றிய பதிவு...
அருமை கோவியாரே...!
அண்ணா புஷ் செருப்பு அடி வாங்கின கதைய விட்டுடிங்களே
//Mr_Adore said...
அண்ணா புஷ் செருப்பு அடி வாங்கின கதைய விட்டுடிங்களே//
:)
அப்பறம் நம் உள்துறை அமைச்சரையும் குறிப்பிடனும்.
உண்மையிலேயே மறந்துவிட்டது
அண்ணே செருப்பை பற்றியே இம்மாம்பெரிய பதிவு போடுறீங்க.
நான் மணற்கேணிக்கு கட்டுரை எழுதுவதற்குள்ளே டரியலாயிட்டேன்.
அப்புறம் ஒரு விசயம். மணற்கேணிக்கு எழுதிய கட்டுரையை என் பதிவில் இடுகையாக இடலாமா.
பூணூலை மறைத்துக் கொள்கிற மாற்றத்துக்கு திரு.ஈ.வெ.ரா. வுக்கு ஜே போட்டிருக்கிறீர்கள். அச்சம் காரணமாக வருகிற மாற்றங்கள் ஆரோக்யமானவை அல்ல. சமூக மாற்றங்கள் இதயப் பூர்வமாக வரவேண்டும்.
http://kgjawarlal.wordpress.com
// Jawarlal said...
பூணூலை மறைத்துக் கொள்கிற மாற்றத்துக்கு திரு.ஈ.வெ.ரா. வுக்கு ஜே போட்டிருக்கிறீர்கள். அச்சம் காரணமாக வருகிற மாற்றங்கள் ஆரோக்யமானவை அல்ல. சமூக மாற்றங்கள் இதயப் பூர்வமாக வரவேண்டும்.
http://kgjawarlal.wordpress.com//
ஜவகர்லால்,
இதயபூர்வ பெரும் தன்மை இல்லாதவர்களுக்கு எப்போதும் எதிர்ப்புகள் மூலமாகத்தான் புரிய வைக்கப்படுவது உலக வழக்கு !
பூணூலை மறைக்க பொரியருக்கு புகழ், பிரமாதம் கண்ணன், மயிலாப்புர், மந்தவெளியில் தேடித்தேடி பார்ப்பனர்களின் பூணூல் அறுத்தார்களே அதற்கா இல்லை அவர்களை அடித்து பூணூலை இழுத்தற்கா. பொரியார் தாழ்த்தப்பட்ட்வரை மீட்டுஎடுக்க ஒரு தேவரின் மீசை அல்லது ஒரு பிள்ளைமார் பூணூல் அறுத்து இருந்தால் நானும் வாழ்க என்று கோசம் போடுவேன்.
// PITTHAN said...
பூணூலை மறைக்க பொரியருக்கு புகழ், பிரமாதம் கண்ணன், மயிலாப்புர், மந்தவெளியில் தேடித்தேடி பார்ப்பனர்களின் பூணூல் அறுத்தார்களே அதற்கா இல்லை அவர்களை அடித்து பூணூலை இழுத்தற்கா. பொரியார் தாழ்த்தப்பட்ட்வரை மீட்டுஎடுக்க ஒரு தேவரின் மீசை அல்லது ஒரு பிள்ளைமார் பூணூல் அறுத்து இருந்தால் நானும் வாழ்க என்று கோசம் போடுவேன்.
12:22 PM, August 17, 2009//
பூணூலை விடுங்கள், பெண்கள் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தாவிட்டால் பார்பன சமூகத்தில் பார்பன விதவைகள் மொட்டையடிக்கப்பட்டு காவி உடையுடன், பிற சாதியினரால் 'மொட்டைப் பாப்பாத்தி' என்னும் கேலியுடன் மூலையில் உட்காரப்படுவது இன்றும் தொடரும், பார்பனப் பெண்களுக்கு மறைமுகமாக விழிப்புணர்வு ஊட்டி, கல்வி, கேள்வியில் முன்னேற வைத்ததற்காக பெரியாரைப் பாராட்டலாம். பாராட்டுங்க !
கருத்துரையிடுக