பின்பற்றுபவர்கள்

24 ஆகஸ்ட், 2009

தமிழ்மணம் - வலைப் பதிவுலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு !

ஐந்தாண்டுக்களுக்கு முன்பே தமிழ் வலைப்பதிவுகள் துவங்கப்பட்டு இருந்தாலும், முதன் முதலாக வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து பதிவுலகின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்மணம் திரட்டியையே சாரும். மாறுபட்ட சிந்தனையில், சேவை மனப்பாண்மையில் தமிழ் திரட்டி ஒன்றை இணையத்தில் தமிழ் கூறும் நல்லுலக்க்கு அறிமுகப் படுத்திய திரு காசி ஆறுமுகம் அவர்களையும் அவர்களுக்கு உதவியாக இருந்த அனைத்து பதிவர் நண்பர்களையும், தற்போதைய தமிழ்மணம் நிர்வாகக் குழுவினரையும், த்மிழ்மணம் திரட்டி சேவை ஐந்தாம் ஆண்டு நிறைவில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இப்பொழுது தான் RSS Feeder (செய்தி ஓடை) தொழில்நுட்பங்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கின்றன, திரட்டிகளுக்குச் செல்லாமலேயே கூகுள் ரீடரில் பதிவுகளை தொகுத்துப் படிக்க முடிக்கிறது, ஆனால் அவை இல்லாத காலகட்டங்களில் பதிவுத் தொகுப்புகளுக்கு தமிழ்மணம் திரட்டியின் சேவை மிகப் பெரியதாக இருந்தது, வெறும் பதிவுத் தொகுப்பு சார்ந்த சேவை மட்டுமின்றி, அதில் இணைபவர்களை வெளிச்சமிடும் வகையில் வாரம் ஒரு நட்சத்திரப் பதிவர் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது.


தொடக்கத்தில் நட்சத்திர வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்க இணைந்திருந்த பதிவர்கள் எண்ணிக்கையும் காரணம், பிறகு எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக வாய்ப்புகள் கிடைக்க ஆண்டுகளாக காத்திருப்பவர்களும் உள்ளனர். நட்சத்திர வாய்ப்பு கிடைக்காதவர்களில் 3 - 4 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வருவோரும் உண்டு. தற்போது நட்சத்திர பதிவர் வாய்ப்புகள் எப்படி வழங்கப்படுகிறது என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. தொடர்ந்து நல்ல முறையில் எழுதி வருபவர்களுக்கு வாய்ப்பு(கள்) கிடைக்கிறது என்பதாக புரிந்து கொள்கிறேன். மற்றபடி அதில் வேறேதும் முறைகள் வைத்திருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. நீண்ட நாளாக எழுதிவந்தும் எனக்கெல்லாம் வாய்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று சிலர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரைகள் நல்ல நோக்கத்திற்கு என்றாலும் அது சிலரால் தவறாக பயன்படுவதாக பலர் சொல்லிய குற்றச் சாட்டுகளை தமிழ்மணம் செவிமடுக்க வேண்டும், பொறுப்புகள் என்பதை 'அனைவருக்கும் பொது''வாக்கும் போது சிக்கல்களும் முறைகேடுகளும் நடப்பது இயல்பு. எல்லோருமே பொறுப்பானவர்கள் என்று நினைக்க முடியும், நடப்பில் கூறு அற்றவையாக மாறும் போது, வழிமுறைகளை மாற்றி அமைக்கலாம், அதை அப்படியே விட்டுவிடுவதும் சரி அல்ல, நோக்கம் மிகச் சில பதிவர்களால் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை திரட்டி நிர்வாகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்மணம் விளம்பரங்கள் அற்ற திரட்டியாகவும், முற்றிலும் இலவசத் திரட்டி சேவையாகவே தொடர்வதும் சாதனைதான். இணையப் பெருவெளியில் தமிழ் பதிவர்களின் தமிழ் (எழுத்து) சேவை அளப்பெரியது, அதற்கு வழி அமைத்துக் கொடுத்தும், பதிவர்களைத் தொடர்ந்து பல்வேறு வகைகளில் ஊக்குவித்தும் வரும் தமிழ் மணம் திரட்டி மற்றும் திரட்டி நிர்வாகத்தைப் பாராட்டி மகிழ்கிறேன். ஐந்தாம் ஆண்டு நிறைவு என்பது தமிழ்மணத்திற்கு உரிய பெருமை... கூடவே தமிழ் பதிவுலகும் தமிழ்மணம் மூலமாக ஐந்தாண்டுகளாக வளர்ந்து வந்திருக்கிறது என்கிற பெருமையும் அதில் அடங்கும். எனவே ஐந்தாண்டுகள் நிறைவு தமிழ்மணம் மற்றும் தமிழ் பதிவுலக்கிற்கான பெருமை என்பதை புதியவலைப்பதிவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பிற திரட்டிகளை நடத்திவரும் பதிவர் அன்பர்களும், 'தமிழ்மணம் நம்முடைய திரட்டி' என்ற எண்ணங்களையே கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை தொடரவும் மேலும் சிறக்கவும் வேண்டும், மீண்டும் வாழ்த்திக் கொள்கிறேன்.

18 கருத்துகள்:

Jackiesekar சொன்னது…

முதலில் தமிழ் மணத்திற்க்கும் அதன் பிரச்சனைகளை மிக அழகாக மேற்க்கோள் காட்டிய உங்களுக்கும் என் நன்றிகள்..

ஜோ/Joe சொன்னது…

தமிழ் மணத்துக்கு நன்றி !

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துகள் மணம் வீசும் தமிழுக்கு

துளசி கோபால் சொன்னது…

கூடிய சீக்கிரம் நீங்க(ளூம்) நட்சத்திரமாகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.


சுபஸ்ய சீக்கிரம்!


ததாஸ்து!

அப்படியே 'நம்ம ' தமிழ்மணத்துக்கு வாழ்த்து(க்)கள்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல பகிர்வு...
தமிழ்மணத்திற்கு வாழ்த்துகள்..
உங்களின் கோரிக்கைகள்தான் எனக்கும் தமிழ்மணம் ஆவணம் செய்வார்கள் என்று நம்புவோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
கூடிய சீக்கிரம் நீங்க(ளூம்) நட்சத்திரமாகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.//

துளசி அம்மா, ஏற்கனவே 'காலம்' ஆகஸ்ட் 2007ல் நட்சத்திரமாகி ஒரு வாரம் மொக்கை போட்டாச்சு !
:)

நீங்கள் சொன்னதில் 'மீண்டும் நட்சத்திரமாகணுமுன்னு ' என்று சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தமிழ்மணத்துக்கு வாழ்த்துகள்!

குறை களை ய

கூப்பாடு போட்ட

கோவிக்கு -ஒரு

கோடி ந(நா)மஸ்காரம்

iniyavan சொன்னது…

//நீண்ட நாளாக எழுதிவந்தும் எனக்கெல்லாம் வாய்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று சிலர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்//.

இதை தவறாக புரிந்து கொண்டு விட்டார் துளசி கோபால்.

Venkatesh Kumaravel சொன்னது…

தமிழ்மணத்திற்கு நன்றிகள் பல!

கே.என்.சிவராமன் சொன்னது…

அன்பின் கோவி,

சரியான நேரத்தில், சரியான நபர்களுக்கு வாழ்த்து சொல்ல சந்தர்ப்பம் அமைத்து தந்திருக்கிறீர்கள். ஏதோ, எனக்கே இன்று பிறந்தநாள் போல் தோன்றுகிறது :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Admin சொன்னது…

தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா சொன்னது…

தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்.

ஷாகுல் சொன்னது…

தமிழ்மணத்திற்க்கு வாழ்த்துக்கள்

Karthik சொன்னது…

வாவ், வாழ்த்துக்கள்!!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தமிழ் மணத்துக்கு நன்றி

துபாய் ராஜா சொன்னது…

தமிழ்மணம் - ஐந்தாம் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.

தமிழ்மணத்தை உருவாக்கிய திரு.காசி ஆறுமுகம்,தற்பாதைய நிர்வாகத்தினர் மற்றும் தொடர்ந்து தோள் கொடுத்து வரும் உலகமெங்குமுள்ள தமிழ்பதிவர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும், வாழ்த்துக்களும்.

சி தயாளன் சொன்னது…

தமிழ் மணம் தொடர்ந்து பட்டொளி வீசி மிளிரட்டும்

மாயா சொன்னது…

தமிழ்மணம் மென்மேலும் மணம் வீசட்டும்..

அதே போல் அவர்கள் வெளியிட்டு வந்த பூங்காஇதழும் வெளிவரட்டும்

நன்றிகளுடன்
மாயா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்