"சார்......உங்க உடல் நிலை பலவீனமாக இருக்கு... அதிர்ச்சி தரும் செய்திகள் கேட்பதை முடிந்தவரை தவிருங்கள்" என்று சொன்னார் அமைச்சர் அரு.செல்வராசுவை பரிசோதித்த மருத்துவர்
அமைசர் அரு.செல்வராசு ஆளும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர், அமைச்சர் துறையில் மட்டுமின்றி பிற துறைகளின் காண்ட்ரெக்டுகள் கூட அமைச்சரின் கண் அசைவில் அமைச்சர் சொல்லும் நிறுவனங்களுக்குக் கிடைத்துவிடும். முதல்வருக்கு மகன் இல்லை என்றால் அடுத்த முதல்வர் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கும் என்று கூட கட்சியினர் பேசிக் கொள்வார்கள்.
"நான் எதிர்கட்சிகளைப் பார்த்துக் கேட்கிறேன்....உங்களால் ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சியைக் கொடுத்துவிட முடியுமா ? எதற்கு ஊழல் செய்ய வேண்டும் ? மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி எங்கள் கு.மு.க (குடிமக்கள் முன்னேற்ற கழகம்) தான். எங்கள் கட்சி கறைபடியாத கட்சி, எதிர்கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது நடத்திய அரசியல் கொள்ளைக்காக கோர்ட் படி ஏறிவருகிறார்கள், பொது மக்களே.....ஏழைப் பெருமக்களே நான் உங்களைக் கேட்கிறேன்......எங்கள் கட்சி இதுவரை ஏதேனும் ஒரு ஊழல் வழக்கிலாவது தண்டனை பெற்றி இருக்கிறதா ? எங்கள் மூச்சும் பேச்சும்......."
என்று முந்தைய நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் மேடையில் மயங்கி விழுந்து, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனையில் முதல் உதவி பெற்று, தற்பொழுது மிகப் பெரிய மருத்துவமனையில், ஓட்டல் அறை போல் இருக்கும் பெரியதொரு குளிர்சாதன அறையில் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறார்
***
அன்று மதியம்,
நடசத்திர ஓட்டல் ஒன்றின் அறையில்,
தொழில் அதிபர்கள் அண்ணன் வாசுதேவனும் , தம்பி இராமதேவனும்
"வாசு...நம்ம அமைச்சர் செல்வராசு மருத்துவ மனையில் மாரடைப்பால் சேர்த்திருப்பதாக நேற்றே மொபைல் கால் வந்ததே போய் பார்த்து வருவோமா ?"
"ம் எனக்கும் தெரியும்... அதற்கான ஏற்பாடுகளைத்தான் செய்து வருகிறேன்....."
"அமைச்சருக்கு நாம தான் பினாமி, நாமலே உடனடியாக சந்திக்காவிட்டால் ஒரு மரியாதை இருக்காதே அண்ணே"
"தம்பி......இது தான் சரியான சந்தர்பம்.....இதைப் பயன்படுத்திக் கொண்டால் நாம செட்டில் ஆகிவிடலாம்"
"புரிகிற மாதிரி சொல்லுங்க அண்ணே......"
"அமைச்சரோட டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் அவரோட ..... ஈசிஆர் ரோட்டு பங்களாவில் தான் இருக்கு, பங்களாவும் சொத்துக்களும் நம்ம பேரில் இருக்கு...."
"ஆமா..."
"நம்ம கிட்ட சொத்துக்கள் இருப்பதை அவரு புள்ளைங்க கிட்டக் கூடச் சொல்லவில்லை....ன்னு நாம மேல அவ்வளவு நம்பிக்கை இருப்பதாக பெருமையாக அடிக்கடி சொல்லுவாரு"
"ஆமா..."
"அவரோட சொத்தாக நம்மிடம் இருப்பவை சுமார் 500 கோடிங்கிற விவரம் நமக்கும் அவருக்கும் மட்டும் தான் தெரியும்"
"இப்ப நாம அவருக்கு அதிர்ச்சி கொடுத்தால்......போய் சேர்ந்துவிடுவார் சொத்துக்கள் நமக்குத்தான்"
"எப்படி செய்யப் போறிங்க......"
***
வாசுதேவன் வந்திருப்பதாகச் சொல்ல, உடனே சந்திக்கும் படி அமைச்சர் அனுமதி அளிக்க..
மருத்துவமனையின் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செல்வராசுவை தனிமையில் சந்திக்கிறார்...வாசுதேவன்
"ஐயா.......நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி அடைந்திடாதிங்க......நம்ம பங்களாவைப் பற்றியும் சொத்துக்களைப் பற்றியும் பிரபல வார இதழ் சீனியர்கீரன் புலனாய்வு செய்து எழுதி இருக்கான், இன்னிக்கு இஸ்யூவில் வந்திருக்கு....நம்ம பங்களாவை ரைடு பண்ணப் போறாங்ன்னு மேலிடத்தில் இருந்து ரகசிய மெசேஜ் வந்தது... எதாவது..யாரிடமாவது பேசி தடுக்க முடியுமான்னு பாருங்க...இதோப் பாருங்க போட்டோவோடு செய்தி போட்டு இருக்கிறான் சீனியர்கீரன்"
என்ற செய்தியை முகத்தில் ஈ ஆடாமல் வாசுதேவன் சொல்லச் சொல்ல, கேட்ட செல்வராசு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய.....அறையின் கண்ணாடி வழியாக பார்த்த நர்ஸ் வேகமாக வரத் தொடங்க...கொண்டுவந்திருந்த போலி வார இதழை தன் கோட் பாக்கெட்டுகுள் வாசு வைக்க... செல்வராசுவின் தலைத் தொங்கத் தொடங்கி... விழிகள் மேலே வெறித்துப் பார்த்து பளபளப்பை இழந்து கொண்டிருந்தது.
பின்பற்றுபவர்கள்
18 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
15 கருத்துகள்:
நாந்தான் முதல்ல
I AM FIRST & SECOND
தப்பா ஒரு கொலை பண்ணிட்டு இப்ப சரியா ஒரு கொலையா ...
என்ன நடக்குது இங்க
இந்தப் பக்கம் வர்ரதுக்கே
பயம்மா இருக்கு...
rajesh kumar effect
:-)
yasavi
\\"எப்படி செய்யப் போறிங்க......"\\
நல்லா வந்திருக்கு,
வாழ்த்துக்கள்
அட ...
அருமை கண்ணன். இப்படி ஒவ்வொரு அமைச்சருக்கும் எதாச்சும் வைத்தியம் பண்ணி அனுப்பிச்சிடோம்னா நாடு சுபிட்சம் பெறும்...
பிரபாகர்.
//"சரியாக ஒரு கொலை !"//
ஏன் இந்த கொலை வெறி கண்ணன்...
இன்னும் நிறைய மந்திரிங்க இருக்காங்க.. இன்னும் தொடருமா?
சூப்பர்
சத்தமே இல்லாமல் சரியாக கொலை செய்யப்பட்டு இருக்கிறது.
வருமான வரித்துறைக்கு இவர்களைத் தெரியாமல் போய்விடுமா என்ன?
மிக்க நன்றி கோவியாரே.
என்ன ஜிகே! கொலை செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறீர்களா? அல்லது சில்க் போர்ட் பிரபாகர் ஆக எண்ணமா?
அந்த 500 கோடியும் உண்மையில் ரெய்டில் பிடிபட்டது!
:-)))
கண்ணன்ஜீ, கதையெல்லாம் கூட எழுதுவீங்களா.. அருமையான த்ரில்லர்.
கடைசீ பாராவுக்கு பதிலா இந்த பாரா போட்டா எப்படி இருக்கும்?
வாசு தேவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த செல்வராசு தலையணைக்கு அடியிலிருந்து எதையோ எடுத்துக் காட்டினார். அது அன்றைய மாலை செய்தித்தாள்.
"அமைச்சர் செல்வராசுவின் ஈ சி ஆர் பங்களாவில் தீ விபத்து. முக்கிய தஸ்தாவேஜுகள் எரிந்து சாம்பல்"
என்கிற தலைப்புச் செய்தியைப் பார்த்து வாசுதேவன் மயங்கி விழுந்தார்.
http://kgjawarlal.wordpress.com
உங்க கதையும் நல்லாருக்கு. Jawarlal சொன்ன முடிவும் நல்லாருக்கு.
கருத்துரையிடுக