பின்பற்றுபவர்கள்

10 ஆகஸ்ட், 2009

மனித உடல் நோய்களும், குணப்படுத்தும் சாமியார்களும் !

நமக்குக் கிடைக்கும் உணவு, மூச்சுக் காற்று, தண்ணீர் இவற்றில் இருக்கும் நச்சுத் தன்மையே உடலில் நோய்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைகிறது. அப்படி எதுவும் இல்லை என்றால் பரம்பரைத் தன்மையாக உடலில் அதன் தொடர்புடைய மரபியல் நோய்கள் தோன்றும், அதுவும் இல்லை என்றால் விபத்து போன்றவற்றால் உடலில் காயங்கள் ஏற்படும், காயங்கள் நோய்கள் இல்லை என்றாலும் அதனை சமச்சீர் செய்யும் முயற்சியில் சுரப்பிகள் மிகுதியாக வேலை செய்ய அதன் காரணமான பக்க விளைவுகளாலும், எடுத்துக் கொள்ளும் மருந்து காரணமாக உடலில் நோய்கள் தோன்றும். நோய்களில் தற்காலிக நோய், தொடரும் நோய்கள், குணப்படுத்த முடியாத நோய்கள் எனப் பலவகை உண்டு. தற்காலிக நோய்களான காய்சல், சளி, வயிற்றுப் போக்கு, தலைவலி ஆகியவை சரியான மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சரி ஆகிவிடும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து வாழ்நாளை நீட்டிக் கொள்ளலாம். உடல் நோய்கள் குறித்து எனது அறிவுக்கு எட்டிய எளிய விளக்கம் தான் இவை. எந்த ஒரு பெரிய நோய்களும் குணம் ஆகுவதற்கு மனம் முழுதாக ஒத்துழைக்க வேண்டும், எனக்கு விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நோய்பற்றி மிகுதியாக சிந்திக்காமல் இருப்பதன் மூலம், மனம் இலகுவாக இருப்பதால் இதய இரத்த ஒட்டம் சீராக இருக்கும், அதன் வழியாக நோய்கள் விரைவில் குணமடையும். வலி என்பது நோயின் பக்க விளைவு என்பதைவிட வலி என்பது நோய் இருப்பதை மூளைக்கு உணர்த்தும் ஒரு இயற்கை ஏற்பாடு என்பதாகப் புரிந்து கொண்டால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியும். வலி மட்டும் இல்லை என்றால் நோய் கண்டதே நம்மால் உணர முடியாது, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் குறைந்துவிடும். உடல் சிதைவுக்கு இட்டுச் சென்றுவிடும். நோய் கண்ட உடலுக்கு வலிகள் மிக மிக தேவையான ஒன்று.

*****

மனித உடல் உறுப்புகளால் ஆனது என்பது போலவே அவ்வுறுப்புகள் இரத்தமும் சதையுமாக ஆனவை என்பது உண்மை. உடலியல் சூழல், விபத்துக் காரணமாக உடல் நோயைப் பற்றுவதும் முழுக்க முழுக்க இயற்கையானது. காற்றில் மாசுக்கள் சேரும் போது, தண்ணீரில் அசுத்தம் சேரும் போது அவை தூய்மை கேடு அடைவதைப் போன்றது தான் உடலில் ஏற்படும் நோய்கள். இவற்றிற்கான தற்காலிக அல்லது முடிவான தீர்வு என்பது சரியான மருத்துவரைப் பார்த்து அல்லது சரியான மருந்து பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வது மட்டுமே. ஆனால் நோய்களை சாமியார்கள் குணப்படுத்துவதாக பலரும் நம்புகிறார்கள். நோய்களைக் குணப்படுத்தும் சாமியார்களுக்கும், விடுதி அறை மருத்துவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வேறுபாடும் அல்ல, இருவருமே அற்புதங்கள் நிகழ்த்துவதாகக் கூறி நோய் கண்டவர்களின் பலவீனங்களை பணம் ஆக்குபவர்கள் தான். நாம் அறிந்தவரையில் எந்த ஒரு சாமியாரும் மூப்பு, பிணி, மரணம் இன்றி மறைந்தது கிடையாது. ஒரு காலத்தில் சித்தர்கள் எனப்பட்டோர் மூலிகை மருத்துவங்களில் சிறந்தவர்களாக இருந்தனர், அவர்கள் பல மறைச் (சங்கேத) சொற்களால் பாடல்களை எழுதி வைத்துள்ளார்கள், அவர்கள் ஆன்மீக வழியிலும் சிறந்தவர்களாக இருந்தனர். ஆனால் இன்று நோய்களை குணப்படுத்துவதாகச் சொல்லும் சாமியார்களுக்கு சித்த மருத்துவமும் தெரியாது ஆன்மீகமும் தெரியாது, அதனால் தான் தங்களின் தோற்றம் தங்களை சாமியார்கள் என்று நம்பும் படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்று சொல்வதற்காக கையாட்களை வைத்துக் கொண்டு சாமியார் அற்புதம் நிகழ்த்துபவராக கதைகளைப் பரப்புவர்களை வைத்திருக்கிறார்கள்.

நோய்கண்டவர்கள் அனைவருமே குணம் அடையாமல் இருப்பது இல்லை, அப்படி குணம் அடைபவர்களில் சாமியார்களை நம்புவர்களும் உண்டு, ஆனால் அந்த நம்பிக்கைதான் அவர்களை குணப்படுத்துவதாக நம்ப வைக்கப்படுவதும், அவர்களே அவ்வாறு நம்புவதும், அந்த அதீத உணர்ச்சியின் வெளிப்பாடுகளாக 'சாமியாரின் அற்புதம்', 'அவதாரத்தின் அற்புதங்கள்' குறித்த நூல்களில் இவர்களது சாமியார் துதிகளையும் எழுதிவிடுவார்கள், அதாவது எந்த ஒரு மருத்துவரும் கைவிடப்பட்ட நிலையில் (அப்படி எத்தனை மருத்துவரைப் பார்த்தார்கள் என்று தெரியாது) சாமியார் 'ஓவர் நைட்டில்' குணப்படுத்தியதாக நூல்களில் எழுதுவதும், எதிர்பட்டோரிடமெல்லாம் அதே தகவலைச் சொல்வதன் மூலம் தொற்று நோயைவிட சாமியாரின் புகழ் விரைவாகப் பரவிவிடும்.

மிகச் சிறந்த ஆன்மிகவாதிகள் என்று போற்றப்படுபவர்கள் கூட தீர்க்க முடியாத நோய்கண்டே இறந்திருக்கிறார்கள், இராம கிருஷ்ண பரம ஹம்சருக்கு புற்றுநோய், அவர் முதியவர் என்றாலும் இறக்கும் போது மிகவும் தள்ளாடக் கூடிய முதியவர் அல்ல, விவேகநந்தர் இறக்கும் போது அவருக்கு வயது 40க்கும் கீழ்தான். அவருக்கும் இரத்தப் புற்றுநோய், மூல நோய் ஆகியவை இருந்தன. மகான் எனச் சொல்லப்பட்ட புத்தரும் விச உணவை உண்டதனால் ஏற்பட்ட விசம் பரவலின் மூலம் உயிர் துறந்தார். கிருபானந்த வாரியார் லண்டனில் இருந்து திரும்பும் போது விமானப் பயணத்திலேயே மாரடைப்பால் மரணம் அடைந்தார். இப்படியாக எந்த ஒரு சாமியார்களும், ஆன்மிகவாதிகளும் கடுமையான நோய் இல்லாமல் இறந்ததோ அல்லது வாழ்நாள் முழுவதும் நோய் அண்டாது வாழ்ந்தோ அல்லது மரணம் என்பதை முற்றிலும் தவிர்த்தவர்களாக இருந்ததே கிடையாது.

முடவர்களை நடக்கவைப்போம், ஊமைகளைப் பேசவைப்போம் என்கிற கிறித்துவரகளில் ஒரு பிரிவினரைப் போல் இந்து மத சாமியார்களில் பலர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பலரையும் குணப்படுத்துகிறார்களாம், அடிக்கடி சர்சைக்கு வரும் எழுத்தாளர் மூன்று ஆண்டுக்கு முன்பு வரை நாத்திகராக இருந்தவர் ஒரே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டதும் ஒரு சாமியாரின் பக்தர் ஆகிவிட்டார். சாமியாரின் புகைப்படத்தில் இருந்து திருநீர் கொட்டுவதாக எல்லோரிடமும் சொல்லி வருகிறாராம். ஆக ஒருவரின் மரண பயமே சாமியார்களின் ஆசிர்வாததிற்கும், புகழ் பரவலுக்கும் மூல தனமாகிறது.

***

மனித உடல் உலோகங்களால் ஆனது கிடையாது, நோயும் வலியும், நோய் முற்றினால் மரணமும் இயற்கையானது, மருந்துகள் மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம், குணப்படுத்தலாம், மரணத்தையும் தவிர்கலாம், ஆனால் இதில் எதையுமே சாமியார்களின் மீது இருக்கும் நம்பிகையால், சாமியார்களின் ஆசிர்வாதங்களினால் குணம் அடைவதில்லை. புற்று நோயை 'ஒவர் நைட்டில்' குணப்படுத்துகிறார் என்று அல்லக்கைகளால், அறியாமையால் உளரும் அப்பாவி பக்தர்களால் கிளப்பிவிடப் படுவதிலெதிலும் உண்மைகள் என்பது மருந்துக் கூடக் கிடையாது.

16 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

:)

அண்ணாச்சி பழம் கொடுத்து குழந்தை வரம் கொடுப்பவர்கள், யோக பயிற்சி மூலம் ஆஸ்மா குணப்படுத்துபவர்கள் எல்லாம் இருக்காங்க. அவங்களை சந்திச்சுட்டு அப்பறம் புதுசா ஒரு இடுக்கை போடுங்க.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

விவேகானந்தருக்கு ஆஸ்மா மற்றும் சக்கரை நோய் இருந்தது. புற்று நோய் அல்ல.
[கோவி சரியான தகவல் படிக்காமல் பதிவுடுகிறார் என்ற குற்றச்சாட்டை விவேகானந்தர் மூல்ம் நிரூபிக்க வேண்டுமா?]

ரமணர், ராம கிருஷ்ணர் புற்று நோய் இருந்தது. மருத்துவம் வளர்ந்தால் அவர்களும் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்களா என்பது சந்தேகம்.

இவர்கள் எல்லாம் நோய் இருந்தாலும் தாங்கள் உடலை துறக்கும் நாளை சொல்லி துறந்தவர்கள்.

மேலும் அவர்கள் உடல் அல்ல்.!

மங்களூர் சிவா சொன்னது…

மிக அருமையான பதிவு கோவிஜி.

Unknown சொன்னது…

//யோக பயிற்சி மூலம் ஆஸ்மா குணப்படுத்துபவர்கள் //
:))

எனக்கு 20 வருடங்களாக இருந்த ஆஸ்த்துமா யோகப் பயிற்சியால் ஒரே நாளில் குணமானது. இது நடந்தது 5 வருடங்களுக்கு முன். இன்று வரை பிரச்சனை இல்லை.

Bharath சொன்னது…

வர வர தமிழ் ஓவியாவை படிக்கிற மாதிரியே இருக்கு.. :)

கலாட்டாப்பையன் சொன்னது…

\\இவர்கள் எல்லாம் நோய் இருந்தாலும் தாங்கள் உடலை துறக்கும் நாளை சொல்லி துறந்தவர்கள்.//
இது துண்டு சாமியார் யாகவா முனிவர் கதை தான், கடைசி காலத்தில் உடல் நலிவு ஏற்படும் பொது அனைவரும் சொல்லும் வார்த்தை நான் இறந்து விடுவேன்.... இதை வைத்து கொண்டு கதை எல்லாம் விட முடியாது. மனிதன் மனிதன் தான் நாளை நடக்கும் சங்கதிகள் யார் ரும் அறிய முடியாது.

\\மேலும் அவர்கள் உடல் அல்ல்.!//

உடல் அல்லாமல் வேறு என்ன மர கட்டாய ???

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//புற்று நோயை 'ஒவர் நைட்டில்' குணப்படுத்துகிறார் என்று அல்லக்கைகளால், அறியாமையால் உளரும் அப்பாவி பக்தர்களால் கிளப்பிவிடப் படுவதிலெதிலும் உண்மைகள் என்பது மருந்துக் கூடக் கிடையாது.//

அட அமாங்க... நாமும் அந்த எல்லையை தொடும்பொழுது நம்பிவிடுவோமோ???????.... இல்லை என்று சொல்லும் மனம் வழு அந்த நேரத்தில் இருக்குமா? இந்த சின்ன இடைவெளியில்தான் மதம் மதம்பிடிக்கின்றது என்பது உண்மை... எதோ எனக்கும் தெரிந்ததை சொல்லிபுட்டேன்....

நிகழ்காலத்தில்... சொன்னது…

இடுகையை விட் பின்னூட்டங்கள் சுவையாக உள்ளன.

//வர வர தமிழ் ஓவியாவை படிக்கிற மாதிரியே இருக்கு.. :)//

:)) போலிச் சாமியார்களை கண்ணன் சாடியிருக்கிறார். உண்மைச் சாமியார்கள் இதுபோல் சொல்லமாட்டார்கள். சிலசமயம் அவரால்தான் என அறியாதவாறு செய்வதுண்டு

Mr_Adore குறிப்பிட்டதில் சாவதைச் சொல்வதல்ல, அது அனைவருக்கும் பொது. இறக்கும் நாளை தெளிவாக அறிவித்து முக்தி அடைபவர்கள் எனத் தெளிவு செய்து கொள்ளுங்கள்.

//உடல் அல்லாமல் வேறு என்ன மர கட்டாய ???//

:))

தாங்கள் கொஞ்சமேனும் ஆன்மீகம் பக்கம் வாருங்கள் நண்பரே, உடல், உயிர், ஆன்மா என விரியும். அப்போது விளக்கம் கிடைக்கும்

கோவியாரே உரிமை எடுத்துக் கொண்டு பதில் சொன்னதற்கு பொறுத்துக் கொள்ளுங்கள்
நன்றி

வால்பையன் சொன்னது…

குமுதத்தில் அம்மா பகவான்னு ஒரு விளம்பரம் வரும்!

நீண்டநாளாக வருத்தி கொண்டிருந்த நோய் அம்மா பகவானிடம் தீட்சை வாங்கியதும் குணமாகிவிட்டதாம்!

லாட்ஜ் டாக்டர்கள் மாதிரி ஸ்பெஷல் சாதா! சாதா ஸ்பெஷல் தீட்சைகளும் உண்டாம், ஒவ்வொன்னுக்கும் ஒரு ரேட் என்பது கூடுதல் தகவல்!

காசே தான் கடவுளடா!
அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//"மனித உடல் நோய்களும், குணப்படுத்தும் சாமியார்களும் !"//

தலைப்பே படா சோக்கா இருக்கே!?

நம்ம ஜெயேந்திரர், ப்ரேம்ஸ் ஈன பிற ஆ..சாமியாரு களையும் அவைகளின் சேட்டைகளையும் மட்டும் நினைக்கவேண்டியுள்ளது.

நம்ம ஸ்வாமி ஓம்கார் மாதிரி ஒரு சில நல்லவர்களும் இருக்கலாம்.

அவர்களை இங்கு குறிப்பிடவில்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அவரை சாமியார் ஒருவர் கட்டிபிடித்து முத்தமிட்டுள்ளார்.
http://ustertamil.blogspot.com/2009/08/blog-post_9539.html

இந்த கொடுமைய போய் பாரும். நான் சொல்லி வா மூடல....

ஐயோ...!

Radhakrishnan சொன்னது…

நல்லதொரு இடுகை. ஆனாலும் திருந்துவார்களா மக்கள்?! நம்பிக்கை இருக்கும் வரை எல்லா விதங்களும் இருப்பது இயற்கைதான்.

priyamudanprabu சொன்னது…

நல்ல்லா சொன்னீங்க

ஆனா இவிக திருந்துவாய்களா????

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சரியா சொன்னீங்க.

நல்ல சித்த மருத்துவர்கள் உண்டு அவர்கள் விளம்பரம் செய்வதில்லை.

வால்பையன் சொன்னது…

நல்ல சித்த மருத்துவர்கள் உண்டு அவர்கள் விளம்பரம் செய்வதில்லை.//

விளம்பரம் செய்யும் டாக்டர்கள் கூட மோசம் தான் இல்லையா!?

வால்பையன் சொன்னது…

விவேகனாந்தருக்கு கிட்னி பெயிலியர் என்று கன்னியாகுமரியில் சொன்னார்களே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்