பின்பற்றுபவர்கள்

9 ஆகஸ்ட், 2009

எனக்கும் வருத்தமே ! - உரையாடல் சிறுகதைப் போட்டி !

உரையாடல் சிறுகதைப் போட்டியில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள் கலந்து கொண்டு 20 தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. முடிவுகளைப் பார்த்துவிட்டு புகைச்சல், , நமைச்சல், குடைச்சல் எல்லா 'சல்'லும் ஏற்பட்டு இருக்கிறது. போட்டிகளின் முடிவின் போது விமர்சனங்கள் எழும் என்றாலும் இந்த முறை பலரும் அது பற்றிப் பேசுகிறார்கள்.

"நாம எழுதுகிற எழுத்து நமக்கு உயர்வாக தெரிவது போலவே எல்லோருக்கும் தெரியவேண்டும்" என்கிற மனநிலையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் இவ்விமர்சனங்களின் ஒரு பகுதியைப் பார்க்கிறேன்.

போட்டியின் விதிமுறைகளை ஏற்று போட்டிகளில் பங்கு பெறும் பொழுது, போட்டி முடிவை விமர்சிக்கலாம் ஆனால் கடுமையான விமர்சனங்கள் தேவையற்றதாகத்தான் கருதுகிறேன். போட்டியின் நடுவர்களுக்கென்றே தனிப்பார்வை உண்டு. அவர்களது தனிப்பட்ட முடிவில் எது சிறந்த கதை என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை போட்டி நடத்துபவர்கள் அவர்களுக்கு அளிக்கிறார்கள். சில போட்டிகளில் நடுவர்களால் முடிவு செய்ய முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும் பொழுது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல்பரிசுகள் கொடுப்பதையெல்லாம் பார்த்து இருக்கிறோம்.
ஒரு சிலர் மட்டும் போட்டியில் கலந்து கொள்பவர்களின் சாதி, மதம் என்னவென்றெல்லாம் பார்த்து வெற்றியாளர்களை அறிவிக்கும் போது நடுநிலைமை தவறி நடந்து கொள்வார்கள், தொலைகாட்சி போன்ற நிகழ்ச்சிகளில் இது போன்ற கூத்துகள் நிறைய நடைபெறும் என்பதால், பல போட்டி நிகழ்ச்சிகளில் தொலைக் காட்சிகளில் குறிப்பாக இசை போட்டிகளில் வெற்றி பெறுபவர்களைப் பற்றி நிறைய திறமை உடையவர்கள் என்று நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஆனால் பதிவர்களால் நடத்தபெற்ற உரையாடல் சிறுகதைப் போட்டியில் அப்படிப் பட்ட ஒரு நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கதைகளில் மொக்கைக் கதைகள் எதுவும் இருந்தது போல் தெரியவில்லை. அதில் வெற்றி பெற்ற சிலகதைகளை நானும் படித்திருக்கிறேன் என்பதால் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும், போட்டிக் குழுவினரான ஜ்யோராம் சுந்தரும், பைத்தியக்காரனும் தரமற்ற கதைகளை தேர்ந்தெடுத்திருப்பது போல் தெரியவில்லை. வெற்றிப் பெற்ற சிறுகதைகளில் நம் கதை இல்லை என்பதற்காக விமர்சனம் செய்பவர்கள் நல்லக் கதையாக எழுதி இருந்ததாக நினைத்தால் சிறு இதழ்களுக்கும், வார இதழ்களுக்கும் அனுப்பலாம்,

நீங்களும் ஒரு நான்கு பேர் கொண்ட போட்டி முடிவு செய்யும் நடுவர் குழுவில் இருந்தால் உங்களைப் போலத்தான் மற்ற மூவரும் முடிவு செய்வார்கள் என்று நினைப்பது தசரியாகுமா? அனைவரும் ஒன்று போல் சிந்திக்கக் கூடியவர்கள் என்றால் ஒரு போட்டிக்கு நடுவராக நான்கு பேர் தேவை இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் தேவையற்ற சல சலப்புகள் குறையும்.

போட்டிகளுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொள்வது என்பது வேடிக்கைப் பார்ப்பதைவிட சிறப்பானது, அதில் பரிசு பெற்றால் மகிழ்ச்சி அடையளாம், இல்லை என்றால் கலந்து கொண்டோம் என்று மன நிறைவு அடையலாம்.
பெரும்பாலும் போட்டிகளில் ஜாம்பவான்கள் கலந்து கொள்வதில்லை ஏனெனில் கலந்து கொண்டு பரிசு கிடைக்காவிடில் எழுத்து ஏளனமாகப் பார்க்கப் படுமோ என்ற அச்சம், தாழ்வுணர்வு ஏற்படும். நமக்கெல்லாம் அப்படிப்பட்ட மனக்குறை இல்லை :)

வெற்றிக்கும் தோல்விக்கும் பொதுவானது ஆடுகளம். வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்காமல் அதில் போட்டியில் கலந்து கொண்டு களத்தில் நின்றோம் என்பதும் பெருமை தானே !

உரையாடல் சிறுகதைப் போட்டி நடத்தியவர்கள், மற்றும் போட்டியில் வென்றவர்கள், கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

5 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

ஹைய்யா... கோவி அண்ணனும் கருத்து சொல்லிட்டாரே! :-)

ஆயில்யன் சொன்னது…

//சென்ஷி


ஹைய்யா... கோவி அண்ணனும் கருத்து சொல்லிட்டாரே! :-)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))

நையாண்டி நைனா சொன்னது…

/*
ஆயில்யன் said...
//சென்ஷி
ஹைய்யா... கோவி அண்ணனும் கருத்து சொல்லிட்டாரே! :-)//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))
*/
இது எங்கள் அண்ணனை, பகடி செய்யும் முயற்சி... இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அவர் இதுக்கு மட்டுமா சொல்லி இருக்கிறார்.. என்பதனை அவதூறு பரப்புவோர் சற்றே சிந்திக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

நட்புடன் ஜமால்


வெற்றிக்கும் தோல்விக்கும் பொதுவானது ஆடுகளம். வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்காமல் அதில் போட்டியில் கலந்து கொண்டு களத்தில் நின்றோம் என்பதும் பெருமை தானே !]]


சரியா சொன்னீங்க அண்ணா.

------------------

அனைவருக்கும் வாழ்த்துகள்.

2:13 PM, August 09, 2009
நாடோடி இலக்கியன்


//அனைவரும் ஒன்று போல் சிந்திக்கக் கூடியவர்கள் என்றால் ஒரு போட்டிக்கு நடுவராக நான்கு பேர் தேவை இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் //

எப்படிண்ணே இப்படியெல்லாம்,குட் தாட் அண்ட் குட் ஷாட்.

தேர்ந்த பார்வை,அப்படியே வழிமொழிகிறேன்.

5:57 PM, August 09, 2009

சுல்தான்


கலந்து கொள்வதுதான் மிக முக்கியமானது. எல்லோரும் தன் விருப்பத்தின்படி அது சிறப்பானது என்றுதான் அவரவர் ஆக்கத்தை அனுப்பி இருப்பார்கள். வெற்றி தோல்வி எல்லாம் சாதாரணம். நல்ல இடுகை ஜி.கே.

6:08 PM, August 09, 2009

ஆ.ஞானசேகரன்


//வெற்றிக்கும் தோல்விக்கும் பொதுவானது ஆடுகளம். வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்காமல் அதில் போட்டியில் கலந்து கொண்டு களத்தில் நின்றோம் என்பதும் பெருமை தானே !

உரையாடல் சிறுகதைப் போட்டி நடத்தியவர்கள், மற்றும் போட்டியில் வென்றவர்கள், கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.//

உண்மை வெற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. இருந்தாலும் என் கதைக்கு பரிசு கிடைக்காதது வருத்தமே!

7:42 PM, August 09, 2009

Radhakrishnan சொன்னது…

அருமையான பார்வை கோவியாரே. போட்டி நடத்துவது எளிதான காரியம் இல்லை. அதுவும் வந்திருக்கும் விமர்சனங்கள் குறித்துப் பார்க்கும்போது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சிறுகதைப் போட்டி எனத் தெரிகிறது. மிக்க நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்