பின்பற்றுபவர்கள்

7 ஆகஸ்ட், 2009

மீன்கொத்தி (சிறுகதை) !

"டாக்டர்.... மேடம்... சொன்ன இடத்தில் கையெழுத்துப் போடுங்க..." சுகாதரத்துறை இயக்குனரான பெண் மருத்துவரிடம் மிரட்டுவது போன்று சொல்லிக் கொண்டு இருந்தார் அமைச்சரின் பிஏ.

"சார்...நீங்க மிரட்டினாலும்.....எங்களுக்குன்னு சில புரோசீஜர்ஸ் இருக்கு, முறைப்படி டெண்டர் விட்டு தான் நாங்க மருந்து வாங்குறோம்..."

"இருக்கட்டம் மேடம்...இப்ப உங்களுக்கு வந்திருக்கிற டெண்டர் எல்லாமே அமைச்சரின் வெவ்வேறு மருந்து கம்பெணிகளின் கொட்டேசன்கள் தான் என்று உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அதுல ஒரு கம்பெணிக்கு கொடுத்து இருக்கலாம், வந்திருப்பதில் ஒண்ணே ஒண்ணு புதுசா ஒரு கம்பெணி அனுப்பி இருப்பது, இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும், புதுக்கம்பெணி அமைச்சருக்கு போட்டியாக ஒருவன் ஆரம்பிச்சிருக்கான்.....அவனால அமைச்சருக்கு ஏற்கனவே 20 கோடி நட்டம்....அவனுக்கு கொடுத்தீர்கள் என்றால் அமைச்சர் கடுப்பாகிவிடுவார்"

"சார்.....உங்க கம்பெணிகளைவிட அந்த கம்பெணி குறைவாக கோட் பண்ணி இருக்காங்க...அவங்க மருந்துகளும் தரமானது......"

"மேடம் நீங்க தரத்தை பற்றியெல்லாம் பேசி தேவை இல்லாது ரிஸ்க் எடுக்கிறிங்க.....அமைச்சரை பகைச்சிக்காதிங்க.....அவ்வளவுதான் சொல்லிட்டேன்"

"சார்....எங்களுக்குத் தேவை நல்ல மருந்து......நான் உங்க கம்பெணிக்கு கொடுத்தால்....விவரம் தெரிந்து அந்தக் கம்பெனிக்காரங்க கோர்டுக்குப் போனாலும் எனக்கு பிரச்சனை தான்......என்னால உங்களுக்கு ஒத்துழைக்க முடியாது"

"மேடம் என்ன செய்விங்களோ......எனக்கு தெரியாது....நாளைக்கு டெண்டர் எங்களுக்கு கிடைச்சாகனும்"

"சாரி...மிஸ்டர்.....அடுத்த அடுத்த டெண்டர்களில் பார்க்கலாம்....."

"10 கோடி காண்ட்ரேக்ட்....அமைச்சர் எப்படியாவது அவருக்கு கிடைக்கனும் என்று சொல்லிவிட்டார்"

"திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காதிங்க.......எடத்தைக் காலிப்பண்ணுங்க .....இல்லாட்டி...."

அமைச்சரின் பிஏ.......அந்த மருத்துவ இயக்குனரை ஒரு முறை முறைத்துவிட்டு சென்றார்

***

மறுநாளுக்கு மறுநாள் அங்கே அமைச்சர் வீட்டில், பி.ஏ அமைச்சரிடம்,

"ஐயா.......நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன்......அவ.... அந்த அம்மா பயப்படுவது போல் தெரியல.... நமக்கு ஆர்டர் கிடைக்கல.....அந்த புதுக்கம்பெணிக்கு கிடைத்துவிட்டது... இனிமே ஒண்ணும் பண்ண முடியாது"

"எப்ப்டிய்யய எப்பிடிய்யா.....எம்மேல பயமில்லாமல் போச்சு...இரு அவளுக்கு ஆப்பு வைக்கிறேன்......நீ என்ன பண்ணுகிறே....அடுத்த டெண்டர் பிரிக்கும் போது நம்ம ஆளுங்களிடம் ஒரு 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து......அந்த அம்மாவைப் பார்க்கப் போகச் சொல்லு... மற்றதையெல்லாம் நான் விஜிலென்ஸ் ஆபிசர்களிடம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன்"

"அந்த அம்மா லஞ்சம் வாங்குமான்னு தெரியாது.......பின்னே எப்படி......?"

"அதையும் நான் பார்த்துக் கொள்கிறேன் ... வாங்கியதாக விஜிலென்ஸ் அலுவலர்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்லுவாங்க...."

****

மூன்று மாதம் கழித்து,

ஒரு நாள் அந்த பெண் மருத்துவரை கைது செய்து அழைத்துச் சென்றதை பற்றிய முந்தைய நாள் தொலைக்காட்சிப் படத்துடன், லஞ்சம் வாங்கிய பெண் டாக்டர் சிக்கினார், மருந்து கொள்முதலில் ஊழல் என்ற செய்தி கொட்டை எழுத்துகளில் செய்தி தாள்களில் வெளியாகி இருந்தது.

படித்துவிட்டு கட்சிக்கார பெருசு...இன்னொரு பெருசிடம்,

"ஆட்சி நல்லா போயிட்டு இருக்குல்லே....மக்களை ஏமாத்துறவங்க ... ஊழல் செய்றவங்க இப்படி சிக்கனும்யா.....பொம்பளைன்னா மட்டும் தப்பு செய்யலாமா ?"

என்று தன் சார்ந்த கட்சியின் ஆட்சிப் பெருமையுடன், பத்திரிக்கையின் மற்ற செய்திகளையும் பற்றி தனது கருத்துகளை உதிர்த்துக் கொண்டு இருந்தார்

*****

பின்குறிப்பு: கதைக்கும் இணைப்பிற்கும் தொடர்பில்லை, உரையாடல் முழுவதும் புனைவுதான். அரசு எந்திரங்கள், எல்லாவற்றையும் வயிற்றுக்குள் அடக்கும் முதலைகளை விட்டுவிட்டு மீன் கொத்திகளைத் தான் எப்போதும் வேட்டை ஆடுகிறது.

16 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

பின்குறிப்பு

செம குத்ஸ்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தள யும் வாய் யும் உண்மை கதை மாதிரி இருக்கே!

அப்பாவி முரு சொன்னது…

முடியலை

:(((

Radhakrishnan சொன்னது…

நல்லவர்களுக்கு காலம் இல்லைன்னு சொல்வாங்களே அது இதுதானா! நல்லதொரு படிப்பினை கதை, ஆனால் நல்லவர்கள் பயந்துவிடக்கூடாது. லஞ்சம் கொடுத்தவர்களையும் கைது செய்யும் சட்டம் ஏன் இல்லை? மிக்க நன்றி கோவியாரே.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அரசியல் பண முதலைகள் முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்

வால்பையன் சொன்னது…

புனைவாக இருந்தாலும் நிகழ்வு உண்மையோ என அஞ்ச வைக்கிரது!

துபாய் ராஜா சொன்னது…

இப்படி கூட இருந்திருக்கலாம்.

துபாய் ராஜா சொன்னது…

இப்படி கூட இருந்திருக்கலாம்.

மங்களூர் சிவா சொன்னது…

புனைவாக இருந்தாலும் நிகழ்வு உண்மையோ என அஞ்ச வைக்கிறது!

S.Gnanasekar சொன்னது…

மீன் கொத்தி..
அரசியல் முதலைகள் செய்யும் ஊழல்கலுக்கு துனை போகாவிட்டால் அரசு அதிகாரிகள் நிலை இதுதான் என்பதை மீன் கொத்தி கதை மூலம் விளக்கியுள்ளார் நன்று..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கதை நல்லா இருக்கு. உண்மையை சொல்லி இருக்கீங்க.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//கதைக்கும் இணைப்பிற்கும் தொடர்பில்லை, உரையாடல் முழுவதும் புனைவுதான். அரசு எந்திரங்கள், எல்லாவற்றையும் வயிற்றுக்குள் அடக்கும் முதலைகளை விட்டுவிட்டு மீன் கொத்திகளைத் தான் எப்போதும் வேட்டை ஆடுகிறது//

அதுவும் சரிதான்

Nathanjagk சொன்னது…

மீன்கொத்தி? தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது! நியூஸ் பேப்பர் சிறுகதை! நமக்கான விஷயத்தை எங்கிருந்து ​வேண்டுமானாலும் ​பெற்றுக்​கொள்ளலாம் என்று உணர்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகநாதன் said...

மீன்கொத்தி? தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது! நியூஸ் பேப்பர் சிறுகதை! நமக்கான விஷயத்தை எங்கிருந்து ​வேண்டுமானாலும் ​பெற்றுக்​கொள்ளலாம் என்று உணர்கிறேன்.

11:21 PM, August 08, 2009//

:)

மிக்க நன்றி !

இந்த சிறுகதையின் மற்றொரு புரிதலாக அதுவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சரியாக அவதனித்து இருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...

பின்குறிப்பு

செம குத்ஸ்//

நன்றி ஜமால் !

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தள யும் வாய் யும் உண்மை கதை மாதிரி இருக்கே!//

சத்தியமாக என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை ஜோதி !

//அப்பாவி முரு said...

முடியலை

:(((

1:00 PM, August 07, 2009//
தயவு செய்து நிறுத்தவும் என்கிறீர்களா ?

//வெ.இராதாகிருஷ்ணன் said...

நல்லவர்களுக்கு காலம் இல்லைன்னு சொல்வாங்களே அது இதுதானா! நல்லதொரு படிப்பினை கதை, ஆனால் நல்லவர்கள் பயந்துவிடக்கூடாது. லஞ்சம் கொடுத்தவர்களையும் கைது செய்யும் சட்டம் ஏன் இல்லை? மிக்க நன்றி கோவியாரே.

5:49 PM, August 07, 2009//

:)

யாருக்குமே காலம் இல்லை. காலம் அதுபாட்டுக்கு சென்று கொண்டு இருக்கிறது, எதையும் கண்டு கொள்ளாது ஆனால் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் ! அதில் லஞ்சம் கொடுத்தவர்களும் உண்டு !

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அரசியல் பண முதலைகள் முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்

10:11 PM, August 07, 2009//

நன்றி ஸ்டார்ஜன் !

//வால்பையன் said...

புனைவாக இருந்தாலும் நிகழ்வு உண்மையோ என அஞ்ச வைக்கிரது!//

//துபாய் ராஜா said...

இப்படி கூட இருந்திருக்கலாம்.//

நன்றி வால் மற்றும் துபாய் ராஜா,

அப்படிக் கூட இருக்கலாம் என்று நினைத்தே எழுதினேன். ஏனெனின்றால் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு முன்கூட்டிய தகவல் / புகார் எதுவும் வரவில்லை என்று அந்த செய்தியில் இருந்தது

கோவி.கண்ணன் சொன்னது…

..மங்களூர் சிவா said...

புனைவாக இருந்தாலும் நிகழ்வு உண்மையோ என அஞ்ச வைக்கிறது!...//

உண்மையாக இருந்தாலும், பெருமூச்சு விடுவதைத் தவிர்த்து நாம ஒண்ணும் செய்ய முடியாது சிவா

//Blogger S.Gnanasekar Somasundaram said...

மீன் கொத்தி..
அரசியல் முதலைகள் செய்யும் ஊழல்கலுக்கு துனை போகாவிட்டால் அரசு அதிகாரிகள் நிலை இதுதான் என்பதை மீன் கொத்தி கதை மூலம் விளக்கியுள்ளார் நன்று..//

சோமசுந்தரம் ஐயா பாராட்டுக்கு நன்றி !

//அக்பர் said...

கதை நல்லா இருக்கு. உண்மையை சொல்லி இருக்கீங்க.
//

அக்பர் நன்றி !

//ஆ.ஞானசேகரன் said...

//கதைக்கும் இணைப்பிற்கும் தொடர்பில்லை, உரையாடல் முழுவதும் புனைவுதான். அரசு எந்திரங்கள், எல்லாவற்றையும் வயிற்றுக்குள் அடக்கும் முதலைகளை விட்டுவிட்டு மீன் கொத்திகளைத் தான் எப்போதும் வேட்டை ஆடுகிறது//

அதுவும் சரிதான்//

ஞானசேகர் நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்