பின்பற்றுபவர்கள்

5 ஆகஸ்ட், 2009

நல்ல நாள் !

நாள் பார்ப்பது பற்றிய பகுத்தறிவு பார்வையாக நான் நினைப்பது, "குறிப்பிட்ட காலத்தில் ஒரு செயலை செய்து முடிப்பது நல்லது, பயனளிக்கும் என்பதாக நாட்காட்டிகள் இல்லாத காலங்களில், நிலவின் வளர்ச்சி தேய்வு என்பதை வளர்/தேய் பிறைகளாக நாட்களைக் கணக்கிட்டு, நிலவு நாட்காட்டிகள் மூலம் குறித்து வைத்து அந்த நாட்களுக்குள் செய்து முடிப்பது என்கிற திட்டமிடுதலாக 'நாள் பார்த்து' செய்வது என்பது வழக்கில் இருந்திருக்க வேண்டும்". ஜனவரி 1ல் இதையெல்லாம் செய்யனும், இதையெல்லாம் செய்யக் கூடாது என்று பற்று உறுதி ஏற்பது போன்றவை தான் அது. அடுத்த பவுர்ணமியில் தொடங்குவோம் என்பதாக ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்றைத் தொடங்குவதைப் பற்றிய முடிவெடுத்தலே நாள் பார்ப்பதாக இருந்திருக்க வேண்டும். இதில் பஞ்சாங்கங்கள், சோதிடங்கள், பஞ்சகச்சங்கள் புகுந்து கொண்டதால் அதை மேலும் சிக்கலாக்கி, வளர்பிறை, தேய்பிறை, திதி, நட்சத்திரம், சூலம், கரிநாள், முகூர்த்தம், அஷ்டமி, நவமி, பஞ்சமி இவையெல்லாம் சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த செயலின் தொடக்கத்தை வைத்து பணம் சம்பதிக்காலாம் என்கிற கூட்டம் திட்டமிட்டே இவற்றை எல்லாம் உள்ளே நுழைத்ததாகத்தான் நினைக்கிறேன். ஒரு பணம் போட்டு ஒரு செயலை செய்பவர்களுக்கு அதை வெற்றிகரமாக தொடங்குவதில் தவறு ஒன்றும் இல்லை என்கிற நினைப்பைத் தோற்றுவித்துவிட்டால் அவர்களிடம் பணம் கரப்பது எளிதுதான். பெரிய செலவு (முதலீடு) செய்யப் போவதற்கு முன்பு இது சிறிய செலவு தான் என்பதால் நாள் குறிப்பிடும் சோதிடனுக்கு சிறுதும் (சுமார் ரூ 10,000 - 15,000) , அந்த நாளில் பூசை செய்ய வரும் பார்பனருக்கு கொஞ்சம் (சுமார் ரூ 10,000) செலவு செய்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து கோவிலுக்குப் போகும் எந்த ஒரு இந்துவும் நாள் பார்க்காமல் திருமணம் செய்து கொள்வது கிடையாது. நாள் பார்க்காமல் இடம் மாறி குடி போவது கிடையாது, செவ்வாய்கிழமை நேர்முகத் தேர்வு வந்துவிட்டால் மனசொடிந்து போகுபவர்கள் பலர். வீடு கட்டும் போதே நாள் நட்சத்திரம் பார்த்து எதிர்காலம் நல்லா இருக்க வேண்டும் என்றெல்லாம் கருதி செய்கிறார்கள். பிறகு எவனோ ஒரு ஜோதிடன் சொன்னான் என்பதற்காக வாஸ்து பார்த்து வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறார்கள்.

எந்திரம் போல் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்பவர்கள் அதாவது ஒரு அலுவலகத்தில் மாத ஊதியத்திற்கு வேலை செய்பவர்களுக்கு திடிரென்று செல்வம் சேர்வதற்கு எதுவும் வாய்ப்பு இருக்கிறதா ? அல்லது வியாபரம் செய்பவர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வியாபாரத்தில் குறிப்பிட்ட அளவு தான் வருமானம் கிடைக்கும் என்று உறுதியாக தெரிந்து (உதாரணத்த்துக்கு பெட்டிக்கடை வைத்திருப்பது, மருந்து கடை) நடத்துபவர்களுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு இருக்கிறதா ? அப்படி எதுவுமே கிடையாது, ஆனால் இவர்களும் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் அமைப்பை மாற்றுகிறார்கள். பெரிய அளவு வியாபரம் செய்பவர்களுக்கும் வியாபரம் நொடிப்பதற்கான வெளிப்புற காரணங்கள் நன்றாகவே தெரியும், ஒரு மாதம் விற்பனை சரி இல்லை என்றால் அவை ஏன் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒன்று வேறு யாராவது அதே தொழிலை புதிதாகவோ அதே பகுதியில் தொடங்கி இருக்கலாம், அல்லது நல்ல திறன் உள்ளவர் அங்கு தொடங்கி குறைந்த விலைக்கு விற்கும் படி சூழலால் கூட ஒருவரின் வியாபாரம் பாதிக்கும். இவை வெளிப்படையான காரணங்கள், ஆனால் விற்பனை சரி இல்லை, வீட்டின் அமைப்பை மாற்றினால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைப்பதும் அப்படி மாற்றுவதாலும் பயனேதும் உண்டா ?

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் தான் பலர் நாள் நட்சத்திரம், வாஸ்து, ராசிக்கல் என்றெல்லாம் தவறான வழியில் சென்று பொருள்களை இழக்கிறார்கள். எல்லாம் இவற்றின் மூலமே சரி ஆகிவிட்டால் 'உழைப்பு' என்பதன் பொருள் தான் என்ன ?

அளவுக்கு மிஞ்சிய செல்வம் என்பதன் எனது எண்ணம் "பிறரின் செல்வங்களையும் மறைமுக கொள்ளையின் மூலம் சேர்த்து வைத்திருப்பது, டிமாண்ட் என்பதைப் பயன்படுத்தி பலர் குவிக்கும் செல்வங்கள் அனைத்தும் அபகரிப்புகள்" என்பதே. ஒருவருடைய வாழ்க்கையில் செல்வம் சேரவேண்டுமென்றால் ஒன்று தவறான வழியில் அடுத்தவரின் பொருளை அபகரிப்பதன் மூலம் சாத்தியம், அடுத்தது நேர்மையான வழி கடுமையான உழைப்புடன் திட்டமிடுதல் அவை சரியாக செயல்படும் சூழல் இவற்றால் மட்டுமே கைகூடும். நேர்மையான வழியில் செல்வதைப் பற்றி சிறுதும் சிந்திக்காமல் குறுக்குவழியில் அடையலாம் என்று மூன்றாவதாக முயல்வதே நாள், நட்சத்திரம் பார்த்து செயல்பட நினைக்கும் சோதிடம் சார்ந்தவை.

பூமி நல்ல நேரம் / கெட்ட நேரம் பார்த்து கொஞ்சம் சுற்றுவதை நிறுத்தினாலோ ஓய்வொடுத்தாலோ....நமக்கு எந்த ஒரு நாளும் இல்லாது போகும் :) இயற்கையையின் செயல்பாடுகள் எப்போதும் தொடர்ச்சியாக இருக்கும், அவற்றை நாள்கள் தடுத்துவிட முடியாது. அவை நாள்களுக்காக காத்திருப்பதும் இல்லை. எதையும் நல்ல நாள் பார்த்து செய்வதைக் விட குறிப்பிட்ட நாள்களுக்குள் தொடங்கி, குறிப்பிட்ட நாள்களுக்குள் செய்வதால் மட்டுமே நாள்களால் நமக்கு நன்மை அளிக்க முடியும்.

நேரம் 'நல்ல' நேரம் !

20 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

மதம் என்று ஒன்று இருக்கும்வரை நாள் பார்ப்பது இருக்கும்.

இந்து - நாள் பார்க்கிறார்கள் என்பது மட்டுமல்ல.

கிருஸ்துவர்கள் ஞாயிறு, முகமதியர்கள் வெள்ளி என நாட்களை வைத்திருக்கிறார்கள்.

காலம் கருதி செய்தால் ஞாலம் உங்கள் கையில் வருமாம்...!

ஜோதிடம் வேண்டாம் நாள் வேண்டாம் என சொல்லுவது இருக்கட்டும்... ஏன் அனைத்து வார நாட்களும் கிரகத்தின் அடிப்படையில் இருக்கிறது? எல்லா கலாச்சாரத்திலும் ஒன்றாகவே இருக்கிறதே ஏன்?

(சன் டே, ஞாயிறு, சூரியவார்..)

சுப்பாண்டி சொல்லுவார்... :)

கிரகங்களுக்கும் மனித இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொள்ளாத வரை அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கும் என்பது எந்த முண்டத்திற்கும் தெரியாது :))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கடவுள் இருக்கு என்று நம்பும் இவர்களால் கடவளால் படைக்கப்பட்ட நாட்கள் எல்லாம் நல்லநாள் என்று ஏன் நினைப்பதில்லை?

நட்புடன் ஜமால் சொன்னது…

எல்லா நாளும் நல்ல நாளே.


இப்படி நாட்களை பார்த்து நேர விரயம் செய்பவர்கள் உழைப்பை முன்னிருத்தினால் வெற்றி நிச்சியம்.

ஒன்றே செய்
நன்றே செய்
அதையும்
இன்றே செய்

இது தான் சிறப்பு.

ஜனவரி 1 வரட்டும் அதிலிருந்து ஒரு செயலை துவங்குவோம் அல்லது நிறுத்துவோம் என்று நினைத்து ஒத்தி போடுபவர்கள் எந்த வருடத்து ஜனவரி 1 என்பதை மறந்தே விடுவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
மதம் என்று ஒன்று இருக்கும்வரை நாள் பார்ப்பது இருக்கும்.//

அதாவது மதத்திற்கு நாள் பார்க்கும் வரை !
:)

//இந்து - நாள் பார்க்கிறார்கள் என்பது மட்டுமல்ல.

கிருஸ்துவர்கள் ஞாயிறு, முகமதியர்கள் வெள்ளி என நாட்களை வைத்திருக்கிறார்கள்.//

வெள்ளிக்கிழமை வழிபாடுகள், தொழுகைகள் உண்டு, ஆனால் செயல் தொடக்கத்திற்கு அவர்கள் நாள் பார்ப்பதாக தெரியவில்லை.

//காலம் கருதி செய்தால் ஞாலம் உங்கள் கையில் வருமாம்...!//

பருவத்தே பயிர்செய் ! என்கிறார்கள். பருவம் என்பது காலம்.

//ஜோதிடம் வேண்டாம் நாள் வேண்டாம் என சொல்லுவது இருக்கட்டும்... ஏன் அனைத்து வார நாட்களும் கிரகத்தின் அடிப்படையில் இருக்கிறது? எல்லா கலாச்சாரத்திலும் ஒன்றாகவே இருக்கிறதே ஏன்?//

நல்ல முகூர்த்தம் பார்த்து திருமணம் செய்பவர்கள் அனைவருமே சேர்ந்து இருப்பது இல்லை. பதிவு திருமணம் செய்பவர்கள் அனைவருமே பிரிந்துவிடுவதில்லை. :)

எல்லாக் கலாச்சாரத்தில் மதம் என்கிற ஒற்றைத் தன்மை அதன் சார்புடைய நம்பிக்கைகள் சில ஒன்றாக இருப்பதில் வியப்பு இல்லை. ஆனால் அவை உண்மையா என்பது ஆராய்ச்சிக்குரியது

//(சன் டே, ஞாயிறு, சூரியவார்..)

சுப்பாண்டி சொல்லுவார்... :)//

பிகேபி கூட கேட்டிருந்தார் "வார சுழற்சி எதன் அடிப்படையில் ?" தெரிந்தால் சொல்லுங்கள்.

//கிரகங்களுக்கும் மனித இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொள்ளாத வரை அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கும் என்பது எந்த முண்டத்திற்கும் தெரியாது :))
//

கிரகங்களுக்கும் மனித மனத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
கடவுள் இருக்கு என்று நம்பும் இவர்களால் கடவளால் படைக்கப்பட்ட நாட்கள் எல்லாம் நல்லநாள் என்று ஏன் நினைப்பதில்லை?

11:26 AM, August 05, 2009
//

கடவுள் நாள்களைப் படைத்தவுடன் தீபாஆரதனை செய்ய மறந்து இருப்பார் என்று நினைத்திருக்கலாம், அதனால் சில நாட்கள் தவறுதலாக திசை மாறிவிட்டது என்று நினைக்கிறார்களோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
எல்லா நாளும் நல்ல நாளே.


இப்படி நாட்களை பார்த்து நேர விரயம் செய்பவர்கள் உழைப்பை முன்னிருத்தினால் வெற்றி நிச்சியம்.

ஒன்றே செய்
நன்றே செய்
அதையும்
இன்றே செய்

இது தான் சிறப்பு.

ஜனவரி 1 வரட்டும் அதிலிருந்து ஒரு செயலை துவங்குவோம் அல்லது நிறுத்துவோம் என்று நினைத்து ஒத்தி போடுபவர்கள் எந்த வருடத்து ஜனவரி 1 என்பதை மறந்தே விடுவர்.

11:50 AM, August 05, 2009
//

நன்றி ஜமால் !

யாசவி சொன்னது…

many items I agree and you wrote nicely

But few matters may not agree

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\ஒரு பணம் போட்டு ஒரு செயலை செய்பவர்களுக்கு அதை வெற்றிகரமாக தொடங்குவதில் தவறு ஒன்றும் இல்லை என்கிற நினைப்பைத் தோற்றுவித்துவிட்டால் அவர்களிடம் பணம் கரப்பது எளிதுதான்.\\

பணம் போட்டு தொழில் செய்பவனெல்லாம் விவரம் இல்லாதவர் அல்ல.

\\எந்திரம் போல் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்பவர்கள் அதாவது ஒரு அலுவலகத்தில் மாத ஊதியத்திற்கு வேலை செய்பவர்களுக்கு திடிரென்று செல்வம் சேர்வதற்கு எதுவும் வாய்ப்பு இருக்கிறதா\\

ஏன் வேறு நிறுவன வேலைவாய்ப்பு,பதவி உயர்வு வராதா
(இதற்கு திறமைதான் அடிப்படை)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

\\ எல்லாம் இவற்றின் மூலமே சரி ஆகிவிட்டால் 'உழைப்பு' என்பதன் பொருள் தான் என்ன ? ///



சரியா சொன்னீங்க

இன்னக்கி நாள் நட்சத்திரம் பாக்கதவங்களே கிடையாது .

இப்படி பாத்து செய்யும் காரியம் வெற்றின்னா "ஏய் பாத்தியா இதெல்லாம் பாத்ததுக்கு அப்புறம் தான் விருத்தியாயிருக்கு " என்று சொல்லும் இவங்க ( இப்படி பாத்து செய்யும் காரியம் ) தோல்வியை
மட்டும் ஏன் பாக்க மாட்டேங்கிறாங்க !!!

கிடுகுவேலி சொன்னது…

உங்களோடு ஒத்து போகிறேன். இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நாள், நட்சத்திரம் பற்றி கவலை இல்லை. ஆனால் இறை நம்பிக்கை உள்ளவர்களே இப்படியான சில அவநம்பிக்கையில் சுழல்கிறார்கள். "நாளென் செய்யும் வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும்....வடிவேலன் இருக்கும் போது" என கந்தலரங்காரம் சொல்வது போல இறைவனிடம் எல்லாவற்றையும் விட்டு விட்டு தொடங்கினால் சரிதானே..!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பொதுவா நானும் நேரம் காலம் பார்த்துதான் எதுவும் செய்வேன்.

இரவு 12 மணிக்குள் ஓட்டலுக்கு சாப்பிட போய் விடுவேன். இல்லைன்னா அடைத்து விடுவார்கள்.

படிக்கும் காலத்தில் 8 மணிக்குள் பஸ் பிடித்து போய் விடுவேன். இல்லைன்னா பஸ் போயிடும்.

ஊருக்கு வரும் போது ஏர்போர்ட்டுக்கு ஃப்ளைட் கிளம்புறதுக்கு 2 ம‌ணி நேர‌த்துக்கு முன்னாடியே போயிடுவேன்.

மற்றபடி காலண்டரில் நல்ல நேரம் பார்க்கிற வழக்கம் இல்லை.

Radhakrishnan சொன்னது…

மிகவும் அருமையான கட்டுரை. நம்பிக்கை என சொல்லலாமா? எதுவுமே தவறாகிப் போய்விடக் கூடாதே என்கிற அவநம்பிக்கை என சொல்லலாமா?

நல்லது நடக்க வேண்டும் என்றுதான் எந்த ஒரு மனமும் விரும்பும். அதற்கான வழிகள் இவை என மனம் அதில் லயித்துவிடும்போது, அவைகளைச் செய்யாது போனால் தவறு நடந்துவிடுமோ என அஞ்சுவது இயற்கையல்லவா.

உழைப்பின் மூலம் மூலதனம் பெருகும், ஆனால் உழைப்புக்கு எந்த உபத்திரவமும் வந்துவிடக் கூடாது என நினைப்பது மனித இயற்கைதான். ஏனோ மனிதனின் மனம் பலவீனமாகவே இருக்கிறது.

விவேகாநந்தர் சொன்னதைத்தான் சொல்கிறேன் 'மனிதரின் மனம் பலவீனப்பட்டு இருக்கும்வரை இறைவன் தேவையாய் இருக்கிறார்'

இலண்டனில் கிழக்குப் பார்த்த சமையல் அறைகள் இல்லாத வீடுகள் உண்டு. அதற்காக சமையல் செய்யாமலா இருக்கிறோம். சில சாஸ்திரங்கள் அந்த அந்த கால சூழ்நிலைக்கு ஏற்படுத்தப்பட்டவை, எந்த காலத்திற்கும் பொருந்தும் என ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

பணம் பறிக்கிறார்கள் என சொல்ல வேண்டாம், அவர்கள் இதைத் தொழிலாகச் செய்கிறார்கள் அந்தத் தொழிலுக்கு மூலதனம் அப்பாவி மக்கள், ஆடம்பர வாழ்வுக்கு தங்களை அர்ப்பணிக்க நினைப்பவர்களே.

தங்களைப் போன்றே அனைவரும் எண்ணத் தொடங்கிவிட்டால் ஒரு தொழில் முடங்கிவிடும். :) அவர்களது உழைப்பு வீணாகிவிடும்.

மிக்க நன்றி கோவியாரே.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

கிரகங்களுக்கும் மனித இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொள்ளாத வரை அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கும் என்பது எந்த முண்டத்திற்கும் தெரியாது :)
//கிரகங்கள் பூமியில் உள்ள தனித்தனி
மனிதனுக்கும் தனித்தனி விளைவுகளை
எப்படி தர இயலும்..?
நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகி
விடாது..//

துபாய் ராஜா சொன்னது…

//குறிப்பிட்ட நாள்களுக்குள் தொடங்கி, குறிப்பிட்ட நாள்களுக்குள் செய்வதால் மட்டுமே நாள்களால் நமக்கு நன்மை அளிக்க முடியும்//

நீதி அருமை.

பீர் | Peer சொன்னது…

நல்ல காலம்.

Punnakaimannan சொன்னது…

உங்களுடைய படைப்பிற்கு இந்த கவிதை பொருத்தமாக இருக்கிறதா என்று கூறுங்கள்:

ஏன் மறுக்கிறான்?

வேட்டையாடி,
விலங்கு வளர்த்து,
வேளாண்மை செய்தார் - அப்போது
அவர்களுக்கு ஊரும் இல்லை - அங்கு
கோயிலும் இல்லை

இனங்கள் பெருகின
போட்டிகள் தோன்றின
தன்னை விஞ்சிய
அனைத்தையும் வணங்கினர்
விதிமுறை வகுத்தனர்
எல்லைகள் குறித்தனர்

தேவைக்கேற்பவே
கண்டுபிடிப்புத் தொடர்ந்தது
சாதிகள் வளர்ந்தது
சமயங்கள் பெருகின

சமூக ஒழுங்கிற்காய்
சாத்திர விதிகள்
சாத்வீக வாழ்வுக்காய்
சத்திய போதனைகள்

மறந்தான் மனிதன்
மானுடத்தை
மனிதத்தை
ஆன்மாவின் நேயத்தை

இழந்தான் வாழ்வின்
இன்பத்தை
அமைதியை - தன்
இருப்பைக்கூட

வலியன் கூறுவதே
வேதம் ஆனது
எழியவர் என்றுமே
அடிமைகள் ஆயினர்

கடவுளைப் படைத்தான் - ஆனால்
கருணையை மறந்தான்
தானங்கள் கொடுத்தான் - ஆனால்
ஏழையை மறந்தான்

சாத்திரம் சடங்கை
மாற்றினான் தன் வசதிக்காக
மாற்ற மறுக்கிறான் - சில
மூட நம்பிக்கைகளை மட்டும்

http://muthalarumpu.blogspot.com/

கோவி.கண்ணன் சொன்னது…

//Kavi said...
உங்களுடைய படைப்பிற்கு இந்த கவிதை பொருத்தமாக இருக்கிறதா என்று கூறுங்கள்:

ஏன் மறுக்கிறான்?
//

கவி,

சிறப்பாக சொல்லி இருக்கீறீர்கள், மிக்க நன்றி. பதிவின் கருப்பொருள் உங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக நினைக்க முடிகிறது.

//கடவுளைப் படைத்தான் - ஆனால்
கருணையை மறந்தான்
தானங்கள் கொடுத்தான் - ஆனால்
ஏழையை மறந்தான்//

மிகவும் சிறப்பான வரிகள். பாராட்டுகள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அண்ணா உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் அன்புடன் பெற்றுக்கொள்ளவும்.
http://sinekithan.blogspot.com/2009/08/blog-post_05.html

Balan சொன்னது…

நேரம் பார்ப்பதற்கு தவறான கருத்தை புரிந்து வைத்திருக்கும் பதிவர் உங்களுக்கும் ஸ்வாமி அவர்களுக்கும் வணக்கம்.

//மதம் என்று ஒன்று இருக்கும்வரை நாள் பார்ப்பது இருக்கும்.//

நாளும் நேரமும் பார்க்காமல் இன்று எந்த நல்ல காரியமும் நடை பெறுவதில்லை. கிரகங்களின் அடிப்படையில் அதன் அமைவிடத்துக்கு ஏற்ப மனிதனின் சிந்தனையும் மாறுகிறது, இது நிருபுக்கப்பட்ட உண்மை .
கிரகங்களின் காந்த புல மாற்றம்தான் இதற்கு காரணம். அமாவாசையில் மன நோயாளிகள் நடவடிக்கைகள் மற்றம் அடைவதும் இதன் காரணமே. வேண்டுமாயின் பல உதரணங்கள் சொல்லாம் ..........

யோதிடமும் அதைப்போன்றதே
முடிந்தால் ஒரே நேரத்தில் பிறந்த ஐந்து பேரின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாருங்கள் இல்லை ஒரே உச்சரிப்பு பேரைக்கொண்ட சிலரை ஒப்பிட்டு பாருங்கள். உண்மை தெரியும், சில விதி விலக்கும் உண்டு.

ஏனையவர்கள் நல்ல நாள் பார்பதில்லை என்பது தவறானது
ஆனால் அவர்கள் அதற்கென ஒருவரை நாடிச்செல்ல வில்லை
ஏனைய மதத்தவரின் சில நல்ல காரியங்கள் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடப்பது எப்படி ?

உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் தப்பனவர் என்றால் அதற்கு மற்றவர் பொறுப்பல்ல .

கோவி.கண்ணன் சொன்னது…

// blaek said...
உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் தப்பனவர் என்றால் அதற்கு மற்றவர் பொறுப்பல்ல .
//

blaek,
எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சில நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக எங்கள் வீட்டைச் சுற்றி நல்லவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது, உங்களால் முடிந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்