ஸ்வைன் ப்ளூ : விரைவாக பரவுவதற்கு மத்திய மாநில அரசுகள் மெத்தனம் தான் என்று நினைக்கிறேன். சென்ற மாதம் சென்னை விமானத்தில் இறங்கிய போது 'ஸ்வைன் ப்ளு சோதனை' நடத்துவதற்காக குடிநுழைவுக்கு முன்பு சிலர் உட்கார்ந்திருந்தனர். ஒரு அட்டவணையைக் கொடுத்து அதில் பெயர் விவரங்களை எழுதச் சொல்லி கடந்த 7 நாட்களில் சென்று வந்த நாடுகளின் பெயரைக் குறிப்பிடச் சொல்லியும் பயணம் செய்த இருக்கை எண்ணைக் குறிப்பிடும் படியும் இருந்தது, அதை நிரப்பிவிட்டுக் கொடுக்கும் பொழுது, உங்களுக்கு பீவர், இருமல் எதும் இருக்கிறதா ? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு வாங்கி வைத்துக் கொண்டார்கள், உடல் வெப்பசோதனைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை, வெளி நாடுகளில் கேமரா வழியாக வெப்ப நிலையை அறிந்து குறிப்பெடுத்துக் கொள்ளும் முறை இந்திய விமான நிலையத்தில் இல்லை, ஸ்வைன் ப்ளூ கிருமி தொற்றிய 7 நாட்களுக்குள்ளோ பிறகோ தான் அது உடலில் பரவி உடல் நலிவை (பாதிப்பு) ஏற்படுத்தும் என்றாலும், உடலைத் தொடாமல் ஏற்கனவே நலிவுற்றவரின், அல்லது காய்சல் உள்ளவரை ஓரளவுக்கு கண்டிபிடிக்கும் ஆள் தொடாத சோதனை முறைகள் இருக்கின்றன. நம்ம ஊரில் செயல்படுத்துவதில் என்ன சிக்கலோ.... அந்த அளவு செலவு செய்ய அரசாங்கத்திடம் பண வசதி இல்லை என்கிற காரணம் சப்பையானது, ஏனெனில் மாயவதி சிலை வைக்க 500 கோடிகள் வரை அரசாங்கப் பணம் செலவு ஆகுகிறது. மாநிலத்துக்கு ஒன்று வீதம் ஒரு 25 அமைச்சர்களுக்கு ஸ்வைன் ப்ளூ தொற்றி இருந்தால்அரசு விரைந்து நடவெடிக்கை எடுத்திருக்குமோ ?
***
கடவுளும் வால்பையனும்: கடவுள் நம்பிக்கையை ஒழித்துவிட்டால் சாதி / மத பேதங்களை ஒழிக்கலாம் என்று நம்ம வால்பையன் சொல்கிறார். எனக்கு அந்த நம்பிக்கை இல்லை, சாதிக்கொரு கடவுள், மதத்துக்கு ஒரு கடவுள் என்று இருப்பதை ஒழித்தால் போதும், ஒரு மனிதனுக்கு கடைசி நம்பிக்கை என தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கடவுள் நம்பிக்கை மோசமானதாக நான் கருதுவதில்லை, கடவுள் நம்பிக்கையை வைத்து நடத்தும் பிழைப்பு வாதம், பித்தலாட்டம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை முறியடித்தாலே போதும், பொதுக்கடவுளாக எதைக் காட்டுவது என்பதில் தான் சிக்கலே. அப்படி ஒரு பொதுக்கடவுளை நம்புவர்கள் ஆன்மிகவாதிகள் அதை நம்பாதவர்கள் மதவாதிகள். எதுவுமே வேண்டாம் ஆளை விடுங்கடாசாமிங்கிறவங்க நாத்திகர்கள். மதவாதிகளையும், போலி சாமியார்களையும் ஒழித்துக் கட்ட ஆன்மிகவாதிகளுக்கு நாத்திகர்களின் உதவி என்றுமே தேவையாக இருக்கும் :)
***
பதிவர் வட்டம் : ஆதிமூல கிருஷ்ணன் என்கிற தாமிராவின் தங்கமணி பற்றிய பயோடேட்டா நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது, இந்த வாரம் பயோடேட்டா சீசனா ? அண்ணாச்சி வடகரை வேலன் தொடர்ந்து இருக்கிறார். திரையுலகம் தவிர்த்த பயோடேட்டாக்கள் ரசிக்கும் படியாக இருக்கும். எனக்கும் ஸ்வாமி ஓம்காரை கலாய்த்து பயோடேட்டா எழுத விருப்பம் தான். இப்போதைக்கு நேரமில்லை யாரும் முந்திடக் கூடாதுங்கிறதுக்காக முன்பதிவு செய்து வைத்துவிடுகிறேன் :)
****
நட்பு வட்டம் : பதிவர் நண்பர்கள் அக்பர் (ஸ்நேகிதன்) மற்றும் ஸ்டார்ஜன் (நிலா அது வானத்து மேலே) நேற்று அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். இருவரும் நெல்லைக்காரர்கள், ஒன்றாகப் படித்தவர்கள், வளைகுடாவில் ஒன்றாகவே ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள், ஒன்றாக தங்கி இருக்கிறார்கள், ஒரு விதத்தில் இருவரும் உறவினர்கள். நெருக்கமான நண்பர்களுடன் சேர்ந்தே வசிப்பது, வேலை பார்ப்பதற்கு கொடுப்பினை இருக்க வேண்டும். அக்பர் அடுத்த வாரம் தொடங்கி இரு மாதங்கள் தமிழகத்தில் இருப்பாராம். முரளி கண்ணனுக்கு என்ன ஆச்சு ? கொஞ்ச நாளாக பதிவுலகில் காணும், தெரிந்தவர்கள் (அக்பரிடம்) சொல்லுங்கள், அலைபேசியில் அலைத்தால் ரிங்குது ஆனால் எடுக்கலை(யாம்).
புகை மூட்டம் : இந்தோனிசியா ஜாவா மற்றும் சுமத்திரா தீவு, கிழக்கு மலேசியா ஜாவா சரபோவா தீவுகளில் எரியும் காட்டுத் தீ காரணமாக சிங்கப்பூர் வானிலையில் புகை மூட்டம் காணப்படுகிறது, சுற்றுச் சூழல் மனிதனால் கெடுவது போலவே அதுவே தன்னை கெடுத்துக் கொள்வதாக காட்டுத் தீ அவ்வபோது ஏற்படுகிறது. யாரை நொந்து கொள்வது ? உலக வெப்பம் மிகுதியாகி துருவ பனிமலைகள் உருக கடல் மட்டம் உயர்கிறது, 50 ஆண்டுகளுக்காவது உலகம் த(ஆ)ங்குமா ?
****
சிரிப்புத் துணுக்கு :
வீடியோ கடைக்காரர் வாடிக்கையாளரிடம் : புதுசா வந்திருக்குன்னு நீங்க கேள்விப் பட்ட ஸ்வைன் "ப்ளூ" சிடியெல்லாம் எங்கேயும் கிடைக்காது சார், பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் முகமூடி விற்கிறாங்க அதை வாங்கிப் போட்டுக் கொண்டு போங்க, இல்லாட்டி அடுத்த வாரத்திற்கு பிறகு உங்களை வீடியோவில் பார்த்தால் தான் உண்டு.
பின்பற்றுபவர்கள்
12 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
41 கருத்துகள்:
பயோடேட்டா அருமை.
துணுக்கு - சிரிப்பு.
மாநிலத்துக்கு ஒன்று வீதம் ஒரு 25 அமைச்சர்களுக்கு ஸ்வைன் ப்ளூ தொற்றி இருந்தால்அரசு விரைந்து நடவெடிக்கை எடுத்திருக்குமோ ?""
என்ன ஒரு சிந்தனை கண்டிப்பாக மந்திரிகளுக்கு மட்டும்
//கடவுள் நம்பிக்கையை ஒழித்துவிட்டால் சாதி / மத பேதங்களை ஒழிக்கலாம் என்று நம்ம வால்பையன் சொல்கிறார்//
அதைச் சொல்லித்தான் பெரியாரும் கடவுள் நம்பிக்கையை ஒழிக்க துணிந்தார்.
ஆனால், இன்று பல்கி பெருகியல்லவா உள்ளது?
புச்சா...நன்று ! நன்று !
கலவை நன்று.
//எனக்கும் ஸ்வாமி ஓம்காரை கலாய்த்து பயோடேட்டா எழுத விருப்பம் தான்//
இந்த பய என்ன செஞ்சுபுட்டான்னு பயடெட்டா எழுதறீங்க? எதாவது அமெளண்ட் கொடுத்தா எழுதரதை நிறுத்துவீங்களா :)
//சிரிப்புத் துணுக்கு :
வீடியோ கடைக்காரர் வாடிக்கையாளரிடம் : //
கலவையில் அனைத்து பகுதிகளும் இருக்கிறது ஆனால் சிரிப்பு துணுக்கு என்ற பகுதி காலியாக இருக்கிறது. தலைப்பை மட்டும் போட்டுவிடீர்கள். தயவுசெய்து அதில் துணுக்கை இடம்பெற செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :)
//அப்பாவி முரு
//கடவுள் நம்பிக்கையை ஒழித்துவிட்டால் சாதி / மத பேதங்களை ஒழிக்கலாம் என்று நம்ம வால்பையன் சொல்கிறார்//
அதைச் சொல்லித்தான் பெரியாரும் கடவுள் நம்பிக்கையை ஒழிக்க துணிந்தார்.
ஆனால், இன்று பல்கி பெருகியல்லவா உள்ளது?//
முரு,
பெரியார் காலத்தில் கடவுள் பெயரைச் சொல்லி சாதி வெறி தலைவிரித்து ஆடியது. அதனால் அவர் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார். இன்றைக்கும் அங்க்கொன்றும் இங்கொன்றுமாக சாதி வெறி இருந்தாலும் பொதுவில் ஒருவரை சாதியைச் சொல்லி தாழ்த்தினால் வன்கொடுமை சட்டம் பாயும். இன்றைய தேவை போலி சாமியார்களையும் மதவெறியையும் களைய வேண்டிய சூழல் நிரம்பவே இருக்கிறது.
//umar said...
மாநிலத்துக்கு ஒன்று வீதம் ஒரு 25 அமைச்சர்களுக்கு ஸ்வைன் ப்ளூ தொற்றி இருந்தால்அரசு விரைந்து நடவெடிக்கை எடுத்திருக்குமோ ?""
என்ன ஒரு சிந்தனை கண்டிப்பாக மந்திரிகளுக்கு மட்டும்//
கண்டிப்பாக எடுப்பார்கள்! அமைச்சர் எப்போதும் கண்ணாடி வண்டிக்குள் வலம் வர முடியாதே !
// நட்புடன் ஜமால் said...
பயோடேட்டா அருமை.
துணுக்கு - சிரிப்பு.//
நன்றியோ நன்றி !
//TBCD said...
புச்சா...நன்று ! நன்று !//
என்ன தம்பி, இருக்கியா ? ஆளையே காணுமே ! நல்லா இருங்கடே !
///சிரிப்புத் துணுக்கு :
வீடியோ கடைக்காரர் வாடிக்கையாளரிடம் : //
கலவையில் அனைத்து பகுதிகளும் இருக்கிறது ஆனால் சிரிப்பு துணுக்கு என்ற பகுதி காலியாக இருக்கிறது. தலைப்பை மட்டும் போட்டுவிடீர்கள். தயவுசெய்து அதில் துணுக்கை இடம்பெற செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :)//
அதான் நீங்கள் இங்கே வெற்றிடத்தை நிரப்பிட்டிங்களே !
கடவுள் நம்பிக்கை தொடர்பான உங்கள் கருத்து எனக்கும் ஏற்புடையதே. கடவுள் நம்பிக்கையை ஒழிப்பது என்பது அவசியமில்லாதது மட்டுமல்ல, அசாத்யமானதும்தான். சினிமா க்யூவை விட அதிக நேரம் பல கோயில்களில் நிற்க வேண்டியிருக்கிறது. ஜாதிக்கொரு கடவுள் மதத்துக்கு ஒரு கடவுள் என்று வந்ததே உருவ வழிபாட்டால்தான். கடவுள் என்பது அருவம் என்பதை உணர வைத்தால் போதும்!
http://kgjawarlal.wordpress.com
//மாயவதி சிலை வைக்க 500 கோடிகள் வரை அரசாங்கப் பணம் செலவு ஆகுகிறது. //
அதுவும் சரிதான்
ஐ!
கோவி. அண்ணா முதலில் நண்பனா மனதில் இடம் கொடுத்திங்க இப்ப பதிவிலும் இடம் கொடுத்துட்டிங்களே. நீங்க சொல்லுறது உண்மை சின்ன வயசிலிருந்தே பழகிய நண்பர்கள். ஒரே இடத்தில் வேலை பார்ப்பது சந்தோசமான விசயம்தான். பதிவிட்டதற்கு நன்றி.
கலவை அருமை.
//மாநிலத்துக்கு ஒன்று வீதம் ஒரு 25 அமைச்சர்களுக்கு ஸ்வைன் ப்ளூ தொற்றி இருந்தால்அரசு விரைந்து நடவெடிக்கை எடுத்திருக்குமோ ?""
//
அப்படியே முதல் அமைச்சர்களுக்கும் வந்தால் நல்லா இருக்கும்.
கடவுள் பற்றிய கருத்து உங்கள் மன நிலையை பிரதிபலிக்கிறது. கண்டிப்பாக எல்லோருக்கும் ஒரே இறைவனே இருக்க முடியும். எல்லோருடைய வேண்டுதலும் அந்த ஒரே இறைவனை நோக்கித்தான். வடிவங்கள் தான் வேறு.
//மதவாதிகளையும், போலி சாமியார்களையும் ஒழித்துக் கட்ட ஆன்மிகவாதிகளுக்கு நாத்திகர்களின் உதவி என்றுமே தேவையாக இருக்கும் :)//
சரி முதலில் இதையே செய்வோம்!
கலவையிலே கொஞ்சம் தண்ணி அதிகம் போல இருக்கு... இருந்தாலும் சரக்கு கின்னுன்னு இருக்கு...
//நையாண்டி நைனா said...
கலவையிலே கொஞ்சம் தண்ணி அதிகம் போல இருக்கு... இருந்தாலும் சரக்கு கின்னுன்னு இருக்கு...
4:34 PM, August 12, 2009
//
உங்களுக்கும் பித்தனுக்கும் தண்ணி மேட்டரை விட்டால் வேற என்ன என்ன தெரியும் ?
:)
//வால்பையன் said...
//மதவாதிகளையும், போலி சாமியார்களையும் ஒழித்துக் கட்ட ஆன்மிகவாதிகளுக்கு நாத்திகர்களின் உதவி என்றுமே தேவையாக இருக்கும் :)//
சரி முதலில் இதையே செய்வோம்!
//
:) அதுவும் கஷ்டம் தான், ஏனெனில் மதங்க்கள் மறைமுகமாக இன அடையாளம் காப்பவை ! இனப்பற்று எப்போதும் மதம் வளர்க்கும் :)
//அக்பர் said...
ஐ!
கோவி. அண்ணா முதலில் நண்பனா மனதில் இடம் கொடுத்திங்க இப்ப பதிவிலும் இடம் கொடுத்துட்டிங்களே. நீங்க சொல்லுறது உண்மை சின்ன வயசிலிருந்தே பழகிய நண்பர்கள். ஒரே இடத்தில் வேலை பார்ப்பது சந்தோசமான விசயம்தான். பதிவிட்டதற்கு நன்றி.
கலவை அருமை.//
நன்றி அக்பர் !
//அப்படியே முதல் அமைச்சர்களுக்கும் வந்தால் நல்லா இருக்கும்.//
அப்படி நடந்தால் அது திடீர் தேர்தல் வரைக்கும் போய்விடும் !!! என்பதால் குறிப்பிடவில்லை. :) பொதுப்பணம் தானே தேர்தலுக்கு விரையமாகுது !
//கடவுள் பற்றிய கருத்து உங்கள் மன நிலையை பிரதிபலிக்கிறது. //
என் பதிவில் கடவுள் மறுப்பு இருக்காது, கடவுள் (சர்சைக்குறிய) பற்றிய கேள்விகள் எப்போதும் உண்டு.
//கண்டிப்பாக எல்லோருக்கும் ஒரே இறைவனே இருக்க முடியும். எல்லோருடைய வேண்டுதலும் அந்த ஒரே இறைவனை நோக்கித்தான். வடிவங்கள் தான் வேறு.
2:39 PM, August 12, 2009//
பரிசுத்த ஆவிதான் அரபியில் அல்லா என்று அழைக்கப்படுவதாக இஸ்லாமியர்கள் சொல்வதை கிறித்துவர்கள் ஏற்பது இல்லை, ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்று என்று இந்துக்கள் சொன்னால் இஸ்லாமியர்கள் ஏற்பது இல்லை. என்னைப் பொருத்து இந்த மூன்றும் ஒன்று தான் :)
//ஆ.ஞானசேகரன் said...
//மாயவதி சிலை வைக்க 500 கோடிகள் வரை அரசாங்கப் பணம் செலவு ஆகுகிறது. //
அதுவும் சரிதான்
//
மிக்க நன்றி ஞான்ஸ் !
//Jawarlal said...
கடவுள் நம்பிக்கை தொடர்பான உங்கள் கருத்து எனக்கும் ஏற்புடையதே. கடவுள் நம்பிக்கையை ஒழிப்பது என்பது அவசியமில்லாதது மட்டுமல்ல, அசாத்யமானதும்தான். சினிமா க்யூவை விட அதிக நேரம் பல கோயில்களில் நிற்க வேண்டியிருக்கிறது. ஜாதிக்கொரு கடவுள் மதத்துக்கு ஒரு கடவுள் என்று வந்ததே உருவ வழிபாட்டால்தான். கடவுள் என்பது அருவம் என்பதை உணர வைத்தால் போதும்!
http://kgjawarlal.wordpress.com
//
மிக்க நன்றி ஜவஹர்லால் சார் !
சுவையான கலவை..
கடைசி ஜோக்
இஃகி இஃகி இஃகி எனச் சிரிக்க வைத்தது!
காஞ்சிபுரம்(??!!) அருகே இருக்கும் கலவைப் பற்றிய பதிவு என எண்ணிவிட்டேன்
சிரிப்பு துனுக்கு சூப்பர்
//விரைவாக பரவுவதற்கு மத்திய மாநில அரசுகள் மெத்தனம் தான் என்று நினைக்கிறேன்.//
இந்நோய் பரவ தமிழினதுரோகி கருணாநிதிதான் காரணம் என்று சொல்லாமல் இருந்தீர்களே? :-)
கலவை கலக்கல்.
ஸ்வைன் ப்ளூ, ஏத்துக்கமுடியாது கோ.
ஸ்வைன் ப்ளூ பரவியதற்கு பிறகு 2 முறை இலங்கை வழியாக இந்தியா சென்று வந்தேன்.
வெளிநாடுகளிலும் அதே அட்டவணைதான், அதே 7 நாட்கள் தான். சந்தேகம் இருந்தால் மட்டுமே கேமரா.
குவைத்தில் இதுவரை ஸ்வைன் ப்ளூ ரிப்போட் இல்லை.
இந்தியால சுகாதாரம் குறைவுன்னு சொல்லுங்க. விழிப்புணர்வு போதாதுன்னு சொல்லுங்க.
கடவுளை ஒழித்துவிட்டு, சாதி / மத பேதங்களையும் ஒழித்து விட்டால் என்ன சாதிச்சிடலாம்னு நினைக்கிறார் வால்பையன்.
அப்படியே பேதங்களை அவர் ஒழிச்சிட்டாலும் அவர்தான் அடுத்த தலைமுறைக்கு கடவுள். பெரியார் கடவுளாக்கப்படுவதைப் போல.
//ஒரு மனிதனுக்கு கடைசி நம்பிக்கை என தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கடவுள் நம்பிக்கை மோசமானதாக நான் கருதுவதில்லை,//
கடைசி நம்பிக்கை??? அதுதான் முதல் நம்பிக்கை என்றாக வேண்டும். அப்போது தான் தன்னம்பிக்கை ஏற்படும்.
//கடவுள் நம்பிக்கையை வைத்து நடத்தும் பிழைப்பு வாதம், பித்தலாட்டம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை முறியடித்தாலே போதும்,//
வழிமொழிகிறேன்...
//மதவாதிகளையும், போலி சாமியார்களையும் ஒழித்துக் கட்ட ஆன்மிகவாதிகளுக்கு நாத்திகர்களின் உதவி என்றுமே தேவையாக இருக்கும் :)//
நாத்திகர்களது நம்பிக்கையை தவிர மற்றவர்களது மூட நம்பிக்கை என நினைப்பதால், மதவாதிகளையும், போலி சாமியார்களையும் கண்டறிவது அவர்களுக்கு இலகுவானதல்ல..
//எனக்கும் ஸ்வாமி ஓம்காரை கலாய்த்து பயோடேட்டா எழுத விருப்பம் தான். இப்போதைக்கு நேரமில்லை யாரும் முந்திடக் கூடாதுங்கிறதுக்காக முன்பதிவு செய்து வைத்துவிடுகிறேன் :)//
எனக்கும் விருப்பம் தான்.... கோவியாரை கலாய்த்து எழுத...
ஹி ஹி.. அதே புக்கிங்..
கடைசி காமெடி சூப்பர் :)
செம கலவை
/
மாநிலத்துக்கு ஒன்று வீதம் ஒரு 25 அமைச்சர்களுக்கு ஸ்வைன் ப்ளூ தொற்றி இருந்தால்அரசு விரைந்து நடவெடிக்கை எடுத்திருக்குமோ ?""
/
சூப்பர்!
// அறிவிலி said...
சுவையான கலவை..//
அறிவிலி அண்ணை நன்றி !
//பரிசல்காரன் said...
கடைசி ஜோக்
இஃகி இஃகி இஃகி எனச் சிரிக்க வைத்தது!//
பரிசல்,
ஸ்வாமி ஓம்காருக்கு புரியலையாம் !
:)
//# T.V.Radhakrishnan
காஞ்சிபுரம்(??!!) அருகே இருக்கும் கலவைப் பற்றிய பதிவு என எண்ணிவிட்டேன்
9:00 PM, August 12, 2009
#//
நான் காஞ்சிபுரம் பார்க்காத கழுதை பிறப்பு, எனக்கு அந்த கலவை பற்றி தெரியாது :)
கலவை கேரளாவில் தான் இருக்குன்னு சொல்லுவாங்க, காஞ்சிபுரத்திலும் இருக்கிறதா ?
//jackiesekar
சிரிப்பு துனுக்கு சூப்பர்
//
நன்றி ஜாக்கி !
//9:07 PM, August 12, 2009
#
யுவகிருஷ்ணா
இந்நோய் பரவ தமிழினதுரோகி கருணாநிதிதான் காரணம் என்று சொல்லாமல் இருந்தீர்களே? :-)//
தமிழ்நாட்டுக்கு எல்லாமே கிடைக்குதுன்னு பெருமையாக எழுதி இருக்கனும் நான் !
:)
//
துபாய் ராஜா
கலவை கலக்கல்.//
நன்றி துபாய் ராஜா !
//# பீர் | Peer
ஸ்வைன் ப்ளூ, ஏத்துக்கமுடியாது கோ.
ஸ்வைன் ப்ளூ பரவியதற்கு பிறகு 2 முறை இலங்கை வழியாக இந்தியா சென்று வந்தேன்.//
இலங்கை தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட முன்னேறி இருப்பதாக நீங்கள் நினைத்தால் இலங்கை குடிமக்கள் உங்களை வாழ்த்துவார்கள் :)
//வெளிநாடுகளிலும் அதே அட்டவணைதான், அதே 7 நாட்கள் தான். சந்தேகம் இருந்தால் மட்டுமே கேமரா.//
நான் பார்த்ததை வைத்துத்தான் எழுதினேன்
//குவைத்தில் இதுவரை ஸ்வைன் ப்ளூ ரிப்போட் இல்லை.
இந்தியால சுகாதாரம் குறைவுன்னு சொல்லுங்க. விழிப்புணர்வு போதாதுன்னு சொல்லுங்க.//
வளைகுடா வெயிலுக்கு ஸ்வைனாவது ப்ளூவாவது ! :)
//பீர் | Peer
கடைசி நம்பிக்கை??? அதுதான் முதல் நம்பிக்கை என்றாக வேண்டும். அப்போது தான் தன்னம்பிக்கை ஏற்படும்.
11:29 PM, August 12, 2009
#//
நான் சொன்னதன் பொருள் மருத்துவர்கள் கைவிட்டவர்கள் வேண்டுதல் நடத்துவதால் பிழைக்கலாம் என்று நம்புவதை !
முதல் நம்பிக்கை என்றால் கடவுளை மதப் பெயர்களுடன் தொடர்பு படுத்தாத பொதுவான நம்பிக்கையாக இருக்கனும், அப்படி இருப்பவர்கள் மிகக் குறைவு.
//பீர் | Peer
நாத்திகர்களது நம்பிக்கையை தவிர மற்றவர்களது மூட நம்பிக்கை என நினைப்பதால், மதவாதிகளையும், போலி சாமியார்களையும் கண்டறிவது அவர்களுக்கு இலகுவானதல்ல..//
திருடர்களை அவர்களின் பெற்றோர்கள் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் எல்லை மீறிவிட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. சமூகத்தான் தண்டனைகள் வழங்குவதன் மூலம் திருத்துகிறது. ஏனென்றால் திருடர்களால் பாதிக்கப்படுவது திருடனைப் பெற்ற பெற்றோர்கள் அல்ல.
//பீர் | Peer
எனக்கும் விருப்பம் தான்.... கோவியாரை கலாய்த்து எழுத...
ஹி ஹி.. அதே புக்கிங்..
11:41 PM, August 12, 2009 //
ஆஹா !
//# வெட்டிப்பயல்
கடைசி காமெடி சூப்பர் :)//
நன்றி பாலா"ஜி" !
//முரளிகண்ணன்
செம கலவை
//
நன்றி முரளி !
//மங்களூர் சிவா
மாநிலத்துக்கு ஒன்று வீதம் ஒரு 25 அமைச்சர்களுக்கு ஸ்வைன் ப்ளூ தொற்றி இருந்தால்அரசு விரைந்து நடவெடிக்கை எடுத்திருக்குமோ ?""
சூப்பர்!//
நன்றி சிவா !
//இலங்கை தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட முன்னேறி இருப்பதாக நீங்கள் நினைத்தால் இலங்கை குடிமக்கள் உங்களை வாழ்த்துவார்கள் :)//
இல்லை கோ, நான் சரியா சொல்லலைன்னு நினைக்கிறேன். இலங்கையில் நான் ட்ரான்ஸிஸ்ட் தான். சோதனைகள் கிடையாது. பல நாடுகளில் இருந்து வந்து காத்திருந்த ட்ரான்ஸிஸ்டர்களிடம்(?) கதைத்ததில் சொன்னேன்.
//கடவுளை மதப் பெயர்களுடன் தொடர்பு படுத்தாத பொதுவான நம்பிக்கையாக இருக்கனும், //
மதப் பெயர்களுடன் தொடர்பு படுத்தாத கடவுள்??? சாத்தியமா?
கருத்துரையிடுக