பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2009

அயன் - படக்குழுவுக்கு பயன் !

சுமார் 20 ஆண்டுகளாக வராத கதை(?), அஃதாவது வைரக்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், நட்பு, துரோகம், கதறக் கதற காதல் ஒரு குத்தாட்டம் இவை இந்தக் காலத்துக்கு ஏற்ற தொழில் நுட்ப இத்யாதிகளுடன் வைத்து சொல்லப்பட்டப் படம்.

நகைச்சுவைக்கு தனிப் பகுதி இல்லை, பட ஓட்டத்துடன் இயல்பாக இருக்கிறது. துரத்திப் பிடிக்கும் காட்சிகள், படமாக்கிய விதம் அருமை. படம் பார்க்கும் போது ஆப்பிரிக்காவில் (காங்கோ) பயணம் செய்வது போன்ற உணர்வைத் தரும் சந்து பொந்தெல்லாம் சென்ற ஒளிப்பதிவு. வில்லன் கும்பல்களிடமிருந்தும், சுங்க அலுவலரிடமிருந்தும் நுட்பமாக தப்பிக்கும் சூர்யா, சூர்யாவின் நண்பனாக கடத்தல் தொழிலில் வில்லனின் ஆளாக வந்து ஒட்டிக் கொள்ளும் நடிகர் (விஜய் டிவி நண்டு - நன்றி தகவல் கேபிள் சங்கர்) லொட லொட பேச்சிலும், நகைச்சுவையிலும் பின்னி இருக்கிறார். ஆப்ரிக்காவின் தெருவில் நரகலை மிதித்துவிட்டு...'இவ்வளவு கருப்பாக இருக்கானுங்க இவனுங்களுக்கும் மஞ்சள் தானா ?' கருப்பு நிறத்தைக் கிண்டல் செய்திருந்தாலும் திரையில் அது ஒரு நேர (டைமிங்) நகைச்சுவையாகத் தான் தெரியும். அவரின் தங்கையாகவரும் தமன்னா - சூர்யா காதலை வளர்த்துவிடுவது என அனைத்தையும் நகைச்சுவையாக செய்து, இடைவேளைக்குப் பிறகு மனதைப் பிழியும் காட்சிகளில் அப்படியே மனதில் நிற்கிறார். வில்லன் நெடு நெடு உயரம் கழுத்துவரை தலைமுடி, கோலங்கள் ஆதித்யாவின் குரலில் மோசமாக நடிக்கவில்லை என்றாலும் கொடுர காட்சிகளைச் செய்யும் போது தேறி இருக்கிறார்

பாடல்கள் சுமார் என்றாலும் எழுந்து செல்லும் அளவுக்கு இல்லாமல் சிறப்பான படக் காட்சிகளால் கேட்கமுடிகிறது. இயக்கம் கேவி ஆனந்த். சரணும், கெளதமும் இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம். அம்மா செண்டிமண்டுகளைத் தவிர்த்திருக்கலாம், இன்னும் ஏன் இப்படிப் பட்டக் காட்சிகளை வைத்துக் கொல்லுகிறார்களோ என்ற ரீதியில் சூர்யாவின் தாயாக வரும் ரேணுகா விற்கு கொடுக்கப்பட காட்சிகள் இருக்கிறது.


சூர்யாவின் காட் பாதராக வரும் பிரபு கோடிக்கணக்கில் கள்ளக் கடத்தல் வணிகம் செய்பவராம், ஒத்தாசைக்கு வெறும் மூன்று பேரை வைத்திருக்கிராராம், கள்ளக் கடத்தல் முதலாளி போல் தெரியவில்லை, காயிலான் கடை நடத்தும் ரேஞ்சிக்கு அவர் பாத்திரத்தை வைத்திருக்கிறார்கள், போதைப் பொருள் தவிர்த்து வைரம், தங்கம், திருட்டு விசிடி என்று மட்டுமே கடத்தும் நல்லவர் என்பதாக பிரபு, சூர்யா பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


தசவதாரத்திற்குப் பிறகு வந்தப் படங்களில் அயன் நல்ல விறுவிறுப்பு.

கதை அர்த பழசு, திரைக்கதை ஓகே ரகம்
இயக்கம் பாஸ் பாஸ்
நடிப்பு பாஸ் பாஸ்
இசை பரவாயில்லை வகை
ஒளிப்பதிவு அட்டகாசம்




அயன் நல்ல பொழுது போக்குப் படம் தான், எனக்கு போரடிக்கவில்லை. சூர்யா ரசிகைகளை ஏமாற்றவில்லை, அடிக்கடி பாடி (பாட்டு இல்லை) காட்டுகிறார். படம் பார்த்து வெளியே வரும் போது எதிர்மறை விமர்சனங்கள் எதுவும் வரவில்லை.

இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு(மாறன் ப்ரதர்ஸ்) இது வெற்றிப்படம் தான்.

அயன் விரைவு வண்டி

(உஸ்ஸ்......அப்பாடா பதிவர் கடமையை ஆற்றியாச்சு)

17 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

(உஸ்ஸ்......அப்பாடா பின்னூட்ட கடமையை ஆற்றியாச்சு)

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா

priyamudanprabu சொன்னது…

முதலில் ஏவிஎம் தயாரித்த படம் தானே
மசாலாதான் இருக்கும்

ஆ.சுதா சொன்னது…

//சரணும், கெளதமும் இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம்//

கரக்டா சொல்லிட்டீங்களோ..

S.A. நவாஸுதீன் சொன்னது…

இனிமேதான் சட்டை Iron பண்ணிட்டு அயன் பார்க்க போகணும். CD Vaanga thaan

மணிகண்டன் சொன்னது…

:)- நல்ல விமர்சனம்.

இப்ப தான் நான் கடவுள் பாத்து இருக்கேன் !

**விருவிருப்பு**

இது கரெக்ட்டா ?

பரிசல்காரன் சொன்னது…

//
அயன் விரைவு வண்டி

(உஸ்ஸ்......அப்பாடா பதிவர் கடமையை ஆற்றியாச்சு)//

க்ளாஸ்.

மகள்களுக்கு எக்ஸாம் நடப்பதால் கடமை தவறிவிட்டது எனக்கு!! :-)))))))))


(மகள் படிப்பை விட சினிமா பார்ப்பதை கடமை என்கிறான் ஒருவன்-ன்னு யாராவது எதிர்காலத்துல கும்மிடப் போறாங்க. அதான் அவ்ளோ ஸ்மைலி!!!)

பெயரில்லா சொன்னது…

//சரணும், கெளதமும் இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம்//

correct... enakkum saran nyabagthukku vanthaar...

he takes a particular backdrop for hero..and gives a documentary feel..same here :) but screenplay is better :)

Cable சங்கர் சொன்னது…

நல்ல நச் விமர்சனம்

ங்கொய்யா..!! சொன்னது…

உலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே !
//


"வீண்"

சி தயாளன் சொன்னது…

அடடா....:-)

VSK சொன்னது…

அட! அங்கேயும் பார்த்தாச்சா?

சகலகலாவல்லவனுக்கு அப்புறமா, சிவாஜிக்கு அப்புறமா, ஏவிஎம்முலேர்ந்து இன்னொரு தூள் பக்கோடா இது!
நிச்சயம் ஹிட்டுத்தான்!

ச.பிரேம்குமார் சொன்னது…

//பாடல்கள் சுமார் என்றாலும் எழுந்து செல்லும் அளவுக்கு இல்லாமல் சிறப்பான படக் காட்சிகளால் கேட்கமுடிகிறது//

ரொம்ப அழகா படமாக்கியிருக்காங்க...ஆனா இடைவேளைக்கு பின்னேயான பாடல்கள் படு மோசமான இடைசெருகல்கள்.... கடுப்பா இருந்துச்சு

Suresh சொன்னது…

நல்லா இருக்கு உங்க விமர்சனம்

அக்னி பார்வை சொன்னது…

படத்த டீவிட் ல பாத்தீங்களா? த்யேட்டர் போய் பார்த்தீங்களா?

அக்னி பார்வை சொன்னது…

படத்த டீவிட் ல பாத்தீங்களா? த்யேட்டர் போய் பார்த்தீங்களா?

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//நகைச்சுவைக்கு தனிப் பகுதி இல்லை, பட ஓட்டத்துடன் இயல்பாக இருக்கிறது//
நெசமாவா ?

//பாடல்கள் சுமார் என்றாலும் எழுந்து செல்லும் அளவுக்கு இல்லாமல் சிறப்பான படக் காட்சிகளால் கேட்கமுடிகிறது//
அப்ப தம்கட்ட போகமுடியாதா ?

//செண்டிமண்டுகளைத் தவிர்த்திருக்கலாம்//
அம்மா செண்டிமெண்ட் இல்லனா அது தமிழ் சினிமாவே கிடையாது...

//அயன் விரைவு வண்டி//

காலியா போகாம இருந்தா சரிதான்...

//உஸ்ஸ்......அப்பாடா பதிவர் கடமையை ஆற்றியாச்சு//

பினூட்டம் இடற கடமையை ஆற்றியாச்சு :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்