பின்பற்றுபவர்கள்

16 ஏப்ரல், 2009

சித்திரைப் புத்தாண்டுக்கு முழு ஆதரவு இல்லை !

ஏப்ரல் 14ல் பல்வேறு (எதிர்)தரப்பில் இருந்து சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினமலர் உட்பட பார்பன ஊடகங்கள் கூட அதைக் கண்டு கொள்ளவில்லை என்பதால் சித்திரை புத்தாண்டை மாற்றியது தவறு என்று எண்ணம் கொண்டோர் பலர் மனம் புண்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பார்பன ஊடகங்கள் பலவும் தை ஒன்றில் பொங்கல் வாழ்த்துகளுடன் முடித்துக் கொண்டனர். எனவே அவர்களெல்லோரும் சித்திரை 1ல் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சொல்லி வைத்தார் போல் இந்துத்துவாதி இல.கனேசன் உட்பட பாஜக தலைகள் கூட சித்திரைக்கு 'புத்தாண்டு' வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதன் தொடர்பான புலம்பல்களை இங்கு இட்லிவடையார்(?) பதிவில் காணலாம் :)

ஆனால் நான் அறிந்த வகையில் பொதுமக்களில் பலர் சித்திரை ஒன்றில் வழக்கம் போல் கோவிலுக்குச் சென்று வந்து, புத்தாண்டுக்கு செய்ய வேண்டியதைத் செய்து, அதுபற்றி பெரிதாக பேசிக் கொள்ளாமல் கொண்டாடினர். தை திங்களில் பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துகள் கூறி பல குறுந்தகவல்கள் வந்தன. ஆனால் சித்திரை 1க்கு ஒரே ஒரு குறுந்தகவல் வாழ்த்து மட்டுமே வந்தது. சிங்கையில் தமிழர் அமைப்புகள் பஞ்சகச்ச பஞ்சாங்கங்களின் பிடியில் இருப்பதால் சித்திரை 1 தான் புத்தாண்டு என்பதில் பிடிவாதம் நீடிக்கிறது. மலேசியாவில் தை க்கு மாறி, நாள்காட்டிகளையும் மாற்றிக் கொண்டு விட்டார்கள். பிற நாடுகளில் விருப்பம் போல் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டாகவே நினைத்து வாழ்த்துச் சொல்ல தமிழ் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் முன்வரவில்லை. மாற்றத்தை (வேறு வழியின்றி) ஏற்றுக் கொண்டதாக கொள்ள முடிகிறது. விதிகள் காலத்தால் மாறும் :)

தமிழ் புத்தாண்டை தை 1க்கு மாற்றியும், சீனப் புத்தாண்டை அனைத்து மதச் சீனர்களும் கொண்டாடுவது போல் தமிழ்சூழலில் அனைத்து மத தமிழர்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது போல் தெரியவில்லை :(

வழக்கம் போல் இந்துமத தமிழ் பொதுமக்களுக்கு இதையும் கொண்டாட வில்லை என்றால் சாமி குத்தம் வந்துடுமோ என்ற அச்சத்தில் இரண்டு கொண்டாட்டம், ஆண்டுக்கு கூடுதலாக இருமுறை புத்தாண்டு என்ற பெயரில் விற்பனை கலைகட்டுகிறது என்பதால் சிறு விற்பனையாளர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

18 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

உண்மையாகவா? எனக்குக் குறைந்தது 25 மின்னஞ்சல் வாழ்த்துகளாவது வந்திருக்கும்.

இடுகையை இட்ட போது தலைப்பில் 'ப்'பாமல் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். அதையும் சொல்ல நினைத்தேன். இப்போது பார்த்தால் ப்பி இருக்கிறீர்கள். சித்திரை'ப்'புத்தாண்டு வாழ்த்துகள் - நீங்களே புத்தாண்டு என்று சொன்ன பிறகு வாழ்த்துகளைச் சொல்லாமல் இருந்தால் எப்படி? :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
உண்மையாகவா? எனக்குக் குறைந்தது 25 மின்னஞ்சல் வாழ்த்துகளாவது வந்திருக்கும்.//

உங்களுக்கு பெரிய வட்டம் இருக்கிறது என்றே நினைக்கிறேன். தலையைச் சுற்றி என்று சொல்ல வரல :)

//இடுகையை இட்ட போது தலைப்பில் 'ப்'பாமல் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். அதையும் சொல்ல நினைத்தேன். இப்போது பார்த்தால் ப்பி இருக்கிறீர்கள். சித்திரை'ப்'புத்தாண்டு வாழ்த்துகள் - நீங்களே புத்தாண்டு என்று சொன்ன பிறகு வாழ்த்துகளைச் சொல்லாமல் இருந்தால் எப்படி? :-)
//

இடுகையை வெளி இட்டுவிட்டு 'ப்' சரி செய்தேன். புத்தாண்டாக கொண்டாதவர்களும், பிறர் சித்திரை திருநாள் / சித்திரைப் புத்தாண்டு என்று சொல்வதையும், அதைக் கொண்டாடுபவர்களை பிற மதத்தினரின் பண்டிக்கைக்கு வாழ்த்துவது போல் வாழ்த்தலாம் என்பது என் நிலை.

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணே கொஞ்சம் நம்ம கடைக்கு வந்து உங்க மோதிர கையாலே........

வால்பையன் சொன்னது…

வெளியே இருந்து ஆதர்வுன்னு சொல்றிங்களா

ஆ.ஞானசேகரன் சொன்னது…

என்னமோ தெரியவில்லை... இதுவரை தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாதவர்கள்... இந்தவருடம் வீம்பாக கொண்டாடினார்கள்... எப்படியோ இந்த வருடம் தமிழ்புத்தாண்டை பற்றிய புத்துணர்ச்சி வந்துள்ளது... திடீர்னு வினாயகச் சதூர்த்திய வடநாட்டு முறைப்படி கொண்டாடிய இவர்களால் ஏன் இந்த மாற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது... காலம் (நீங்கள் இல்லை கண்ணன்) பதில் சொல்லும்

NO சொன்னது…

Nanbar Thiru Govi Avargale,

Quiz is where you ask questions and not a question! What you have asked nanbar Thiru Jyothi is called a query!

Nevertheless I am done with my conference and sadly for you, have some more time to kill. But luckily, for me, you as usual have not stopped your one man orchestra, that spits out outlandish and high octane dissonance! Hence I do have something to do, which as you know is trying to put you in place.

Even this time you have churned out only the same plate of decayed waste, with no intention of trying to talk about anything that is worth while!

As usual, Nanbar Thiru Govi has set his sights and working towards upon how to make himself one of the most unwanted proliferators of the most unwanted analysis’s in this planet! Nanbar Avargal doesn’t realize that he is already there and is only consolidating his position. Thiru Govi Avargale, I agree and accept that you have reached the pinnacle of ridiculousness, so please do have a realization of this fact soon! You are there and need not prove anything more by continuing to create such gobbledygook with such regularity!

Coming to Nanbar Thiru Jyothi, it seems he has been greatly offended by my comments. Nanbar Jyothi Avaragale, after I saw your response I realize that I have not been hard enough on you!

Dear Thiru Jyothi has completely avoided giving response to the crux of the issue, which was that he is very poorly equipped to think and write without violence in tone and tenor!
Your writings Sir, reeked with hate and no amount of poetry can put a decent façade to your undercurrent of viciousness.

You poetry is just a method to prove to yourself that this violent person by nature is not actually violent but a paragon of freethinking entity that happens to use violence to prove a point. Unfortunately, your masquerade is so transparent Sir and I see that you do not need this mask of a poet, which in any case is not worth being called as poetry!

To top it, you were trying to juxtapose yourself with Mahakavi Bharathiar! You quote this man’s name to prove what you are?? Next whom Sir, Aiyan Thiruvalluar!

So Thiru Jyothi’s method of whitewashing the violence in him is by claiming to the world that he is after all a poet and as a corollary, he thinks that the world thinks a poet can never be violent and hence he is also not violent! Not stopping at that Thiru Jyothi will use all available methods to reinforce this farcical reasoning by dragging names of great poets and personalities and telling his own version of history about them and deluding himself that they have also suffered his fate!

See how Thiru Jyothi’s mind works. In his response to my note, Nanbar Avargal tries skillfully to pull the issue towards a debate about understanding what poetry is, rather his own shortcomings and incapability to write something worthwhile in his blog which actually was the issue!

For your understanding and since you have asked, I will tell you what a poetry is in my own words which you will not see anywhere!

Poetry is a skillful arrangement of words and verses that convey its inherent and also apparent meanings, that transcend prose, becomes a literary art, intended to instill inspiration, veneration, adulation, and evocation and sometimes even detestation and indeed many other emotions.

Your poetry dear Thiru Jyothi avargale, doesn’t fit anywhere. There is neither skilful arrangement of words nor your “poetry” stand out from a common prose. Its useless to give you examples of where you have erred as yours cannot be fit anywhere in the category of poetry in the first place!

That’s why I am clear that you are unfit to write any poetry, let alone any prose that you keep filling up in the hate pamphlet blog of yours!

Thanks Nanbar Jyothi Avargale, and finally, to have thakkam from Vijaya T. Rajendar is certainly better than a thakkam of Hitler! One is only a fool whereas your inspirer was an extremely dangerous and a phenomenally harmful fool!


Thanks

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அன்பின் நோ,
தங்களின் அடி முட்டாள் தனமான அறிவாளித் தனத்தை என்னிடம் காட்ட முயற்சித்தமைக்கு நன்றி!
தங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. ஏன் என்றால், எனக்குத் தங்களைத் தெரியாது. தங்களின் தகுதி தெரியாது.
முகமூடிக் கொள்ளைக்காரன் என்றும் முகத்தைக் காட்ட விரும்பியதில்லை.
அவன் திருடன் மட்டும் அல்ல தைரியமில்லாதவன்.
தமிழ் எழுத்துக்களை தத்துபித்துன்னு விமர்சிக்கும் உங்களுக்கு தமிழில் எழுதத் தெரியவில்லை. முதலில் அதைக் கற்றுக் கொண்டு வாருங்கள் ஐயா.
அடையாளம் இல்லாத அரிச்சுவடியா தாங்கள்!
ஐயகோ! தாங்கலையே!!
தங்கள் பைத்தியத்திற்கு என்னிடம் வைத்தியம் இல்லை ஐயா!
நல்ல மன நல மருத்துவரை அணுகவும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!

அன்புடன்,
ஜோதிபாரதி.

ராவணன் சொன்னது…

இதோ வாங்கிக் கொள்ளுங்கள்..நான் கூறுகிறேன் வாழ்த்தை....

"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"

கருணாநிதி என்ற நபர் கூறி் எதையும் செய்யவேண்டும் என்ற அளவில் என் அறிவு,பகுத்தறிவு இல்லை.

தமிழர்கள் தாங்களாகவே தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக ஏற்கமாட்டார்கள்.

மீண்டும் கருணாநிதியைப் போன்ற போலி நபர் இதை மாற்றமாட்டார் என்பது உறுதியில்லை.
மாற்றினாலும் மக்களிடம் பெரிய எதிர்ப்பு ஒன்றும் இருக்காது.

நம்மைப் போன்ற சிலர் கூடாது,இல்லை இருக்கட்டும் என்று கூறலாம்.மற்றபடி ஒன்றும் ஆகப்போவதில்லை.

மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.தங்களுக்கு வேண்டியதை,
பிடித்ததை செய்துகொண்டு உள்ளனர்.

மக்களில், கருணாநிதி என்ற நபரின் மனைவியரும், துணைவியரும் அடங்குவர்.

ஜோ/Joe சொன்னது…

//தமிழ்சூழலில் அனைத்து மத தமிழர்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது போல் தெரியவில்லை //

எப்படி கொண்டாட வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ? அல்லது எப்படி கொண்டாடினால் நீங்கள் சான்றிதழ் கொடுப்பீர்கள்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...


எப்படி கொண்டாட வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ? அல்லது எப்படி கொண்டாடினால் நீங்கள் சான்றிதழ் கொடுப்பீர்கள்?
//

இங்க நான் சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை. என்னுடைய சான்றிதழுக்கு மதிப்பு இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை :)

அவரவர் மதவழக்கப்படிக் கொண்டாடலாம். சீனர்கள் சீனப்புத்தாண்டை மதவிழாவாகக் கொண்டாடாமல் பொதுப்பண்டிகையாகத்தான் கொண்டாடுகிறார்கள். கத்தோலிக்கர்கள் பொங்கல் கொண்டாடுவது தெரியும். புத்தாண்டு பற்றி தெரியாது. கத்தோலிக்கர்கள் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுடன் இணைந்து வாழ்பவர்கள் என்பது எனக்கு தெரியும், கிறித்துவர்கள் என்றால் அதில் கத்தோலிக்கர்கள் மட்டுமே இல்லை. மற்றவர்கள் கொண்டாடுவது போல் தெரியவில்லை. மெதடிஸ்ட் சர்ச்சுக்கு போகும் நண்பரிடம் கேட்டேன் கொண்டாடுவது இல்லை என்றார்.

இங்கே ஒரு சீனர் கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதைப் பார்த்ததும் நீங்கள் கத்தோலிக்கரா என்று கேட்டேன் இல்லை கிறித்துவர் என்றார். அவர் மெதடிஸ்ட் என்பதை பிறகு சொன்னார். நான் அவர் அப்படிச் சொன்னதை வைத்து கத்தோலிக்கர்கள் கிறித்துவர் அல்ல என்ற முடிவுக்கும் வரவில்லை

ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோவிலுக்குப் போவதை இந்துக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள், அதுபோல் மற்ற மதத்தினரும் தமிழ் புத்தாண்டு கொண்டாடவேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். நீங்கள் கொண்டாடினால் மகிழ்ச்சிதான்

ஜோ/Joe சொன்னது…

கோவியாரே,
நேரடியாக பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

மதங்களை தாண்டி தமிழர் அனைவரும் தமிழ் புத்தாண்டை தமிழர் விழாவாக கொண்டாட வேண்டுமென்றால் அதற்கான பொது கொண்டாட்ட முறைகள் என்ன ?

அவரவர் அவர் மத முறைப்படி கொண்டாட வேண்டும் என்பதை நான் நிராகரிக்கிறேன் ..மத முறைப்படி கொண்டாட இது மத விழா அல்ல ..தமிழர் விழா என்றால் அதில் மதத்தை கொண்டு ஏன் நுழைக்க வேண்டும்?

உங்கள் மத முறைகளை தாண்டி ,sms ,email வாழுத்து சொல்லுவது தவிர ,தொலைக்காட்சி பார்ப்பதை தவிர வெறும் தமிழனாக இதை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் .

முன்முடிவுகள் பற்றி எழுதும் நீங்கள் ,நான் கேள்வி கேட்டால் மட்டும் ஒரு கிறிஸ்தவன் என்ற கோணத்தில் என்னை பார்த்து பதிலும் .சமாதானமும் சொல்லுவதேன் ?

கிறிஸ்தவர்களையும் ,இஸ்லாமியரையும் நாங்கள் பெரும்தன்மையாக தமிழராக ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று சொல்லும் 'பெருந்தன்மை இந்து'க்களில் ஒருவரா நீங்கள்?

ஜோ/Joe சொன்னது…

முதலில் தமிழ் புத்தாண்டை நாங்கள் மதம் சார்ந்த பண்டிகையாகத் தான் ,இந்துப் புத்தாண்டாகத் தான் கொண்டாடுவோம் என்று சொல்லும் பெரும்பான்மை இந்துக்களை மாற சொல்லி ,இல்லை இது வெறும் தமிழ் புத்தாண்டு மட்டுமே என்று கொண்டாட சொல்லுங்கள் .அப்போது மற்றவர்கள் வருவார்கள் .

அதை விடுத்து நாங்கள் கோவிலுக்கு போறோம் .அதுனால நீங்களும் போங்க -ன்னு சொல்லுறது என்ன லாஜிக்?

ஜோ/Joe சொன்னது…

//ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோவிலுக்குப் போவதை இந்துக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்//

ஆங்கிலப் புத்தாண்டுக்கு இந்துக்கள் என்ன காரணத்துக்காக இந்துக்கள் கோவிலுக்கு செல்கிறார்களோ அதே காரணத்துக்குக்காகத் தான் கிறிஸ்தவர்கள் தேவாலயத்துக்கு செல்கிறார்கள் .அது தாண்டி கத்தோலிக்க மதத்தில் கொள்கை ரீதியாக ஆங்கிலப் புத்தாண்டு ஒரு மத கொண்டாட்டமல்ல .அதாவது ஆங்கில புத்தாண்டுக்கு எந்த மத significance- ம் கிடையாது .. உலகமெங்கும் பலரும் பொதுவாக பின்பற்றும் ஆண்டின் முதல் நாளில் ஆலயத்திற்கு செல்வது நல்லது என்பதைத் தவிர.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
கோவியாரே,
நேரடியாக பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

மதங்களை தாண்டி தமிழர் அனைவரும் தமிழ் புத்தாண்டை தமிழர் விழாவாக கொண்டாட வேண்டுமென்றால் அதற்கான பொது கொண்டாட்ட முறைகள் என்ன ?

அவரவர் அவர் மத முறைப்படி கொண்டாட வேண்டும் என்பதை நான் நிராகரிக்கிறேன் ..மத முறைப்படி கொண்டாட இது மத விழா அல்ல ..தமிழர் விழா என்றால் அதில் மதத்தை கொண்டு ஏன் நுழைக்க வேண்டும்?//

விழா என்றாலே அதில் சமயம் / மதம் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவே முடியாது என்பது இந்திய சூழல் ஆகிவிட்டது, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இந்துக்கள் இந்துக் கோவில்களுக்குத்தான் செல்கிறார்கள். பண்டிகைகளை வழிபாட்டுடன் தொடர்ப்பு படுத்துவது இந்தியர் வழக்கம். தமிழர்கள் மதம் சாராமல் கொண்டாடும் பண்டிகை எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

//உங்கள் மத முறைகளை தாண்டி ,sms ,email வாழுத்து சொல்லுவது தவிர ,தொலைக்காட்சி பார்ப்பதை தவிர வெறும் தமிழனாக இதை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் .//

தமிழனாக இப்படி கொண்டாட வேண்டும் என்று நான் எங்கும் சொல்லவில்லை, இந்து தமிழர்கள் இந்து முறைப்படி தான் கொண்டாடுகிறார்கள்

//முன்முடிவுகள் பற்றி எழுதும் நீங்கள் ,நான் கேள்வி கேட்டால் மட்டும் ஒரு கிறிஸ்தவன் என்ற கோணத்தில் என்னை பார்த்து பதிலும் .சமாதானமும் சொல்லுவதேன் ?//

'இந்துக்கள் தவிர்த்து அனைத்து மதத்தினரையும் என்பதைக்' மட்டும் கட்டம் கட்டி கேள்வி எழுப்பியது நீங்களே.


//கிறிஸ்தவர்களையும் ,இஸ்லாமியரையும் நாங்கள் பெரும்தன்மையாக தமிழராக ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று சொல்லும் 'பெருந்தன்மை இந்து'க்களில் ஒருவரா நீங்கள்?
//

'இந்து' என்ற அடையாளத்தை விரும்பாதவர்களில் நானும் ஒருவன்.

ஜோ/Joe சொன்னது…

//'இந்து' என்ற அடையாளத்தை விரும்பாதவர்களில் நானும் ஒருவன்.//

உங்கள் நழுவல்கள் ,மழுப்பல்கள் ,ஆங்கிலப் புத்தாண்டு பற்றி சொல்லிய விளக்கத்துப் பின்னரும் சொன்னதையே திருப்பி சொல்லுவதிலிருந்து ..அப்படி தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நழுவல்கள் ,மழுப்பல்கள் ,ஆங்கிலப் புத்தாண்டு பற்றி சொல்லிய விளக்கத்துப் பின்னரும் சொன்னதையே திருப்பி சொல்லுவதிலிருந்து ..அப்படி தெரியவில்லை.//

என்னுடைய பதிலில் நான் எதையும் யோசித்து யோசித்து சொல்லவில்லை. உங்களுக்கு அது நழுவல், மலுப்பலாக தெரிந்தால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன விதமான பதில் திருப்தியாக இருக்கும் என்பதையும் நீங்களே சொல்லிவிட்டால் அதை வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நழுவல்கள் ,மழுப்பல்கள் ,ஆங்கிலப் புத்தாண்டு பற்றி சொல்லிய விளக்கத்துப் பின்னரும் சொன்னதையே திருப்பி சொல்லுவதிலிருந்து ..அப்படி தெரியவில்லை.//

உங்கள் பின்னூட்டம் வெளியானதைப் பார்க்க நான் திரையை ரெபரஸ் செய்யவில்லை. நான் மறுமொழி எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் வெளி இட்டு இருக்கலாம். மட்டுறுத்தல் இல்லை என்பதை கவனிக்கவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
//ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோவிலுக்குப் போவதை இந்துக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்//

ஆங்கிலப் புத்தாண்டுக்கு இந்துக்கள் என்ன காரணத்துக்காக இந்துக்கள் கோவிலுக்கு செல்கிறார்களோ அதே காரணத்துக்குக்காகத் தான் கிறிஸ்தவர்கள் தேவாலயத்துக்கு செல்கிறார்கள் .அது தாண்டி கத்தோலிக்க மதத்தில் கொள்கை ரீதியாக ஆங்கிலப் புத்தாண்டு ஒரு மத கொண்டாட்டமல்ல .அதாவது ஆங்கில புத்தாண்டுக்கு எந்த மத significance- ம் கிடையாது .. உலகமெங்கும் பலரும் பொதுவாக பின்பற்றும் ஆண்டின் முதல் நாளில் ஆலயத்திற்கு செல்வது நல்லது என்பதைத் தவிர.
//

நானும் மதவிழாவாகக் கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை. இதை மதத்துடன் தொடர்ப்பு படுத்தி தவிர்காதீர்கள். புறக்கணிப்பதற்குப் பதிலாக சிறப்பு நாளாகக் கருதி அவரவர் வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்லலாம் என்பதைத்தான் சொல்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்