பின்பற்றுபவர்கள்

22 ஏப்ரல், 2009

ஞானிகள், மெய்ஞானிகள், விஞ்ஞானிகள் !

ஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்லது மொழிக் குறியீடு என்பதைத் தவிற வேறொரு சிறப்பு அந்தச் சொல்லுக்கு கிடையாது. பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்த ஒரு சில சொற்களுக்கு மட்டுமே வேறொரு மொழியில் பொருள் கூற முற்படும் பொழுது அதைச் சரியாக எடுத்துச் சொல்லமுடியாமல் போய்விடும், மொழியியலில் ஒவ்வொரு மொழியிலும் புழங்கும் தனித்தன்மை வாய்ந்த இத்தகைய சொற்கள் மிகவும் குறைவுதான். எடுத்துக்காட்டு 'எத்தனையாவது' என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கிலத்தில் ஒரே சொல்லில் அடக்கும் படி சொல்கிடையாது. கறி என்ற தமிழ் சொல் இதற்கு நேரடி சொல் கிடைக்கததால் ஆங்கிலத்தில் Curry என்று அப்படியே வைத்திருக்கிறார்கள், அதே போல் கறிவேப்பில்லையை Curry Leves என்பதாக வைத்திருக்கிறார்கள். ஆங்கில மொழிப்பெயர்ப்பு படி கறி இலை என்பதாகவே அதைப் படிக்கும் தமிழர் அல்லாதவர்கள் நினைப்பார்கள். நமது 'கறி வேப்பில்லை' சொல்லின் பொருளில் அந்த மரத்தின் வகையும் சேர்ந்தே இருக்கும். தனித்தன்மை வாய்க்கப் பெற்றச் சொற்கள் இவ்வகையானது தான், அவை அந்த மொழிக்கே உரியன.

வேறு பொதுவான சொற்களுக்கு பொருள் ஒன்றாக இருந்தாலும் ஒரு மொழியில் சொல்லப்படும் சொல் பிற மொழிகளில் குறைவான / பொருத்தமில்லாத சொல் எனக் கட்டமைப்பது வெறும் மொழி அரசியல் தான். சில மொழிகளின் குறிப்பாக வடமொழி வாய்ப்பாடுகளைச் சொல்வதன் மூலம் அதிர்வு ஏற்படுகிறது என்பது காலம் தோறும் பரப்பப்படும் மோசடி. மொழியை பாதுகாக்க அதன் மீது புனிதத் தன்மை ஏற்றுவது நீண்டகாலப் பயணாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகைய அறிவுக்கு ஒவ்வாத கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டு 'ஞானம்' இது வடமொழிச் சொல் தான் வடமொழியில் 'ஞான்' என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் 'Know' என்ற சொல்லின் பொருளை ஒட்டியது,

Etymology:
Middle English, from Old English cnāwan; akin to Old High German bichnāan to recognize, Latin gnoscere, noscere to come to know, Greek gignōskein
Date: before 12th century



உறுதியற்ற தகவலாக வடமொழியாளர்கள் 'ஞான்' (ஞானம்)என்ற சொல் வடமொழியில் இருந்து பிறமொழிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பர். வடமொழி என்று சொல்லப்படும் சமஸ்கிரதத்திற்கும் கிரேக்கம், லத்தீன் ஆகியவற்றிற்கு பொதுவான நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு, எது எதன் மூலம் என்பது இன்னும் கூட தெளிவற்ற ஆராய்ச்சியாக தொடரும் நிலையில், மூன்று மொழிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது உறுதியான தகவல் தான்.

ஞானம் என்ற வடசொல்லுக்கு தமிழில் நேரடியான பொருள் 'அறிவு', ஞானி என்றால் அறிவாளி, வடமொழிக்கு புனிதம் கற்பிக்கப் பட்டதாலேயே ஞானம் என்ற சொல் மிகச் சிறந்த பொருளைத் தருவதாக நினைப்பது நமது மடைமைதான். 'ஞானிகள் சொன்னார்கள், எழுதினார்கள்' என்று எழுதப்பட்டதை படிக்கும் போது உண்மையிலேயே அது மிகப் பெரிய தத்துவம் போன்றது, புனித மானது என்றே நினைக்கிறோம். ஆனால் அதையே 'அறிவாளிகள் சொன்னார்கள், எழுதினார்கள்' என்று படித்தால் எதோ படித்தவர், சிந்தனை செய்பவர் எழுதி இருக்கிறார் என்ற பொருள் தருவது போல் தோன்றும். உண்மையிலேயே ஞானி என்றாலும் அறிவாளி என்றாலும் ஒரே பொருள் தான். ஞானிகள் என்பதற்கு மற்றொரு பொருள் அறிஞர்கள், ஞானியர் அண்ணா என்றாலும் அறிஞர் அண்ணா என்று சொன்னாலும் ஒரே பொருள்தான். அறிவாளிகளாக தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள பலர் 'ஞானிகள்' ஆகி இருப்பதும் வெறும் உளவியல் படி உயர்வாக எண்ண வைக்கும் உத்தி மட்டுமே, அதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் அறிவாளிகளே :)

ஞானிகள் என்பவர்கள் வேற்றுகோளில் இருந்து வந்தவர்கள் இல்லை, அறிவாளிகளைத்தான் அப்படி வடமொழியில் சொல்லுகிறார்கள். வடமொழியை தேவபாடையாக ஆக்கியதால் அந்தச் சொல் உயர்ந்த பொருளை உள்ளடக்கியது போல் தோற்றம் தருகிறது. வடமொழி தேவபாடை என்று பழைய இலக்கியங்கள் (புராணம்) எதிலும் சொல்லப்படவில்லை. பின்னாளில் அப்படி வலிந்து சொல்லப்பட்டது வெறும் மொழி அரசியல்தான்.

யார் யாரெல்லாம் அறிவாளியோ அவர்களெல்லோரும் 'ஞானிகள்' தான் ஏனெனில் இரண்டிற்கும் பொருள் ஒன்றே. மெய்ஞானிகள், பகுத்தறிவாளர்கள் ஆகியவை ஒரே பொருளில் வரும் வேறு சொற்கள், ஒன்றையே குறிப்பவை, இரண்டுமே உண்மையைப் பற்றிய தெளிதலைப் பற்றியது, மெய் ஞானிகள் - இதிலிருக்கும் 'மெய்'தமிழ் சொல்தான், அதற்கான பொருள் அனைவருக்குமே தெரியும். மெய் என்பதை வடமொழியில் 'ஸத்ய' அதாவது சத்(தி)யம் என்பார்கள், மெய்ஞானிகள் என்பதை துய தமிழில் மெய்யறிவாளர்கள், மெய்யறிஞர்கள் என்று சொல்லலாம். அதே போல் விஞ்ஞானிகள் என்பதற்கு பதிலாக அறிவியலாளர் என்று எழுதுவதே தமிழ்சொல்லாகும்.

23 கருத்துகள்:

வேத்தியன் சொன்னது…

வந்தேன்...
வாசித்துவிட்டு வருகிறேன்...

வேத்தியன் சொன்னது…

நல்ல விளக்கமான கட்டுரை நண்பரே...
இந்த விஷயம் பற்றி சிந்தித்தது கிடையாது...
பகிர்வுக்கு நன்றி...

Suresh சொன்னது…

வந்துட்டேன் படிச்சிட்டு வரேன் தலைவா

Suresh சொன்னது…

மிக அருமையான விளக்கமான கட்டுரை தலைவா

நல்ல பகிர்வு

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

நன்கு கவனமுடன் செய்யப்பட்ட ஆய்வு

ஆ.சுதா சொன்னது…

மொழி பற்றி நல்லதொரு விளக்கப் பதிவு. படித்ததில் பயணும் உள்ளது. நன்றி!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஞானசேகரன் னுக்கு அறிவு இருக்கா? இல்லை?

நிகழ்காலத்தில்... சொன்னது…

தாங்களை பகுத்தறிவாளர் என்பது சாலப்பொருந்தும்.

தங்களின் கட்டுரை தமிழ் ஆராய்ச்சிக்கட்டுரையாக இருந்தால் இதோடு நிறுத்திக்கொள்கிறோம்.

ஓம்காரின் பதிவு பின்னூட்டத்துடன் தொடர்பாக எழுதியிருந்தால் இதற்கு மாற்றுக்கருத்தாக தொடர்கிறேன்.

வாழ்வியலில் எதை எப்படி புரிந்துகொண்டால் நமக்கு உதவியாகவும், உபயோகமாகவும் இருக்கும் என்று பார்க்கவேண்டும் என்பதே என் கருத்து.

ஞானி என்பது வடமொழியா, தமிழ்மொழியா என்ற ஆராய்ச்சி எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும்.?

ஞானி, அறிவாளி, அறிஞர்,மெய்ஞானி,பகுத்தறிவாளன்.--இது எல்லாம் ஒரே பொருள் அறிவாளி என்பது உங்கள் கருத்து.
இதை சற்று உணர்வுபூர்வமாக பாருங்கள்.. தங்கள் தந்தையிடம் அல்லது பல உறவினர்களிடம், நண்பர்களிடம் நான் நேரில் சென்று கோவியாரை மனதில் நினையுங்கள் என்றால் அவர்கள் எந்த வயது கோவியை நினைப்பார்? அவரவர் எந்த வயதில் கடைசியாக தங்களை பார்த்தனரோ அப்படித்தான் நினைப்பர் (பட்டப்பெயரோடு).
நினைப்பது என்னவோ உங்களைத்தான். ஆனால் ஒவ்வொரிடத்திலும் என்ன வேறுபாடு பார்த்தீர்களா.!!

அதுபோல் எல்லா வார்த்தைகளும் அறிவாளி என்றே பொருள்வந்தாலும் அதில் உள்ள பல படிநிலைகளையே இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் குறிக்கும்.

ஒரே வார்த்தை பல அர்த்தம். இது புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.

( கோவி. கண்ணன் ---ஒரு வயதில்-
கோவி. கண்ணன் ---பத்து வயதில்--
கோவி. கண்ணன் --இருபது வயதில்
கோவி. கண்ணன்--முப்பது வயதில்
கோவி. கண்ணன் --நாற்பது வயதில்
கோவி. கண்ணன் --தற்போது )

கோவி கண்ணன் என்று சொன்னால் எதை நான் மனக்காட்சியாக காண்பது?
----------------------------------
எந்த பட்டபெயரில் சொன்னாலும் அது தங்களையே குறித்தாலும்,

பேசும்பொழுது தங்களது எந்த வயது சேட்டைகளை சுட்டிக்காட்ட பொருத்தமான பட்டபெயரைச் சொன்னால் உணர்வுபூர்வமாக கேட்பவர் புரிந்து கொள்ளவே இத்தனை வார்த்தைகள்.

பல வார்த்தை ஒரே பொருள் புரிந்து கொள்ள எளிது

(ஒரு வயதில்--கோவி. கண்ணன்
பத்து வயதில்--கோவி. கண்ணன்
இருபது வயதில்--கோவி. கண்ணன்
முப்பது வயதில்--கோவி. கண்ணன்
நாற்பது வயதில்--கோவி. கண்ணன்
தற்போது -- கோவி. கண்ணன்

சொல்ல சொல்லவே மனதில் உருவகமாகிவிடும்

நன்றி

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன்,

இனிவரும் காலங்களில் உங்கள் பதிவுகளை எளிய மொழியில் எழுதுங்கள். எங்களை போன்ற அஞ்ஞானிகளுக்கு புரியவேண்டாமா? :)

அறிவு என்பது ”புத்தி” என கொள்ளலாம்.

சித்தா,புத்தி என பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு விஷயத்தை அறிவு என ஒரு சொல்லில் மொழிபெயர்க்க முடியாது.

மிகவும் ஒல்லியான தேகத்தில் இருக்கும் ஒரு மஹான், நல்ல உணவால் குண்டாகிவிட்டார் என்றால் முதலில் சாதாரண குருவாக இருந்தார், தற்சமயம் ”சத்”குருஆகிவிட்டார் என சொல்ல கூடாது :) இது போன்றது தான் உங்கள் மொழிபெயர்ப்பும்.

ஞானம் என்பது அறிவு என்றால் அனைவரும் ஞானிகளே.

ஞானம் என்பது உடலில் அல்லது மூளை எனும் உறுப்பில் நடக்கும் செயல் அல்ல. அறிவு என்பது எல்லைக்கு உற்பட்டது. ஆனால் ஞானம் என்பது எல்லையற்றது.

அறிவு ஆளுக்கு ஆள் வேறுபடும். அறிவாளிகள் ஒன்று போல் இருக்கமாட்டார்கள். ஆனால் ஞானம் அடைந்தவர்கள் வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒரே போல இருப்பார்கள்.
அறிவு கர்மத்தையும்,ஆணவத்தை தரும்.
ஞானம் ஆணவம் மாட்டுமல்ல அனைத்தும் அழிக்கும். அதனால் தான் ஞானத்தை தீ என்கிறார்கள்.

//தேவபாடையாக //

மனிதன் பிணமானதும் பாடை பார்த்திருக்கிறேன். தேவர்களுக்கு இறப்பில்லை அப்புறம் எப்படி இது :) ?

வேடிக்கை மனிதன் சொன்னது…

சிந்திக்க வைத்த கட்டுரை
என்றாலும், மறைமுகமாக ஆத்தீகர்களை சாடியிருப்பது போல் தோண்றுகிறது

மணிகண்டன் சொன்னது…

***
விஞ்ஞானிகள் என்பதற்கு பதிலாக அறிவியலாளர் என்று எழுதுவதே தமிழ்சொல்லாகும்
***

அப்ப சயின்டிஸ்ட் தமிழ் கிடையாதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவு என்பது ”புத்தி” என கொள்ளலாம்.//

அறிஞர் என்பதை புத்தியர் என்று கொள்வீர்களோ !
:) புத்தி என்பது ஆய்ந்தறிதல். வழக்கில் அறிவு வருகிற இடத்தில் புத்தியை (கெட்டுப்போய்) போட்டதால் அறிவும் புத்தியும் உங்களுக்கு ஒன்றாக தெரியும்

//சித்தா,புத்தி என பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு விஷயத்தை அறிவு என ஒரு சொல்லில் மொழிபெயர்க்க முடியாது.
//
சித்தி புத்தி என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள், அறிவு/அறிதல் என்றாலே ஒன்றைப் பற்றிய தெளிதல்

//மிகவும் ஒல்லியான தேகத்தில் இருக்கும் ஒரு மஹான், நல்ல உணவால் குண்டாகிவிட்டார் என்றால் முதலில் சாதாரண குருவாக இருந்தார், தற்சமயம் ”சத்”குருஆகிவிட்டார் என சொல்ல கூடாது :) இது போன்றது தான் உங்கள் மொழிபெயர்ப்பும்.
//
:) உங்கள் சிரிப்புக்கு சிரித்தேன். சத்(து) குருவாக வாழ்த்துகள். இன்னொன்னு குரு என்பதும் தமிழ் சொல்லே, குரு என்றால் ஒளி என்று பொருளுண்டு. குருமணி என்று ஒளிபொருந்திய மணியைச் சொல்லுவார்கள் குரு வை Guru என்று எழுதுவதாலும் சொல்லுவதாலும் அது வடமொழியாகிவிடாது. தகவலுக்காகச் சொன்னேன்

//ஞானம் என்பது அறிவு என்றால் அனைவரும் ஞானிகளே.//
விஞ்ஞானி என்றால் விஞ்ஞானம் பற்றிய ஆராய்ச்சி அறிவுடையவர்கள், அதைத் தமிழில் அறிவியளார் என்போம் :) ஞானி என்றால் அறிவாளி என்றே பொருள்

//ஞானம் என்பது உடலில் அல்லது மூளை எனும் உறுப்பில் நடக்கும் செயல் அல்ல. அறிவு என்பது எல்லைக்கு உற்பட்டது. ஆனால் ஞானம் என்பது எல்லையற்றது.//
தவறான வாதம் இரண்டும் ஒன்றே. ஏணியை மேலிருந்து பார்த்தால் கீழே இறங்கப் பயன்படுவதாக தெரிடும், கிழே இருந்து பார்த்தால் ஏற்றிவிடும் என்பதாக தெரியும். ஆனான் ஏணி ஏணி தான்

//அறிவு ஆளுக்கு ஆள் வேறுபடும். அறிவாளிகள் ஒன்று போல் இருக்கமாட்டார்கள். ஆனால் ஞானம் அடைந்தவர்கள் வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒரே போல இருப்பார்கள்.
அறிவு கர்மத்தையும்,ஆணவத்தை தரும்.
ஞானம் ஆணவம் மாட்டுமல்ல அனைத்தும் அழிக்கும். அதனால் தான் ஞானத்தை தீ என்கிறார்கள்.
//

மேலே சொன்ன அதே விளக்கம், வட எழுத்துக்களான ஜ்,ஹ்,ஷ்,ஸ், கொண்டு அந்த சொல் இல்லாததால் தமிழ் என்றே பலர் நினைத்துப் பயன்படுத்துகின்றனர். பலர் அந்த எழுத்துக்கள் உடைய சொற்களே வடசொல் என்று நினைப்பதுண்டு. மற்றபடி ஞானி, அறிவாளி ஒரே பொருள்தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஞானி என்பது வடமொழியா, தமிழ்மொழியா என்ற ஆராய்ச்சி எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும்.?
//

வாழ்கையின் கடைசி வினாடிகளில் வாழ்ந்தது கூட வீண் என்றே தோன்றும். எல்லாமுமே அப்படித்தான். நாள்தோறும் யோகசனம் ஒருவர் முனைப்புடன் செய்கிறார், நாளைக்கே அவருக்கு பக்கவாதம் வந்தால் எல்லாம் வீண் தானே. இல்லாவிடில் நாளைக்கே எனக்கு பக்கவாதம் வந்தால் இன்னிக்கு இதை ஏன் செய்யனும் என்று நினைப்பார். வாழ்க்கைக்கு உதவும் என்று தான் அவரவர்களுக்கான தாய்மொழி இருக்கிறது. எதுவுமே வேண்டாம் பேசி என்ன செய்யப் போகிறோம், செத்ததும் பேசவா போகிறோம் என்று யாரும் பேசாமல் இருந்துவிடுகிறோமா ? சுவையான உணவு கூட அப்படுத்தான், நாவில் இருக்கும் வரைதான் சுவை. உங்களுக்கு ஒரு செயலுக்கான பலன் என்று சிலவற்றை நீங்கள் செய்யலாம், அது எனக்கு வீன் வேலையாகத் தெரிந்தால் அது என்குற்றம் தானே

TBCD சொன்னது…

எப்பா ஞானம் சீத்தாவ காணோம்

TBCD சொன்னது…

ஞானம்ம் தீப்போன்றது...ஏன் என்றால் ஒரு தீவட்டியிலிருந்து அடுத்த தீவட்டிக்கு அப்படியே பற்றிக்கொள்ளும்.

ஞானம் என்பதை பக்குவம் என்று சொல்லலாமா..

தருமி சொன்னது…

//இனிவரும் காலங்களில் உங்கள் பதிவுகளை எளிய மொழியில் எழுதுங்கள். எங்களை போன்ற அஞ்ஞானிகளுக்கு புரியவேண்டாமா? :)//

ரிப்பீட்டேய்........ பாதிதான் வாசித்தேன்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

பின்னூட்டத்தின் இரண்டாவது பத்தியில் நாம் தெளிவு செய்திருக்கிறோம். அதன் பின்னரும் நான் வீண் என சொன்னதாக நினைக்கிறீர்கள்.,
//ஞானி என்பது வடமொழியா, தமிழ்மொழியா என்ற ஆராய்ச்சி எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும்.?
//
நேரடியான பதிலைக் காணோம்!!!!!!

\\வாழ்கையின் கடைசி வினாடிகளில் வாழ்ந்தது கூட வீண் என்றே தோன்றும்\\
அப்படி இருக்கக்கூடாது என்பதே எமதுகருத்துக்களின் நோக்கம்.

\\நாள்தோறும் யோகசனம் ஒருவர் முனைப்புடன் செய்கிறார், நாளைக்கே அவருக்கு பக்கவாதம் வந்தால் எல்லாம் வீண் தானே.\\

இல்லவே இல்லை. இதற்கு பெயர்தான் பகுத்தறிவு, லாஜிக்.
யோகாசனம் செய்துவந்தும் ஏன் வந்தது என்று சிந்திப்பதே ஆன்மீகம்.

\\நாளைக்கே எனக்கு பக்கவாதம் வந்தால் இன்னிக்கு இதை ஏன் செய்யனும் என்று நினைப்பார். \\

நல்லதை செய்ய மறுத்து எதிர்மறை
எண்ணத்தோடு இருப்பவரை வாழ்த்திவிட்டு ஒதுங்கிவிட வேண்டியதுதான்..

\\வாழ்க்கைக்கு உதவும் என்று தான் அவரவர்களுக்கான தாய்மொழி இருக்கிறது. எதுவுமே வேண்டாம் பேசி என்ன செய்யப் போகிறோம்,\\

ஆராய்ச்சி வேண்டாம்.என்றால் அதற்கு அர்த்தம், முன்னோர்கள் மிகமிக சரியாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நான் அதெயேதான் சொல்லி இருக்கிறேன். தாங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் போல தெரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நேரடியான பதிலைக் காணோம்!!!!!!//

தொடர்ந்து தமிழ் சொற்கள் குறித்து எழுதிக் கொண்டு வருகிறேன், 50க்கும் மேற்பட்ட அந்தவகைப் இடுகை(Post)களில் இதுவும் ஒன்று. அதை விரும்பிப் படிப்பவர்கள் ஊக்கமளிக்கிறார்கள். எழுதுவதற்கு பலன் என்று நினைப்பது இல்லை. அதை ஒரு நோக்கமாக வைத்து எழுதுகிறேன். எனது இடுகைகளில் வடமொழிச் சொற்கள் பயன்படுத்துவது (உங்க பாணியில் சொல்வதென்றால் உபயோகப்படுத்துவது) மிகவும் குறைவு.

//ஆராய்ச்சி வேண்டாம்.என்றால் அதற்கு அர்த்தம், முன்னோர்கள் மிகமிக சரியாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நான் அதெயேதான் சொல்லி இருக்கிறேன். தாங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் போல தெரிகிறது. //

முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு என்பது எனது தெளிவு, இன்றைய முட்டாள் நாளைக்கு இறந்தால் அவன் வருங்காலத்தில் இருக்கும் கடந்த கால முட்டாள் முன்னோராக இருப்பான். முன்னோர்கள் தீண்டாமை கடைபிடித்தார்கள், அது சரி என்று நீங்கள் சொல்லுவீர்களா ?

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு என்பது எனது தெளிவு, இன்றைய முட்டாள் நாளைக்கு இறந்தால் அவன் வருங்காலத்தில் இருக்கும் கடந்த கால முட்டாள் முன்னோராக இருப்பான். முன்னோர்கள் தீண்டாமை கடைபிடித்தார்கள், அது சரி என்று நீங்கள் சொல்லுவீர்களா ?\\

இதற்கு என்னை நேரடியாகவே முட்டாள் என்றே சொல்லலாம். இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சியே!!!

பார்த்தீர்களா, இதுதான் பொதுவான வார்த்தை விளையாட்டு. அறிவாளி என்ற சொல்போலவே முன்னோர்கள் என்ற சொல்லும்.

அது ஏன் தங்களுக்கு தெரிவதெல்லாம்
\\இன்றைய முட்டாள்\\
\\தீண்டாமை கடைபிடித்தார்கள்\\
அப்படி இருக்கிறது. ஏன் இன்றைய தங்களைப் போன்ற அறிவாளி, தீண்டாமை கடைபிடிக்காதவர் எல்லாம் தெரிவதில்லை.??

நாம் முன்னோர்கள் என்று சொல்வது
சித்தர்கள், ஞானியரையே.முன்னோர் என்றவுடன் என் நினைவில் எழுவது
இவர்களே.,

தங்கள் கருத்துக்களை இயல்பாகவே எடுத்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.,

கோவி.கண்ணன் சொன்னது…

//இதற்கு என்னை நேரடியாகவே முட்டாள் என்றே சொல்லலாம். இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சியே!!!//

உங்களை ஏன் நான் சொல்லனும் ? நீங்கள் எனது நண்பர் தானே ?

//பார்த்தீர்களா, இதுதான் பொதுவான வார்த்தை விளையாட்டு. அறிவாளி என்ற சொல்போலவே முன்னோர்கள் என்ற சொல்லும்.

அது ஏன் தங்களுக்கு தெரிவதெல்லாம்
\\இன்றைய முட்டாள்\\
\\தீண்டாமை கடைபிடித்தார்கள்\\
அப்படி இருக்கிறது. ஏன் இன்றைய தங்களைப் போன்ற அறிவாளி, தீண்டாமை கடைபிடிக்காதவர் எல்லாம் தெரிவதில்லை.??

நாம் முன்னோர்கள் என்று சொல்வது
சித்தர்கள், ஞானியரையே.முன்னோர் என்றவுடன் என் நினைவில் எழுவது
இவர்களே.,

தங்கள் கருத்துக்களை இயல்பாகவே எடுத்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.,

10:03 AM, April 23, 2009
//

நான் வார்த்தை விளையாட்டுச் செய்யவில்லை. பழமை வாதம் என்று சொல்வதை விளக்கமாக எழுதினேன்.

முன்னோர்கள் அனைவருமே அறிவாளிகள் என்றால் பழமை வாதம் என்கிற கருத்தாக்கத்திற்கே இடம் கிடையாது இல்லையா ?

பழமைவாதத்திற்கு எதிராக பேசுவது தவறு என்பீர்களா ?

தனித்தாக்குதலாக எழுதவில்லை அப்படி தெரிந்தால் மன்னிக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
ஞானம்ம் தீப்போன்றது...ஏன் என்றால் ஒரு தீவட்டியிலிருந்து அடுத்த தீவட்டிக்கு அப்படியே பற்றிக்கொள்ளும்.

ஞானம் என்பதை பக்குவம் என்று சொல்லலாமா..//

டிபிசிடி அய்யர்,

தீ என்ற தமிழ்ச் சொல்லே தீபம், தீப என வடமொழியில் வழங்கப்படுகிறது, 'தீ' என்பதற்கான வடமொழிச் சொல் 'ஜ்வாலை' . ஆனால் நம்மவர்கள் தீபம் வடசொல் என்றே நினைப்பர். தமிழில் இருந்து வடமொழிக்கு சொற்கள் சென்றன என்றால் பலர் ஒப்புக் கொள்வதே இல்லை.

சரி பக்குவத்துக்கு வருகிறேன், நீங்கள் சுட்டிய 'பக்குவம்' பக்குவ என்ற வடசொல்லின் தமிழாக்கம், பக்கா என்று இந்தியில் வழங்கப்படுவதும் இதே சொல்தான். இதற்கு மாற்றான தமிழ்ச் சொல், 'சரியாக', 'அளவான' என்ற சொல்லலாம்.

சோறு பக்குவமாக வெந்திருக்கிறது என்பதும், அளவாக வெந்திருக்கிறது என்பதும் ஒன்று தானே ?

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\முன்னோர்கள் அனைவருமே அறிவாளிகள் என்றால் பழமை வாதம் என்கிற கருத்தாக்கத்திற்கே இடம் கிடையாது இல்லையா ?

பழமைவாதத்திற்கு எதிராக பேசுவது தவறு என்பீர்களா ?

தனித்தாக்குதலாக எழுதவில்லை அப்படி தெரிந்தால் மன்னிக்கவும்.\\

முன்னோர் அனைவரும் என்றால் நம்க்கு முன் பிறந்த அனைவரும் என்ற பொருள் அல்ல.

வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த
அனைவரும் என்று பொருள் கொள்ளவும்.

பழமைவாத எதிர்ப்பை ஊறுகாய் போன்று பயன்படுத்துங்கள்..
சரியானதை உணவைப்போல் சுட்டிக்
காட்டுங்கள். இது குறைவாக இருப்பதாக உணர்வதால் ஓம்காரிடமும்,தங்களிடமும் இதை அன்பு வேண்டுகோளாக வைக்கிறோம்.

தனிநபர் தாக்குதலாக எப்போதுமே நினைப்பதில்லை. முட்டாள் மேட்டர்
சும்மா தமாசு. சீரியசாவே போய்ட்டிருந்தா எப்படி.

வாழ்த்துகள்..

Unknown சொன்னது…

இது அண்ணன் கோவியாரின் கப்சா பதிவு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்