பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2009

இறை நம்பிக்கை முற்றிலும் தவறா ?

நாத்திக கோட்பாடுகளில் இறைமறுப்பு சேர்ந்ததற்கான காரணம், மதங்கள் காட்டும் இறையின் (செயல்கள் என கட்டமைக்கப்பட்ட) பொய்த் தன்மையும், சடங்குகளின் வழி மனித சமூகத்தைப் பிளவு படுத்தி, ஒன்று சேரவிடாமல் தடுத்து வைத்திருப்பதும் ஆகும், அவை மதங்களில் இருக்கும் பழக்க வழக்கங்கள் என்றும் அதை மதத்தின் தனித்தன்மை அல்லது சிறப்புத்தன்மையாகவே ஆத்திக நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். சிறப்புத்தன்மை என்றால் அது பலராலும் போற்றப்படுவதாக அமைந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக யாகங்கள் செய்வது, இதில் விலை உயர்ந்த பொருள்களை தீயிலிட்டு எரிக்கிறார்கள். பிற மதத்தினருக்கு இவை பொருள்களை வீணாக்குகிறார்கள், அந்தப் பொருள்களையோ அந்த பொருளுக்கு உரிய பணத்தை ஏழை எளியவர்களிடம் கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைக்கு உதவுமே என்பதாக அவர்களின் எண்ணம் இருக்கும். அதே போல் பிற மதங்களில் புலால் உண்ணுவதும் அவற்றிற்கு காரணாமாக விலங்குகள் படைக்கப்பட்டதே அவை மனிதனுக்கு உணவாகுவதற்குத்தான் என்பார்கள். சைவ வாதிகளைப் பொருத்தவரையில் விலங்கை உண்ணுவது சக உயிர்களுக்குச் செய்யும் தீங்கு என்பது அவர்களின் சித்தாந்தம், ஒரு விலங்கை உருவாக்க முடியாத மனிதனுக்கு கொல்லும் உரிமையை மட்டும் கடவுள் கொடுக்கிறாரா ? என்று கேட்பார்கள். ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

மனிதன் உணவுக்காக வேட்டையாடியதில் பல பறவைகளின், விலங்குகளின் இனம் முற்றிலுமே அழிந்து போய் இருக்கிறது. (இறைவன் அனுமதித்தி இருந்தால் இவை மீண்டும் உண்டாகி இருக்குமே ?) ஆக சடங்கு வழக்கங்கள் எதுவுமே உயர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. சடங்குகள் அனைத்தும் மதம் தொடர்புடையது, அதை இறை நம்பிக்கையுடன் தொடர்வு படுத்துவது மதங்கள். மற்றபடி சடங்குகளுக்கும் இறை நம்பிக்கைக்கும் யாதொரு நேரடி தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன். உணவு நம்பிக்கையை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே எடுத்துக் கொண்டேன். மற்றபடி மத நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் பிற மதத்தினரால் போற்றப்பட்டது என்று கொள்ளமுடியாது. அப்படி போற்றி இருந்தால் அதை தத்தமது மதங்களிலும் கொண்டு வந்திருப்பார்கள். ஒராளவு ஒன்றை ஒன்று போற்றிக் கொள்ளாமல் உள்வாங்கிக் கொண்ட விதத்தில் இன்றைய இந்து மதமும், புத்தமதமும் உண்டு. உயிர்பலி, மாற்றுமதக் காழ்ப்பு (மதங்களுக்கிடையே இருப்பது) இவற்றை எதிர்த்து தோன்றிய சித்தாந்தங்களே நாத்திக சித்தாந்தங்கள், ஆத்திகக் கொள்கையை முற்றிலும் மறுக்க வேண்டுமெனில் அவர்களது அடிப்படை அல்லது அதற்கு பாதுகாப்பாக இருக்கும் இறைநம்பிக்கையையும் சேர்த்தே அழித்தால் முடியும் என்கிற வழியில் நாத்திகர்கள் இறை மறுப்பு என்பதை கையில் எடுத்துக் கொண்டார்கள். மற்றபடி தனிமனித இறைநம்பிகையை கொச்சைப்படுத்த வேண்டும், மறுக்க வேண்டும் என்கிற வரட்டுவாதமாகவே நாத்திகம் வலுப்பெற்றதாக நான் கருதவில்லை.

இன்றைய நாத்திகர்கள் இறைமறுப்பையே முதன்மைக் கொள்கையாக நினைக்கிறார்கள், காரணம் புரிதலில் இருக்கும் குழப்பமே. ஆத்திகர்கள் எப்படி இறைநம்பிகையையும் மதத்தையும் பிரித்துப் பார்க்காது குழம்புகிறார்களோ அது போலவே நாத்திகர்கள் எது மதக் கொள்கை எது இறை நம்பிக்கை என்று தெரியாமல், மதநம்பிக்கையையே இறை என்பதாக நினைத்து இறை நம்பிக்கைகளைக் குறைச் சொல்வதை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஒரு ஆத்திகரை நோண்டி நோண்டி இறை நம்பிக்கைக் குறித்துக் கேட்டால், கடைசியில் இறைவன் 'ஒருவன்' உண்டு, நான் நம்புகிறேன் என்றே முடித்துக் கொள்வார். ஆனால் நாத்திகர்களுக்கு அந்த பதில் திருப்தி அளிப்பதே இல்லை. நிருபணம் செய்யச் சொல்வார்கள். மனம் தொடர்புடையதை நிருபனம் செய்வது மிகவும் கடினம். பொய் சொல்வதை உண்மை அறியும் கருவி கொண்டு ஓரளவு கண்டு பிடிக்கலாம், ஆனால் ஒருவர் மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பது அவரவர் மனதில் இருக்கும் உணர்வு, அதை நிரூபனம் செய்ய முடியுமா ? இறை நம்பிக்கையை உள் உணர்வு. மன உணர்வு என்று சொன்னால் நாத்திகர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏற்க வேண்டும் என்பது கூட தேவை இல்லை, ஆனால் அதை மதிக்கலாம், தூற்றக் கூடாது. உள் உணர்வு / மன உணர்வு இல்லவே இல்லை என்ற பிடிவாதத்திலேயே இருக்கிறார்கள். கடவுளைக் காட்டு நம்புகிறேன் என்பார்கள்.

பொதுவாக இறைவன் குறித்து மதங்கள் சொல்வதை விட்டுப்பார்த்தால் பல்வேறு இறையறிஞர்கள் இறைவன் குறித்த சித்தாந்தங்களில் இறைவன் குணங்களின் கடல் அல்லது பெருங்கடல் என்றே சொல்லுவார்கள், எண்குணத்தான், முப்பத்திரண்டு குணத்தான், பதினாறு குணத்தான் என்று ஒவ்வொருவரும் சிலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். அன்பு, பரிவு, கருணை, வீரம், மகிழ்ச்சி, கொடை, ஒத்துழைப்பு, பாசம் போன்ற நல்லெண்ணங்கள் குறைவின்றி நிறைந்தே இருப்பதே இறைவன், புலன்களால் பார்க்க முடியாத பேரொளி, என்றே சொல்லுவார்கள். முற்றிலும் மன உளைச்சலில் இருக்கும் இறை நம்பிக்கையாளர் இறைவன் பால் மனதைத் செலுத்துவதால் இறைவனுக்கு இருக்கும் குணங்களின் சக்தியை அவரும் பெறுகிறார். மன உளைச்சலில் இருந்து விடுபடுகிறார், இவை இறைவழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வதால் கிடைக்கும் பயன் என்கிறார்கள். கோவிலில் இறைவன் இல்லாவிட்டாலும் மன எண்ணங்களை ஒரிடத்தே செலுத்தி குவிப்பதற்கு வாய்பான, ஏதுவான இடம் (place for getting or filling inner energy) என்று சொல்கிறார்கள்.

ஆத்திகன் நல்லவனா ? கெட்டவனா ? இறை நம்பிக்கையால் ஆத்திகன் குறைவாக தவறு செய்கிறானா ? அல்லது தவறே செய்யவில்லையா ? என்ற கேள்விக்கு எப்போதும் நான் சொல்லும் பதில் தனிமனித தவறுகள், செயல்கள் உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படும் முடிவு, எனவே அதை ஆத்திகன், நாத்திகன் என்று பார்க்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனின் குணம் ஆத்திகம் / நாத்திகத்தால் தீர்மாணிக்கப்படுவதும் இல்லை. மனித நேயம் இருசாரருக்குமே உண்டு. நாத்திகனுக்கு மதவெறி இல்லாததால் மனித நேயம் கூடுதலாகவே உண்டு. ஆனால் மற்ற குணங்களில் இரு சாரரும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள்.

நாத்திகன் மன உளைச்சலுக்கு நேரிட்டால் அதிலிருந்து விடுபட உளவியல் தேவைப்படுகிறது, அமைதியான இடம் தேடி உட்கார்ந்து, அல்லது தன்னிடம் பரிவு காட்டுபவர்களிம் பேசி அதன் பிறகே மன உளைச்சல் குறைந்து பழைய நிலையை அடைகிறான். ஆனால் ஒரு ஆத்திகன் மன உளைச்சல் அடைந்தால் இறை நம்பிக்கை மூலம் அதை உடனேயே பெற்றிவிட முடியும். அப்படியும் முடியாமல் போனால், கடவுள் செயல், நடப்பது நடந்துவிட்டது என்று தேற்றிக் கொள்வான். ஒரு நாத்திகனால் இவ்வளவு விரைவாக மன உளைச்சலில் இருந்து விடுபட முடியாது. இந்த ஒரு காரணத்தினால் இறை நம்பிக்கை என்பது தனிமனித மன வீழ்ச்சியை விரைவில் சரி செய்யக் கூடியது என்று உயர்வாகவே சொல்ல முடியும். மற்றபடி இறைக் கொள்கைகள் எதையும் போற்றவேண்டியதோ, இறைவனை என்றும் வணங்குங்கள், துதிபாடுங்கள், அவனருள் பெறுங்கள் ஆகிய ஆத்திக நம்பிக்கைகள் வெறும் மதப்பிரச்சாரம், இறை அச்சமாகவே தான் எடுத்துக் கொள்ள முடியும். நாத்திகர்கள் ஆத்திகர்களின் இறை நம்பிக்கைக் குறித்து குறைச் சொல்லும் முன் குறைச் சொல்வது மத நம்பிக்கையையா, இறை நம்பிக்கையையா என்கிற தெளிவு இருக்க வேண்டும், மத நம்பிக்கை என்றால் சரிதான், எப்போதும் எதிர்க்கக் கூடியதே. உதாரணத்திற்கு இராமர் பெயரைச் சொல்லி இராம் பாலம் என்று உளறுவது, இராமர் பிறந்து நகரம், மசூடி இடிப்பு ஆகியவை மதம் தொடர்புடையது. நல்ல தெளிந்த இறை நம்பிக்கை உடையோர் வழிபாட்டு இடங்களுக்குக் கூட செல்வது கிடையாது. இந்த தெளிவு இல்லாமல் 'வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வதும், இறை நம்பிக்கையும் முட்டாள் தனம்' என்பது நாத்திக முட்டாள் தனம்.

****

மீண்டும் பத்து நாட்கள் சென்று சந்திப்போம் ! தற்காலிக விடை பெறுகிறேன்

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

Amen !

அறிவிலி சொன்னது…

//இந்த தெளிவு இல்லாமல் 'வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வதும், இறை நம்பிக்கையும் முட்டாள் தனம்' என்பது நாத்திக முட்டாள் தனம். //
சிலைகளை உடைத்து ஆத்திகர்கள் மனதை புண்படுத்துவதும், எல்லா
பார்ப்பனர்களையும் பூணூல் அறுக்க
வேண்டும் என்பதும்தான் நாத்திகம்
என்று பல நாத்திகர்கள்
கூறுகிறார்கள்.

முட்டாள்தனமான கோட்பாடுகளை, அது எந்த மதமாக இருந்தாலும் தவறு என்று சொல்லும் இந்த இடுகை சிறப்பானதுதான்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

பத்து நாட்களுக்கு இது தாங்கும் :)

Thamizhan சொன்னது…

உண்மையான ஆத்திகனாக இருந்தால் சிலை உடைப்பைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை.
சிலைக்கு யார் மாலை போடுகிறார்கள்,யார் உடைகிறார்கள் என்று கணக்கெடுத்துக் கொண்டா கடவுள்
இருக்க முடியும்?
சிலையை வழி பட்டு அநியாயம் செய்பவனா?சிலையை உடைத்தாலும் அடுத்தவருக்குக் கெடுதல் செய்யாமல் நல்லது செய்பவனா ? யார் கடவுளுக்கு வேண்டியவன்?
மனிதனின் மனசாட்சியா, கடவுளா எது இருக்கிறது,எது இல்லை?

Unknown சொன்னது…

கோவி ஐயா அவர்களே கருத்துக்கள் அருமையோ அருமை.

இது நம்ம ஆளு சொன்னது…

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

கோவி.கண்ணன் சொன்னது…

டெஸ்ட் டெஸ்ட் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்