பின்பற்றுபவர்கள்

3 ஏப்ரல், 2009

ஜெ - வைகோ தொகுதி உடன்பாடு !

புலியை பிடறியைப் பிடித்து பொடாவில் போட்டதும், அடிபட்ட புலின்னு நெனச்சா... பூனையாக்கி போயாஸ் தோட்டத்தில் கட்டியதால் என்னவோ சூடுபட்ட பூனையாக கூட இல்லாமல்... தொகுதி உடன்பாட்டு சந்திப்பு (கற்பனைதான்)

ஜெ : மிஸ்டர் வைகோ, உங்கக் கட்சியில் தான் இப்ப யாருமே இல்லையே, எப்படி 6 சீட் கேக்குறிங்க ?

வைகோ : கருங்காலிகள் ஓடிவிட்டார்கள், கோடிக்கணக்கான கட்சித்தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்

ஜெ : மிஸ்டர் வைகோ...நாம பொதுக்கூட்டம் போடப் போறதுல்ல...பஸ்ஸில லாரியில் ஆள் அழைச்சிட்டு வர...பொதுத் தேர்தல்.... உங்க கட்சியில் இருப்பவர்களெல்லாம் வெறும் தொண்டர்கள்...அதுல யாரை நிறுத்துவிங்க

வைகோ : அது வந்து....

ஜெ : மூணு சீட் தருகிறேன்......அத வச்சு

வைகோ : (இந்த அம்மா மூணு சீட்டை வச்சு தியேட்டர் வாசலில் மூணு சீட்டு போட்டு பொழச்சிக்கச் சொல்லுதா ? ன்னு நினைச்சு....ச்சே அப்படியெல்லாம் இருக்காது....ன்னு) 6 சீட் கிடைச்சா

ஜெ : மூனே மூணு சீட்டுதான்.....அதுவும் வேட்பாளர்களோட ஜாதகம் வேணும்.....வேண்டுமென்றால் ஒண்ணு செய்கிறேன் நீங்க கேட்கிற 6 சீட்டும் தருகிறேன்......ஆனா இரட்டை இலையில் தான் நிற்கனும்

வைகோ : மனதுக்குள் அந்த ஆளாவது இதயத்தில் இடம்னு சொல்லுவார்.....இந்த அம்மா அதிமுகவாகவே நிற்கச் சொல்லுது......கடைசியில் அதிமுகவுக்கு பேசாமல் வட்டச் செயலாளர் ஆகிடுங்க...பார்த்து செய்வோம் என்கிற ரேஞ்சுக்கு சொல்லுதே.....ன்னு நினச்சு.....அதெல்லாம் சரிவராது.....மதிமுகவுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு, போராட்டம் அது இது என்று பலமுறை ஜெயிலுக்கு போய் இருக்கிறோம்.....பொடாவுலேயே ஒரு வருசத்துக்கும் மேலாக இருந்திருக்கிறேன்... ஒரு ஐஞ்சு சீட்டுக் கொடுத்தால் கவுரமாக இருக்கும்

ஜெ : மிஸ்டர் வைகோ உங்களை கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றியதற்காக கொஞ்சம் கீழே இறங்கி வரப்படாதா ?

வைகோ : நேற்று வந்த இராமதாசுக்கெல்லாம்....

ஜெ : தி இஸ் லிமிட்....அது என்னோட டெஸிசன்...அதப்பத்தி எல்லாம் பேசக்கூடாது.... மூணு சீட்டுத் தரலாமுனு இருந்தேன்....என்னை விமர்சித்தால இரண்டே சீட்டுதான்

வைகோ : :(மனதுக்குள் மொதலுக்கே மோசம் ஆகறத்துக்குள்ளே...)எதோ பார்த்து செய்யுங்க ....வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரைக்கும் வெயிட் பண்ணுவோம்... இல்லாட்டி

ஜெ : இல்லாட்டி என்ன மிஸ்டர் ?

வைகோ : இரண்டு சீட்டுலேயே நிற்போம்னு சொல்ல வந்தேன்... (நம்ம பொழப்பு வடிவேலு காமடிக் கணக்காக ஆகிவிட்டதேன்னு நெனச்சு மனசுக்குள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

9 கருத்துகள்:

TBCD சொன்னது…

வைகோ..! வைகோ !

(ஐயோ ! ஐயோ ! என்ற தொனியிலே படிக்கவும்)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் நாடாளுமன்றத்துல பேசாத, பேசத் தெரியாத ஒரே ஆள் வைகோதான் போலிருக்கு.
மத்த எல்லோரும் சூப்பர்.
வைகோவுக்கு சீட்டே கொடுக்காதீங்க.
மத்த எல்லோரும் ஜெயிச்சு போய் நாடாளுமன்றத்துல தூங்கிட்டு, கேண்ட்டீன்ல வடநாட்டுக்காரன் தோசா வடா போடுவான் திண்ணுட்டு வாங்க.

கிகிகிகிகி!

Unknown சொன்னது…

வைகோ சென்ற சட்டமன்ற தேர்தலில் (ராமதாஸ் வழிவோற்றி )எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இன்று அவரை இந்தநிலைக்கு தள்ளிவிட்டது.இப்போதும் அவர் சாமர்த்தியமான முடிவை எடுத்தாகவேண்டிய கட்டாயம், இலையேல் வருகின்ற சட்டமன்றதேர்தலில் மிகப்பெரிய சரிவை அவர் சந்திக்கவேண்டி வரும் . தனிமனித எதிப்பை இன்னமும் வளர்த்துகொண்டிறாமல் கட்சியில் நலனில் அக்கறை காட்டவேண்டியது அவசியம்.

Vishnu - விஷ்ணு சொன்னது…

நல்ல நகைச்சுவை பதிவு. இது எதோ கற்பனையாக தெரியவில்லை. ஒரு வேளை கோவியார் ஒளிந்து கொண்டு கேட்டிருப்பாரோ!

krishnaaleelai said...

//இப்போதும் அவர் சாமர்த்தியமான முடிவை எடுத்தாகவேண்டிய கட்டாயம், இலையேல் வருகின்ற சட்டமன்றதேர்தலில் மிகப்பெரிய சரிவை அவர் சந்திக்கவேண்டி வரும் . தனிமனித எதிப்பை இன்னமும் வளர்த்துகொண்டிறாமல் கட்சியில் நலனில் அக்கறை காட்டவேண்டியது அவசியம் //

இதுக்கு மேல அவர் என்ன முடிவு பண்ணனும், மக்களுடைய நம்பிக்கையை பெரும்பாலும் இழ்ந்துவிட்டார். அ.தி.மு.க போகும் முன்னரே அவர் சிந்தித்திருக்க வேண்டும் "கண் கேட்ட பிறகு என்ன சூரிய நமஸ்காரம்"

www.mdmkonline.com சொன்னது…

மதிமுக வையும் வைகோ அவர்களையும் பலவாறு விமர்சித்து செய்திகள் வருகிறதே ?

அவர்களுக்கெல்லாம் கீழே உள்ளதுதான் பதில்.

வைகோ தன் வாரிசுகளுக்காக கட்சியை நடத்தவில்லை.

வைகோ ,தனது சொந்தங்களுக்கும் பிள்ளய்களுக்கு மட்டுமே சிந்தனை அறிவு உள்ளது மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லவில்லை.

வைகோ ,அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை குவிக்கவில்லை.

கிடைத்த சந்தர்ப்பதை எல்லாம் பயப்படுத்தி மந்திரி ஆகத்தான் வேண்டும் என்று நினைக்கவில்லை.

வைகோ ,தனது சொந்த கட்சி கீழ்மட்டத் தலைவனையே ஆள் வைத்து கொள்ளவில்லை.

வைகோ ,பேருந்தையோ அல்லது பத்திரிகை அலுவலகத்தையோ எரித்து மூன்று பேரை கொன்றது போல் தனது தொண்டர்களை தயார்படுத்தவில்லை.

தனிமனித ஒழுக்கத்தை எப்பொழுதும் மீறியதில்லை.

வைகோ ,ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை எனக்கு பதவிதான் முக்கியம் என்று அவனை கொள்ள கூட்டு சதி செய்யவில்லை.

வைகோ, தன் பிள்ளையின் அமைச்சர் பதிவிக்காக ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை என்று கொள்கை வைக்கவில்லை.

ஈழத்தமிழனுக்காக உண்ணாவிரதம் இருந்து , அதே ஈழதமிலனை போர் கொண்டு அளிக்கும் கட்சியோடும் அதற்க்கு துணை நின்ற கட்சியோடும் கூட்டு சேரவில்லை.

www.mdmkonline.com

Thamizhan சொன்னது…

வைகோ செய்த துரோகம்--வாஜ்பேயியைத் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தியது.

அவர் செய்யுந்துரோகம்--தொண்டர்களின் ஒட்டு மொத்த மானத்தையும் அறுபது கோடிக்கு விற்று அடிமையாகிக் கிடப்பது.

priyamudanprabu சொன்னது…

வைகோ : இரண்டு சீட்டுலேயே நிற்போம்னு சொல்ல வந்தேன்... (நம்ம பொழப்பு வடிவேலு காமடிக் கணக்காக ஆகிவிட்டதேன்னு நெனச்சு மனசுக்குள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


ha ha ha ha

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்