பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2009

வி.காந்துடன் கற்பனைப் பேட்டி !

நிருபர் : வணக்கங்க கேப்டன்

வி.காந்த் : நான் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி

நிருபர் : ஐயோ கேப்டன்... நான் நீங்க யாரு கூட கூட்டணின்னு கேட்கவரல... இதையே சொல்லிக் கிட்டு இருந்தால் அப்பறம் ஆடுமாடுகள் எங்கள் கூட கூட்டணி அமைக்கவில்லையான்னு கேட்டு போர்கொடி தூக்கும்

வி.காந்த் : பின்னே என்ன கேட்க வந்த இங்க, திமுக அரசின் உளவு படை ஆளா நீ

நிருபர் : உளவும் இல்லை களவும் இல்லை, நான் உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்

வி.காந்த் : திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கொள்ளையடித்திருக்கிறார்கள்

நிருபர் : உங்களுக்கும் ஒரு சான்ஸ் வேணுங்கிறிங்க, அதைத்தான் எல்லா மேடையிலும் சொல்லி இருக்கிங்களே, அது பத்திக் கேட்கல, ஈழ தமிழர் நலனுக்காக தேர்தலை புறக்கணிப்பேன் என்று சொன்னிங்க, ஆனால் பெரிய கட்சிகளையெல்லாம் முந்திக்கிட்டு வேட்பாளர் அறிவிச்சு...தேர்தல் பிரச்சாரமெல்லாம் பண்ணுறிங்க

வி.காந்த் : நீ எந்திரி...நீ கருணாநிதியோட ஆளேத்தான்....இருந்தாலும் சொல்றத கேட்டுட்டுப் போ... நான் நிக்காமல் இருந்தால் எனக்கு வர்ற ஓட்டையெல்லாம் அள்ளிடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார், நீ அவரோட ஆள்

நிருபர் : நான் ப்ரஸ்காரனுங்க

வி.காந்த் : இன்னொன்னும் சொல்றேன், நான் புறக்கணிக்கிறேன் என்று சொன்னதை வச்சுதான் செல்வி ஜெயலலிதா ஈழ ஆதரவுக்கு உண்ணாவிரதம் இருந்தாங்க....சோ....என்னோட திட்டத்தையெல்லாம் காப்பி அடித்து அதிமுகவும், திமுகவும் செயல்படுத்து, ஈழமக்கள் ஆதரவு தமிழர்கள் எனக்குத்தான் ஓட்டுப்போடுறாங்க, கருணாநிதி ஒரு கருநாகப் பாம்பு, ஜெயலிதா ஒரு செந்தேள்

நிருபர் : வாரிசு அரசியலை வாய்க்கு வந்தப்படி திட்டினிங்க, இப்ப ஒங்க மச்சானையே வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக

வி.காந்த் : இந்த விஜயகாந்த் மொதலமச்சர் ஆன பிறகும் வாரிசு அரசியலை வளர்த்தால் வந்து கேளுங்க, என் மச்சான் என்றாலும் அவரும் இம் மண்ணின் மைந்தன், அவருக்கும் போட்டி இட எல்லா உரிமையும் இருக்கு

நிருபர் : என்ன இருந்தாலும் மக்கள் வாரிசு அரசியல் என்று தானே சொல்லுவாங்க

வி.காந்த் : என்னது மக்கள் கேட்பாங்களா ?: அவங்கக் கூடவும் தெய்வத்துக் கூடவும் தான் என் கூட்டணி, என்னோட மக்கள் என்கிட்ட எப்படி கேட்பாங்க, என்னோட தெய்வம் என்கிட்ட எப்படி கேக்கும்...நீ கருணாநிதியோட ஆளே தான்.... எந்திரு

நிருபர் : கடைசியாக ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.... முன்னால் முதல்வர்கள் ஊர அடிச்சு ஒலையில் போடுறதா சொல்ற நீங்க.... ஆட்சியில் இல்லாத போதே...மதுராந்தகம் பக்கம் பொறம்போக்கு நிலங்களை வளைச்சுப் போட்டு...மின்சார வேலி அமைச்சிருக்கிங்களாமே...அது பற்றி முன்பு பலமாக பேச்சு அடிபட்டதே

நிருபருக்கு சரமாரியாகவும், பலமாகவும் அடிபட்டது

15 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

கற்பனையா

கற்பனையென்ற கற்பனையா

TBCD சொன்னது…

நீங்களே சூ.வி சார்ப்பாக போன மாதிரி எழுதிட்டீங்களே..கலக்கல்

இந்தப் பதிவு தொடர்பான சுட்டி

TBCD சொன்னது…

இது தொடர்ச்சிக்கு..

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல காமெடி அண்ணே!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இதாங்க அரசியல்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நிருபர் : வணக்கங்க கேப்டன்//

Sorry நிருபர் : வணக்கங்க கப்டன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//மொதலமச்சர் //

ம்ம்ம் ரசித்தேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//நிருபருக்கு சரமாரியாகவும், பலமாகவும் அடிபட்டது//

நிருபர் மேலதான் தப்பு அவரு டாஸ்மாக்லேருந்து வரும்போது கேள்வி கேக்கலாமா?

ஆ.சுதா சொன்னது…

கற்பனைனு மொதல்லே சொல்லிட்டீங்க இல்லாடி ஒங்களையும் கருநாகநிதி ச்சி... ச்சி
(எழுத்துப்பிறழுது) கருணாநிதி அளுன்னு சொல்லி உங்க பதிவு வர்ர கனிணியையெல்லாம் கல்லெறிந்திருப்பங்க அவுங்க ஆளுக.
ஆமா..!!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ரசித்தேன்!

Jackiesekar சொன்னது…

: என்னது மக்கள் கேட்பாங்களா ?: அவங்கக் கூடவும் தெய்வத்துக் கூடவும் தான் என் கூட்டணி, என்னோட மக்கள் என்கிட்ட எப்படி கேட்பாங்க, என்னோட தெய்வம் என்கிட்ட எப்படி கேக்கும்...நீ கருணாநிதியோட ஆளே தான்.... எந்திரு//

செமகாமெடியான வரி தலை...
இன்னைக்கு வரைக்கும் அவரும் மாத்திதான் பேசிக்கிட்டு வர்ராரு

சி தயாளன் சொன்னது…

:-)

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

கோவி அண்ணாத்த நல்லாதான் எழுதி இருக்கிறிங்க; சத்தீஸ் எங்க கள்ளகுறிச்சியில் தான் நிக்கிறாரு!‍‍‍‍‍‍‍‍‍‍ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

கிரி சொன்னது…

//நிருபருக்கு சரமாரியாகவும், பலமாகவும் அடிபட்டது//

:-))))

suvanappiriyan சொன்னது…

ரசித்தேன்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்