பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2009

நாத்திகனின் கடவுள் பூனை !

நண்பர்கள் இருவர், ஒருவர் ஆத்திகர் மற்றொருவர் இறை மறுப்பாளர்

ஆத்திக நண்பர் : உங்க விஞ்ஞானத்தால் ஒரு உயிரை தோற்றுவிக்க முடியுமா ?

நாத்திகர் : விஞ்ஞானத்தால் உயிரை பெருக்க முடியும். ஒரு நெல்லை விதைத்தால் 10க்கும் மேற்பட்ட நெற்கதிர்களை பெற முடியும், விந்தையும் கருமுட்டையும் இணைத்து கருத்தறிக்க வைக்க முடியும்

ஆத்திகர் : எதுவும் இல்லாமல் நெல்லை உருவாக்க முடியுமா ?

நாத்திகர் : எதுவும் இல்லாமல் யார் நெல்லை உருவாக்கினார்கள் ?

ஆத்திகர் : கடவுள் உருவாக்கினார்

நாத்திகர் : நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா ?

ஆத்திகர் : கடவுள் படைக்காமல் நெல் என்ற ஒரு உணவு பொருள் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை

நாத்திகர் : செத்த எலியை கண்டு கொள்ளாமல் விடு, மறுநாள் அதன் மீது புழுக்கள் பெருகும், அதை கடவுளா கொண்டு வந்துவிடுகிறார் ?

ஆத்திகர் : புழுவையும் படைத்தது கடவுள் தான்

நாத்திகர் : நான் இந்த வெளையாட்டுக்கு வரவில்லை

ஆத்திகர் : இறைவனின் இருப்பை நீ ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்

நாத்திகர் :நான் இருக்குன்னு சொல்லி என்னுடைய கடவுள் பெயரைச் சொன்னால் என்னை விட்டுவிடுவியா ?

ஆத்திகர் : முதலில் ஒப்புக் கொள் அதன் பிறகு உன்னோட கடவுள் யாருன்னு சொல்லு

நாத்திகர் : ஆமாம் இருக்கு, என்னோட கடவுள் பெயர் பூனை

ஆத்திகர் :என்னது பூனையா ?

நாத்திகர் : யோவ் என்னைய்யா ? கடவுளை ஒப்புக் கொள் என்று சொன்னே, நானும் இருக்கு, எனக்கும் நம்பிக்கை இருக்கு, என்னோட கடவுள் பெயரைச் சொன்னால் பழிக்கிறியா ?

ஆத்திகர் : பூனையெல்லாம் கடவுளாக இருக்க முடியுமா ?

நாத்திகர் :அப்ப உன்னோட பிரச்சனை கடவுள் இல்லை, கடவுள் பெயரும் அதன் கட்டமைப்பும் தான்

ஆத்திகர் அது வந்து....கடவுள் என்றால் படைத்தல் காத்தல் அழித்தல் இதெல்லாம் செய்யனும் வேத புத்தகமெல்லாம் இருக்கனும்

நாத்திகர் : என்னோட பூனையும் இதெல்லாம் செய்யும், குட்டிப் போடும், வீட்டைக் காக்கும், எலியை அழிக்கும்....ம் வேத புத்தகம்........இனிமேல் தான் எழுதனும்

ஆத்திகர் : அது மிகச் சாதாரண வேலை, கடவுளின் தகுதிக்கு இதெல்லாம் போதாது, உன்னுடைய பூனை கடவுள் அல்ல

நாத்திகர் : என்னோட கடவுளை நான் எதிரே பார்க்கிறேன்....உன்னுடைய கடவுள் கற்பனை

ஆத்திகர் : பூனை எப்படி கடவுளாகும் ?

நாத்திகர் : எனக்கு பூனைதான் கடவுள்

ஆத்திகர் : நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்

நாத்திகர் : அப்ப என் கடவுளை நீ மறுக்கிறாய்

*****

தன்னுடைய நம்பிக்கைக்கும், கட்டமைபிற்க்கும் உட்பட்டத்தையே கடவுள் என்று நம்புகிறார்கள், உண்மையிலேயே இங்கு நாத்திகன் என்று குறிப்பிடுவது எதோ ஒரு மாற்று மதத்தைத் சேர்ந்தவரைத் தான். ஏனெனில் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே, மற்ற மதத்தினரின் கடவுள் பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். இந்த கூத்தில் நாத்திகனுக்கு கடவுள் நம்பிக்கை ஊட்ட முயல்வதும், கூடவே நாத்திகர்கள் பிறரை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றும் தூற்றுகிறார்கள்

39 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

எங்க கடவுள் கல் வடிவத்தில் இருக்கார். உங்க கடவுள் பூனை.

எங்க கடவுளை உங்க கடவுள் மேல தூக்கி போட்டா கடைசில எங்க கடவுள் தான் ஜெய்ப்பாரு.

என்னதான் சொன்னாலும் உங்க கடவுளை விட எங்க கடவுள் தான் பெருசு.

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
எங்க கடவுள் கல் வடிவத்தில் இருக்கார். உங்க கடவுள் பூனை.

எங்க கடவுளை உங்க கடவுள் மேல தூக்கி போட்டா கடைசில எங்க கடவுள் தான் ஜெய்ப்பாரு.

என்னதான் சொன்னாலும் உங்க கடவுளை விட எங்க கடவுள் தான் பெருசு.

:))
//

:))) அஹா..... எங்க கடவுள் கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும் :) அப்பறம் எங்கே உங்க கடவுளை (கல்லை) சரியாக எடுத்து போடுவிங்க ?

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே, மற்ற மதத்தினரின் கடவுள் பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். \\

இன்றைய சமூகத்தின் நிலையை
படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்...

மணிகண்டன் சொன்னது…

***
:))) அஹா..... எங்க கடவுள் கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும் :) அப்பறம் எங்கே உங்க கடவுளை (கல்லை) சரியாக எடுத்து போடுவிங்க ?
***

அதுக்குதான நாங்க கடவுள் கண்ணுல வைரக்கற்கள வைக்கறோம். சும்மா மின்னலு மாதிரி பளிச்சுன்னு வெளிச்சம் தெரியும் ! ஒரே போடு. கண்ணு மூடிகிட்டு இருக்கற பூனை மண்டைல.

ஓம்கார் :- ஆனாலும் இந்த அளவு நக்கல் ஓவரு !

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//எங்க கடவுளை உங்க கடவுள் மேல தூக்கி போட்டா கடைசில எங்க கடவுள் தான் ஜெய்ப்பாரு.

//

//எங்க கடவுள் கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும் :) அப்பறம் எங்கே உங்க கடவுளை (கல்லை) சரியாக எடுத்து போடுவிங்க ?
//

கோவி அண்ணனும், சாமியும் அடிக்கும் லூட்டி இஃகீ..இஃகீ..இஃகி

:)

குடுகுடுப்பை சொன்னது…

\\ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே, மற்ற மதத்தினரின் கடவுள் பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். \\
100 % உண்மை.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கடவுள்= கடம்+உள் கடம் என்பது மனம்; உள் என்பது உள்ளே ஆக மொத்தம் மனதினுள் உள்ள கடவுளை அங்கேயும் இங்கேயும் போட்டு உடைக்கிரேளே....

Unknown சொன்னது…

//நாத்திகர் : ஆமாம் இருக்கு, என்னோட கடவுள் பெயர் பூனை//
கோமாதா, பைரவர், விநாயகர், மச்சம், வராஹம், நரசிம்ஹம், ஹனுமன் போன்ற பெயர்களில் பல உருவங்களில் ஏற்கனவே தெய்வங்கள் இருக்கிறதே. இப்போது கூடுதலாக பூனையா என்றுதான் எண்ணத் தோன்றும். மற்றவர்களின் கடவுளை பழிக்கலாகாது என்பதால்தான் 'உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு' என்ற கட்டளை.

//இங்கு நாத்திகன் என்று குறிப்பிடுவது எதோ ஒரு மாற்று மதத்தைத் சேர்ந்தவரைத் தான். ஏனெனில் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே//
நாங்கள் சொல்லும் கடவுளுக்கு சில தகுதிகளும், அத்தகுதிகள் ஏன் அவசியம் என்பதற்கு, நேர்மையான மனது ஏற்றுக் கொள்ளும் தெளிவான காரணங்களும் இருக்கிறது. அத்தகுதிகளில் குறைவிருந்தால் அது கடவுளாக முடியாது. அத்தகுதிகளோடு உள்ளவனை கடவுளாக ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொண்டவன் என்ற பொருளில் 'முஃமீன்' அவற்றை நிராகரித்தால் நிராகரிப்பவன் என்ற பொருளில் 'காபிர்' அவ்வளவே.

அப்பாவி முரு சொன்னது…

//இங்கு நாத்திகன் என்று குறிப்பிடுவது எதோ ஒரு மாற்று மதத்தைத் சேர்ந்தவரைத் தான். ஏனெனில் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே//

ஆமாம். தமிழ்நாட்டில் பெரியார் தி.கழகத்திற்க்கு கடவுள் தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
\\ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே, மற்ற மதத்தினரின் கடவுள் பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். \\

இன்றைய சமூகத்தின் நிலையை
படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்...
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
***
:))) அஹா..... எங்க கடவுள் கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும் :) அப்பறம் எங்கே உங்க கடவுளை (கல்லை) சரியாக எடுத்து போடுவிங்க ?
***

அதுக்குதான நாங்க கடவுள் கண்ணுல வைரக்கற்கள வைக்கறோம். சும்மா மின்னலு மாதிரி பளிச்சுன்னு வெளிச்சம் தெரியும் ! ஒரே போடு. கண்ணு மூடிகிட்டு இருக்கற பூனை மண்டைல.//

ஆக... அடுத்தவங்க கடவுளை உடைத்தால் தப்பு இல்லையா ? என்ன கொடுமை. நீங்கள் மத நல்லிணக்கத்தை கெடுக்கிறீர்கள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
\\ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே, மற்ற மதத்தினரின் கடவுள் பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். \\
100 % உண்மை.
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// எம்.எம்.அப்துல்லா said...
//எங்க கடவுளை உங்க கடவுள் மேல தூக்கி போட்டா கடைசில எங்க கடவுள் தான் ஜெய்ப்பாரு.

//

//எங்க கடவுள் கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும் :) அப்பறம் எங்கே உங்க கடவுளை (கல்லை) சரியாக எடுத்து போடுவிங்க ?
//

கோவி அண்ணனும், சாமியும் அடிக்கும் லூட்டி இஃகீ..இஃகீ..இஃகி

:)
//

நீங்களும் வாங்க செத்து செத்து வெளையாடுவோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
கடவுள்= கடம்+உள் கடம் என்பது மனம்; உள் என்பது உள்ளே ஆக மொத்தம் மனதினுள் உள்ள கடவுளை அங்கேயும் இங்கேயும் போட்டு உடைக்கிரேளே....
//

பிள்ளையாரை உடைத்து கரைப்பது போல் தனக்குத் தானே உடைத்துக் கொள்பவர்களும் உண்டு. பாகிஸ்தான் மசூதிகளுக்குள் குண்டு வெடிப்பதைப் போல்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
//நாத்திகர் : ஆமாம் இருக்கு, என்னோட கடவுள் பெயர் பூனை//
கோமாதா, பைரவர், விநாயகர், மச்சம், வராஹம், நரசிம்ஹம், ஹனுமன் போன்ற பெயர்களில் பல உருவங்களில் ஏற்கனவே தெய்வங்கள் இருக்கிறதே. இப்போது கூடுதலாக பூனையா என்றுதான் எண்ணத் தோன்றும். மற்றவர்களின் கடவுளை பழிக்கலாகாது என்பதால்தான் 'உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு' என்ற கட்டளை.//

சன் மார்க்கம் சிலருக்கு, நான் வள்ளலாரைச் சொன்னேன். திமுகவை இல்லை :)

//நாங்கள் சொல்லும் கடவுளுக்கு சில தகுதிகளும், அத்தகுதிகள் ஏன் அவசியம் என்பதற்கு, நேர்மையான மனது ஏற்றுக் கொள்ளும் தெளிவான காரணங்களும் இருக்கிறது. அத்தகுதிகளில் குறைவிருந்தால் அது கடவுளாக முடியாது. அத்தகுதிகளோடு உள்ளவனை கடவுளாக ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொண்டவன் என்ற பொருளில் 'முஃமீன்' அவற்றை நிராகரித்தால் நிராகரிப்பவன் என்ற பொருளில் 'காபிர்' அவ்வளவே.//

இஸ்லாமியர் இறை கோட்பாடு ஓரளவு தெரியும் ஐயா. இங்கு குறிப்பிடுவதற்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...

ஆமாம். தமிழ்நாட்டில் பெரியார் தி.கழகத்திற்க்கு கடவுள் தானே.
//

அப்பாவி முரு, ஈசன், இறைவன் என்றால் தமிழில் தலைவன் என்ற பொருளும் உண்டு. நீங்கச் சொல்வதன் பொருள் அப்படியும் கூட இருக்கலாம்

துளசி கோபால் சொன்னது…

//பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். ...//

இப்படி எல்லாம் எங்களைப் பழிச்சா..... நான் சும்மா இருக்கமாட்டேன்.

இங்கெ வந்து பாருங்க ரெண்டு மனுசங்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறேன்னு......

இப்படிக்கு,
கோகி என்ற கோபாலகிருஷ்ணன்(மியாவ்)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

சரியாக ஒரு நிமிடம் முன்புதான் துளசி அம்மா கண்ணில் இந்த இடுகை பட்டுவிடக் கூடாதுன்னு நினைத்தேன். நான் பழிக்கவில்லை. ஸ்வாமி ஓம்கார் தான் கல்லைத்தூக்கிப் போடுவேன் என்று மிரட்டுகிறார் :)

துளசி கோபால் சொன்னது…

எகிப்தியர்களுக்கு உண்மையாவே பூனை ஒரு முக்கிய கடவுள்.

இரந்த பூனைகளுக்கு 'எம்பாம்' பண்ணி மம்மிஃபைடு செஞ்சுருவாங்க!!!!

ஸ்வாமி ஓம்கார், அந்தக் கல்லை நல்லாப் பார்க்கலை போல. அதுலேயே பூனை உருவம் செதுக்கி வச்சுருக்கு:-)))

துளசி கோபால் சொன்னது…

oops.....தட்டச்சுப்பிழை(-:

இரந்த என்பதை இறந்த என்று புரிஞ்சுக்கணும்:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
எகிப்தியர்களுக்கு உண்மையாவே பூனை ஒரு முக்கிய கடவுள்.
//

சரிதான், நான் இடுகையை எழுதிவிட்டு போடுவதற்கு படம் தேடிய போது உண்மையிலேயே பூனை எகிப்தியர்களின் கடவுள் என்று தெரிய வந்தது. இப்ப வழக்கில் இல்லை எனவே பாதகமில்லை என்று பயன்படுத்தினேன்

//இறந்த பூனைகளுக்கு 'எம்பாம்' பண்ணி மம்மிஃபைடு செஞ்சுருவாங்க!!!!
//

ஓ .... தகவலுக்கு நன்று !

//ஸ்வாமி ஓம்கார், அந்தக் கல்லை நல்லாப் பார்க்கலை போல. அதுலேயே பூனை உருவம் செதுக்கி வச்சுருக்கு:-)))
//

ஸ்வாமி இனிமேல் எங்கேயாவது பூனையைப் பார்த்தார் என்றால் அவருக்கு கொல வெறி வரும் போல :)

ஆ.சுதா சொன்னது…

நல்ல செய்தி
கடவுளை அவரவர் சமூகத்திர்கேற்ப
வடிவமைத்துக் கொண்ட நாம்
நாம் வடிவமைத்து வைத்திர்பதற்கு மாறானதை ஏற்பது தான் இங்கு
பிரச்சனையே (எல்லாவற்றிலும் சொல்லவது ஒன்றுதான் 'அனபுமட்டும்தான் அதை இங்கு மறந்து விடுகின்றோம்)
நல்லா சொல்லியிருக்கீங்க

வேடிக்கை மனிதன் சொன்னது…

நாத்திகனுக்கும் கடவுள் (பூனை உருவத்தில்)இருக்கிறார் என்று ஒப்புக்கொண்டதர்க்கு பெரியமனசுவேனும்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//துளசி கோபால் 8:34 AM, March 31, 2009

//பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். ...//

இப்படி எல்லாம் எங்களைப் பழிச்சா..... நான் சும்மா இருக்கமாட்டேன்.

இங்கெ வந்து பாருங்க ரெண்டு மனுசங்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறேன்னு......

இப்படிக்கு,
கோகி என்ற கோபாலகிருஷ்ணன்(மியாவ்)//

இஃகீ..இஃகீ..இஃகி

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
எங்க கடவுள் கல் வடிவத்தில் இருக்கார். உங்க கடவுள் பூனை.

எங்க கடவுளை உங்க கடவுள் மேல தூக்கி போட்டா கடைசில எங்க கடவுள் தான் ஜெய்ப்பாரு.

என்னதான் சொன்னாலும் உங்க கடவுளை விட எங்க கடவுள் தான் பெருசு.

:))
//

:))) அஹா..... எங்க கடவுள் கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும் :) அப்பறம் எங்கே உங்க கடவுளை (கல்லை) சரியாக எடுத்து போடுவிங்க ?//

இஃகீ..இஃகீ..இஃகி

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அப்பாவி முரு said...

//இங்கு நாத்திகன் என்று குறிப்பிடுவது எதோ ஒரு மாற்று மதத்தைத் சேர்ந்தவரைத் தான். ஏனெனில் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே//

ஆமாம். தமிழ்நாட்டில் பெரியார் தி.கழகத்திற்க்கு கடவுள் தானே.//

நான் பெரியாரின் தொண்டன் என்று யாரவது சொன்னால் பெரியார் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்.
பெரியாரின் கருத்தை 100 விழுக்காடு ஏற்றுக் கொண்டேன் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு பெரியார் கடவுள் போன்றவர்கள். அதுவே பெரியார் கொள்கைக்கு எதிரானது. தனிமனித துதிபாடலும் கூட.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இந்த கூத்தில் நாத்திகனுக்கு கடவுள் நம்பிக்கை ஊட்ட முயல்வதும், கூடவே நாத்திகர்கள் பிறரை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றும் தூற்றுகிறார்கள்//

இஃகீ..இஃகீ..இஃகி

வால்பையன் சொன்னது…

ஹா ஹா ஹா
நல்ல தமாசா இருந்தது!

வாமு.கோமுவின் கடவுளை கொன்றவன் கவிதை ஞாபகத்திற்கு வந்தது!

சி தயாளன் சொன்னது…

ஹஹஹ...முதலிரு கருத்துரைகளையும் ரசித்தேன்...

மனுநீதி சொன்னது…

//நாத்திகர் : எனக்கு பூனைதான் கடவுள்

ஆத்திகர் : நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்

நாத்திகர் : அப்ப என் கடவுளை நீ மறுக்கிறாய்//

கோவி.கண்ணன் சார். இது டாப்பு..

அருமையா எழுதியிருக்கீங்க

பெயரில்லா சொன்னது…

//நாத்திகர் :அப்ப உன்னோட பிரச்சனை கடவுள் இல்லை, கடவுள் பெயரும் அதன் கட்டமைப்பும் தான்//

தற்போதைய நிலையிலுள்ள அடிப்படை உண்மை

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
//இந்த கூத்தில் நாத்திகனுக்கு கடவுள் நம்பிக்கை ஊட்ட முயல்வதும், கூடவே நாத்திகர்கள் பிறரை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றும் தூற்றுகிறார்கள்//

இஃகீ..இஃகீ..இஃகி
//

ஹிஹி ன்னு போட்டால் தமிழ் சிரிப்பு இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
ஹா ஹா ஹா
நல்ல தமாசா இருந்தது!

வாமு.கோமுவின் கடவுளை கொன்றவன் கவிதை ஞாபகத்திற்கு வந்தது!
//

பாராட்டுக்கு நன்றி வாலரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் தகுதியானவனா? said...
நாத்திகனுக்கும் கடவுள் (பூனை உருவத்தில்)இருக்கிறார் என்று ஒப்புக்கொண்டதர்க்கு பெரியமனசுவேனும்
//

:) பின்குறிப்பைப் படிக்கவில்லையோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.முத்துராமலிங்கம் said...
நல்ல செய்தி
கடவுளை அவரவர் சமூகத்திர்கேற்ப
வடிவமைத்துக் கொண்ட நாம்
நாம் வடிவமைத்து வைத்திர்பதற்கு மாறானதை ஏற்பது தான் இங்கு
பிரச்சனையே (எல்லாவற்றிலும் சொல்லவது ஒன்றுதான் 'அனபுமட்டும்தான் அதை இங்கு மறந்து விடுகின்றோம்)
நல்லா சொல்லியிருக்கீங்க
//

சரியாகச் சொல்லி இருக்கிங்க, கடவுள் கொள்கை, நில அமைப்பிற்கு, பண்பாட்டிற்கும் ஏற்றவகையில் உருவாக்கிக் கொண்டவை, அதைப் பொதுப்படுத்த முயல்வதால்தான் அவ்வளவு பிரச்சனையும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
ஹஹஹ...முதலிரு கருத்துரைகளையும் ரசித்தேன்...
//

’டொன்’ லீ நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//உள்ளத்தில் இருந்து.. said...
//நாத்திகர் : எனக்கு பூனைதான் கடவுள்

ஆத்திகர் : நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்

நாத்திகர் : அப்ப என் கடவுளை நீ மறுக்கிறாய்//

கோவி.கண்ணன் சார். இது டாப்பு..

அருமையா எழுதியிருக்கீங்க
//

உள்ளத்தில் இருந்து பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கங்கை கொண்டான் said...
//நாத்திகர் :அப்ப உன்னோட பிரச்சனை கடவுள் இல்லை, கடவுள் பெயரும் அதன் கட்டமைப்பும் தான்//

தற்போதைய நிலையிலுள்ள அடிப்படை உண்மை
//

கங்கை கொண்டான் நன்றி !

Kesavan சொன்னது…

ithu kathayaga theriyavillai - matha thvesham than therigirathu. matrapadi ithil ondrum illai

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்