பின்பற்றுபவர்கள்

23 மார்ச், 2009

ஹிந்து மதத்தின் வீழ்ச்சி ஏன் !

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம் (பார்பனர்களின் சமயம்), பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். பெளத்தன் சமணனை சாடுவதும், இருவருவரும் ஒருவருக்கொருவர் சாடுவதும், சேர்ந்து வைதீக சமயத்தைச் சாடுவதுமாக இருந்தனர்.

இந்திய புறச் சமயத்தினரான வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு முன்பே வந்த லோடி வம்சமும், கஜினி முகம்மதுவும் இங்கே இந்தியாவில் நிலவிய சமயங்கள் அனைத்தையும் பொதுவான ஒன்றாகவே பார்த்தனர், சிந்து நதிக்கு கிழக்கே இருப்பதால் 'இந்தியா' என்று இங்கு நிலவிய சமயங்கள் அனைத்திற்கும் பொதுவான பேராக 'ஹிந்து' சமயம் என்றும் பெயரிட்டனர். அந்த பெயர்கள் அவர்களுக்குள் அழைத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டதே அன்றி, பாரத நாட்டினரான நீங்கள் இன்று முதல் இந்தியராகவும், இந்துக்களாகவும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ஆணை பிறப்பிக்கவில்லை. அதாவது சைனா நாட்டினரை சீனர்கள் என்கிறோம், ஒரு சீனரிடம் சென்று நாம் அவர்களை 'சீனர்கள்' என்று சொல்வதைச் சொன்னால் தான் அவனுக்கு அப்படி அழைக்கப்படுவதே தெரியும். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களை 'சீனர்கள்' என்று அழைக்கிறார்கள் என்பது சீனருக்கு தெரியாது. இப்படி புறசமயத்தினர் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட ஒன்றை, விடுதலை போராட்ட்ட காலத்தில் இந்திய சமயத்தினரை ஒன்று திரட்ட இங்குள்ளவர்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது தான் 'இந்தியா', ஹிந்து என்ற சொல் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை மக்களின் முகவரிகள் எதோ ஒரு இந்திய சமயம், பாரத தேசத்தை / நாட்டை சேர்ந்தவன் என்பதாகத் தான் இருந்தது. கடவுள் கொள்கை என்றால் அதை மதம் என்றே அழைத்து பழகிய புறசமயத்தினர் (வெளிநாட்டினர்) பாரத சமயங்களை மதம் என்ற ஒற்றைச் சொல்லுடன் 'ஹிந்து' என்ற பெயருடன் அழைத்தனர், அதுவே 'ஹிந்து' மதம் ஆகிற்று.

இந்தியர்களை ஒருங்கிணைக்கும் சொல் அல்லவா ? என்று நினைக்கலாம். ஆனால் இந்தியா என்பது பல்வேறு கலச்சார நம்பிக்கைகள் கொண்டது, அவரவர் நம்பிக்கையே அவரவர்களுக்கு உயர்வானது, சைவ - வைணவ சண்டைகள் இன்றும் தொடர்வதையும், யானைக்கு வடகலை நாமமா ? தென்கலை நாமமா ? என்கிற வழக்கு இன்று முடிந்தபாடில்லை என்றே சொல்கிறார்கள். இப்படி இருக்கையில் 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லால் யாருக்கு லாபம் ? வேற்றுமையில் ஒற்றுமை காணப்பயன்படுகிறதா ? அப்படி எல்லாம் இருப்பது போல் தெரியவில்லை. இன்றும் வைணவர்கள் சிவனை பொருட்டாக நினைப்பது இல்லை, சைவ சமயத்தினரும் அப்படியே. ஆதிசங்கரின் அறுசமயமும் கொள்கையாக ஏற்கப்பட்டதே அன்றி, அதைத் தவிர்த்து அவை யாதொரு வளர்ச்சியும் பெறவில்லை, ஏனெனில் அவை வலிந்து புகுத்தப்பட்ட ஒன்று. அதாவது சமயங்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பது, அல்லது அந்த புள்ளியில் இருந்து பிரிப்பது, அப்படி பிரித்து வழங்க முற்பட்டதே ஆதிசங்கரின் அறு சமயம், ஆனால் அதன் பிறகு இராமனுஜர் போன்றவர் அவருக்கென கொள்கைகள் வைத்திருந்தால் ஆதிசங்கரரின் அறுசமயம் வளர்ச்சியடையவில்லை. எதுக்கு இதைச் சொன்னேன் என்றால், ஒற்றைத் தன்மையில் அடைக்க முயலும் எதுவுமே வெற்றிபெறுவதில்லை என்பதற்காக சுட்டினேன்.

மேலே சொன்னது போல் சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவில் இருந்த சமயங்களை ஒருங்கிணைக்க சமயவாதிகளால் புறசமயத்தினர் கொடுத்த 'ஹிந்து' இந்தியா பெயர்கள் பயன்படுத்த முயற்சி நடந்தது, ஆனால் அவை இன்றும் கூட வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. நமக்கு ஆவணங்களில் 'ஹிந்து' இந்தியா என்று போட்டுக் கொள்கிறோம், கொடுக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் தமிழனை இந்தியனாக நினைக்கும் கர்நாடகத்தவர் இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மொழிகளால் இந்தியா வேறுபட்டது. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் 'புண்ணாக்கு' விற்பனெல்லாம் தொழில் அதிபர் என்கிறான் என்பது போல், கார்ப்ரேட் சாமியார்களாலும், போலி சாமியார்களாலும் 'ஹிந்து' என்ற சொல் ஆன்மிக விற்பனையின் லேபிளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது பொண்ட்டியின் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடியவனெல்லாம் தன்னை 'ஹிந்து' சாமியார் என்று அழைத்துக் கொள்வதால் 'ஹிந்து' சமயத்தின் பெயர் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. அதுமட்டுமில்லாமல் வாயில் வந்ததையெல்லாம் உளறி கொட்டி அதை சமய இலக்கியம் என்றும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளையும் புராணங்களையெல்லாம் 'ஹிந்து' என்ற பெயரில் சேர்த்துக் கொள்வதால், அவற்றிக்கு விளக்கமும் சப்பைக் கட்டுகளையும் செயயும் வீன் வேலைக்கு ஆன்மீக வாதிகள் தள்ளப்படுகின்ரனர். மூட நம்பிக்கைகளுக்கு
முட்டுக் கொடுப்பதே வேலையாகப் போனால் சமயங்களையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் ஊட்டுவது எங்ஙனம் ? இராமகிருஷ்ணர், விவேகநந்தர் போன்ற எத்தனையோ மகான்கள் தோன்றினாலும், புற்றீசல்கள் போல் போலிசாமியார்களும் தோன்றி சமய நம்பிக்கைகளை சீர்குலைப்பதால் உண்மையான ஆத்திகருக்குக் கூட சமய நம்பிக்கைள் மீது சந்தேகங்கள் எழும். இவை அனைத்திற்கும் காரணமே தேவைக்கு மிகுதியாக கட்டுக் கதைகளை அவைகள் 'ஹிந்து' மதததைப் போற்றுகிறது என்ற பெயரில் உள்வாங்கியதே.

'ஹிந்து' மதம் என்கிற ஒற்றைச் சொல் ஒருங்கிணைப்பால் இந்திய சமயங்கள் வீழ்ந்ததேயன்றி எழவேயில்லை. பிரித்தாழும் சூழ்ச்சி போல் இவை சேர்த்தறியும் சூழ்ச்சி போலாகும். இந்திய சமயங்கள் அனைத்தும் சேர்ந்து ஒவ்வொன்றின் முரண்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது தான் ஹிந்து மதம் என்றும் அவனே 'ஹிந்து' என்ற கட்டாயத்துக்கு இட்டுச் சென்றுவிட்டது. எவனோ ஒருவன் நரபலி இடுவதை 'இந்து சமய நம்பிகை இல்லை' என்று நம்மால் துணிந்து சொல்ல முடியவில்லையே, இப்படி 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லில் நம்மை நாமே அழைத்துக் கொள்ளாமல் இருந்தால் 'நரபலி இடும் பழக்கம்' சைவ, வைணவத்தில் இல்லை என்று சொல்ல முடியும். இந்திய சமயத்தினர் தங்களின் சமயப் பெயரை விட்டு தம்மை 'ஹிந்து' என்று அழைத்துக் கொள்வது முட்டாள் தனமானது. அப்படி அழைத்துக் கொள்வது இந்திய சமய, தத்துவ நம்பிக்கைளை வீழ்ச்சிக்கே அழைத்துச் செல்லும், அப்படி நடந்ததால் தான் தீண்டாமையால் தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பலர் இந்திய சமய நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இன்றி புற சமயங்களை நாடி இருக்கின்றனர். பகுத்தறிவு வாதிகளும் இந்திய சமயங்களின் நம்பிகை எது ? மூட நம்பிகை எது ? என்று அறியாமல் ஒட்டுமொத்தமாக 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லைக் குறிவைத்தே செயல்படுகின்றனர். ஹிந்துத்துவா வாதிகளும் அரசியல் நோக்கிற்காக 'ஹிந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் மேற்கொண்டு என்ன சொல்ல ? மீண்டும் இடுகைத் தலைப்பு.

11 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

சாட்சிய ஆவணங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

anbarasan சொன்னது…

//ஆ.ஞானசேகரன் 6:00 AM, March 23, 2009 சாட்சிய ஆவணங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்...//

பிறகு... ‘ஹிந்து...’ என்ற பெயர் வந்தது எப்படி? நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.
------------------------------------------------------------------------------
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

http://idhuthanunmai.blogspot.com/2008/02/91-100.html

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 91 - 100.

பிறகு... ‘ஹிந்து...’ என்ற பெயர் வந்தது எப்படி? நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

ஆமாம்... எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால்தான் அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. அதாவது முகம்மதிய சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.

அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால் ‘ஒற்றுமை’ என்னும் வளம் மட்டும் வறண்டுகிடந்தது.அதாவது... மொகலாயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள்... தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர்.

சிற்றரசர்கள் என்ற ரீதியில் ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர். மக்களோ... ப்ராம்மண, சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.

பார்த்தான் வெள்ளைக்காரன், ‘என்னடா இது?’ என கேட்டான். ‘இதுதான் எங்கள் ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?’ என குரல் எழுந்தது.சரி... இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது.

இந்த தேஸத்தில் இவ்வளவு வளங்கள் இருக்கிறது... என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம், குட்டிகளோடு இங்கே வந்தான்.

அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர். நமது தேஸத்தில் புரையோடிப் போயிருந்த ‘ஜாதிதத்வ’ நடைமுறை... அதாவது ‘ப்ராம்மணனே தெய்வம்’ நசூத்ரா மதிந்தத்யாது... (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது) என்ற நிலைமைகளைப் பார்த்து...ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான்.

அவற்றை சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது பாருங்கள்... என அந்த புஸ்தகங்களைக் காட்டினான். ‘Don’t follow, religion of brhamin, we give you alternative’ என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.

இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க... இந்த ஒட்டுமொத்த மக்களை எப்படி அழைப்பது? என யோசித்தான் வெள்ளைக்காரன். அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள், அப்படியென்றால் இவர்களை ‘சிந்தூ’ எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு வந்தான். அதாவது... பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதலில் எப்படிக்குறிப்பிட்டான் என்றால் ‘Zindoo...’-(தொடரும்)

பகுதி - 96
நமது மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம்.

சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான்

வெள்ளைக்காரன்.இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library.

ரகுநாதராவ், என்னைவிட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாகஇருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்.அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்...

கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கேதான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன்.

முதலில் நம்மைப்பற்றி Zindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான். அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.

இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது.

ஆக... இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால்... இது Christian சூட்டிய பெயர். நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த... கண்டுகூட பிடிக்கவில்லை.

தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்... எல்லாவற்றையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நாம் அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை. சூட்டிக் கொள்ள முடியாது.

ஏனென்றால்...நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள். நான் சொன்னேனே.... ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம் தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று கேட்டிருந்தேன் அல்லவா? இப்போது நீங்களே சொல்லுங்கள்.

எது ஹிந்து மதம்...?

வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது.
விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. இடையிலே சமணம் தோன்றியது.

வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.

இவையெல்லாம் தவிர்த்து...நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி என.. சொல்லிக் கொண்டே போகலாம்.

அதாவது இவ்வளவு... வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில் வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக ‘இந்து’ என்று அழைத்தான்.

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. என்ன செய்வோம்?

பையனாக இருந்தால் தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம். அல்லது குல தெய்வத்தின் பேரை சூட்டுவோம்.
ஆனால்... நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத... எவனோ ஒருத்தன்... நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை வைத்துக் கூப்பிட்டதால்.... அந்த ‘சத்தத்தையே’ உங்கள் குழந்தைக்குப் பெயராக வைப்பீர்களா?...

அப்படித்தான் வைத்திருக்கிறோம். நம் மதம் என்னும் குழந்தைக்கு!சரி... ‘ஹிந்து’ என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்துவிட்டோம்.
-----------------------------------------------------------------------
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

http://idhuthanunmai.blogspot.com/2008/02/91-100.html

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 91 - 100.

priyamudanprabu சொன்னது…

///
இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, ///

இதைத்தான் அன்னிக்கு நான்ன் உங்களிடம் "இந்தியர்களுக்கு என்று மதம் உண்டா"என்று கேட்டேன்

ஆ.சுதா சொன்னது…

காலையிலே ஒரு நல்ல பதிவை படித்திருக்கின்றேன் நன்றி

நையாண்டி நைனா சொன்னது…

மிக அருமையாக இருந்தது.

தமிழர் நேசன் சொன்னது…

காலத்தின் ஓடத்தில் நாம் எவ்வாறு மருவியிருக்கிறோம் என்பதை எளிமையாக புரியவைக்கும் பதிவு நன்றி. வாழ்த்துக்கள்.

sarul சொன்னது…

மிக நல்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை, நன்றி ,
உங்களுடைய பணி தொடரட்டும் ,

பெயரில்லா சொன்னது…

இந்திய நாட்டில் வசிக்கும் அனைவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் நிறைந்த கட்டுரை.

வாழ்த்துகள்

Test சொன்னது…

வேலை நிமித்தம் உடனடியாக பின்னோட்டம் இட இயலவில்லை :)

//ஹிந்து மதத்தின் வீழ்ச்சி ஏன் !//

சிறந்த ஆராய்ச்சி கட்டுரை, ஆனால் "வீழ்ச்சி" என்ற சொல்லிருக்கு பதிலாக மற்ற மதத்தினருடேன் பொருளாதார ரீதியாக போட்டி போட இயலவில்லை என்று வேண்டுமானால் ஏற்று கொள்ளலாம். காரணம் ஹிந்து மதம் மற்ற மதத்தினரை ஹிந்து மதத்திற்கு மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படி செய்யவும் செய்யாது.

//கார்ப்ரேட் சாமியார்களாலும், போலி சாமியார்களாலும் 'ஹிந்து' என்ற சொல் ஆன்மிக விற்பனையின் லேபிளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது பொண்ட்டியின் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடியவனெல்லாம் தன்னை 'ஹிந்து' சாமியார் என்று அழைத்துக் கொள்வதால் 'ஹிந்து' சமயத்தின் பெயர் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க//

ஒரு சில புட்ரிசல்கள் எங்கும்/ எல்லா மதத்திலும் இருக்கும். அதனால் ஒரேடியாக சொல்லிவிட முடியாது.

//ஹிந்துத்துவா வாதிகளும் அரசியல் நோக்கிற்காக 'ஹிந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் மேற்கொண்டு என்ன சொல்ல //

இது தேர்தல் ஸ்டண்ட். எந்த ஒரு தனி மனிதனுக்கும் தன்னுடைய மதம்/இனம்/மொழி/ஜாதி ஆகியவற்றை குறித்து மற்றவன் கருத்துரைக்கும் பொழுதுதான் "தான்" எந்த மதம்/இனம்/மொழி/ஜாதி என்பதே நினைவில் வரும். அதற்கு முன்பு வரை தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருப்பான்.

ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை அறிந்து பல வெளிநாட்டினர் மதுரையிலும், சிதம்பரத்திலும் ஹிந்துவாக மதமாற்றி கொண்டனர். ( இது வரலாறு அல்ல, இன்றைய நிகழ்வு )

மேலும் பல ஹிந்துக்களுக்கு தங்களின் நிலைபாட்டை கூறுவதற்கு சற்று சங்கோஜ நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு சான்று இந்த பதிவுக்கு வந்த பின்னோட்டங்களும் (தற்போது 8) சரவண பவன் பதிவுக்கு வந்த பின்னோட்டங்களும் (தற்போது 36 ) :)

அன்பே சிவம்

YaSham சொன்னது…

ஹிந்த் என்றச் சொல் ஆங்கிலேயர்கலால் வந்தது கிடையாது,அது அரேபியர்கள் இட்டப் பெயர் என்பதை தெரியப்படுத்துகிரேன்,ஏனென்றால் அல் ஹிந்த் என்ற அரபிச் சொல் பசுமையை குறிக்கிறது-இன்றும் கூட அரபு தேசத்துக்குச் சென்றவர்களுக்குத் தெரியும் அவர்கள் இந்தியர்கலை எப்படி அழைக்கிறார்கள் என்று அவர்கள் எந்த மதத்தினர்களாக இருந்தாலும் (முஸ்லீம்களாக இருந்தாலும் ) ஹிந்தி என்றே அழைப்பதைக்காணமுடியும்

Unknown சொன்னது…

sir,
hindu mathathuku mara athula enna erukku, silai,sand,stone varaehavathu erukka.

justine

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்