பின்பற்றுபவர்கள்

24 டிசம்பர், 2008

2009 புத்தாண்டு மகிழ்ச்சி கொடுக்கவில்லை :(

அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளியல் தாக்கம், உலகெங்கிலும் உற்பத்திகளின் தேக்கம், உற்பத்தி குறைப்பு என்று சென்று கொண்டு இருக்கிறது. உற்பத்தி குறைப்பு, செலவு கட்டுப்பாடு என்ற பெயரில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய சிங்கை ஆங்கில நாளிதழில் பல்வேறு நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கைப் பற்றி செய்தி போட்டு இருந்தனர்.

அன்றாட செய்திகளில் நேற்று எந்த நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற செய்திகள் இடம் பிடித்து இருக்கின்றன.

வழக்கமாக டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் கொடுக்கப்படும் ஆண்டு ஊக்கத்தொகையை (போனஸ்) முன்னிட்டு, சில நிறுவனங்களில் அதற்கு முன்பே பணியாட்களை வேலையில் இருந்து எடுத்துவிடுகிறார்கள்.

இந்த ஆண்டு நிறுவனங்களின் செலவீனக் கட்டுப்பாடுகள்,

1. ஊதியம் இல்லாத விடுப்பின் நீட்டிப்பு ( Extended Unpaid Holiday)
2. ஆண்டு இறுதியில் தற்காலிக மூடல் ( Year End Shutdown)
3. ஊதிய குறைப்பு (Salary Cuts)
4. வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டும் வேலை (Four-Day Work Week)
5. கட்டாய விடுமுறை (Valuntary Unpaid Vacation time)



பல நிறுவனங்களில் ஆண்டு விடுப்பை ( Paid Leave ) உற்பத்தி குறைந்த இந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளச் சொல்லி கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை நிறுவனம் சார்பில் ஓர் நாள் நடத்தப்படும் இரவு உணவு கேளிக்கைகள் இந்த ஆண்டுகள் இல்லை.

சிங்கைப் போன்ற நாடுகளில் ஒருமாதம் ஊதியம் இல்லை என்றால் வாழ்க்கையை ஓட்டுவதே கடினம் தான். மாதந்திர கடன்கள் நெருக்கும், அதாவது வீட்டுக்கடன், வாகனக் கடன், கடன் அட்டை மாதச் சந்தா இன்னும் பலப் பல மாதந்திர செலவீனங்களில் தான் வரும்.

இதில் பண்டிகை நாட்களாக கிறிஸ்மஸ் மற்றும் சீனப் புத்தாண்டுகள் அடுத்து அடுத்துவருவதால்... ஊக்கத் தொகை (போனஸ்) கொடுக்கவில்லை என்றால் கொண்டாட்டம் திண்டாட்டம் ஆகிவிடும். ஏற்கனவே நிறுவனங்கள் தொடங்கிவிட்ட பல்வேறு நிதி குறைப்பு நடவெடிக்கையால் எவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. வரப்போகும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் மனநிலையில் எவரும் இல்லை, அடுத்த ஆண்டாவது நன்றாக இருக்குமா என்ற ஆசையை ஆண்டு தொடக்கத்தின் நிலையே தடுத்துவிட்டது.

20 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வருத்தம் தான்.

நட்புடன் ஜமால் சொன்னது…

இந்த நிலைக்கு காரணம் யாவை?

இதைப்பற்றி எழுதுங்கள்.

சின்னப் பையன் சொன்னது…

கஷ்டம்தான்..

மதிபாலா சொன்னது…

இந்த நிலைக்கு காரணம் யாவை?

இதைப்பற்றி எழுதுங்கள்.//

ஆமாம் கண்ணன் அண்ணா,

எழுதுங்களேன்.

SP.VR. SUBBIAH சொன்னது…

////தொடங்கிவிட்ட பல்வேறு நிதி குறைப்பு நடவெடிக்கையால் எவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. வரப்போகும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் மனநிலையில் எவரும் இல்லை, அடுத்த ஆண்டாவது நன்றாக இருக்குமா என்ற ஆசையை ஆண்டு தொடக்கத்தின் நிலையே தடுத்துவிட்டது.//////

எதற்குக் கவலை? நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்!
காலன் (ம்) (!) துணையிருப்பான்.
நம்பிக்கை இல்லாதவனை காலன் முதுகில் குத்துவான்!
குத்து வாங்கினாலும் நெஞ்சில் வாங்குவோம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

எதற்குக் கவலை? நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்!
காலன் (ம்) (!) துணையிருப்பான்.
நம்பிக்கை இல்லாதவனை காலன் முதுகில் குத்துவான்!
குத்து வாங்கினாலும் நெஞ்சில் வாங்குவோம்!
//

நன்றி ஐயா,

என்னோட ஜாதகத்துக்கு "சுக ஜீவனம்" என்று எங்கப்பா சொல்லுவார், இதுவரை அப்படியே. தற்பொழுதும் எனக்கு எதும் பிரச்சனைகள் இல்லை. நண்பர்கள் தெரிவிக்கும் தகவல்களைத்தான் இங்கு எழுதியுள்ளேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரை ஜமால் said...
இந்த நிலைக்கு காரணம் யாவை?

இதைப்பற்றி எழுதுங்கள்.
//
//மதிபாலா said...
இந்த நிலைக்கு காரணம் யாவை?

இதைப்பற்றி எழுதுங்கள்.//

ஆமாம் கண்ணன் அண்ணா,

எழுதுங்களேன்.
//

ஜமால் மற்றும் மதிபாலா, அதற்குக் காரணம் அமெரிக்க நிதிநிறுவனங்களின் பங்கு சந்தை மோசடிகள் தான், அதன் விளைவுகள் உலகமயமாக்களால் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்கிறது

ராவணன் சொன்னது…

"நெலம சரியில்ல போலும்" போறபோக்கப் பாத்தா சிங்கப்பூரையே இழுத்துமூடிவிடுவார்களோ?

காரூரன் சொன்னது…

IT தொழில் நுட்பமும், மருத்துவத்துறையும் வாழும் என்கின்றார்கள்.

Poornima Saravana kumar சொன்னது…

// காரூரன் said...
IT தொழில் நுட்பமும், மருத்துவத்துறையும் வாழும் என்கின்றார்கள்
//

இப்போ IT பீல்டுல என்ன நடந்திட்டு இருக்குன்னு தெரியாத உங்களுக்கு?

Poornima Saravana kumar சொன்னது…

//2009 புத்தாண்டு மகிழ்ச்சி கொடுக்கவில்லை :( //

வழிமொழிகிறேன்

வடுவூர் குமார் சொன்னது…

அங்கேயும் ஆரம்பித்தாகிவிட்டதா? ஆனால் சிங்கை டாலரின் மதிப்பு மாத்திரம் ஏறிக்கொண்டு வருவது தான் புரியவில்லை.
இங்கும் பல தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்து ஊருக்கு போக தயாராகிவருகிறார்களாம்.

narsim சொன்னது…

பிப்ரவரி 2009ல் ஏற்படப்போகும் ஒரு மிக முக்கிய பொருளாதார மாற்றத்தினால் இந்த நிலை சீரடையும்.. அடைய வேண்டும்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வால்பையன் சொன்னது…

ஆம், எல்லோருடய டவுசரும் உருவபட்டது உண்மை தான்

பாலு மணிமாறன் சொன்னது…

சிங்கப்பூரின் பன்னாட்டு நிறுவனங்கள் ஊதியக் குறைப்பு செய்ய அரசே ஊக்கமளிக்கலாம் என்று ஒரு பேச்சிருக்கிறது. வேலைகளைத் தக்க வைப்பது மட்டுமே இங்கு பிரதான கவலையாகி இருக்கிறது.

சின்ன, சிறப்பான பதிவு.

மீரா(முத்து) சொன்னது…

ஆள் குறைப்போ, ஆடுகுறைப்போ.. எல்லாத்துக்கும் காரணம் அவந்தான்யா...(அமெரிக்கா)

பேரிக்கா வித்தாவது இங்கு பிழைத்துக்கொள்ளலாம்
அமெரிக்காவிலும்,சிங்கப்பூரிலும் இருந்துக்கொண்டு நம்ம ஆளுங்க சம்பளம் பற்றாக்குறையால் பாதிக்கபடுவதை படிக்கும்போது மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-((((

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இது உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு. முதலில் பதிக்கப் படுவது வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மின்னணு நிறுவனங்கள், அதனை ஒட்டி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள். இதன் தாக்கம் மற்ற துறையைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் இருக்கும். 2009 முதல் அறையாண்டுக்குப் பிறகு ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் கொஞ்சம் சிரமமான நிலைதான் ஏற்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் ஒரு கொள்கையும் , அமெரிக்க நிறுவனங்கள் ஒரு கொள்கையும் வைத்திருக்கிறார்கள். Hire and Fire என்பது அமெரிக்க நிறுவனங்களின் கொள்கை. இன்று உங்களை வேலைக்கு எடுத்து இரண்டு மாதம் கழித்து, நீங்க வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லுவது அமெரிக்க நிறுவனங்களில் சாதாரணம். நீங்கள் பல ஆண்டுகள் வேலை செய்திருந்தால் இழப்பீட்டுத் தொகையாக ஒரு வருஷத்துக்கு ஒருமாத அடிப்படை ஊதியம் என்கிற வகையில் கொடுப்பதும் அவர்கள் தான்.

boopathy perumal சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களுக்கு
துபையின் பொருளாதார‌ தேக்க‌ நிலை குறித்த‌ ப‌திவை இங்கு காண‌லாம்

SurveySan சொன்னது…

அவ்ளோ மோசமா நெலம? இங்க அமெரிக்கால, நான் இருக்கும் இடத்தில் பெருசா பாதிப்பு கண்ணுல படல.

எனிவே, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்