பின்பற்றுபவர்கள்

23 டிசம்பர், 2008

பாஜகவுக்கு (மூ)முட்டுக் கொடுக்க மீண்டும் வாஜ்பாய் !

ஐந்து வட மாநில தேர்த்தலில் மூன்றில் மண்ணைக் கவ்வியும் ( ஏற்கனவே இருந்ததை பறிகொடுத்தது) இரண்டை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து பாஜகவின் செல்வாக்கு (காங்கிரசுக்கு எதிர் என்ற செல்வாக்குதான்) சரிந்ததாகவும் அதை தூக்கி நிறுத்து மூட்டுவலி அறுவசிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் தான் முடியும் என்பதாக பாஜக தலைமை வாஜ்பாய் வீட்டுக் கதவைத் தட்டுவதற்காக காத்திருக்கிறார்களாம்.

மீண்டும் வாஜ்பாய் பிரதமர் என்று அறிவித்து ஓட்டுக்கேட்க அத்வானிக்கு இருக்கும் தயக்கத்தினால் கதவைத் தட்டும் படலம் சற்று மெதுவாக நடக்கிறது. பிஜேபியினருக்கு வாஜ்பாயை பிரதமராக முன்மொழிய விருப்பம் இல்லை, ஏனெனில் அவர் பாஜக பரிவாரக் கட்சிகளின் தீவிர முடிவுகளை ஆதரிப்பவர் இல்லை. அத்வானிதான் அதற்கு சரியான ஆள் என்றே நினைக்கிறார்கள். இந்தியாவை "இந்து" நாடகும் திட்டமெல்லாம் அத்வானிஜியால் தான் செயல்படுத்த முடியும். ஆனால் அத்வானிஜியை பொதுமக்களுக்கு பிரதமவேட்பாளராக பார்க்க அச்சம் தான். அந்த அச்சத்தைத் தான் ஐந்து மாநில தேர்த்தல் உணர்த்துகிறது.

பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி மத்திய அரசை பிடிக்கலாம் என்ற நப்பாசையில், வேறு வழியின்றி வாஜ்பாயைத் தேடுகிறார்கள் பிஜேபியினர். ஒருவேளை வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, ஒருவேளை பிஜேபி பெரும்பாண்மை பெற்றால், வாஜ்பாயின் உடல்நிலையைச் சுட்டிக் காட்டி அத்வானிஜியை பிரதமர் ஆக்கும் திட்டம் இருக்கலாம். வாஜ்பாய் இதெற்கெல்லாம் ஒப்புக்கொள்வாரா ? ஏற்கனவே பிஜேபி அவரை பிரதமர் ஆக்கிய நன்றிக் கடன் இருக்கே.

இனிவரும் இந்திய பொதுத் தேர்தல்களில் தேசியகட்சிகள் பெரும்பாண்மை பெருவது கடினமே, மாநிலக் கட்சிகளின் தயவில் தான் கூட்டணி ஆட்சியாக நடத்த முடியும்.

காங்கிரசுக்கு நேரு குடும்பம் (அல்லது அவர்கள் கைக்காட்டும் ஒரு பொம்மை), பிஜேபிக்கு வாஜ்பாய் இவர்களைத் தவிர இந்தியாவில் பிரதமராகும் வாய்ப்பும், திறமையும், தகுதியும் யாருக்குமே இல்லையா ?

:((

தட்ஸ்தமிழ் சுட்டி.

6 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

பேசாமல் பா.ஜ.க ஜெயலலிதா அம்மையாரை பிரதமர் பதவிக்கு நிறுத்தலாமே..?
:-)

Voice on Wings சொன்னது…

மூன்றாவது அணியின் வாய்ப்புகள் எப்படி இருக்கு? தேசிய அளவில் காங்கிரஸ் / பாஜக இரண்டையும் ஒதுக்கறதுக்காக தமிழகத்தில் அம்மாவை கூட பொறுத்துக்கிட்டு போகலாம்னு தோணுது. மாயாவதியை பிரதமர் - வேட்பாளரா அறிவிச்சாங்கன்னா அவங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும்.

நையாண்டி நைனா சொன்னது…

படிச்சிட்டேன்... ஆனா என்ன சொல்றது என்று தெரிய வில்லை.....
பொறுத்திருந்து பார்ப்போம்...
இந்த காலத்தை போலவே வருங்காலமும் பதில் சொல்லும்.

ஓட்டு பொறுக்கி சொன்னது…

பாஜக, அத்வானியை தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும், ஒரு வேலை அவர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கை வரவில்லை என்றால், கூட்டணி ஆட்சிக்கு வாஜ்பாய் முகம் தேவைப்படும் என்பதால் தான் என்னவோ அவர் வீட்டை தட்டுகிறார்கள்.

ராவணன் சொன்னது…

இங்கே உங்க கருணாநிதி போல அங்க அவங்களுக்கு வாசுபாயி,ராசீவு.

ராசீவு செத்தாலும் விடமாட்டோம் என்று காங்கிரசு கூட்டம்.

வாசுபாயி கோமாவுக்குப் போனாலும் விடமாட்டோம் என்று பிசெபி கூட்டம்.

தான் செத்தாலும்,கோமாவுக்குப் போனாலும் தானே திமுக தலைவராகவும்,
தமிழக முதல்வராகவும் இருக்கோனுமுன்ன நினைக்கிறது கருணாநிதி ஆட்டம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாஜ்பாய் அவர்களை கோபால கிருஷ்ண கோகலே ஆகவும், அத்வானியை லோகமான்ய பாலகங்காதாரத் திலகரைப் போலவும் உருவகப் படுத்தி எழுதி இருப்பதாக உணருகிறேன். இவையெல்லாம், பொது மக்களுக்கு இட்டுக் கட்டப் பட்ட கதை மட்டுமே. வாஜ்பாயும், அத்வானியும் ஐம்பது அறுபது ஆண்டுகால சிநேகிதர்கள். தங்களுது இருபதுகளில் ஒரே அறையில் தங்கி இருந்து தங்களை ஈர்த்த இயக்கத்துக்காகப் பாடுபட்டவர்கள். பேச்சு மற்றும் குணத்தில் மட்டும் கொஞ்சம் வேறுபடுவார்களே ஒழிய கொள்கை ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை இருவரும் ஒன்றுதான். முரளி மனோகர் ஜோஷியை வேண்டுமென்றால் இவர்கள் இருவரிடமிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்