நரியை நாட்டமையாக்கி தீர்ப்புச் சொல்லச் சொன்னால் என்னவாகும்...தனக்கு சாதமாகத் தானே தீர்ப்புச் சொல்லிக் கொள்ளும். இதைத்தான் காங்கிரஸ் அரசாங்கம் ஈழப் பிரச்சனையில் செய்துவருகிறது. இராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்கிற ஒரே காரணத்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறேன் என்கிற போர்வையில் தமிழினம் துடைத்து ஒழிக்கப் படுகிறது.
"போர் நிறுத்தம் வேண்டும்...அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்" என்று தமிழகத்தின் குரல்களை மன்மோகன் அரசு கண்டு கொண்டது போல் தெரியவில்லை. இதெல்லாம் கூட 'அவனுங்க அப்படித்தான்' தமிழனுக்குள்ளேயே காங்கிரஸ்காரன் என்கிற பெயரில் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள் என்று விட்டுத் தொலையலாம். ஆனால் தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள், தனி ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று கூறி சீமான் உட்பட பலரை கைது செய்து சிறையில் அடைப்பது எந்த விதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம் தான். ஆனால் அவர்களின் ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஈழமண்ணில் நடக்கிற ஒன்று அதற்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் இந்திய இறையாண்மையை பாதிக்கிறது என்று தெரியவில்லை.
போராளிகளின் ஆயுத போராட்டம் இன்றி ஈழ விடுதலை என்பது சாத்தியமற்றதே, இவை நன்கு தெரிந்தும், நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை, தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லும் அரசியல் பித்தலாட்டாவாதிகளை எந்த கணக்கில் சேர்ப்பது ? இவர்கள் ஈழத்தமிழருக்கு வடிக்கும் கண்ணீர் உண்மையான கண்ணீர் தானா ?
மத்திய அரசில் அங்கம் வகிப்பதால் பாமகவும், திமுகவும் நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழவிடுதலையை ஆதரிக்கிறோம் என்கிறார்கள். ஈழ விடுதலை என்பது இன்னொரு ஈழகாந்தியால் ஏற்படப் போகிறதா ? யார் அந்த காந்தி....இதையெல்லாம் தெளிவு படுத்துவிட்டு ஈழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லாமே, தானும் தெளிவில்லாமல், தொண்டர்களையும் தெளிவு படுத்தாமல் இவர்கள் ஈழத்தமிழர்களின் நலன் குறித்து பேசுவது முரணாகவே இருக்கிறது.
ஈழவிடுதலைக் குறித்து கலைஞர் வடிக்கும் கண்ணீரும், மருத்துவர் இராமதாசின் கண்ணீரும் யாருக்காக என்றே தெரியவில்லை. எங்களுக்கு காங்கிரஸ் கூட்டணி தான் முக்கியம் என்று சொல்லிவிட்டால் தொண்டர்களாவது குழம்பாமல் இருப்பார்கள். அதைவிடுத்து மேடைக்கு மேடை ஒரு பேச்சு, வெளியே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் மீது கைது நடவெடிக்கை. இரட்டை வேஷம் ! Shame !
இந்த விசயத்தில் காங்கிரஸ் அரசுடன் தொடர்பு இருக்கின்ற காரணத்தினால் மருத்துவர இராமதாஸ் மற்றும் கலைஞர் செயல்பாடுகள் எனக்கு வேறு வேறாக தெரியவில்லை. முரண்பாடுள்ள ஜெவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் ஈழ விடுதலைக் குறித்து வைகோ தெளிவாக இருக்கிறார். காங்கிரஸ் நிர்பந்தம் இல்லாததால் திருமாவளவனும் தெளிவாகவே இருக்கிறார்.
இராஜிவ் காந்தியின் உயிருக்காக ஈழத்தமிழர்கள் அனைவருமே பலியாகத்தான் வேண்டும் என்று நினைக்கும் காங்கிரசாரின் நிலைக்கு ஆதரவாகவே கலைஞரும், இராமதாசும் செயல்படுகிறார்கள், இதில் அடிக்கடி டெல்லி பயணம், வலியுறுத்தல்கள். நினைக்கவே பெரிய அரசியல் அசிங்கமாக இருக்கிறது. இந்த விசயத்தில் மிகத் தெளிவாகவே, வெளிப்படையாக இருக்கும் ஜெ கூட பரவாயில்லை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
33 கருத்துகள்:
\\கலைஞர் மற்றும் இராமதாஸ் - நரியிடம் நாட்டாமை கேட்டால் ?\\
தலைப்பே - சும்மா அதிருதுல்ல
//அதிரை ஜமால் said...
\\கலைஞர் மற்றும் இராமதாஸ் - நரியிடம் நாட்டாமை கேட்டால் ?\\
தலைப்பே - சும்மா அதிருதுல்ல
//
தலைப்பை மட்டும் வாசிப்போரின் தலைமை ஏற்று இருக்கிறீர்களா ?
\\விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம் தான். ஆனால் அவர்களின் ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஈழமண்ணில் நடக்கிற ஒன்று அதற்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் இந்திய இறையாண்மையை பாதிக்கிறது என்று தெரியவில்லை.\\
சரியாகச்சொன்னீரகள் ...
\\இவர்கள் ஈழத்தமிழருக்கு வடிக்கும் கண்ணீர் உண்மையான கண்ணீர் தானா ?\\
முதலையை விட மோசமான கண்ணீர்
\\தானும் தெளிவில்லாமல், தொண்டர்களையும் தெளிவு படுத்தாமல் \\
தொண்டர்கள் தெளிவில்லை - அவர்களை தெளிவடையவிடுவதில்லை என்று தெளிவாக இருக்கிறார்கள்
\\இந்த விசயத்தில் மிகத் தெளிவாகவே, வெளிப்படையாக இருக்கும் ஜெ \\
நிச-அம்மாவா
\\Blogger கோவி.கண்ணன் said...
//அதிரை ஜமால் said...
\\கலைஞர் மற்றும் இராமதாஸ் - நரியிடம் நாட்டாமை கேட்டால் ?\\
தலைப்பே - சும்மா அதிருதுல்ல
//
தலைப்பை மட்டும் வாசிப்போரின் தலைமை ஏற்று இருக்கிறீர்களா ?\\
துவக்கம் இங்கிறுந்துதானே ...
கோவி, இலங்கை பிரச்சனையை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை,பொதுநலம் இல்லாத இந்த அரசியல்வாதிகளால் சாதாரன மக்கள் அழிகிறார்கள்,அழிக்கப்படுகிறார்கள்
மக்களுக்கு இருக்கும் மறதியும், திரைகதை போல் வரும் மாற்றங்களும் இவர்களுக்கு வசதியாக அமைந்துவிட்டது.
//இராஜிவ் காந்தியின் உயிருக்காக ஈழத்தமிழர்கள் அனைவருமே பலியாகத்தான் வேண்டும் என்று நினைக்கும் காங்கிரசாரின் நிலைக்கு ஆதரவாகவே கலைஞரும், இராமதாசும் செயல்படுகிறார்கள்,//
உண்மை...உண்மை....உண்மை.....
கோவியாரின் விஷமப் பிரச்சாரம் தொடர்கிறது.. :)
//ஈழ விடுதலை என்பது இன்னொரு ஈழகாந்தியால் ஏற்படப் போகிறதா ? யார் அந்த காந்தி....இதையெல்லாம் தெளிவு படுத்துவிட்டு ஈழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லாமே, தானும் தெளிவில்லாமல், தொண்டர்களையும் தெளிவு படுத்தாமல் இவர்கள் ஈழத்தமிழர்களின் நலன் குறித்து பேசுவது முரணாகவே இருக்கிறது.//
எனனாத்து ஈழகாந்தியா? அப்படி ஒருவர் சும்மா பளிக் கூட மாறுவேடப் போட்டியில் கலந்துக் கொண்டால் கூட உங்கள் புலிகளால் அழிக்கப் படுவார்கள் என்பது குழந்தைக்கும் தெரியும். அப்புறம் எங்கிட்டு போய் தெளிவுபடுத்தறதாம்?.
காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சின்னு நீங்களும் விடாம இஷமப் பிரச்சாரம் பண்ணிட்டு தான் இருக்கிங்க.. பலன் இருக்கா கோவியாரே? :))
//SanJaiGan:-Dhi said...
கோவியாரின் விஷமப் பிரச்சாரம் தொடர்கிறது.. :)
//ஈழ விடுதலை என்பது இன்னொரு ஈழகாந்தியால் ஏற்படப் போகிறதா ? யார் அந்த காந்தி....இதையெல்லாம் தெளிவு படுத்துவிட்டு ஈழம் அமைவதை ஆதரிக்கிறோம் என்று சொல்லாமே, தானும் தெளிவில்லாமல், தொண்டர்களையும் தெளிவு படுத்தாமல் இவர்கள் ஈழத்தமிழர்களின் நலன் குறித்து பேசுவது முரணாகவே இருக்கிறது.//
எனனாத்து ஈழகாந்தியா? அப்படி ஒருவர் சும்மா பளிக் கூட மாறுவேடப் போட்டியில் கலந்துக் கொண்டால் கூட உங்கள் புலிகளால் அழிக்கப் படுவார்கள் என்பது குழந்தைக்கும் தெரியும். அப்புறம் எங்கிட்டு போய் தெளிவுபடுத்தறதாம்?.
காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சின்னு நீங்களும் விடாம இஷமப் பிரச்சாரம் பண்ணிட்டு தான் இருக்கிங்க.. பலன் இருக்கா கோவியாரே? :))
//
அப்படியா ? தமிழ் ஈழம் ஓகே, காங்கிரஸ் ஆதரிக்கிறது என்கிறீர்கள். தமிழ் ஈழம் எப்படி ஓகே ஆகும் ? காங்கிரசிடம் மந்திர வித்தை எதும் இருக்கிறதா ? ஏன் இதுவரை மந்திரத்தை பயன்படுத்தல
அந்த மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று கிளம்பி தேவை இல்லாததை மட்டும் பேசி தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொண்டு போராட்டாங்களை திசை திருப்புபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களுக்கு கலைஞரும் ரமதாசும் என்ன குறைந்துவிட்டார்கள்?. ஜெ புலிகளுக்கு எதிரானவர் என்று தெரிந்தும் ஓட்டுக்காக அவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வைகோவை விடவா கலைஞரும் ராமதாசும் குறைந்துவிட்டார்கள்?.. அவருக்கு ஓட்டைவிட ஈழ மக்கள் பெரிதாக தெரியாத போது அவரை புகழும் உங்களுக்கு காங்கிரசும் கலைஞ்சரும் ராமதாசும் அவரைவிட பெரிதாக தெரியாமல் இருப்பது ஆச்சர்யமில்லை கோவியாரே. :)
இந்த கோவியாரே இப்படி தான்.. டமாசு.. டமாசு. :)
//SanJaiGan:-Dhi said...
அந்த மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று கிளம்பி தேவை இல்லாததை மட்டும் பேசி தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொண்டு போராட்டாங்களை திசை திருப்புபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களுக்கு//
அவர்களெல்லாம் ஏற்கனவே வெளம்பர வெளிச்சம் இல்லாதவர்களா ? இதனால் அவர்களுக்கு பயன் ஏதும் இல்லை. அவர்களில் போராட்டத்தை கொச்சைப் படுத்துவது நீங்கள் தான். தமிழ்நாட்டு காங்கிரஸ் ஈழவிடுதலைக்கோ, போர் நிறுத்ததிற்கோ என்ன செய்தது ?
//ஜெ புலிகளுக்கு எதிரானவர் என்று தெரிந்தும் ஓட்டுக்காக அவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வைகோவை விடவா கலைஞரும் ராமதாசும் குறைந்துவிட்டார்கள்?.. அவருக்கு ஓட்டைவிட ஈழ மக்கள் பெரிதாக தெரியாத போது அவரை புகழும் உங்களுக்கு காங்கிரசும் கலைஞ்சரும் ராமதாசும் அவரைவிட பெரிதாக தெரியாமல் இருப்பது ஆச்சர்யமில்லை கோவியாரே. :)
இந்த கோவியாரே இப்படி தான்.. டமாசு.. டமாசு. :)//
வைகோ தமிழக அரசியலையும் ஈழ அரசியல் நிலைப்பாட்டையும் குழப்பிக் கொள்ளாமல் தான் இருக்கிறார். இவற்றையெல்லாம் குழப்பி, தொண்டர்களை குழப்பி வருபவர்கள் தான் காங்கிரஸ், திமுக மற்றும் பாமக தலைவர்கள்
//தமிழ் ஈழம் எப்படி ஓகே ஆகும் ? காங்கிரசிடம் மந்திர வித்தை எதும் இருக்கிறதா ? ஏன் இதுவரை மந்திரத்தை பயன்படுத்தல//
அயுத போராட்டத்தால் தான் தனி ஈழம் மலரும் என்று சொல்கிறீர்களே.. 30 ஆண்டுகள ஆகியும் என் இன்னும் மலரல.. காரணம் , பேச்சுவார்த்தை மூலமும் அகிம்சா வழிலும் தனி ஈழம் இல்லை என்றாலும் தமிழ் மக்களுக்கு சம உரிமையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று போராட நினைக்கும் எவரையும் உங்கள் புலிகள் விட்டு வைத்ததில்லை. தனி ஈழம் அல்லது தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்காமல் இருக்க புலிகள் மட்டும் தான் காரணம். தமிழர்களுக்கு ஓரளவு ஆதரவான நிலையில் இருந்த ரணில் விகரம சிங்கேயை தோற்க செய்து மீண்டும் சிங்கள வெறியர்களை ஆட்சியில் அமரவைத்து இருந்த நம்பிக்கைகளை எல்லாம் பொய்க்க செய்த பிரபாகரன் இருக்கும் வரை எந்த மந்திரமும் பலிக்காது கோவியாரே..
( இப்போதைக்கு விவாதம் முற்றும்.. நேரம் இருப்பின் மாலை வருகிறேன்.. :) )
//வைகோ தமிழக அரசியலையும் ஈழ அரசியல் நிலைப்பாட்டையும் குழப்பிக் கொள்ளாமல் தான் இருக்கிறார். இவற்றையெல்லாம் குழப்பி, தொண்டர்களை குழப்பி வருபவர்கள் தான் காங்கிரஸ், திமுக மற்றும் பாமக தலைவர்கள் //
அவர்களும் ஈழமக்கள் ஆதரவையும் புலிகள் எதிர்ப்பையும் குழப்பிக் கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் அதை புரிந்துக் கொள்ளவில்லை. வைகோவுக்கு தமிழக அரசியலும் ஈழ அரசியலும் தனி தனி. ஆனால் மத்தவர்களுக்கு இந்திய அரசியலும் இலங்கை அரசியலும் ஒன்றா? என்னா கோவியாரே கலர் கலரா ரீல் விடறீங்க? :))
ராஜினாமா கடிதங்கள் ஞாபகம் இருக்கா?
அதுலேயே தெரிஞ்சிருக்குமே இவுங்க வண்டவாளம்
//SanJaiGan:-Dhi said...
//தமிழ் ஈழம் எப்படி ஓகே ஆகும் ? காங்கிரசிடம் மந்திர வித்தை எதும் இருக்கிறதா ? ஏன் இதுவரை மந்திரத்தை பயன்படுத்தல//
அயுத போராட்டத்தால் தான் தனி ஈழம் மலரும் என்று சொல்கிறீர்களே.. 30 ஆண்டுகள ஆகியும் என் இன்னும் மலரல.. காரணம் , பேச்சுவார்த்தை மூலமும் அகிம்சா வழிலும் தனி ஈழம் இல்லை என்றாலும் தமிழ் மக்களுக்கு சம உரிமையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று போராட நினைக்கும் எவரையும் உங்கள் புலிகள் விட்டு வைத்ததில்லை.
//
வாங்கைய்யா வாங்க ஆயுத போராட்டத்துக்கு ஆசிர்வாதம் பண்ணியவர்களே 'காந்தி'ய வாதிகள் தான். கைமீறி போனதற்கு காரணமே நீங்க தானே
//எனனாத்து ஈழகாந்தியா? அப்படி ஒருவர் சும்மா பளிக் கூட மாறுவேடப் போட்டியில் கலந்துக் கொண்டால் கூட உங்கள் புலிகளால் அழிக்கப் படுவார்கள் என்பது குழந்தைக்கும் தெரியும். அப்புறம் எங்கிட்டு போய் தெளிவுபடுத்தறதாம்?.
காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சின்னு நீங்களும் விடாம இஷமப் பிரச்சாரம் பண்ணிட்டு தான் இருக்கிங்க.. பலன் இருக்கா கோவியாரே? :))//
திரு சஞ்சய்,
உங்களுக்கு புரியவைப்பது அவசியமில்லை அல்லது புரிந்து கொள்ளமாட்டீர்கள் என்றாலும், இந்த பின்னூட்டங்களைப் படிப்பவர்களுக்காக மறுமொழி இட வேண்டியுள்ளது. ஐயா முதலில் காந்திய வழியில் சத்தியா கிரக முறையில் இந்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க உண்ணா நோன்பிருந்த திரு.திலீபனின் உணர்வுகளுக்கு காங்கிரஸ் அரசாங்கமோ, சிறிலங்க அரசாங்கமோ என்ன மாரியாதை கொடுத்தது? தமிழர்களை தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஜெயவர்த்தனா என்பவருக்கு கை கட்டி சேவகம் புரியச் சொன்னீர்களோ? அல்லது எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக் கிட்டு அழிஞ்சு போங்க அப்படின்னு சொல்ல வருகிறீர்களா?
சிறி லங்கா அரசாங்க ஆட்சியாளர்களின் குள்ளநரித்தனம் இதுவரையில் உங்களுக்குப் புரியவில்லையா? இதற்குப் பதில் சொல்லிவிட்டு வேறு கேள்விக்குப் போகலாமே? ஈழத்தமிழர்கள் முதலில் சரியான அணுகுமுறையில் முயன்று பார்த்துவிட்டுத்தான் பின் ஆயுதப் போராட்டத்துக்குத் திரும்பினார்கள்.
ஓர் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் போராளிகள், தங்களுக்கென்று உளவுப்பிரிவு வைத்துக் கொள்வதில் ஆச்சர்யம் இல்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களை கண்டு கொள்ள வேண்டும் அல்லவா? உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கருணா, பிள்ளையான் போன்றோர்கள் அரசாங்கப் பதவி வகிக்கிறார்கள். இதை எல்லாம் கொஞ்சம் விளங்கிக் கொண்டு பேசலாமே?
இந்தியாவின் உளவுப் பிரிவு ரா , தனது முழுப்பணியாக ஈழத்தமிழர்களைக் காட்டிக் கொடுப்பதற்காக மட்டும் செயல் படுத்தியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் இந்தியாவின் உளவுத் துறையா? அல்லது சிறி லங்கா அரசின் உளவுத் துறையா? இங்கு நடக்கிற குண்டு வெடிப்புகளை முன் கூட்டியே தெரிவிக்கலாமே?
பொடங்கால் அடிச்சவனுக்கு என் இன்னும் புண்ணியதானம் செய்கிறார்கள்?
//எனனாத்து ஈழகாந்தியா? அப்படி ஒருவர் சும்மா பளிக் கூட மாறுவேடப் போட்டியில் கலந்துக் கொண்டால் கூட உங்கள் புலிகளால் அழிக்கப் படுவார்கள் என்பது குழந்தைக்கும் தெரியும். அப்புறம் எங்கிட்டு போய் தெளிவுபடுத்தறதாம்?.
காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சின்னு நீங்களும் விடாம இஷமப் பிரச்சாரம் பண்ணிட்டு தான் இருக்கிங்க.. பலன் இருக்கா கோவியாரே? :))//
காங்கிரசின் கருத்தும் ஜெயலலிதா அம்மையாரின் கருத்தும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கிறது. காங்கிரசின் கருத்தை ஒட்டியே அதன் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடும் இருக்கிறது. அது திமுகவாக இருந்தாலும் சரி அல்லது பாமகவாக இருந்தாலும் சரி. விடுதலை சிறுத்தையும், வைகோவின் மதிமுகவும் கூட்டணிக்காக தன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை அதைத் தான் கோவியார் விளங்க வைக்க முனைந்திருக்கிறார். வைகோவை காகிதப் புலி, அப்படி என்று நீங்கள் கேலி செய்வதெல்லாம் எடுபடாது. அவர்மேல் எனக்கு சில விமர்சனங்கள் இருப்பினும், அவன் தான் அனைத்துலக சமூத்தின் பார்வைக்குத் ஈழத்தமிழர்களின் துயரத்தை, சிறிலங்க அரசாங்கத்தின் அத்து மீறல் இனப்படுகொலையை, மனித உரிமை மீறலை கொண்டு சென்றிருக்கிறான், வாதாடி இருக்கிறான். தமிழகத்தை சேர்ந்த எந்த தமிழனாவது அல்லது தமிழ் அரசியல்வாதியாவது இதைச் செய்திருந்தால் எனக்குச் சொல்லுங்களேன். காங்கிரஸ்,பி.ஜெ.பி, திமுக,அதிமுக, இடதுசாரிகள் பாமகஉள்ளிட்ட எந்த கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, எம்.பிக்களோ செய்திருந்தால் எனக்கு அறியத்தாருங்கள். அது யார் என்று நானும் தெரிந்து கொள்கிறேன்.
//அவர்களும் ஈழமக்கள் ஆதரவையும் புலிகள் எதிர்ப்பையும் குழப்பிக் கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் அதை புரிந்துக் கொள்ளவில்லை. வைகோவுக்கு தமிழக அரசியலும் ஈழ அரசியலும் தனி தனி. ஆனால் மத்தவர்களுக்கு இந்திய அரசியலும் இலங்கை அரசியலும் ஒன்றா? என்னா கோவியாரே கலர் கலரா ரீல் விடறீங்க? :))//
ஒருத்தரை (அது யாராகவோ இருந்துட்டு போகட்டுமே) உயிர் போகும் வரை அடித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன். அடி படுபவனுக்கு ஆதரவளிக்கிறீர்கள். ஆனால் அடிப்பவனைத் தடுக்க மாட்டீர்கள். அடி படுபவன் திருப்பி அடிக்க நினைத்தால், நீ திருப்பி அடிக்கக் கூடாது, அடிவாங்கி சாவு ஆனால், நான் உனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறேன் அப்படின்னு தானே சொல்ல வருகிறீர்கள். உங்க ஆதரவு அவனுக்கு எந்த வகையில் பயன் படும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கக்கூடாதா? அப்படிப்பட்ட ஆதரவு அவனுக்குத் தேவைப்படாது. வேண்டாம்!
//கலைஞர் மற்றும் இராமதாஸ் - நரியிடம் நாட்டாமை கேட்டால் ? //
திரு கோவி கண்ணன்,
உங்கள் பதிவின் தலைப்பு!
எங்கள் ஊரில் வழங்கும் பழமொழி "நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கி எட்டாடு கேக்குமாம்"
ஜோதி சார்,
வைகோ மற்றும் திருமாவை ஈழத் தமிழர்களின் நிஜ அக்கறையாளர்களாக சித்தரிக்க முயல்வது வேடிக்கையே. அனைத்துக் கட்சி எம்பிக்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்த போது வைகோவும் தன் கட்சி எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என அறிவித்தார். ஆனால் பசையுள்ள பதவிகளை துறக்க மனமில்லாத ராமதாசும் மத்தியில் ஆளும் கூட்டணிக்கு சங்கடங்களை தந்து, அது தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு வாபஸ் என்ற நிலைக்கு தள்ளினால் தன் ஆட்சியே பறிபோய்விடும் என நினைத்த கலைஞரும் தங்கள் கட்சி எம்பிகள் ராஜினாமா செய்யாமல் இருக்க வைத்தார்கள்.
ஆனால் வைகோ ஏன் தன் கட்சியினரை ராஜினாமா செய்ய வைத்து இந்திய அளவிலான கவனத்தை ஈர்க்கவில்லை? ஜெவுடனான் கூட்டணி எதற்காக எதன் அடிப்படையில்? புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெ வுடன் என்ன கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்திருக்கிறார்? தங்கள் உரிமையான திருமங்கலம் தொகுதியை கூட இழந்த இவர் எப்படி அடுத்தவர் உரிமைக்கு பாடுபடுவார்?
திருமா ஏன் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக தன் கட்சி MLAக்களை ராஜினாமா செய்ய சொல்லவில்லை? செல்வம் கூட மாயாவதி கட்சியில் சேர்த்தானே ராஜினாமா செய்தார்.
புலிகள் பற்றி பேசுவதை தாண்டி இந்த இருவரும் ஈழத்தமிழர்களுக்காக மற்ற கட்சியினரை விட எந்த வகையில் அதிகம் செயல்பட்டிருக்கிறார்கள்?
//விடுதலை சிறுத்தையும், வைகோவின் மதிமுகவும் கூட்டணிக்காக தன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை //
கொள்கையில் உடன்பாடு இல்லாதவர்கள் கூட்டணி கொள்வதன் அர்த்தம் என்னவோ? :)
சரி இதெல்லாம் போகட்டும். திருமாவும் வைகோவும் இதுவரை ஈழத் தமிழருக்காக மற்ற கட்சியினர் செயயாத எதை செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? தெரிந்துக் கொள்கிறேன்.
//வாங்கைய்யா வாங்க ஆயுத போராட்டத்துக்கு ஆசிர்வாதம் பண்ணியவர்களே 'காந்தி'ய வாதிகள் தான். கைமீறி போனதற்கு காரணமே நீங்க தானே//
அட இத பாருங்கய்யா.. :)
கோவியாரே போலிஸ் கையில் துப்பாக்கி கொடுப்பது மக்களை காக்கத் தான். அவர்களுக்காக வாதாடு வக்கீல்களை கொல்ல அல்ல. :)
நான் சொன்னது அஹிம்சா வழியில் போராட விரும்பும் யாரையும் புலிகள் விட்டு வைக்க வில்லை என்று தான்.
ஆனால் ”கைமீறிப்” போனதை ஒப்பு கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.
இதை தானே நாங்களும் சொல்றோம். அவர்களுக்கு ஆயுதம் கொடுத்தது தமிழ் மக்களுக்காக போராடத் தான். தமிழர் தலைவர்களை தேடிப் பிடித்து கொல்ல அல்ல.. ;)
ஆயுதப் போராட்டத்தின் நிஜ நோக்கம் கைமீறிப் போய் விட்டது என்று தான் நாங்களும் சொல்கிறோம். அதை நீங்களும் ஒப்புக் கொண்டீர்கள்.. :)
//SanJaiGan:-Dhi 10:33 PM, December 30, 2008
ஜோதி சார்,
வைகோ மற்றும் திருமாவை ஈழத் தமிழர்களின் நிஜ அக்கறையாளர்களாக சித்தரிக்க முயல்வது வேடிக்கையே. அனைத்துக் கட்சி எம்பிக்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்த போது வைகோவும் தன் கட்சி எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என அறிவித்தார். ஆனால் பசையுள்ள பதவிகளை துறக்க மனமில்லாத ராமதாசும் மத்தியில் ஆளும் கூட்டணிக்கு சங்கடங்களை தந்து, அது தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு வாபஸ் என்ற நிலைக்கு தள்ளினால் தன் ஆட்சியே பறிபோய்விடும் என நினைத்த கலைஞரும் தங்கள் கட்சி எம்பிகள் ராஜினாமா செய்யாமல் இருக்க வைத்தார்கள்.
ஆனால் வைகோ ஏன் தன் கட்சியினரை ராஜினாமா செய்ய வைத்து இந்திய அளவிலான கவனத்தை ஈர்க்கவில்லை? ஜெவுடனான் கூட்டணி எதற்காக எதன் அடிப்படையில்? புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெ வுடன் என்ன கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்திருக்கிறார்? தங்கள் உரிமையான திருமங்கலம் தொகுதியை கூட இழந்த இவர் எப்படி அடுத்தவர் உரிமைக்கு பாடுபடுவார்?
திருமா ஏன் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக தன் கட்சி MLAக்களை ராஜினாமா செய்ய சொல்லவில்லை? செல்வம் கூட மாயாவதி கட்சியில் சேர்த்தானே ராஜினாமா செய்தார்.
புலிகள் பற்றி பேசுவதை தாண்டி இந்த இருவரும் ஈழத்தமிழர்களுக்காக மற்ற கட்சியினரை விட எந்த வகையில் அதிகம் செயல்பட்டிருக்கிறார்கள்?
//விடுதலை சிறுத்தையும், வைகோவின் மதிமுகவும் கூட்டணிக்காக தன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை //
கொள்கையில் உடன்பாடு இல்லாதவர்கள் கூட்டணி கொள்வதன் அர்த்தம் என்னவோ? :)
சரி இதெல்லாம் போகட்டும். திருமாவும் வைகோவும் இதுவரை ஈழத் தமிழருக்காக மற்ற கட்சியினர் செயயாத எதை செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? தெரிந்துக் கொள்கிறேன்.
//
ஐயகோ! கலைஞரின் ராஜினாமா அறிவிப்பே பெரிய நாடகம் என்று நான் பதிவிட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும். வைகோ ராஜினாமா செய்தால், நடுவண் அரசுக்கு ஆபத்தா? திமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் நடுவண் அரசுக்கு ஆபத்தா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போது காலியாகும் என்று நரிகள் நாற்காலிக்கு காத்திருப்பது ஒருவேளை வைகோவிற்குத் தெரிந்திருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் அவரை லெட்டர் பேடு அரசியல் வாதி என்றல்லவா சொல்வீர்கள். (அப்படித் தானே பழ நெடுமாறன். அவர்களைச் சொல்கிறீர்கள்) என்னைப் பொறுத்தவரை ராஜினாமா அறிவிப்பே அவசியமில்லாதது. உண்மையான உணர்வோடு கலைஞர் பிரதமருடன் தனிமையில் ஈழத்தமிழர்களுக்காக மன்றாடி இருக்க வேண்டும். அது பயனளிக்க வில்லை என்றால், யாரிடமும் சொல்லாமல் திடீரென்று ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். மயிலை மாங்கொல்லை கூட்டமும் தேவையில்லை மன்னாங்கட்டியும் தேவையில்லை. தந்தியும் அடிக்க வேண்டியதில்லை டாக்டருக்கும் சொல்லிவிட வேண்டியதில்லை. இதெல்லாம் ஏமாற்று வேலை என்பது சராசரி தமிழனுக்குத் தெரிந்துவிட்டது. வைகோ என்ன செய்தார் என்று சொல்லி, உங்களிடம் மற்றவர்களைப் பற்றிக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் என்னிடம் திருப்பிக் கேட்கிறீர்கள். அருமை!
நீங்கள் வைகோவை புனிதப் பசுவாக சித்தரிப்பதால் தான் அவரை பற்றி உங்களிடம் கேட்டேன். உங்களால் பதில் சொல்ல முடியாது. ஏன்னா, வைகோ ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் நிஜம்.
//உண்மையான உணர்வோடு கலைஞர் பிரதமருடன் தனிமையில் ஈழத்தமிழர்களுக்காக மன்றாடி இருக்க வேண்டும். அது பயனளிக்க வில்லை என்றால், யாரிடமும் சொல்லாமல் திடீரென்று ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். மயிலை மாங்கொல்லை கூட்டமும் தேவையில்லை மன்னாங்கட்டியும் தேவையில்லை//
இதை ஏன் மத்திய ஆளும் கூட்டணியில் இருக்கும் போது வைகோ செய்யவில்லை.. அப்போது அவருக்கு 4 எம்பிக்கள் இருந்தார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன். அப்போதும் ஈழ மக்கள் துன்பப் பட்டுக் கொண்டு தானே இருந்தார்கள். 3 ஆண்டுகளுக்கும் மெலாக அங்கே பதவி சுகம் அனுபவித்த போது இவருக்கு ஈழ மக்கள் ஏன் நினைவுக்கு வரவில்லை? கூட்டணியை விட்டு வெளியேறியது கூட திமுகவுடனான பிணக்கால் தானே.. அது முழு சுயநலம். அவர் கூட்டணியில் இருந்த ஆரம்பம் முதலே இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழ்ங்கியதாக சொல்கிறார். அதை எதிர்த்து ஏன் அவர் ஆதரவை வாபஸ் வாங்க வில்லை.
ஏன் இந்த சீசன் அரசியல்வாதிக்கு இவ்வளவு சப்பைக்கட்டு என்பது தான் என் கேள்வி? நான் யாரையும் புனிதர்களாக சித்தரிக்கவில்லை. எல்லாருமே அரசியல் சந்தர்ப்பவாதிகள் தான். இதில் வைகோவும் திருமாவளவனும் விதிவிலக்கல்ல.
//SanJaiGan:-Dhi said...
நீங்கள் வைகோவை புனிதப் பசுவாக சித்தரிப்பதால் தான் அவரை பற்றி உங்களிடம் கேட்டேன். உங்களால் பதில் சொல்ல முடியாது. ஏன்னா, வைகோ ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் நிஜம்.
//உண்மையான உணர்வோடு கலைஞர் பிரதமருடன் தனிமையில் ஈழத்தமிழர்களுக்காக மன்றாடி இருக்க வேண்டும். அது பயனளிக்க வில்லை என்றால், யாரிடமும் சொல்லாமல் திடீரென்று ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். மயிலை மாங்கொல்லை கூட்டமும் தேவையில்லை மன்னாங்கட்டியும் தேவையில்லை//
இதை ஏன் மத்திய ஆளும் கூட்டணியில் இருக்கும் போது வைகோ செய்யவில்லை.. அப்போது அவருக்கு 4 எம்பிக்கள் இருந்தார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன். அப்போதும் ஈழ மக்கள் துன்பப் பட்டுக் கொண்டு தானே இருந்தார்கள். 3 ஆண்டுகளுக்கும் மெலாக அங்கே பதவி சுகம் அனுபவித்த போது இவருக்கு ஈழ மக்கள் ஏன் நினைவுக்கு வரவில்லை? கூட்டணியை விட்டு வெளியேறியது கூட திமுகவுடனான பிணக்கால் தானே.. அது முழு சுயநலம். அவர் கூட்டணியில் இருந்த ஆரம்பம் முதலே இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழ்ங்கியதாக சொல்கிறார். அதை எதிர்த்து ஏன் அவர் ஆதரவை வாபஸ் வாங்க வில்லை.
ஏன் இந்த சீசன் அரசியல்வாதிக்கு இவ்வளவு சப்பைக்கட்டு என்பது தான் என் கேள்வி? நான் யாரையும் புனிதர்களாக சித்தரிக்கவில்லை. எல்லாருமே அரசியல் சந்தர்ப்பவாதிகள் தான். இதில் வைகோவும் திருமாவளவனும் விதிவிலக்கல்ல.//
கூட்டணி போற்ற விடயங்களில் வைகோவிடமும் எனக்கு நிறைய விமர்சனம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். ஈழமக்களுக்காக, இனப்படுகொலையை அனைத்துலக சமுதாயத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று குரல் கொடுப்பவன் அவன் ஒருவனே! அதனால் மாற்ற விடயங்களின் அவரை அதிகம் விமர்சிக்க இயலவில்லை. நான் வைகோ ஆதரவாளன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் வைகோவை விட பழ நெடுமாறன் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஈழத்தமிழர்களுக்காக எவன் உண்மையான கண்ணீர் வடிக்கிறானோ அவனுடைய ஆதரவாளன் என்று சொன்னால் அதுதான் சரியாக இருக்கும். அவர்களைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு அது சுலபம். சீமானைப் பற்றியும் நான் விமர்சனம் எழுதி இருக்கிறேன். மற்றபடி துரும்பைக் கிள்ளிப் போட்டவர்களை உங்களுக்குத் தெரிந்தால் இலைமறைக் காயாக வைக்காமல் வெளிக்கொணருங்கள்! நான் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறேன்.
நெத்தியடியான பதிவு
இன்றைய சோனியா காங்கிரஸ் செத்தவர்களின் கூடாரம்.
விடுதலைக்காகப் போராடிய
காங்கிரஸ் மரித்து பல மாமாங்கம் ஆகிவிட்டது.
காமராஜரை ஏமாற்றி,
அசிங்கப்படுத்திய இந்திராவின் வால் பிடித்துத் தொங்கும் காங்கிரஸ்
மூடர்கள் தமிழரின் உரிமைகளை சோனியாவின் வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவிட்டார்கள்.
அவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியும்?
நேருவின் பரம்பரையில் வந்த யாரும் நல்ல சாவு சாகமாட்டார்கள்போலும்.செய்தது அவ்வளவும் பாவம்தானோ?
நாட்டையே இத்தாலி அம்மையாரிடம் அடகு வைத்துவிட்டு,இந்திய இறையாண்மை பற்றி பேசுகிறார்கள்.
காங்கிரஸ் பேரியக்கம்,காமராஜர் போன்ற தலைவர்களை புறம்தள்ளி,
இந்திரா காங்கிரசாகி,பின் ராஜீவ் காங்கிரசாகி,பின் சோனியா காங்கிரசாகி,இப்போது முழுதும்
இத்தாலி காங்கிரஸ் என்று ஆகிவிட்டது.
இல்லை....இலங்கை காங்கிரஸ் ஆகிவிட்டது(ராஜபக்சே கோவப்படுவாரில்ல)
நல்ல பதிவு.. நச்சென்று கேள்விகள்.
நீங்க நரின்னு காங்கிரசு காரங்களைத் தானே சொல்கிறீர்கள். ஆனால் அதைக் கூட புரிந்து கொள்ளாத குள்ள நரி ஒன்னு இது கலைஞரையோ, அய்யா ராமதாசையோ குறை சொல்றமாதிரியும், வைகோவையும், திருமாவையும் புகழ்ந்து எழுதியிருக்கீங்கனும் நெனைச்சுக்கிட்டு ஊளை விட்டுட்டு போயிருக்கு.
நல்ல தமிழில் எழுதியிருக்கும் இது கூட புரியாத இதுகள், இலங்கைத் தமிழர் படும் இன்னல்களை புரிந்து கொள்ளாததில் வியப்பேதும் இல்லை.
பின்னூட்டம் பெரியசாமி,
கீழே இருப்பதை படிக்கவும். இதெல்லாம் வேறு பதிவில் இல்லை. இந்த பதிவில் தான் இருக்கிறது. கோவியார் காங்கிரசை மட்டுமில்லாமல் கலைஞர் மற்றும் ராமதாசையும் சேர்த்து தான் சாடி இருக்கிறார். அதை ஒட்டி தான் என் பின்னூட்டங்கள்.
//ஈழவிடுதலைக் குறித்து கலைஞர் வடிக்கும் கண்ணீரும், மருத்துவர் இராமதாசின் கண்ணீரும் யாருக்காக என்றே தெரியவில்லை. எங்களுக்கு காங்கிரஸ் கூட்டணி தான் முக்கியம் என்று சொல்லிவிட்டால் தொண்டர்களாவது குழம்பாமல் இருப்பார்கள். அதைவிடுத்து மேடைக்கு மேடை ஒரு பேச்சு, வெளியே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் மீது கைது நடவெடிக்கை. இரட்டை வேஷம் ! Shame !
இராஜிவ் காந்தியின் உயிருக்காக ஈழத்தமிழர்கள் அனைவருமே பலியாகத்தான் வேண்டும் என்று நினைக்கும் காங்கிரசாரின் நிலைக்கு ஆதரவாகவே கலைஞரும், இராமதாசும் செயல்படுகிறார்கள், இதில் அடிக்கடி டெல்லி பயணம், வலியுறுத்தல்கள். நினைக்கவே பெரிய அரசியல் அசிங்கமாக இருக்கிறது. இந்த விசயத்தில் மிகத் தெளிவாகவே, வெளிப்படையாக இருக்கும் ஜெ கூட பரவாயில்லை.//
நான் யாரிடமும் தனி மனித தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என நினைக்கிறேன். ஆனாலும் நீ என்னை குள்ளநரி, இது, ஊளையிட்டிருக்கு என்று எல்லாம் சொல்லி இருப்பதால் சூடு சொரணை கெட்டு எல்லாம் என்னால் இருக்கமுடியாது.
இதோ உனக்கான பதில் : பதிவை நல்லா படிச்சிட்டு பின்னூட்டம் போடுடா பரதேசி நாயே.
@ SanJaiGan:-Dhi
உனக்கு அறிவு கிடையாது உன்னால புரிஞ்சுக்க முடியாதுனு சொன்னாலும் நீ கேக்க மாட்டியே?
இருந்தாலும் இன்னொரு தடவை முயற்சி பண்றேன்.
இப்போ, பன்றி இருக்கில்லே பன்றி, அந்த பன்றி கூட சேர்ந்த கன்றும் “அதை” சாப்பிடுமுன்னு சொல்றாங்கல்ல, அதுக்கு பொருள் என்னான்னா? பன்றி கூட சேர்ந்த கன்றை திட்டுவதன் மூலம் “அதை” சாப்பிடுவது பன்றினு சொல்ல வர்றாங்க. இப்போ காங்கிரசு கூட சேர்ந்த தி.மு.க. வும் பா.ம.க.வும் , பன்றியுடன் சேர்ந்த கன்றுபோல அதாவது ”அதை” சாப்பிடுவது போல என்று சொன்னால், “அதை” சாப்பிடுவது காங்கிரசு மற்றும் உன்னைப் போல அண்டனியோ மைனாவின் அடிபொடிகளின் வழக்கம் என்றும் திமுகவுக்கும், பாமகவுக்கும் அது வழக்கமல்ல என்றும் பொருள்.
அதே போலத்தான் நரியிடம் போய் நாட்டாமை கேட்டால் என்று கேட்டவனை திட்டுவதன் மூலம் அவங்க யாருகிட்டே கேக்கிறாங்களோ அவன் நரி போன்றவன் என்பது பொருள்.
யப்பா இப்பவே கண்ணைக் கெட்டுதே..
நீ ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் குழி பறிக்கிற வேலையை செய்யும் போது அது என்னையும் சேர்த்துத்தான் பாதிக்கப் போகிறது. இதுலே தனியா வேற என்னிய திட்டனுமா?
உன்னைய மாதிரி சிங்களன் போடும் எலும்புத் துண்டுக்காக வாலையாட்டும் காங்கிரசுக் காரன் இன்னும் தமிழ் நாட்டுல நடமாடிகிட்டு இருக்கான் அப்பிடிங்கும் போதே, தமிழனுக்கு சூடு சொரனை இல்லைங்கிறது தெளிவாகிப் போச்சே. நானும் தமிழன் தான்.
எனக்கும் ம்ஹும்... கிடையவே கிடையாது..
:-)
//ஈழவிடுதலைக் குறித்து கலைஞர் வடிக்கும் கண்ணீரும், மருத்துவர் இராமதாசின் கண்ணீரும் யாருக்காக என்றே தெரியவில்லை//
கோவியாரே!
என்ன?? இது பகிடி தானே!
எப்போ இவங்க கண்ணீர் விட்டாங்க..ஈழத் (விடுதலைக்கு) தமிழருக்கு.
அப்பப்போ.. வாரிசுகளினால் ஏற்படும் குழப்பத்தாலும்; உட்கட்சிப் பூசலாலும்; எதிர்கட்சிக் குடைச்சலாலும் ..பதவியும்;சுகமும் போய் ஒய்யாரமாக மானட மயி(ரா)லாட பார்க்க முடியாதே!!
எனும் கவலையில் கண்கலங்கியிருக்கலாம்.
கருத்துரையிடுக