பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2008

இறைவன், ஒளி, பகுத்தறிவு பகலவன், கார்த்திகை தீபம் !

தீபம் என்ற வடசொல் தீ என்கிற தமிழெழுத்தில் இருந்து 'படைத்துக்' கொண்ட ஒரு சொல். தீபம் என்பதற்கு சரியான தமிழ் சொல் 'சுடர்'. இரவின் ஒளிவெள்ளமான முழுநிலா நாளை பல சமயங்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர். பவுத்த சமயத்தில் 'புத்த பூர்ணிமா' என்கிற பண்டிகை முழுநிலா நாளை ஒட்டிக் கொண்டாடப்படுபவை. இந்திய சமயங்களில் முழுநிலா நாள் இறை நம்பிக்கையை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது. முழுநிலாவில் முழுமையான ஒளி கிடைப்பதால் ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளில் சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பூரம், தைப்பூசம், வைகாசி விசாகம் (புத்த பூர்ணிமா) போன்றவை சிறப்பான முழுநிலா நாட்களாக கருதப்பட்டு கொண்டாப்படுகிறது. தைப்பூசம் மற்றும் சித்திரா பவுர்ணமி ஆகியவை முருகனுக்கு உகந்த நாளாக கருத்தப்பட்டு அந்நாளில் காவடி எடுப்பது வழக்கம். தைபூசம் வள்ளலார் மன்றத்தினரால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வளர்ச்சி என்னும் பாசிடிவ் சித்தாந்ததில் வளர்பிறை நாளில் எதையும் தொடங்கினால் எதுவும் வளர்ச்சி அடையும் என்பது இந்திய சமய நம்பிக்கை. இஸ்லாமிய சமயத்தினரும் வளர்பிறையை ஒட்டி அவர்களது பண்டிகைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மரணம் என்பது கெட்ட நிகழ்வென்பதால் முற்றிலும் நிலா கருமையான நாளான அமாவாசை (கருநிலா) நாளில் திதி போன்ற மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்கிறார்கள்.

வெளிச்சம், அல்லது ஒளி என்பது அறிவு என்றும் கருமை என்பது அறியாமையையும் குறிக்கும் ஒரு குறியீடாக பயன்படுத்துக்கிறது. இறைவன் பேரரறிவு உடையவன் என்பதற்காக இறைவன் ஒளிமயமானவன், பேரொளி என்பதே அனைத்து சமயங்களின் அடிப்படை நம்பிக்கை, அதற்கு பிறகு தான் மதம், வழிபாடு, உருவமுள்ள வழிபாடு உருவமற்ற வழிபாடு, ஓரிறைக் கொள்கை, பரப்பிரமம் எல்லாம். அறிவொளி / ஆன்மிக ஒளி என்பதன் குறியீடாகவே ஆன்மிக பெரியோர்கள், மற்றும் உருவ வழிபாட்டுச் சின்னங்களில் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் வரைகிறார்கள்.

விளக்கேற்றுவது என்பது வெளிச்சம் பெறுவதற்கான நிகழ்வு. எனவே தான் விளக்கேற்றும் பழக்கம் வந்தது. அனைத்து சமய சமூகத்திலும் அது நெய்விளக்காக இருந்தாலும் சரி, விலங்கு கொழுப்பில் செய்யப்பட்ட மொழுகுவர்த்தியாக இருந்தாலூம் சரி விளக்கேற்றி வழிபடுவது என்பது இருள் எண்ணும் அறியாமையைப் போற்றிக் கொண்டு அறிவு என்னும் வெளிச்சம் பெருகிறோம் என்பதற்கான குறியீட்டு நிகழ்வு.

பகுத்தறிவு பகலவன் என்று பெரியாரைச் சொன்னாலும், புத்தரைச் சொன்னாலும் பகலவன் என்பதில் இருக்கும் ஒளியை பெரியாரின் / புத்தரின் அறிவுத் திறனுடன் ஒப்பிடுவதாகப் பொருள், அறிவென்பது வெளிச்சம் அல்லது ஒளியாகவே ஆத்திகமாக இருந்தாலும் சரி நாத்திகமாக இருந்தாலும் ஒரே பொருள் தான் கொள்ளப்படுகிறது.

ஆன்மாவானது இறைவனைப் போலவே ஒளிவடிவமானது என்ற பொருளில், இறந்தவர்களின் நினைவாக சிறிது காலம் அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தீபம் ஏற்றிவைப்பார்கள்.

கார்திகை நாளில் தீபம் ஏற்றுவது இந்திய சமயத்தினரின் வழக்கமாகவும், திருவண்ணாமலையில் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. (அது சமண சமயச் சடங்கின் தொடர்ச்சி என்று ஒருசாரர் சொல்கின்றனர்), தீபத்திருநாளுக்கும், கார்த்திகை தீபங்களுக்கும் சமயக் கதைகளைத் தள்ளிப் பார்த்தால் ஒரே ஒரு வேறுபாடுதான் தீபத்திருநாள் அமாவாசையில் வருகிறது, இருள் அகற்ற ஏற்றும் ஒளி, கார்த்திகை தீபம் பவுர்ணமி நாளில் இறைவனின் நினைவுறுவதாக ஏற்றப்படுகிறது.

இறைவன் ஆன்மாவினால் (உள்ளார்ந்த அனுபவம்/தூய்ப்பு) கண்டுணரும் (வெப்பமற்ற) பேரொளி வடிவானவன் என்பதாகவே அனைத்து மதங்களின் நம்பிக்கை.

"சுடர்மிகும் ஜோதியிலே.... சுந்தரன் உ(ன்)னைக் கண்டேன்...." என்று இறைவனைஇ நினைத்து நெய்யாக உருகுபவர்களா நீங்கள் ? உங்கள்,

அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் !




"நாய் கடிக்கிறது என்பதற்காக திருப்பி நீங்க கடிக்கனுமா ?" - பதிவுலக தம்பி.
"நல்ல கேள்வி...அப்படி நினைக்கிறதும் கூட தப்புதான்பா" - என்றேன்.

7 கருத்துகள்:

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//"சுடர்மிகும் ஜோதியிலே.... சுந்தரன் உ(ன்)னைக் கண்டேன்...." என்று இறைவனை நினைத்து நெய்யாக உருகுபவர்களா நீங்கள் ?//

ஆமாம்!
கோவியும் அப்படித் தானாம்!

தனியா உருக கூச்சமா இருக்குன்னு எங்களையும் அப்படியே சொல்லச் சொல்லி இருக்காரு! :))

சரி, கோவி அண்ணாவின் தீபம்(பதிவு) சூடாகுமா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை!
//

வாழ்த்துக்களுக்கு நன்றி !

அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை! - வள்ளலார் அன்பர்களுக்கான வாழ்த்துக்கள். எனக்கு வள்ளலார் பிடிக்கும் அவ்வளவுதான். "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்ற தன்னம்பிக்கையற்ற அவரது புலம்பல் எனக்கு ஏற்பு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆமாம்!
கோவியும் அப்படித் தானாம்!//

கோவி அப்படிப்பட்டவர் என்றாலும் அதிலும் தனிப்பட்டவன் தான் !

//தனியா உருக கூச்சமா இருக்குன்னு எங்களையும் அப்படியே சொல்லச் சொல்லி இருக்காரு! :))//

எனக்கு வேண்டுதல் எதுவும் கிடையாது எனவே நான் உருகுவது கூட இல்லை. கூட்டமும் சேர்க்கப் பிடிக்காது.

//சரி, கோவி அண்ணாவின் தீபம்(பதிவு) சூடாகுமா? :)
//
தீபம் சூடாகுவது முதன்மையானது அல்ல, வெளிச்சம் தான் முதன்மை. சூடாகாவிட்டாலும் கவலை இல்லை.

வால்பையன் சொன்னது…

குடிசை மேல விளக்கு வச்சு குடிசை எரிஞ்சிட்டா சாமி குத்தமுன்னு சொல்லிரலாமா?

நான் பதிவ படிக்கவே இல்லை

நசரேயன் சொன்னது…

கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//சரி, கோவி அண்ணாவின் தீபம்(பதிவு) சூடாகுமா? :)//

repeateyyyyyyy

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்