
திரையுலகில்


தமிழகத்தின் முதன்மை வரலாற்று நிகழ்வென கலைஞர் அரசால், தை ஒன்றாம் தேதி அரசறிவிப்பாக (அதிகார பூர்வ) தமிழ் புத்தாண்டாக முன்மொழியப்பட்டு ஜெ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களால் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. பஞ்சாங்கக்காரர்களுக்குத்தான் சிறிது திண்டாட்டாம். கவலைப் படவேண்டாம் தினமலர் வகையராக்கள் சித்திரைக்கு புத்தாண்டு கொண்டாடும்.
ஒக்கனேக்கல் தொடர்பான சர்சைகள், நடுவன் அரசான காங்கிரசுக்கு இடற்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக கலைஞர் அரசின் மெத்தனம், நடிகர்களின் உண்ணா நோன்பு காமடி, செண்டிமெண்ட், அழுகாச்சி, திட்டத்தின் தற்காலிக முடக்கம், குசேலன் பெட்டிக்குள் போகும் என்ற அறியாமையால ரஜினியின் வருத்தம். ஒக்கேனேக்கல் திட்டம் 2009ல் ஆவது நிறைவேற வேண்டும். இந்த ஆண்டில் கன்னடமும், தெலுங்கும் செம்மொழி சிறப்பு தகுதி அடைந்திருக்கிறது.

தனிப்பட்ட முறையில் 2008 ஆம் ஆண்டு, பதிவுலகில் என்னை இணைத்து பங்காளிச் சண்டை, பல புதிய பதிவர்களின் அறிமுகம், கடந்த ஆண்டுகளில் இல்லாதா அளவாக 400 இடுகைகள் (வாவச, காலங்கள் கவிதைகள், மற்றும் காலம்), சென்னை பதிவர் சந்திப்பு, சிங்கைப் பதிவர் சந்திப்புகள், பினாங்கு பதிவர்கள் சிலருடன் (பாரி அரசு, ஜெகதீசன் மற்றும் டிபிசிடி), டிபிசிடி இல்லத்தினருடன் எனது இல்லத்தாரும் இணைந்த லங்காவி, கேமரான் ஹைலாண்ட் மலேசிய இன்பச் சுற்றுலா குறிப்பிடத் தக்கவை.
மோகன் கந்தசாமியின் வலையுல பேட்டிகள், கட்டுடைத்தல் என்னும் எழுத்து சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட லக்கி லுககின் ஜட்டிக் கதைகள், அதிஷா வின் துள்ளல் கதைகள், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக் கதைகள். டோண்டு ராகவனின் வலையுலக துக்ளக் பாணி கேள்வி பதில்கள், பரிசல்காரனின் அவியல், வடகரை அண்ணாச்சியின் கதம்பம், குசும்பனின் கார்டூன், கேஆர்எஸ்சின் ஆன்மிகம் என பரவாலாக வாசிக்கப்பட்டதாக நினைக்கிறேன்.
புதிய பதிவர் நண்பர்கள் என பரிசல், வடகரைவேலன், வால்பையன், சஞ்செய், அப்தூல்லா, வெண்பூ, கார்க்கி, நிஜமா நல்லவன், லதானந்த் , ச்சின்னப் பையன், நசரேயன், மனசாட்சி கிரி, ஸ்வாமி ஓம்கார், ஜோசப் பால்ராஜ், ஜோதி.பாரதி, ஜமால், நர்சிம், முரளி கண்ணன், விக்னேஷ்வரன், டொன்லி.......மற்றும் பாலோயர் பட்டியலில் இருக்கும் 69 பேர் என பட்டியல் 2008ல் மிக நீளம்.
தமிழ்பதிவுலகினரால் மறக்க முடியாத பதிவாக அமைந்த பெண் பதிவர் அனுராதா அவர்களின் மரணம்.
இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,
1.லக்கிலுக்
2.பரிசல்காரன்
3. அதிஷா
இந்த ஆண்டின் தமிழர்களால் மிகுதியாக பேசப்பட்ட பெயர்

இயக்குனர் சீமான்
இந்த ஆண்டு 'இந்தி'யர்களால் மிகுதியாக பேசப்பட்ட பெயர்

அமீர்கானின் 'கஜினி'
இந்த ஆண்டின் உலக நாயகன்

பாரக் ஒபாமா
*****
வரப்போகும் 2009ம் ஆண்டில் பொருளாதார சீர்குழைவை தத்தமது நாட்டில் சரிசெய்வதற்கான உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டாகவேண்டும், இந்திய அரசியல் களம் பாராளுமன்ற தேர்த்தலை எதிர்நோக்கியுள்ளது.
பின்குறிப்பு : எழுதியவை யாவும் எனது தனிப்பட்ட அவதனிப்புத்தான் வலியுறுத்தல் எதுவும் இல்லை.
20 கருத்துகள்:
\\"விடைபெறும் கடந்த காலம் 2008 - சில எண்ணங்கள் !"\\
கேள்வி என்ன?
நல்ல அவதானிப்பு..:-)
\\சென்ற ஆண்டு மிகுதியான படங்களில் நடித்தவர் பாவனா வாக இருப்பார் என்றே நினைக்கிறேன்\\
அட நம்மாளு
\\புதிய பதிவர் நண்பர்கள் என பரிசல், வடகரைவேலன், வால்பையன், சஞ்செய், அப்தூல்லா, வெண்பூ, கார்க்கி, நிஜமா நல்லவன், ச்சின்னப் பையன், நசரேயன், மனசாட்சி கிரி, ஸ்வாமி ஓம்கார், ஜோசப் பால்ராஜ், ஜோதி.பாரதி, ஜமால், நர்சிம், முரளி கண்ணன், விக்னேஷ்வரன், டொன்லி.......மற்றும் பாலோயர் பட்டியலில் இருக்கும் 69 பேர் என பட்டியல் 2008ல் மிக நீளம்.
\\
அட நம்ம பேரும் கீதே ...
நன்றி அண்ணா ...
\இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,
1.லக்கிலுக்
2.பரிசல்காரன்
3. அதிஷா\\
நல்ல விஷயம்.
அப்படியே சென்ற ஆண்டு பதிவர்கள் பெயரையும் போட்டால் - என்னை போன்ற புதியோர் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் படம் ஏன் இருண்டகாலமாக தெரிகிறது தமிழ்மணத்தில்? அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா?? :-))
ஜமால்,
கோவிச்சிக்கப் போறிங்கன்னு ஒரே ஒரு பின்னூட்டத்துக்கு மட்டும் மறுமொழி கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்.
:)
//வடுவூர் குமார் said...
உங்கள் படம் ஏன் இருண்டகாலமாக தெரிகிறது தமிழ்மணத்தில்? அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா?? :-))
//
அந்தப் படத்தை நீங்களும் பார்த்திட்டிங்களா...ஐயையோ..... இராமு உனக்கு என் கையாலாதான்...
பலருக்கு அதுபோல் இருண்டகாலமாகத்தான் காட்டுது. தமிழ்மணம் சதி !!! :)))))
//'டொன்' லீ 12:16 PM, December 29, 2008
நல்ல அவதானிப்பு..:-)
//
:) அப்படிங்கிறீங்க...? நன்றி !
//இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,
1.லக்கிலுக்
2.பரிசல்காரன்
3. அதிஷா
4. நான் ஆதவன்//
ரொம்ப நன்றிங்க..
// நான் ஆதவன் said...
//இந்த 2008 ஆண்டின் சூப்பர் பதிவர்களாக நான் நினைப்பவர்கள்,
1.லக்கிலுக்
2.பரிசல்காரன்
3. அதிஷா
4. நான் ஆதவன்//
ரொம்ப நன்றிங்க..
//
சூப்பர் !
நீங்கள் சூப்பர் புதியவர் !
:)))))))
//உங்கள் படம் ஏன் இருண்டகாலமாக தெரிகிறது தமிழ்மணத்தில்? அப்டேட் செய்யவில்லையா அல்லது புலவ் உபின் படம் ஏற்ற தயக்கமா?? :-))//
இதை நான் வழி மொழிகிறேன்..
நிறைய படங்களில் நடித்தவர் நயன்தாரா தான்,
இந்த வருடம் சினிமாதுறை சொல்ல்இகொள்ளும் அளவுக்கு இல்லை,
பேரரசு படங்கள் ஹிட் ஆகிது,
பெரிய டைரக்டர்கள் மண்ணை கவ்வினர்,
//நிறைய படங்களில் நடித்தவர் நயன்தாரா தான்,//
தகவலுக்கு நன்றி வால்பையன்!
நான் கூட 2008ல் காலம் வலைப்பூ விடைபெறுகிறதுன்னு நினைச்சிட்டேன்!
கடைசில பாத்தா சப்புன்னு போயிடுச்சு!
//திரையுலகில் வரலாறு காணாத படமென உலக நாயகனின் தசவாதராம் வந்து சென்றது.//
இது செம நக்கலு!
//திரிசா//
இது என்ன புதுசா?
//லக்கி லுககின் ஜட்டிக் கதைகள்//
இது யாரு புதுசா?
//எனதுதனிப்பட்டஅவதனிப்புத்தான்//
இது என்ன அவ தனிப்பு?
//கலைஞர் அரசால்//
எந்தக் கலைஞர்? ஜால்ரா கலைஞர்?
இப்படிக்கு,
ராவணன்.
இவ்வளவு நடந்திருக்கா 2008 ல
அருமையான அலசல்
நன்றி கோவி-ஜி! வேற என்ன சொல்றதுன்னு தெரியல! உங்கள் அன்புக்கு... நெகிழ்ச்சியான மகிழ்ச்சிகள்!!!
அட.. இந்த மேட்டர்ஸ் நல்லா இருக்கே.. நட்புக்கு நன்றி கோவியாரே.. கருத்து மோதல்களையும் தனிப் பட்ட நட்பையும் புரிந்துக் கொள்ளாத கத்துக் குட்டிகள் உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்..
கருத்துரையிடுக