நேற்று முதல் படப்பிடிப்புடன் தொடர்கிறது "பாசக் கிளிகள்" (பகுதி 2 )
கதை, திரைக்கதை வசனம் : கலைஞர் மு.கருணாநிதி
செய்தி மற்றும் விளம்பரம் : லக்கி லுக்
மக்கள் தொடர்பு : வலையுலக திமுக அனுதாபிகள்
நடிகர்கள் : மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாநாயகன் மற்றும் வில்லனாக முக அழகிரி, இரண்டாவது கதா நாயகன் கலாநிதி மாறன், மூன்றாவது கதாநாயகன் தயாநிதி மாறன்.
நகைச்சுவை : சன் டிவி மற்றும் கலைஞர் டிவி சின்னத் திரை கலைஞர்கள்
கவுரவத் தோற்றம் : முக ஸ்டாலின்
சிரிப்பு நடிகர்கள் : கட்சித் தொண்டர்கள்
இசை : ஜிங்சா கலைஞர்கள்
தயாரிப்பு : க்ளவுட் நைன் மற்றும் சன் டிவி
டைரக்சன் : எல்லாம் நேரம் தான்.
கதைச் சுறுக்கம் : பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் தலைவரின் வாரிசுகளுக்கும், தலைவரின் மாமன் மகன்களுக்கும் நடக்கும் சண்டை. யாரை மக்கள் மதிக்கிறார்கள் என்ற கணக்(கு) கெடுப்பில் முட்டல் மோதலில் தலைவரின் மகனுடைய ஆட்கள் மாமன் மகன்களின் அலுவலகத்தில் புகுந்து மூன்று பேரை கொலை செய்துவிடுகிறார்கள். இதை பெருத்த அவமானமாக கருதிய மாமன் மகன்கள் பதவியை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு அநீதிக்கு எதிராக போராடுகிறார்கள். ஒருபக்கம் தாத்தாவின் குடும்பம் என்கிற பாசம், மறுபக்கம் தொழில் போட்டித் தன்மை. முடிவில் பாசம் வெல்கிறதா ? அநீதி வென்றதா ? கலைஞர் கருணாநிதியின் சிறப்பான வசனமாக "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்ற ஒருவரித் தீர்வுடன், சண்டைக் காட்சிகளுடன் காணத் தயாராகுங்கள் பாசக் கிளிகள். பாசமே வென்றது என்று மற்றொருமுறை தமிழனத்துக்கும் உணர்த்தும் உன்னதகாவியம் என்றே படப்பிடிப்பு தொடக்கத்தில் கலந்து கொள்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
******
அடப்பாவிகளா....! இது தெரியாமல் சின்ன மாறன் பார்பனர் வீட்டு மருமகன் என்பதற்காக மாறன்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், மாறன்கள் திமுகவை அழிக்கிறார்கள் என்று எதிராக மற்றொரு மற்றொரு கூட்டமும் மாய்ந்து மாய்ந்து பதிவுகளை எழுதித் தள்ளியது நல்ல நகைச்சுவை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
38 கருத்துகள்:
நல்ல காமெடி!
:-)))...
படத்தின் முடிவில், எப்படியாவது, அந்த மூணு பேரும் சாகலை, சாகர மாதிரி நடிச்சாங்கன்னு சொல்லிட்டா, வேடிக்கை பாக்கும் பொதுசனம் சார்பா, ஒரு விசிலடிச்சுட்டு போவேன்.
என்ன கொடுமைங்க இதெல்லாம்.
ஒன்லி பாஸிபில் இன் டமில்நாடு. :(
//SurveySan 1:45 PM, December 02, 2008
படத்தின் முடிவில், எப்படியாவது, அந்த மூணு பேரும் சாகலை, சாகர மாதிரி நடிச்சாங்கன்னு சொல்லிட்டா, வேடிக்கை பாக்கும் பொதுசனம் சார்பா, ஒரு விசிலடிச்சுட்டு போவேன்.
//
இந்த பின்னூட்டத்திற்கே ஒரு விசில் அடிக்கலாம் போல இருக்கு. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)
சார் இந்த படம் சன்டிவில போடுவாங்களா இல்ல கலைஞரா?
(தோழர் பின்னூட்ட தாக்குதல்களுக்கு தயாரகவும்)
போயா! கூறு கெட்ட குப்பா!
ச்சும்மா பின்னூட்ட தாக்குதல்த்தனம்
படத்தில் பாடல்கள் உண்டா?
புதிதாக எதையும் எழுத வேண்டாம்; எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்களையே இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
உதாரணம்:
1. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்!
2. உலகம் பிறந்தது எனக்காக? ஓடும் நதிகளும் எனக்காக!
3. புதிய வானம், புதிய பூமி; எங்கும் பனி மழை பொழிகிறது!
4. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
//மாய்ந்து மாய்ந்து பதிவுகளை எழுதித் தள்ளியது//
:)
சொல்லுறது யாரு ? கோவியாரு :)
@சுப்பையா சார்
இந்த பாட்ட விட்டுட்டீங்களே
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு
/////அதிஷா
@சுப்பையா சார்
இந்த பாட்ட விட்டுட்டீங்களே
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு//////
அது எம்.ஜி.ஆரின் படப் பாடல் இல்லையே மிஸ்டர் ஆதிஷா
தலைவரின் படப் பாடல் என்றால்தான் இயற்கையாகவே ஒரு 'கிக்' இருக்கும்
படமும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகி பிய்த்துக்கொண்டு ஓடும்!
//ஜோ / Joe said...
//மாய்ந்து மாய்ந்து பதிவுகளை எழுதித் தள்ளியது//
:)
சொல்லுறது யாரு ? கோவியாரு :)
//
ஜோ, என்ன இப்படி சொல்லிட்டிங்க, இந்த மேட்டரை பொறுத்தவரை இது இப்படியாக முடியும் என்பது முன்னமே தெரிந்தது தான்.
//SP.VR. SUBBIAH said...
படத்தில் பாடல்கள் உண்டா?
புதிதாக எதையும் எழுத வேண்டாம்; எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்களையே இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
உதாரணம்:
1. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்!
2. உலகம் பிறந்தது எனக்காக? ஓடும் நதிகளும் எனக்காக!
3. புதிய வானம், புதிய பூமி; எங்கும் பனி மழை பொழிகிறது!
4. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
//
வாத்தியார் ஐயா, அந்த பாட்டெல்லாம் இல்லை.
"ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்" என்கிற பாடலை கலைஞர் பாடுவது போல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதாம் :)
// அதிஷா said...
சார் இந்த படம் சன்டிவில போடுவாங்களா இல்ல கலைஞரா?
(தோழர் பின்னூட்ட தாக்குதல்களுக்கு தயாரகவும்)
//
இரண்டிலும் போடுவார்கள், பார்க்கிறவர்கள் பற்றி அவங்களுக்கு என்ன கவலை,
இந்த வாரம் சன் திரைவிமர்சனத்தில் வாரணம் ஆயிரம் வந்துடும்.
இப்ப 'ரவுண்டா' குடுத்துறுப்பாங்களாயிருக்கும் !
இதையெல்லாம் பெருசு பண்ணலாமா?
(கேண)உடன்பிறப்புகள் மாதிரி இதையும் வாயைப் பொளந்து பாத்துகிட்டு,ஆ தலைவர் என்னமா முடிவு எடுத்து அரவணைக்கிறாரு அப்படின்னு சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான் !
செம காமெடி... உங்க பதிவ மட்டும் சொல்லல.. கட்சிக்காரனுங்கள வெச்சி அவங்க அடிச்சாங்களே அதை சொன்னேன்.. ஆனாலும் இந்த உனா பினா மக்கள்லெல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.. :))))
அறிவிழிய விட்டுட்டீங்களே
கதை, திரைக்கதை, வசனம்--- அறிவிழி
"நீரடிச்சு நீர் விலகாது" - சரி
"பணத்தை பணத்தால அடிக்கலாம்" -ரொம்பச்சரி
ஆனா அவிங்க அதிகார விளையாட்டுல போன உசிரு திரும்பாதே, என்ன பண்றது?
//"ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்" என்கிற பாடலை கலைஞர் பாடுவது போல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதாம் :)//
செல்லாது ..செல்லாது ..அது சிவாஜி பாட்டு.
அருண், இராம், பிரேமானந்த் / ஆறுமுகம் சித்தப்பா நன்றி !
//அதிஷா said...
போயா! கூறு கெட்ட குப்பா!
ச்சும்மா பின்னூட்ட தாக்குதல்த்தனம்
//
அம்புட்டு குசியாயிட்டியலா ? :)
எஞ்சாய் மாடி !
// ஜோ / Joe said...
//"ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்" என்கிற பாடலை கலைஞர் பாடுவது போல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதாம் :)//
செல்லாது ..செல்லாது ..அது சிவாஜி பாட்டு.
//
"(இனி) நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..." - இதையாவது அனுமதிப்பிங்களா ?
நன்றி கண்ணன் நல்ல நகைசுவை உங்கள் பதிவுகள் தொடரவேண்டும்
நன்றி
//வாசகன் said...
(கேண)உடன்பிறப்புகள் மாதிரி இதையும் வாயைப் பொளந்து பாத்துகிட்டு,ஆ தலைவர் என்னமா முடிவு எடுத்து அரவணைக்கிறாரு அப்படின்னு சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான் !
//
நடிகர்களின் ரசிகர்கள், கட்சி விசுவாசிகள் அனைவருமே இப்படித்தான் சிலாகிப்பாங்க.
//வெண்பூ said...
செம காமெடி... உங்க பதிவ மட்டும் சொல்லல.. கட்சிக்காரனுங்கள வெச்சி அவங்க அடிச்சாங்களே அதை சொன்னேன்.. ஆனாலும் இந்த உனா பினா மக்கள்லெல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.. :))))
//
உபிகளுக்கு ராசிப்பலனில் இந்தவாரம் வடக்க சூலமாம். :)
//அத்திரி said...
அறிவிழிய விட்டுட்டீங்களே
கதை, திரைக்கதை, வசனம்--- அறிவிழி
//
அறிவிழியும் நல்லா எழுதுறார். கலைஞரே வசனம் எழுதும் போது தொண்டர் எழுதுவது அவ்வளவு நல்லவா இருக்கும் ?
ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு கூட்டு மயிலாக
பாடு பண் பாடு!
என்னனென்ன வேண்டுமோ
அண்ணனை கேளுங்கள்!
இந்த பாட்டு பொருத்தமாக இருக்குமா? :))
காமடியன் யாரு ஹச்.ராசாவா? இல்ல நம்ம மாதிரி பொது ஜனமா? :))
இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி மக்கள் எல்லாம் குதிக்கறோம் !
:-))))))))
ஒன்னுமே புரியல உலகத்துல.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
இந்தப் பாட்டு பார்வையாளர்களுக்கானது
நல்ல கற்பனை...இந்தப் படம் வெகுவிரைவில் சன்னிலோ கலைஞரிலோ வரட்டும்
விடுங்க நல்லா இருந்துட்டு போறாங்க!
இதையெல்லாம் விளம்பரப் படுத்தி மரித்துப் போன அப்பாவிகளின் உறவினர், நண்பர்கள் மற்றும் தமிழக மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்களே!
:)
பின்னூட்டமளித்த களித்த அனைத்து மகாத்மாக்களுக்கும் நன்றி. "மகாத்மாக்கள்" பிரிச்சு படிச்சிடாதிங்க :) அப்பறம் அச்சுதானந்தன் கேஸ் ஆகிடும்
என்ன... கொடும சார் இது...
தமிழனுக்கு இப்படி ஒரு நிலமையா?
இவனுங்கள நம்பி தமிழ்நாட்டுல நாம உயிரோட வாழனுமா?
//
அடப்பாவிகளா....! இது தெரியாமல் சின்ன மாறன் பார்பனர் வீட்டு மருமகன் என்பதற்காக மாறன்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், மாறன்கள் திமுகவை அழிக்கிறார்கள் என்று எதிராக மற்றொரு மற்றொரு கூட்டமும் மாய்ந்து மாய்ந்து பதிவுகளை எழுதித் தள்ளியது நல்ல நகைச்சுவை.
//
:)))))))))))
/*
டைரக்சன் : எல்லாம் நேரம் தான்.
*/
எனக்கு கொடுங்க
//தயாரிப்பு : க்ளவுட் நைன் மற்றும் சன் டிவி
//
உதயநிதியை விட்டுவிட்டீர்கள்.....
காகித் ஓடம்,
கடல் அலை மீது,
போவது போலே மூவரும் போவோம்
விரைவில், மீண்டும் தலை சொத்து பிரிக்க படும்பொழுது அது வரை...
எங்கள் வீட்டில் எல்ல நாளும் டிராமா தான்,
இல்லை இல்லை எஙகும் இஙகு மனசாட்சித்தான்
உடன்பிறப்பே பார்த்தாயா - பார்ப்பன பத்திரிகைகள், பார்ப்பன பதிவு உலகம் இந்த மாபெரும் முக்கிய செய்தியை (முதல்வரின் குடும்ப சண்டை முடிந்து போனதை) பிரசுரிக்காமல் இன்னும் ஆரியர்கள் சார்ந்த பிரச்சனையாம் மும்பை கலவரத்தை மட்டுமே எழுதி தீர்க்கின்றன.
குப்பன்_யாஹூ
கருத்துரையிடுக