க்கூ ... க்கூ ஹைக்கூ என கூவும் ஹைக்கூ ரசிகர்களுக்காக. மூன்று வரியில் கவிதை இல்லை ... கதை சொல்வது தான் ஹைக்கூ. கவிதைகளை விட ஹைக்கூ எனக்கு மிகவும் பிடித்தது. சுருக்கமாகவும், சுருக்கென்றும் இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் பலருக்கும் பிடிக்கும்.இன்றைய ஹைக்கூ இதோ ...
பெற்ற கடன்
மணக்கோலத்தில் மகள்
பெற்ற 'கடன்'
கண்ணீருடன் தந்தை !
15 கருத்துகள்:
நல்ல ஹைக்கூ!!
நன்றி!
//Sivabalan said...
நல்ல ஹைக்கூ!!
நன்றி!
//
வாங்க, சிவபாலன்
அடிக்கடி வந்து அருள்வாக்கு சொல்லிட்டு போங்க :)
மாலை நேர மழையில்
பூத்துதிர்ந்த மலர்கள்
வானவில்!
//SK said...
மாலை நேர மழையில்
பூத்துதிர்ந்த மலர்கள்
வானவில்!
//
திருவாளர் எஸ்கே,
ஹைக்கூவில் உவமை வரக்கூடாது என்பது விதி... நீங்கள் சொன்னது கவிதை. நல்லயிருக்கு :)
சரி, விட்டுருவம்!
திரு எஸ்கே, மேலும், சில விளக்கம்,
ஹைக்கூ ... சிலேடை பாடல் என்றும் சொல்கிறார்கள்.. மேலே உள்ள ஹைக்கூ இரண்டு பொருள்களைத் தரும். 1. பெற்ற கடனுக்கு அதாவது பாசத்தால் அவளை பிரிவதற்காக தந்தை அழுகிறார். 2. மகள் திருமணத்திற்காக பெற்ற கடனுக்கு அதாவது வாங்கிய கடனை நினைத்து (கடன் பெற்றதற்காக) தந்தை அழுகிறார் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
கடன் வாங்கி கல்யாணம் பண்ணுவதற்கு யாராவது அழுவார்களா ? யதார்த்தம் - அழுவார்கள்
அருமையான ஹைக்கூ!
ஹைக்கூவும் அருமை கார்ட்டூனும் அருமை
அருமை..வெகு எதார்த்தம்.. வாழ்த்துக்கள்.
சுகா
//கலை அரசன் said...
ஹைக்கூவும் அருமை கார்ட்டூனும் அருமை
//
கலையரசன், ரசனையான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி
//ப்ரியன் said...
அருமையான ஹைக்கூ!
//
ப்ரியன்,
நன்றி உங்களைப் போல் ஹைக்கூ ரசிகர்களால் நெகிழ்ந்து போகிறேன்
//Suka said...
அருமை..வெகு எதார்த்தம்.. வாழ்த்துக்கள்.
சுகா
//
உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு
வெகுமதி
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
பின் தொடர்கிறேன்..தொடர்ந்து வருகிறேன்
இலக்கணமெல்லாம் தெரியாதுங்க நமக்கு. படம் நல்லா இருக்கு :-)
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...
கருத்துரையிடுக