பின்பற்றுபவர்கள்

27 ஜூன், 2006

காதலை முதலில் யார் சொல்வது ?

யதார்த்தங்களை அனைவரும் விரும்புகிறோம், யதார்த்தம் பேசுவரை பாராட்டுகிறோம், யதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதில் மட்டும் தயங்குகிறோம். இது ஆண், பெண் அனைவருக்கும் பொருந்தும். பெண்கள் யதார்தம் பேசினால் ஆண்களால் பொருத்துக் கொள்ள முடியுமா ?

காதலை முதலில் யார் சொல்வது ?




எந்த சந்தர்பத்தில் சொல்வது
என்று எண்ணியே,
ஆண்டுகள் ஐந்தாகி விட்டன,
மனதில் உள்ள மழைத்துளிகளின்
குளிர் காற்றை இன்றாவது
இறக்கி சொல்லிவிட வேண்டும் !
இதே உணர்வுகள்,

அவளுக்கு இருக்குமோ ?
யார் முதலில் சொல்வது ?
நாணம் பெண்களை தடுப்பதால்,
பெண்ணிய வாதியான நான்
எதிலும் பெண் முதல் என்றதிலிருந்து
சற்றே பின்வாங்கினேன் !

இதைச் முதலில் சொல்வது
நானாகவே இருக்கட்டும் என்ற,
பெரும் தன்மையுடன்,
'என்று முதலில் அவளை சந்தித்தேன் ?,
என்று அவள் என் மனதில் இடம்பிடித்தாள் ?,
என்றெல்லாம் சொல்லிவிட்டு
அவள் முகம்பார்த்தேன் !

இருக்காது என்று நான்
நினைத்ததற்கு மாறாக,
அவளும் 'அவன் போட்டு'
அதே கதையை சொல்லிய பின்,
'தூக்கம் வருகிறது', என
சீக்கரம் படுத்துவிட்ட
என் மனைவியை நினைத்து,
படுக்கை அறை
இருளில் இருண்ட என் முகம்
எனக்கு மட்டுமே வெளிச்சம் !

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீங்கள் சொல்லும் முன்னமே,காலை தமிழ்மணம் பார்த்த உடன் படித்துவிட்டேன்.

கவிதை யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது கோவி!

ஆனால்,வாழ்க்கை முழுதும் யதார்த்தமாக இருந்துவிட்டால் சில சமயங்களில் சங்கடங்கள் வரும் , நன்றாக இருக்காது என்பது யதார்த்தமான உண்மை :)

பெயரில்லா சொன்னது…

கடைசியில எதிர்பாராத திருப்பம் ஆனாலும் இதெல்லாம் நடக்குற கதை தான்...

பெயரில்லா சொன்னது…

Kavithai Nallarukku Kanna!

கோவி.கண்ணன் சொன்னது…

//At 9:18 AM, JTP said…

Kavithai Nallarukku Kanna!
//
JTP,
ஆகா.........வந்துட்டான்யா வந்துட்டன்.
எப்படியப்பு கண்டுபிடிச்சி கரட்டா வந்து புடிச்சீக ..... :)

பெயரில்லா சொன்னது…

உங்களது பெரும்பாலான கவிதைகள், முன்னதாகவே முடிவை, முடிவு செய்து கொண்டவைகளாகவே அமைவதைக் காண்கிறேன்!

உண்மையான கவிதை, தானே முடிவைத் தேடிப் போகும்!
இதற்காக இந்தக் கவிதை குறைவு எனச் சொல்ல மாட்டேன்.

முதல் வரியைப் படித்ததுமே இது ஒன்றும் வெறும் காதல் கதையல்ல எனத் தெரிந்தது!

ஆனால், தூக்கம் வருகிறது என்று சொல்லி முடித்தது என்னால் தாங்க முடியவில்லை!

இது எப்படி யதார்த்தமாகும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால், தூக்கம் வருகிறது என்று சொல்லி முடித்தது என்னால் தாங்க முடியவில்லை! //
சுகா, நீங்கள் சொல்வது ஞாயம்தான், திருமணமாகி ஐந்துவருடம் என்று சொல்வதற்காக

'எந்த சந்தர்பத்தில் சொல்வது
என்று எண்ணியே,
ஆண்டுகள் ஐந்தாகி விட்டன,'

திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆனவர்கள் தூக்கம் வருகிறது என்று சொல்வது எதார்த்தம் தானே !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்