பின்பற்றுபவர்கள்

23 ஜூன், 2006

திமுகவில் செந்தில் ?

டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் பதிவுகளில் எழுதும் நகைச்சுவை கலாட்டாக்களை படித்து வயிறுவலிக்காதவர்கள் இல்லை. அடியேனும் அவர் எழுத்துக்களை படித்து வயிறு குலுங்குபவன். எனக்கும் கொஞ்சம் நகைச்சுவை வரும். இந்த பதிவு ஓட்டுப்பதிவுக்கு பிறகு எழுதியது. நேரமின்மையால் மறந்தே போனேன்.

திமுகவில் செந்தில் ?

கவுண்டமணி : ஏன்டா திருவோடு தலையா, பெருசா சவுண்டு உட்ட, இப்ப இருக்கிற எடம் தெரியலையே ?

செந்தில் : போங்கண்ணே, சினிமாவுல கைகழுவிட்டாங்கன்னு இங்க வந்தா, சரி அத விடுங்கண்ணே !

கவுண்டமணி : நீ ஒரு காமடியன், நீ பைட் பண்ணினா ஜெனங்க ஏத்துப்பாங்களா ?

செந்தில் : அண்ணே, அண்ணே, அது இல்லண்ணே, நான் சொல்லவந்ததே வேற

கவுண்டமணி : இப்ப என்ன ஆயிடுச்சின்னு, முடியில்லதா தலைய போட்டு முட்டிக்கிற ?

செந்தில் : அண்ணே நம்ப காமடியெல்லாம் எடுபடாது போலருக்கண்ணே !

கவுண்டமணி : ஒன்டிக்கு ஒந்தி மல்யுத்தம்னு போட்டு தாக்கிட்டு, இப்ப எதுக்குடா பம்முற

செந்தில் : அண்ணே, அம்மா பக்கம் வைகோ வந்ததால, நாம என்ன காமெடி பன்னிலாலும் ஜெனங்க சிரிக்க மாட்கிறாங்கண்ணே

கவுண்டமணி : வடிவேலு வெச்ச வெடியில நம்ம பொழப்பு நாறிபோச்சுன்னு ஒதுங்குனா, அப்பப்பா இந்த அரசியல் வாதிங்க இருக்கானுங்களே ...

செந்தில் : அதாண்ணே எனக்கும் புரியல ?

கவுண்டமணி : பேசாம ஒன்னு பண்ணு

செந்தில் : என்னண்ணே ?

கவுண்டமணி : திமுக பக்கம் போயிடு !

செந்தில் : அது எப்படிண்ணே, இவ்வளவு கருணானிதிய திட்டிட்டு ?

கவுண்டமணி : அடப் போட, தேங்காத்தலையா ஓடிப் போன கரடிய, அவுங்க திரும்ப புடிச்சி கட்டிக்கலையா ?

செந்தில் : என்னாண்னே புதுச கரடி வுடுறிங்க ?

கவுண்டமணி : நான் கரடின்னு சொன்னது, நம்ப சின்ன பையன் சிம்புவோட அப்பனை தான்டா ஊத்தவாயா !

செந்தில் : இப்ப புரியுதுண்ணே

கவுண்டமணி : நாமல்லாம் காமடி நடிகர்கள், நாம பேசுனதெல்லாம் ஜெனங்க கேட்டு சிரிப்பாங்க கண்டிப்பா சிந்திக்க மாட்டாங்கடா

செந்தில் : அப்ப, கருணாநிதிய திட்டுனத மறந்துடுவாங்கன்னு சொல்லிறிங்களா ?

கவுண்டமணி : ஆமன்டா ஆப்ப வாயா !

செந்தில் : அண்ணே, நீங்க அறிவு ஜீவிண்ணே, நீங்க ஏன்ணே ஒரு கட்சியல சேரக்கூடாது ?

கவுண்டமணி : டேய் உனக்காவது அப்பப்ப அட்வைஸ் அள்ளிவிட நான் இருக்கேன், எனக்கு எவன்டா இருக்கான் ?

செந்தில் : நீங்க சொல்றதும் சரிதான்னே

கவுண்டமணி : அப்படியா ? அப்படியே திரும்பி பார்காம அறிவாலயம் பக்கமா ஓடிபோயிடு, அரசியல் அது இதுன்னு என்ன அடிவாங்க வெச்சுடாதா, வயசாச்சுடா, இந்த எழவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது

செந்தில் : அண்ணே, அண்ணே !

கவுண்டமணி : மவனே, நீ இன்னும் போவல ?
என்று கோபமாக திரும்ப, செந்தில் ஓட்டமெடுக்கிறார்.

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

குலுங்கி குலுங்கி சிரித்தேன் கோவி.கண்ணன்.

பெயரில்லா சொன்னது…

அப்படியே செந்தில் இடுப்புமேல கவுண்டர் ஒரு கிக் கொடுக்கிறமாதிரி ஒரு படம் போட்டீங்கன்னா தூக்கிட்டு போயிரும்..

பெயரில்லா சொன்னது…

:-)

பெயரில்லா சொன்னது…

இட்டிலி வடையார் போட்ட "துக்ளக்" கட்டுரை ,மிக வேதனை தந்தது; நானும் ஈழத்தமிழன் என்பதால்!தூங்குபவனை எழுப்பலாம்;தூங்குவது போல் நடிப்பவனை???????
உங்கள் "கவுண்டர்- செந்தில்"- சிரிக்க வைத்தது.
மிக அருமை!
நன்கு சிரிச்சேன் "கரடி" உவமைக்கு!
யோகன் பாரிஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகறுப்பு said...
குலுங்கி குலுங்கி சிரித்தேன் //
பக்கத்தில் கறுப்பு பூனை படம் கூட எனக்கு சிரிக்கிறமாதிரி தெரியுது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
அப்படியே செந்தில் இடுப்புமேல கவுண்டர் ஒரு//
பாவம் செந்தில் ஏற்கனவே நொந்து வெந்துபோயிருக்கிறார் அவரைப் போய் ..

கோவி.கண்ணன் சொன்னது…

//paarvai said...
உங்கள் "கவுண்டர்- செந்தில்"- சிரிக்க வைத்தது.
மிக அருமை!//
காயத்துக்கு மருந்தாக என்னுடைய காமடி விருந்து இருந்ததா ?
நன்றி அய்யா !

கோவி.கண்ணன் சொன்னது…

//
நன்மனம் said...
:-)
//

நானும் ஹி ஹி ...

பெயரில்லா சொன்னது…

//செந்தில் : அண்ணே, அம்மா பக்கம் வைகோ வந்ததால, நாம என்ன காமெடி பன்னிலாலும் ஜெனங்க சிரிக்க மாட்கிறாங்கண்ணே
//

நல்ல கற்பனை.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்