பின்பற்றுபவர்கள்

16 ஜூன், 2006

வலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...

பதிவுகள் பற்றிய முதல் நகைச்சுவை உறையாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்ததால், இரண்டாவது பதிவு இது. ஏதாவது பதிவுகளைப் படித்து மனம் நொந்து போனால் அப்ப அப்ப வந்து இதை படித்துவிட்டுச் ஆற்றிக் கொள்ளுங்கள். எதோ நான் செய்த சுண்டல் காரமும் உண்டு மணமும் உண்டு என்று நினைக்கிறேன்.



வப 1 : இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை
வப 2 : எனுங்கனும் என்ன ஆச்சு ?
வப 1 : ரொம்ப அக்கரமாக இருக்கு, 'வெட்டறிவாள்' பதிவுக்காரன் அவனோட பதிவுக்கு பதிலுக்கு பின்னூட்டம் போடலைன்னு வக்கில் நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறான்
(வப - வலைப்பதிவாளர்)


வப 3 : 'கேனையன் பக்கம்' எழுதுகிறவன் ஆதாரம் இல்லாமல் எதையாவது எழுதுகிறான் ! என்று எப்படி சொல்கிறீர்கள் ?
வப 4 : அவன் எழுதுவது எல்லாம் நான் முன்னமே எழுதின பக்கத்தோட நகல் தான், வேண்டுமென்றால் சேமிக்கப்பட்ட எனது பதிவிலிருந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


பெரியவர் 1 : என்னங்க மாப்ள படிச்சவனா இருக்கான்னு சொல்கிறீர்கள், பின் ஏன் அந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டிங்க
பெரியவர் 2 : அந்த பையன் வலைப்பதிவு எழுதுபவனாம், எங்க என் பொண்ண கண்டுக்காம வலைப்பதிவே கதின்னு கிடக்க போறான்னு பயமா இருக்கறதால சரிப்பட்டு வராதுன்னு வேண்டாம்னு சொல்லிட்டேன்


அவர் : என்னங்க அங்க கூட்டமா இருக்கு
இவர் : ஒரு வலைப்பதிவுக்காரன் நாய்களைப் பற்றி கேவலமாக எழுதினான்னு ப்ளூகிராஸ் ஆளுங்க கம்ளயின்ட் கொடுத்தாங்க இல்லையா ? அதுக்குத்தான் போலிஸ்காரங்க வாரண்டோடு வந்திருக்காங்க

எண்ணச் சுமை : எப்படி ஓய் 'குட்டையில் ஊறிய மட்டை' ஒரே நாளில் பிரபளம் ஆனார்னு சொல்கிறீர்கள்
மதில்சுவர் : இது தெரியாதா உமக்கு, அவருடைய பதிவைப் பாரு, முதல் பின்னூட்டமே நமீதா இட்டது தான்.


கனவு தேசம் : இப்படி ஒரு சோகம் நடக்கும்னு நான் பதிவு எழுதின நாளிலேர்ந்து கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலே
காகிதப் பூக்கள் : என்ன நடந்துச்சின்னு மூஞ்சிய இப்படி வெச்சிருக்கிய ...?
கனவு தேசம் : சொல்கிறதுக்கே கஷ்டமாக இருக்கு, 'நம்பிக்கை துளிர்' னு பதிவு எழுதுபவர், தன்னோட பதிவுகளுக்கு பின்னூட்டம் வருவதில்லைன்னு கடைசியாக ஒரு பதிவு போட்டுவிட்டு தற்கொலைப் பண்ணிக்கிட்டாராம்.

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கிளப்பிட்டீங்க...(அப்பாடா...ஒரு தற்கொலையை தடுத்தாச்சு)

பெயரில்லா சொன்னது…

:-))))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

ரவி,
குறும்பு ஜாஸ்திதான் உங்களுக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

உசா,
சிரிப் 'பூ' வாங்கியதற்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

// 'நம்பிக்கை துளிர்' னு பதிவு எழுதுபவர், தன்னோட பதிவுகளுக்கு பின்னூட்டம் வருவதில்லைன்னு கடைசியாக ஒரு பதிவு போட்டுவிட்டு தற்கொலைப் பண்ணிக்கிட்டாராம். //

நல்லது எழுதினா பின்னூட்டம் வராதுனு சொல்லரதுக்கா இந்த பேரு?

நல்லா இருந்ததுங்க உங்க பின்நவீனத்துவ காமெடி:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லா இருந்ததுங்க உங்க பின்நவீனத்துவ காமெடி//

காமடியில் பின்நவினத்துவம் ? எனக்கே இப்பதான் புரியுதுங்க :)
நன்மனம் வாழ்க... நல்ல மனம் வாழ்க ... கூடவே நகைத்ததுற்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

//பெரியவர் 1 : என்னங்க மாப்ள படிச்சவனா இருக்கான்னு சொல்கிறீர்கள், பின் ஏன் அந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டிங்க
பெரியவர் 2 : அந்த பையன் வலைப்பதிவு எழுதுபவனாம், எங்க என் பொண்ண கண்டுக்காம வலைப்பதிவே கதின்னு கிடக்க போறான்னு பயமா இருக்கறதால சரிப்பட்டு வராதுன்னு வேண்டாம்னு சொல்லிட்டேன்
//

இது என்னவோ உண்மை தாங்க. நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆனபின்னாடி தான் வலைப்பதிவு எழுதத் தொடங்கினேன். இல்லாட்டி இன்னும் நான் பேச்சிலராவே இருந்திருப்பேன். இப்ப மட்டும் என்ன வாழுதுங்கறீங்களா? இப்பவும் பேச்சு இலர் தாங்க. :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
இது என்னவோ உண்மை தாங்க.//
திரு குமரன்,
உன்மைதாங்க,

நாளென்ன, பொழுதென்னு நனே பதிவுகளில் விழுந்துகிடப்பதால், சொந்த அனுபவமாக அதை எழுதினேன். வீட்ல தண்ணி தெளிச்சி விட்டுடாங்க...:)

பெயரில்லா சொன்னது…

அப்பு கலக்குறீங்க போங்க....
வாழ்த்துக்கள்.
இன்னும் ஒரு முக்கால் கிலோ சீக்கிரம் போடுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாகை சிவா said...
இன்னும் ஒரு முக்கால் கிலோ சீக்கிரம் போடுங்க
//
வாங்க சிவா,
உங்களின் ஆறுபதிவு படித்தேன் நன்றாக இருந்தது.

முக்கால் கிலோ போடமாட்டேன், அடுத்தது முழம் தான் :)

பெயரில்லா சொன்னது…

ரெண்டு பூனைல ஏங்க ஒரு பூனை சிரிக்காமயே இருக்கு?

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் said...
ரெண்டு பூனைல ஏங்க ஒரு பூனை சிரிக்காமயே இருக்கு? //
அது கைப்புவோட பூனை, 'இம்சை அரசன்' எப்ப வெளியே வரும்னு யேசனைப் பண்ணிக்கிட்டு இருக்கு

பெயரில்லா சொன்னது…

சரி, சீக்கிரம் முழம் போடுங்கள்.
வந்தற்க்கு நன்றி. வந்தற்க்கு அடையாளமாக ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். உங்களையும் கூப்பிடலாம் என்று தான் இருந்தேன். சில காரணங்களால் உங்களை கூப்பிட முடியவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்