பின்பற்றுபவர்கள்

14 ஜூன், 2006

வலைப்பூ ? கிலோ என்ன விலை ?

பின்னூட்டம், வலைப்பூ என ஏகப்பட்ட பதிவுகளை படித்தாகிவிட்டது. ஒரு சிரிப்பு பக்கம் எழுதி ஒட்டவைக்கலாம் என்று ஒரு சிறு முயற்சி. சிரிப்பு வரவில்லை யென்றால் சொல்லுங்கள் அடுத்து ஒரு சீரியஸ் பதிவு போட்டுடுவோம்.

1. பதிவாளரும் சோசியரும் :
புதிதாக பதிவு தொடங்குபவர் : அய்யா சோசியரே, 'ஓட்டை சட்டி' னு பதிவு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், பின்னூட்டம் கிடைக்குமான்னு கிளியை கேட்டு சொல்லுங்கள்.

சோசியர் : அம்மா நமிதா (கிளியைத் தான்) வெளியே வந்து 'ஓனா சான' ங்கிற பேருக்கு ஒரு சீட்டெடுத்து போடு.... தம்பி உங்களுக்கு 'டோண்டு ராகவனோட' படம் வந்திருக்கு, ப்ளாக் ஆரம்பிச்சிங்கன்னா, போலியா யாராவது வந்து உங்கள பிராண்டி எடுத்துடுவாங்க, வீண் முயற்சின்னு நினைக்கிறேன்
(டோண்டு மண்ணிப்பாராக)


2.
வலைப்பதிவாளர் 1 : ஆனாலும் அந்த 'எறும்பின் அறும்புகள்' பதிவு எழுதுபவருக்கு இப்படி ஒரு கர்வம் இருக்கக் கூடாது ?
வலைப்பதிவாளர் 2 : என்ன ஓய் சொல்கிறீர்?
வலைப்பதிவாளர் 1 : பின்ன என்ன ஓய், பின்னூட்டம் போட்டால் இலவசமாக பதிவு எழுதிதருவேன்னு இப்படி பகிரங்கமா எழுதிவிட்டுருக்கிறார்

3.
மாலா : வலைப்பதிவு எழுதுபவனுக்கு காதல் கடிதம் எழுதினது தப்பா போச்சிடி ?
கலா : ஏன்டி என்ன ஆச்சு ?
மாலா : நேரமின்மை காரணமாக படித்துவிட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்று எழுதி அனுப்பியிருக்கிறான் ஒன்னும் புரியலடி


4.
மனைவி : ஏங்க சீக்கிரம் தூங்க போறிங்களா இல்லையா, என்ன அர்த்தராத்திரியில லொட்டு லொட்டுனு
தட்டிக்கிட்டு ?
கணவன் : இருடி, ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு வந்துடுரேன்
மனைவி : இருங்க, காலையில அந்த கம்பியூட்டருக்கு பின்னூட்டம் போட்டு பரண்மேல தூக்கி வைக்கிறேன்.

5.
ஒருவர் : என்னங்க அங்கே போஸ்டர் ஒட்டுறாங்க ?
மற்றொருவர் : 1000 பதிவும் எழுதியும் தமிழ்மணம் நட்சத்திர பதிவாளாராக ஒருவாரத்திற்கு இருக்க அழைக்காததால ஒரு பதிவாளர் தமிழ்மணத்துக்கு எதிராக கண்டன போஸ்டர் ஓட்டியிருக்கிறார்
.

6.
சரக்குகாரன் : யோவ் பக்கிரி, உங்க ஏரியால அடியாள் கிடைக்குமா ? ஒரே அடியில எழுதுற கை போகனும் ?
பக்கிரி (பதட்டத்துடன்) : என்ன சார், எதாவது பத்திரிக்கைகாரன் உங்களை திட்டி எழுதிட்டானா ?
சரக்குகாரன் : பத்திரிக்ககாரனை நாங்க பாத்துக்குவோமில்ல, அந்த 'பொறுக்கி நண்பன்' என்ற பெயரில் எழுதுகிறவன், என்னுடைய பதிவில் ஆபசமாக திட்டி பின்னூட்டம் போட்டுடான்யா. அவன் கையை எடுக்கனும். ஏண்டா பின்னூட்டம் போட்டோம்னு வாழ்னாள் பூரவும் அத நெனெச்சு நெனெச்சு கதறி அழனும்.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

:)

சிரிப்பான் எல்லாம் போட்டேனே. ஒரு சின்ன உதவி.

உங்க பதிவை என்னை மாதிரி நெருப்புநரி உலாவி (அட அதாங்க firefox browser) வச்சு பாக்கறவங்களால படிக்கவே முடியறது இல்ல. அதுக்கு உங்க alignment-ஐ justified லேர்ந்து left alignedடா மாத்துங்க. நல்லா இருப்பீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

கொத்தனாரே,
மாத்திட்டேனுங்க ...

பெயரில்லா சொன்னது…

நல்லா தெரியுது, நன்னிங்கோவ்.

கோவி.கண்ணன் சொன்னது…

கொத்தனாரே,
சொன்னதை செய்யலேன்னா , பின்னாடி 'வீடு கட்டி' சுத்தி சுத்தி அடிச்சிடுவிகளோன்னு பயம்தான்.
:)

பெயரில்லா சொன்னது…

அந்த ஜோக்கெல்லாம் விட இது ஒரிஜினலா இருக்கு. :D

பெயரில்லா சொன்னது…

:P) ஹ ஹா..

பெயரில்லா சொன்னது…

//நேரமின்மை காரணமாக படித்துவிட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்று எழுதி அனுப்பியிருக்கிறான் ஒன்னும் புரியலடி
//

:)))

பெயரில்லா சொன்னது…

:-)))))

ரசித்தேன் & சிரித்தேன்

பெயரில்லா சொன்னது…

உங்கள மாதிரி ஆளுங்களோட வலைப்பூவுல பிளாக்கர் அக்கவுண்ட் இல்லாம பின்னூட்டமிடமுடியலியேன்னு தான் என்ன மாதிரி ஆளுங்க பேருக்கு ஒரு பிளாக்கர் அக்கவுண்டு ஏற்படுத்தியிருக்கோம். வலைப்பதிவு செய்யலாமா வேணாமான்னு "டைலம்மா"ல இருக்கும்போது இப்புடி பயமுறுத்துறீங்களே இது நியாயமா? :-D

பெயரில்லா சொன்னது…

கலக்கற சந்துரு! :))

பெயரில்லா சொன்னது…

ஜோக் எல்லாம் அபாரம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//At 10:50 AM, Suka said…

:P) ஹ ஹா..//
வருகைக்கும் சிரித்து மகிழ்ந்ததற்கும் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

****/நாமக்கல் சிபி @15516963 said...
//நேரமின்மை காரணமாக படித்துவிட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்று எழுதி அனுப்பியிருக்கிறான் ஒன்னும் புரியலடி
//

:))) /****
நாமக்கல் சிபி,
நன்றி மீண்டும் வருக

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
:-)))))

ரசித்தேன் & சிரித்தேன் //

துளசியக்கா,
படித்தேன், உங்களின் பின்னூட்டத்தில் நெகிழ்ந்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சேதுக்கரசி said...
உங்கள மாதிரி ஆளுங்களோட வலைப்பூவுல பிளாக்கர் அக்கவுண்ட் இல்லாம பின்னூட்டமிடமுடியலியேன்னு தான் என்ன மாதிரி ஆளுங்க பேருக்கு ஒரு பிளாக்கர் அக்கவுண்டு ஏற்படுத்தியிருக்கோம்//
சேதுக்கரசி,
நெகிழ வெச்சிட்டிங்க, பயப்படாதிங்க ... எல்லாம் ஒரு சின்ன எச்சரிக்கைத்தான் :)

பெயரில்லா சொன்னது…

நேரமின்மை காரணமாக படித்துவிட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன்

:-))))

பெயரில்லா சொன்னது…

கிளி ஜோசியம் சூப்பருங்க. அதுல அப்படியே ஒவ்வொருத்தர் படத்துக்கும் விளக்கம் கொடுத்திருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும்.

முகமூடி படம் வந்தால் - பதிவு போடாதய்யா நாய் வந்து கடிக்கும்

அதிமுக கொடி வந்தால் - மாயவரம் போகுறதுக்கு வாய்ப்புக் கிடைக்கும்

கொத்தனாரின் கொத்துக் கரண்டி படம் வந்தால் - சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும்

மக்களே அப்படியே எல்லோரப் பத்தியும் எடுத்துவுடுங்க. :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//At 9:21 PM, குமரன் (Kumaran) said…//
திரு குமரன்,
வருகைக்கும் நன்றி, வாய்விட்டுச் சிரித்திரிப்பீர்கள் என்று நம்புகிறேன்
இதையும் படித்துவிடுங்கள்...
http://govikannan.blogspot.com/2006/06/blog-post_115043547844054647.html

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேஸ் said...
ஒவ்வொருத்தர் படத்துக்கும் விளக்கம் கொடுத்திருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும்.//
இப்படி எல்லோரையும் எடுத்துவிட்டோம் என்றால், நம்பள பத்தி யாராவது எடுத்துவுட்டுவாங்கன்னு ஒரு பயம் தான் :)

பெயரில்லா சொன்னது…

கோவி,

அந்த கிளி ஜோக் நிஜமாவே சூப்பர்.. எங்க சங்கத்துல பயன் படுத்திக்கவா? ஒண்ணும் காப்பி ரைட் பிரச்சனை பண்ணிட மாட்டீரே?

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் said...
கோவி,

அந்த கிளி ஜோக் நிஜமாவே சூப்பர்.. எங்க சங்கத்துல பயன் படுத்திக்கவா? ஒண்ணும் காப்பி ரைட் பிரச்சனை பண்ணிட மாட்டீரே?
//
உங்களுக்கு இல்லாததா? என்னங்க இதக்கெல்லாம் போய் அனுமதி கேட்டுட்டு... எஞ்சாய் பண்ணுங்க ! :)

பெயரில்லா சொன்னது…

//இப்படி எல்லோரையும் எடுத்துவிட்டோம் என்றால், நம்பள பத்தி யாராவது எடுத்துவுட்டுவாங்கன்னு ஒரு பயம் தான் //
தலைவரே இவுங்க இப்படித்தான் அடிப்பாங்க, இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா? :))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்