பின்பற்றுபவர்கள்

26 அக்டோபர், 2010

வலையுலக நோய் !

40 இடுகைகளும் 40 பிந்தொடர்வோர்கள் கிடைத்துவிட்டால் எதாவது பிரச்சனையை காரணம் காட்டி நான் வலைப்பதிவில் இருந்து விலகுகிறேன் என்று படம் காட்டுவது வலைப்பதிவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. ஒருவேளை வலைபதிவில் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று நினைத்து காட்சிப் படுத்தும் மனநிலையில் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறியப்பட்ட எழுத்தாளர்கள் சாரு, ஜெமோ மற்றும் ஞானி இவர்கள்தான் இவ்வாறு வார இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்து சிறு பிரச்சனையைக் காரணம் காட்டி நான் இனிமேல் இங்கு எழுதமாட்டேன் என்று ஸ்டண்ட் அடிப்பார்கள். வலைப்பதிவு வார இதழ் கிடையாது, எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம் என்றாலும் 'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' ரேஞ்சுக்கு குற்றச்சாட்டுகளைக் கூறி விலகுவது எழுத்தில் தாங்கள் வைத்திருந்த ஆர்வத்தை தாங்களே குழி தோண்டி புதைப்பதாகும். ஒரு சிலரை காரணம் காட்டி விலகுவது என்பது அந்த ஒருசிலருக்காகத்தான் இவர்கள் எழுதி வந்ததாக பலர் நினைக்கும் படி செய்துவிடுவதை இவர்கள் ஏன் நினைப்பதே இல்லை ?

என்னைக் கேட்டால் வலைப்பதிவில் இருந்து முற்றிலுமோ தற்காலிகமோ விலக கீழ்கண்ட காரணங்கள் மட்டுமே,

1. இணைய வசதி (தொடர்பில்) இல்லாதது
2. வலைப்பதிவில் மூழ்கி மற்றபணிகளில் கவனிமின்றி அன்றாட செயல்பாடுகள் முடக்கம்
3. வலைபதிவில் இல்லாத பிற நண்பர்களிடம் முற்றிலுமாக தொடர்பு அற்றுப் போகுதல்
4. இல்லத்தினரிடம் நேரம் செலவு செய்ய இயலாமை
5. பிற பணிகளுக்கிடையே நேரமின்மை
6. சரக்கு இன்மை

இது தவிர்த்து யாரோ எவருக்கோ பிடிக்கவில்லை அல்லது குற்றம் சுமத்துகிறார்கள் என்று எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று கூறுவதெல்லாம் 'நான் வளர்ந்துவிட்டேன்......என்னைய தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுங்கள்..... இல்லை என்றால் விலகுகிறேன்' என்பது போன்ற வெறும் பாவ்லாக்களே. இது தேவையற்றது எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை. நாம் எழுதுவதா வேண்டாமா தொடரலாமா கூடாதா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நம்முடைய சூழலே அன்றி பிறரின் விருப்பு வெறுப்பு அல்ல. வலைப்பதிவில் இருந்து எத்தனையோ பேர் பல காரணங்களுக்காக எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள்அதை ஒட்டு மொத்த வலையுலகமும் அவர்கள் ஏன் எழுதுவதை நிறுத்தினார்கள் என்று நினைவு வைத்துக் கொள்வதும் இல்லை.

"நான் எழுதுவதை நாலு பேர் படிக்கிறார்கள் என்றாலும் படிக்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளை சேர்த்துவைக்கும் ஒரு நாட்குறிப்பு என்பதாகத்தான் நான் எழுதிவருகிறேன். இவற்றை நானே திரும்பி படிக்கிறேனோ இல்லையோ எனது வாரிசுகள் இவற்றில் ஒரு சிலவற்றைப் படித்து அதிலிருக்கும் நல்லவற்றை தெரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு" என்று நினைப்போர் எவர் பொருட்டும் எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை.

40 இடுகைகள் 40 பிந்தொடர்வோர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பது தன் மீதான உயர்வு மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தால் உடனே அடிபடும் என்பதற்குத்தான் அவ்வாறு குறிப்பபிட்டேன் அந்த எண்ணிக்கை 400 அல்லது அதற்கு மேலும் கூட இருக்கலாம். இதுவும் தனிப்பட்டு எவரையும் கிண்டல் செய்ய எழுதவில்லை. எழுத்தின் மீதான வெறுப்பு பிறர் தூண்டலால் நிகழ்வது சரி இல்லை என்பதற்காக குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்குவது தனிப்பட்ட நேர இழப்பு என்பது உண்மை தான் அதற்காக முற்றிலும் தவிர்பதைவிட நம்மை நண்பர்களாக மதித்தவர்களுக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்பது எனது எண்ணம்.

41 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

பொதுவாகப் பார்க்கும்போது, நீங்கள் சொல்வது சரிதான்!

Hello World என்று வலைப் பதிவுகள் எழுத ஆரம்பிக்கும்போது உலகம் தன்னைக் கவனிக்கும் என்ற ஆசையுடன் தான் பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய மனதில் தோன்றுவதைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் கவனிக்கவில்லை என்றபோது, ஓடிவிடலாம் என்று தோன்றுவதும், நான் ஓடப்போகிறேன், ஓடி விட்டேன் என்ற மாதிரி அறிவிப்பு செய்தாலாவது, கூடுதலாகக் கொஞ்சம் கவனம் தங்கள் பக்கம் திரும்புமா என்ற நப்பாசையுடன் எழுதுவதும் இங்கே சகஜம் தான்!

வலைப்பதிவுகள் ஒரு தனி உலகம், தனி ரகம்! இதன் வடிவமும், உள்ளடக்கமும் மற்ற ஊடகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.இந்த விஷயத்தைத் தமிழில் சரியாகப் புரிந்து கொண்டு பதிவுகளை நச்சென்று, சுவாரசியமாகப் பதியத் தெரிந்த பதிவர் திரு R P ராஜ நாயஹம் ஒருவர்தான் என்று கூட சொல்வேன்! அவர் இப்போது எட்டு ஒன்பது மாதங்களாகத் தன்னுடைய வலைப்பக்கங்களில் எதுவும் எழுதுவதில்லை. எழுதப்போவதில்லை என்ற ஒரு சிறு குறிப்புக் கூட அவர் பதிவுகளில் பார்க்க முடியாது. இதைச் சொல்வது கூட, நீங்கள் சொல்லும் காரணங்களுக்கும் அப்பாற்பட்டு,நேரெதிரான காரணங்களுக்காக எழுதுவது அல்லது எழுதாமல் இருப்பது என்ற முடிவைப் பதிவர்கள் எடுக்கக் கூடும்!

துளசி கோபால் சொன்னது…

'நமக்குத் 'தொழில்' எழுத்து.

எழுதிக்கிட்டே போகவேண்டியதுதான்.

திரும்பிப் பார்க்கும் உத்தேசம் இல்லை!

நிகழ்காலத்தில்... சொன்னது…

நல்லாச் சொன்னீங்க:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

உண்மை கோவி..

நமது தவறை, அடுத்தவர்மேல ஏற்றும் உலகில் , நாம் பயணித்துக்கொண்டுள்ளோம்...

ஜோதிஜி சொன்னது…

உங்களுக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் வழங்குகின்றேன். இத்தனை வருடங்களாக எழுதிக் கொண்டுருக்கீங்க.

ஆனால் இன்னமும் இந்த பதிவுலக மார்க்கெட்டிங் கலையில் சுத்த அசமந்தமாகவே இருக்கீயளே. ஒவ்வொரு முறையும் இன்ட்லி அது பாட்டுக்கு ஹே ன்னு இணைக்காமல் இருக்குது.

இப்பக்கூட சிவா தான் இணைத்துருப்பார் போல.

காரணம் நீங்கள் சொன்ன பின்னால் வரும் தலைமுறைகள் குறைந்தபட்சம் நம் குழந்தைகள் ஏதோவொன்றை எழுதிய எழுத்தின் மூலம் புரிந்து கொள்ளக்கூடும் என்று நான் எழுதத் தொடங்கிய போது உணர்ந்த வார்த்தைகளை மிகத் தெளிவாகவே உணர்ந்து வைத்துள்ள உங்களுக்கு என் ராயல் சல்யூட்.

thiagu1973 சொன்னது…

வலை பதிவுகளை விட்டு போறேன் சொல்ல கூட சுதந்திரம் இல்லையா ?

இனிமேல் இப்படி செய்யலாம்

போறேன் என்றால் சொல்லாமல் போகலாம் :)

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//நான் எழுதுவதை நாலு பேர் படிக்கிறார்கள் என்றாலும் படிக்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளை சேர்த்துவைக்கும் ஒரு நாட்குறிப்பு என்பதாகத்தான் நான் எழுதிவருகிறேன். இவற்றை நானே திரும்பி படிக்கிறேனோ இல்லையோ எனது வாரிசுகள் இவற்றில் ஒரு சிலவற்றைப் படித்து அதிலிருக்கும் நல்வற்றை தெரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு" //

இந்த நினைவுடன் எழுதுபவர்கள்தான் அதிகமாக வேண்டும்..எழுத்தை மேம்படுத்த அது வழிவகுக்கும்..

Chittoor Murugesan சொன்னது…

கோவி அண்ணா அவர்களுக்கு,
தங்கள் தற்காலிக இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி தாங்கள் மீண்டும் தொடர்ந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவுலகில் நான் அடியெடுத்துவைத்த போது அன்பு காட்டி அரவணைத்த உங்களை என்னால் மறக்கவே முடியாது.

நாம் அ வேறு எவரோ எழுதுவதால் உலகமே கவனிக்கும் என்பதோ,
எழுதுவதை நிறுத்திய மாத்திரத்தில் எவரும் உடன் கட்டை ஏறிவிடப்போகிறார்கள் என்பதோ வெறும் பிரமைதான்.

நான் ஓஷோவின் மானசிக சீடன். எனக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.

இப்பமட்டுமில்லை 1987லயே கல்லூரி தேர்தல் கலாட்டாவில் எக்ஸ் பார்ட்டிகள் செமை கும்மு கும்மி மூஞ்சி முகமெல்லா வீங்கி விட நண்பர்கள் "வெற்றி வேல் வீரவேல் "என்று பொங்க

"தத் எத்தீனி பீர் அடிச்சா இந்த அளவுக்கு வீங்கும் விடு மச்சான்" என்றவன் நான்.

நீங்க யாரையும் குறிப்பிட்டு சொல்லலைன்னாலும் ஞானும் 500 பேர் மெம்பரா சேரலைன்னா புதுப்பதிவில்லே ன்னு ஃபிலிம் காட்டினவந்தானே.

அதனால இந்த விளக்கம்.

கண்ணன் அண்ணா உங்கள் மீள் வருகையை எதிர்பார்க்கும் பலரில் இந்த முருகேசனும் உண்டு. மறந்துராதிங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//சித்தூர்.எஸ்.முருகேசன்said... கோவி அண்ணா அவர்களுக்கு,
தங்கள் தற்காலிக இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி தாங்கள் மீண்டும் தொடர்ந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

//

இடுகையை சரியாக படிக்காமல் பின்னூட்டம் இட்டதற்கு கடும் கண்டனம்.

நான் விலக்ப் போகிறேன் என்று எங்கும் குறிப்பிடவில்லை, அப்படிச் சொல்பவர்களுக்காக எழுதப்பட்டது

குசும்பன் சொன்னது…

அண்ணே அப்படி போகிறேன் இனி எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு இதுவரை எழுதாமல் இருக்கிறவங்க ஒருத்தர் பேராவது சொல்லமுடியுமா?:)))

இனிமே போறேன் எழுதமாட்டேன் என்று சொல்லுங்க...பட் கூடவே எவ்வளோ நாளைக்குன்னுதான் தெரியல என்று சேர்த்து சொல்லுங்கன்னு கோரிக்கை வெச்சிடலாம்.

Chittoor Murugesan சொன்னது…

கண்ணன் அண்ணா அவர்களுக்கு,
//என்னைக் கேட்டால் வலைப்பதிவில் இருந்து முற்றிலுமோ தற்காலிகமோ விலக கீழ்கண்ட காரணங்கள் மட்டுமே// இந்த வரிகள் தான் என்னை மிஸ் அப்ரோப்ரியேட் பண்ணாப்ல இருக்கு.

எனக்குள்ள ஒரு ஜர்னலிஸ்ட் இருக்கான் பாருங்கண்ணா அவன் பண்ண வேலை .

அவன் சோம்பேறி எதையும் முழுசா படிக்க மாட்டான். முழுசா கேட்க மாட்டான்.

எங்கனாச்சும் knot கிடைக்குதானு பார்ப்பான்.

கிடைச்சா அதை பிடிச்சுக்குவான்.

சாரி..

கோவி.கண்ணன் சொன்னது…

நன்றி கிருஷ்ண மூர்த்தி ஐயா, தாங்கள் சொல்வது சரியே. தொடர்பு கொண்டு வெகு நாட்கள் ஆகிற்று, நலமாக இருக்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
'நமக்குத் 'தொழில்' எழுத்து.

எழுதிக்கிட்டே போகவேண்டியதுதான்.
// என் கடன் எழுதிக் கழிப்பதே ! :) சரியா அம்மா.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
நல்லாச் சொன்னீங்க:))

11:51 AM, October 26, 2010// நன்றி சிவா

கோவி.கண்ணன் சொன்னது…

//பட்டாபட்டி.. said...
உண்மை கோவி..

நமது தவறை, அடுத்தவர்மேல ஏற்றும் உலகில் , நாம் பயணித்துக்கொண்டுள்ளோம்...

12:05 PM, October 26, 2010// என் நண்பர் ஒருவர் நீங்களும் நானும் ஒரே ஆள் என்றார். :) என்ன கொடுமை பட்டாபட்டி சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிஜி said...
உங்களுக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் வழங்குகின்றேன். இத்தனை வருடங்களாக எழுதிக் கொண்டுருக்கீங்க. // பூஜ்ஜியம் பிற எண்களுடன் சேரும் போது அதன் மதிப்பே வேற இல்லையா :)

//ஆனால் இன்னமும் இந்த பதிவுலக மார்க்கெட்டிங் கலையில் சுத்த அசமந்தமாகவே இருக்கீயளே. ஒவ்வொரு முறையும் இன்ட்லி அது பாட்டுக்கு ஹே ன்னு இணைக்காமல் இருக்குது. // இண்டலி சுண்டலின்னு நிறைய துவங்கிறார்கள். அவர்கள் தங்களில் அறிமுகத்தை முறையாக வலைப்பதிவர்களுக்கு தெரிவிப்பதில்லை. நிறுவனர்கள் யார் யார் என்றே தெரியமல் அங்கெல்லாம் உடனே இணைப்பதற்கு எனக்கு தயக்கமெ.

//இப்பக்கூட சிவா தான் இணைத்துருப்பார் போல.// அப்படித்தான் நானும் நினைக்கிறேன். நான் இணைக்கவில்லை. சிவாவுக்கு நன்றி

//காரணம் நீங்கள் சொன்ன பின்னால் வரும் தலைமுறைகள் குறைந்தபட்சம் நம் குழந்தைகள் ஏதோவொன்றை எழுதிய எழுத்தின் மூலம் புரிந்து கொள்ளக்கூடும் என்று நான் எழுதத் தொடங்கிய போது உணர்ந்த வார்த்தைகளை மிகத் தெளிவாகவே உணர்ந்து வைத்துள்ள // மிக்க நன்றி ஜோதிஜி

கோவி.கண்ணன் சொன்னது…

// தியாகு said...
வலை பதிவுகளை விட்டு போறேன் சொல்ல கூட சுதந்திரம் இல்லையா ?

இனிமேல் இப்படி செய்யலாம்

போறேன் என்றால் சொல்லாமல் போகலாம் :)// அப்படி இல்லை தியாகு.... 'வரமாட்டேன் ஆனா வருவேன்........னு வடிவேல் பாணியில் சொன்னால் தான் நன்றாக இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த நினைவுடன் எழுதுபவர்கள்தான் அதிகமாக வேண்டும்..எழுத்தை மேம்படுத்த அது வழிவகுக்கும்..

12:56 PM, October 26, 2010// நன்றி பாசமலர் மேடம்

கோவி.கண்ணன் சொன்னது…

// குசும்பன் said...
அண்ணே அப்படி போகிறேன் இனி எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு இதுவரை எழுதாமல் இருக்கிறவங்க ஒருத்தர் பேராவது சொல்லமுடியுமா?:)))// திருவாளர் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் சார் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் (இதற்கு தனி இடுகை போட்டாலும் போடுவார் :)

//இனிமே போறேன் எழுதமாட்டேன் என்று சொல்லுங்க...பட் கூடவே எவ்வளோ நாளைக்குன்னுதான் தெரியல என்று சேர்த்து சொல்லுங்கன்னு கோரிக்கை வெச்சிடலாம்.

2:32 PM, October// வரமாட்டேன் ஆனா வருவேன்..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//சித்தூர்.எஸ்.முருகேசன் said...
கண்ணன் அண்ணா அவர்களுக்கு,
//என்னைக் கேட்டால் வலைப்பதிவில் இருந்து முற்றிலுமோ தற்காலிகமோ விலக கீழ்கண்ட காரணங்கள் மட்டுமே// இந்த வரிகள் தான் என்னை மிஸ் அப்ரோப்ரியேட் பண்ணாப்ல இருக்கு.

எனக்குள்ள ஒரு ஜர்னலிஸ்ட் இருக்கான் பாருங்கண்ணா அவன் பண்ண வேலை .

அவன் சோம்பேறி எதையும் முழுசா படிக்க மாட்டான். முழுசா கேட்க மாட்டான்.

எங்கனாச்சும் knot கிடைக்குதானு பார்ப்பான்.

கிடைச்சா அதை பிடிச்சுக்குவான்.
// எனக்கு நீங்கள் அண்ணனா நான் உங்களுக்கு அண்ணா.......தெரியலை.....எதற்கும் இதற்கு முந்தைய பதிவில் படம் இருக்கு, நானும் 2 பேரோடு நிற்கிறேன். பாருங்க முருகேசன்.

கஞ்சா கருப்பு சொன்னது…

Please see: https://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=8885820808083331378

Chittoor Murugesan சொன்னது…

கோ.வி கண்ணன் அவர்களே,
தங்களை எனக்கு வலையுலகத்தில்தான் அறிமுகம்.
இந்த வலை உலகத்தை பொறுத்தவரை நீங்கதான் அண்ணா நான் தான் தம்பி ( கலைஞர் வேலையெல்லாம் செய்யமாட்டேன் பாஸ்!)

கோவி.கண்ணன் சொன்னது…

சித்தூர்.எஸ்.முருகேசன் said...
கோ.வி கண்ணன் அவர்களே,
தங்களை எனக்கு வலையுலகத்தில்தான் அறிமுகம்.
இந்த வலை உலகத்தை பொறுத்தவரை நீங்கதான் அண்ணா நான் தான் தம்பி ( கலைஞர் வேலையெல்லாம் செய்யமாட்டேன் பாஸ்!)

4:40 PM, October 26, 2010// உங்கள் பார்வைக்கு என்று டோண்டு இராகவன் ஒரு பின்னூட்டம் அனுப்பி இருந்தார் dondu(#11168674346665545885)

@சித்தூர் முருகேசன்
ஒரு முக்கியத் தகவலை சித்தூர் முருகேசனுக்கு சொல்ல வேண்டும். அவர் தளத்துள் போக முடியாமல் உலவு.காம் இணைப்பு காரணமாக வைரஸ் அறிவிப்பு வந்து பயமுறுத்துகிறது. தேவையற்ற விட்ஜெட் அது. நீக்கினால் நலம்.

நண்பர் கோவி கண்ணனிடம் சற்றே அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டதற்கு அவர் என்னை மன்னிக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு இராகவன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

என் நிலமை நேரே பார்த்தனீர்கள் தானே! சொல்லாமலே போய்விட்டேன்.
எழுதுவதைப் முதல் படிப்போம்; என்பதே என் எண்ணம்.

பழமைபேசி சொன்னது…

எதை எழுதினாலும், அதைப்படிக்க நாலு பேர் இருக்கிற இடம் வலையுலகம். அதைவெச்சி, பொழுதைப் போக்குறதுக்கு எதோ எழுதுறோம்.... மனத்தாங்கலுக்கு அவிங்களும் எதோ சொல்றாய்ங்க... அதையும் கேட்டுக்குவோம்...

Bruno சொன்னது…

:)

வால்பையன் சொன்னது…

அடுத்த இன்னிங்ஸா!?

ஈரோடு கதிர் சொன்னது…

||எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை||

மிகச் சரி!


அடுத்து சித்தூர் முருகேசன் விளையாட்டு டாப்பு....
சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்

Thekkikattan|தெகா சொன்னது…

பொங்கி எழுந்துட்டீங்களா, கோவி :) - பொறுத்தது போதும்னு, எனக்கும் பார்க்க காமெடியாத்தான் இருக்கும்.

அப்படியாராவது அறிவிப்பு விட்டு பதிவிட்டிருந்தா, அது போன்ற பதிவுகள் பக்கமே போறதில்ல. அதை எப்படி நான் எடுத்துப்பேன்னா, சரி இந்தச் சூழ்நிலையில் அந்த நாலு பேரை மட்டுமே வைச்சு முடிவு எடுத்துருக்காரு சம்பந்தப்பட்டவரு, ஒரு நாள் அந்த நாலு பேருதான் உலகமில்லைன்னு புரிஞ்சிட்டப்பா தனக்குள்ளரயே தூண்டுதல் ஏற்பட்டு திரும்ப வந்துருவாரு அது வரைக்கும் அவருக்கு அந்த ‘ஸ்பேஸ்’ தேவைன்னு விட்டுடணும்னு புரிஞ்சு வைச்சிருக்கேன்.

ஆனா, யாருமே ரொம்ப நெசமாவே அப்படிச் சொன்னவங்க போனதா தெரியல... ;) சொல்லாமல் போனவங்கதான் யோசிக்க வைப்பாங்க. :)

தேவையான பதிவுதான் இது...

சிங்கக்குட்டி சொன்னது…

//'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' //

ஹ ஹ ஹ சூப்பர் உண்மை உண்மை ....!

தொப்பி தொப்பி ....! ஹ ஹ ஹ ஹா!

மதுரை சரவணன் சொன்னது…

// இல்லை என்றால் விலகுகிறேன்' என்பது போன்ற வெறும் பாவ்லாக்களே. இது தேவையற்றது எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை. //

puttu puttu vaiyunga naanka thiruntha maattom... ungkalai kaaranam kaatti yaaravathu eluthaamal poivitap poikiraarkal.

Unknown சொன்னது…

வேண்டாமா தொடரலாமா கூடாதா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நம்முடைய சூழலே அன்றி பிறரின் விருப்பு வெறுப்பு அல்ல.

நெத்தியடி

நிகழ்காலத்தில்... சொன்னது…

//இப்பக்கூட சிவா தான் இணைத்துருப்பார் போல.// அப்படித்தான் நானும் நினைக்கிறேன். நான் இணைக்கவில்லை. சிவாவுக்கு நன்றி


கண்ணன், சிவா எல்லாமே ஒண்ணுதானே:))

யார் இணைச்சாலும் சரிதான்:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@கோவி.கண்ணன் said...
என் நண்பர் ஒருவர் நீங்களும் நானும் ஒரே ஆள் என்றார். :) என்ன கொடுமை பட்டாபட்டி சார்.
//

யாருன்ணே அப்படி பல்லுல நாக்கு படாம சொன்னது.?..

சரி..விடுங்க.. ஏதோ தெரியாம சொல்லியிருப்பாங்க...


ஆமா.. எனக்கு மட்டும் சொல்ல்லுங்க.. நீங்கதானே பட்டாபட்டிங்கிற பேர்ல எழுதுவது?..
ஹி..ஹி

smart சொன்னது…

இதற்கு ஆதரவாக கருத்திட்டவர்கள் எல்லாம் தான் ஒரு தேர்ந்த எழுத்தாளானாக எண்ணியிருக்க கூடும் அதனால் தான் வலையில் அடுத்த முகத்தைப் பற்றிச் சிந்திக்க வில்லை.

எழுதுவது உங்களுக்கு எல்லாம் கலையாக/பெருமையாக இருக்கலாம் ஆனால் தான் சொந்தக் கருத்துக்களை உலகத்திடம் பரப்ப எழுத்தை குறிப்பாக வலை தளத்தை ஒரு கருவியாகப் பாவிப்பவர்களுக்கு அது கிடையாது என்பதே உண்மை. தேவையும் கூட. செவிடர்கள் மத்தியில் மைக் செட் போட்டு செம்மொழியில் செப்புவது மொழியின் மீதுள்ள ஆர்வமாகாது. அப்போது கொஞ்சம் உங்களுக்கு கேட்கிறதா? என சோதிப்பது இன்றியமையாதது. அப்படித்தான் பதிவுலகை விட்டு போவதாக சொல்கிறார்கள்.இது அவர்கள் எழுத்தின் மீதுள்ள பிடிப்பு என கொள்ளமுடியாது. காரணம் வலை தளம் ஒரு கருவிமட்டுமே

கோவி.கண்ணன் சொன்னது…

திரு ஸ்மார்ட், உங்களவுக்கு மூளையோ அறிவோ இங்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லவருகிறீர்களா ? நீங்க படா அறிவாளி சார், இருந்தாலும் கருத்து கூறிய உங்களை நான் மதிக்கிறேன்.

dondu(#11168674346665545885) சொன்னது…

கோவி கண்ணன்
நீங்கள் சொன்ன மாதிரி பதிவு போட்டாச்சு. ஐடியாவுக்கு நன்றி.

நண்பேண்டா,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said... கோவி கண்ணன்
நீங்கள் சொன்ன மாதிரி பதிவு போட்டாச்சு. ஐடியாவுக்கு நன்றி.

நண்பேண்டா,
டோண்டு ராகவன்
//

தொடர்ந்து எதிர்வினையாற்றுவது அயற்சியையும், மன உளைச்சலையும் தரும், போய் ஓய்வு எடுங்க சார்.

வால்பையன் சொன்னது…

பேண்டா கழவனும்!

வால்பையன் சொன்னது…

//தொடர்ந்து எதிர்வினையாற்றுவது அயற்சியையும், மன உளைச்சலையும் தரும், போய் ஓய்வு எடுங்க சார். //


கருணாநிதிக்கு சொன்ன மாதிரியே சொல்றிங்களே!

உங்ககிட்ட ஒரு கேள்வி!

நான் ரேவதி அப்பாவின் ஊனத்தை காரணம் காட்டி சிம்பதி கிரியேட் பண்ணுவதாக எழுதியிருக்கார்!

ராஜன் பெறோர் உயிருடன் இல்லை, ரேவதிக்கு அம்மா இல்லை என நான் போனில் தானே சொன்னேன்! அதை என்னத்த புடுங்க பின்னூட்டத்தில் எழுதினாராம்!, அது அவுங்க பர்சனல் என விட்டுருக்கலாம் தானே!.

ராஜவம்சம் சொன்னது…

உங்கள் கருத்து சூப்பர் ஆமோதிக்கிறேன்.

{கருத்துரைகள் தடம்மாறுவதாக உணர்கிறேன்.}

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்