பின்பற்றுபவர்கள்

28 அக்டோபர், 2010

மதவாதிகளால் கொலை செய்யப்பட்ட திருநங்கை !

திருநங்கைகள் பற்றி பரவலான புரிந்துணர்வு துவங்கி உள்ள காலகட்டத்தில் இன்னும் கற்காலத்தில் இருந்து கொண்டு அவர்களை கொல்லும் (மத) அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

பால் சார்ந்த உடலமைப்பு மற்றும் மனம் இவை ஒன்றியிராத மனிதப் பிறவிகளே திருநங்கைகள் எனப்படுவர். பருவ வயதை நெருங்கும் முன்பே மனம் சார்ந்து தன்னை எதிர்பாலினம் என்று உணர்ந்து அதில் நாட்டம் கொண்டு அவ்வாறு வாழ முடிவு செய்பவர்கள் திருநங்கைகள். இவை பெற்றோருக்கு அதிர்ச்சி என்றாலும் ஐரோபிய நாகரீகம் சார்ந்த வெளிநாடுகளில் பரவலாக அவர்களின் உணர்வுகள்
புரிந்து கொள்ளப்படுகிறது. திருநங்கைகளும் தற்பால் விரும்பிகளும் ஒன்றல்ல, தற்பால் விரும்பிகள் தங்கள் பாலினத்தை வெறுப்பது இல்லை, தனது பால் உறுப்புகளையும் வெறுப்பதில்லை அதே போன்று பாலியல் நாட்டத்தில் தன்பாலினத்தைச் சேர்ந்தவர்களையே நாடுவார்கள், எதிர்பாலினத்தை அவர்கள் பாலியல் நாட்டத்திற்கு விரும்பிவதில்லை என்றாலும் அவர்களை தனிமனிதனாக வெறுப்பதில்லை. திருநங்கைகளாக உணர்ந்து கொண்ட பின் தங்களது பால் உறுப்பை வெறுத்து முற்றிலுமாக நீக்கிக் கொண்டு பெண்ணாக மாற விழைபவர்களே திருநங்கைகள், இவர்களும் தற்பால் சேர்கையாளர்களும் ஒன்று அல்ல, திருநங்கைகள் பாலியல் ரீதியாக ஆண்கள் மீது நாட்டம் கொண்டிருந்தாலும் மன அடிப்படையில் அவர்கள் தங்களை பெண்ணாகவே நினைப்பவர்கள். தன்னை பெண்ணாக உணர்ந்துள்ள ஆணே திருநங்கை, அதே போன்று ஆணாக உணர்ந்து கொண்ட பெண்களும் உள்ளனர் என்றாலும் அவர்களுக்கு திருநங்கைகளுக்கு இருக்கும் அளவுக்கு சமூகச் சிக்கல் இல்லை, காரணம் ஒரு பெண் தன்னை ஆணாக நினைத்து அதன்படி நடந்து கொண்டாலும் வீட்டை விட்டு துறத்தும் நிலைக்கு சமூகம் அவர்களை தள்ளுவது கிடையாது ஏனெனில் பெண் ஆணாக தன்னை உணர்வதை ஆளுமை என்ற அளவில் மட்டுமே சமூகம் கருதுகிறது. ஆண் பெண்ணாக உணரும் போது
உடலியல் மற்றும் உணர்வியல் தாழ்ச்சி சமூகக் கேடு என்பதாக அவர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏன் உடலும் உள்ளமும் ஏற்றவாறு பொருந்தவில்லை, அதை சரிசெய்ய முடியுமா முடியாதா
என்பதை எந்த ஒரு அறிவியலும் முற்றிலுமாக விளக்கவில்லை மாறாக மனம் மற்றும் உளவியல் என்பதாகவே வகைப்படுத்தி இருக்கிறார்கள்.


படைப்பு படைத்தவன் என்றெல்லாம் புகழ்பாடும் மதவாதிகள் படைப்பு சரி இல்லை என்றால் படைத்தவனை விட்டுவிட்டு படைப்பை சிதைப்பது எந்தவகையில் ஞாயம் என்று தெரியவில்லை, இறைவன் நாடினால் நன்மை கிடைக்கும் என்று ஆசி கூறுவோர், திருநங்கைப் பிறப்புகளை
இறைவன் நாடவே இல்லை என்பதையாவது ஒப்புக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பார்களா ? அவ்வாறு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட ஏன் இவர்களுக்கு மட்டும் இறைவன் குறைவாக நாடினான் என்ற கேள்வியாவது கேட்டுக் கொள்வார்களா ? இந்தியாவில் இந்து மதத்தினாரால் திருநங்கை பிறப்புகள் புரிந்து கொள்ளப்படுகிறது காரணம் மகாபாரதத்திலேயே அர்ஜுனன் திருநங்கையாக மாறிய கதை உண்டு என்று நம்புவோர் இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வியல் நிலையை எண்ணிப் பார்கவும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு வடமாநில எம் எல் ஏ என்பது தவிர்த்து அவர்களில் ஒருவர் கூட அரசு உயர்பதவி வகித்தது கிடையாது. இந்தியாவில் 95 விழுக்காடு திருநங்கைகளுக்கு பாலியல் தான் தொழில் என்பதாக தள்ளப்பட்டுவிட்டனர், பின்னர் இவர்களை இந்து மதத்தினர் மதிக்கின்றனர் என்று கொள்ள முடியும் ?

ஒரு இஸ்லாமிய ஆண் திருநங்கையாக ஆகிப் போனது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளப்பட்டுள்ளார். படிக்கும் போதே பதறியது. சவுதி இளவரசர் (சவுதி மன்னரின் மகளின் மகன் அதாவது மகள் வயிற்றுப் பேரன்) ஒருவர் இங்கிலாந்தில் தன்னுடைய உதவியாளர் (அவர்கள் மொழியில் அடிமையை) அடித்தே கொன்றார், விசாரணையில் அந்த இளவரசர் ஓரின விரும்பி என்று தகவல்கள் தெரியவந்ததாக இங்கிலாந்தின் செய்தி இதழ்கள் குறிப்பிடுகின்றன. மேற்கண்ட குற்றச் சாட்டை வைத்து சவுதி இளவரசரை இம்மத அமைப்புகள் இஸ்லாத்தின் பாலியல் கொள்கைக்கு எதிரானவர் என்று கூறி தூக்கிலடச் சொல்லி போராட்டம் நடத்துமா ? இதெல்லாம் நடக்காது ஏனெனில் சவுதி என்னும் புண்ணிய பூமியில் பிறந்த இளவரசர் அப்படி பட்டவராக இறைவன் படைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே நம்புவார்கள் மற்றும் இவை இஸ்லாத்து எதிராக கிறித்துவ நாடான இங்கிலாந்து இட்டுக்கட்டிப் பரப்பப்படும் செய்தி என்றே நம்புவார்கள்.

ஒருவருக்கு எதிர்பாராமல் நடக்கும் திடீர் விபத்து அல்லது குணப்படுத்த இயலாத திடீர் நோய் என்பது இறைவன் அவரை நாடவில்லை என்பதால் ஏற்பட்டது என்று நம்பவும் பரப்பவும் முடிந்தால் உடல் ஊனம் மன ஊனம் இவைகளும் மற்றும் திருநங்கை பிறப்புகளும் கூட அவ்வாறே ஏற்பட்டது என்று நம்பலாமே, அவர்கள் வழியில் அவர்கள் செல்கிறார்கள் இஸ்லாமிய பெயரை தாங்கி இருந்தார்கள் அல்லது இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த மரண தண்டனை என்றால்
குறையாக படைத்த இறைவனுக்கு என்ன தண்டனையோ ?

எங்கேயோ படித்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது,

ஊனமுற்றோர் கடவுளின் குழந்தைகள் என்றால்
உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டியது
கடவுளுக்குத்தான்
!


தொடர்புடைய செய்தி :

திருநங்கை மின்னல் மீனா கொலையில் 3 பேர் கைது

திருச்செந்தூர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த திருநங்கை சேக் அலி என்கிற மின்னல் மீனா(35), கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி காலையில் காட்டுப்பகுதியில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


பிரேதத்தை கைப்பற்றிய ஆறுமுகநேரி போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர்.

இக்கொலை தொடர்பாக காயல்பட்டணத்தில் புரோட்டா கடை வைத்துள்ள தாஜீதீன்(28), ஆட்டோ டிரைவர்கள் ஜாபர் சதீக்(24), ஹசன்(எ) முகம்மது ஹசன் (32) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ‘எவ்வளவு கண்டித்தும் கேட்காமல், இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு மாறாக, பெண் வேடமிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்ய முடிவெடுத்தோம்.

இதனால் செப்டம்பர் மாதம் 16 ம் தேதி இரவு மின்னல் மீனாவை கம்பால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டோம்’’என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பான உமர் பாரூக் தலைமறைவாகவுள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

சுட்டி : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42072

பின்குறிப்பு : இந்தப் பதிவு எந்த மதத்திற்கு எதிராகவும் எழுதப்படவில்லை, மதவாதிகளின் செயல் மட்டுமே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது என்பதை மதவாதிகள் அல்லோதோர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்

7 கருத்துகள்:

தமிழ் வினை சொன்னது…

மதங்களும் அறநெறிகளும் சட்டங்களும் ஏழைகளுக்குத்தானேயன்றி பணக்காரர்களுக்கல்ல. இறைவனின் தவறான் படைப்பை அழித்து இறைவனுக்கும் மதத்துக்கும் பெருமை சேர்த்த அவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நம்பலாம். இறைவன் நாடாமல் ஒரு முடி கூட முளைக்காது என்ற நிலையில் இந்தக் "குறை" யைப் படைத்த இறைவன்தான் மிகவும் வக்கிரமானவன், அவனைத்தான் கொல்ல வேண்டும்.

பிரியமுடன் பிரபு சொன்னது…

ஊனமுற்றோர் கடவுளின் குழந்தைகள் என்றால்
உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டியது
கடவுளுக்குத்தான் !

//////

SUPER

கும்மி சொன்னது…

அமைதியின் மார்க்கத்தைப் பற்றி ஏதும் அறியாமல் நீங்கள் பதிவெழுதியுள்ளீர்கள். இப்படிப்பட்ட பதிவுகளை எழுதுவதற்கு முன்னர், உங்களுடைய கொள்கை சரியா? எங்களுடைய கொள்கை சரியா? என்பதை நேரடி விவாதத்தின் மூலம் அறிந்தபின்பே, பதிவுகள் எழுத வேண்டும் மேலும், விபரங்களுக்கு www.onlinevj.com.

இப்படிக்கு,
டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் இடுவோரின் வேலையை குறைக்க அதே டெம்ப்ளேட் பின்னூடங்களை இடுவோர் சங்கம்.

மாசிலா சொன்னது…

முதலில் கடவுள் என்றொருவர் எவரும் இல்லை. அவர் படைத்ததாக எதுவும் இல்லை. சார்லஸ் டார்வின் கூற்றுக்கள்படி எல்லாம் இயற்கையின் உருவாக்கமே.

//‘எவ்வளவு கண்டித்தும் கேட்காமல், இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு மாறாக, பெண் வேடமிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்ய முடிவெடுத்தோம்//
இப்போது மதங்களை தாண்டிய மக்கள் அரசாட்சியின் சட்டங்கள் அடிப்படையில் சிறையில் அடைபடப்போவது நிச்சயமே.

மின்னல் மீனாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ismail சொன்னது…

எங்கேயோ படித்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது,

ஊனமுற்றோர் கடவுளின் குழந்தைகள் என்றால்
உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டியது
கடவுளுக்குத்தான் !

நான் நினைப‌து ச‌ரி யென்ட்ரால் சொன்ன‌து க‌ம‌ல‌ஹாச‌ன்

வால்பையன் சொன்னது…

மனித விரோதபோக்கை கடைபிடிக்கும் மதங்கள் எதற்கு!?

Kasim சொன்னது…

சரியோ தவறோ, அதற்காக கொலை / வதம் செய்வது எந்த மதத்திலும் நியாயப்படுத்தியிருக்க மாட்டார்கள். ச‌வூதி இளவரசர் பிறக்கும் போது இரண்டு கொம்புடன் வரவில்லை. தப்பு யார் பண்ணினாலும் ச‌வூதி முஸ்லிம் பண்ணினாலும் தப்பு தான். இவர்களுக்கு யார் மனித உயிரை எடுக்கும் / வதைக்கும் உரிமையை கொடுத்தது. நிற்க வைத்து சுட வேண்டும். மனிதாபிமானம் என்றால் என்ன விலை என்று கேக்கும் நிலையில் இருக்கிறோம்? இத்தகைய களைகளை அடயாளம் கண்டு களைவது இன்றைய சமுதாயத்துக்கு உள்ள‌ மிக பெரிய பொறுப்பு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்