உண்மையில் இப்படியான உரையாடல் கலாமுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்ததா என்று எவரும் கேட்டுத் தெரிந்து கொண்டது போலவோ அல்லது கலாம் அவ்வாறு தன் பேச்சுகளில் எங்கும் குறிப்பிட்டதாகவோ தெரியவில்லை. அண்மையில் ஒரு ஆங்கில இணையப் பக்கத்தை திறந்த போது அதிர்ந்தேன் (நான் அப்படியே ஷாக்காயிட்டேன்). ஏனெனில் கலாம் - ஆசிரியர் உரையாடலின் அப்பட்டமான ஆங்கில மொழிப்பெயர்ப்பில் எழுதப்பட்டு முடிவில் அந்த உரையாடல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்திருந்ததாகப் போட்டிருந்தது. அதே போன்ற உரையாடல்கள் இன்னும் பலமொழிகளில் அந்தப் பகுதி அறிஞர்கள் கடவுளை மெய்பித்த கதையாக ஒவ்வொரு நாட்டிலும் வழங்கிவரும் என்று நினைக்கிறேன். இது போன்ற உரையாடல் மலேசிய கிறித்துவ மாணவனுக்கும் அவரது புரொபெசருக்கும் நடந்ததாகவும் எழுதி இருக்கிறார்கள். யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆத்திக மனநிலைக்கு ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருப்பதால், அந்தந்தப் பகுதி இருப்பவர்களை அதில் நுழைத்து எழுதிவிடுகிறார்கள்.
இன்னும் எத்தனை பேரு கிளம்பி இருக்கிறார்களோ.........ஏன் இந்த பொழப்பு.......கடவுள் இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே......காப்பிரைட் இல்லாத கதைகளை கண்டபடி திருத்தி எழுதி என்னை நிருபியுங்கள் என்று எங்கும் கடவுள் மன்றாடியதைப் போல் தெரியவில்லை..... இந்த பொழப்புக்கு மாற்று மதத்துக்காரனை மனிதனாக நினைச்சு மனிதனாக வாழலாமே.
The Atheist Professor vs the Christian Student)
http://malaysianatheist.blogspot.com/2006/11/atheist-professor-vs-christian-student_11.html
(மலேசியா வர்சன்)
http://www.patrish.com/atheist.html
(கிறித்துவ வர்சன்)
http://hasnain.wordpress.com/2006/05/31/a-dialogue-between-an-atheist-professor-and-a-student/
(இஸ்லாம் வர்சன்)
http://pudukai.blogspot.com/2009/07/blog-post.html
(கலாம் வர்சன்)
http://www.religioustolerance.org/culeins.htm
(ஐன்ஸ்டன் வர்சன்)
**************
இனிமே இது கலாம் சொன்னது, கண்ணதாசன் சொன்னது கதை எழுதினால் கண்டபடி கண்டனம் செய்து இந்த சுட்டியை அங்கு சேர்ப்பேன்.
என்ன கொடுமை சார் இது.........!
கூகுளில் "The Student & the Atheist Professor", என்று தேடினால் ஒரு வண்டி குப்பைக்கு மேலாகக் கொட்டுது. இதை நான் கடவுள் ஏற்பு மறுப்பு என்கிற நிலையில் நின்று எழுதவில்லை, திருப்பதி கடிதம் பலவடிவங்களில் வருவது போல் இந்த 'கடவுள் நிருபன' கதைகளும் வெளிவருது என்று காட்டவே எழுதினேன்.
8 கருத்துகள்:
சரி சரி இனிமே இது கோவியார் சொன்னது..:)))))
இன்னும் எத்தனை பேரு கிளம்பி இருக்கிறார்களோ.
//இதை நான் கடவுள் ஏற்பு மறுப்பு என்கிற நிலையில் நின்று எழுதவில்லை//
அப்ப...'நான்' இருப்பதை ஒத்துக்கொள்ளவில்லையா?
HA HA
இன்னும் எத்தனை பேரு கிளம்பி இருக்கிறார்களோ.
ஆஹா இப்படியெல்லாம் இருக்கா...
இன்னும் அப்துல்கலாம் சொன்னதாக திரிப்புகள் வாந்து கொண்டு தான் இருக்கின்றன :) அவ்வ்வ்வ்
:))))
கருத்துரையிடுக