பின்பற்றுபவர்கள்

22 அக்டோபர், 2010

ஒரே புகைச்சல் !

தீபாவளி நெருங்க மழைகாலம் துவங்கி இருக்கும், அதன் பிறகு பனிக் காலம், "எங்கூரு சிங்கையில்", முந்தைய நாள் காலை 7 மணிக்கு அலுவலகம் புறப்பட வெளியே வந்தால் எங்கும் பனிப் படர்ந்தது போல் இருந்தது, ஆனால் குளிருக்கான அறிகுறி இல்லை. மிதமான தீயின் மணம், பிறகு தான் தெரிந்தது சுற்றிலும் அடர்த்தியாக பனி போல் தெரிவது பனி அல்ல, புகை மூட்டம் என்பது. இந்தோனேசியா சுமத்திராவின் அடர்ந்த காட்டுப் பகுதி சிங்கைக்கு மிக அருகில் இருப்பதால் காடுகள் பற்றி எரியும் போது ஏற்படும் புகை சிங்கை மலேசியாவையும் அடையும். சுற்றுச் சூழல் நிலை ஓரளவு கட்டுப்பாடு எண் அளவில் இருப்பதால் அரசு அறிவிப்பாக இன்னும் முகமூடி அணியச் சொல்லி எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை. இன்னும் மூன்று நாளைக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள்.

பார்க்க சூரியன் கண்ணுக்கு குளிர்ச்சியாக சிவப்பு நிலா போல் தெரிகிறது, 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' மறைச் சொல்லுக்கு இந்தோனியா காட்டுத் தீ பழிப்பு காட்டி சூரியன் சுடர்களை மறைத்துவிட்டது.


பின்குறிப்பு : "எங்கூரு சிங்கையில்" - பத்து ஆண்டுகளாக தின்று கொண்டிருக்கிறேன், எங்கூருன்னு சொல்வதால் நான் தேச துரோகி ஆகிவிடமாட்டேன் என்று தேசிய பாகைமாணிகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அதான் கனியன் பூங்குன்றனார் சொல்லிவிட்டாரே யாதும் ஊரே யாவரும் கேளிர்னு.

*****அலுவலகத்தில் உடன் பணி புரியும் தோழிகள் தான். நிறுவன ஆண்டுவிழாவிற்கு நல்ல அழகாக அலங்காரம் செய்து வந்திருந்தார்கள், 'பேஸ் புக்குல போடனும் போஸ் கொடுங்க' என்றேன் கொடுத்தார்கள். இருவரும் சீன நங்கைகள், ஒருவர் மலேசியர் மற்றொருவர் சிங்கப்பூரார்.

11 கருத்துகள்:

LK சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்

பிரியமுடன் பிரபு சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்

ஜோதிஜி சொன்னது…

அதென்ன மணிரத்னம் படம் மாதிரி புகைப்படம். ஒருவேளை இந்தோனேசியா காட்டுப் புகையை சிமபாலிக்காக காட்டுறீங்களோ?

துளசி கோபால் சொன்னது…

புகைச்சலுக்கான 'காரணம்' புரிஞ்சு போச்சு:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
புகைச்சலுக்கான 'காரணம்' புரிஞ்சு போச்சு:-))))
//

முதல் இரண்டு பின்னூட்டம் தானே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...
அதென்ன மணிரத்னம் படம் மாதிரி புகைப்படம். ஒருவேளை இந்தோனேசியா காட்டுப் புகையை சிமபாலிக்காக காட்டுறீங்களோ?
//

அவங்க நிறத்துக்கு ப்ளாஸ் போட்டு புகைப்படம் எடுத்தால் என் உருவம் அம்பேல் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//LK said...
நடக்கட்டும் நடக்கட்டும்

12:39 PM, October 22, 2010

பிரியமுடன் பிரபு said...
நடக்கட்டும் நடக்கட்டும்
//

நான் முகைமூட்டம் போகனும் விரும்புகிறேன். நீங்க இருவரும் நடக்கட்டும் என்கிறீர்கள் :)

கும்மி சொன்னது…

பேஸ்புக்கில் போடணும் என்று கூறி போட்டோ எடுத்துவிட்டு அதை ப்ளாக்கில் போட்டு, அவர்களை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

:-)

வெறும்பய சொன்னது…

இது தான் ரீசனா... நான் மழை தான் வரப்போகுதோன்னு நினசிகிட்டிருக்கேன் ...

கோவி.கண்ணன் சொன்னது…

கும்மி said...
பேஸ்புக்கில் போடணும் என்று கூறி போட்டோ எடுத்துவிட்டு அதை ப்ளாக்கில் போட்டு, அவர்களை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

:-)
//

குறும்படம் எடுத்து எந்திரன் ரேஞ்சிக்கு வெளியிட்டுவிட்டதாக நினைக்கிறிங்க :)

ராவணன் சொன்னது…

வெறும் புகைமூட்டம் மட்டுமா?
ஒரு வாரமாக கோடையில் அனுபவித்த அதே வெப்பத்தை அனுபவிக்கின்றேன்.

காலையில் கிளம்பும்போது மழை வரும்போல உள்ளதே என்று குடை எடுப்பேன்,வெளியில் பார்த்தால் புகை,12 ஆண்டுகளுக்கு முன்னர்(1997) பார்த்த அதே புகைமூட்டம்.

ரொம்பக் கொடுமை....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்