பின்பற்றுபவர்கள்

6 அக்டோபர், 2010

இணைய விவாதங்களில் விலகும் நட்புகள் ?!

கட்டற்ற இணையவெளி என்ற நம்பிக்கையில் இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் எழுதுகிறோம். கூகுள் பஸ் மற்றும் கூகுள் தனிநபரைச் சார்ந்து இயங்கும் குழுமங்களிலும் எழுதுகிறோம். கட்டற்ற இணையவெளி என்பது சேறுவாரி இரைக்கும் அல்லது அவதூறுகளையும் சுமந்து கொண்டு செல்லும் என்பது அல்ல என் புரிதல். இருந்தாலும் அரசியல் சார்பு அல்லது பொது நபர்கள் குறித்த விமர்சனங்களில் ஓரளவு நடப்புகளையும் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டே விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. அரசியல்வாதி அல்லது பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் ஆபாசம் எதுவும் இல்லை என்றால் அது எதிர்வினை அல்லது ஆதங்கம் என்ற அளவில் தான் எனது புரிதல்.

பொதுவாக அரசியல் தளத்தில் இயங்குபவர்கள் தமக்கென்று கொள்கை இருப்பதாகவும் அதுவே தமது அல்லது தான் சார்ந்த கட்சியின் தனித்துவம் என்று சொல்வர். பெரியாரும் அண்ணாவும் உருவாக்கி வளர்த்த திக மற்றும் திமுக கழகத்தின் இன்றைய கொள்கை என்ன என்பது யாரேக்கேனும் தெரியுமா ? இருந்தாலும் அந்தக் கட்சிகள் தங்கள் கொள்கை சார்ந்து இயங்குவதாகவேச் சொல்லிக் கொள்கின்றன. திமுக தோன்றி பதவியை பிடித்த காலத்தில் தமிழக தேசிய காங்கிரஸ் கட்சி என்பது நேரிடையாகவே எதிர்கட்சி முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய கட்சிகள். இதற்கிடையே இந்திராகாந்திக்கு விதவை பென்சன் வேண்டுமானால் தருகிறேன் என்று வீரவசனம் பேசிய கருணாநிதியை எமெர்ஜென்சியின் போது நன்கு புடைத்தனர் காங்கிரசார். அதைத்தான் பாம்புகள் பல்லிகள் நிறைந்த சிறைச்சாலையில் கழித்தகாலம் என்று கருணாநிதி சொல்லிவந்தார். திமுகவை அழிக்க முயன்று அல்லது ஆட்சியை விட்டு அகற்ற முயன்று தோற்கும் நிலையில் முற்றிலுமாக மறையக் கூடிய சூழலில் அப்போதைய திமுகவிலிருந்து பிரிந்த அதிமுக பின்னால் நின்று திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிக்காட்டியது காங்கிரஸ்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான திமுகவிற்கு இறங்குமுகம் தான். இதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் என்றாலும் காங்கிரசின் கூட்டணி இன்றி இதனை அவர் தனித்து செய்து காட்டிவிடவில்லை. எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகும் ஜெயலலிதாவின் பின்னால் நின்று திமுகவை எதிர்த்து வந்தது, ஜெவின் முதல் ஐந்தாண்டு ஆட்சி ஊழல் மலிந்துவிட பொதுமக்களிடம் செல்வாக்கு இழந்த நிலையில் இனியும் காங்கிரஸ் அதிமுகவின் பின்னால் நின்றால் ஒன்றும் தேராது என்று உணர்ந்த மூப்பனார் போன்றோர் சொல்லியும் கேட்காமல் காங்கிரஸ் அதிமுகவுடன் அடுத்தும் கூட்டணி கண்டது. அந்த தோல்வியில் காங்கிரசும் அதிமுகவும் படுதோல்வி அடைய திமுக ஆட்சி அமைந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் என்னும் நந்தி மூப்பனார் தலைமையில் சிதைய கிடைத்த வாய்ப்பே மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி. அப்போது ஐகே குஜரால் மற்றும் தேவ கவுடாவின் மிகக் குறைந்த காலத்திற்கான மத்திய அரசை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஏற்படுத்தின. அவையும் கவிழ இடையில் இருந்த குழப்பமான சூழலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்தது.

வெறும் 13 மாத ஆட்சியில் சு.சாமியுட்ன ஆன டீ பார்டியில் ஜெ பாஜக ஆட்சியை கவிழ்த்துவிட. அடுத்த பொதுத்தேர்தலில் மதவாதக்கட்சி என்ற விமர்சித்துவந்த பாஜகவுடன் திமுக கூட்டணி கண்டது, இந்நிலையில் மூப்பனார் கழண்டு கொண்டு தாய்கட்சியுடன் சேர ஜெ தலைமையிலான சட்டமன்ற கூட்டணி அமைய ஜெவிற்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெ ஆட்சி முடியும் முன்பே ஜெ சோனியாவை தனிப்பட்ட தாக்குதல்களாக பதிபக்தி இல்லாதவர் என்பதாக விமர்சனம் செய்யவும், பாஜக செல்வாக்கு இழந்து நின்ற நிலையில் மறு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்திய அரசில் இடம் பெற்று, இரண்டாம் முறையாகவும் தொடர்கின்றன. தொடர்ந்து ஐந்து ஆண்டுக்கும் மேலான மத்திய அரசின் தலைமையில் இருப்பதால் காங்கிரஸ் ஆதரவு கொடுத்த விடுதலைபுலிகள் அழித்தொழிப்பு நடவெடிக்கைகளில் ஏராளமான ஈழப் பொதுமக்கள் வீடு இழந்து, இன்றும் முள் வேலியில் வாடும் நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில் தமிழர் நலன் குறித்து எதுவுமே செய்திடாத கருணாநிதி என்று திமுக ஆதரவாளர்களால் தொடர்ந்து குரல் எழுப்பட்டு வருகிறது.

இந்த திமுக எதிர்ப்பு என்பது வெறும் ஈழம் தொடர்புடையது மட்டுமே அல்ல, தரும புரி மாணவிகள் எரிப்பு சம்பவம் போல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டபிறகு, அது குறித்த இரு தரப்பும் கைகுலுக்கிய போது 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்பதாக பேட்டி அளித்து அப்படி ஒரு சம்பவமே தமிழகத்தில் நடக்காது போல் நெகிழ்ந்தார் கருணாநிதி. அப்போது திமுக மற்றும் கருணாநிதி ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விமர்சனக் கத்தியை வீசிக் கொண்டு தான் வந்தனர். என்னுடைய திமுக எதிர்ப்புப் பதிவுகள் என்பது அப்போதே துவங்கிவிட்டன. உச்சமாக அரசு ஆதரவு மற்றும் திமுக ஆதரவு ஊடகங்கள் மூலம் ஈழம் குறித்த நிகழ்வுகள் எதுவுமே வெளியே தெரிந்துவிடாதபடி அமுக்கப்பட்டதும் ஈழ ஆதரவாளர்கள் பலரை சிறையில் அடைத்தது உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்து கருணாநிதி இனி தன்னை தமிழின தலைவர் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர் என்பதாக கட்சி அனுதாபிகள் தவிர்த்து திமுக ஆதரவாளர்கள் அனைவருமே தூற்றினர்.

தமிழர் நலம் மற்றும் கொள்கை அளவிலும் கூட எப்போது காங்கிரஸ்கட்சியை எதிர்த்தே வந்த திமுக ஆதரவாளர்கள் நிலை காங்கிரசுக்கு துதிப்பாடும் திமுகவின் மீதும் கருணாநிதி மீதும் எப்போதோ திரும்பிவிட்டது. துரதிஷ்டவசமாக இவர்களுக்கு மாற்று என்பதாக ஜெவை ஆதரிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட நிலை தான் இன்றைய தமிழர் நலம் சார்ந்து இயங்குபவர்கள் அனைவரின் நிலையும்.

பாம்புகள் பல்லிகள் நிறைந்த பாளையம் கோட்டைச் சிறையில் தான் அடைத்துகிடந்ததை ஹனிபா குரலில் பாடவைத்து காங்கிரசு நிற்கும் தொகுதியில் அந்தப் பாட்டை ஓடவைத்து வாக்குக் கேட்கும் திமுகவினருக்கோ காங்கிரசுக்கோ கொள்கை என்று ஏதேனும் இருக்கிறதா ?

இந்த கண்றாவியெல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால், இணையம் கட்டற்ற ஊடகம் என்பதாக விமர்சனங்களை எழுதிவருகிறோம் அதில் கட்சி ஆதர்வாளர்களின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது. இவ்வாறான கட்சி ஆதரவாளர்கள் பதிவர் நண்பர்கள் என்பதாகத்தான் பழகியும் வந்தனர். அண்மையில் கூகுள் பஸ் விவாதத்தின் போது அத்திவெட்டி ஜோதிபாரதி ஒரு விமர்சனத்தை பஸ்ஸில் ஏற்றினார்

*****

அத்திவெட்டி ஜோதிபாரதி - காங்கிரஸ்காரர்கள் மேல கருணாநிதிக்கு ஒரு மரியாதை உணடு! அவர்களை ஒன்னும் செய்யமாட்டார்! :)))

Govi kannan - விதவை பென்சன் கொடுக்கிறவர் ஆச்சே..

- இது தங்கள் கட்சித்தலைவி சோனியாவைக் குறித்த மிகவும் மோசமான கமெண்ட் என்று அவராகவே கற்பனை செய்து கொண்ட ஒரு காங்கிரஸ் பிரமுகர், 'உங்க வீட்டில் யாரும் விதவை பென்சன் வாங்கி இருக்கிறார்களா ?' என்று என்மீது பாய்ந்தார். இதிலிருந்தே இவர் நண்பர் என்ற போர்வையில் வலைப்பதிவில் நுழைந்த ஒரு கட்சிக்காரர் என்பதாக உணர்ந்து நொந்தேன். பொதுவான விமர்சனத்தை சகிக்க முடியாமல் தனிப்பட்ட தாக்குதல்களாக இவர்கள் சீறும் போது தான் இவர்கள் நண்பர்களாக நாம் நினைத்தது நம் தவறே என்று உணர்ந்தேன். அவரும் சொன்னது தவறு என்று ஒப்புக் கொள்ளாத நிலையில் அவரிடம் தனிப்பட்டு எந்த ஒரு விவாதமும் செய்யாமல் முற்றிலுமாகத் தவிர்த்தேன்.

அடுத்து அபி அப்பா என்கிற திமுக கட்சிக்காரரின் விவாதத்தின் இடையே

அபி அப்பா - \\ நீங்கள் தான் கருணாநிதி பற்றி சொல்லும் இடத்திலெல்லாம் ஜெவைக் கொண்டு வந்து முட்டுக் கொடுக்கிறீர்கள்\\

இல்லை கோவி! நான் அத்தனை அனுபவம் இல்லாதவன் இல்லை.சும்மா சும்மா ஜெயலலிதா பத்தி பேச எனக்கு என்ன வேண்டி கிடக்கு. நீங்கள் தான் எந்த எந்த விஷயம் விவாதத்துக்கு எடுத்து கொண்டாலும் அங்கே கலைஞரை சம்மந்தமே இல்லாமல் கொண்டு வருகின்றீர்கள். அதன் காரணமாகவே நான் ஒரு முறை உங்க பாணிக்கே வந்தேன். அப்போது கூட கீழே டிஸ்கி போட்டு சொன்னேன்.(அப்பாடா நானும் சம்மந்தமில்லாமல் உளற ஆரம்பிச்சுட்டேனே) என்று சொல்லி தான் நானும் ஜெ வை இழுத்தேன். சுந்தர் பஸ்ல கூட குழலி கம்பேரிடிவா ஜெ தான் திமுகவை விட உயர்வு என சொல்லிய போது அதை ஒட்டியே தான் வாதம் செய்தேன்.

இப்பவும் சொல்கிறேன். எதை கொடுக்கிறோமோ அதான் திரும்ப வரும்!

@குழலி! கண்ணதாசன் ஒரு பெயிலியர் ரோல் மாடல் இந்த உலகிற்கு. அதை நீங்கள் பின்பற்றுவதால் எனக்கு பெரிய வருத்தம் என்ன இருக்க போகின்றது. கோ அஹட். (உலகில் கண்ணதாசன் பேரன் பேத்திகள் கூட "நீ வரும் காலத்தில் கண்ணதாசன் மாத்ரி ஆகனும்னு தவறி கூட சொல்ல மாட்டாங்க அப்படி ஒரு நொட்டோரியஸ் அவரு என்பது எல்லாரும் ஒத்து கொண்ட உண்மை)
Govi Kannan - //அப்போது கூட கீழே டிஸ்கி போட்டு சொன்னேன்.(அப்பாடா நானும் சம்மந்தமில்லாமல் உளற ஆரம்பிச்சுட்டேனே) என்று சொல்லி தான் நானும் ஜெ வை இழுத்தேன். //

ஆக கருணாநிதி பற்றிப் பேசும் இடங்களில் ஜெவைக் கொண்டு வந்து ஒப்பிடும் போதே நீங்கள் கருணாநிதிக்கு மாற்று ஜெ தான் என்று ஒப்புக் கொள்வதாகவே இருக்கிறது. நீங்க என்ன உங்க தலைவரும் ஜெவின் பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லிவருவதில் இருந்தே, கருணாநிதி ஜெ வை எந்த் அளவுக்கு நினைக்கிறார் என்பது வெள்ளிடை மலை.

நாங்க கருணாநிதியைத்தான் விமர்சனம் செய்வோம், அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர். ஜெ ஆட்சியில் இல்லை. ஜெ ஊழல் வாதி இல்லைன்னு கோர்ட் சொன்னாலும் நீங்க ஒப்புக் கொள்ளுவிங்களா ?

அபி அப்பா - \\அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர்\\\

அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

\\ஜெ ஊழல் வாதி இல்லைன்னு கோர்ட் சொன்னாலும் நீங்க ஒப்புக் கொள்ளுவிங்களா ?\\ :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) என்ன பதில் எதிர்பார்க்குறீங்க என் கிட்ட இருந்து??? அதையே போட்டுகுங்க கோவி!Sep 29
KRISHNAMOORTHY BASKARAN - // இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

ஜென்மம் 2010 mudivurum.................Sep 29
Govi Kannan - //:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) என்ன பதில் எதிர்பார்க்குறீங்க என் கிட்ட இருந்து??? அதையே போட்டுகுங்க கோவி!//

என்ன பதிலா கருணாநிதியும் ஜெவும் என்னைப் பொருத்த அளவில் ஒன்று தான். நீங்க என்ன தான் கரடியாக கருணாநிதி நல்லவரு வல்லவரு என்றாலும் தீர்ப்பு வழங்கினாலும் நாங்க ஒப்புக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்னும் முள்ளி வாய்க்காலுக்கு விமோசனம் கிடைக்காத நிலையில் கருணாநிதி இருந்தாலும் ஒண்ணு தான் செத்தாலும் ஒண்ணு தான்

Govi Kannan - //அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்! //

கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம்.

அவரு கருணாநிதியை வாழ்த்துவதாக நினைத்து என் ஆயுளை குறைத்து கேவலப்படுத்துறார், கருணாநிதி ஆதரவாளர்களெல்லாம் சிந்திக்கத் தெரியாதவர்கள்.

அபி அப்பா நீங்க வேண்டுமானால் ஆயுள் முழுவதும் கருணாநிதி காலில் விழுந்து கிடங்கன்னு சொல்கிறேன், இது வாழ்த்தா வசவான்னு நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

*****


இந்த உரையாடலின் தொடர்ச்சியில் திமுக பற்றாளர் ஒருவர் (அபி அப்பா அல்ல)

அது எப்படி என் தலைவனை செத்துப் போகச் சொல்லுகிறாய் ? ஒருவர் சாகவேண்டும் என்று நினைக்கும் உன்னை போன்ற ஆட்களுடன் நான் நட்பாக இருக்க விரும்பவில்லை, இதுவே நமக்கு நடக்கும் கடைசி உரையாடல் இனி என்னைப் பார்க்கவேண்டாம் என்பதாக ஒரு உடன் பிறப்பு எகிறிச் சென்றார்.

இவர்களுக்கு முள்ளிவாய்கால் பிணங்களோ, தமிழக மீனவக் காயங்களோ செயல்படும் இடத்தில் இருந்து செயல்படாமல் போன தலைவன் ஒருநாள் போகத்தானே போகிறார் என்று சொன்னதைவிட பெரிதே அல்ல. சாவு என்பது தன் தலைவனுக்கு என்றால் தான் சோகம் மற்றவர்களுக்கு என்றால் அது தீபாவளி நாள்.


கருணாநிதியை 'நன்கு வாசிப்பவர்' என்று சொல்லி சாதிச் சாடல் சாடிய இளங்கோவனும் கருணாநிதி பக்கத்தில் அவ்வப்போது நின்று போஸ் கொடுத்துதான் வருகிறார். ஜெ பக்கத்தில் நின்று கருணாநிதியைத் தூற்றியோர் பிறகு கருணாநிதி பக்கத்தில் நின்று ஜெவைத் தூற்றுகிறார்கள். இவற்றில் ஆபாசப் பேச்சுகளும் அடங்கும். முற்றிலும் எதிர் எதிர் நிலையில் இருந்த திமுகவும் காங்கிரஸும் பத்தாண்டுகளாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, இவர்களின் நிலையும் கொள்கைகள் எதுவும் கூட நிலையானது இல்லை. கருணாநிதிய அடித்து உதைத்து துன்புறுத்தியோர், எதிர்கட்சியில் இருந்து கொண்டு செய்யாத விமர்சனத்தையா நான் செய்துவிட்ட்டேன் ?

ஒரு தமிழர் தலைவன் இருக்கிறானா இல்லையா என்கிற ரீதியில் ஈரண்டுகளுக்கு மேலாக ஊகங்களே நிலவு வரும் வேளையில் 87 வயது முதியவர் ஒருநாள் இறக்கப் போகிறவர் தானே என்பது தூற்றலாம். சூப்பர் ஸ்டார் இறக்கும் படி நடித்தால் ரசிகர் பொங்கிவிடுவார்கள் என்பது போல் கருணாநிதி இறந்துவிடுவார் என்று சொன்னால் கூட இவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாதாம். இந்த உலகத்தில் சாகாவரம் பெற்றவர் யார் ?

*********

ஒருவரிடம் நீ கருணாநிதி தாத்தா வாழும் வரை வாழ வாழ்த்துகிறேன் என்று சொல்வது அவருக்கு வாழ்த்தா ? வசவா ? அபி அப்பா அப்படியான வாழ்த்தை எனக்கு வழங்கினார், அதற்கு பதில் சொன்ன நான் கருணாநிதி செத்துப் போகவேண்டும் என்று விரும்புகிறேனாம். கருணாநிதி ஏற்கனவே 87 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர். பெரியார் 90 வயதுவரை வாழ்ந்தார், அதிகபட்சமாக கருணாநிதியின் வாழ்நாள் என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது கருத்து சொல்வது இயல்பு தானே.

யார் வேண்டுமானாலும் எந்த கொள்கையில் இருக்கட்டும், அதற்காக பழகியவர்களைவிட கொள்கை பெரிது என்று நினைக்க அவர்கள் கொள்கை சார்ந்தவர்களிடம் மட்டும் பழகினால் யாதொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்படியானவர்கள் தங்கள் நிலையை என்றுமே தெரிவித்து இருந்தது இல்லை, ஒருவேளை அப்படித் தெரிவித்திருந்தால் என்போன்றோர் ஏன் பழக்கப் போகிறோம் ? கட்சிகார்ர்களை நண்பர்களாக நினைத்துப் பழகும் கட்சி சார்பற்றவர்கள் சிந்தனைக்கு விடுகிறேன்

வேறொரு பதொவொன்றில் ரஜினி குறித்த விவாதத்தின் முற்றலில் பதிவர் கிரியுடன் கடும் வாக்குவாதம் முடிவில் தனித்தாக்குதலாக தொடரும் வேளையில் 'இதுவரை உங்களை சந்தித்தாத ஒருவருக்காக, இனியும் உங்களை அவர் சந்திப்பாரா என்று எந்த உறுதியும் இல்லாத நிலையில், இதுவரை பழகிய என்னை தனித்தாக்குதல் செய்கின்றீர்களே, ஒருவேளை அவர் தான் முக்கியம் என்றால் நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது ?' என்று கேட்டேன். உடனடியாக அவர் எனக்கு ரஜினி முக்கியம் இல்லை கோவி.கண்ணன் நீங்கள் தான் முக்கியம் என்று அதுகுறித்த பின்னூட்ட கருத்துக்கள் அனைத்தையும் அழித்தார் கிரி, அது எனக்கு பெருமையாகத்தான் இருந்தது.

என்னுடன் பல பார்பனர்கள் நெருங்கிப் பழகுகின்றனர், என்னுடைய சமூகக் கட்டுரைகளில் பார்பனியம், இந்துத்துவம் பற்றிய கடுமையான விமர்சனம் அனைவருமே அறிந்தது தான். நான் அப்படி எழுதுகிறேன் என்பதற்காக இதுவரை என்னுடன் நேரிடையாகப் பழகும் எந்த ஒரு பார்பனரும் நட்பை முறித்துக் கொள்கிறேன் என்று விலகியதோ, தனிப்பட்ட தாக்குதல் தொடுத்ததோ இல்லை.

64 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

//கருணாநிதியின் வாழ்நாள் என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது கருத்து சொல்வது இயல்பு தானே. //

தப்பா நினைச்சிக்காதீங்க. இது எல்லாம் இயல்பு கிடையாதுங்க.

(நான் நீங்கள் கூறும் அந்த கூகுள் Buzz விவாதம் படிக்கலை. யாரோட buzz ன்னு தெரியலை.)

கோவி.கண்ணன் சொன்னது…

//தப்பா நினைச்சிக்காதீங்க. இது எல்லாம் இயல்பு கிடையாதுங்க.

(நான் நீங்கள் கூறும் அந்த கூகுள் Buzz விவாதம் படிக்கலை. யாரோட buzz ன்னு தெரியலை.)//

ஊகம் இயல்பு இல்லை என்றால்
கண்கள் பனிப்பதும் இதயம் இனிப்பதும் இயல்பா ?

King சொன்னது…

தலைவன் சாகா வரம் பெற்றவர் அவரை நீங்கள் எப்பிடி நீங்கள் செத்து விடுவர் எண்டு சொல்லலாம்.. ஆட்டோ வீட்டு பக்கம் வர போவது உறுதி..

மணிகண்டன் சொன்னது…

கோவி, மறுபடியும்.

படித்துப் பாருங்கள். அபி அப்பா சொல்லி இருப்பது ( திமுக காரராக இருந்தாலும் ) சாதாரணமானது தான்.

//இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்//

அதற்கான உங்கள் பதில் இது.

//கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம்.//

நீங்கள் கலைஞரை பற்றி எந்த பதிவு எழுதினாலும் வந்து அதகளம் செய்கிறார்கள். அது உங்களுக்கு எரிச்சல் தரலாம். அதை உங்களுக்கு ஹேண்டில் செய்யத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் ஒருவர் ரெண்டு வருடத்தில் மண்டையை போடுவது திண்ணம் என்று சொல்லும் யூகம் கருத்தாகாது. அது இயல்பும் ஆகாது.

நீங்க ரொம்ப அதிகமா provoke ஆகறீங்க. அவ்வளவு தான். அதை புரிஞ்சக்கறது நல்லது !

ssk சொன்னது…

தமிழருக்கு உரிய பண்பு இது. ஊடி பிரிவது அணுவில் கலந்த ஒன்று. தமிழக அரசியலுக்கு மாற்று யார்? சிறிதாவது நல்லது நடக்க இங்கு உள்ள சரியான அரசியல்வாதி யார்?

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள்.இந்த இணையத்திலும் அவங்க கட்சி கட்சி கொள்கை (கொள்ளை அடிக்கிறதுதான்) பரப்ப வந்துட்டாங்க.அவங்கள நாமளா பாத்துதான் துண்டிக்கனும்.அப்படி திருந்தாத நட்புகள் போவதே நல்லது நண்பரே.

Indian சொன்னது…

I 'm not sure whether you said the following.

//கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம்.//

In any case, I feel it is kinda rude to say in "public".

உடன்பிறப்பு சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள் கோவி

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

ஏன்? :( Have a break.

அன்புடன்
சிங்கை நாதன்

ஜோ/Joe சொன்னது…

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விவாதத்தை பற்றிய ஒரு தேவையற்ற பதிவு.

பழமைபேசி சொன்னது…

//எம்ஜிஆர் முதல்வராக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான திமுகவிற்கு இறங்குமுகம் தான்.//

Is it so? Politics is a politics... DMK was never down less than 25% votes... till 1991....

Narayanasamy Naidu was the culprit that ADMK was in rule continuously... even then, ADMK lost very badly in 1980 elections as well as local body elections...

Could you recollect the reason why MGR got rid of upper council in TN Assembly??

See... I'mnot neither DMK nor Anti-DMK... but, let's reflect the reality and try to suppress the emotions Kannan sir...

ILA(@)இளா சொன்னது…

காரணம் ஒன்னுமில்லைங்க. மரியாதை பல இடங்களில் குறையறதே காரணம். பிராமணர்களை பார்ப்பான்ன்னு சொன்னா தப்புன்னு சொன்னா புரிஞ்சிக்கனும். இல்லாட்டி சொல்லித் தெரியனும். வயசானவங்களை கிழவன்னு சொல்றதும் அதே வகைதான். And you DONT stand on one side for anyissue. and people dont like swinging abilities)

ராவணன் சொன்னது…

என் கருத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள் எனக்கு நட்பாக இருக்கமுடியாது.இதில் நான் தெளிவாக உள்ளேன்.
சும்மா..சும்மா யாரிடமும் நான் நட்பு பாராட்டுவதில்லை.
கருத்துகள் ஒத்துவரவில்லை
யென்றால் அங்கே நட்பு இருப்பது கடினம்.
பார்ப்பனர்கள்,கட்சிக்காரர்கள்,மதவெறியர்கள்,ஜாதி வெறியர்கள் தங்களின் நிஜ முகத்தை நீண்ட நாட்கள் மறைக்கமுடியாது.

நான் மிகத் தெளிவாக உள்ளேன்
(தினமும் ஆப் அடித்தாலும்).
இவர்கள் என்னிடம் நெருங்கமுடியாது.


இது எப்படீ?

என்.ஆர்.சிபி சொன்னது…

இப்படியும் சிலர்!

என்.ஆர்.சிபி சொன்னது…

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு! நல்லா கேக்குறீங்க கோவி டீடெய்லு!

ராஜ நடராஜன் சொன்னது…

//அரசியல்வாதி அல்லது பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் ஆபாசம் எதுவும் இல்லை என்றால் அது எதிர்வினை அல்லது ஆதங்கம் என்ற அளவில் தான் எனது புரிதல்.//

காலையிலே கடைக்கு வந்தேன்.சலாம் போட முடியவில்லை.

அடைப்பானில் உள்ளதே எனது நிலைப்பாடும்.

ராஜ நடராஜன் சொன்னது…

முதல் பின்னூட்டம் போட்டு விட்டு கீழே வந்தால் வண்டி எங்கே எங்கேயோ சுத்துகிறதே:(

எப்படியோ கிரிக்கு ஒரு வாழ்த்து!

ராஜ நடராஜன் சொன்னது…

முதல்வர் கருணாநிதி பற்றி சொல்லாடல்கள் வயதானவர் என்ற முறையில் வருத்தம் தரக்கூடிய ஒன்றே.பொது விவாதத்தில் இவைகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றும் கூட.

ஆனால் இந்த சொல்லாடல் மனோநிலைகளுக்கு காரணம் அவரும்,அவரது அரசியல் நிலைப்பாடுகளும் அல்லவா?அதிலும் விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் தி.மு.க அனுதாபிகளாயிருந்தவர்களாயிருப்பார்கள் என நினைக்கிறேன்.

கணீனி யுகத்துக்கும் முன்பான பத்திரிகைச் செய்தி காலமாயிருந்தால் குறிப்பிட்ட பத்திரிகை வாசிப்புக்குப் பின் சிறு அரட்டைகளுடன் முடிகின்ற செய்திகளாய் இருந்திருக்கும்.முரசொலியும்,தினத்தந்தியும் வேத புத்தகங்களாய் கூட இருந்திருக்கும்.இப்பொழுது பரந்த பல கருத்துக்கள் எதை தேர்ந்தெடுப்பதென்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டு விடுகிறது.எனவே உண்மைகள் வெளிச்சத்தில்.

வால்பையன் சொன்னது…

பார்பனர்கள் = கட்சி அபிமானிகள்!

நட்பு வேறு, கருத்து வேறு என்று எவ்வாறு பார்க்க முடியவில்லை என்பது புரியவில்லை!

கருணாநிதி தனது மகன் மந்திரி பதவிக்காக டெல்லி சென்றதும், தமிழ் மக்கள் செத்த போது தந்தி அடித்ததும் தெரிந்துமா அபி அப்பா கருணாநிதிக்கு சொம்பு தூக்குகிறார்!

கவலைப்படாதிங்க கோவி!, மாறுவாங்க அவுங்களும், என்னைக்காவது ஒருநாள் தெரியாமையா போயிரும், இத்தனை நாள் தவறாக தான் இருந்தோம் என்று!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!

வலுக்கட்டாயமா போறேன்னு சொன்னா லூசுல விடுற பழக்கத்த கத்துக்கிட்டு இருக்கேன்!

லூசுல விடுங்க அல்லது சாய்சுல விட்டுருங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//King said...

தலைவன் சாகா வரம் பெற்றவர் அவரை நீங்கள் எப்பிடி நீங்கள் செத்து விடுவர் எண்டு சொல்லலாம்.. ஆட்டோ வீட்டு பக்கம் வர போவது உறுதி..//

முத்துகுமார் துப்பியதைவிட யாராலும் துப்பமுடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//
நீங்கள் கலைஞரை பற்றி எந்த பதிவு எழுதினாலும் வந்து அதகளம் செய்கிறார்கள். அது உங்களுக்கு எரிச்சல் தரலாம். அதை உங்களுக்கு ஹேண்டில் செய்யத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் ஒருவர் ரெண்டு வருடத்தில் மண்டையை போடுவது திண்ணம் என்று சொல்லும் யூகம் கருத்தாகாது. அது இயல்பும் ஆகாது.

நீங்க ரொம்ப அதிகமா provoke ஆகறீங்க. அவ்வளவு தான். அதை புரிஞ்சக்கறது நல்லது !

6:59 PM, October 06, 2010//

எனக்கு தெரிந்து ஈழ/தமிழர் நலன் ஆதரவாளர்கள் எவருமே கருணாநிதி நீடுழிவாழவேண்டும் என்று வாழ்த்துவது போல் தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger ssk said...

தமிழருக்கு உரிய பண்பு இது. ஊடி பிரிவது அணுவில் கலந்த ஒன்று. தமிழக அரசியலுக்கு மாற்று யார்? சிறிதாவது நல்லது நடக்க இங்கு உள்ள சரியான அரசியல்வாதி யார்?//

சரியான அரசியல்வாதி யாரும் இல்லை என்றாலும் சுரண்டியவர்களே எப்போதும் அல்லது தொடர்ந்து சுரண்டலாம் என்பதையும் யாராலும் ஏற்கமுடியாது

கோவி.கண்ணன் சொன்னது…

// நந்தா ஆண்டாள்மகன் said...

நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள்.இந்த இணையத்திலும் அவங்க கட்சி கட்சி கொள்கை (கொள்ளை அடிக்கிறதுதான்) பரப்ப வந்துட்டாங்க.அவங்கள நாமளா பாத்துதான் துண்டிக்கனும்.அப்படி திருந்தாத நட்புகள் போவதே நல்லது நண்பரே.//

நான் யாரையும் துண்டிப்பது இல்லை, அப்படியே ஒட்டிக் கொண்டே இருங்கள் என்று சொன்னதும் இல்லை. இங்கே கொடுக்கல் வாங்கல் முதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத போது வீராப்பு பேசுவது தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் ஒரு மோசமான மனைநிலையே என்பதால் போறவர்களை போகாதிங்கன்னு நான் தடுப்பது இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...

ஆழ்ந்த அனுதாபங்கள் கோவி//

உங்களைப் போன்ற கட்சிக்காரர்களை நண்பர்கள் என்று பழகியதற்காகவா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விவாதத்தை பற்றிய ஒரு தேவையற்ற பதிவு.//

உங்கள் கருத்தை ஒட்டிய பிரச்சனையில் உங்கள் மனம் தூண்டப்படும் போது நீங்கள் இதுவெல்லாம் தவிர்க்க வேண்டியவை என்று உணர்ந்திருக்கிறேன் என்று சொன்னீர்கள் என்றால் உங்கள் கருத்தை ஏற்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// Indian said...

I 'm not sure whether you said the following.

//கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம்.//

In any case, I feel it is kinda rude to say in "public".//

பொதுக்கூட்டம் கூட பப்ளிக்கில் தான் நடக்குது, அதில் கருணாநிதி அண்ட் குடும்பத்தைப் பற்றிப் பேசாத ஒன்றையோ அல்லது கருணாநிதி அண்ட் ஆதரவாளர்கள் பேசாத ஒன்றை நான் பேசிவிடவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

// சிங்கை நாதன்/SingaiNathan said...

ஏன்? :( Have a break.

அன்புடன்
சிங்கை நாதன்//

கிட் காட் வாங்கிக் கொடுங்க செந்தில்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ILA(@)இளா said...

காரணம் ஒன்னுமில்லைங்க. மரியாதை பல இடங்களில் குறையறதே காரணம். பிராமணர்களை பார்ப்பான்ன்னு சொன்னா தப்புன்னு சொன்னா புரிஞ்சிக்கனும். இல்லாட்டி சொல்லித் தெரியனும். வயசானவங்களை கிழவன்னு சொல்றதும் அதே வகைதான். And you DONT stand on one side for anyissue. and people dont like swinging abilities)//

பார்பனர்களை பிராமணர்கள் என்று சொல்வதில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். காரணம் மிக எளிது பார்பனர்களை பிராமணர் என்று குறிப்பிடும் போது வருணாசிரமத்தின் நான்கு வருண கோட்பாடு (சூத்திரனின் இருப்பை உறுதி செய்யும்) அபத்தத்துக்கு துணை போகிறோம் என்பதே. மற்றபடி பார்பனர்களை பார்பான் என்று நான் குறிப்பிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

//வயசானவங்களை கிழவன்னு சொல்றதும் அதே வகைதான்.//

வயசானவங்களை அப்படிச் சொல்லாமல் வாலிபர்களை அப்படிச் சொல்லமுடியுமா ? முக ஸ்டாலின் அவருக்கு 60ஐ தொட்டிருந்தாலும் அவரை அவ்வாறு சொல்லவில்லையே

Jawahar சொன்னது…

கண்ணன்ஜி, உங்க கருத்துக்கள்ளே எனக்கு உடன்பாடு இல்லாதவை நிறைய உண்டு. உடன்பாடு இன்மையைப் பதிவும் பண்ணியிருக்கேன். நட்பு விலகக் கூடாது என்கிற டிரைவ் மனசுக்குள்ளே ஆப்பரேட் பண்ணிகிட்டே இருக்கிறதாலே வார்த்தைகள்ளே தானாவே ஒரு டிப்ளமஸி வந்துடும். நீங்களும் எனக்கு பதில் சொல்லும் போது இந்த டிப்ளமஸியைக் கையாள்றதைப் பார்த்திருக்கேன்.

ஒண்ணும் கவலை இல்லை.

உங்களை எல்லாருக்குமே புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com

ஜோ/Joe சொன்னது…

//வயசானவங்களை அப்படிச் சொல்லாமல் வாலிபர்களை அப்படிச் சொல்லமுடியுமா ? //

விதண்டாவாதத்துக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது :)

ஜோ/Joe சொன்னது…

//உங்கள் கருத்தை ஒட்டிய பிரச்சனையில் உங்கள் மனம் தூண்டப்படும் போது நீங்கள் இதுவெல்லாம் தவிர்க்க வேண்டியவை என்று உணர்ந்திருக்கிறேன் என்று சொன்னீர்கள் என்றால் உங்கள் கருத்தை ஏற்கிறேன்//

எந்த ஒரு விவாதத்திலும் , அது எந்த எல்லைக்கு போனாலும் அடுத்தவர் சாவை ஆவலோடு எதிர்நோக்குகிறேன் என்ற அர்த்ததில் கண்டிப்பாக நான் சொல்ல மாட்டேன் .

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்த ஒரு விவாதத்திலும் , அது எந்த எல்லைக்கு போனாலும் அடுத்தவர் சாவை ஆவலோடு எதிர்நோக்குகிறேன் என்ற அர்த்ததில் கண்டிப்பாக நான் சொல்ல மாட்டேன் .//

இது திரித்தல் 'ஆவலோடு' என்று எங்கும் நான் குறிப்பிடவில்லை. என்னுடைய ஆயுள் முழுவது கருணாநிதி பற்றிப் பேசவேண்டும் என்று அபி அப்பா சொன்னதற்குத்தான் நான் கிழவன் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது உறுதி என்றேன், இதில் ஆவல் எங்கிருந்து வந்தது ? என்னுடைய ஆயுளையும் கருணாநிதியை முடிச்சுப் போடுவது கயவாளித்தனம் இல்லையா ? இதையெல்லாம் எத்தனை முறை விளக்கினாலும் உங்களுக்கு வெளங்காது. உங்கள் காலம் முழுவதும் கருணாநிதி வாழ வாழ்த்துகிறேன் என்று உங்களுக்கு யாரேனும் வாழ்த்து தெரிவித்தால் தான் உங்களுக்கு வெளங்கும் போல

ஜோ/Joe சொன்னது…

கோவியார்,
நல்ல சப்பைக் கட்டுறீங்க அந்த அர்த்தத்தில் சொல்லலைன்னு ..வேறு ஒரு தளத்தில் நடந்த விவாதத்தை நீங்கள் இங்கு கொண்டு வந்ததால் சொல்கிறேன் ..இன்னொரு தளத்தில் இன்னொருவர் நேரடியாகவே அப்படி சொன்ன போது நீங்கள் அதற்கு ஆதரவு கொடுத்தீர்கள் .

யாராயிருந்தாலும் பொது இடத்தில் அடுத்தவர் சாவு சீக்கிரம் வர வேண்டும் என்னும் அர்த்ததில் சொல்லுவது அடிப்படை நாகரீகத்துக்கு புறம்பானது .அவ்வளவு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ/Joe said...

கோவியார்,
நல்ல சப்பைக் கட்டுறீங்க அந்த அர்த்தத்தில் சொல்லலைன்னு ..வேறு ஒரு தளத்தில் நடந்த விவாதத்தை நீங்கள் இங்கு கொண்டு வந்ததால் சொல்கிறேன் ..இன்னொரு தளத்தில் இன்னொருவர் நேரடியாகவே அப்படி சொன்ன போது நீங்கள் அதற்கு ஆதரவு கொடுத்தீர்கள் .

யாராயிருந்தாலும் பொது இடத்தில் அடுத்தவர் சாவு சீக்கிரம் வர வேண்டும் என்னும் அர்த்ததில் சொல்லுவது அடிப்படை நாகரீகத்துக்கு புறம்பானது .அவ்வளவு தான்.//

எந்த சப்பைக் கட்டும் கட்டவில்லை, கருணாநிதியின் ஆயுள் முழுவதும் நீங்கள் வாழ உங்களை வாழ்த்துகிறேன் என்று எவரேனும் உங்களை வாழ்த்தினால் தான் வாழ்த்தின் விபரீதம் உங்களுக்கு புரியும், அப்போது தான் கருணாநிதியின் ஆயுள் பற்றி நீங்களும் அவங்களுக்கு பதில் சொல்லுவிங்க. பாதிக்கப்பட்டவர்கள் தான் உணர்ச்சிவசப்படுவாங்க கேள்விப்படுகிறவர்களுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர் என்று தான் தோன்றும்.

ஜோ/Joe சொன்னது…

//கருணாநிதியின் ஆயுள் முழுவதும் நீங்கள் வாழ உங்களை வாழ்த்துகிறேன் என்று எவரேனும் உங்களை வாழ்த்தினால் தான் வாழ்த்தின் விபரீதம் உங்களுக்கு புரியும்//

ஏதோ அடுத்தவர் இப்படி சொன்ன பிறகு தான் நீங்கள் கருணாநிதி மண்டையை போடுவதை பற்றி பேசியது போல சொல்லுகிறீர்கள்.

சரி ..நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் தகவலை வைத்தே பார்ப்போம் ..கோவி : நாங்க கருணாநிதியைத்தான் விமர்சனம் செய்வோம், அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர். ஜெ ஆட்சியில் இல்லை.

அபி அப்பா : \\அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர்\\\

அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

***********

இதுக்கு என்ன அர்த்தம் ? ஏன் எப்போதும் கருணாநிதியை விமர்சிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கருணாநிதி தான் ஆட்சியில் இருக்கிறார் .ஜெயலலிதா அல்ல ..எனவே தான் நான் கருணாநிதியை விமர்சிக்கிறேன் என நீங்கள் சொல்லுகிறீர்கள் ..அதற்கு அபி அப்பா ..கலைஞர் ஆட்சிக்கட்டில் இருப்பதால் நீங்கள் விமரிப்பதாக இருந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் விமர்சியுங்கள் .அதுவரை கலைஞர் ஆட்சி நீடிக்கட்டும் என கலைஞரை அவர் வாழ்த்துகிறார் ..

இதற்கு நீங்கள் இரண்டு வருடத்தில் மண்டையப் போடப்போகும் கலைஞரோடு என் வாழ்நாளை எப்படி தொடர்பு படுத்தலாம் என எகுறுகிறீர்கள் ..அவர் அவருடைய தலைவரை வாழ்த்தினாரே தவிர உங்களை எதுவும் சொல்லவில்லை .

ஆனால் உங்களை ஆதரிப்பதாகவும் , கலைஞரை திட்டுவதாகவும் நினைத்துக்கொண்டு பாஸ்கரன் சொன்னது தான் அபத்ததின் உச்சம் .

நீங்கள் கோப்பப்பட வேண்டியது பாஸ்கரனை ..அதை விட்டு விட்டு நீங்கள் தான் ஏதேதோ கற்பனை செய்து கொள்கிறீர்கள்

ஜோ/Joe சொன்னது…

//கருணாநிதியின் ஆயுள் முழுவதும் நீங்கள் வாழ உங்களை வாழ்த்துகிறேன் என்று எவரேனும் உங்களை வாழ்த்தினால் தான் வாழ்த்தின் விபரீதம் உங்களுக்கு புரியும்//

இப்போது இப்படி நீங்கள் என்னை வாழ்த்தியதாக வைத்துக்கொள்வோமே . அதனால் நான் ஒன்றும் விசனப்படவில்லை ..போதுமா?

ஆனால் மேற்சொன்னது போல யாரும் உங்களை சொல்லவில்லை என்பது வேறு விடயம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கலைஞர் ஆட்சிக்கட்டில் இருப்பதால் நீங்கள் விமரிப்பதாக இருந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் விமர்சியுங்கள் .அதுவரை கலைஞர் ஆட்சி நீடிக்கட்டும் என கலைஞரை அவர் வாழ்த்துகிறார் ..//

அவரு வாழ்த்துகிறார் காலில் விழுந்து கிடக்கிறார் அது எனக்கு பிரச்சனை இல்லை, அவரே தன் வாயால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் கருணாநிதி காலடியில் விழுந்து கிடக்கத் தயார் என்று சொல்லுவாரா ? இவருடைய வாழ்நாளும் கருணாநிதியின் எஞ்சிய வாழ்நாளும் ஒன்றா ? பிறகு ஏன் அப்படி அபத்தமாகச் சொல்லவேண்டும். என்னுடைய ஆயுளை கருணாநிதியின் எஞ்சிய ஆயிளுக்குள் சுறுக்கியதால் தான் எனக்கு கோவம் வந்தது, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள், புரியாவிட்டாலும் பரவாயில்லை.

ஜோ/Joe சொன்னது…

//என்னுடைய ஆயுளை கருணாநிதியின் எஞ்சிய ஆயிளுக்குள் சுறுக்கியதால் தான் எனக்கு கோவம் வந்தது, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள், புரியாவிட்டாலும் பரவாயில்லை.
//

அப்படி குறுக்கியது உங்களுக்கு வக்காலத்து வாங்க வந்த பாஸ்கரன் தான் .அதனால் கோபம் வந்தால் அவரிடம் காட்டுங்கள் ..அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ..புரியாவிட்டாலும் பரவாயில்லை.

dondu(#11168674346665545885) சொன்னது…

//கண்ணன்ஜி, உங்க கருத்துக்கள்ளே எனக்கு உடன்பாடு இல்லாதவை நிறைய உண்டு. உடன்பாடு இன்மையைப் பதிவும் பண்ணியிருக்கேன். நட்பு விலகக் கூடாது என்கிற டிரைவ் மனசுக்குள்ளே ஆப்பரேட் பண்ணிகிட்டே இருக்கிறதாலே வார்த்தைகள்ளே தானாவே ஒரு டிப்ளமஸி வந்துடும். நீங்களும் எனக்கு பதில் சொல்லும் போது இந்த டிப்ளமஸியைக் கையாள்றதைப் பார்த்திருக்கேன்.//
அதே உணர்வுகள்தான் எனக்கும். ஆரம்பத்தில் மிகுந்த மனவேறுபாடுகளுடன் இருந்த பரிமாறல்கள் பின்பு உறுதியான நட்பின் விளைவால் டிப்ளமசியுடன்தான் என் தரப்பிலிருந்தும் வருகின்றன, வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படி குறுக்கியது உங்களுக்கு வக்காலத்து வாங்க வந்த பாஸ்கரன் தான் .அதனால் கோபம் வந்தால் அவரிடம் காட்டுங்கள் ..அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ..புரியாவிட்டாலும் பரவாயில்லை.//

உங்கள் காலம் முழுவதும் கருணாநிதிக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று எதாவது 30 வயதிற்குள் அதுவும் அண்மையில் திருமணம் ஆனவரான உடன்பிறப்புகளுக்கு வாழ்த்து சொல்லுங்க, அவங்க அதை எப்படி பொருள் கொள்கிறார்கள் என்று பார்த்து கேட்டுவந்து சொல்லுங்க. எனக்கு அது போல் வாழ்த்து சொல்ல மனது வராது.

கிரி சொன்னது…

கோவி கண்ணன் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தனிமனித தாக்குதல் இதுவரை வரை யாரையும் செய்தது இல்லை இனியும் செய்ய மாட்டேன். இருப்பினும் நீங்கள் கூறியது எது என்று எனக்கு நினைவில்லை அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. இத்தனை மாதங்களுக்குப்பிறகு அதை நினைவுபடுத்தி சங்கடப்பட விருப்பமில்லை. என்னை அறியாமல் செய்து இருந்தால் அவை அனுபவமில்லா வார்த்தைகளாக நான் எடுத்துக்கொள்கிறேன். தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்க நான் என்றும் தயங்கியதில்லை.

//கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம்//

கலைஞரை எனக்கும் சில விசயங்களில் பிடிக்காது ஆனாலும் இதைப்போல பொது வெளியில் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இருவருக்குள் பேசி கிண்டலடிப்பது வேறு இப்படி எழுத்தில் கூறுவது வேறு. உங்களுக்கு கலைஞர் பிடிக்கவில்லை என்பதற்காக இதைப்போல கூறுவது சரியா! இது நாகரீகமான விவாதமாக என்னால் கருத முடியவில்லை.

உங்களிடம் உள்ள பிரச்சனையே! நீங்கள் விவாதம் செய்யும் போது அடுத்தவரை கடுமையான வார்த்தைகள் கூற வைத்து விடும் படி விவாதம் செய்கிறீர்கள். விவாதம் என்பது நமக்கு பிடிக்குதோ இல்லையோ பொறுமையா பேசுவது தான்.. அதில் நக்கலும் நையாண்டியும் அதிகம் ஆகும் போது அது எதிர்த்தரப்பினரை கோபம் கொள்ளவே செய்யும். இது கண்டிப்பாக எந்த ஒரு முடிவையும் தராது. விவாதங்களே சண்டையில் தான் முடியும் என்றாலும் நியாயமாக விவாதித்தால் எதுவும் ஓரளவு முடிவிற்கு வரும்.

விவாதத்தில் நீங்கள் செய்வது (இந்த விஷயத்தை மட்டும் வைத்து கூறவில்லை) எனக்கு ஏற்புடையாதாக இல்லை. உங்களுடன் விவாதம் புரிகிறவரை கிண்டலடித்து அல்லது கோபம் வரும்படி பேசி அந்த விவாதமே ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறீர்கள்.

இதனாலே தற்போது உங்களுடன் நான் எந்த விவாதமும் புரிவதில்லை. இதற்கும் நீங்கள் விளக்கம் கூறி நக்கல் அடிக்கலாம் ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. ஏன் என்றால் அதை தாண்டி வந்து விட்டேன்.

இந்தப்பதிவே அவசியமற்றது என்பது என் கருத்து. ஒரு நான்கு பேருக்குள் நடந்த ஒரு விவாதத்தை இப்படி ஒட்டுமொத்தமாக பதிவு ஏற்றுவது சரியா! இதனாலே நான் Buzz பக்கமே போவதில்லை எதையும் கூறுவதில்லை. பேசியவர்கள் அனைவரும் நமக்குள்ளே தானே என்கிற அளவில் பேசி இருப்பார்கள் அதை இப்படி பொது வெளியில் பகிருவது எப்படி சரியாகும்?

Buzz அனைவரும் பார்க்க கூடியதாக இருந்தாலும் வாய்ப்புகள் குறைவு தானே! இதனோடு ஒப்பிடும் போது.

கடைசியாக... நான் தற்போதும் உங்களை நல்ல நண்பனாக கருதுகிறேன் ஆனால் விவாதம் என்று வந்தால் உங்களுடன் கண்டிப்பாக முடியாது என்பதை கூற விரும்புகிறேன். என் விசயத்தில் மட்டுமல்ல பலருடன் நீங்கள் விவாதம் செய்வதை வைத்தே இதைக்கூறுகிறேன். கூற வாய்ப்பு கிடைக்கவில்லை இது வரை.. இதில் கிடைத்தது கூறி விட்டேன்.

நன்றி

அன்புடன்
கிரி

அருண்மொழிவர்மன் சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன்,

//வெறும் 13 மாத ஆட்சியில் சு.சாமியுட்ன ஆன டீ பார்டியில் ஜெ பாஜக ஆட்சியை கவிழ்த்துவிட//

13 நாள் ஆட்சியே வரலாற்றுப் புகழ் மிக்க டீ பார்ட்டியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என நினைக்கிறேன்

Indian சொன்னது…

//எந்த சப்பைக் கட்டும் கட்டவில்லை, கருணாநிதியின் ஆயுள் முழுவதும் நீங்கள் வாழ உங்களை வாழ்த்துகிறேன் என்று எவரேனும் உங்களை வாழ்த்தினால் தான் வாழ்த்தின் விபரீதம் உங்களுக்கு புரியும், அப்போது தான் கருணாநிதியின் ஆயுள் பற்றி நீங்களும் அவங்களுக்கு பதில் சொல்லுவிங்க. பாதிக்கப்பட்டவர்கள் தான் உணர்ச்சிவசப்படுவாங்க கேள்விப்படுகிறவர்களுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர் என்று தான் தோன்றும்.//

I get the context. His response clearly touched a raw nerve in you.

Popular personalities are mostly addressed without respect in private. When we are in public space, our radar should always be on alert and never let down our guard. Guess this is what can be learned from this experience.

However careful we are, sh*it happens at times. Just accept it and move on.

அபி அப்பா சொன்னது…

கண்ணா!ரைட்டு! பதிவு போட்டவுடன் பார்த்தேன். சரி ஒரு ஆதங்கத்திலே போட்டிருக்காரு தம்பி. சரியா போயிடும்னு நினைச்சேன். ஆனா பின்னூட்டாத்துக்கு எல்லாம் பதில் சொல்லிகிட்டு இருப்பதை பார்த்தா பல பேர் பின்னூட்டத்திலே வந்து சொன்னா கூட புரிஞ்சுக்க முடியாத ஒரு நிலையில் தான் இருக்கீங்கன்னு புரியுது. இதிலெ நான் இங்கயே பதில் சொல்லவா? இல்ல தனி பதிவா போட்டு பதில் சொல்லனுமா? இந்த பதிவிலே கண்ணனுக்கு ஆதரவா ஆறுதல் சொன்ன கனவான்களே நான் சொல்லும் பதிலையும் காது கொடுத்து கேட்பீங்களா? இல்லை நான் தனி பதிவா போடவா?

கோவி.கண்ணன் சொன்னது…

// அபி அப்பா said...

கண்ணா!ரைட்டு! பதிவு போட்டவுடன் பார்த்தேன். சரி ஒரு ஆதங்கத்திலே போட்டிருக்காரு தம்பி. சரியா போயிடும்னு நினைச்சேன். ஆனா பின்னூட்டாத்துக்கு எல்லாம் பதில் சொல்லிகிட்டு இருப்பதை பார்த்தா பல பேர் பின்னூட்டத்திலே வந்து சொன்னா கூட புரிஞ்சுக்க முடியாத ஒரு நிலையில் தான் இருக்கீங்கன்னு புரியுது. இதிலெ நான் இங்கயே பதில் சொல்லவா? இல்ல தனி பதிவா போட்டு பதில் சொல்லனுமா? இந்த பதிவிலே கண்ணனுக்கு ஆதரவா ஆறுதல் சொன்ன கனவான்களே நான் சொல்லும் பதிலையும் காது கொடுத்து கேட்பீங்களா? இல்லை நான் தனி பதிவா போடவா?//

உங்களுக்கு உங்கள் தலைவர், மரணம் என்ற சொற்கூட்டு உவர்பாக இருப்பதைப் போலவே மாபெரும் அக்டோபஸ் கரங்களை நீட்டிக் கொண்டு இருக்கும் கொள்ளைக் கும்பல் அது கொள்ளைக் கும்பல் தான் என்று தெரிந்தும் சப்பைக் கட்டுபவர்களை, ஆதரிப்பவர்களை நினைத்தால் எனக்கும் அருவெறுப்பாகத்தான் இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜவஹர் அண்ணன் மற்றும் டோண்டு சார் ஆகியோரின் கனிவான அன்பிற்கு மிக்க நன்றி

அபி அப்பா சொன்னது…

வழக்கம் போல சம்மந்தா சம்மந்தமில்லாம பேசுவதை விடுங்க. நான் உங்களை சாக சொன்னேனா?நீங்க என்ன சொன்னீங்க?உங்களை நான் அப்படி சொல்ல என்ன நமக்குள்ள முன்பகை எதுவாவது இருந்துச்சா? இல்லாட்டி இதான் உங்க புரிந்துகொள்ளும் திறனா? எனக்கு பதில் சொல்லனும் நான் உங்களை சாக சொன்னனா? நேரிடையா பதில் சொல்லனும் இப்ப இங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...

வழக்கம் போல சம்மந்தா சம்மந்தமில்லாம பேசுவதை விடுங்க. நான் உங்களை சாக சொன்னேனா?நீங்க என்ன சொன்னீங்க?உங்களை நான் அப்படி சொல்ல என்ன நமக்குள்ள முன்பகை எதுவாவது இருந்துச்சா? இல்லாட்டி இதான் உங்க புரிந்துகொள்ளும் திறனா? எனக்கு பதில் சொல்லனும் நான் உங்களை சாக சொன்னனா? நேரிடையா பதில் சொல்லனும் இப்ப இங்க!//

நான் எதையும் மறைத்து எழுதவில்லை, மேலே உரையாடலை எடிட் எதுவும் இல்லாமல் தான் சேர்த்திருக்கிறேன். ஒருவரின் முதுமை தெரிந்தும் அவர் வாழும் காலம் வரை வாழ்ந்து வாழ்த்து அல்லது திட்டு என்று ஒருவருக்கு ஆசி வழங்குவது நாகரீகமே இல்லை, உங்களின் குதர்கத்தால் தான் எனக்கு கோவம் வந்தது

அபி அப்பா சொன்னது…

\\ஒருவரின் முதுமை தெரிந்தும் அவர் வாழும் காலம் வரை வாழ்ந்து வாழ்த்து அல்லது திட்டு என்று ஒருவருக்கு ஆசி வழங்குவது \\

அப்படின்னா நான் கலைஞரின் காலம் வரை மட்டுமே நீங்க இருக்கனும்னு சொல்ல வர்ரதா சொல்றீங்க. சரி நான் என்ன சொன்னென். திரும்ப பாருங்க.

அபி அப்பா - \\அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர்\\\

அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

\\ஜெ ஊழல் வாதி இல்லைன்னு கோர்ட் சொன்னாலும் நீங்க ஒப்புக் கொள்ளுவிங்களா ?\\ :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) என்ன பதில் எதிர்பார்க்குறீங்க என் கிட்ட இருந்து??? அதையே போட்டுகுங்க கோவி!EditSep 29

\\\\\\\\\\\\\\\\\\\\

ஆக இதிலே உங்களின் இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரையே விமர்சனம் செய்து கொண்டிருக்க ஆசிகள். அப்படின்னு தானே சொன்னேன்.

அதாவது கலைஞர் நாளைக்கே செத்து போனாகூட அவரை யார் வேண்டுமானாலும் நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ விமர்சிக்கலாம் தானே. கலைஞர் செத்துட்டா அவரை விமர்சிப்பவர்கள் உடன்கட்டை ஏறிடனுமா இல்லாட்டி விமர்சனம் செய்வதை விட்டுடனுமா? ஏன் நீங்க கூட செத்து போன பெரியாரை, வள்ளலாரை விமர்சிக்க(நல்லவிதமாக) வில்லையா? அவங்க செத்து போனதால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவங்களா ஆகிட்டாங்களா?

அது போல தான் நான் சொன்னேன். நீங்க இந்த ஜென்மத்திலே கலைஞரை விமர்சித்து கொண்டிருக்க ஆசிகள் அப்படின்னு சொன்னேன்.

இருங்க மீதி அடுத்த பின்னூடத்தில் தொடரும்...

அபி அப்பா சொன்னது…

ஆனா உங்களுக்கு ஆதரவா பேசிகிட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரன் என்பவர் உங்களுக்கு சப்போட் பண்ணுவதா நினைச்சு கீழே இருப்பது போல போட்டாரு....

\\KRISHNAMOORTHY BASKARAN - // இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

ஜென்மம் 2010 mudivurum..............\\\

ஆனா நீங்க என்ன பண்ணீங்க? இந்த பதிவிலே அவரு சொன்னதை நான் சொன்ன மாதிரி சேர்த்து போட்டு எல்லாரையும் அச்சச்சோ போட வச்சீங்க. ஆனா இது வரை அந்த பாஸ்கரனை ஏன்யா நான் 2010 வரை தான் இருப்பனான்னு கேட்டதுண்டா? மாட்டீங்க. ஏன்னா அவரு கூட உங்க ஆயுள் பத்தி சொல்லியிருக்க மாட்டாரு. அவருக்கு அதனால என்ன லாபம்? தப்பா தான் தவறி போய் சொல்லிட்டாருன்னு உங்களுக்கே தெரியும். ஆனா அதை நான் என்னவோ உங்க ஆயுளையும் கலைஞர் ஆயுளையும் சேர்த்து முடிச்சி போடும் வித்தை செய்வதா சொல்றீங்களே?

அத்தோடு இல்லாம பின்னூட்டட்திலே கயவாளித்தனம் என்று எல்லாம் சொன்னியேப்பா கண்ணா,கலியுக கண்ணா,இரு பின்னூட்டாம் தொடரும்...

அபி அப்பா சொன்னது…

அந்த கூகுள் பஸ் விட்டது ஒரு நண்பர். அதிலே காமடியா ஆரம்பிச்சது விவாதம். ஆரம்பம் முதல் நான் பார்த்துகிட்டு இருந்தாலும் நான் உள்ளே வரலை.ஆனாலும் நீங்க தான் \\Govi Kannan - :) தமிழ்நாட்டில் கருணாநிதி பெயரைச் சொல்லும் கல்வெட்டுகள் இராஜராஜன் கல்வெட்டுகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகம். அபி அப்பாவைக் கேளுங்க என் தலைவனுக்கு முன்னால் இராஜைராஜனெல்லாம் ஜுஞ்சுபி என்பார்\\

என சொல்லி என்னை இழுத்து விட பார்த்தீங்க அந்த விவாதத்திலே.அதன் பின்னே அப்துல்லா வந்து \\m.m. abdulla - @ கோவியார் -

//அபி அப்பாவைக் கேளுங்க என் தலைவனுக்கு முன்னால் இராஜைராஜனெல்லாம் ஜுஞ்சுபி என்பார் //

இதில் பொய்யென்ன?? ராஜராஜன் அவன் வாழ்ந்த காலகட்டத்தில் அன்றைக்கு இருந்த மக்கள் அத்தனைபேரும் 100% விரும்புகின்ற மனிதனாக வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் மனதில் நிறை,குறைகளோடவே வாழ்ந்திருப்பான். கலைஞரும் மக்கள் மனதில் நிறை,குறைகளுடன்தான் வாழ்கின்றார். ஒப்பீடு அளவில் வம்சாவழியாக,சாதீய உயர்வில் ஆளவந்த இராஜராஜனைவிட அடக்கப்பட்ட இனத்தில் ஓடுக்கப்பட்ட பகுதியில் பிறந்து சுய முயற்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளும் கலைஞர் பெரியவரே.\\

இப்படி சொன்னாரு. பின்னே பிரியமுடன் பிரபு திரும்பவும் அபிஅப்பா அபிஅப்பா அபிஅப்பா என கூப்பிட பின்னே தான் நான் வந்தேன்.

அதன் பின்னர் குழலியோடு நன்றாக தான் விவாதம் போய் கொண்டிருக்க நீங்க தான் ஆரம்பிச்சீங்க. பின்னே நீங்க தான் நிதானம் தவறி கலைஞரை திட்ட ஆரம்பிச்சீங்க.

அப்பவும் நான் ஒரு வார்த்தையும் சொல்லலை. நான் கலைஞரை திட்டினது பத்தி கவலைப்படாமல் அங்க சொன்ன வார்த்தை என்ன தெரியுமா உங்க நண்பர் கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரனுக்கு...

\\அபி அப்பா - \\/ இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!

ஜென்மம் 2010 mudivurum.................\\

வாயை கழுவுங்க.... கோவியார் 100 வருஷம் நல்லா இருந்து கலைஞர் ஆட்சியை திட்டிகிட்டே இருக்கனும்... இதான் என் விருப்பம்\\\\\\\\\\\\\\

இதான் நான் அங்கயே சொன்னது. ஆனா நீங்க இதை எல்லாம் உங்க பதிவுல போடாம உங்களுக்கு சாதகமா சேர்த்து போட வேண்டாததை சேர்த்து போட்டு மறைக்க கூடாததை மறைத்து போட்டு கயவாளித்தனம் செய்து விட்டு என்னை கயவாளி தனம் செய்வதா சொல்றீங்க.............. தொடரும்

அபி அப்பா சொன்னது…

ஒரு கட்டத்திலே நீங்க நிதானம் முழுக்க இழந்து கலைஞரை மிக மோசமாக திட்ட ஆரம்பிச்ச போது கூட ஜோ வந்து
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
Joe Milton ஜோ மில்டன் - கோவியார்,
நீங்கள் தன்னிலையில் இல்லை ..தயவு செய்து சற்று இடைவெளி விடுங்கள்.
\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்படி சொல்ல நானும் அப்போது

\\\\\\\\\\\\\\\\
அபி அப்பா - பாஸ்கரன் சொன்ன ஒரு வார்த்தை உங்களை தடுமாற வைத்து தன்னிலை மறக்க வைக்கின்றது. இப்போது போய் ரெஸ்ட் எடுங்க. மத்ததை பின்னே பார்த்துக்கலாம். கலைஞர் கிழவன் தானே சாகட்டும்ன்னு சொல்லும் நீங்க ராஜீவ் கொலை பத்தியும் திருவாய் மலர்ந்தா நல்லா இருக்கும். அவருக்கு மட்டும் தக்காளி ஜாம்????

\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்படி சொன்னேன்..... தொடரும்

கோவி.கண்ணன் சொன்னது…

//இதான் நான் அங்கயே சொன்னது. ஆனா நீங்க இதை எல்லாம் உங்க பதிவுல போடாம உங்களுக்கு சாதகமா சேர்த்து போட வேண்டாததை சேர்த்து போட்டு மறைக்க கூடாததை மறைத்து போட்டு கயவாளித்தனம் செய்து விட்டு என்னை கயவாளி தனம் செய்வதா சொல்றீங்க.............. தொடரும்//

நீங்க அப்படிச் சொல்லவில்லை என்றால் நான் நீங்கள் அப்படிச் சொன்னததாக நினைத்தற்குத்தான் பதில் சொன்னேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தானே.

நீங்க என்னை திட்டியதாக நான் உங்களை திட்டுகிறேன். நீங்கள் திட்டவில்லை என்கிறீர்கள், அப்படி என்றால் அதைவிட்டுவிடுங்கள், நீங்கள் சொன்னவிதத்தில் தான் தவறு அதனால் தான் நான் அவ்வாறு சொல்ல நேரிட்டது என்பதாகத்தான் நானும் எழுதி இருக்கிறேன். நானும் சொன்னதையே திரும்பச் சொல்ல தேவை இல்லையே. இடையில் ஒருவர்வந்து நீ அடுத்தவன் சாவனுனும் எதிர்பார்கிறே....உன்கூட பேச்சு இல்லை வார்த்த இல்லைன்னு வளர்த்தியதால் இந்த இடுகை. பிடிச்சா ஒருவரிடம் சேருவதற்கும் விலகிப் போவதற்கும் நட்பு ஒன்றும்.....................பகடைகாய் இல்லை, வியாபாரம்னு எதுவும் செய்யவில்லைன்னு பிற சம்பவங்களையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

அபி அப்பா சொன்னது…

\இந்த உரையாடலின் தொடர்ச்சியில் திமுக பற்றாளர் ஒருவர் (அபி அப்பா அல்ல)

அது எப்படி என் தலைவனை செத்துப் போகச் சொல்லுகிறாய் ? ஒருவர் சாகவேண்டும் என்று நினைக்கும் உன்னை போன்ற ஆட்களுடன் நான் நட்பாக இருக்க விரும்பவில்லை, இதுவே நமக்கு நடக்கும் கடைசி உரையாடல் இனி என்னைப் பார்க்கவேண்டாம் என்பதாக ஒரு உடன் பிறப்பு எகிறிச் சென்றார்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்படியாக உங்க பதிவிலே சொல்லியிருக்கீங்க.

ஆனா நடந்தது என்ன? நீங்க நிதானம் இழந்து கலைஞரை திட்டிய போது நான் கூட வந்து நாசூக்காக சொன்னேன்...\\

\\\\\\\\\\\\\\\\அபி அப்பா - அது எப்படி கிழவன், சாகட்டும் என்பன போன்ற வார்த்தை எல்லாம் சகட்டு மேனிக்கு வருது.... எல்லாரும் சிரிக்கிறாங்க ...உங்க கிட்ட விவாதம் செஞ்சு ஜெயிக்க முடியாதாம். செம புலியாம் விவாதத்திலே நீங்க....நான் தான் தெரியாம விவாதிக்க வந்துட்டேன்....EditSep 29DeleteUndo deleteReport spamNot spam

\\\\\\\\\\\\\\\\\\

இப்படியாக சொன்னேன், அதுக்கு நீங்க
\\\\Govi Kannan - என்ன கொடுமை இது, கிழவன் சாகனும் சொல்லாமல் குமரன் சாகனும் என்றா யாரும் சொல்லுவார்கள். கிழவன்சாகாமல் சாகாவரம் பெற்றா இருக்கார், அப்பேர்பெற்ற பெரியாரே போய் சேரத்தானே செய்தார்\\

இப்படி சொன்னீங்க.

ஆனா மேலே இருப்பது போல அந்த திமுக பற்றாளர் உங்களை ஒருமையில் சொல்லி விட்டு அந்த பஸ் விவாதத்தை விட்டு விட்டு போனது போல எழுதி அதை படிப்பவர்களும் நம்பியதால் நான் மீண்டும் அவர் சொன்னதை இங்கே தருகின்றேன்....

\\\\\\\\\\\\\\\\

//xxxxxxxxxxxxx - உங்க சொம்புதான் எப்பவுமே பளபளப்பா இருக்குமே? புதுசா வேறு துடைக்கணுமா கோவியாரே!

நெஜமாவே உங்களை நெனைச்சா இப்போ அருவருப்பா இருக்கு. ஒரு மனிதன் சாகணும்னு விரும்புற ஒருத்தரோட பழகியதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

உங்களை இணையத்தில் மட்டுமல்ல. இனி நேரிலும் சந்திக்க நான் விரும்பவில்லை. பை!//

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இதான் அந்த திமுக பற்றாளர் சொல்லிவிட்டு சென்றது.இதை படிப்பவர்களே கண்ணன் சொன்ன மாதிரி ஒருமையில் எல்லாம் சொல்லிவிட்டு போகவில்லை.....

தொடரும்....

அபி அப்பா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அபி அப்பா சொன்னது…

\\ King said...

தலைவன் சாகா வரம் பெற்றவர் அவரை நீங்கள் எப்பிடி நீங்கள் செத்து விடுவர் எண்டு சொல்லலாம்.. ஆட்டோ வீட்டு பக்கம் வர போவது உறுதி..\\

அய்யா கிங்கு! அங்க பேசிய திமுகவினர் யாருமே எங்க தலைவர் சாகாவரம் பெற்றவர் என சொல்ல வில்லை. சும்மா முழு விஷயம் தெரியாம பேச வேண்டாம்.

அங்க அப்துல்லா சொன்னதை தர்ரேன் பாருங்க....

\\\\\\\\\\\\\\\\\\\
m.m. abdulla - // கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம். //


கோவியார், எத்தனையோ தமிழர்கள் தங்கள் தலைவனாக மதித்த ஒருவரை ஒரு இயக்கம் அரசியல் படுகொலை செய்தது. செத்த தலைவனும் கிழவனில்லை.அதைச் செய்து பின்னர் இப்போது இறந்த தலைவனும் கிழவனில்லை.
\\\\\\\\\\\\\\\

ஆகா கலைஞர் சாவது பத்தி நாங்க அங்க எதும் சொல்லலை. அப்படி சொன்னவரின் வக்கிரத்தை தான் சுட்டி காட்டினோம்,,,,,,, தொடரும்,,,,,,

கோவி.கண்ணன் சொன்னது…

//,,,,,,, தொடரும்,,,,,,//

ரெஸ்டு எடுத்துவரவும்

அபி அப்பா சொன்னது…

எனக்கு எதுக்கு ரெஸ்ட் ஆற்காடு வீராசாமி கொடுப்பாரு கவலையே வேண்டாம் கண்ணா!

அபி அப்பா சொன்னது…

\\Blogger மணிகண்டன் said...

//கருணாநிதியின் வாழ்நாள் என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது கருத்து சொல்வது இயல்பு தானே. //
\\

அன்பு மணிகண்டன்!கண்ணன் அது மட்டுமா சொன்னாரு? மீதிய தர்ரேன் படிங்க!

\\\\\\\\\\\\\\\\

இன்னும் முள்ளி வாய்க்காலுக்கு விமோசனம் கிடைக்காத நிலையில் கருணாநிதி இருந்தாலும் ஒண்ணு தான் செத்தாலும் ஒண்ணு தான்
\\\\\\\\\\\\\\\\\\\\

Govi Kannan - கருணாநிதியின் ஆட்சி ஆயுள் முடிந்தது, அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவதாக நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். டூ லேட்

\\\\\\\\\\\\\\\\\\\\

Govi Kannan - மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். கருணாநிதி இருந்தாலும் செத்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை. கருணாநிதி செயலுக்கு ஜால்ரா போட எனக்கு அவசியம் இல்லை, நான் திமுககாரன் இல்லை.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அவருக்கு 87 வயது ஆகுது ஒரிரு ஆண்டுகளில் செத்துப்போவார் என்பதற்கு சோசியமோ, சாபமோ கூடத் தேவை இல்லை, ஊகமாகக் கூடச் சொல்லலாம்.

\\\\\\\\\\\\\\\\\\

இப்படியெல்லாம் சொன்ன கண்ணனுக்கு நான் சொல்லாத ஒன்னை சொன்னதா சொல்லி பச்சாதாபம் தேடிகொள்வதோடு என்னை கயவாளித்தனம் செய்வதாகவும் சொல்லுது தம்பி. நான் எங்க போய் முட்டிக்க????

அபி அப்பா சொன்னது…

\\// நந்தா ஆண்டாள்மகன் said...

நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள்.இந்த இணையத்திலும் அவங்க கட்சி கட்சி கொள்கை (கொள்ளை அடிக்கிறதுதான்) பரப்ப வந்துட்டாங்க.அவங்கள நாமளா பாத்துதான் துண்டிக்கனும்.அப்படி திருந்தாத நட்புகள் போவதே நல்லது நண்பரே.//

வாங்க நந்தா ஆண்டாள் மகன் அவர்களே! அந்த பஸ்ல நாங்க எந்த கொள்கையை பரப்பினோம்ன்னு சொல்ல முடியுமா? நாமளா பார்த்து துண்டிக்கனும்ன்னு சொல்லி நீங்க பின்னூட்டம் போட்ட நேரம் அக்டோபர் 6 சாயந்திரம் 7.21

ஆனா என்னை பேஸ்புக்ல இன்வைட் பண்ணி ரெக்வஸ்ட் அனுப்பியது அக்டோபர் 7 சாயந்திரம் 6.33. சரியா 24 மணி நேரம் கூட முடியலை.... என்னவோ போங்க. கண்ணனுக்கு சப்போட் பண்ணுவதா நினைச்சு கண்ணை மூடிகிட்டு இருக்காதீங்க.

\\\\\\\\\\\\\\\\\\\\\\
facebook
Hi Vaithiyanathan,
Nandha ஆண்டாள்மகன் wants to be friends with you on Facebook.


Nandha ஆண்டாள்மகன் Nandha ஆண்டாள்மகன்


Thanks,
The Facebook Team

\\\\\\\\\\\\\\\\\\\\\

அக்சப்ட் செஞ்சுட்டேன். டோண்ட் ஒர்ரி:-)

கோவி.கண்ணன் சொன்னது…

அபி அப்பா,

"கட்சிக்காரர்கள் எனக்கு பஸ்ஸில் பதில் சொல்ல வேண்டாம், கட்சிக்காரரிகளிடம் நான் விவாதம் செய்யவிரும்புவதில்லை, அதற்காக நான் அரசியல் விமர்சனம் செய்யாமல் இருக்கப் போவதில்லை. கட்சிக்காரர்கள் , குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் யாரேனும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் என்னுடனான நட்பையும் மறு பரீசீலனை செய்யவும். பின்னாடி என் தலைவனை / தலைவியை விமர்சனம் செய்ததற்காக பிடிக்கவில்லை என்று கடிந்து கொள்ளத் தேவை இல்லை."

இது கூட நான் பஸ்ஸில் போட்டிருக்கும் தகவல் தான்

அபி அப்பா சொன்னது…

\\ Jawahar said...

கண்ணன்ஜி, உங்க கருத்துக்கள்ளே எனக்கு உடன்பாடு இல்லாதவை நிறைய உண்டு. உடன்பாடு இன்மையைப் பதிவும் பண்ணியிருக்கேன். நட்பு விலகக் கூடாது என்கிற டிரைவ் மனசுக்குள்ளே ஆப்பரேட் பண்ணிகிட்டே இருக்கிறதாலே வார்த்தைகள்ளே தானாவே ஒரு டிப்ளமஸி வந்துடும். நீங்களும் எனக்கு பதில் சொல்லும் போது இந்த டிப்ளமஸியைக் கையாள்றதைப் பார்த்திருக்கேன்.

ஒண்ணும் கவலை இல்லை.

உங்களை எல்லாருக்குமே புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.
\\

ஜவகர்! என்னையும் உங்களுக்கு நல்லா தெரியும். நானா இப்படி கண்ணன் சொல்வது போல சொல்லியிருப்பேன் என நினைக்குறீங்க?

தவிர நட்பு விலகக்கூடாது என்கிற டிப்ளமசி மனதில் எனக்கு கண்டிப்பாக ஆபரேட் பண்ணிகிட்டே இருக்கும், ஆனா கண்ணனுக்கு அப்படி இல்லை என்னிடம் என்பதை நான் இந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி காலையில் அவர் விட்ட ஒரு கூகிள் பஸ்க்கு ஸ்வாமி ஓம்கார் ஒரு டைமிங் காமடி கொடுக்க அதை அப்போது நான் சேட்ல "ஸ்வாமியின் டைமிங் காமடி பாருங்க"ன்னு சொல்ல அதுக்கு அவரு நீங்க சொல்லும் டிப்ளமஸியை தூக்கி கடாசிட்டு "இந்த திமுக காரனுங்களே இப்படித்தான் பின்னாடி குத்துவானுங்க" என்று ஏக வசனத்தில் பேச.... நல்லா கவனிக்கவும் அந்த சொல்லாடல்களை... அதன் பின்னே நான் "உங்க மனசு கஷ்ட்டப்படும் படி நான் எதுனா சொல்லியிருந்தா மன்னிக்கவும்" என சொல்லிவிட்டு வந்து விட்டேன். இப்ப சொல்லுங்க நான் அந்த டிப்ளமசியை ஆபரேட் பண்ணிகிட்டு இருக்கனா? அவரு காத்துல பறக்க விட்டுகிட்டு இருக்காரான்னு.

@ டோண்டு சார் உங்களுக்கும் இந்த பதில் சமர்ப்பணம்:-))

அபி அப்பா சொன்னது…

\\ என்.ஆர்.சிபி said...

இப்படியும் சிலர்!\\

மாநக்கல் சிபின்னு சரியாதான் பேர் வந்திருக்கு:-)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்