அண்மையில் பதிவர், சிங்கப்பூர் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் பதிப்பக உரிமையாளர், நண்பர் திரு பாலு மணிமாறன் அவர்களின் முயற்சியினால் ஆர்வத்தினால் தங்கமீன் என்கிற இணைய இதழ் அறிமுகவிழாவிற்கு அழைப்பின் பெயரில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சியை கவிஞர் மற்றும் எழுத்தாளர் ந.வீ.விசயபாரதி தொகுத்து வழங்கினார்.
கணிணி தொழில் நுட்பத்தை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துவர்கள் பலர், அதில் அண்ணன் பாலு மணிமாறன் குறிப்பிடத் தக்கவர். புலம்பெயரும் தமிழர்கள் தமிழை தாய்மொழியாக எடுத்துச் சென்று பின்னர் பெற்றோர்களைப் போலவும், பெற்றக் குழந்தையைப் போலவும் பேணி காத்து, சீராட்டுவதால் குறிப்பிட்ட பலநாடுகளில் தமிழ் வளர்ச்சி கண்டுள்ளது, தேசிய அடையாள மொழியாகவும் வளர்ந்துள்ளது. தன் சிந்தனைகள் தோறும் தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதாக முயற்சி எடுப்போர் பலர், அண்ணன் பாலு மணி மாறன் சிங்கப்பூர் வந்த நாட்களாக தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை அமைத்தும், பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூல்களாகப் பதித்தும் கிட்ட தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சேவை ஆற்றிவருகிறார். இவரை நன்கு அறிந்திடாத சிங்கப்பூர் மலேசியா வாழ் எழுத்தாளர்களே இல்லை என்னும் சொல்லும் அளவுக்கு அனைவரிடமும் நல்ல செல்வாக்குப் பெற்றவர்.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய எழுத்துச் சேவைகள் பெரும்பாலும் தாள் (பேப்பர்) சார்ந்த திங்கள் (மாத), கிழமை(வார), நாள் வெளியிடுகளாகவே இருக்கிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்காவிட்டால் எழுத்துக்கள் பரவலான தமிழர்களை சென்று அடைய தடை என்னும் நிலை தான் உள்ளன. இன்றைய நாட்களில் கணிணி புழக்கம் பெருவாரியான தமிழர்கள் இடையே இருக்கின்ற காரணத்தில் தமிழ் இலக்கியத்தை கணிணி
சார்ந்து இட்டுச் சென்று சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும் என்று எண்ணுவோர் பலர், அதனை செயலாக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களினால் பின்வாங்குவோர் அதில் பலர், எண்ணத்தை செயலாகி வெற்றிபொருவோர் ஒரு சிலர் தான். இவர்கள் காணும் கனவு அனைத்தும் நிறைவேற்றி முயற்சிகள் வெற்றியடையக் கூடியவை தான் என்பதாக நம்பிக்கையை வளர்ப்பர். சிங்கப்பூரில் பலர் இணைய இதழ் துவங்க எண்ணி இருந்தாலும் அதை செயலாக்கிக் காட்டியுள்ளார் அண்ணன் பாலு மணிமாறன் அவருக்கு நல்வாழ்த்துகள்.
நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கும் தமிழார்வளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மலர்விழி அவர்களால் திரையிசைப் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சி தங்கமீன் பற்றிய அறிமுக நிகழ்வென்றாலும் வாழ்த்திப் பேசவந்தவர்களின் நகைச்சுவைக்கும் இலக்கியச் சுவைக்கும் குறைவில்லாமல் இருந்தது. நிகழ்ச்சியின் நிறைவு மதிய வேலை என்பதால் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் சிறப்பு.
தங்க மீன் :
தங்கமீனை தற்போது திங்கள் (மாத) தொகுப்புகளாக துவங்கி இருக்கிறார், இருந்தாலும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய இலக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது அறிவிப்புகளில் வெளி இடுவதாக குறிப்பிட்டார். பின்னர் பயனர்களைப் பொருத்து திங்கள் இருமுறை அல்லது கிழமை (வார) இதழாக தொகுக்கப் போவதாகவும்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கமீனில் சர்சைப் புக்ழ் திரு சாரு நிவேதிதா மற்றும் திரு மாலன் ஆகியோய் கட்டுரைகள் எழுதித் தொடர்வதாகப் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் மலேசிய இலக்கிய ஆர்வளர்களின் கதை கவிதை மற்றும் கட்டுரைகள் இடம் பெறுவது போலவே தமிழகம் மற்றும் உலகத் தமிழ் ஆர்வலர்களின் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தங்கமீன் சார்பற்ற தகவல் மற்றும் இலக்கிய ஊடகமாகத் திகழும். சிங்கப்பூரில் இருந்து பல்வேறு தமிழ் சார்ந்த இணைய தளங்கள், வலைப்பதிவு திரட்டிகள் மற்றும் வலைப்பதிவுகள் இயங்கி வந்தாலும் முழுமையானதொரு இணைய இதழாக தங்கமீன் தவழ்ந்து வருவது இது தான் முதல் முறை. தங்கள் இலக்கிய கதை, கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை கள், நிகழ்வுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா மேலும் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் இணைய எழுத்தார்வளர்கள் தங்கமீனில் வெளியிட ஆக்கங்களை அனுப்பலாம்.
கணிவுடன் நிகழ்ச்சியில் பங்குபெற அழைத்து உணவும் அளித்த அண்ணன் பாலு மணிமாறன் அவர்களின் இணைய தளம் தங்கமீன் சிங்கப்பூர் மலேசிய எழுத்துலகில் தன்னிகரற்ற தரமான மீனாக வளர்ந்து நிலைக்க வாழ்த்துகிறேன்.
பின்பற்றுபவர்கள்
6 அக்டோபர், 2010
தங்கமீன் - முதல் சிங்கப்பூர் தமிழ் இணைய இதழ் !
பதிவர்:
கோவி.கண்ணன்
at
10/06/2010 12:08:00 PM
தொகுப்பு :
சமூகம்,
சிங்கப்பூர்,
நிகழ்ச்சிகள்,
நிகழ்வுகள்,
பதிவர் மாவட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
6 கருத்துகள்:
வாழ்த்துகள்
இனி தங்களின் எழுத்துகளை தங்கமீனிலும் இரசிக்கலாம் ...
தங்க மீனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாலு.மணிமாறன் சார் ....
வாழ்த்துகள்
நல்லதோர் அறிமுகம்.
தங்க மீனுக்கு வாழ்த்துகள்
அன்புடன்
சிங்கை நாதன்
தங்கமீனுக்கு வாழ்த்துகள்...
கருத்துரையிடுக