பின்பற்றுபவர்கள்

1 மே, 2010

சுறா - வுல எல்லாமே இருக்கு !

கடந்த 10 ஆண்டுகளில் வந்த விஜய் படங்களில் 80 விழுக்காடு படங்களைப் பார்த்திருப்பேன். விஜய்படங்களுக்கு திரையரங்கில் கூட்டம் அள்ளுது, குருவி படத்தை பினாங்கில் பார்த்த போதும் அங்கு அலைமோதிய கூட்டம் (லோக்கல் மலேசிய மக்கள்) விஜய் தனக்கான ரசிகர் பட்டாளத்தை கட்டியமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் தெரிந்தது, குருவிக்கு பிறகு வந்த நான்கு திரைப்படங்களுக்கும் முதல் நாள், முதல் வார இறுதிகளில் திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. விஜய் படங்கள் வெற்றியா தோல்வியா என்பதைவிட எப்போதும் விஜய் படங்களை எதிர்பார்த்து பெரிய கூட்டம் திரையரங்கிற்கு வருகிறது என்பது உண்மை. அவர்களில் யாரும் விஜய் படங்கள் மாபெரும் வெற்றிபெரும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பதை அவர்களின் தொடர்சியான வருகை சொல்லிவிடுகிறது.

இதனால் தான் என்னவோ விஜய் பாணி படங்களை மட்டுமே விஜய் செய்ய முடிவு செய்து இருக்கிறார், என்று தெரிகிறது. நான்கு சண்டைகள், நான்கு பாடல்கள், அதில் இரண்டு குத்து பாட்டு, அரசியல் தனமான வில்லன், அவனை எதிர்க்கும் விஜய் இவைதான் விஜய்படங்களின் கதையாக இருக்கிறது. சுறா படத்தில் மீனவ இளைஞன் சுறாவாக வருகிறார், வழக்கம் போல் மீனவர்கள் குடியிருக்கும் புறம்போக்கு நிலத்தை தீம் பார்க் கட்ட குறிவைக்கும் வில்லனுடன் மோதி தன்னைச் சார்ந்த மீனவர்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித்தருகிறார். சைட் டிஸ் போல கவர்ச்சிக்கு அப்போதைக்கு சரியான மார்கெட் உள்ள ஒரு நடிகை, இதில் தங்கத்தாரகை என்று ரசிகர்களால் விசில் அடிக்கப்படும் தமன்னா. படத்தின் நகைச்சுவைக்காக வடிவேலு. வெண்ணிறாடை மூர்த்தியை ரசிக்க பெரும் கூட்டம் இருக்கிறது என்பதை அவர் வரும் ஒரு காட்சியில் விசிலடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர் பலர். பழம்பெரும் நடிகர்களில் எஞ்சி இருப்பவர் வெண்ணிறாடை மூர்த்தி, அவரின் வசனங்கள் இருபொருள் கொண்டது என்ற விமர்சனம் இருந்தாலும், தெருக் கூத்துகளில் அதுபோலவே கேட்டுப் பழக்கப்பட்டதால் வெண்ணிறாடை மூர்த்தி வசனங்களை பலரும் உள்ளுக்குளாவது ரசிக்கவே செய்கின்றனர். இந்த வயசிலேயும் பிட்டு ரோலாக இருந்தாலும் பட்டுன்னு நடிச்சு கொடுத்து சும்மா மனுசன் அசத்தி இருக்கிறார்.

விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுது போக்குபடம் தான். சினிமாவுக்கு போவது பொழுது போக்குக்குத்தான் என நினைக்கும் ரசிக மனநிலையை விஜய் படங்கள் பூர்த்தி செய்கின்றன. அதுக்கு மேல எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனக்கு படத்தில் இடைவேளை எப்போ வரும் என்ற அயற்சி மிஞ்சியது, அதன் பிறகு விறுவிறுப்பாக படம் சென்றது. மீனவர்கள், (ரிக்ஷா காரர்கள்) ஆட்டோகாரர்கள் என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு உள்ள பெரும் திரளான கடைநிலை வாழ்க்கை வாழும் திரைப்பட ரசிகர்களை குறி(த்து)வைத்து படம் செய்த எம்ஜிஆர், ரஜினி இவர்களின் வரிசையில் விஜய் பயணிக்கிறார். எம்ஜிஆர், ரஜினி அப்படியான படம் செய்யும் போது இவர் செய்யக் கூடாதா ?

படத்தைப் பார்த்துவிட்டு விஜயை திட்டுகிறவர்கள் எம்ஜிஆர், ரஜினியை கூட திட்டலாம், ஏனெனில் அவர்களும் அவர்களின் ரசிகர்களுக்காக அவர்கள் பாணி படங்களைத்தான் எடுத்தார்கள். விஜய்படத்திற்கு என்ன எதிர்ப்பார்ப்பு வைத்துச் செல்கிறோமோ அது இந்த படத்தில் இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கான மற்றொரு படம் சுறா.... நன்றாக கவனித்தேன் படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் வரும் போது எதிர்மறையாக விமர்சனம் செய்து முனுகியது போல் தெரியவில்லை. வெளியீடு ஆகி இரண்டாம் நாள் என்பதால் படத்தின் பார்வையாளர்கள் 90 விழுக்காடு விஜய்ரசிகர்கள் தான். நான் விஜய் ரசிகன் இல்லை, இருந்தாலும் விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தே சென்றேன். படம் ஏமாற்றவில்லை.

50 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

படம் இன்னும் பார்க்கவில்லை.

இதை கருத்தைத்தான் இங்கு எழுதியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

http://sinekithan.blogspot.com/2010/05/blog-post.html

Unknown சொன்னது…

neengal oru dhilludurai ;)
enna dhariyam ;)))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஐ! நாந்தான் முதல்லையா!!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல விமர்சனம் அண்ணே.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என் பதிவில் விஜயை ஃபார்மூலா மாற்ற சொல்லலை அண்ணே.

மேலும் இதே பார்மூலாவில் அவரைப்பார்க்கத்தான் பிடிச்சிருக்கு.

என்னோட ஆதங்கம் எல்லாம் அரைச்சமாவையே அரைக்காமல். இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி புதுசு புதுசாக கொடுக்க வேண்டும் என்பதுதான்.

priyamudanprabu சொன்னது…

எம்ஜிஆர், ரஜினி அப்படியான படம் செய்யும் போது இவர் செய்யக் கூடாதா ?
////////

நியாயமான கேள்வி


///
படத்தைப் பார்த்துவிட்டு விஜயை திட்டுகிறவர்கள் எம்ஜிஆர், ரஜினியை கூட திட்டலாம், ஏனெனில் அவர்களும் அவர்களின் ரசிகர்களுக்காக அவர்கள் பாணி படங்களைத்தான் எடுத்தார்கள்.
////

நல்ல சொன்னீங்க
இங்கே விஜயை திட்டும் பலர் தீவிர ரசினி ரசிகரக இருப்பார்கள்
ரசினி,எம்சிஆர் ரசிகர்கள் விஜயை குறைசொல்ல கூடாது
எனக்கு ரசினி விஜய் இருவரையுமெ பிடிக்காது

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுதுபோக்குபடம் தான்//

ஆமாமா!

விஜய் படம்னா...

அது கலப்படம்...

மற்றும்

கொட்டைப்பாக்கு படம்(குழந்தைகளுக்கானது)

வருண் சொன்னது…

***படத்தைப் பார்த்துவிட்டு விஜயை திட்டுகிறவர்கள் எம்ஜிஆர், ரஜினியை கூட திட்டலாம், ஏனெனில் அவர்களும் அவர்களின் ரசிகர்களுக்காக அவர்கள் பாணி படங்களைத்தான் எடுத்தார்கள். ***

இன்னைக்கு விஜயை திட்டுபவர்கள் போன்ற விமர்சகர்கள் அன்றும் எம் ஜி ஆர், ரஜினி படங்களை திட்டி விமர்சனம் செய்தார்கள்.

****விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுது போக்குபடம் தான். சினிமாவுக்கு போவது பொழுது போக்குக்குத்தான் என நினைக்கும் ரசிக மனநிலையை விஜய் படங்கள் பூர்த்தி செய்கின்றன. அதுக்கு மேல எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.***

எல்லாம் சரிதான் இதையே வச்சு அரசியல்ல நொழஞ்சி தன் மகனை முதல்வராக்கனும்னு எஸ் எ சந்திரசேகரா கனவுகாணாதவரைக்கும் தப்பே இல்லை! :)))

வவ்வால் சொன்னது…

Kovi, sariya sonninga,sun picture irukkum pothu enna kavalai. Dvd eppo varum?

Cable சங்கர் சொன்னது…

rightu..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Ok..Ok..

புருனோ Bruno சொன்னது…

பொதுவாக விஜய் படம் என்பது பொழுதுபோக்கு படம் தான்

ஆனால் இந்த படத்தின் முதல் பாதி சிறிது ரம்பமாக / இழுவையாக இருந்தது என்பது என் கருத்து

இரண்டாவது முறை இந்த படத்தை பார்க்க முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

படம் இன்னும் பார்க்கவில்லை.

இதை கருத்தைத்தான் இங்கு எழுதியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

http://sinekithan.blogspot.com/2010/05/blog-post.html//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், குருவி பார்த்திட்டிங்க இல்லை ? அதுல கொத்தடிமைகள், இதில் மீனவர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// Naan said...

neengal oru dhilludurai ;)
enna dhariyam ;)))//

:) நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// அக்பர் said...

ஐ! நாந்தான் முதல்லையா!!//

முதல் போட்டு இருக்கிங்க, பின்னூட்ட முதல்

கோவி.கண்ணன் சொன்னது…

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல விமர்சனம் அண்ணே./

நன்றி தம்பி, அப்பாவியாக இருக்கும் முகத்தை எடுத்துட்டு இப்ப காமடி வேசம் கட்டி இருக்கியள், புரொபைல் படத்தில்

கோவி.கண்ணன் சொன்னது…

// அக்பர் said...

என் பதிவில் விஜயை ஃபார்மூலா மாற்ற சொல்லலை அண்ணே.

மேலும் இதே பார்மூலாவில் அவரைப்பார்க்கத்தான் பிடிச்சிருக்கு.

என்னோட ஆதங்கம் எல்லாம் அரைச்சமாவையே அரைக்காமல். இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி புதுசு புதுசாக கொடுக்க வேண்டும் என்பதுதான்.//

கேபிளிடம் கேளுங்க கொத்துபரோட்டா பார்முலா மாற்றினால் சுவைக்குமா ? :) விஜய்ப(ப்ப)டம் கூட அப்படித்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்ல சொன்னீங்க
இங்கே விஜயை திட்டும் பலர் தீவிர ரசினி ரசிகரக இருப்பார்கள்
ரசினி,எம்சிஆர் ரசிகர்கள் விஜயை குறைசொல்ல கூடாது
எனக்கு ரசினி விஜய் இருவரையுமெ பிடிக்காது//


நன்றி தம்பி

கோவி.கண்ணன் சொன்னது…

// வெற்றி said...

:)//
நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுதுபோக்குபடம் தான்//

ஆமாமா!

விஜய் படம்னா...

அது கலப்படம்...

மற்றும்

கொட்டைப்பாக்கு படம்(குழந்தைகளுக்கானது)//

ரஜினி படங்களைப் போல் விஜய் படங்களை குழந்தைகள் ரசிக்குது

கோவி.கண்ணன் சொன்னது…

//
எல்லாம் சரிதான் இதையே வச்சு அரசியல்ல நொழஞ்சி தன் மகனை முதல்வராக்கனும்னு எஸ் எ சந்திரசேகரா கனவுகாணாதவரைக்கும் தப்பே இல்லை! :)))

3:00 AM, May 02, 2010//

வருண்,
வருங்கால முதல்வர் கனவு, விஜயகாந்து சினிமாவை மூலதனமாக வைத்து தானே காணுகிறார். விஜயகாந்தைவிட விஜய்க்கு ரசிகர்கள் மிகுதி. ஆசைப்படுவதில் தப்பு இல்லை. மக்கள் ஆதரித்தால் /நிராகரித்தால் நாமோ நீங்களோ என்ன சொல்லமுடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...

Kovi, sariya sonninga,sun picture irukkum pothu enna kavalai. Dvd eppo varum?//

வவ்வால் நலமா ?

நீண்ட நாட்களாக காணும், அண்மையில் பெயரிலி பதிவில் தான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Cable Sankar said...

rightu..//

:)
கேபிள்,
நீங்க விஜய்படம் எடுத்தாலும் இப்படித்தான் ரைட்டுன்னு சொல்லுவோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.ராதாகிருஷ்ணன் said...

Ok..Ok..//

டபுள் ஓகே. :)

கோவி.கண்ணன் சொன்னது…

// புருனோ Bruno said...


ஆனால் இந்த படத்தின் முதல் பாதி சிறிது ரம்பமாக / இழுவையாக இருந்தது என்பது என் கருத்து//

ஆமாம் மருத்துவரே, நானும் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

// இரண்டாவது முறை இந்த படத்தை பார்க்க முடியாது.//

அவரே இரண்டாவது முறை அவர் படத்தைப் போட்டுப் பார்ப்பாராங்கிறது டவுட்டு தான்
:)

தனி காட்டு ராஜா சொன்னது…

//நான் விஜய் ரசிகன் இல்லை, இருந்தாலும் விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தே சென்றேன். படம் ஏமாற்றவில்லை.//
ஒரு காலத்தில் விஜய் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்படிதான் சொல்லிகொள்வதாக கேள்வி ........ என் ரூம் mate கூட இப்படி தான் சொன்னான் .......ஹி..ஹி..

Kesavan சொன்னது…

நிஜமா சுறா படத்துக்கு தியேட்டர் நுழைவு கட்டணம் ருபாய் ஒன்று என்றும் வெளியேறும் கட்டணம் ருபாய் இருநூறு என்று செய்தி வந்ததே :)

Kesavan சொன்னது…

நிஜமா சுறா படத்துக்கு தியேட்டர் நுழைவு கட்டணம் ருபாய் ஒன்று என்றும் வெளியேறும் கட்டணம் ருபாய் இருநூறு என்று செய்தி வந்ததே :)

கிரி சொன்னது…

//விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுது போக்குபடம் தான். சினிமாவுக்கு போவது பொழுது போக்குக்குத்தான் என நினைக்கும் ரசிக மனநிலையை விஜய் படங்கள் பூர்த்தி செய்கின்றன.//

நீங்கள் சொல்வது சரி தான்.

//எம்ஜிஆர், ரஜினி அப்படியான படம் செய்யும் போது இவர் செய்யக் கூடாதா ? //

நல்லா நறுக்குன்னு கேட்டீங்க!

ஆனா ரஜினி படத்தை மட்டும் நீங்க ஏன் கிண்டல் செய்யறீங்க? ரஜினி மட்டும் என்ன உலகப்படம் எடுக்கிறேன் வந்து பாருங்க என்று அழைத்தாரா!

ரஜினி படத்தில் அப்ப என்ன எதிர்பார்க்கறீங்க! அப்படி நீங்க எதிர்பார்க்கறீங்க என்றால் அப்புறம் எப்படி இவர்கள் ஒன்றாக முடியும்?

ரஜினியை எனக்கும் பிடிக்கும்! நான் அவரது படங்களையும் பார்க்கிறேன் என்ற வழக்கமான பதிலை கூறவேண்டாம். இப்ப விஜய் படத்திற்கு கூறி இருப்பதை போல நீங்க ஏன் ரஜினிக்கு கூறவில்லை?

தேடி தேடி லாஜிக் பார்த்து தானே விமர்சனம் செய்து கொண்டு இருந்தீர்கள். படத்தை மட்டுமா விமர்சனம் செய்தீர்கள் திரைவிமர்சனத்திர்க்கு சம்பந்தமில்லாமல் அதே பதிவில் ரஜினியையும்!! சேர்த்தல்லவா கடுமையாக விமர்சித்தீர்கள்! (உங்கள் பழைய பதிவுகளை படித்தால் உங்களுக்கே புரியும்).

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...

நல்லா நறுக்குன்னு கேட்டீங்க!

ஆனா ரஜினி படத்தை மட்டும் நீங்க ஏன் கிண்டல் செய்யறீங்க? ரஜினி மட்டும் என்ன உலகப்படம் எடுக்கிறேன் வந்து பாருங்க என்று அழைத்தாரா!//

நான் அப்படியாக எங்கும் குறிப்பிடவில்லை. நான் ஏற்கனவே எம்ஜிஆர் ரஜினி ஆகியோர் ரசிகர்களுக்காக படம் பண்ணுகிறவர்கள் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் உலகதரத்திற்கு படம் பண்ணுகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டது இல்லை.

// ரஜினி படத்தில் அப்ப என்ன எதிர்பார்க்கறீங்க! அப்படி நீங்க எதிர்பார்க்கறீங்க என்றால் அப்புறம் எப்படி இவர்கள் ஒன்றாக முடியும்?//

உங்களுக்கு ஏன் ரஜினியையும் விஜயையும் கம்பேர் செய்வது பிடிக்கவில்லை என்று ஆராய்ந்தீர்கள் என்றால் இந்த கேள்விக்கு விடைகிடைக்கலாம். ரஜினி என்ன என்ன செய்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதையே தான் இவரும் செய்கிறார், இப்ப திருச்சியில் இலவச திருமணம் கூட நடத்தி வைத்தாராமே. இன்னும் கொஞ்சநாள் கழித்து வாய்ஸ் கொடு தலைவான்னு விஜய் ரசிகர்களும் கேட்பார்கள். அது தவறு என்று நான் சொல்ல மாட்டேன்

// ரஜினியை எனக்கும் பிடிக்கும்! நான் அவரது படங்களையும் பார்க்கிறேன் என்ற வழக்கமான பதிலை கூறவேண்டாம். இப்ப விஜய் படத்திற்கு கூறி இருப்பதை போல நீங்க ஏன் ரஜினிக்கு கூறவில்லை?//

விஜய்க்கு கூறியதை ஏற்கனவே வேறுமாதிரி ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் கூறி இருக்கிறேன். பார்க்க.

http://govikannan.blogspot.com/2006/08/blog-post_02.html

// தேடி தேடி லாஜிக் பார்த்து தானே விமர்சனம் செய்து கொண்டு இருந்தீர்கள். படத்தை மட்டுமா விமர்சனம் செய்தீர்கள் திரைவிமர்சனத்திர்க்கு சம்பந்தமில்லாமல் அதே பதிவில் ரஜினியையும்!! சேர்த்தல்லவா கடுமையாக விமர்சித்தீர்கள்! (உங்கள் பழைய பதிவுகளை படித்தால் உங்களுக்கே புரியும்).//

http://govikannan.blogspot.com/2008/08/blog-post_02.html

குசேலன் படத்தை விமர்சனம் செய்தேன். அதற்கு ஆன சொலவுகள் என விளம்பரம் செய்ததை வைத்து விமர்சனம் செய்தேன். சத்தியாமாகச் சொல்லுங்க....குசேலன் ரஜினி ப்ராண்ட் படமா ? குசேலன் தோல்விக்கு ரஜினி தான் காரணம ? குசேலன் படம் ரஜினி ப்ராண்டர் படம் என்றால் ஓடி இருக்கும் என்பது எனது கணிப்பு.

Ashok D சொன்னது…

சூப்பருங்க :)

கிரி சொன்னது…

//உலகதரத்திற்கு படம் பண்ணுகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டது இல்லை//

குறிப்பிடவில்லை அவ்வளவே! மற்றபடி அனைத்தும் அப்போது செய்து விட்டீர்கள்.

//உங்களுக்கு ஏன் ரஜினியையும் விஜயையும் கம்பேர் செய்வது பிடிக்கவில்லை என்று ஆராய்ந்தீர்கள் என்றால் இந்த கேள்விக்கு விடைகிடைக்கலாம். //

ரஜினி விஜய் என்றில்லை.. எம் ஜி ஆர் ரஜினியையும் ஒப்பிடுவது கூட சரியில்லை.

//குசேலன் படத்தை விமர்சனம் செய்தேன். அதற்கு ஆன சொலவுகள் என விளம்பரம் செய்ததை வைத்து விமர்சனம் செய்தேன்//

கோவி கண்ணன் நியாயமாக கூறுங்கள். திரைவிமர்சனம் என்பது என்ன?

படத்தை பற்றியதா? படத்தின் செலவுகளை பற்றியதா? செலவை பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் அதற்க்கு நீங்கள் தனிப்பதிவு போட்டு தான் விமர்சிக்க வேண்டும், திரை விமர்சனத்தில் அல்ல.

//.குசேலன் ரஜினி ப்ராண்ட் படமா ? குசேலன் தோல்விக்கு ரஜினி தான் காரணம ? குசேலன் படம் ரஜினி ப்ராண்டர் படம் என்றால் ஓடி இருக்கும் என்பது எனது கணிப்பு//

படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ரஜினி மன்னிப்பு விவகாரம் மற்றும் சன் டிவியின் எதிர் பிரச்சாரம் (குசேலன் படத்தை கலைஞர் டிவி வாங்கியதற்காக). எனவே ரஜினி பிராண்ட் படமாக இருந்தாலும் அந்த சமயத்தில் கண்டிப்பாக ஓடி இருக்காது. காரணம் அந்த சமயத்தில் இருந்த மக்களின் மனநிலை அப்படி.

கோவி.கண்ணன் சொன்னது…

//படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ரஜினி மன்னிப்பு விவகாரம் மற்றும் சன் டிவியின் எதிர் பிரச்சாரம் (குசேலன் படத்தை கலைஞர் டிவி வாங்கியதற்காக). எனவே ரஜினி பிராண்ட் படமாக இருந்தாலும் அந்த சமயத்தில் கண்டிப்பாக ஓடி இருக்காது. காரணம் அந்த சமயத்தில் இருந்த மக்களின் மனநிலை அப்படி.

6:49 PM, May 03, 2010//

நீங்க சொல்வது படி வைத்தாலும், பிரச்சனையெல்லாம் தமிழ்நாட்டு தமிழ் ரசிகர்களினால் என்று வைத்துக் கொண்டாலும் ரஜினி படம் அண்டை மாநிலத்தில் பிற மொழி பேசும் மக்களால் விரும்பிப்பார்க்கப்படும், குசேலன் அது போல் பார்க்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

பாபா படம் பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் முன்பு டிவி பேட்டியில் 'படம் பார்க்க வருகிறவர்களுக்கு மிரட்டல் இருக்கிறது, படப் பொட்டியை தூக்கிட்டு ஓடிவிட்டார்கள்' படம் தொய்வுக்கு இது தான் காரணம் என்று சொன்னது நினைவுக்கு வருது.

ஊருல ஒரு பழமொழி உண்டு 'நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்காம்'

நான் குசேலன் ரஜினி படமே இல்லைங்கிறேன். நீங்க ஆமாம் ரஜினி படம் தான் ஆனா ஓடாததற்கு வேறு காரணம் என்கிறீர்கள்.

குசேலன் தோல்விப்படம் இல்லை ரஜினியின் சம்பளத்தைவிட கூடுதலாகவே ஈட்டிக் கொடுத்தாகத்தான் படித்தேன்.

Kesavan சொன்னது…

//ரஜினி பிராண்ட் படமாக இருந்தாலும் அந்த சமயத்தில் கண்டிப்பாக ஓடி இருக்காது. காரணம் அந்த சமயத்தில் இருந்த மக்களின் மனநிலை அப்படி. //

ரஜினி பிராண்ட் படம் எப்ப வந்தாலும் ஓடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரஜினி விஜய் என்றில்லை.. எம் ஜி ஆர் ரஜினியையும் ஒப்பிடுவது கூட சரியில்லை. //

ஒப்பிடுவது பற்றி பல்வேறு கருத்து இருக்கிறது, விஜய்க்கு சுறா இரண்டாவது படம் இல்லை, அவரும் 50 ஐ தொட்டுவிட்டு, அவருக்கும் மாபெரும் ரசிகர் மன்றம் கட் அவுட் பால் அபிஷேகங்கள் நடக்கிறது. தொடக்கத்தில் ஏஆர் ரஹ்மான் - இளையராஜா ஒப்பீடுகள் கூட கடுப்பானைவையே, ஆனால் அவர்கள் எல்லைகளை கடந்த பிறகு யாருமே 'எனக்கு ரஹ்மானை விட இராஜா இசை பிடிக்கும் என்றோ, மாற்றியோ ஒப்பீட்டு அளவில் சொல்ல முடியும்'

உங்களுக்கு ஒப்பிடுவது பிடிக்காதது போலவே எனக்கு ஒப்பிடுவது பிடிக்கும், என் கருத்தை நான் சொல்கிறேன். அதற்கு மாற்று கருத்துச் சொல்லலாம், ஆனால் தவறு என்று நீங்கள் குறிப்பிடுவது விளங்கவில்லை. தவறு என்று குறிப்பிட எதேனும் அளவு கோல் வைத்திருக்கிறீர்களா ? கருத்து சுதந்திரக் கழுத்தை நெறிப்பது தவிர்த்து வேறு ஏதும் அளவு கோல் தெரியவில்லை.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி கண்ணன் நியாயமாக கூறுங்கள். திரைவிமர்சனம் என்பது என்ன? //

பதிவு இப்படித்தான் எழுதனும் என்று யாரேனும் அறிவுறுத்தினால் நீங்க ஏற்பீர்களா ? திரைவிமர்சனம் ஒவ்வொருவரும் ஒரு பாணியில் செய்வார்கள், நான் ஒரு பாணி, அவ்வளவு தான். வேறெதும் தெரியவில்லை. சிறுகதை எழுதுவது எப்படின்னு புத்தகம் படித்துவிட்டு யாரும் எழுதினால் சிறுகதை சரியாக வருமா ? அல்லது அதைப்படிக்காதவர்கள் சிறுகதை எழுதவே கூடாதா ?

:)

நான் இந்த பதிவில் ரஜினியை குறை சொல்லவே இல்லையே, ரஜினியை குறை சொல்லுகிறவர்கள் விஜயையும் சொல்லுங்கள் என்று தானே குறிப்பிட்டேன்.

கிரி சொன்னது…

ரஜினி பற்றிய விவாதத்தில் என்றும் நம் இருவர் விவாதம் முடிவை எட்டாது என்பது எனக்கு தெரியும் :-)

இருப்பினும் என்னோட கருத்தை தெரிவிக்க விரும்பினேன் அவ்வளவே. நீங்கள் கேட்டதற்கு நான் பதில் பின் நீங்கள் என்று தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எந்த "காலத்திலும்" நீங்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை நானும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :-)

தற்போதெல்லாம் இது பற்றி விவாதம் செய்வது அர்த்தம் அற்றது என்று நன்றாகவே புரிகிறது, அதனால் ரொம்ப குறைத்து விட்டேன், இருப்பினும் இன்று உங்களுடன் பேசியது முற்றிலும் நட்பு ரீதியிலேயே. No hard feelings :-)

ஜோ/Joe சொன்னது…

கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப்பட்டேன் ..வேண்டுமென்றே நீங்க சொல்லி வச்சு சண்டை போடுறீங்களா ? ஹி ஹி.

அப்புறம் எம்.ஜி.ஆர் கூட ஏன் ரஜினியை ஒப்பிடக் கூடாது? இதையே தான் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சொல்லுவார்கள் ..இருந்தாலும் உங்கள் தரப்பை சொல்லுங்கள்..

கிரி சொன்னது…

//கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப்பட்டேன் ..வேண்டுமென்றே நீங்க சொல்லி வச்சு சண்டை போடுறீங்களா ? ஹி ஹி.//

நல்ல ஆளை பார்த்து சொன்னீங்க போங்க! :-)) நான் பதிவுலகிற்கு வந்த அன்றில் இருந்து கோவி கண்ணனுடன் சண்டை தான் ரஜினி விசயத்தில் ;-) "காலம் காலமாக" தொடரும் பந்தம் இது ஹா ஹா

//அப்புறம் எம்.ஜி.ஆர் கூட ஏன் ரஜினியை ஒப்பிடக் கூடாது? இதையே தான் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சொல்லுவார்கள் ..இருந்தாலும் உங்கள் தரப்பை சொல்லுங்கள்//

ஒப்பீடு ஒருவருடைய மதிப்பை குறைக்காதவரை சரி தான்.

சிவாஜி கமல் ஒப்பீடு கூட சில நேரங்களில் தர்ம சங்கடத்தை வரவழைக்கும் என்பது உண்மை தானே! இருவரின் ரசிகரான நீங்கள் கூறுங்கள்?

ஜோ/Joe சொன்னது…

//சிவாஜி கமல் ஒப்பீடு கூட சில நேரங்களில் தர்ம சங்கடத்தை வரவழைக்கும் என்பது உண்மை தானே! இருவரின் ரசிகரான நீங்கள் கூறுங்கள்?//

சிவாஜியை யாரோடும் ஒப்பிட முடியாது என சொல்லும் சிவாஜி ரசிகர்கள் இருக்கிறார்கள் .நான் அந்த ரகம் இல்லை .சிவாஜியோடு ஒப்பிட தகுதியை வளர்த்துக்கொண்ட நடிகன் என்பதால் தான் நான் கமலுக்கும் ரசிகன் :)

கிரி சொன்னது…

//சிவாஜியோடு ஒப்பிட தகுதியை வளர்த்துக்கொண்ட நடிகன் என்பதால் தான் நான் கமலுக்கும் ரசிகன் :)//

:-) நல்ல பதில் ஜோ.

ஆனால் இந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது இவர்கள் அனைவரின் விசயத்திலும் (எம் ஜி ஆர் ரஜினி சிவாஜி கமல் இளையராஜா ரகுமான் இன்னும் கொஞ்ச பேர் இருக்கிறார்கள் நினைவில்லை). நான் முன்பே கூறியபடி ஒப்பீடுகள் நடுநிலமையாக விருப்பு வெறுப்புகள் இன்றி இருக்கும் வரை என்றும் சரி தான்.

நானும் முன்பு புரிந்து கொள்ளாமல் அல்லது அனுபவம் இல்லாமல் பதிவுகள் எழுதியதுண்டு, நான் அடிக்கடி கூறுவது போல அனுபவமே சிறந்த பாடம் அதனால் தற்போது பல விசயங்களில் என்னை மாற்றிக்கொண்டேன், மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இருப்பினும் என்னோட கருத்தை தெரிவிக்க விரும்பினேன் அவ்வளவே. நீங்கள் கேட்டதற்கு நான் பதில் பின் நீங்கள் என்று தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எந்த "காலத்திலும்" நீங்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை நானும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :-)

தற்போதெல்லாம் இது பற்றி விவாதம் செய்வது அர்த்தம் அற்றது என்று நன்றாகவே புரிகிறது, அதனால் ரொம்ப குறைத்து விட்டேன், இருப்பினும் இன்று உங்களுடன் பேசியது முற்றிலும் நட்பு ரீதியிலேயே. No hard feelings :-)//

'ரஜினி' படம் என்பது போலவே 'விஜய் படம்' என்பது ப்ராண்ட் ஆகிவிட்டது. இல்லைன்னு சொல்லுவிங்களா ? கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் படங்கள் தோல்வி என்று திரையுலகம் சாராதவர்களால் விமர்சனம் செய்தாலும் வெளியீட்டாளர்கள் வாங்குத் தயங்கியதாகவோ நட்டம் அடைந்ததாகவோ தெரியவில்லையே.

உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வெளியீட்டாளர்கள் விஜய்படம் தான் மூன்று மாதத்திற்கு தீணி போடுது. வேண்டுமானால் கேபிளாரைக் கேட்டுப்பாருங்க. விநியோகஸ்தர்களே ஒப்பீட்டு அளவில் படம் ஓரளவு ஓடுவதால் தான் விஜய்படத்தை வாங்குகிறார்கள்.

குசேலனில் கூட ரஜினியை விமர்சனம் செய்தவர்கள் குறைவு. ரஜினியை வைத்துக் கூட படம் பண்ணத் தெரியாதவ்ர் என்று பி.வாசு தான் விமர்சனத்துக்குள்ளானார்.

முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு அப்பறம் என் ஒப்பீடு சரியா இல்லையான்னு சொல்லுங்க. ரஜினியை வைத்து படம் செய்த பாலச்சந்தர் கூட ரஜினிக்கு அடுத்து விஜய்படங்கள் தான் திரையரங்கில் திருவிழா கோலம் பூணுகிறது என்று சொல்லியதும் இல்லாமல் 'திருமலை' என்று ஒரு படத்தையும் விஜயை வைத்து தயாரித்தார்.

நான் விஜயை இந்த பதிவில் புகழவும் செய்யவில்ல, இகழவும் செய்யவில்லை யதார்தம் என்ன என்று சொன்னேன்.

ஓப்பீடு என்றதுமே ரஜினி இடத்தில் விஜயா ? என்பது போல் நீங்கள் பார்த்தால் என் பதிவு உங்களுக்கு நான் ரஜினி மீது காழ்புணர்வுடன் எழுதியது போல் தான் தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

/ஜோ/Joe said...
கிரி,
கோவியார் ஒரு ரகசிய ரஜினி ரசிகர் என கேள்விப்பட்டேன் ..வேண்டுமென்றே நீங்க சொல்லி வச்சு சண்டை போடுறீங்களா ? ஹி ஹி.

அப்புறம் எம்.ஜி.ஆர் கூட ஏன் ரஜினியை ஒப்பிடக் கூடாது? இதையே தான் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சொல்லுவார்கள் ..இருந்தாலும் உங்கள் தரப்பை சொல்லுங்கள்..
//

ரகசியமெல்லாம் இல்லைங்க, ராகவேந்திரா படத்திற்கு பிறகான ரஜினியின் படங்களில் நான் பார்க்காதவை ஒன்றோ இரண்டோ இருக்கும். ரஜினி ரசிகன் தான், ஆனால் சின்னக் கோடம்பாக்கம் சின்ன ரஜினி கிரி அளவுக்கு வெறித்தனமான ரசிகன் இல்லை. அவரோட மேடைப் பேச்சு உளரல்கள் தான் எரிச்சலை ஏற்படுத்தும், ஒரு நடிகனாக அவரோட ஸ்டைல் அசத்தல், கருப்பு நிறம் வெறுக்கத்தக்கதல்ல என்பதாக மாற்றியதில் ரஜினியின் பங்கும் உண்டு. கருணாநிதிக்கு பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

/இப்ப விஜய் படத்திற்கு கூறி இருப்பதை போல நீங்க ஏன் ரஜினிக்கு கூறவில்லை? //

பார்க்க சிவாஜி பட விமர்சனம்.

http://govikannan.blogspot.com/2007/06/blog-post_2401.html

கிரி சொன்னது…

கோவி கண்ணன் நீங்கள் எதற்கு விஜய் பற்றி விளக்கி இப்படி பின்னூட்டம் இட்டீர்கள் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. நான் என் பின்னூட்டத்தில் எங்கும் விஜய் பற்றி தாழ்த்தியோ அல்லது அவரது படத்தின் வேல்யு பற்றி குறைவாகவோ எங்கும் கூறவில்லை. பதிவர்கள் கிண்டலடித்தாலும் விஜய்க்கு என்று இருக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். இது கூட தெரியாமல் நான் விவாதம் புரிய மாட்டேன்.

நான் கூற வந்தது வேறு நீங்கள் விளக்கிக்கொண்டு இருப்பது வேறு. நான் முன்னரே கூறியபடி இதற்கு முடிவே இல்லை. நன்றி

ஜோ/Joe சொன்னது…

//ராகவேந்திரா படத்திற்கு பிறகான ரஜினியின் படங்களில் நான் பார்க்காதவை ஒன்றோ இரண்டோ இருக்கும்.//
எனக்கு அந்த ஒன்றோ இரண்டோ கூட இருக்காது என நினைக்கிறேன் :) ..அப்போ நானும் ரஜினி ரசிகன் தானுங்கோ.

வருண் சொன்னது…

கிரி: எனக்கும் உங்களைப்போல விவாதம் பண்ணனும்னுதான் தோனுச்சு.
ஆனால்... அவர் எழுதிய விமர்சனத்தை இப்போ திருப்பி எழுதவோ சரி செய்யவோ முடியாது.

ரஜினியை நிச்சயமா எம் ஜி ஆர் உடனோ அல்லது விஜயுடனோ கம்ப்பேர் பண்ண முடியாது.

ஏன்னா எம் ஜி ஆர் சினிமால சிகரெட் குடிச்சது இல்லை, தண்ணி அடிச்சதில்லை, பெண்களை கெடுத்ததில்லை, முள்ளும் மலரும் "காளி" போல ஒரு ரோலும் பண்ணியதில்லை. கவனமாக நல்லவராக மட்டும் நடிச்சிட்டுப் போனாரு.

விஜய்ட்ட இந்த பாட்டும், டாண்ஸும் சண்டையையும் விட்டா ஒண்ணுமே கெடையாது. He is young and fit, that certainly helps though. He has his own fans :)

ரஜினி யுனீக்த்தான் வில்லனா வந்து, சூப்பர் ஸ்டார் ஆனவர்!

வருண் சொன்னது…

***வருண்,
வருங்கால முதல்வர் கனவு, விஜயகாந்து சினிமாவை மூலதனமாக வைத்து தானே காணுகிறார்.***

விஜய் மாதிரி அவர் அவசரப்படலைங்க!

***விஜயகாந்தைவிட விஜய்க்கு ரசிகர்கள் மிகுதி. ஆசைப்படுவதில் தப்பு இல்லை. மக்கள் ஆதரித்தால் /நிராகரித்தால் நாமோ நீங்களோ என்ன சொல்லமுடியும்.***

நானும் நீங்கலும் மக்கள்தானே, கோவி? எல்லாருக்கும் ஒரு ஓட்டுதானே? :)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//குருவி படத்தை பினாங்கில் பார்த்த போதும் அங்கு அலைமோதிய கூட்டம் (லோக்கல் மலேசிய மக்கள்) விஜய் தனக்கான ரசிகர் பட்டாளத்தை கட்டியமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் தெரிந்தது//

இது முழுக்க முழுக்க மலேசிய தமிழர்கள் தாம் என்பதை உங்களால் உறுதியாக கூற முடியுமா? வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் விஜய் படம் பார்க்க திரைக்கு வரமாட்டார்களா?

ஆளவந்தான் சொன்னது…

Nityananthan - Samiyaar;
Vijay - Nadigar

Followers?????

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்