பின்பற்றுபவர்கள்

27 மே, 2010

இஸ்லாமிய மாணவி பத்தாம் வகுப்பில் சாதனை !

மாணவியின் தனித் திறமையை மதம் சார்ந்து பாராட்டலாமா ? என்பது போல் இதே தலைப்பை கூகுள் பஸ்ஸில் இட்ட போது நிறைய விவாதங்கள் வந்தன.

Swami omkar - தீவிரவாதி என குறிப்பிடும் பொழுது இந்து தீவிரவாதி, முஸ்லீம் தீவிரவாதி என குறிப்பிடுவது முட்டாள் தனம் என கூறும் நீங்கள், மாணவி இஸ்லாமியர் என கூறுவது தகுமா? மதம் மார்க் போடுமா? :) என்ன கொடும கண்ணன் இது :)May 26
Sanjai Gandhi - //இஸ்லாமிய மாணவி//
அந்த மாணவியின் சாதனையை இதைவிட மோசமாக கொச்சைப் படுத்த முடியாது. பூனைக் குட்டியை உள்ள மறைச்சி வைங்க ஆபிசர்..
May 26
Kesava Bashyam VN - கோவி கண்ணனுக்கு சிறந்த மதவாதி என்ற பட்டம் கொடுக்கலாமா !!!!! கோவி கண்ணன் நீங்கள் ஊருக்கு உபதேசம் செய்பவர் என்று தெள்ள தெளிவாக இதிலிருந்து தெரிகிறது .

அரசியல் வேறு படிப்பு வேறு. அந்த சிறுமி தன் சொந்த முயற்சியால் படித்து முதல் இடத்தை பிடித்தாள். அவளை இஸ்லாமியர் என்று சொல்வது அந்த சிறுமியை கொச்சை படுத்துவதே ஆகும் . திரு.ஓம்கார் மற்றும் திரு.சஞ்சய் சொல்வதை வழி மொழிகிறேன்
May 26

*******

இன்றைய தேதிக்கு தனிமனித சாதனைகள் அமைப்பின் சாதனைகளாக விளம்பரப்படுத்தப்படுவது ஒரு நாகரீகமற்ற நடைமுறையாகவே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இஸ்லாம் சமூகத்தின் மீது 'தீவிரவாத முத்திரையை' குத்தி அடையாளப்படுத்தும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேலையில் ஒரு மாணவியின் சாதனையை மதம் சார்ந்து பார்த்து பாராட்டுவதில் தவறு ஏதும் இல்லை. பொதுச் சமூகம் அடையாளப்படுத்தும் 'இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள்' என்கிற சிறுமையைத்தான் இஸ்லாமியர்கள் அடையாளாக்கிக் கொள்ளவேண்டும் மாறாக தங்கள் பெருமைகளால், சாதனைகளால் அச்சமூகம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் போது அதற்கு எதிர்ப்பு காட்டுவது நடுநிலையும் இல்லை என்பது எனது புரிதல்.

இஸ்லாமிய சமூகம் மாறிவருகிறது, பிற மதத்தினரைவிடவும் கடவுள், வேதபுத்தகம் போன்ற மதம் சார்ந்தவைகளைஅவர்களின் மீதான மத அழுத்தத்தின் காரணமாக பலமாக கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்கிற பொதுவான எண்ணம் இருந்தாலும், பெண்கல்வி போன்றவற்றில் நல்ல மாறுதல் அடைந்துவருவதை நாம் அடையாளம் கண்டு பாராட்டவே செய்ய வேண்டி இருக்கிறது. படிப்பறிவு ஒரு சமூகத்தின் மீதான பொதுக் கருத்தை மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் பார்பனர் உள்ளிட்ட மேல்சாதியினர் நாசாவில் பணிபுரிந்தாலும் தத்தம் சமூகம் சார்ந்தே சிந்திக்கின்றனர் என்பது வெள்ளிடைமலை. இருந்தாலும் படிப்பறிவு பெண்கல்வி என்பவை சமூக பொருளாதாரத்தை முன்னேற்றி ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியின் பங்களிப்புக்கு பயனாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

படிப்பறிவிலும் உயர்கல்வியிலும் தமிழககத்து இஸ்லாமிய சமூகம் பிற மத சமூகங்களைவிட பின் தங்கியே இருக்கின்றன. காரணம் கட்டற்ற பிள்ளை பேறு, அவர்கள் அனைவருக்குமே கல்வி கொடுக்க முடியாத பொருளாதார சூழல் குறைவால் மகன்களை எப்படியேனும் எதோ ஒரு வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டால் போதும் அதன் பிறகு மற்ற குழந்தைகளை கரை சேர்த்துவிடலாம் என்பது போன்ற சூழல் பிணைப்பு 80 களின் இறுதிவரையிலும் கூட இருந்தது. தற்பொழுது இஸ்லாமிய சமூகம் ஓரளவுக்கு குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தி பேறுகளைக் குறைத்துக் கொண்டு கல்வியில் முன்னேறினாலும் உயர்கல்வி என்ற அளவுக்கு செல்பவர்களும் எண்ணிக்கையில் குறைவே. இஸ்லாம் சமூகத்தில் பெண்களுக்கு குறைந்த வயதில் (15க்கு மேற்பட்ட வயதில்) திருமணம் செய்வது இன்றைக்கும் கூட நடைமுறையாக இருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால் தான் கட்டாய திருமணப் பதிவு சட்டத்தைக் கூட அவர்கள் மதக்காரணங்களைச் சுட்டி எதிர்க்கிறார்கள், திருமணம் பதிவு செய்யப்படுவது கட்டாயம் என்றால் பெண்ணுக்கு 18க்கும் குறைவான வயது என்னும் போது சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதே எதிர்ப்புகான முதன்மை காரணம்.

17 வயதில் திருமணம் என்றால் பெரும்பாலும் +2 படிப்பை தாண்டுவதே இஸ்லாமிய மாணவிகளுக்கு பெரும் அறைகூவல். இந்த சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இஸ்லாமிய சமூகத்தில் கல்லூரியை தொடும் ஆண்கள் மிகுதியாக மிகுதியாக அவர்கள் சமூகத்து பெண்களும் கல்வியில் முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 10 ஆம் வகுப்பில் முதல் மாணவியாக வந்த ஜாஸ்மின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவளாம், வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். அவளது தந்தை அரசு ஊழியரும் அல்ல. இப்படியான சூழலில் இருக்கும் பெண்ணும் பெற்றோரும், ஆசிரியரும் ஊக்கமளித்தால் பள்ளியின் தரம் எதுவாக இருந்தாலும் முதல் மதிப்பெண் பெறமுடியும் என்பதை நிருபனம் செய்திருக்கிறாள்.

ஜாஸ்மின் போன்ற ஏராளமான மாணவிகளின் உருவாக்கத்தை இளம் வயது திருமணம் என்கிற முட்டுக்கட்டையில் போட்டு அமுக்கிய தமிழக இஸ்லாமிய சமூகம் மெல்ல மெல்ல இறுக்கத்தை தளர்த்திவருவது வரவேற்கத்தக்கது. படிப்புக்கு சூழல் அமைவது தான் முக்கியம் அதற்கு மதம், சமூகம் தடையாக இருந்தால் எந்த ஒரு சாதனையையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை ஜாஸ்மின் தெளிவு படுத்தி இருக்கிறாள். இஸ்லாமியர்கள், அரசு பள்ளி மாணவிகள் படிப்பில் சாதனை செய்யக் கூடியவர்கள் என்று வெளிச்சமிட்டு காட்டிய ஜாஸ்மினையும் அவர்களது பெற்றோர்களையும், சிறந்த முறையில் பயிற்சி கொடுத்த ஆசிரியர்களையும் (அரசு பணியில் தன்னளவில், தன்னார்வு பொறுப்பான ஒருசிலர் இருக்கிறார்கள்) பாராட்டுகிறேன்.


********

கூகுளின் கயமைத் தனம் என்பதாக இணையத் தேடலில் ஒரு தகவல் ஓடிக் கொண்டு இருக்கிறது,இந்த தகவலை பலரும் உண்மையா என்று தேடுவதில், இப்பொழுதெல்லாம் அதே தேடல் முடிவை கூகுள் தருவதில்லை, மாறாக இவை தேடப்படும் பக்கமாக காட்டுகிறது. அந்த கூகுள் தேடல் இமேஜ் உண்மையோ பொய்யோ... ஆனால் வெள்ளைக்காரன் திருட மாட்டான் கருப்பன் தான் திருடுவான் என்பதை கூகுள் போன்ற நிறுவனங்களே நம்பவில்லை என்கிற கட்டமைப்புகளைவிட பொதுப்புத்திகள் இப்படியானவை என்பதைக் காட்டும் இதைவிட சிறந்த காட்டுகள் எதுவும் இல்லை.


இடுகை பிடித்து இருந்தால் தமிழ்மணக் கருவி பட்டையில் குத்துங்கள்

47 கருத்துகள்:

முகிலன் சொன்னது…

நீங்கள் சொல்லும் வாதங்களை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் இஸ்லாமிய மாணவி என்று சொல்வதை விட மாநகராட்சிப் பள்ளி மாணவி என்று சொல்வதையே விரும்புவேன். :)

Matra சொன்னது…

இதை படியுங்கள்

http://www.nowpublic.com/tech-biz/white-people-stole-my-car-google-trends-fail

Just spam !

வால்பையன் சொன்னது…

பெண்னடிமைதனம் எல்லா சமூகத்திலும் தான் இருக்கு!, ஜாஸ்மீன் ஒரு பெண் என்பதே அவளுக்கு பெருமை தான், இஸ்லாமிய பெண் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை!

எதாவது லேபிளை கழுத்தில் தொங்கவிட்டு தான் ஆகனுமா என்ன!?

..:: Mãstän ::.. சொன்னது…

அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.

மதம் சார்ந்து இதை பார்க்கவில்லை என்றாலும், அரசு பள்ளியில் படித்து வந்தவர் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

மர்ம வீரன் சொன்னது…

//கூகுளின் கயமைத் தனம்//

யெஸ் ஆபீஸர். இக்கட சூடு - http://i.imgur.com/KwJAs.png

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தங்களின் கருத்துக்கள் சரிதான். அபூர்வமாக நடக்கும் நிகழ்சிகளை இவ்வாறுதான் வேறுபடுத்திக்காட்ட வேண்டும். அவர்கள் சமூகத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதே பெரும் பாடு. ஜாதி , மத்த கட்டுபாடுகள் அதிகம். இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு ஆதரவு தந்து
அப்பெண் பிள்ளை படிப்பில் முதலிடம் வருவது அவர்கள் சமூகத்தில நல்ல . மாற்றம் தான். இதை குறிப்பிடுவது சரிதான். அப்போதுதான் பிறரும் பின்பற்றி நடக்க வழி பிறக்கும். தடைகள் அகலும்.

தாஜூதீன் சொன்னது…

இஸ்லாத்தில் அடக்குமுறை என்பதை இந்த மீடியாக்கள் தான் பொய் பிரச்சாரங்கள் செய்து வருகிரார்கள், இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான உரிமைகள் கொடுத்துள்ள மார்க்கம், அதை சரிவர சரியான முறை அன்று எடுத்துவைக்காது தான் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணங்கள் அனைவரிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாத்தை சரியான முறையில் எடுத்துறைக்கும் முயற்சியில் சில இஸ்லாமிய இயக்கங்கள் ஈடுபட்டு வெற்றியும் கண்டுவருகிறார்கள்.தமிழகத்தில் இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் படித்து முன்னேறுவதற்கு இஸ்லாத்தை சரியான முறையில் மக்களிடம் எடுத்துறைத்தது தான் காரணமே தவிர, வேறு எந்த புரட்சியும் அல்ல என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

பர்தாவையும், தலை முக்காடையும் கேவலமாக பேசித் திரியும் பிற்போக்கு, காமக்கோமாளிக் கூட்டத்தாரின் முகத்தில் கரியை பூசியிருக்கிறார் சகோதரி ஜாஸ்மின்.

தாஜூதீன் சொன்னது…

பொய் வழக்குகளாலும் பல அடக்குமுறைகளாலும் தீவிரவாதிகள் என்று முத்திரை இட்டு, தூயமான ஒரு சமுதாயத்தை, பொய் பிரச்சாரத்தால் கோவலப்படுத்தியிருக்கும் இவ்வுலகில், ஒரு தமிழ் இஸ்லாமியப் பெண்ணின் சாதனையை அச்சமுதாயம் பெருமை பேசிக்கொள்வதில் எந்த தவறுமில்லை என்பதை மிக அழகாக சொல்லிருக்கிறீர்கள். மிக்க நன்றி கண்ணன் சார்.

அக்பர் சொன்னது…

ஒரு கோணத்தில் நீங்கள் சொல்வது சரிதான்.

ஆனால் தீவிரவாதத்தில் மதத்தை முன்னிறுத்துவது எவ்வளவு தவறோ அது போல் தனி நபர் சாதனைகளிலும் மதத்தை விளம்பரப்படுத்துவது தவறுதான். அது மற்ற மதத்தினரிடையே பொறாமையை தூண்டிவிடும்.

அந்தந்த மத அமைப்புகள் பாராட்டு விழாக்கள் நடத்தினாலும். அதில் மதம் பார்க்காமல் ரெண்டாம், மூன்றாம் இடம் எடுத்த மாணவிகளையும் பாராட்டினால்
மத நல்லிணக்கம் வளரும்.

இது எனது தாழ்மையான கருத்து.

வால்பையன் சொன்னது…

தாஜூதீன்

கிழிச்சு நார் நாரா தொங்கவிட்டும் வலிக்காத மாதிரியே நடிக்கிறிங்களே எப்படி?

உங்களை போல் ஆட்களாலே நிச்சயமாக ஜாஸ்மீனை இஸ்லாமிய பெண் என்று சொல்லலாம்!

சம உரிமை கெடுத்து கிழிச்சாங்களாம்!

தாஜூதீன் சொன்னது…

//தாஜூதீன்

கிழிச்சு நார் நாரா தொங்கவிட்டும் வலிக்காத மாதிரியே நடிக்கிறிங்களே எப்படி?

உங்களை போல் ஆட்களாலே நிச்சயமாக ஜாஸ்மீனை இஸ்லாமிய பெண் என்று சொல்லலாம்!

சம உரிமை கெடுத்து கிழிச்சாங்களாம்!//

சகோதரா ஏன் கோபப்படுகிறீர்கள், நீங்கள் கூறிக்கொள்ளும் அடிமைத்தனம் முன்பு இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளதை நாம் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய சகோதரிகள் கல்வியில் பல சாதனை படைத்து வருகிறார்கள், இஸ்லாமிய கொள்கை தெளிவாகத் தான் உள்ளது அதை எடுத்து சொன்ன விதத்தில் தான் சில குழப்பம் ஒரு காலத்தில், ஆனால் இன்று அப்படி இல்லை சகோதரா.

சாதனைப் படைத்த சகோதரி ஜாஸ்மின் ஒரு சமூகத்தின் பெண் என்று சொல்லிக் கொள்வதில் என்ன தவறு. மனசாட்சியுடன் சிந்தியுங்கள் சகோதரா.

எத்தனை இஸ்லாமிய பெண்கள் உங்கள் காலடியில் வந்து கொஞ்சினார்கள் நாங்கள் அடிமைப்பட்டிருகோம் என்று?

கஸ்டங்களும்,வருமையும், உரிமைமீரல்களும் இருக்கும் பெருபான்மை சமுதாயம் என்று பெயரலவில் சொல்லிக்கொள்ளும் சமுதாயத்தை முதலில் திருத்து சகோதரா. அப்புறம் வாருங்கள்.

இஸ்லாத்தில் பெண்ணடிமை இருக்கிறது என்று சொல்வதற்கு உம்மை போன்றவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை சகோதரா.

இணையத்தில் எத்தனை இஸ்லாமிய சகோதரிகள் தங்கள் தனித்திறமையால் எத்தனை அறிவுப்பூர்வமான செய்திகளை நாளுக்கு நாள் இந்த தமிழ் சமுதாயத்திற்காக வெளியிட்டு வருகிறார்களே, இவர்கள் எல்லாம் பெண்ணடிமைவாதிகளா சகோதரா.

ஏதோ 1 அல்லது 2 பழைய சம்பவங்களை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாத்தில் இன்னும் பெண்ணடிமை இருக்கு என்று ஒப்பாரிவைத்திருப்பதால், ஒழுகத்தை போதிக்கும் உலக மார்க்கம் உண்மை இஸ்லாமியக் கோட்பாடுகள் அப்படியே தான் இருக்கும், இம்மார்க்கத்தில் மட்டும் தான் நீதியும் நேர்மையும் எல்லோருக்கும் சமம்.

தொடர்புக்கு tjdn77@gmail.com

வால்பையன் சொன்னது…

//இஸ்லாத்தில் பெண்ணடிமை இருக்கிறது என்று சொல்வதற்கு உம்மை போன்றவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை சகோதரா.//


அப்போ குரானை வெத்து வேட்டு டுபாக்கூர் புத்தகம் என்று சொல்லலாமா சகோதரா!? அதில் தானே அத்தனை பெண்னடிமைத்தனமும் இருக்கிறது!

தன் சொந்த முயற்சியால் படித்து மார்க் வாங்கிய ஜாஸ்மீனுக்கு இஸ்லாம் என்னத்தை செய்தது சகோதரா!?, திருஅந்த்தின் பிறகு புருஷன் அடிச்சா வாங்கிகோன்னு தான சொல்லுது!

எங்கேயோ ஒன்னு ரெண்டு இல்ல சகோதரா, இஸ்லாமியநாடுகள்ன்னு சொல்லிகிற பன்னாடை நாய்ங்க பண்ற லூட்டியை தான் சொல்றேன் சகோதரா!?

அங்கெல்லாம் பெண்ணுங்க படிச்சாலே பாவம் சகோதரா!?, சகோதரி ஜாஸ்மீன் மதசார்பற்ற இந்தியாவில் பிறந்ததற்காக தான் பெருமைபட வேண்டும் சகோதரா, ஒரு முஸ்லீமாக பிறந்ததற்கு அல்ல!

தாஜூதீன் சொன்னது…

ஒரு சமூதாயத்தில் ஒரு பெண் கல்வியில் சாதனைப் படைத்திருக்கிறாள், இது புதிதான விசையம் என்பதால், பாராட்டினால் அச்சமுதாயப் பிள்ளைகளுக்கு இன்னும் ஊக்கமளிக்கும் இன்னும் சாதனைப் படைப்பார்கள் என்று பெருந்தன்மையுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களும் நன்றி.

வால்பையன் சொன்னது…

(உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள்(ஆவார்கள்); உங்களுடைய விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள் - குர்ஆன் 02:223)
தாஜூதீன் அவர்களே, இது குரான் வசனம் தானே, இவ்வளவு கேவலமாகவா அல்லா தான் படைத்த பெண்களை குறித்து சொல்வார்.

தேவாலயங்களில் ஆராதனைகளில் பெண்களும் இணைந்து பங்கு கொள்வார்கள். ஆராதனையும் தலைமையேற்றும் நடத்துவார்கள். பெண்களை உயர்ந்த இடத்தில வைத்திருக்கும் நீங்கள் முதலில் உங்கள் பள்ளிவாசலில் பெண்களை அனுமதியுங்கள். ஆண் என்றும் பெண் என்றும் பேதம் இல்லாத இறைவனை, பள்ளிவாசலில் சென்று பெண்கள் தொழுகை செய்ய அனுமதிக்க உங்களால் முடியுமா? ஒன்று, இரண்டு, மூன்று என்று விரல் விட்டு என்னும் அளவில்தான் நீங்கள் மதிக்கும் பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது.


(குரான் : 4 .34 : ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எந்த பெண்கள் விசயத்தில் அவர்கள் தங்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை படுக்கையில் இருந்து விலக்கி விடுங்கள். அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை அடியுங்கள்)

வடிவேல் பாணியில் சொல்லவேண்டும் என்றால் 'முடியல','கண்ணு கட்டுது'
திரு தாஜுதீன் அவர்களே இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் சலுகைகளை பார்த்து

வால்பையன் சொன்னது…

[55:47] But for him who fears to stand before his Lord there are two Gardens
[55:55] They will recline on couches above carpets, the linings of which will be of thick brocade. And the ripe fruit of the two Gardens will be within easy reach.
[55:57] Therein will also be chaste maidens of modest gaze, whom neither man nor Jinn will have touched before them
[55:63] And besides these two, there are two other Gardens
[55:71] Therein will be maidens, good and beautiful
[55:73] Fair maidens with lovely black eyes, well-guarded in pavilions
[55:75] Whom neither man nor Jinn will have touched before them
[56:23] And there will be fair maidens with wide, lovely eyes,
[56:35] And they will have noble spouses
[56:37] And made them virgins,


இவையெல்லாம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு கிடைப்பவை, என்ன தெரியுமா? நித்திய கன்னிகைகள்!

பெண்கள் என்றால் உங்களுக்கு அம்பொஉட்டு கேவலமா போச்சா, பெண்ணை அடிமைதனமாக வைத்திருக்க சொல்லும் ஒரு மதம், அது தான் சிறந்தது என சொல்ல ஒரு மதவாதி!, என்னைக்கு நாடு உருப்பட போவுது!

மதசார்பற்ற நாடுகள்ள எல்லா மதத்துலயும் நல்லா படிச்சு நல்லா இருக்காங்க, இஸ்லாமிய நாட்ல ஒரு பத்து விஞ்ஞானிகளை காட்ட்ங்கய்யா பார்க்கலாம்!

நீங்கள் முட்டாளா இருக்குறது பத்தாதுன்னு அடுத்தவனையும் முட்டாளாக்க பாக்குறிங்களா!?

உங்களை போன்ற ஆட்கள் இருக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கு மத்தியில் பிறந்து நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருக்கும் ஜாஸ்மீன் சொல்லலாம் நான் இஸ்லாமிய பெண் என்று, நீங்க சொல்லவே கூடாது!

வால்பையன் சொன்னது…

//
ஒரு சமூதாயத்தில் ஒரு பெண் கல்வியில் சாதனைப் படைத்திருக்கிறாள், இது புதிதான விசையம் என்பதால், பாராட்டினால் அச்சமுதாயப் பிள்ளைகளுக்கு இன்னும் ஊக்கமளிக்கும் இன்னும் சாதனைப் படைப்பார்கள் என்று பெருந்தன்மையுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களும் நன்றி. //


தமிழ் சமுதாயத்தில் பிறந்து தமிழில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாள், அவளை தமிழகம் வாழ்த்த பெருந்தன்மை தேவையில்லை, உங்கள் நன்றியும் எங்களுக்கு தேவையில்லை, எங்கள் சகோதரியை வாழ்த்த எங்களுக்கு தெரியும்!

வந்துட்டாரு சொம்ப தூக்கிகிட்டு!

தாஜூதீன் சொன்னது…

சகோதரா வால்பையன்,

கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவன் என்ற முறையில் உங்களை மதிக்கிறேன்.

நீங்கள் குர் ஆனை முழுமையாக படித்துவிட்டு எழுதுங்கள்.

உங்கள் அறியாமை நீங்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

இது நீண்டுக்கொண்டே போகும்.

அச்சகோதரி நாம் நம் தமிழ் நாட்டுப் பெண் என்ற முறையில் வாழ்த்துக்கள் சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளலாம்

வால்பையன் சொன்னது…

//நீங்கள் குர் ஆனை முழுமையாக படித்துவிட்டு எழுதுங்கள்.//


நான் கொடுத்துருக்குறது குரான் வசனமில்லாம என் பாட புத்தக வசனமா!

அந்த கேடுகெட்ட மத புத்தகத்தை நான் வேற படிக்கனுமாக்கும், கிறுக்கு பிடிக்கிறதுக்கா!?

எனக்கு இஸ்லாமும் வேணாம், சொர்க்கத்துல நித்திய கன்னிகைகளும் வேணாம்!

தாஜூதீன் சொன்னது…

இங்கு கொள்கையைப் பற்றி சொல்லும் பட்சத்தில் அமெரிக்கா அடிமைகள் இஸ்லாமிய ஆட்சி என்று பெயரலவில் உள்ளார்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். சகோதரா.

இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுவதை நிறுத்திவிட்டு நல்ல அறிவை தேட முயற்சி செய்யுங்கள். சகோதரா.

உங்களுக்கு தெளிவான ஞானம் ஏற்பட இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

வணக்கம்.

வால்பையன் சொன்னது…

//இங்கு கொள்கையைப் பற்றி சொல்லும் பட்சத்தில் அமெரிக்கா அடிமைகள் இஸ்லாமிய ஆட்சி என்று பெயரலவில் உள்ளார்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். சகோதரா.//


தேடி போய் சட்டியை காட்டியது இஸ்லாமியநாடுகள் தான்! அந்த அளவுக்கு கொள்கைகள் அதில் இருக்கு, இஸ்லாமிய ஆட்சி என்று அவர்கள் காட்டுவது பெண்னடிமைத்தனத்தில் மட்டுமே, மத்த விசயத்தில் காலணி ஆதிக்கத்துக்கு தான் ஜால்ரா தட்டுது!


//இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுவதை நிறுத்திவிட்டு நல்ல அறிவை தேட முயற்சி செய்யுங்கள். சகோதரா.//

குரான் என்னும் ஒத்த புத்தகத்தை வச்சிகிட்டு குதிரை ஓட்டுவது நாங்களா, நீங்களா? தானும் படிக்கிறது இல்ல, புள்ள குட்டிங்களையும் படிக்க வைக்கிறது இல்ல! எப்பயா உருப்பட போறிங்க!

//உங்களுக்கு தெளிவான ஞானம் ஏற்பட இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.//

இஸ்லாமியனா பொறந்த எவனுக்குமே அறிவில்லாத பொழுது எனக்கு மட்டும் அல்லா ஞானம் கொடுத்திருவாராக்கும்!, உருபடுற வழியை பாரு சகோதரா!

..:: Mãstän ::.. சொன்னது…

<<<
இஸ்லாமியனா பொறந்த எவனுக்குமே அறிவில்லாத பொழுது எனக்கு மட்டும் அல்லா ஞானம் கொடுத்திருவாராக்கும்!, உருபடுற வழியை பாரு சகோதரா
>>>

என்ன வால்பையன்??? ஏன் இப்படி??? எழுத்து சுதந்திரம் இருக்கு என்பதற்காக எப்படி வேன்னா எழுதலாமா??? அப்படி என்ன அறிவு உங்களுக்கு இருக்கு??? உலகத்துக்கு அப்படி என்னதான் கண்டுபிடித்து கிழித்தீர்கள்??? நாங்கள் கிழிக்காமல் இருப்பதற்கு???

@கோவிஜி, நீங்களா இதை அனுமதித்தது??? வருத்தமா இருக்கு :(

வால்பையன் சொன்னது…

//உங்களுக்கு தெளிவான ஞானம் ஏற்பட இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.//

ஞானம் ஏற்பட என்றால் இப்ப முட்டாளா இருக்கேனா, உங்க ஆளு சொன்னா இனிக்கும், நான் சொன்ன கசக்குதோ?

முதல்ல அவரை இம்மாதிரி பேசுவதை நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்திகிறேன்!

..:: Mãstän ::.. சொன்னது…

எங்க ஆளு சொன்னா அவரை திட்டுங்க.. அது உங்களுக்கும் அவருக்கும் உள்ளது,

<<<
இஸ்லாமியனா பொறந்த எவனுக்குமே அறிவில்லாத
>>>

எனக்கு கசக்கவும் இல்லை இனிக்கவும் இல்லை... நியாயமா நடங்க. நாத்திகவாதின்னா கடவுளை திட்டுங்க, அல்லது நாங்கள் வணங்குவதை எப்படியும் சொல்லுங்கள் அது உங்களுக்கும் கடவுளுக்கும் உள்ளது... ஏன் எங்களை இழுக்குறீர்கள்??? எவனுக்கு அறிவில்லைன்னு சொல்லுவது நல்லாவா இருக்கு???

கார்த்திக் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வால்பையன் சொன்னது…

முன் போட்ட பின்னுட்டம் என்னுடய பாஸ் அக்கவுண்டில் வந்து விட்டது அதை நீக்கி, அதையே என் பதிலாக எடுத்து கொள்ளவும்!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//இஸ்லாமியனா பொறந்த எவனுக்குமே அறிவில்லாத //அப்படியா????

வால்பையன் சொன்னது…

// எம்.எம்.அப்துல்லா said...

//இஸ்லாமியனா பொறந்த எவனுக்குமே அறிவில்லாத //அப்படியா????//அதை வாபஸ் வாங்கிட்டு பெண்ணடிமை தனத்தை ஆதரிக்கும் எந்த இஸ்லாமியனுக்கும் அறிவில்லை என மாற்றி சொல்லி கொள்கிறேன்!

எங்கள் மனிதருள் மாணிக்கத்தை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை! மாப்பு கேட்டுகிறேன் அண்ணே!

ராஜ நடராஜன் சொன்னது…

ஜாஸ்மின்க்கு வாழ்த்துக்கள்!

குசும்பன் சொன்னது…

Sanjai Gandhi - //இஸ்லாமிய மாணவி//
அந்த மாணவியின் சாதனையை இதைவிட மோசமாக கொச்சைப் படுத்த முடியாது. பூனைக் குட்டியை உள்ள மறைச்சி வைங்க ஆபிசர்..//

சஞ்சயை வழிமொழிகிறேன்..

Barari சொன்னது…

kundu sattikkul kuthirai ottum vaaal paiyan poruththamana varthaikal.

வஜ்ரா சொன்னது…

அந்த கூகிள் ஸ்கிரீன் ஷாட் பக்கா fake.

இதைப் பார்க்கவும்.

நான் இதை வேண்டுமென்றே fake செய்துள்ளேன். islm terror என்று தேடிவிட்டு, அந்த வார்த்தையை search box ல் இருந்து நீக்கிவிட்டு எதைவேண்டுமானாலும் போடலாம்.

வால்பையன் சொன்னது…

/kundu sattikkul kuthirai ottum vaaal paiyan poruththamana varthaikal. //


இதுக்கு ஏன் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்! கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல ஒருத்தருக்கும் வக்கில்ல, இதுக்குய்யா உங்களுகெல்லாம் தாடி, மீசை!, எல்லாத்தையும் வழிச்சிகோங்க!

புருனோ Bruno சொன்னது…

//நீங்கள் சொல்லும் வாதங்களை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் இஸ்லாமிய மாணவி என்று சொல்வதை விட மாநகராட்சிப் பள்ளி மாணவி என்று சொல்வதையே விரும்புவேன். :)
//

அதைத்தான் நானும் விரும்புவேன்

பீர் | Peer சொன்னது…

:)

UFO சொன்னது…

"இஸ்லாமிய மாணவி பத்தாம் வகுப்பில் சாதனை !"

யாராவது ஒரு முஸ்லிம் குண்டு வைத்ததாக பொய்க்குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டாலே எதோ உச்சநீதிமன்றமே தீர்ப்பு சொல்லிவிட்டதுபோல 'இஸ்லாமிய பயங்கரவாதி கைது'... 'இஸ்லாமியதீவிரவாதி பிடிபட்டான்'... என்றெல்லாம் தலைப்புச்செய்தி கூறி/கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு கொக்கரிக்கும் மீடியாக்கள் ஒன்றுகூட இதற்கு இப்படி ஒரு தலைப்பில் செய்தி சொல்லவில்லை. 'அது சரி என்றால் இதுவும் சரிதான்'.

மிகச்சிறப்பான வாதத்துடன் கூடிய இடுகை திரு.கோவிக்கண்ணன்.நன்றி.

இந்த தலைப்புக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார ஹிந்துத்வா வெறியர்களிடமிருந்துதான் எதிர்ப்பு பிச்சு பிடுங்கும் என்று நினைத்திருந்தேன்...அப்படித்தான் நினைத்து பின்னூட்டங்களை படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால், இங்கு முற்போக்கு, நாத்திக கூட்டத்திடம் இருந்துதான் பிரம்மாண்ட வயித்தெரிச்சல்... கடின-தரக்குறைவான-ஆத்திர வாசகங்களாக வெடித்து சிதறி இருக்கின்றன...

பலரின் முகத்திரையை கிழித்து அவர்கள் வேஷத்தை அம்பலப்படுத்த இப்பதிவு துணை நின்று இருக்கிறது...

இன்னும் யார் யாரெல்லாம் வருகிறார்கள் என்று பார்ப்போம்...

அந்த சகோதரி ஜாஸ்மின் செய்த சாதனைகள்:

1- மாநிலத்தில் முதல் மாணவி ஆனது.

2- இதை ஒரு வசதியற்ற ஏழை எளிய குடும்பத்தில் இருந்து பெற்றது.

3- தன் பெற்றோரும் மூத்த சகோதரரும் படிக்காதபோது படிக்காத குடும்பத்தில் இருந்து தனியாளாய் சாதனை நிகழ்த்தியது.

4- இதற்கு எவ்வித டியூஷனும் வைத்துகொள்ளாதது.

5- ஒரு அரசுப்பள்ளியில் படித்து சாதனை புரிந்தது.

6- 'இஸ்லாம் என்றாலே பெண்ணடிமைத்தனம்' என்றும் 'முஸ்லிம்கள் பெண்களை படிக்க வைக்க மாட்டார்கள்' என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் இஸ்லாத்தின் எதிரிகளின் முகத்தில் கறியை பூசி சாதித்தது.

7- பர்தா போட்டாலே அது பெண் முன்னேற்றத்தை தடுக்கும் என்று பிற்போக்கு கருத்தை கூறிய இஸ்லாமிய எதிரிகளின் கரி பூசப்பட்ட மண்டைகளில் 'நச்' என்று கொட்டியது.

8- இஸ்லாமிய பெண்கள் பற்றி இணைய தளங்களில் இஸ்லாம் அல்லாதோரினால் பரப்பப்பட்ட அனைத்தும் பொய்ப்பிரச்சாரம் என்பதை நிரூபித்தது.

9- இப்போது யார் யாருக்கெல்லாம் வயிததெரிச்சல் & யார் யார் எல்லாம் உண்மையிலேயே பென்னடிமைக்காக குரல் கொடுப்பது என்று பிரித்துணர வைத்திருப்பது.

நன்றி சகோதரி... வாழ்த்துக்கள். இதேபோல இரண்டு வருடம் கழித்து மீண்டும் சாதிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இப்படி ஒரு பதிவு போட்டு அதற்கு தக்க தலைப்பிட்டு புரட்சி செய்த புரட்சியாளர் திரு.கோவிக்கன்னனுக்கு மிக்க நன்றி.

smart சொன்னது…

//Swami omkar - தீவிரவாதி என குறிப்பிடும் பொழுது இந்து தீவிரவாதி, முஸ்லீம் தீவிரவாதி என குறிப்பிடுவது முட்டாள் தனம் என கூறும் நீங்கள், மாணவி இஸ்லாமியர் என கூறுவது தகுமா? மதம் மார்க் போடுமா? :) என்ன கொடும கண்ணன் இது :)May 26Sanjai Gandhi - //இஸ்லாமிய மாணவி//
அந்த மாணவியின் சாதனையை இதைவிட மோசமாக கொச்சைப் படுத்த முடியாது. பூனைக் குட்டியை உள்ள மறைச்சி வைங்க ஆபிசர்..May 26
Kesava Bashyam VN - கோவி கண்ணனுக்கு சிறந்த மதவாதி என்ற பட்டம் கொடுக்கலாமா !!!!! கோவி கண்ணன் நீங்கள் ஊருக்கு உபதேசம் செய்பவர் என்று தெள்ள தெளிவாக இதிலிருந்து தெரிகிறது//
சொல்வதை வழி மொழிகிறேன்

smart சொன்னது…

//17 வயதில் திருமணம் என்றால் பெரும்பாலும் +2 படிப்பை தாண்டுவதே இஸ்லாமிய மாணவிகளுக்கு பெரும் அறைகூவல்//
இந்த இடத்தில் அப்படியே இஸ்லாமியரைத் தாக்கி எழுதிவிட்டீர்கள்

தாஜூதீன் சொன்னது…

//இதுக்கு ஏன் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்! கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல ஒருத்தருக்கும் வக்கில்ல, இதுக்குய்யா உங்களுகெல்லாம் தாடி, மீசை!, எல்லாத்தையும் வழிச்சிகோங்க!//

மாதக்கணக்கில் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கிட்டிருக்கீங்க. முதல்ல நிறுத்துங்கள் சகோதரா.

ஏற்கனவே இந்த
http://valpaiyan.blogspot.com/2009/04/family-photo.html

தெளிவான நிறைய நீண்ட விளக்கமளித்த பின்னரும் உங்களுக்கு மட்டும் தெளிவு பெறவில்லை என்பது மிக வேதனை, உங்களுடன் பின்னோட்டமிட்டு நேரத்தை வீணடிக்க விரும்பமில்லை. இருந்தாலும்

//பெண்ணடிமை தனத்தை ஆதரிக்கும் எந்த இஸ்லாமியனுக்கும் அறிவில்லை என மாற்றி சொல்லி கொள்கிறேன்!//

என்று சொல்லியதால் உங்கள் மீது மரியாதை. எந்த வகையான பெண்ணடிமைத்தனத்தை, பெண் இழிவுத்தனத்தையும் ஆதரிப்பவன் எந்த மதத்தை சார்ந்தவனாலும், சாரதவனாலும் அறிவற்ற மனநோயளி என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

நீங்கள் உங்க நார்த்தீகத்தை போதியுங்கள். உங்கள் கொள்கை உங்களுக்கு எங்கள் கொள்கை எங்களுக்கு. விமர்சனம் என்ற பெயரில் தேவையற்ற சண்டை வேண்டாம் சகோதரா.

நாம் அனைத்து சமுதாய மக்களிடமும் நிறைய சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அனைத்து சமுதாயத்தின் நோக்கமும் ஒற்றுமையுடன் இவ்வுலகில் வாழ்வது தான். மனிதர்களின் சுய நலன்களால் வந்ததுதான் இந்த அடிமைத்தனங்கள், மதங்களாலும் கொள்கைகளாலும் அல்ல.

நான் எந்த மதத்தையும், எந்த தனிமனிதனையும் விமர்சிக்கவில்லை, என் கருத்து உங்களை பாதித்திருந்தால் மன்னித்துவிடுங்கள் சகோதரா.

எந்த ஒரு விசையத்தையும் நல்ல விளக்கத்துடன் விசாரித்து தெளிவு பெறுவதே சுயமரியாதைத்தனம். நீங்கள் விரும்பினால் நட்புடன் நாம் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளலாம், நிச்சயம் நமக்கு நல்ல தெளிவு கிடைக்கும். கொஞ்சம் இந்த விரோத போக்கை ஒதுக்கிவைத்துவிட்டு நட்புக்கரம் நீட்ட மாட்டீர்களா சகோதரா?

ஐயா கோவி கண்ணன் கொஞ்சம் எடுத்துச் சொல்லகூடாதா?

சமூக சீரழிவுகளை விரட்டியடிக்க நாம் சபதம் எடுப்போம்.

தொடர்புக்கு tjdn77@gmail.com

கல்வெட்டு சொன்னது…

.
1. பள்ளி மற்றும் மாணவரின் தகவலுடன்:

வெற்றிச் செய்தி

திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.

***

2. அரசுப் பள்ளிக்கூட மாணவி முதலிடம் :
அரசுப் பள்ளி சரியில்லை என்று சொல்பவர்களுக்காக பள்ளியை அரசுப்பள்ளி என்று கட்டம் கட்டிக் காட்ட.

**

3. ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்

ஒரு கூலித் தொழிலாளியின் குழந்தைகூட நினைத்தால் படிக்க முடியும் என்ற பூஸ்ட் அல்லது கூலித் தொழிலாளியின் குழந்தையே படிக்கும்போது நீ ஏண்டா படிக்கல என்று மற்றவர்கள் திட்டு வாங்க‌ :-))

**

4. இஸ்லாமிய மாணவி பத்தாம் வகுப்பில் சாதனை

இஸ்லாமிய மாணவியே அல்லது இஸ்லாமிலும் பெண்கள் படித்து வருகிறார்கள் என்று மதத்தை சிறப்பிக்க அல்லது தூய்மைப்படுத்த‌

***

எல்லாம் சரி இந்தப் பெண் அவருக்காக எந்த அடையாளங்களும் இல்லாமல்

மதம்
தந்தையின் தொழில்
ஏழ்மை
அரசுப்பள்ளி

என்ற அடைமொழியில் அடகுவைத்தே அறியப்பட வேண்டிய தேவை என்ன?

பதில்:
ஒவ்வொன்றும் ஒருவருக்கான அரசியல். இவரை வைத்து பிரகடனப்படுத்தப்படுகிறது. தூதுவர் போல.

**************


"யாரோ ஒரு மொள்ளமாரி செஞ்சதுக்கு எதுக்கு மதத்தை போட்டு விமர்சிக்கிறீர்கள்?" என்று கேட்பது போல "யாரோ ஒரு நல்ல புள்ள படிச்சு வெற்றியடந்தமைக்கு எதுக்கு மதத்துக்கு புகழ்?" என்றும் கேட்கலாம்.எப்படி ஒரு மதம் ஒருவனை குண்டுவைக்க தூண்டுவது இல்லையோ அதுபோல படிக்கவும் தூண்டுவது இல்லை.

மதம் அது சொல்லும் கட்டளைகளைச் செய்தால் சொர்க்கத்தில் என்ன கிடைக்கும் என்று சொல்லும்.

அதைத்தாண்டி ரோட்டில் குப்பை போடாதே, என்னயக்கும்பிட்டாலும் அதற்காக ரோட்டை அடைத்து பந்தல் போடாதே என்றோ, மதப்புத்தகத்தைவிட பாடப்புத்தகம் அவசியம் என்றோ சொல்லாது.

மதத்தின் கவலை மதத்துக்கு.

**

இவர் வளர்ந்து ஒருவேளை மதத்தை விமர்சித்து விட்டால், அந்த நாளில் இவரால் எப்படி அந்த மதத்திற்கு ஒரு கேடும் இல்லை என்று சொல்லப்படுமோ அதுபோல இவர் மதிப்பெண் வாங்கியதில் மதத்திற்கு எந்தப்புகழும் இல்லை.

இறைவனுக்கே புகழ் சேர்க்க மனிதனால் முடியுமா?

இந்தப் புள்ளைய விட்டுவிடுவோம்.

**

மாணவி வெற்றியடைந்துவிட்டார் வாழ்த்துவோம் அவரை. ஏற்கனவே கற்றவர்கள் வழிகாட்டட்டும்.

.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாணவி வெற்றியடைந்துவிட்டார் வாழ்த்துவோம் அவரை. ஏற்கனவே கற்றவர்கள் வழிகாட்டட்டும். //

அதுசரி. பின்புலம் அதனை வெற்றி கொண்டது இவை எல்லாம் தான் சாதனை. படிப்பு இல்லை. படிப்பு அதனை வெற்றி கொள்ளக் கிடைத்த ஒரு கருவி.

ஒரு நரிக்குறவ மாணவி தமிழ்நாட்டில் முதல்மாணவியாக வந்தால் வெறும் பாராட்டுடோடு எல்லோரைப் போல் அவளும் படித்தாள் என்று ஒற்றை வார்த்தையில் வாழ்த்துச் சொல்லி விட்டுவிடுவீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// smart said...

//17 வயதில் திருமணம் என்றால் பெரும்பாலும் +2 படிப்பை தாண்டுவதே இஸ்லாமிய மாணவிகளுக்கு பெரும் அறைகூவல்//
இந்த இடத்தில் அப்படியே இஸ்லாமியரைத் தாக்கி எழுதிவிட்டீர்கள்//

சின்ன வயசிலேர்ந்தே இப்படித்தானா ? போட்டுக் கொடுப்பது உங்களுக்கு நல்லா வருதுன்னு பாராட்ட முடியல ஏனெனில் நான் எதையும் மறைத்து எழுதவில்லை.

வால்பையன் சொன்னது…

//எந்த ஒரு விசையத்தையும் நல்ல விளக்கத்துடன் விசாரித்து தெளிவு பெறுவதே சுயமரியாதைத்தனம். நீங்கள் விரும்பினால் நட்புடன் நாம் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளலாம், நிச்சயம் நமக்கு நல்ல தெளிவு கிடைக்கும். கொஞ்சம் இந்த விரோத போக்கை ஒதுக்கிவைத்துவிட்டு நட்புக்கரம் நீட்ட மாட்டீர்களா சகோதரா?//


உங்க கூட எனக்கு என்ன சண்டை,
உங்களுக்கும் எனக்கு வாய்க்கா, வரப்பு தகராறா?

குரானில் இருந்து நான் கொடுத்த வசனங்களுக்கு பதில் சொல்லாமல் அப்பவே சொல்லியாச்சு, நீண்ட விளக்கமளிச்சான்னுன்னு பூச்சி காட்டாதிங்க!

பர்தா போடுவது அவரவர் தனிபட்ட விருப்பம், ஆனால் அதை மதத்தின் பெயரில் திணிக்ககூடாதுன்னு தான் நானும் சொல்லியிருக்கேன், உங்கள் தெளிவில் தான் எனக்கு சந்தேகமா இருக்கு!

வால்பையன் சொன்னது…

//இஸ்லாம் என்றாலே பெண்ணடிமைத்தனம்' என்றும் 'முஸ்லிம்கள் பெண்களை படிக்க வைக்க மாட்டார்கள்' என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் இஸ்லாத்தின் எதிரிகளின் முகத்தில் கறியை பூசி சாதித்தது.//


புல்லரிக்குது!


இஸ்லாம் என்ன இந்தியாவில் மட்டுமா இருக்கு? இதே சகோதரி வேற ஒரு இஸ்லாமிய நாட்டில் பிறந்தால் என்னாவது நினைத்து பார்க்கவே கொடுமையா இருக்கு!

அய்யா, உங்களை கெஞ்சி மன்றாடி கேட்டு கொள்கிறேன், நான் குரானில் இருந்து கொடுத்திருக்கும் வசனங்களுக்கு மட்டும் அர்த்தம் சொல்லுங்கள், பிறகு கடவுள் மறுப்பாளார்களை சாட வரலாம்!

ஜாஸ்மீன் அல் அமீன் பள்ளியில் படிக்கவில்லை, சகோதரிக்கு பயிற்சி அளித்தது இஸ்லாமிய ஆசிரியர்களும் இல்லை, இங்கே யாருக்கும் மதரீதியான வேறுபாடு இல்லாமல் தான் சகோதரியின் வளர்ச்சி இருந்தது, ஆனால் உங்களுக்கு மட்டும் எப்படி இஸ்லாமிய பெண் என்ற பட்டம் தேவைப்படுகிறது!

இப்பொழுது படிக்கும் இஸ்லாமிய பெண்கலுக்கு இதுவரை என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள் அய்யா, சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்!

கல்வெட்டு சொன்னது…

// கோவி...
அதுசரி. //

கோவி வெளிப்படையாகச் சொல்லுங்கள்... உங்களின் உள்குத்து தெரியாமல் பலர் இங்கே இருக்கிறார்கள்.. :-))))

கோவி...said ..."பின்புலம் அதனை வெற்றி கொண்டது இவை எல்லாம் தான் சாதனை."

Q1: அவர் எந்த பின்புலத்தை வென்றார்? ( மதம்? அல்லது ஏழ்மை?? அல்லது அரசுப்பள்ளி???)

நீங்கள் இஸ்லாமிய மாண‌வி என்று சொல்லி இருப்பதால் மதப் பின்புலத்தை வென்றார் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

Q2: அவரின் இஸ்லாமிய மதப் பின்புலம் ஏன் வெல்லப்பட வேண்டும்?
அவ்வளவு மோசமான‌தா?

Q3: பின்புலம் வெல்லப்பட்டது என்றால் , அவர் அதை எதிர் நீச்சல் போட்டு வென்றுள்ளார். அப்படியானால் அவரின் இஸ்லாமிய மதப் பின்புலம் அவருக்கு தடையாகத் தெரிகிறதா உங்களுக்கு?
(வெளிப்படையான பதில் தேவை)

//படிப்பு அதனை வெற்றி கொள்ளக் கிடைத்த ஒரு கருவி.//

Q4: எதை வெற்றி கொள்ள?

மதம்? அல்லது ஏழ்மை?? அல்லது அரசுப்பள்ளி???

மூன்றும் என்று சொல்லாதீர்கள். அப்படி என்றால் ஏழை அரசுப் பள்ளி இஸ்லாமிய என்று தலைப்பு இருக்க வேண்டும்.//ஒரு நரிக்குறவ மாணவி தமிழ்நாட்டில் முதல்மாணவியாக வந்தால் வெறும் பாராட்டுடோடு எல்லோரைப் போல் அவளும் படித்தாள் என்று ஒற்றை வார்த்தையில் வாழ்த்துச் சொல்லி விட்டுவிடுவீர்களா ?//

அது நான் எடுக்கும் அரசியல் நிலையைச் சார்ந்தது கோவி. நரிக்குறவர்களை பாவப்பட்ட சமுதாயமாகப் பார்த்தால் ..ஆம் அப்படி ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர் வென்று விட்டார் என்று சொல்வேன்.

மதம் அப்படி இல்லை. அது கழட்டி மாட்டிக் கொள்ளும் சட்டை போன்றது.

Q5: ஜாஸ்மின், வெற்றி கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் என்றால் அவர் எதை வெல்கிறார்? மதமா அல்லது ஏழ்மையா?

மதத்தை வெல்ல ஒன்றும் செய்ய வேண்டாம் அதை விட்டு ஒதுங்கினாலே போதும். விரும்பி ஏற்றுக் கொண்டது மதம் அதை ஏன் வெல்ல வேண்டும் , அதில் தவறுகள் உள்ளதா?

.

பரிதி நிலவன் சொன்னது…

தனியார் பள்ளி நிர்வாகிகள் கல்விக் கட்டண வரையறுத்த்லுக்கு எதிராக் போராடும் போது, இந்த கட்டண விகித்தில் நாங்கள் தரமில்லாத அரசு பள்ளிகள் போல்தான் நடத்த வேண்டியிருக்கும் என்று பெற்றோர்களின் ஆதரவை வேண்டினர்.

அதற்கு தனது சாதனை மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஜாஸ்மின்! வாழ்த்துக்கள் சகோதரி.

SARFUDEEN சொன்னது…

கட்டாய திருமணப் பதிவு சட்டத்தைக் கூட அவர்கள் மதக்காரணங்களைச் சுட்டி எதிர்க்கிறார்கள், திருமணம் பதிவு செய்யப்படுவது கட்டாயம் என்றால் பெண்ணுக்கு 18க்கும் குறைவான வயது என்னும் போது சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதே எதிர்ப்புகான முதன்மை காரணம்.

சில அமைப்புகள் எதிர்பு தெரிவித்தார்கள்.ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு அந்த சட்டத்தை வரவேற்று அவர்களின் உணர்வு வார இதழிலும் மற்றும் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியிலும் பேசியதை நீங்கள் பார்க்கவில்லை போலும். வால்பையன் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் இப்போதெல்லாம் அனைத்து துறைகளிலும் மிகவும் சாதனை செய்தே வருகிறார்கள். நான் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாலியும் ஒரு பெண்தான். வியாபார நிமித்தம் பல நாடுகளுக்கு சென்று வருவதை இன்றும் பார்த்துதான் வருகிறேன். வால் அவர்கள் இன்னும் பழைய காலத்தில் உள்ளதையே எழுதுகிறார். கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடந்த அறிவியல் ஆராய்சியாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட 12 பெண்களில் நான்கு இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு ஆராச்சிகளுக்கான முதல் பரிசு உட்பட பல பரிசுகளை வென்றதை அறிந்திருக்கலாம்.

வால்பையன் சொன்னது…

விதிவிலக்குகளை பற்றி பேசி காலம் தள்ளாதீர்கள்!

நான் கொடுத்துள்ள வசனம் குரானில் தானே உள்ளது, அதற்கு அர்த்தம் என்ன?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்