பின்பற்றுபவர்கள்

13 மே, 2010

கலவை 13 மே 2010 !

முன்குறிப்பு : இங்கே எழுதி இருப்பதில் 50 விழுக்காடு ஏற்கனவே கூகுள் Buzz ல் போட்டுவிட்டிருக்கிறேன்

கெளரவம் : வரும் 16 ஆம் தேதி அட்சய திருதியையாம், சிங்கையிலும் கவர்சிகரமான விளம்பரங்களுடன் களை கட்டி இருக்கிறது விற்பனை. அட்சய திருதியைக்கு நகை வாங்குவது அதிர்ஷ்டம் என்கிற நம்பிக்கைப் போய் கவுரவம் என்ற நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அன்னிக்கு நகைவாங்கினோம் என்று வெளியே சொல்வதே பெருமை அதாவது 'நாங்க ஒன்றும் அன்றாடம் காய்சி இல்லை' என்று (உறவுக்காரர்கள் தவிர்த்து) அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் மறைமுகமாக தெரிவிக்கும் ஒரு நிகழ்வாக இந்த அட்சய திரிதியை வந்து செல்கிறது. பணம் கையிருப்பில் இல்லாதவர்கள் கூட கடனட்டை வழியாக வாங்குவது என்ற முடிவில் இருக்கிறார்கள் என்பதை அன்று ஏதேனும் ஒரு நகைக்கடைக்குச் சென்றால் தெரிந்து கொள்ளலாம்.

வளைகுடாவை கைகழுவுமா (வட) அமெரிக்கா ? : தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் மிகுதியான அளவில் (எரி) எண்ணை வளம் (4.5 billion barrels of oil) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். எதிர்காலத்தில் பிரேசில் நாடு உலகில் முன்னனி எண்ணை ஏற்றுமதி நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது தாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வளைகுடாவின் எண்ணை வளத்திற்காக அந்தப் பகுதிகளில் பார்வை பதித்து வைத்திருக்கும் அமெரிக்கா இனி தனக்கு பக்கத்திலேயே உள்ள நாட்டிற்கு பார்வையை திருப்பிவிடும். பிரேசில் எண்ணை ஏற்றுமதி செய்தால் போட்டித்தன்மை காரணமாக எண்ணை விலைகள் குறைய வாய்ப்புள்ளது, அதன் தொடர்பில் இன்றியமையாத பொருள்களின் விலை ஏற்றங்கள் குறைந்து, உலக அளவில் ஏழைகள் பயன்பெறுவார்கள் என்று நினைக்கிறேன்.

திருமணக் கூத்து : 'பைத்தியம் முற்றினால் பாயை பிரண்டுவார்கள்' என்பது சொல்வழக்கு, கொரியர் ஒருவர் தன்னுடைய தலையணையை நேசித்து தலையணையையே திருமணம் செய்து கொண்டிருக்கிறாராம். திருமணம் என்னும் சடங்கை கேலிக் கூத்து ஆக்கும் நிகழ்வுகள் உலகம் எங்கும் நடந்து வருவது தான். நம்ம ஊரில் நாயை திருமணம் செய்த நபர் உண்டு, சாதக தோசம், இரண்டாம் தாரம் வரும் என்கிற பயத்தில் வாழைமரத்திற்கு தாலிக் கட்டச் சொல்லும் மூட நம்பிக்கை வழக்கம், இவை எல்லாம் வெவ்வேறு தளத்தில் திருமணங்களை கேலி செய்து தான் வருகின்றன.

தனலட்சுமியா ? --- தைரியலட்சுமியா :
சிங்கையில் தமிழ் அமைப்பு ஒன்று மனிதனுக்கு தேவை தனலட்சுமியா ? --- தைரியலட்சுமியா ? என்ற தலைப்பில் (கோவில் ஒன்றில்) பட்டிமன்றம் நடத்துகிறார்கள். வர்றலட்சுமி எந்த லட்சுமியாக இருந்தால் என்ன சிவகாசி ஜெயலட்சுமியாக இல்லாமல் இருந்தால் போதாதா ? இது போன்ற அபத்தமான தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்துவதால் இலக்கியம் வளருமா ? பட்டிமன்றம் என்பதன் தனித்தன்மை போய்விடும் என்று நினைக்கிறேன். கோவிலில் நடத்த பட்டிமன்றத்திற்கான அருமையான தலைப்புகள், 'முதலில் ஒழிக்கப் பட வேண்டியது போலி ஆன்மிகமா ? போலி சாமியார்களா ? கடவுளின் போலி முகவர்களா ?' இப்படி ஏதேனும் நடத்தினாலும் ஆன்மிகம் என்கிற ஒன்று விற்பனைப் பொருளாக மாறிக் கொண்டிருப்பதைக் தடுக்கலாம். எப்படியும் பட்டிமன்ற தீர்ப்பாயர் மனிதனுக்கு தேவை தனலட்சுமி மற்றும் தைரியலட்சுமி இரண்டுமே தேவை என்று சொல்லிவிடப் போகிறார்.

********
மாவட்டம் : நம்ம கட்சியில் நிதிப் பறறாக் குறைன்னு நினைக்கிறேன்

வட்டம் : ஏன் ?

மாவட்டம் : நம்ம கட்சியின் தலைமைகள் கூடி, வழக்கமாக பெரிய சோதிடர்களை வைத்து எந்தந்தக் கட்சிகளைக் கூட்டணிக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை நடத்தும், இந்த முறை கூட்டணிக்கு சின்ன சின்ன கட்சிகளே இணங்குவதால் கிளிசோசியம் பார்த்தாலே போதும் என்று முடிவு செய்துவிட்டார்களாம்.

9 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

கிளி ஜோசியம் விஷயத்தைப் பார்த்து நான் உரக்க சிரித்து வைக்க, என் வீட்டம்மா வந்து சிறிது நேரம் வெறித்துப் பார்த்து விட்டு, பக்கத்திலுள்ள உழவர் சந்தைக்குப் போய் உருப்படியாக ஏதேனும் கறிகாய் வாங்கி வருமாறு பணித்ததால் இப்பின்னூட்டத்தை இத்துடன் முடிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

// dondu(#11168674346665545885) said...

கிளி ஜோசியம் விஷயத்தைப் பார்த்து நான் உரக்க சிரித்து வைக்க,//

மிக்க நன்றி !

// என் வீட்டம்மா வந்து சிறிது நேரம் வெறித்துப் பார்த்து விட்டு, பக்கத்திலுள்ள உழவர் சந்தைக்குப் போய் உருப்படியாக ஏதேனும் கறிகாய் வாங்கி வருமாறு பணித்ததால் இப்பின்னூட்டத்தை இத்துடன் முடிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

உங்க வீட்டுக்கு பக்கத்து உழவர் சந்தையில் பன்றி இறைச்சி விற்குமா ? அப்படியே கிலோ என்ன விலை என்று பார்த்துவாருங்க. தமிழ் ஹிந்து தளத்தில் பன்றி இறைச்சி புகழ்பாடி இருப்பதால் விற்பனை மற்றும் விலை கூடி இருக்கான்னு தெரிஞ்சுக்கனும் நான்

dondu(#11168674346665545885) சொன்னது…

எங்களூர் உழவர் சந்தைக்கு இடமளித்தது ஹிந்து காலனி மேனேஜ்மெண்ட். பிள்ளையார் கோவிலை ஒட்டிய இடம், பஸ் டெர்மினசுக்காக முதலில் தந்திருக்கிறார்கள்.

அதில் பாதியை உழவர் சந்தைக்கு தர போட்ட முதல் கண்டிஷனே கவுச்சி விற்கக்கூடாது என்பதுதான். ஆகவே இந்த மார்க்கெட்டில் வெறும் கறிகாய் மற்றும் பழங்கள்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

// dondu(#11168674346665545885) said...

எங்களூர் உழவர் சந்தைக்கு இடமளித்தது ஹிந்து காலனி மேனேஜ்மெண்ட். பிள்ளையார் கோவிலை ஒட்டிய இடம், பஸ் டெர்மினசுக்காக முதலில் தந்திருக்கிறார்கள்.

அதில் பாதியை உழவர் சந்தைக்கு தர போட்ட முதல் கண்டிஷனே கவுச்சி விற்கக்கூடாது என்பதுதான். ஆகவே இந்த மார்க்கெட்டில் வெறும் கறிகாய் மற்றும் பழங்கள்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

தகவலுக்கு நன்றி. ஹிந்து காலனி மேனேஜ்மெண்ட் ஓரவஞ்சனை, ஹிந்துக்களில் சைவர்கள் மட்டுமே சமைக்க வேண்டும் என்று சிலருக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டிருக்கின்றனர். அப்ப தமிழ் ஹிந்து தள பரிந்துரைப்படி உங்கப் பகுதி மக்கள் பன்றி இறைச்சியை சுவைக்க வேற இடத்தில் இருந்து தான் வாங்க வேண்டும் போல. கஷ்டம் சார்.

dondu(#11168674346665545885) சொன்னது…

நங்கநல்லூரில் நிலத்தின் விலை தெரியுமல்லவா? அதை தரும்போது இம்மாதிரி சில க்ண்டிஷன்களும் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே.

நீங்கள் சொல்வது போல யாரும் இங்கு அதை ஓரவஞ்சனையாக பார்க்கவில்லை, காரணம், இது கோயிலுக்கு உடனடி பக்கத்தில் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

// dondu(#11168674346665545885) said...

நங்கநல்லூரில் நிலத்தின் விலை தெரியுமல்லவா? அதை தரும்போது இம்மாதிரி சில க்ண்டிஷன்களும் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே.

நீங்கள் சொல்வது போல யாரும் இங்கு அதை ஓரவஞ்சனையாக பார்க்கவில்லை, காரணம், இது கோயிலுக்கு உடனடி பக்கத்தில் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அமினிட்டீஸ் எனப்படும் சந்தைகள், பொது வசதிகள் ஓர் இடத்தில் இருந்தால் தான் அந்தப் பகுதியின் நில மதிப்பும் வீட்டு மதிப்பும் கூடும், உழவர் சந்தைக்கு நிலம் இலவசமாகக் கொடுக்காவிட்டால் அந்தப் பகுதியின் மனைகள் விற்பனை மற்றும் வீட்டு மதிப்பு உயராது. நான் அதை தவறு என்று சொல்லவில்லை, செயற்கரிய செயல் செயததாக பாராட்ட எதுவும் இல்லை. இருந்தாலும் கண்டிசன்ஸ் ஓவர் தான். கோழி முட்டையாவது கிடைக்குமா ? இல்லாட்டி பார்பனர் உட்பட எல்லோருக்கும் கஷ்டம் தான்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அண்ணே பிரேசிலில் எண்ணைய்வளம் இருக்கிறதா.. அப்ப விலைவாசி குறையுமா.. ரொம்ப சந்தோசமான தகவலா இருக்கே..

rajeshsubbu சொன்னது…

அட்சய திருதியை இந்தியாவிலும் களை கட்டி உள்ளது. என்ன செய்வது பெரியார் இல்லை.

Dr.P.Kandaswamy சொன்னது…

ஆஜர் போட்டுக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்