எங்கள் மதத்தில் அற்புதங்கள் நிறைந்தது என்று சொல்வதில் எந்த ஒரு மதமும் விதிவிலக்கு இல்லை. இத்தகைய அற்புதம் குறித்த நம்பிக்கை மதங்களின் கூறுகள் என்றாலும் அதையும் தாண்டி தெய்வீகத் தன்மை என்பதை நிருபனம் செய்ய 'இயற்கையை வென்று அல்லது கட்டுப்படுத்திக் காட்டுவதால்' முடியும் என்று மதவாதிகள் நம்புகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு அறியாமலேயே செயலாக இருப்பவர்கள் மதம் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லாமல் விருப்ப தெய்வத்த்தை விரும்பிய படி வழிபடும் படித்த மற்றும் பாமரமக்கள்.
அலகு குத்துதல், தீ மிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல், மண்ணுக்குள் புதைத்து எழுப்பது, நடை பயணம் என உடலை வருத்திக் கொள்ளும் வேண்டுதல்களை மதம் சார்ந்த நம்பிக்கையாகப் பார்ப்பதும் பரப்புவதும் மதவாதிகளின் வேலை.

பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் முறையில் தீயை எப்படி கையாளுவது என்கிற செய்முறை விளக்கம் தீ மிதி போன்ற 'ஹிந்து' நம்பிக்கைகளை கேலி செய்கிறதாம், இந்து மதம் அவமானப்படுத்தப்படுகிறதாம், ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?
இந்த நாட்டில் மண்ணின் மைந்தர்களை பிறப்பு வழியாக அடையாளம் காண்வது தொடர்வதும், அவர்களை குறிப்பிடும் விதமாக 'தலித்' என்கிற சொல் வழங்கப்படுவதுடன், அவர்களை பல்வேறு வகைகளில் புறக்கணிப்பதிலும், அவமானப்படுத்துவதையும் கண்டு கொள்ளாது (அவரவர் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என )ஆசிர்வதிக்கும் இந்து மதம் தீ மிதி குறித்த செய்முறை விளக்கத்தால் அவமானம் அடைகிறது என்று கவலை கொள்ளும் உணர்ச்சித் தூண்டல் ஏமாற்றுப் பேர்வழிகளை எதால் அடிக்கலாம் ?
18 கருத்துகள்:
உங்கள் பதிவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் இருக்கு....!
படத்தில் இருக்கும் லிங்கம் நர்மதா நதியில் கிடைக்கும் பாண லிங்கம்.
இதை யாரும் வாயிலிருந்து எடுக்கமாட்டார்கள். காரணம் இது இயற்கையா கிடைக்கும்.
சம்பந்தம் இல்லாத படம் போட்டு பதிவு எழுதியதால்
இதை கண்டித்து பதிவிலிருந்து வெளியேறுகிறேன்.
//படத்தில் இருக்கும் லிங்கம் நர்மதா நதியில் கிடைக்கும் பாண லிங்கம்.
இதை யாரும் வாயிலிருந்து எடுக்கமாட்டார்கள். காரணம் இது இயற்கையா கிடைக்கும்.//
பிரபல (சாயாத) பாபா இந்த(மாதிரி) லிங்கங்களைத்தான் வாந்தியாக எடுக்கிறார்.
//சம்பந்தம் இல்லாத படம் போட்டு பதிவு எழுதியதால்
இதை கண்டித்து பதிவிலிருந்து வெளியேறுகிறேன்.//
சம்பந்தம் இல்லையா ? இறை அற்புதம் என்று பரப்புவது யாவும் பிராடுதனம் என்பதை தொடர்பு படுத்தும் படம் அது.
:)
Indian Levitation trick revealed- நல்ல வீடியோ. போலிகள் இது போல பல ட்ரிக் செய்து ஏமாற்றுகிறார்கள். ஆன்மீக துறை கணக்கில் அடங்கா போலிகள் கொண்டது.
ஆனால் அதற்காக பழங்காலத்தில் யோகிகள் இது போல நிஜத்தில் செய்திருக்கவே முடியாது என்று என்னவும் தேவை இல்லை.
Art of Living போன்ற பயிற்சிகளுக்கு செல்லும் நண்பர்கள் பிரானாயாமம் செய்வதன் மூலம் நல்ல எனர்ஜி கிடப்பதுடன் சாப்பாட்டு அளவையும் எளிதாகக் குறைக்க முடியும் என்கிறார்கள்.
//Art of Living போன்ற பயிற்சிகளுக்கு செல்லும் நண்பர்கள் பிரானாயாமம் செய்வதன் மூலம் நல்ல எனர்ஜி கிடப்பதுடன் சாப்பாட்டு அளவையும் எளிதாகக் குறைக்க முடியும் என்கிறார்கள்.//
அதுபற்றி நித்தி நிறைய புத்தகம் (அவர் பெயரில் பிறரால் எழுதப்பட்டது) எழுதியதாக வெளியாகி இருந்தது.
//இந்து மதம் அவமானப்படுத்தப்படுகிறதாம், ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?
இந்த நாட்டில் மண்ணின் மைந்தர்களை பிறப்பு வழியாக அடையாளம் காண்வது தொடர்வதும், அவர்களை குறிப்பிடும் விதமாக 'தலித்' என்கிற சொல் வழங்கப்படுவதுடன், அவர்களை பல்வேறு வகைகளில் புறக்கணிப்பதிலும், அவமானப்படுத்துவதையும் கண்டு கொள்ளாது (அவரவர் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என )ஆசிர்வதிக்கும் இந்து மதம் தீ மிதி குறித்த செய்முறை விளக்கத்தால் அவமானம் அடைகிறது என்று கவலை கொள்ளும் உணர்ச்சித் தூண்டல் ஏமாற்றுப் பேர்வழிகளை எதால் அடிக்கலாம் ?//
ஆழமான கருத்துக்கள். இவர்களை புறம்தள்ளுங்கள் கண்ணன்
//அவர்களை குறிப்பிடும் விதமாக 'தலித்' என்கிற சொல் வழங்கப்படுவதுடன், //
'தலித்’ என்ற சொல் மராத்தி மொழி. இந்து மதத்தில் ஒடுக்கப்பட்டோர், அல்லது தாழ்த்தப்பட்டோரை, காந்தி அரிசனங்கள் என்றார். ஆனால், தாழ்த்தப்பட்டோர் அச்சொல்லை நிராகரித்தனர். காரணம்: காந்தி வருணாஷ்ரமக்கொள்கையை ஏற்றுக்கொண்டே தீண்டாமையை எதிர்த்தவர் என்பதால், பாரதியைப்போல.
எனவே மகாராஷ்ட்ராவில தாழ்த்தப்பட்டோர் தம்மை ‘தலித்து’ என்றழைத்துக்கொண்டனர். பிறர் அப்படி அழைக்கவில்லை.
இங்கு ஒரு நுண்ணிய அரசியலுமுண்டு: தலித்து என்பது ஒடுக்கப்பட்டவன். அவன் எம்மத்தத்தையும் சேர்ந்தவனாகயிருப்பினும். In other words, the word is persons-centric; not religion-centric.
எனவே, சீக்கியர்களிடமும் தலித்துகள் உண்டு. கிருத்துவர்களிடமும் உண்டு.
‘அத்தொழில்களைச்’ செய்யும் அனைவரும் தலித்துகளே.
இப்படி மத்த்தை உதாசீனம் செய்வதால்,
பூஜயசிரி ஜெயெந்திர சுவாமிகள் ஒருமுறை சொன்னாரகள்:
‘தலித்து என்று உன்னையழைத்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழையாதே.
அரிசனன் என்று சொல்லி வா, உனக்கு கோயில் சாமி எல்லாமுண்டு’
சரிதானே?
சுவாமிகள் எதைச்சொன்னாலும் சரியாகத்தான் சொல்வார். அவர் தலித்துகளைப்போற்றுபவர் என்பதை இப்பதிவாளருக்கு நினைவுபடுத்துவது என் தெய்வீககடமையாகும்.
நன்றி.
http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_07.html
பிராமனர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தான் 99% இந்துக்கள் வேதம் படிக்காமலே (அதற்க்கு நாம் தகுதியற்றவன்) காலத்தை வீணடித்து உண்மை இறைவனை அறியாமையிலே இறந்து விடுகிறார்கள். பாவம்.
வேதம் படித்து சத்தியத்தை உணர்ந்த பண்டிட் வேத் பிரகாஷ். அவரின் ஆய்வரிக்கை
உண்மையை உணர்வோம் கிளிக்
http://nouralislam.org/tamil/islamkalvi/religions/islam_hindu_comparision_01.htm
comments : alquran54.17@gmail.com
// Abdul said...
பிராமனர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தான் 99% இந்துக்கள் வேதம் படிக்காமலே (அதற்க்கு நாம் தகுதியற்றவன்) காலத்தை வீணடித்து உண்மை இறைவனை அறியாமையிலே இறந்து விடுகிறார்கள். பாவம்.
வேதம் படித்து சத்தியத்தை உணர்ந்த பண்டிட் வேத் பிரகாஷ். அவரின் ஆய்வரிக்கை
உண்மையை உணர்வோம் கிளிக்
http://nouralislam.org/tamil/islamkalvi/religions/islam_hindu_comparision_01.htm
comments : alquran54.17@gmail.com//
கிடக்கிறவ கிடக்கா கிழவியைத் தூக்கி மனையில் வைங்கிற பழமொழி தான் நினைவு வருகிறது. உண்மையான இஸ்லாம் எது பொய்யான் இஸ்லாம் எது என்பதை தீவிரவாதம் செய்யும், தீவிரவாத பயிற்சியில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு சொல்லாமே சார்.
எல்லாம் சிட்டுக்குருவி லேகிய மோசடி பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒட்டகப்பாலில் காபிப் போடலாம் தெரியுமாங்கிற மாதிரி குறிக்கிடுறிங்க.
நல்ல நகைச்சுவைப் பதிவு
யாசவி,
நன்றி !
//தனி காட்டு ராஜா said...
http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_07.html//
இதற்கும் இடுகைக்கும் என்ன தொடர்பு என்று தெரியல. நன்றி!
//smart said...
நல்ல நகைச்சுவைப் பதிவு//
நன்றி
அமலராயன் சார்,
நன்றி !
இந்து மதம் அவமானப்படுத்தப்படுகிறதாம், ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?
////////////
உண்மைய சொன்னா எரியுது
//ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?//
நியாயமான கேள்வி.
இதற்கு என்னுடைய பதில், இந்து மதம் எதனாலும் அவமானம் அடைவதில்லை, அவமானப்படுத்தவும் முடியாது என்பதுதான்.
சில பலஹீனமான தனி நபர்கள் செய்கிற தவறுகள் மதத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.
http://kgjawarlal.wordpress.com
//சம்பந்தம் இல்லையா ? இறை அற்புதம் என்று பரப்புவது யாவும் பிராடுதனம் என்பதை தொடர்பு படுத்தும் படம் அது.
:)//
சேம் பிளட்!
எனக்கும் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை இந்த ஸோ கால்ட் அற்புதங்களில் கிடையாது.
நிஜமான ஞானிகள் யாரும் இந்த மாதிரி ஜாலவித்தைகள் செய்ததில்லை.
http://kgjawarlal.wordpress.com
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
PART-1 Click here
PART-2 Click here
PART-3 Click here
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
கருத்துரையிடுக