பின்பற்றுபவர்கள்

31 மே, 2010

வீரமணி ஐயா... நாத்திகம் என்பது மதமா ?

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் - கி.வீரமணி

ஐயா வீரமணி அவர்களே, திராவிடம் என்ற சொல்லை தமிழன் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளாத போது 'திராவிடத்தை' முற்றிலுமாக ஒழித்துவிட்டு தமிழன் என்றே போடலாமே. பழந்தமிழகத்தில் ஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்பதாக ஏசும் சொல்லாக புழங்கப்பட்ட தமிழர் நிலம் சார்ந்த சொல்லாக, மறைமுகமாக புழங்கிய சொல், தென்னிந்திய அரசியல் முன்னெடுப்பு மற்றும் பார்பனிய சித்தாந்தங்களின் எதிர்ப்பு என்பதாக அயோத்திதாசப் பண்டிதரால் 'திராவிட' என்னும் சொல் அரசியல் களத்தில் தென்னிந்திய நிலம் சார்ந்த அரசியல் சொல்லாக பரிந்துரைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பெரியார் அந்த சொல்லை அரசியலில் பொதுப்படுத்தி திராவிட இயக்கம் கண்டார். இயக்கங்கள் கொள்கைகளை காற்றில் (விற்று) விட்டு பரிணாமம் கண்டு, மன்னர் ஆட்சி அடிப்படையில் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்பதற்கு உங்கள் தலைமையிலான திக உட்பட தங்களுக்கு பின்னால் தங்கள் மகன் என்பதாக வாரிசு உடைமை ஆக்கிவிட்டன. இதில் எங்கே இருக்கிறது திராவிடம் ?

மேலும் மதம் என்பதில் நாத்திகன் என்று போடச் சொல்லுகிறீர்கள். நாத்திகம் என்பது மதமா ? அப்படி என்றால் அதனை உருவாக்கிய இறைத் தூதர் யார் ? நாத்திகத்தை மதம் என்று ஏற்க ஆக்கிய ஆசான் வேண்டும் என்பது பொதுவாதம்.
ஏற்கனவே ஏகப்பட்ட மதங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் புதிய மதமாக நாத்திகத்தை நுழைக்கும் நீங்கள் தான் நாத்திக மத நிறுவனரா ?

பெரியார் கொள்கையில் சுயமரியாதை, பெண்ணுரிமை, வாரிசு அரசியல், ஊழல் எதிர்ப்பு, தமிழர் நலன் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஒப்புக்காக பார்பன எதிர்ப்பையும் நாத்திகவாதத்தையும் பிடித்துக் கொண்டிருக்கும் தாங்கள், திராவிட அரசியல் என்றும் நாத்திகம் என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்பது விளங்கவில்லை. உங்களாவது விளங்கியதா ?

பெரியார் நாத்திகத்தை முன்னிருத்தி இருந்தால் அவர் பக்கத்தில் குன்றக்குடி அடிகளார் இருந்திருக்கமாட்டார். பெரியார் நாத்திகம் என்ற பெயரில் செய்தது மூட நம்பிக்கை மறுப்பு. பார்பன எதிர்ப்பு என்ற பெயரில் பழமை வாத எதிர்ப்பு. வருண வாதிகளின் ஆதரவுகளுடன் இருந்த மன்னர் ஆட்சிகளின் பரிணாமம் போல் இன்றைய வாரிசு அரசியலுக்கு சாமரம் வீசுபவரான தாங்கள் திராவிடம், நாத்திகம் என்றெல்லாம் பிதற்றுவது நகைப்புகிடமாக இருக்கிறது. பெரியாரை சாமியாக்கவும் பெரியாரின் கொள்கைகளை நாத்திக மதம் என்பதாக்கவும் பார்பனர்கள் தேவை இல்லை, அந்தப் பணியை தாங்களே சிறப்பாக செய்கிறீர்கள்.

தமிழன் திராவிடன் என்று சொல்ல தாங்கள் முன்வைக்கும் நிலம் சார்ந்த அரசியல் என்ன ? மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்று குறிக்க.... நாத்திகம் என்பது ஒரு மதமா ? இன உணர்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்கிறீர்கள். இன உணர்வாளர்கள் யார் ? முள்ளிவாய்க்காலில் வாய்கரிசி போட்டவர்களா ?

இனம் என்ற இடத்தில் 'தமிழன்' என்று சொல்லோ, மதமற்றவன் என்ற சொல் நாத்திகன் என்ற பொருளில் வராது. மதம் என்ற இடத்தில் 'மதம் சாராதவன்/மதமற்றவன்' என்ற சொல்லோ போடலாம் என்று சொல்லமுடியாமல் உங்களை தடுப்பது எது ?

29 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இதை வாசியுங்கள்.

http://tamilnerrupu.blogspot.com/2010/05/blog-post.html

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வீரமணி போன்ற கல்லாப்பெட்டி காவலர்களுக்கு இப்படி ஒரு நீண்ட பதிவு தேவை இல்லை.

//இனம் என்ற இடத்தில் 'தமிழன்' என்று சொல்லோ, மதம் என்ற இடத்தில் 'மதம் சாராதவன்' என்ற சொல்லோ போடலாம் என்று சொல்லமுடியாமல் உங்களை தடுப்பது எது ?..

எல்லாம் சுயக்காதல்தான் இப்படி அறிவில்லாமல் பேச வைக்கிறது.

இதனை ஒரு முஸ்லிமிடம் போய் சொல்ல சொல்லுங்கள் வீரமணியை. இவனெல்லாம் ஒரு மனிதன் அவனுகென்று ஒரு பதிவு. உண்மையில் இவர்களை விட நம்மிடம் உள்ள உணர்வுகள் போதும். நாடு கடத்தவேண்டும் இந்த பொய்யர்களை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வீரமணி ஐயாவ லூசுல விடுங்க பாசு!

என்பதுகளோடு அவரது சொல் எடுபடாமல் போய்விட்டது!

தமிழரைப் பத்தி பேசுனா வாய் குழறும் மாமி.வீரமணி ஐயா! திராவிடர் யார் என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு இதை அறிவிக்க வேண்டும், சொம்ப கீழ வச்சிட்டு தான்!

தனி காட்டு ராஜா சொன்னது…

//நாத்திகம் என்பது மதமா ?//

புத்தர் கடவுளை பத்தி யாரவது கேட்டா ..எதுவும் பேச மாட்டாராம் ....அப்படியே பேசினாலும் .."அனாத்மா" "கடவுள் கிடையாது,வெறும் சூன்யம்" -னு சொல்லுவாராம் ...
அப்புறம் புத்தர் போன பிறகு ,500 வருஷம் கழிச்சு கொஞ்சம் கொஞ்சமா புத்தருக்கு சிலை வைக்க ஆரம்பிசாகலம் ......
இப்ப புத்தரும் ஒரு கடவுள் ...
அவர பல நாட்டு மக்கள் கடவுளா பாக்கறாங்க...

இது எப்படி இருக்கு ..?

இன்னும் பத்து வருஷம் கழித்து

//மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் - கி.வீரமணி//

பதிவுலக தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் "Google" ,மதம் என்ற இடத்தில் " பிளாக்கர்" -என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என வலை பகுத்தறிவாளர்கள், வலை இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் - கோவி .கண்ணன் .

இப்படி ஒரு அறிக்கை வரும்-னு நாஸ்டர் டாமஸ் புத்தகத்துல படிச்சேன் ....

ஜோதிஜி சொன்னது…

அர்த்தமுள்ள அவஸ்யமான புரிதலுடன் கூடிய பதிவு.

insight சொன்னது…

ஏங்க காமடி பீஸ் கிட்ட போய் கேள்வி கேக்கறிங்க ?.. அவங்களை பொறுத்த வரை மத மறுப்பு என்பது இந்து மதத்தை எதிர்ப்பது நாத்திகம் என்பது இந்து மதத்திற்கு மட்டும் எதிராக பேசுவது . தமிழன் திராவிடன் என்பது புலிகளின் அட்டகாசங்களுக்கு வக்காலத்து வாங்குபவன் . இவங்க கிட்ட இப்படி நியாயமான கேள்வி கேட்டா எப்படி ?.. செல்லாது செல்லாது இந்த கேள்வி செல்லாது .

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழன் திராவிடன் என்பது புலிகளின் அட்டகாசங்களுக்கு வக்காலத்து வாங்குபவன் //

சந்தடி சாக்குல சிந்தா ? இன்னும் ஒழிக்க ஈழத்தமிழர்கள் ஏதலிகளாக இராமேஸ்வரம் முகாம்களில் இருக்கிறார்கள் என்கிற ஆதங்கமா ? அவர்களையும் புலின்னு போட்டு கொடுங்கய்யா.

பெயரில்லா சொன்னது…

First a request:

நான் பின்னூட்டமிட்டால், அதைப்பற்றி மட்டும் பேசுங்கள். என் கிருத்துவப்பெயரை வைத்து வாத்தத்தை திசை திருப்பாதீர்கள்.

‘பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக்கொள்கிறோம்’ என்பதுதான் அறிக்கை.

அவர்கள் ஆர்? அவரின் கணிப்பின்படி ஆரோ அதே.

உங்களுக்கு ஏன் நமைச்சல்?

மதம் - என்ற காலத்தில் (column) பள்ளியில் சேரும்போது, நாத்திகர் என்று எழுதும்போது, அதற்கு மதத்திற்குப்பதிலாக, நாத்திகம் என்பது ஒரு மதம் எனச்சொல்வது சரியா? மதங்களில் நம்பிக்கையில்லாதவர்களில் கூட்டத்தைச்சேர்ந்தவர்கள் நாங்கள் எனவும் பொருளெடுக்கலாம்.

தனியே வேறு காலம் இருக்கவேண்டும். மதம் - இங்கு உங்கள் மதத்தைக் குறிப்பிடவேண்டும்.
அடுத்தகாலத்தில், இங்கு மதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் தங்களை அவவாறே (Non-believer) குறிப்பிட்டுக்கொள்ளலாம், என்று இருக்கவேண்டும்.

வைத்தீர்களா? இல்லை. அப்படியிருக்கும் போது நான் என்னை வெளிப்படுத்திக்கொள்வது எப்படி?

எப்படி மக்கள் தொகை கணிப்பு, மதம் சார்ந்தவர்களை கணக்கிலெடுத்துவிட்டு, இறை நம்பிக்கை இல்லாதவர்களை புறக்கணிக்கிறது?

மதம் சார்ந்தவர்கள் மட்டும்தானா மக்கள்? இந்தியர்கள்?

நாத்திகர்கள் மக்கள் இல்லயா?

எங்கே ஜனநாயக உரிமை அவர்களுக்கு?

முதலில் அதைக்கொடுத்துவிட்ட அப்புறம், நாத்த்கம் என்று ஏன் மதம் என்ற காலத்தில் எழுதுகிறாய என கிண்டல்டிக்க்லாம்?

பெயரில்லா சொன்னது…

//'திராவிட சிசு' என்பதாக ஏசும் சொல்லாக புழங்கப்பட்ட தமிழர் ...//

எங்கே தமிழ் படித்தீர்கள்? சகட்டு மேனிக்கு எழுதிகிறீர்களே/

ஆர் உங்களுக்குச் சொன்னது, சங்கரை சம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று ஏசும் தொனியில் சொன்னாரென்று?

ஏன், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ‘திராவிட வேதம்’ என்றுதான் திருநாமம்.

கிண்டலா? சொல்லிப்பாருங்கள். உங்களை வறுத்தெடுத்துவிடுவார்கள் இராமானுஜர் ஆட்கள்.

திருநாமமிட்டு அழைத்தவர் இராமானுஜரே.

இன்றும் நாலாயிரத்திவ்ய பிரபந்தம், ‘திராவிட வேதம்’ என்றே பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

சிறுமையாகல்ல!

‘திராவிடம்’ என்ற சொல் அரசியலாக்கப்பட்டு ஆதாயம் தேடப்படுகிறது என்பது உண்மையே.

அதற்காக...அச்சொல்லுக்கு இல்லாத பொருளை கொடுப்பதா?

அரசியல் வாதியின் வேலை உங்களுக்கு எதற்கு?

பெயரில்லா சொன்னது…

//பெரியார் நாத்திகத்தை முன்னிருத்தி இருந்தால் //

முன்னிருத்தல் வேறே...கொள்கை வேறே.

பெரியார் சொற்றொடர்:

‘கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளைப்படைத்தவன் முட்டாள். நம்புகிறவன் காட்டுமிராண்டி”

இதை எதிர்கொள்ளுங்கள்.

இது என்ன? கடவுள் மறுப்பு. இதுவே நாத்திகம்.

இதைத்தான் பெரியார் திடமாக நம்பினார்.

இதைத் திரிக்காதீர்கள்.

பெயரில்லா சொன்னது…

//இனம் என்ற இடத்தில் 'தமிழன்' என்று சொல்லோ, மதம் என்ற இடத்தில் 'மதம் சாராதவன்' என்ற சொல்லோ போடலாம் என்று சொல்லமுடியாமல் உங்களை தடுப்பது எது ?//

இது மக்கட்தொகை கணிப்பு.

மதவாரியாகவும் கணிக்கப்படுகிறது. தாய்மொழி கேட்ட்கப்படவில்லை. Please see the census paper brought by the census people.

ஜாதிவாரியாகவும் வேண்டும் என்பது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

‘இனவாரியாக’ என்று ஏற்றுக்கொள்ளப்ப்டவைல்லை.

‘ஜாதிவாரியாக’ என்றால், அதை இந்தியமக்களை மேலும் பிளவுபடுத்தும் என்பதால், அது எதிர்க்கப்படுகிறது.

அப்படியிருக்கு, ‘இனவாரியாக்’ என்றால், அதலபாதாளத்தில் நாட்டுமக்களைத்தள்ளுகிறீர்கள்.

கணிப்பின்படி, ஒருவன் சென்னைவாசி என்றால், அவன், என்ன மதம் என்றுதால் கணிப்பாளர் கேட்கிறாரே தவிற, தாய்மொழி எது என்று கேட்பதில்லை. அதாவது, சென்னையில் எத்தனை கன்னடியர், தெலுகர் இருக்கிறாரகள் என்று கணிப்பின் இறுதிமுடிவு சொல்லாது.

எனவே ‘தமிழ்ன்’ என்று சொல்லுவது இந்தியமக்களைப் பிள்வு படுத்தும்.

If Veermani is wrong, you are doubly wrong.

பிரியமுடன் பிரபு சொன்னது…

present sir

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...

//பெரியார் நாத்திகத்தை முன்னிருத்தி இருந்தால் //

முன்னிருத்தல் வேறே...கொள்கை வேறே.

பெரியார் சொற்றொடர்:

‘கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளைப்படைத்தவன் முட்டாள். நம்புகிறவன் காட்டுமிராண்டி”

இதை எதிர்கொள்ளுங்கள்.

இது என்ன? கடவுள் மறுப்பு. இதுவே நாத்திகம்.

இதைத்தான் பெரியார் திடமாக நம்பினார்.

இதைத் திரிக்காதீர்கள்.//

பெர்னாந்டோ என்கிற கிறித்துவ மிசனெரி ஐயா,

சிவன் என்பது உண்மை, அல்லா என்பது உண்மை அவர்கள் இருக்கிறார்கள் என்று சத்தமாக கூவுங்க. உங்களால் முடியாது. அப்படி என்றால் நீங்கள் நாத்திகனா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//
கணிப்பின்படி, ஒருவன் சென்னைவாசி என்றால், அவன், என்ன மதம் என்றுதால் கணிப்பாளர் கேட்கிறாரே தவிற, தாய்மொழி எது என்று கேட்பதில்லை. அதாவது, சென்னையில் எத்தனை கன்னடியர், தெலுகர் இருக்கிறாரகள் என்று கணிப்பின் இறுதிமுடிவு சொல்லாது.

எனவே ‘தமிழ்ன்’ என்று சொல்லுவது இந்தியமக்களைப் பிள்வு படுத்தும்.

If Veermani is wrong, you are doubly wrong.//

மிஸ்தர் பெர்னான்டோ,

பெங்களூரில் வாழும் தமிழன் ஒருவனிடம் நீ எந்த மாநிலத்தை விரும்புகிறாய் என்று கேட்டுப்பாருங்கள், வாழும் மண்ணுக்கு எதிராக சிந்திக்காமல் கர்நாடகம் என்றே சொல்லுவான். இந்தியானாக அல்லது தமிழனாக பிறந்த உங்களுக்கு வேண்டுமானால் ஐரோப்பிய மண் பிடித்து இருக்கலாம்(இது எனது ஊகம் தான், ஏனெனில் நான் ஒரு இந்தியன் என்றோ தமிழன் என்றோ சொல்லிக் கொள்ள விரும்பாமல் ஆங்கிலோ இந்தியன் என்ற் கூறிக் கொள்பவர் தாங்கள்). இங்கேயே பிறந்து வளர்ந்தவர் தாய்மொழி வேறென்றாலும் தமிழன் என்றே தான் சொல்லிக் கொள்வர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறுமையாகல்ல!
ஏன், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ‘திராவிட வேதம்’ என்றுதான் திருநாமம்.

‘திராவிடம்’ என்ற சொல் அரசியலாக்கப்பட்டு ஆதாயம் தேடப்படுகிறது என்பது உண்மையே.

அதற்காக...அச்சொல்லுக்கு இல்லாத பொருளை கொடுப்பதா?


7:15 PM, May 31, 2010//

வீரமாமுனி இயற்றிய தேம்பாவனியை 'திராவிட கிறித்துவ வேதம்' என்று கூறுவோமா ? கிறித்து தமிழர்களுக்காகவே மண்ணில் அவதரித்தார் என்று சொல்ல எளிமையாக இருக்கும்.

Matra சொன்னது…

//இங்கேயே பிறந்து வளர்ந்தவர் தாய்மொழி வேறென்றாலும் தமிழன் என்றே தான் சொல்லிக் கொள்வர்.//


நான் ஒரு உதாரணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Matra said...

//இங்கேயே பிறந்து வளர்ந்தவர் தாய்மொழி வேறென்றாலும் தமிழன் என்றே தான் சொல்லிக் கொள்வர்.//


நான் ஒரு உதாரணம்.//

அமலராயன் ஐயாவுக்கு செவிட்டில் அறைந்தது போல் பதில் சொன்னதற்கு மிக்க நன்றி !

Robin சொன்னது…

//பெர்னாந்டோ என்கிற கிறித்துவ மிசனெரி ஐயா,//
இது ஒரு கீழ்த்தரமான தாக்குதல். கோவி கண்ணன் போன்றவர்களுக்கு இது அழகல்ல.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்.

குடுகுடுப்பை சொன்னது…

செஸ்ஸ சீரியஸா வெலாடூரீங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...

//பெர்னாந்டோ என்கிற கிறித்துவ மிசனெரி ஐயா,//
இது ஒரு கீழ்த்தரமான தாக்குதல். கோவி கண்ணன் போன்றவர்களுக்கு இது அழகல்ல.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்.//

நான் என்ன அவரை குள்ள நரி என்றா சொன்னேன். மிசனறி என்றால் கிறித்துவ மதம் பரப்பும் பொறுப்பாளர் என்று தானே பொருள்.

Robin சொன்னது…

//நான் என்ன அவரை குள்ள நரி என்றா சொன்னேன். மிசனறி என்றால் கிறித்துவ மதம் பரப்பும் பொறுப்பாளர் என்று தானே பொருள்.// கோவி கண்ணன் , பெயரை பார்த்ததும் கிறிஸ்தவ மிஷனரி என்று சொன்னால் உங்கள் பெயரை பார்த்ததும் இந்துத்வாவாதி என்றும் சொல்ல முடியும். என்னை பொறுத்தவரை கிறிஸ்தவ மிஷனரி செய்வது இறைப்பணி, ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அவர் பின்னோட்டம் இடுவது எரிச்சல் அளித்தால் அதை வேறு முறையில் சொல்ல முடியும், இப்படி தனிப்பட்ட தாக்குதல் நடத்தி அல்ல. உங்களிடம் எனக்கு கருத்து வேற்றுமை உண்டு, சில வேளைகளில் நம் இருவரின் கருத்துக்களும் ஒத்து போவதும் உண்டு. ஆனால் நான் இதுவரை உங்களை விரோதியாக பார்த்ததில்லை. இனியும் அப்படித்தான். ஆனால் நீங்கள், குறிப்பாக ஜோ அமலனுக்கு பதிலளிக்கும் போதெல்லாம், தேவையில்லாமல் மதத்தை இழுக்கிறீர்கள். நீங்கள் செய்வது சரியா தவறா என்று உங்கள் மன சாட்சியை கேட்டு பாருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி கண்ணன் , பெயரை பார்த்ததும் கிறிஸ்தவ மிஷனரி என்று சொன்னால் உங்கள் பெயரை பார்த்ததும் இந்துத்வாவாதி என்றும் சொல்ல முடியும். //

சொல்லி இருக்கிறார்கள். நான் கவலைப்படுவது இல்லை

//என்னை பொறுத்தவரை கிறிஸ்தவ மிஷனரி செய்வது இறைப்பணி, ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல என்பது எனக்குத் தெரியும். //

ஆமாம் பொதுவாக அப்படித்தான் பெயர். போலிஸ்காரர்கள் என்றால் அரசு அதிகாரிகள் என்றால் மக்கள் பணியாளர்கள் என்று பெயர். ஆனால் அதில் செய்யும் ஊழல்களும் முறைகேடுகளும் அடங்கினாலும் அவர்கள் அரசு ஊழியர்கள் தான். அதுபோலவே நீங்கள் சொல்லும் ஊழியக்காரர்களும்.

//உங்களுக்கு அவர் பின்னோட்டம் இடுவது எரிச்சல் அளித்தால் அதை வேறு முறையில் சொல்ல முடியும், இப்படி தனிப்பட்ட தாக்குதல் நடத்தி அல்ல.//

அதுபற்றி வருத்தப்பட வேண்டியது அவர் தான். இதற்கும் முன்பும் பல பதிவுகளில் அவரை வாரி இருக்கிறேன். அவர் அதை கருத்தின் மீதான விமர்சனம் என்று தான் கடந்து செல்கிறார். மூன்றாம் நபர் தலையீடு இல்லை என்றால் யாரும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்

//உங்களிடம் எனக்கு கருத்து வேற்றுமை உண்டு, சில வேளைகளில் நம் இருவரின் கருத்துக்களும் ஒத்து போவதும் உண்டு. //

நல்லது. நானும் எல்லோரும் என்னுடைய கருத்தில் உடன்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. எனக்கான எழுத்தின் உரிமையில் பிறரின் கருத்து மாற்று கருத்து என்று தான் பார்க்கிறேன்.

//ஆனால் நான் இதுவரை உங்களை விரோதியாக பார்த்ததில்லை. இனியும் அப்படித்தான். ஆனால் நீங்கள், குறிப்பாக ஜோ அமலனுக்கு பதிலளிக்கும் போதெல்லாம், தேவையில்லாமல் மதத்தை இழுக்கிறீர்கள். நீங்கள் செய்வது சரியா தவறா என்று உங்கள் மன சாட்சியை கேட்டு பாருங்கள்.//

நல்லது. நானும் பலமுறை அவரிடம் தலித் கிறித்துவர்கள் மீதான பிற சாதி கிறித்துவர்களின் புறக்கணிப்பு குறித்து பேசும் போதெல்லாம் அவர் இந்து வருணாசிரமத்தை மட்டுமே பேசுகிறார். கிறித்துவத்தில் இருக்கும் சாதியத்தை கண்டிக்க மறுக்கிறார். பிறகு நான் எப்படி அவரின் கருத்துகளை கிறித்துவ ஆதரவு, இந்து எதிர்ப்பு கருத்துகளாக மட்டுமே பார்க்கக் கூடாது ?

அமலராயனுக்கு போட்ட மறுமொழிகளை படித்த உங்களுக்கு மேற்கண்ட கேள்வியை நான் பலமுறை கேட்ட போது அவர் சாதித்த கள்ள மவுனத்தை மட்டும் ஏன் பார்க்க மறந்தீர்கள், மனசாட்சி எல்லோருக்கும் பல நேரம் தூங்கும் சார் எனக்கு மட்டும் தான் என்பது இல்லை.

பெயரில்லா சொன்னது…

இப்போதான் பார்த்தேன்.

முதலிலேயே, கருத்தை எதிர்னோக்குங்கள் என்றேன். ஆனால், உங்களால் முடியவில்லை.

உங்கள் பதிவை ஒட்டியதே என் பின்னுட்டம். ஆனால், என் பின்னூட்டத்தை ஒட்டியதல்ல உங்கள் பதில்.

பின்னூட்டம் போடாதே என்று தெளிவாகச்சொல்லிவிடலாம். ஏன் இந்த மறைமுக வேலை?

நிற்க. பதிலுக்கு வருவோம்.

//சிவன் என்பது உண்மை, அல்லா என்பது உண்மை அவர்கள் இருக்கிறார்கள் என்று சத்தமாக கூவுங்க. உங்களால் முடியாது. அப்படி என்றால் நீங்கள் நாத்திகனா ?//

நான் எழுதியது பெரியாரின் நாத்திகம். நீங்கள் அவர் அதை முன்னிருத்தவைல்லை என்றீர்கள்.

நான் அவரின் சொற்றொடரைத் தொட்டுக்காட்டி, இதற்குமேல என்ன வேண்டும்?

இவ்வளவு தெளிவாக கடவுளை மறுத்த, நம்பியவரையும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லியபிறகு, முன்னிருத்துவல்லை என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு.

இதற்கு மேல் என்ன செய்யவேண்டும் பெரியார்?

பெயரில்லா சொன்னது…

//பெங்களூரில் வாழும் தமிழன் ஒருவனிடம் நீ எந்த மாநிலத்தை விரும்புகிறாய் என்று கேட்டுப்பாருங்கள், வாழும் மண்ணுக்கு எதிராக சிந்திக்காமல் கர்நாடகம் என்றே சொல்லுவான். இந்தியானாக அல்லது தமிழனாக பிறந்த உங்களுக்கு வேண்டுமானால் ஐரோப்பிய மண் பிடித்து இருக்கலாம்(இது எனது ஊகம் தான், ஏனெனில் நான் ஒரு இந்தியன் என்றோ தமிழன் என்றோ சொல்லிக் கொள்ள விரும்பாமல் ஆங்கிலோ இந்தியன் என்ற் கூறிக் கொள்பவர் தாங்கள்). இங்கேயே பிறந்து வளர்ந்தவர் தாய்மொழி வேறென்றாலும் தமிழன் என்றே தான் சொல்லிக் கொள்வர்.//

கோவி கண்ணன்!

நாம் இங்கு கதைப்பது, மக்கட்தொகை கணிப்பைப்பற்றியே.

எவன் தமிழன் எவன் இல்லையென்பதைப்பற்றியல்ல.

மக்கட்தொகைக்கணிப்பாளர்கள் (அரசு) எடுத்தமுடிவின்படி -

நீங்கள் தமிழரா, கன்னடியரா என்று சொல்லக்கூடாது. அப்படி வெளித்தெரிந்துவிடும் என்பதற்காக,
தாய்மொழி என்ன? என்ற கட்டத்தையும் எடுத்து விட்டார்கள்.

சென்னைவாசி, பெங்களூர்வாசி என்று மட்டும் தெரிந்தால் போதும் என்கிறது அரசு.

மாறாக, தமிழன், கன்னடியன், மலையாளி, பெங்காலி என்பதெல்லாம் இந்திய் மக்களிடையே பிரிவினை உணர்வைப் பெருக்கும் என்பது அரசின் கரிசனம்.

உங்கள் கருத்து - தமிழன் என்று சொல் - is more dangerous than Veermanai's 'I am an atheist!'

பெயரில்லா சொன்னது…

//வீரமாமுனி இயற்றிய தேம்பாவனியை 'திராவிட கிறித்துவ வேதம்' என்று கூறுவோமா ? கிறித்து தமிழர்களுக்காகவே மண்ணில் அவதரித்தார் என்று சொல்ல எளிமையாக இருக்கும்.//

You are desparate to attack.

அதற்காக உளறுகிறீர்கள்.

சரி. எதிர் கொள்கிறேன்.

கிருத்துவர்கள் தங்கள் விவிலியத்தை ‘வேதம்’ என்றுதான் அழைத்துக்கொள்கிறார்கள்.

தென்மாவட்டங்களில், கிருத்துவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா?

‘வேதக்காரகள்’

விவிலியம் எங்கோ, எப்போதோ, ஆராலோ எழுதப்பட்டது.

அதற்கு ஒருவர் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் எழுதினால், அதை, கிருத்துவர்கள், தமிழ் திராவிட வேதம் என அழைத்தால், விய்ப்பில்லை. சரியே.

எப்படி, வைணவர்கள், திருவாய்மொழியை அழைத்தார்களோ அப்படி.

என் அடிப்படை வாதம்:

திராவிடம் என்ற சொல்லை, சங்கரர் (திராவிட சிசு), இராமானுஜர் (திராவிட வேதம்), அசோகரின் கல்வெட்டுகள், மற்றும் ஆதிகாலத்திலிருந்து, வழங்கப்பட்டது ‘ஏசும்’ அவச்சொல்லாக அல்ல.
ஆனால், நீங்கள் அரசியலவாதி இப்போது - அதாவது கடந்து 60 ஆண்டுகளாக - என்ன சொன்னான் என்பதை வைத்தே கணிக்கிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

//அதற்கு ஒருவர் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் எழுதினால், அதை, கிருத்துவர்கள், தமிழ் திராவிட வேதம் என அழைத்தால், விய்ப்பில்லை. சரியே.

எப்படி, வைணவர்கள், திருவாய்மொழியை அழைத்தார்களோ அப்படி.

//

சும்மா சொல்லவில்லை இராமானுஜர்.

திருவாய்மொழி நான்கு வேதங்களின் சாரம் என்று கருதப்படுவதால் சொன்னார். நிருபீத்தார். ஆச்சாரியர்களை வைத்து மக்களுக்கு விளக்கம் கொடுக்கவைத்தார்.

திருமங்கை ஆழ்வாரின் படைப்புகள் வேதங்களில் ஆறு அங்கங்கள் என அவர்கள் அழைக்கிறார்கள்.

தமிழன் என சொல்லிக்கொண்டு, இந்து எனச் சொல்லிக்கொண்டு,
தமிழர்களின் தலையாய மதப்பிரிவுகளில் ஒன்றான வைணவத்தைப்பற்றி, அடைப்படைகூட தெரியாமல் என்னிடம் கதைக்க வந்து விட்டீர்கள்..இல்லையா?

ஆர் தமிழன்?

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

இப்போதான் பார்த்தேன்.

முதலிலேயே, கருத்தை எதிர்னோக்குங்கள் என்றேன். ஆனால், உங்களால் முடியவில்லை.

உங்கள் பதிவை ஒட்டியதே என் பின்னுட்டம். ஆனால், என் பின்னூட்டத்தை ஒட்டியதல்ல உங்கள் பதில்.

பின்னூட்டம் போடாதே என்று தெளிவாகச்சொல்லிவிடலாம். ஏன் இந்த மறைமுக வேலை?
//

அமலராயன்,
உங்கள் மற்ற வள வள பின்னூட்டங்களுக்கு மறுமொழி இட்டால் நீண்டு கொண்டே போகும். பின்னூட்டம் போடாதீர்கள் என்று நான் சொல்வது கிடையாது, எனக்கு அது போன்ற எண்ணமும் இல்லை.


பெரியர் கடவுளை மறுத்தார் ஏனென்றால் மதம் காட்டும் கடவுள் கட்டுக்கதைகள் இவற்றை பெரியார் ஏற்கவில்லை. பெரியார் கடவுள் மறுப்பாளர் என்று நான் ஒப்புக் கொள்கிறேன். அது தெரிந்தும் அவருக்கு பக்கத்தில் இருந்த குன்றக்குடி அடிகளாருக்கு இல்லாதா ஆதங்கம் உங்களுக்கு வந்ததில் தான் எனக்கு வியப்பு. உங்களைப் பொறுத்து இஸ்லாம் மற்றும் இந்து கடவுள்கள் கூட கட்டுக்கதைகள் தானே... அப்ப நீங்க கடவுள் மறுப்பாளரா? ன்னு நான் கேட்டதற்கு நேரடி பதிலையே காணும்.

பெயரில்லா சொன்னது…

//உங்களைப் பொறுத்து இஸ்லாம் மற்றும் இந்து கடவுள்கள் கூட கட்டுக்கதைகள் தானே... அப்ப நீங்க கடவுள் மறுப்பாளரா? ன்னு நான் கேட்டதற்கு நேரடி பதிலையே காணும்.//

சிலர் மூக்கின்வடிவத்தை வைத்தே மற்றவரை வெறுப்பர். அல்லது கணிப்பர். சிலர் நிறத்தை வைத்து. சிலர் ஜாதிகளை வைத்து. இப்படி பலபல.

இவைகளுக்குப் பெயர் ஆங்கிலத்தில் prejudices.

நீங்கள் என் பெயரைப்பார்த்து எல்லாமுடிவுக்கும் வந்து விட்டீர்கள்.

நிற்க.

எனக்கு எல்லா மதங்களுங்கும் பிடிக்கும்; பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அண்ணா சொன்னதை கடைபிடிப்பவன்:

‘மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு’.

இசுலாத்தைப்பற்றி பேருவைகயாகவும், பெருமதிப்பாகவும் எழுதியுள்ளேன். எ.டு. நிஜாம் பதிவில்.

இந்து மதத்த்தில் இராமனுஜரின் வைணவத்தைப்பற்றியும், ஆழ்வாரகளைப்பற்றி விளக்கங்கள் கொடுத்துவருகிறேன். அதனைப்படித்து உவைகயடைந்தவர்கள் தமிழ் வைணவர்கள். எங்கெல்லாம் பார்ப்பனர்கள் ஆழ்வார்களை திரிக்கிறார்களோ அங்கு நான் ஆஜர் ஆவேன். கண்டிப்பேன்.

காரணம்: நான் ஆழ்வார்களில் ஓரளவுக்கு

‘அடியேன் ஒரு சிறிய ஞானஸ்தன்’

(இச்சொற்றொடர் நம்மாழ்வரது)

பெந்தொகோஸ்தேவை மதிப்பவன். காரணம்: அது எழுந்த வரலாறு (சிக்காகொவில்) என்னை மலைக்கவைக்கிறது.

சேவியர், பெஸ்கி, நோபிலி, தெரிஸா, மற்றும் அனைத்து உரோமன் கத்தோலிக்க இறைப்புனிதர்களின் வரலாற்றை பிறருக்குச்சொல்லி,’ஊழியக்காரன்’ என்ற் ஏச்சுச்சொல்லுக்கு ஆளாவதை மிகவும் விரும்புவன்.

கடைசியாக, எம்மதமும் அடைப்படையில் நல்லது; ஆனால், இடைத்தரகர்கள் ஆதாயத்துக்காக கெடுக்கப்பார்க்கிறார்கள் என்பது என் கணிப்புமட்டுமல்ல. பலரின் ஆகும்.

எல்லாரும் நன்றாக வாழ முடியும் அவரவர் மதங்களில், என்ற கொளகை நான் சொல்ல வரவைல்லை. ஏனெனில், 1300 ஆண்டுககளுக்கு முன்பு ஒரு மாபெரும் தமிழர் சொன்னார்:

இதோ:

”அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறைவர் என அடி அடைவர்கள்;
அவரவர் இறைவர் குறைவு இலர்; இறைவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே”

(நம்மாழ்வார் திருவாய்மொழி: முதற்பத்து)

நான் ஆர் என்பதை இனி முடிவு செய்யலாம்.

பெயரில்லா சொன்னது…

எம் புராணம் கிடக்கட்டும்.

மக்கட்தொகை கணிப்புத்தாளில், நாத்திகர்கள் எங்கே எழுதட்டும்?
தனியாக அவர்களுக்கு கட்டம் இல்லையே?

ஆத்திகர்களுக்காக ‘மதம்’ என்று இருக்கமிடத்தில்தானே எழுதமுடியும்?

அங்குதானே வீரமணியும் ‘நாத்திகன்’ என எழுத முடியும்?

அதைப்பற்றி கண்டித்து எழுதும் நீங்கள் அவர்களுக்கு ஏன் ஒரு வழியில்லை என்று சொல்லவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்