பின்பற்றுபவர்கள்

30 மே, 2010

என் பெயரில் வெளியாகும் போலி பின்னூட்டங்கள் !

அனானிக்கு பின்னூட்டப் பெட்டி பூட்டிவைக்கப்பட்ட ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் வலைப்பதிவு நுழைவுச் சொல் மற்றும் கடவுச் சொல் மூலம் பின்னூட்டம் போடுவதால் யார் பின்னூட்டம் இட்டது என்பதை புகைப்படம் மற்றும் வலைப்பதிவு அடையாள எண் வழியாக தெரிந்துவிடும். ஆனால் வேர்ட் ப்ரஸ் தளங்களில் அப்படி இல்லை, ஒருவர் யார் பெயரில் வேண்டுமானாலும் பின்னூட்டம் இட முடியும். வேர்பிரஸ் தளங்களில். பெயர், மின் அஞ்சல், வலைத்தளம் ஆகியவற்றை பின்னூட்டம் இடும் முன் தெரிவிக்க வேண்டும். ஒருவர் அதில் எவருடைய வலைப்பதிவு தகவலை தெரிவித்தாலும் பின்னூட்டம் வெளியாகும் போது அந்த வலைப்பக்கத்தின் ப்ரொபைல் புகைப்படம் வெளியாகும். அதாவது யாரோ ஒருவர் மருத்துவர் ருத்ரனின் வலைப்பதிவு தகவலை கொடுத்து வேர்ட் ப்ரஸில் பின்னூட்டம் இட்டால் மருத்துவர் ருத்தனின் புகைப்படத்துடன் பின்னூட்டம் வெளியாகி, அவர் பின்னூட்டம் இட்டது போலவே காட்டும்.

இது போன்ற குறுக்கு புத்தியில் எனது வளைத்தள முகவரியை உள் நுழைத்து ஒரு பதிவில் பின்னுட்டமிட்டு இருக்கிறான் ஒரு கோழை.

குறிப்பிட்ட பின்னூட்டத்தை நான் இடவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் எனது பின்னூட்டங்களில் தொடர்புடையவர்கள் தவிர்த்து அவர்களுடைய குடும்பத்தினரை குறித்து கேள்வி எழுப்புவதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் மீது சொல்லவெண்ணா எரிச்சல் என்றாலும் 'தேவடியா மகன்' என்று திட்டுவதில்லை. காரணம் அவன் செய்யும் தப்புக்கு அவன் அம்மாவை குடும்பத்தை இழுப்பது பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்பது எனது நிலைபாடு. எனது தரந்தாழ்ந்த வசை மொழி என்றால் வெறும். முட்டாள், கயவாளி, அறிவற்றவன், சாதி வெறியன் என்று முன்னிலையை மட்டுமே சாடும் சொற்களாக அதுவும் எல்லை மீறும் போது பயன்படுத்துவது மட்டுமே. மேற்கண்ட "உன் வீட்டு பொம்மனாட்டியையும் கூட்டி வந்தால் இன்னும் நன்றாய் பேசுவோம்." என்பது போல் பின்னூட்டமிட எனக்கு கை வராது (இந்த குறிப்பிட்ட வரி கூட அங்கிருந்து காபி பேஸ்ட் தான்).

எனது பெயரில் வேர்ட் ப்ரஸ் தளங்களில் ஆபாச அல்லது ஒவ்வாத பின்னூட்டங்கள் தொடர்ந்தால் அதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. என்பதை இறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

வேர்ட்பிரஸ் தளங்கள் சிங்கிள் சைன் ஆன் முறையில் இயங்காததால் நான் பின்னூட்டம் இடுவது மிக மிக குறைவு. இனி வேர்ட் ப்ரஸ் தளங்களில் எனது பின்னூட்டங்கள் எதுவும் இடம் பெறாது. வேர்ட் ப்ரஸ் தளங்களில் எனது பெயரில் பின்னூட்டம் வெளியானால் அதற்கு நான் பொறுப்பும் இல்லை.

மேற்கண்ட பின்னூட்டம் நான் போட்டதாக எண்ணி நல்ல தந்தி என்கிற தினத்தந்தி கேள்வி எழுதி போடும் பெருசு என்னிடம் குறிப்பிட்டு கேட்ட போது தான் அந்த தளத்தை திறந்து பார்த்தேன்.


(இது இதயம் பேத்துகிறது என்கிற ஜவஹர் அண்ணன் பதிவில் எவனோ ஒரு அனானி நாய் என் பெயரில் போட்ட பின்னூட்டம்)

தமிழ்மணம் பின்னூட்டத் திரட்டியில் நான் ப்ளாக்கர் வழியாக லாகின் செய்த பின்னூட்டங்கள் அனைத்தும் திரட்டப்படுவதால், அதில் இல்லாத என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்
அனைத்தும் என்னுடையது அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
வேர்ட்ப்ரஸின் வழியாக வலைப்பதிவு எழுதும் நண்பர்கள் பின்னூட்டங்களின் தன்மையை ஆராய்ந்துவிட்டு வெளி இடவும்.

எனது சமூக அரசியல் நிலைப்பாடுகளில் வெறுப்புற்ற எவனோ ஒரு மன நோயாளி அந்த பின்னூட்டங்களைப் போட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறேன்.

37 கருத்துகள்:

புருனோ Bruno சொன்னது…

கண்டிக்கப்படவேண்டிய விஷயம் :(

ஜோதிஜி சொன்னது…

மனிதரில் எத்தனை நிறங்கள்?

குசும்பன் சொன்னது…

ஏற்கனவே ஒரு அஜால் குஜால் வெப்சைட்டில் உங்க பெயரில் பின்னூட்டம் பார்த்தேன்,பெருசு நம்மை விட ஆக்டிவா இருக்கேன்னு நினைச்சேன்:))

SanjaiGandhi™ சொன்னது…

கை குடுங்க கோவியாரே.. பெரிய ஆள் ஆய்ட்டிங்க :))

இராகவன் நைஜிரியா சொன்னது…

மிக மோசமான கயவன். யார் மேல் கோபம் இருந்தாலும் நேரிடியாக மோத வேண்டும். அதைவிடுத்து, இப்படி மோதுவது, ரொம்ப தப்பு... கண்டிக்கப் படவேண்டிய விஷயம்.

TBCD சொன்னது…

பார்ப்பனர்கள் விசமத்தனமானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கின்றார்கள்.

பதிவுகளில் போலி மட்டுமே ஆபாசமானவன் என்று ஒரு பிம்பத்தை இன்று வரை நிலைநாட்டிவிட்டு, இப்படி பின்வாசல் வழியாக ஆபாசத்தை உள்ளே நுழைக்கின்றார்கள்.

வன்மையாய் கண்டிக்கின்றேன் !

SanjaiGandhi™ சொன்னது…

ஃப்ரீயா விடுங்க பாஸ்.. யாரெல்லாம் இப்டி எழுதுவாங்கன்னு யார்க்கும் தெரியாம இருக்கலாம்.. ஆனால், யாரெல்லாம் இபப்டி எழுத மாட்டாங்கன்னு பெரும்பாலானோர்க்குத் தெரியும்..

வர்மா சொன்னது…

இப்பிடி எல்லாம் மோசடி செய்கிறாங்களா? க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வேணும்.
அன்புட‌ன்
வ‌ர்மா

பிரியமுடன் பிரபு சொன்னது…

ஃப்ரீயா விடுங்க பாஸ்.. யாரெல்லாம் இப்டி எழுதுவாங்கன்னு யார்க்கும் தெரியாம இருக்கலாம்.. ஆனால், யாரெல்லாம் இபப்டி எழுத மாட்டாங்கன்னு பெரும்பாலானோர்க்குத் தெரியும்..
////////

சஞ்சய் சரியா சொல்லீட்டார்

பனங்காட்டான் சொன்னது…

இப்பிடியும் ஒரு குருப்பு அலையுது!

நட்புடன் ஜமால் சொன்னது…

சஞ்சய் சொன்னது போல் தான், நிச்சியமாய் நீங்கள் பின்னூட்டும் விதம் தெரிந்தேயிருக்கும் ...

D.R.Ashok சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

குசும்பன்


ஏற்கனவே ஒரு அஜால் குஜால் வெப்சைட்டில் உங்க பெயரில் பின்னூட்டம் பார்த்தேன்,பெருசு நம்மை விட ஆக்டிவா இருக்கேன்னு நினைச்சேன்:))

//

குசும்பன்,

அது நிஜமா இருக்கலாம், இதுவரை மறுப்பு வரவில்லையே!
:)வேறொருவர் பெயரில் விசமத்தனமாக பின்னூட்டம் இடும் கழிவுகளை நினைச்சா எரிச்சலா வருது. முகமூடிய கல்லுல வச்சு ஒரசி எடுக்கனும்!

வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

Jawahar சொன்னது…

கண்ணன்ஜி இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் போலியைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மெயில் ஐடியும் சரியாகப் போடுகிறார்கள். ஐபி அட்ரஸை வைத்து வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். ஆனால் அது கூட சில பேர் அலுவலகம், வீடு என்று இரு வேறு இடங்களிலிருந்து எழுதுவார்கள்!

http://kgjawarlal.wordpress.com

நிகழ்காலத்தில்... சொன்னது…

குசும்பன்


ஏற்கனவே ஒரு அஜால் குஜால் வெப்சைட்டில் உங்க பெயரில் பின்னூட்டம் பார்த்தேன்,பெருசு நம்மை விட ஆக்டிவா இருக்கேன்னு நினைச்சேன்:))

நீங்கள் எழுதியதுதான் என நான் நினைத்தேன். ஆனால் சந்தேகமும் வருத்தமும் இருந்தது. அது நீங்கியது

இந்த பதிவு ஒரு சில நாட்கள் இருக்கட்டும். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம்தான்..

நன்றி ’பிரபல பதிவர்’ கோவியாரே..

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...

ஏற்கனவே ஒரு அஜால் குஜால் வெப்சைட்டில் உங்க பெயரில் பின்னூட்டம் பார்த்தேன்,பெருசு நம்மை விட ஆக்டிவா இருக்கேன்னு நினைச்சேன்:))//

தொடர்புடைய சுட்டியை மின் அஞ்சலில் அனுப்பு சரவணா

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

கை குடுங்க கோவியாரே.. பெரிய ஆள் ஆய்ட்டிங்க :))//

யோவ்....ஸ்ரீதேவியின் கணவன் நான் எனக்கு என் மனைவியை மீட்டுத்தாருங்கள் என்று விளம்பர பிரியன் ஒருவன் வழக்கு தொடர்ந்தானாம். பிரபலங்களை வைத்து புகழ்தேடிக் கொள்வது சகஜமப்பா. :) இருந்தாலும் ஒரு அனானியாக அவனின் செயலால் அவனுக்கே பலன் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...

கண்டிக்கப்படவேண்டிய விஷயம் :(//

செருப்பால் அடிக்க வேண்டிய விசயமும் கூட.

ஒரு வேர்ட் பிரஸ் நண்பரிடம் ஐபி முகவரி கேட்டு இருக்கிறேன். அவன் எங்கிருந்து போடுகிறான் என்பது தெரிந்துவிடும்

கோவி.கண்ணன் சொன்னது…

// TBCD said...

பார்ப்பனர்கள் விசமத்தனமானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கின்றார்கள்.

பதிவுகளில் போலி மட்டுமே ஆபாசமானவன் என்று ஒரு பிம்பத்தை இன்று வரை நிலைநாட்டிவிட்டு, இப்படி பின்வாசல் வழியாக ஆபாசத்தை உள்ளே நுழைக்கின்றார்கள்.

வன்மையாய் கண்டிக்கின்றேன் !//

தொடர்புடைய இரு பின்னூட்டங்களிலும் பார்பான் என்று வருது. ஒருவேளை பார்பனர்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் என் பெயரை வைத்து பலிவாங்குறானோ. :) இருந்தாலும் அவன் ஒரு பாப்பானாக இருக்க வாய்ப்புகள் மிகுதி. காலம் காலமாக குறுக்குபுத்தி குயுக்தின்னு செய்து கொண்டுவருபவர்களின் கடைசி வாரிசோ என்னவோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

ஃப்ரீயா விடுங்க பாஸ்.. யாரெல்லாம் இப்டி எழுதுவாங்கன்னு யார்க்கும் தெரியாம இருக்கலாம்.. ஆனால், யாரெல்லாம் இபப்டி எழுத மாட்டாங்கன்னு பெரும்பாலானோர்க்குத் தெரியும்..//

எந்த புத்துல எந்த பாம்புன்னு அப்பாவியாக நம்புறவங்களும் இருக்காங்க அவர்களுக்கான விளக்கம் தான் இப்பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger இராகவன் நைஜிரியா said...

மிக மோசமான கயவன். யார் மேல் கோபம் இருந்தாலும் நேரிடியாக மோத வேண்டும். அதைவிடுத்து, இப்படி மோதுவது, ரொம்ப தப்பு... கண்டிக்கப் படவேண்டிய விஷயம்.//

நன்றிங்க ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிஜி said...

மனிதரில் எத்தனை நிறங்கள்?//

:) பச்சோந்திகள்

கோவி.கண்ணன் சொன்னது…

// வர்மா said...

இப்பிடி எல்லாம் மோசடி செய்கிறாங்களா? க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வேணும்.
அன்புட‌ன்
வ‌ர்மா//

வேர்பிரஸ் தளத்தின் குறை

நல்லதந்தி சொன்னது…

//நல்ல தந்தி என்கிற தினத்தந்தி கேள்வி எழுதி போடும் பெருசு//

வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, நான் பெருசு அல்லன் என்கின்ற உண்மையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...

//நல்ல தந்தி என்கிற தினத்தந்தி கேள்வி எழுதி போடும் பெருசு//

வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, நான் பெருசு அல்லன் என்கின்ற உண்மையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்!//

அப்ப சிறுவனா ?

அவ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

////நல்ல தந்தி என்கிற தினத்தந்தி கேள்வி எழுதி போடும் பெருசு//

வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, நான் பெருசு அல்லன் என்கின்ற உண்மையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்!//

அண்ணே, நல்லதந்தி தினத்தந்தி எதுகை மோனை சரியாக இருக்கும்னு குறிப்பிட்டேன். வேண்டுமென்றால் கொஞ்சம் கவுரதியாக 'த ஹிந்து' வுக்கு லெட்டர் போடும் இளைஞர் என்று மாற்றிப் போடவா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Jawahar said...

கண்ணன்ஜி இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் போலியைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மெயில் ஐடியும் சரியாகப் போடுகிறார்கள். ஐபி அட்ரஸை வைத்து வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். ஆனால் அது கூட சில பேர் அலுவலகம், வீடு என்று இரு வேறு இடங்களிலிருந்து எழுதுவார்கள்!

http://kgjawarlal.wordpress.com//

இப்போதாவது நான் அந்த பின்னூட்டங்களைப் போடவில்லை என்று புரிந்து கொண்டிருப்பீர்கள் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...

குசும்பன்


ஏற்கனவே ஒரு அஜால் குஜால் வெப்சைட்டில் உங்க பெயரில் பின்னூட்டம் பார்த்தேன்,பெருசு நம்மை விட ஆக்டிவா இருக்கேன்னு நினைச்சேன்:))

நீங்கள் எழுதியதுதான் என நான் நினைத்தேன். ஆனால் சந்தேகமும் வருத்தமும் இருந்தது. அது நீங்கியது

இந்த பதிவு ஒரு சில நாட்கள் இருக்கட்டும். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம்தான்..

நன்றி ’பிரபல பதிவர்’ கோவியாரே..//

என்ன வெப்சைட் அது ? நீங்க ஏன் கசமுசா வெப்சைட்டுக்கெல்லாம் பேறிங்க.

dondu(#11168674346665545885) சொன்னது…

இப்பதிவு போலி டோண்டு வை மிகவும் நினைவுபடுத்திவிட்டது. நீங்கள் சொல்வதுபோல பிளாக்கர் பதிவுகளில் லாக் இன் செய்து வந்தால் உங்களை யாரும் நகல் செய்ய முடியது என்பது உண்மையானாலும், வேர்ட்பிரஸ் போன்ற தளங்களில் அது காரியத்துக்காகாது என்பதும் நிஜமே.

அதற்காக அத்தளத்திற்கெல்லாம் போய் பின்னூட்டமிட மாட்டேன் என இருப்பது சரியாக வருமா? உங்கள் சுதந்திரத்தை அந்த அனானி பாதிக்க அனுமதிக்கலாமா? நான் அதே நிலையில் என்ன செய்தேன் என்பதை கீழே தந்துள்ளேன், பார்க்கவும்.

இங்குதான் நான் பிரபலப்படுத்திய மூன்று சோதனைகள் வருகின்றன. அவை உருவானதுகூட ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்.

முதலில் என் பெயரில் பிளாக்கர் கணக்கு துவங்கப்பட்டு அசிங்கப் பின்னுட்டங்கள் அப்பெயரில் வெளியிடப்பட்டன. என்னுடைய உடனடி எதிர்வினை எலிக்குட்டி சோதனையைப் பற்றிக் கூறுவதே. போலி ஆசாமி அவ்வாறு துவக்கிய பிளாக்கர் கணக்கில் ஒரு வலைப்பூவையும் துவக்கினான். அதை க்ளிக் செய்தால் அது மெடா ரீடைரக்ஷன் என்ற உத்தியைப் பயன்படுத்தி என்னுடைய வலைப்பூவுக்கு இட்டுச் சென்றது. இதை எப்படி முறியடிப்பது? அதில்தான் பிறந்தது "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" என்றப் பதிவுகள். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html மற்றும் http://dondu.blogspot.com/2005/12/2.html

முதலில் கூறிய மே 2005 பதிவுக்கு பிறகு சில நாட்களுக்கு புதுப்பதிவு வேறு ஒன்றும் போடாமல் இருந்ததில் மெடா ரீடைரக்ஷன் மூலம் என் வலைப்பூவுக்கு வந்தவர்களின் கவனம் இப்பதிவால் ஈர்க்கப்பட்டது. ஆகவே போலியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஓசைப்படாமல் மெடா ரீடைரக்ஷனை வாபஸ் பெற்றான்.

இப்போது அதர் ஆப்ஷனை உபயோகித்து எலிக்குட்டி வைத்தாலும் என் பிளாக்கர் எண் வருமாறு செய்தான். சிறிது நேரம் என்ன செய்வது என்று திகைத்தேன். அப்போதுதான் என் நண்பர் எஸ்.கே. துணைக்கு வந்தார். என் ப்ரொஃபைலில் போட்டோ போட்டுக் கொள்ளச் சொன்னார். அவ்வாறு செய்ததில் நிலைமை சீரானது.

அதர் ஆப்ஷனில் வரும் பின்னூட்டங்களில் போட்டோ தெரியாது. அதே போல என் போட்டோவைப் போட்டு போலி ஆசாமி ஆரம்பித்த பிளாக்கர் கணக்கிலிருந்து பின்னூட்டமிட்டால் எலிக்குட்டி சரியான எண்ணைக் காண்பித்து விடும். இவ்வாறு என் முதல் இரண்டு சோதனைகள் வடிவு பெற்றன, அதாவது எலிக்குட்டி மூலம் சரியான பிளாக்கர் எண் தெரிய வேண்டும், அதே சமயம் போட்டோவும் தெரிய வேண்டும். மேலும் இவை இரண்டும் சேர்ந்து நிறைவேற வேண்டும்.

ஆனால் பிரச்சினைகள் வேறு ரூபத்தில் வந்தன. பல வலைப்பதிவாளர்கள் போட்டோக்கள் எனேபிள் செய்யவில்லை. அவர்களில் சிலர் அதர் ஆப்ஷன் வேறு வைத்திருந்தனர். மேலும், பிளாக்கர் இல்லாத வேறு சேவை தளங்களில் வலைப்பூ வைத்திருப்பவர்கள் விஷயத்தில் எலிக்குட்டி சோதனையோ போட்டோவோ பிரயோசனப்படாது. இங்குதான் என் மூன்றாம் சோதனை உருவாயிற்று. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை நான் இதற்காகவே வைத்திருக்கும் என் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடுவதைத்தான் கூறுகிறேன். எனது இந்த வாக்கியமும் பல முறை பார்த்திருப்பீர்களே:

//இப்பின்னூட்டத்தை இட்டது உண்மையான டோண்டு ராகவன் என்பதைக் காட்ட அதன் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க//: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

M

கோவி.கண்ணன் சொன்னது…

//அதற்காக அத்தளத்திற்கெல்லாம் போய் பின்னூட்டமிட மாட்டேன் என இருப்பது சரியாக வருமா? உங்கள் சுதந்திரத்தை அந்த அனானி பாதிக்க அனுமதிக்கலாமா? நான் அதே நிலையில் என்ன செய்தேன் என்பதை கீழே தந்துள்ளேன், பார்க்கவும்.//

எனக்கு தெரிந்து நான் படிக்கும் வேர்ட் ப்ரஸ் தளங்கள் மிகக் குறைவு தான். அவற்றிற்கு பின்னூட்டம் இடவில்லை என்றாலும் எனக்கு நட்டமில்லை.

இந்த இடுகையின் மூலம் வேர்ட் ப்ரஸ் பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய ஸ்மார்ட் என்பவரின் இடுகையைப் பாருங்கள். அதில் தனக்கு தானே பாணியில் நிறைய பின்னூட்டங்கள், இங்கெல்லாம் சென்று எனக்கு விளக்கம் போட வேண்டிய தேவை இல்லை.

யுவகிருஷ்ணா சொன்னது…

வேர்ட்பிரஸ் தளத்தில் பின்னூட்டம் இடுபவர்களின் ஐ.பி. நம்பர் தெரியும். உங்களது போலி பின்னூட்டங்கள் யார் பதிவில் வெளியானதோ அவர்களிடம் இருந்து ஆதாரத்துக்காக ஐ.பி. நம்பரை வாங்கி, இப்பதிவில் வெளியிடவும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//யுவகிருஷ்ணா said...

வேர்ட்பிரஸ் தளத்தில் பின்னூட்டம் இடுபவர்களின் ஐ.பி. நம்பர் தெரியும். உங்களது போலி பின்னூட்டங்கள் யார் பதிவில் வெளியானதோ அவர்களிடம் இருந்து ஆதாரத்துக்காக ஐ.பி. நம்பரை வாங்கி, இப்பதிவில் வெளியிடவும்!//

வேர்ட் ப்ரஸ்தளங்களில் எனது பெயரில் வெளியான பின்னூட்டங்களில் ஒன்று நண்பரின் பதிவு, அவரிடம் கேட்டு இருக்கிறேன். மற்றொன்று (முதலில் போட்டு இருக்கும் இமேஜ்) அவ்வாறு பின்னூட்டம் போடுவதற்காகவே உருவாக்கப்பட்ட பதிவு. தகவல் கிடைத்ததும் வெளி இடுகிறேன்

தனி காட்டு ராஜா சொன்னது…

கனிந்த பம் தானே கல்லடி படும் ....?
கோவை (கோவி) பழம் போல உங்கள் பார்ப்பன கருத்தை பார்த்து ....பழம் ரொம்ப சிவப்பாய் இருக்குதேனு அடிச்சு பார்க்கலாமுனு நெனச்சிருப்பான் போல ...
என்ன அடி பலமா ? பழமா?

மணிகண்டன் சொன்னது…

static ip தாங்க அது. துபாய்ன்னு வருது.


விவேகானந்தர் குறுக்கு சந்துக்கு போனா கண்டுபிடிச்சிடலாம் :)-

லூஸ்ல விடுங்க கோவி.

smart சொன்னது…

அண்ணே,
உங்க தடங்கலுக்கு வருந்துகிறேன். ஆனால் இதற்கு முந்தின
இடுகைக்கு வந்த அதே ip முகவரியிருந்ததால் 86.96.226.86 தான் அனுமதித்தேன். மற்றபடி யார் போட்டார்கள் என தெரியாது. இந்த இடுகைக்கு பிறகு அதை நீக்க வேண்டியது கட்டாயமாகிறது. நீக்கிவிடுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//smart said...

அண்ணே,
உங்க தடங்கலுக்கு வருந்துகிறேன். ஆனால் இதற்கு முந்தின
இடுகைக்கு வந்த அதே ip முகவரியிருந்ததால் 86.96.226.86 தான் அனுமதித்தேன். மற்றபடி யார் போட்டார்கள் என தெரியாது. இந்த இடுகைக்கு பிறகு அதை நீக்க வேண்டியது கட்டாயமாகிறது. நீக்கிவிடுகிறேன்.//

ஆஹ உங்க பதிவில் கமெண்டு போட்ட நாயும், இன்னொரு பதிவில் கமெண்டு போட்ட நாயும் ஐபி அட்ரஸ் படி ஒரே நாய் தான்.

பின்னூட்டங்களை நீக்குவதுடன் அதற்கு மிகக் கேவலமான மறுமொழிகளையும் நீக்கவும்.

மேலும் என் பெயரில் பின்னூட்டம் போட்ட நாய் ஒரு இடத்தில் புள்ளி வைத்து கோவி.கண்ணன் என்றும் மற்றொரு இடத்தில் கோவி கண்ணன் என்று புள்ளி வைக்காமலும் போட்டு இருக்கான். செய்வன திருந்தச் செய் என்பார்கள், இனிமேலாவது என் பெயரில் பின்னூட்டம் போட்டால் பேரை ஒழுங்க எழுதுடா நாயேன்னு அவனுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

வருண் சொன்னது…

இதெல்லாம் ரொம்ப மட்டமான செயல்ங்க- யார் செய்தாலும்!

தன் கருத்தை இன்னொருவர் பேரில் சொல்றவனையெல்லாம் பிடிச்சு உள்ளே போடனும்!

நானும் வேர்ட்ப்ரஸ் ல பின்னூட்டமிடவே ரொம்ப தயங்குவேன். நண்பர் கிரி தளம் மட்டும் விதிவிலக்கு!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்