சென்றவாரம் ஒரு நாள் தமிழ் உணவகம் ஒன்றில் 'தென்னிந்திய சாப்பாடு ஒண்ணு கொடுங்க' என்று நான் தூய தமிழில் கேட்டு கல்லாவில் இருந்தவரை விழிக்க வைத்தேன். அதன் பிறகு 'சவுத் இந்தியன் மீல்ஸ்' என்றதும் அவருக்கு புரிந்தது. 'ச்சே என்னது தமிழனுக்கு தமிழ் புரியவில்லையே....என்று ஒரு நொடி மனம் வருந்தினாலும்....... நாம தமிழை எதிர்பார்க்கும் இடம்... குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் ஒரு பணியாளர் ...அவருக்கு தூய தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பே அன்றி அவருடைய குறையோ, குற்றமோ இல்லை என்று தேற்றிக் கொண்டேன். மற்றபடி தூய தமிழ் தெரிந்தவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைவான ஊதியத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்ணுற்று இருக்கிறேன். நன்கு தமிழ் தெரிந்தவன், படித்தவனே ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாகிக் கொண்டிருக்கும் போது நாள் தோறும் பலவகையான வாடிக்கையாளர்களை எதிர்நோக்கும் ஒரு பணியாளருக்கு நடைமுறை பேச்சு தவிர்த்து தூய தமிழ் தெரிந்திருக்கும் என்று நினைப்பது என்னுடைய அறிவு குறைபாடு (அறிவீனம்) என்பதாக நினைத்துக் கொண்டேன். .
மலேசியாவில் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துவங்கினாலும் தனியார் நிறுவனம், பொது நிறுவனம் என்று காட்டக் கூடிய 'Sendirian Berhad' என்ற மலாய் சொல்லுடன் எழுதும் படி மலேசிய அரசால் பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி மைக்ரோ சாப்ட் நிறுவனம், Microsoft Malaysia Sdn Bhd என்றே பெயர் எழுதப்பட்டு வருகிறது, இதன் பொருள் ஆங்கிலத்தில் Microsoft Malaysia pte ltd. ஆனால் அதே மைக்ரோ சாப்ட் மற்ற நாடுகளில் மொழிகளில் எதிர்ப்பு இல்லை என்றால் Microsoft pte ltd அல்லது Microsoft pvt ltd அல்லது Microsoft ltd என்றே எழுதும். அதாவது அரசு ஆணையில் கண்டிப்புடன் இப்படியாகத்தான் பெயர் பலகை எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட எந்த ஒரு பெரிய நிறுவனமும் மீறுவதில்லை. மற்றபடி பன்னாட்டு நிறுவனங்கள் வட்டார மொழியை மதிக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை.
தமது மொழியின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் மலேசிய அரசு உறுதியாக உள்ளது, அதே போன்று இந்திய நடுவன் அரசும் (ஆளுகைக்கு உட்பட்ட) அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியிலும் பெயர் பலகை வைப்பதைவிட இந்தியில் வைப்பதை விரும்புகிறது. பெங்களூருவில் இந்திய நிறுவனங்களான வங்கிகளின் பெயர் பலகை மருந்துக்கு கூட கன்னடத்தில் வைக்கவில்லை என்பதற்கு வாட்டாள் கும்பல் ஆ(ர்பா)ட்டம் காட்டிய பிறகு மாற்றிக் கொண்டார்கள்.
பொட்டிக்கடைக்கரார்களும், அரசு உதவியில் செருப்புக் கடை வைத்திருக்கிறவர்களும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதில் செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழக அரசு முனைப்பு காட்டுவது வரவேற்கத்தக்கது என்றாலும், திடிரென்று கால கெடு (அவகாசம்) கொடுத்து பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது (நிர்பந்தம்) சரி அல்ல. ஒரு நாளைக்கு 200 ரூபாய் மட்டுமே விற்பனையில் பெறும் சிறுகடைகாரர்கள் உடனடியாக பெயர் பலகை வைக்க 1000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்த திடீர் செலவை அவர்கள் எவ்வாறு ஈடுகட்டுவார்கள் ? இவர்களுக்கு அரசே இலவசமாக பெயர் பலகை செய்து கொடுக்கலாமே.

ஊருக்கெல்லாம் தமிழில் பெயர் பலகை வைக்கச் சொல்லவும், தமிழ் பெயர்களை பரிந்துரை செய்யும் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் தம் "தமிழ்" திரைப்பட நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயர் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்'. எண்ணிக்கை அளவில் 18 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்துவரும் கருணாநிதிக்கு மேற்சொன்னது போல் செருப்பு தைக்கும் சிறு கடை வைத்திருப்பவர்களும், பொட்டிக்கடைகாரர்களும் தான் தமிழை வளர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது போலும்.
10 கருத்துகள்:
சிங்கப்பூரில்:
சீனர்கள் சந்தித்து கொண்டால் சீன மொழியில் பேசிக்கொள்வார்கள்
மலேயர்கள் சந்தித்து கொண்டால் மலாயில் பேசிக்கொள்வார்கள்
தமிழர்கள் சந்தித்து கொண்டால் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வார்கள்
நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சொண்ணது:
எனக்கு தெரிஞ்சு தமிழ் language தான் best language
தமிழ் இனி மெல்ல சாகும்
சில தூய தமிழ்ப் பெயர் தாங்கிய நிறுவனங்கள்
ரெட் ஜெயண்ட் மூவிஸ்
கிளவுட் நைன் மூவிஸ்
சன் நெட்வொர்க்(சன் டிவி,சன் நீயுஸ்,கே டிவி,சன் மீயுசிக்)
ஜாக் கேபிள் விஷன்
சுமங்கலி கேபிள் விஷன்
//செருப்பு தைக்கும் சிறு கடை வைத்திருப்பவர்களும், பொட்டிக்கடைகாரர்களும் தான் தமிழை வளர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது போலும்///
நல்லாச் சொன்னிங்க... சாட்டையடி...
சும்மா டமிலன ஏமாத்த சொல்லிகிட்டு இருக்குறது
இத பெரிசு படுதலாமா?
நாங்க இதுக்கெல்லாம் அசந்துடமாட்டோம். Tamil ஐ வளர்த்தே எங்களை வழ வைப்போம், மாக்களே.
:)
//Sdn Bhd//
இதன் பொருள் இன்றுதான் புரிந்தது.
பாராட்டுவிழாவுக்கு கூப்பிட்டும் வரவில்லைங்கிற ஆதங்க தலைப்பு:)
ஒவ்வொரு முறையும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்களா? இல்லை சிங்காரச் சென்னையிலா?
தொடருங்கள். தொடர்கின்றேன்.
கடைசி கால கட்டத்தில் காலத்தை வென்று பெயர் நிறுத்தச் செய்யப்பட்டும் ஒவ்வொன்றும் மௌமாக காலம் பார்த்துக்கொண்டுருக்கிறது.
இவரின் கணக்கு காலத்தின் கைகளில் வரும் போது நிச்சயம் நாம் இருவரும் பார்க்கத்தான் போகின்றோம்.
எத்தனையோ வாய்ப்புகள் மொழி வளர்க்க தேவையாய் இருக்கிறது. ஆனால் அத்தனையிலும் தான் விரும்புவது இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியில் பின்னுக்கு நின்று விடுகிறது.
வாழ்க் தமிழ் கற்று தலைகுனிந்து வாழ்ந்து கொண்டுருக்கும் பட்டதாரிகள்.
பெஸ்ட் கண்ணா பெஸ்ட் :)
//தலைவர் கருணாநிதியின் பேரன் தம் "தமிழ்" திரைப்பட நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயர் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்'. எண்ணிக்கை அளவில் 18 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்துவரும் கருணாநிதிக்கு மேற்சொன்னது போல் செருப்பு தைக்கும் சிறு கடை வைத்திருப்பவர்களும், பொட்டிக்கடைகாரர்களும் தான் தமிழை வளர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது போலும்//
nalla sonninga
கருத்துரையிடுக