பின்பற்றுபவர்கள்

22 பிப்ரவரி, 2010

அஜித்தின் கலகக் குரல் !

அரசியல் வாதிகளுக்கும் அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்களுக்கும் எதிரான அஜித்தின் எதார்த்தமான பேச்சு நன்றாக வேலை செய்கிறது, இதை அவர் மீதான 'தமிழ்' எதிரி என்கிற விமர்சனங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை அரசியல் சார்ந்துள்ளவர்கள் விமர்சனம் செய்யும் போது நடிகரின் தாய் மொழியை முன்னிலைப் படுத்துகிறார்கள், இது போன்ற சகிப்புத்தன்மை அற்ற விமர்சனங்கள் திரையில் நடித்திருக்காத பெரியார் அவர்களுக்கே நடந்திருக்கிறது, அவர் கன்னடர் என்றும் இராமசாமி நாயக்கர் என்றும் இன்றும் கூட வரிந்து எழுதும் சாதி வெறியர்கள் உண்டு. இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுன் தமிழ் பற்றும் சாதி எதிர்ப்பும் கேள்விக்கும் கேலிக்கும் உரியவையே, ஏனெனில் இவற்றில் தனக்கே உரிய சார்ப்பு நிலைகளில் இருந்து கொண்டு தான் இந்த விமர்சனங்களைச் செய்கிறார்கள்.

எம்ஜிஆரின் அரசியல் நுழைவின் போதும் அவரை விமர்சனம் செய்ய அவர் மலையாளி என்பதாக குரல் எழுந்து அடங்கியது. மக்களின் அன்பைப் பெற்றுவிட்டால் அத்தகைய விமர்சனங்களால் பயன் ஏதும் இல்லை என்பதை எம்ஜிஆர் மறையும் வரை அவர் அரசே அமைந்திருந்ததன் வழியாக காணமுடியும், சாதி சார்ப்பு, மதச் சார்ப்பு அரசியல் இவை நிலையானதும் அல்ல. ஒரு அரசியல் இயக்கத்தின் தேவை மக்கள் மனதின் ஏக்கமாக இருந்தால் மட்டுமே அது வளர்ச்சி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும், அந்த வகையில் திராவிட அரசுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இவற்றிற்கு மாற்றான அரசு என்று கூறிக் கொள்ளும் தகுதியில் அதன் பிறகு எந்த ஒரு கட்சியும் வளர்ந்துவிடவில்லை எனவே திராவிடக் கட்சிகளே தொடர்ந்து ஆண்டுவருகின்றன, ஆனால் முன்பைப் போல் தனிப் பெரும்பான்மை என்பது கேள்வி குறியாகிவிட்டபடியால் சிறுபான்மை அரசு, கூட்டணி ஆதரவு என்பதாகத்தான் திராவிட ஆட்சிகள் நடந்துவருகின்றன, இதற்கு கருணாநிதியோ ஜெ வோ விதிவிலக்கு இல்லை.

அரசியலுக்கான தகுதி முன்பைப் போல் மக்கள் தொண்டாற்றியவர்கள் என்ற தகுதியில் புதிதாக உள்ளே ஒருவர் நுழைவதற்கான வாய்ப்புகளே இல்லை அல்லது குறைவு, திராவிட இயக்க ஆட்சி ஏற்படும் முன் பண்ணையார் மேலாண்மை, முதாலாளித்துவ, பார்பனிய மேலாண்மையுடன் தொடந்த காங்கிரசு ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற பரவலான எண்ணம் ஏற்பட்டு பிற்பட்ட சமூகத்தினரின் முன்னெடுப்பகளால் பெரியார் வழியாக திராவிட இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பெற்றின. அதன் பிறகு 40 ஆண்டுகள் திராவிட இயக்கங்களின் ஆட்சியே நடந்துவருகிறது, 40 ஆண்டுகளாக அண்ணாவின் ஆட்சியை அமைக்கிறோம், அண்ணாவின் நாமம் என்று சொல்லிக் கொண்டே திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளுமாக மாறி மாறி ஆண்டன. திராவிட இயங்கங்களின் சித்தாந்தங்கள் அனைத்தும் நிறைவேறி இருந்தால் அல்லது அதன் தேவைகள் இன்றும் இருந்தாலோ இந்த இரு கட்சியில் எதோ ஒன்று தான் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.

இவர்களின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் கூட்டணி பலம் என்ற ஒன்றை மாற்றி அமைப்பதின் மூலமே மாறி மாறி நிறைவேறி வருகிறது அன்றி, மக்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் அரசுகள் இவை என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பதவி அதன் அதிகாரம் எதையும் சாதித்துவிட முடியும் என்பதாக அதிமுக ஒரு மாற்றுவழியை அரசியல் தக்கவைப்பிற்கு பயன்படுத்தியது, அதையே தான் திமுகவும் செய்துவருகிறது, கூடுதலாக பணம், இலவசம் ஆகியவற்றுடன் திமுக திராவிட இயக்க ஆட்சிகளின் பரிணாமம் என்பதாக மாற்றிக் கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில் புதிய அரசியலுக்கு வருகிறவர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தாலே நாமும் ஏன் அரசியலில் இறங்கக் கூடாது என்கிற ஆசை வருவது இயல்பு. விஜயகாந்த் அப்படித்தான் அரசியலுக்கு வந்தார். விஜய் போன்றவர்களின் நாற்காலிக் கனவுகளும் தெரிந்தவையே. நடிகனை நடிக்க விடுங்க, அரசியலுக்கு இழுக்காதீர்கள் என்கிற அஜித்தின் குரல் கலகக் குரலாக திரைத்துறையுனுள்ளேயே புயலைக் கிளப்பி இருக்கிறது, மேலும் திரை நடிகர்களை தேர்தலுக்கு தேர்தல் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும் பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக ஜாக்குவார் தங்கம் போன்றவர்களை தூண்டி அஜித் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் தகவல் வருகிறது. நாடாச் சங்கம் கொதிக்குதாம், இன்னும் என்னன்ன சாதி சங்கங்களெல்லாம் கொதிக்குதாம், சாதி சங்கங்கள் எந்த ஒரு ஓடாத, ஊத்திக் கொண்ட படத்தையும் ஓட வைத்தது இல்லை, நாடார் சங்கம் கொதித்து நாடார்கள் அனைவரும் பார்த்திருந்தால் ஜக்குபாய் உட்பட எத்தனையோ சரத்குமார் படங்கள் ஓடி இருக்கும், சரத்குமார் சென்ற தேர்தலில் பிணைத் தொகை கூட கிடைக்காமல் தோல்வியை சந்தித்தார். அஜித் பேச்சை சாதி மற்றும் மொழிச் சார்ப்பில் மாற்றித் திரிப்பது மிகவும் கீழ்த்தரமான ஒன்று, இதை முன்பு பெரியார் மற்றும் எம்ஜிஆருக்கும் செய்தார்கள், இரஜினிக்கும் செய்தார்கள், அவரும் தான் கன்னடன் தான் என்று கூறியோ அல்லது தன் மகள்களுக்கு பெங்களூரில் திருமணம் முடிக்கவில்லை, அவரது மருமகன்கள் கூட சென்னையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும் தாம் ஒரு தமிழன் என்பதை சொல்லாமல் உணர்த்தி வருகிறார். திராவிடக் கட்சிகளிடம் அவமானப் பட்டவர்கள் அனைவருமே தனித்தனி கட்சியை நடத்தி பின்னால் திராவிடக் கட்சியினரால் கூட்டணிக்கு இழுக்கப்பட்டனர், குறிப்பாக இராமதாசு, திருமாவளவன் தற்போது வி.காந்த்

ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.

நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம், ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும்.

30 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

//நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம், ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும்.//

நாற்காலி கனவுடன் வரும் நடிகர்களுக்கும் பொருந்தும் தானே??

ராஜ நடராஜன் சொன்னது…

சும்மா கிடந்த எம்.ஜி.ஆர் என்ற சங்கை இப்படித்தான் தி.மு.க ஊதி பெரிது படுத்தியது.

திரைப்பட நடிகர் பாரம்பரியம் அரசியலுக்கு தேவையில்லையென்ற போதிலும் நிகழ்வுகளூம் உருப்படியில்லாத கட்சி தலைவர்களும் அதனைப் புதுப்பிக்கவே செய்வார்கள் போலும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

கண்ணன்,இதில் மு.கு.வையும் மீறி பிண்ணனியில சிலர் தூண்டி விடுவதால் அஜித் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
(ஜீ.வி.பேட்டி படித்தீர்களா?)

ஆனால் முக.அவர்கள் பிள்ளையைக் கிள்ளவிட்டு தொட்டிலை ஆட்டுவதில் வல்லவர் எனபதால் சிறிய குழப்பம் நீடிக்கிறது!

எனக்கென்னவோ ஆளும் தரப்பு நடிகர்களின் பலத்தைச் சோதித்துப் பார்ப்பது போல இருக்கிறது;பிற்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவார்களாக இருக்கும்..

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909 said...

கண்ணன்,இதில் மு.கு.வையும் மீறி பிண்ணனியில சிலர் தூண்டி விடுவதால் அஜித் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
(ஜீ.வி.பேட்டி படித்தீர்களா?)

ஆனால் முக.அவர்கள் பிள்ளையைக் கிள்ளவிட்டு தொட்டிலை ஆட்டுவதில் வல்லவர் எனபதால் சிறிய குழப்பம் நீடிக்கிறது!

எனக்கென்னவோ ஆளும் தரப்பு நடிகர்களின் பலத்தைச் சோதித்துப் பார்ப்பது போல இருக்கிறது;பிற்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவார்களாக இருக்கும்..

:))//

நடிகர்களை எதிர்ப்பது பற்றி எனக்கு கருத்து இல்லை, அது அரசியல்வாதி நடிகர் போட்டித்தன்மை என்று கூட நினைத்துக் கொள்ளலாம். ஆனால் சாதி, மொழி பற்றிய சர்சைகளெல்லாம் படு கேவலமாக இருக்கிறது. முற்றிலும் தன்னம்பிக்கை தொலைந்து அதிகார தக்கவைப்பில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

பின்னூட்டத்திற்கு நன்றி அறிவன் சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...

//நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம், ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும்.//

நாற்காலி கனவுடன் வரும் நடிகர்களுக்கும் பொருந்தும் தானே??//

நாற்காலிக் கனவுக்கு வாக்களன் என்ற தகுதி இருந்தால் போதும். :) அவர்கள் நடிகர்களாக இருந்தால் ஒன்றும் தவறே இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் said...

சும்மா கிடந்த எம்.ஜி.ஆர் என்ற சங்கை இப்படித்தான் தி.மு.க ஊதி பெரிது படுத்தியது.

திரைப்பட நடிகர் பாரம்பரியம் அரசியலுக்கு தேவையில்லையென்ற போதிலும் நிகழ்வுகளூம் உருப்படியில்லாத கட்சி தலைவர்களும் அதனைப் புதுப்பிக்கவே செய்வார்கள் போலும்.//

விளக்கு பிரகாசமாக எரிந்தால் என்னவோ சொல்லுவார்கள்.

பெயரில்லா சொன்னது…

எம்.ஜி.ஆரை இங்கே ஒப்பிட முடியாது.

அவர் இலங்கையில் பிறந்து, பின்னர் தந்தை மரித்தவுடன் நேராக கும்பகோணம் தன் 3வது வயதிலேயே வந்து, தமிழைக்கற்று அதை பாண்டித்தியமும் (இலக்கியத்தை இரசிக்கும் தன்மை, இல்க்கியநயத்தோடு எழுதும் தன்மை) பெற்று, திராவிட இயக்கத்தின் தலவர்களோடு நெருங்கிப்பழகியவர்.

கேரளாவிற்குப்போய் பொதுமேடையில் பேசினாலும், தமிழல்தான் பேசுவார். ஒருமுறையில் அவர்பேச்சை தான் ஆங்கிலத்தில் மேடையில் (கொச்சியில்) மொழிபெயர்த்த்தாக வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.

அரசு கூட்டங்களில் தில்லியில் தமிழில்தான் பேசுவார்.

வாணாள் முழுவதும் தமிழ், தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர்களால், திரைப்படத்துக்கும் அப்பால், மதிக்கப்பட்ட ஒருவரை,

பெங்களூரில் கன்னடம், வீட்டில் மலையாளம் என்றெல்லாம் பேசித்திரியும், இரசனி, அசித்து,போன்றோருடன் ஒப்பிட முடியுமா?

எம்.ஜி.ஆருக்கு ‘மலையாளி’ பட்டம் ஒட்டவில்லை. மக்களுக்கு அது தெரிந்தது.

விஜய்காந்த் நிலையென்ன? வீட்டில் தெலுங்கு. ட்

தேசிய மொழி இந்தி கற்போம்; தமிழையும் கற்போம் - என்ற கட்சி சுலொகன்.

எவரும் தமிழர் தலைவராகலாம். ஆனால், அவன் உள்ளத்தில் அடித்தளத்தில், இரகசிய்மாக தன் மொழி, தன் இனம என மற்றொருவரை வைத்துக்கொண்டு தலைவனாக நினைப்பது,

இன்னொருவனை நினைத்துக்கொண்டு, கணவனோடு புணர்வதற்கு ஒப்பாகும்.

ஒருநாள் தெரிந்து விடும்.

மக்கள் வி.காந்தைப்புரிந்து கொண்டார்கள்.

அதைப்போல அனைவருஐயும் புரிவாரகள். ஏமாற்ற முடியாது.

பிழைக்க வந்தால் பிழைத்துவிட்டுப் போ. தமிழர தலைவனாக வேண்டுமென்று ஆசைப்பட்டால், முதலில் முழுமனதாக அவரகளை நேசி எம்.ஜி.ஆரப்போல...!

ஜோ/Joe சொன்னது…

//எம்.ஜி.ஆரை இங்கே ஒப்பிட முடியாது.

அவர் இலங்கையில் பிறந்து, பின்னர் தந்தை மரித்தவுடன் நேராக கும்பகோணம் தன் 3வது வயதிலேயே வந்து, தமிழைக்கற்று அதை பாண்டித்தியமும் (இலக்கியத்தை இரசிக்கும் தன்மை, இல்க்கியநயத்தோடு எழுதும் தன்மை) பெற்று, திராவிட இயக்கத்தின் தலவர்களோடு நெருங்கிப்பழகியவர்.

கேரளாவிற்குப்போய் பொதுமேடையில் பேசினாலும், தமிழல்தான் பேசுவார். ஒருமுறையில் அவர்பேச்சை தான் ஆங்கிலத்தில் மேடையில் (கொச்சியில்) மொழிபெயர்த்த்தாக வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.

அரசு கூட்டங்களில் தில்லியில் தமிழில்தான் பேசுவார்.

வாணாள் முழுவதும் தமிழ், தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர்களால், திரைப்படத்துக்கும் அப்பால், மதிக்கப்பட்ட ஒருவரை,

பெங்களூரில் கன்னடம், வீட்டில் மலையாளம் என்றெல்லாம் பேசித்திரியும், இரசனி, அசித்து,போன்றோருடன் ஒப்பிட முடியுமா?

எம்.ஜி.ஆருக்கு ‘மலையாளி’ பட்டம் ஒட்டவில்லை. மக்களுக்கு அது தெரிந்தது.//

வழிமொழிகிறேன்.

ramalingam சொன்னது…

ரஜனியை சி.எம் ஆக்காமல் விட மாட்டார்கள் போல.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா

priyamudanprabu சொன்னது…

ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.
///////

ஏதவது நடந்தா சரி

Unknown சொன்னது…

Well said Govi...
Liked this post and read twice.. Well done.. One of your best post...

Keep up the good work..

Agmark.

பெயரில்லா சொன்னது…

//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.//

கண்டிப்பாக.

வந்தாரை வாழ வைத்த தமிழர்கள் இந்த கன்னடியர்-மலையாளி கூட்டணியையும் வாழவைப்பார்கள்.

திராவிடக்கட்சிகள் ஒரேயடியாக அழியப்போகின்றன என்பதை நானும் உறுதியாக நம்புகிறேன்.

வருண் சொன்னது…

****ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.

நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம், ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும்.***

திமுகவுக்கு சனியன் பிடிச்சிருச்சுனு நெனைக்கிறேன்.

ஜாகுவார் தங்கத்தை ஹீரோவாகவும் ரஜினி-அஜீத்தை வில்லனாகவும் வைத்து தயாரிக்கும் இந்தப்படம் ஃப்ளாப் ஆகி தயாரிப்பாளர்களை தெருவுக்கு கொண்டுவரும்.

Jawahar சொன்னது…

ரஜினிகாந்த்தின் தாய் மொழி கன்னடமில்லை. மராத்தி. ரஜினியாகட்டும்,எம்ஜியாராகட்டும்,அஜித்தாகட்டும்,ஈவேரா வாகட்டும் அவர்கள் வேற்று மொழிக்காரர்கள் என்று தெரிந்தேதான் தமிழர்கள் அபிமானம் காட்டுகிறார்கள். தமிழர்களை எப்படியெல்லாமோ அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்கள், ஆனால் இந்த வேற்று மொழிக்காரன் என்கிற அடையாளம் காட்டி காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுகிற போது மட்டும் நம்ம ஆள் ஏமாறுவது இல்லை!

http://kgjawarlal.wordpress.com

Kesavan சொன்னது…

http://cinema.dinamalar.com/tamil-news/1783/cinema/Kollywood/Ajith-is-not-like-Anamika!.htm

ஜாக்குவார் தங்கத்தின் மற்றொரு முகம்

Unknown சொன்னது…

பின்னூட்டத் தொடர்ச்சி...

கலைஞன் எல்லாவற்றையும் கடந்தவன், குகநாதன் தெலுங்கில் படம் இயக்கினார் போன்ற உளறல்களை இங்கு சில வலைப்பதிவுகளில் பார்க்கக் கிடைத்தது. கலை மக்களுக்கானது தானே.. கலைஞன் எல்லை
கடந்தவன் என்ற ஜல்லிய எவ்வளவு நாளைக்குத் தான் அடிக்கப் போறாங்களோ.
ஒரு கலைஞனின் தாய்க்களம் எங்கோ இருக்கத் தான் செய்கிறது. அந்த ஒரு புள்ளியிலிருந்து தான் அவன் கெளம்புறான். மக்களும், மொழியும், இனமும் இல்லன்ன, யாருக்கு கலை யாருக்கு திரைப்படம்?
பிரகாஷ்ராஜின் தாய்க்களம் தமிழ் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். கர்நாடகாவிலிருக்கும் தமிழர் ரவிச்சந்திரன் தன் தாய்க்களம் கன்னடநாடு என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒன்றுபட்டுக் குரலும் கொடுக்கிறார்.குகநாதன் தெலுங்கில் படம் இயக்கி இருந்தால் என்ன அவரின் தாய்க்களம் தமிழாகத் தான் இருந்திருக்கிறது.அதிலே அவர் உறுதியாகவும் இருக்கிறார். தெலுங்கில் படம் இயக்கினால் அவர் தமிழருக்கு, தமிழுக்காய் குரல்
கொடுக்கக் கூடாதா என்ன என்ன காமெடியா இருக்கு!

தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டபோது இடம்பெற்ற பேரணிகளின் போது பின்வாங்கியது, ஈழப் பிரச்சினையின் அங்கு ஒரு இனப் படுகொலையே நடந்த போது கூலாக தேசியவாத வெறியைக் கக்கியது போன்றவற்றிற்காக அந்த நடிகரை சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து தான் விளாசியிருக்காங்க (குகநாதன் ஓர் ஈழத் தமிழர்!). இத அவர் பேசினப்பவே கொடுத்திருந்தா என் போன்றோர் மகிழ்ந்திருப்போம்.
அதவிட்டுட்டு இப்போ தேவையற்று கொலைஞர் விழா, ஜக்குவார் டங்குவார் எனப் போவது கடுப்பைத் தருகிறது.

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன்//

:) ்பார்ப்போம் எந்திரனுக்குப்பிறகு

குகன் சொன்னது…

நல்ல பதிவு. இந்த பிரச்சனையோடு பெரியார், எம்.ஜி.ஆர் பிரச்சனையோடு ஒப்பிட்டது நன்றாக உள்ளது.

அது என்ன இரஜினி...??? ரஜினினு போஸ்டர் ஒட்டக் கூடாதா... ஓ... இதுக்கு பேரு தான் தமிழ் பற்றா...!!

அஜீத், ரஜினி பெயர் வர 'ஜ' தமிழ் எழுத்தா !!

கோவி.கண்ணன் சொன்னது…

zeroவின் பின்னூட்டம் எதிர்பாராவிதமாக தவறாக நீங்கிவிட்டது, அதை மின் அஞ்சலில் இருந்து வெளி இடுகிறேன்.

zero has left a new comment on your post "அஜித்தின் கலகக் குரல் !":

ரஜினி தன்னை தமிழ்நாட்டுடன் தான் பிணைத்துக் காட்டி வருகிறார். அவரின் வட நாட்டு ஆன்மீகம், வலதுசாரிப் போக்கு ஆலோசகர் சோ ஊட்டும் மெது பார்ப்பனியக்
கருத்துக்கள் போன்றவற்றை விட்டுவிடலாம். உங்க உதாரணம் தப்பாப் போச்சு. ரஜினி ரெண்டு மகள்களுக்கும் கருநாடக, ஆந்திரவில் தான் மாப்பிள்ளை பார்த்தலைந்தார், அது நட்பு ரீதியான சம்பந்தமாகக் கூட இருக்கலாம். மோகன்பாபு போன்றோரின் மகன்கள்
பெயர்கள் அடிபட்டதை மறக்க வேண்டாம், அவர் மகள்கள் காதலித்து மணந்ததால் அவரால்
ஒன்றும் பண்ண முடியவில்லை. வேறு எடுத்துக்காட்டுடன் வந்திருக்கலாம், கோவிக்கண்ணன்.

பெரியார், எம்.ஜி.ஆர் போன்றோரை அஜித் போன்றோருடன் ஒப்பிடுவதா? எம்.ஜி.ஆர் தன்னைத் தமிழனாகத் தான் காட்டிக் கொண்டார். ஈழ விடுதலை ஆதரவு, திராவிட
இயக்கங்களுடன் அவர் கொண்ட தொடர்பு, கேரளத்திலிருந்து வந்த பிரமுகருடன் அவர் இது
தமிழ்நாடு என தமிழில் பேசியது போன்ற கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெரியாரைப்
பற்றிச் சொல்ல வேண்டாம், அவரைக் கன்னடர் என மற்றோர் தூற்றிய போது தான் ஆம் நான்
கன்னடன் தான் என்றார். மற்றபடி அவர் சிந்தனை முழுதும் தமிழர் உய்வுக்கானது. தமிழர் ஏற்றம்
பெற, எம் மொழி உயர்வடைய அவர் சதாகாலமும் சிந்தித்துக் கொண்டிருந்தார். யார் மறுத்தாலும்,
இப்போது கிளம்பியிருக்கும் இடதுசாரித் தமிழ்த்தேசியத்தின் முதற் புள்ளி அவர் தான் என்பது
வெள்ளிடை மலை!

தமிழ், தமிழன் என்னும் வட்டம் யூதர் போலோ, பார்ப்பனர் போலோ இறுகியது, பிறப்பிலிருந்து
தொடங்குவது அல்ல. தன்னைத் தமிழனாக உணர்பவன் எவனும் தமிழன் தான். பிறப்பு, சாதி,
இனம் அவசியமற்றது.

பிரகாஷ்ராஜ் தன்னைத் தமிழனாகத் தான் முன்னிறுத்துகிறார். வைகோவை விடவா ஒரு
தமிழுணர்வு கொண்ட தமிழன் இங்குண்டு (அரசியல்வாதியாக அவர் பல இடங்களில் சறுக்கியிருக்கலாம்)? வேர்ச்சொல் ஆராய்ச்சியில், தமிழின் தனித்தன்மையை நிறுவியதில்
மதிவாணனின் (கொடிவழி கன்னடம்) பங்கைச் சொல்ல வேண்டுமா?

ஆக, இங்கு பிரச்சினை எவ்வினத்தவர் என்பதல்ல. அவர் வாழும் மண்ணுக்கு, அம்மக்களுக்கு
அம் மொழிக்கு என்ன நன்மை செய்திருக்கிறார் என்பது கூட அல்ல. குறைந்த பட்சம் தீமையாவது
செய்யாதிருக்கிறரா என்பதே!

கலைஞருக்கு விழா எடுத்ததே ஒரு அபத்தம். அஜித் மிரட்டப் பட்டு அழைக்கப் பட்டிருந்தால்
அது கண்டிக்கத் தக்கது! மாற்றுக் கருத்து இல்ல!குகநாதனின் பாடக சாலை பேச்சும், அரைவேக்காடு
ஜக்கு தங்கத்துக்காக திருமா தன் ஆதரவை அளித்ததும் எரிச்சலைத் தருகிறது. அஜித் பத்தியோ, ரஜினி
பத்தியோ பேசறத விட, இவர்களைத் ஜக்குவார் டங்குவார் போன்றோரைத் திட்டும் போது இதான் சாக்குன்னு
இப்பிரச்சினைகளில் அடிபடும் தமிழ், தமிழுணர்வு பற்றிக் கொஞ்சம் பேசலாம்.

பிறமொழியினர் (தயாரிப்பு, நடிப்பு இத்யாதி என) தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பிரயத்தனப் படும் தமிழ் சினிமாவை தமிழ் நாடு, தமிழ் மக்கள் மீது உண்மை உணர்வு கொண்ட நம் கலைஞர்கள் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் நல்லதே! தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எல்லாரும்
பிச்சுக்கிட்டு போனப்புறம் ஏன் தமிழ் நடிகர் சங்கம் என மாத்தக் கூடாதென நடந்த போராட்டங்கள் எல்லாம்
நீங்க அறியாததா? (தமிழ் சினிமாவின் தேசிய மொழி தெலுங்கு என்பார் சுஜாதா!) இது பிற ஆதிக்கர்களுக்கும் தமிழுணர்வர்களுக்கும் இடையே நடக்கும் தொன்றுதொட்ட போராட்டம் தான். தமிழ் நாட்டின் ஒவ்வொரு
தளத்திலும் இது தானே நடக்குது.. கல்வியில், நீதித் துறையில் எல்ல இடமும். தம் பிறந்தகத்தின் துறைகளை தம் கைவசம் வச்சிருக்க ஒரு கண்ணுக்குப் புலப் படா போராட்டம் , இழுபறி மாறிமாறி நடந்துட்டு இருக்கறத
மேலோட்டமாப் பார்க்காம, ஆழமாப் பார்க்கற அனைவருக்கும் புரியும். சீமான், பாலா, அமீர், சேரன் என பாரதிராஜா, பாலுமகேந்திரா பட்டறைக்காரர்களின் எழுச்சியும், பெப்சி போன்ற தொழிலாளர் சங்கங்களை தமிழுணர்வாளர் கையகப் படுத்தலும் இதையே காட்டி நிக்கிறது. ஒரு கூடாரம் பலமாக உருவாகி வருகிறதை உணரவில்லையா நீங்கள்?

அதன் விளைவாகத் தான் நெரிக்கட்டி இருந்த பிரச்சினை ஒன்று இப்போது சீழ் வெளியேறி இருக்கிறது.
தங்கர் - குஷ்பூ விஷயம் போல தான். பின்னாடி காத்திருந்து தக்க தருணம் வரப்ப போட்டிருக்காங்கன்னு
தான் சொல்லத் தோணுது.

பித்தனின் வாக்கு சொன்னது…

good one

Robin சொன்னது…

பதிவை விட zeroவின் பின்னூட்டம்தான் நியாயமாகப்படுகிறது.

//தன்னைத் தமிழனாக உணர்பவன் எவனும் தமிழன் தான்.// அருமை.

அவர் zero அல்ல ஹீரோ.

Chittoor Murugesan சொன்னது…

//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன்.//
உங்க கணிப்பு 50 சதவீதம் கரீட்டுங்கண்ணா மகா அவதார் பாபாவே நேர்ல வந்தா கூட ரஜினிய அசைக்க முடியாதுங்கண்ணா. தூங்கறவுகளை எழுப்பலாம். தூங்கறாப்ல நடிக்கிறவுகளை ?

ரஜினி கை தட்ட தான் லாயக்கு

ஆளவந்தான் சொன்னது…

உங்க எழுத்துல நல்ல சாதூர்யம் தெரியுதுங்கோ.. ஜோக்குவாரை பத்தி சொன்ன நீங்க.. அவரோட சேர்ந்து இன்னொருவரும் வரிஞ்சு கட்டிகிட்டு நின்னாரே.. அதை பத்தி மூச்சே விடலியே.. எல்லா ”காலக்” கொடுமையப்பா ...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
உங்க எழுத்துல நல்ல சாதூர்யம் தெரியுதுங்கோ.. ஜோக்குவாரை பத்தி சொன்ன நீங்க.. அவரோட சேர்ந்து இன்னொருவரும் வரிஞ்சு கட்டிகிட்டு நின்னாரே.. அதை பத்தி மூச்சே விடலியே.. எல்லா ”காலக்” கொடுமையப்பா ...

5:30 AM, February 28, 2010
//

வி.சி. குகநாதனா ? அவரையெல்லாம் சேர்த்து எழுதினால் பதிவு பெரிதாக போகுமே.

ஆளவந்தான் சொன்னது…

//

வி.சி. குகநாதனா ? அவரையெல்லாம் சேர்த்து எழுதினால் பதிவு பெரிதாக போகுமே.
//
அநியாயத்துக்கு கேள்வி கேக்குறீகளே.... வி.சி தான்.. ஆனா குகநாதன் இல்ல.. நாடார் ஜாதியை வாங்கு வாங்குனு வாங்கியிருக்கீங்க.. ஆனா வி.சி - அவரை பத்தி ஒரு வார்த்தை வரலியே.

கோவி.கண்ணன் சொன்னது…

/ ஆளவந்தான் said...
//

வி.சி. குகநாதனா ? அவரையெல்லாம் சேர்த்து எழுதினால் பதிவு பெரிதாக போகுமே.
//
அநியாயத்துக்கு கேள்வி கேக்குறீகளே.... வி.சி தான்.. ஆனா குகநாதன் இல்ல.. நாடார் ஜாதியை வாங்கு வாங்குனு வாங்கியிருக்கீங்க.. ஆனா வி.சி - அவரை பத்தி ஒரு வார்த்தை வரலியே.
//

அரசியல்வாதிகள் நிலைப்பாடு பற்றி நான் இந்த பதிவில் பேசவில்லை. அப்படி சொல்லி இருந்தால் ஈவிகேஎஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோரை குறிப்பிட்டு இருப்பேன்

ஆளவந்தான் சொன்னது…

பராவாயில்லை.. வி.சி னா, யாருனு கேள்வி கேக்காம விட்டீக, அதுவரைக்கும் சந்தோசம்.

நானும் அரசியல்வியாதியஸ்தர்களை சொல்ல வில்லையே.. ஒரு ஜாதியை வாங்குனு வாங்குனீங்களே இவரும் அவருக்கு வக்காலத்து வாங்கினாரேனு தான் கேட்டேன்...

சரி என்ன பண்றது.. தப்புனு தெரியுது.. ஆனாலும் எழுத முடியலை, அப்டி தானே? மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும் மணக்குது ( ச்சே பாருங்க தமிழ்ல இதுக்கு ஒரு கெட்ட பழமொழி கூட கெடைக்கல எனக்கு :( )

ரைட் விடுங்க பாஸ்.. நம்ம எல்லாம் தமிழ்னுங்க, அப்டி தான் கூட/குறைய இருப்போம் ( எனக்கு நானே சொல்லிகிட்டேன் )

ELANGO T சொன்னது…

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தனது சொல்லாலும்,செயலாலும் சீர்திருத்த கருத்துக்களை பரப்பி தமிழ் மக்களின் உள்ளத்தில் இருப்பவர்.எம்.ஜி.ஆர் அவர்கள் இன்றும் தமிழ் மக்களுக்கு ஒரு ”ஹீரோ”தான்.இவர்கள் இருவரும் மொழி,இனம் போன்ற ஒரு வட்டத்திற்குள் உட்படாதவர்கள்.இவர்களை மற்ற நடிகர்களோடு ஒப்பிடுவதே தவறு. ----தி.தமிழ் இளங்கோ

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்