பின்பற்றுபவர்கள்

5 பிப்ரவரி, 2010

இன்று முதல் உலக சைவ மாநாடு !

சிவ வழிபாட்டுக்கு நீண்ட வரலாறுகள் உண்டு, சிந்து சமவெளியில் தொடங்கி லிங்க உருவங்கள் சிவனாக வணங்கப்படுகிறது, பழங்குடி வழிபாட்டின் மிச்சமாகவும், வைதீக வழிபாட்டின் உச்சமாகவும் இன்று வரை சிவ வழிபாடுகள் நடந்துவருகின்றன.

சிவன் என்று மதச் சார்ப்பு கொண்டவன் ஆனான் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு சைவம், சிவ மதம் என்ற பெயரில் சிவ வழிபாடு குறுக்கப்பட்டு தனி அடையாளம் ஆனது, வேதங்களின் வழியாக சிசுன தேவர் (ஆண்குறி தெய்வம்) என்றெல்லாம் பழிக்கப்பட்ட சிவலிங்க வழிபாட்டை வேதங்களில் சொல்லப்படும் ருத்ரன் என்னும் அழிக்கும் தெய்வத்துடன் தொடர்பு படுத்தப்பட வார்சடையும், இளம் பிறையும், தலையில் கங்கையும், சிவ புராணங்களும் வழக்கம் போல் ஒரு மனைவியும் அமைத்து கொடுத்து இவனே நீங்கள் வணங்கும் சிவனாவான் என்று சொல்லப்பட்டது.வட இந்தியாவில் பிள்ளையாரும், தென்னிந்தியாவில் முருகனும், பிள்ளையாரும் சிவனுக்கு மகனாகச் சொல்லப்படுகிறது. சிவன் ருத்ரனாக மாற்றிக் காட்டப்பட்டாலும் இன்றும் கூட சிவன் கோவில் மூலவர் சிலையாக சிவ லிங்க உருவமே வழிபடப்படுகிறது. நடராஜன் உருவம் பஞ்ச பூதக் கலவை அல்லது அதன் குறியீடுகள் அதில் அடங்கி இருக்கின்றன என தத்துவ விளக்கங்களெல்லாம் கொடுக்கின்றனர். ருத்ரனே சிவன் என்பதாக எத்தனையோ கதைகள் சொல்லப்பட்டாலும், ஊழிக் காலத்தில் தாண்டவன் ஆடி உலகை அழிப்பவன் அவனே என்று சொல்லப்பட்டாலும் சிவன் வணங்கப்படுவது இன்றும் பழங்குடிகளாக வழிபட்ட லிங்க உருவங்களில் தான். பார்பன புராணங்களைப் படிக்கும் பிற மதத்தினரும் லிங்க வடிவம், லிங்கம் என்பது ஆண் குறி குறித்த சொல்லே என்பதாக நினக்கிறார்கள். உண்மை அதுவல்ல, தீ அல்லது கண்ணுக்குத் தெரியாத அருட்பெரும் சோதி ஒளி வடிவ இறைவனின் உருவகம் தான் சிவ லிங்கம் என்பதாகவும் சொல்லப்படுகிறது. வைணவம் போற்றும் இராமன் சிவனை வழிபடுவதாக அமைந்த இடமே இராமேஸ்வரம். முட்டை அல்லது விதைவடிவமாக இருக்கும் அந்த பேரொளியின் வழிபாட்டு வடிவமே லிங்கம் என்றும் சொல்லுகிறார்கள். சிவலிங்க உருவத்திற்கு என்ன விளக்கம் கொடுத்தாலும் சிவலிங்க வணக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வருபவையே.

வடக்கா தெற்கா ? சிவன் எந்த பகுதிக்கு சொந்தம் என்கிற உரிமைப் போராட்டமாக கையிலை மலைக்கு அல்ல எங்கள் தென்னாட்டிற்கு உடைமை உடையவன் என்பதாக தென்னாடுடைய சிவனே போற்றி என்றாலும் அடுத்த வரியில் அப்படி அடைபடுத்தினாலும் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றும் சொல்லி வைத்தார்கள். இந்து மதங்களுக்குள் தனித்தனி அடையாளமாக சமயங்கள் இருந்த போதிலும் அதற்கும் முன்பேயும் சிவ வழிபாடுகள் நடந்து வந்திருக்கின்றன. இருந்தாலும் சிவ வழிபாட்டினரின் உணவு என்று தனிப்பட்டு எதுவும் கிடையாது, காலப் போக்கில் புனிதப்படுத்தடும் சடங்குபோல் காய்கறி உணவை மேலாக கருதும் பழக்கமும், அவை ஏற்கனவே பெளத்த, சமண சமயங்களில் உணவு கொள்கையாக இருந்ததால் சிவனை வணங்கும் தமிழ் / திராவிட தொன்மை சமூகமும் (பழங்குடி வழிபாடுகளும்) வைதீக சமயம் ஒன்றிணைந்து சிவ மதம் என்ற ஒன்றை உருவாக்கியது, இவை பக்தி இயக்கமாக வளர்ந்து ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் புனையப்பட்டு சிவ மதம் > சைவ மதம் என்ற பெயரில் தனி அடையாளமாக மாறியது.

இன்றைய தேதியில் சைவம் என்பது மரக்கறி உணவு முறையின் குறியீடு என்ற அளவுக்குத்தான் நினைக்கப்படுகிறது. சைவம் என்ற சொல்லே சிவம் என்ற சொல்லில் இருந்து வந்தது ஆகும் அவர்களின் உணவு முறை காய்கறி உணவு என்பதாக நினைக்கும்படி வைதீகம் மூலம் ஆகமப்படுத்தப்பட்ட சிவனைப் பின்பற்றுபவர்கள் மாற. அவர்களைக் குறிக்க சிவாச்சாரியார்கள், சைவர்கள் என்று வழங்கப்பட்டது. நாளடைவில் அதில் இருக்கும் சிவ அடையாளமும் போய் சைவம் என்பது மரக்கறி உணவு வகை என்று நினைக்கும் படி சிவ வழிபாட்டினர் உணவு முறைத்தவிர்த்து பிறருடன் பெரிய அளவில் வழிபாட்டு முறைகளிலோ, பண்பாட்டிலோ மாறி இருக்கவில்லை என்பதால் வெறும் உணவு அடையாளம் என்பதாக மாறியது.

இன்றும் சைவ மதத்தினர் என்று சொல்லப்படுபவர்கள் கார்காத்த மற்றும் திருநெல்வேலி வெள்ளாளர்கள் எனப்படும் பிள்ளைமார்கள், சைவ பார்பனர்கள், செட்டியார்கள், முதலியார்கள் மற்றும் கர்நாடகாவில் இருக்கும் வீர சைவர்கள், இவர்களின் (வீட்டு) உணவு பழக்கம் பெரும்பாலும் மரக்கறி உணவு வகைதான். சைவம் என்பது சிவசமயம் என்று சிவன் தொடர்பில் குறிக்கும் சொல்லாகும். சைவத்திற்கு போட்டியான மதம் வைணவம், சைவம் என்கிற குறியீடு உணவு முறை குறித்தது அல்ல, அது வழிபாட்டு முறையைக் குறித்தது என்பதாகக் கொண்டால் அசைவம் எனப்படுவது சைவ மதத்திற்கு எதிரான சொல், அப்படி என்றால் அசைவம் என்பது வைணவம். :)
அதாவது சைவமதத்திற்கு மாற்றானது அல்லது எதிரானது.

சைவம் என்ற பெயரில் சிவ வழிபாட்டினர் தம்மை அழைத்துக் கொண்டாலும் பல்வேறு சைவ சாதி அமைப்புகள் பல்வேறு சாதித்த தலைவர்களால் இயங்கி வருகின்றன. பார்பனர் தலைமையில் செயல்படும் சங்கரமடமும் ஒருவகையில் சைவ சமயம் தான். மதுரை ஆதினம், ஆடுதுரை ஆதினம், சைவ சிந்தாந்த சபை இன்னும் பல அமைப்புகள் சைவத்தின் பெயரால் நடைபெற்று வருகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அரசியல்களும் உண்டு.

சிவராத்திரியை தொடர்ந்து இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு உலக சைவ மாநாடு நடக்கிறதாம். போனால் பிரியாணிக் கிடைக்காது, சைவ சாப்பாடுதான். அது பற்றிய அழைப்பிதழ் இணையத்திலும் வெளியாகி இருக்கின்றன. சாதி மீது அளவற்ற பற்று கொண்ட பார்பனர்கள் ஐயர், ஐயங்கார் என்று போட்டுக் கொள்வதை நிறுத்திக் கொண்டனர் அந்த அழைபிதழில் விழா நடத்துபவர்களின் பலபெயர்களில் சிவத்திரு, தவத்திருவுடன் பெயர் மற்றும் , செட்டியார், முதலியார், உடையார், பிள்ளை கள் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. சிவத்திரு, தவத்திருவுக்கு மேல சாதிப் பெயர் என்ன பெருமை சேர்த்துவிடும் என்று தெரியவில்லை, சிவன் தான் இவர்களை திருத்த வேண்டும். இவர்கள் நடத்தும் மாநாட்டுக்கு சிவன் வாழ்த்து சொல்லுவானா சிவனைத்தான் கேட்க வேண்டும்.

சுட்டிகள் :

12ம் உலக சைவ மாநாடு ( பதிவர் சிவத் தமிழோன் பதிவு)


மெய்யடியார்கள் விரைந்து வம்மின்









உலக சைவப் பேரவை


அல்லா....ஜெஹோவா......சிவா !

தென்னாடுடைய (தென்னாட்டின் பெயரிலும், சைவம் என்ற பெயரிலும் அடைபட்டுப் போன) சிவனே போற்றி,

என்னாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி !

ஈஸ்வர் அல்லா தேரா நாம் (ஈஸ்வரன் அல்லா என்பது ஒரே இறைவனின் இரு பெயர்கள்), இன்ஷா அல்லா எல்லோரையும் காப்பாற்று !

13 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

சென்னை பதிவர் சந்திப்பில் நடந்த உரையாடல்.....

பதிவர் : நீங்க சைவ மாநாட்டில் கலந்துக்குவீங்களா?

நான்: இதை பொறத்தவரை நான் அசைவங்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//நான்: இதை பொறத்தவரை நான் அசைவங்க..//

அப்ப நீங்க பட்டைப் போட்டுக் கொண்ட வைணவர்.
:)

Kesavan சொன்னது…

//சைவத்திற்கு போட்டியான மதம் வைணவம், சைவம் என்கிற குறியீடு உணவு முறை குறித்தது அல்ல, அது வழிபாட்டு முறையைக் குறித்தது என்பதாகக் கொண்டால் அசைவம் எனப்படுவது சைவ மதத்திற்கு எதிரான சொல், அப்படி என்றால் அசைவம் என்பது வைணவம். :) //

என்ன உங்கள் கற்பனை. சைவத்துக்கும் வணவதுக்கும் உள்ள வித்தியாசத்தை இப்படி புட்டு புட்டு வைத்திருகிறீர்களே. பாராட்டுக்கள் . அப்படி என்றால் ரட்சகன் திரைபடத்தில் வரும் " காதலிலே ரெண்டு வகை - சைவம் ஒன்று அசைவம் ஒன்று - ரெண்டினில் நீ எந்த வகை - இதற்கும் உங்கள் விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும் . இந்த மாதிரி புதிது புதிதாக எழுதுபவர் இந்த உலகத்தி யாரும் இல்லை . உங்களை எந்த வகையில் பாராட்டலாம் என்று தெரியவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

என்ன உங்கள் கற்பனை. சைவத்துக்கும் வணவதுக்கும் உள்ள வித்தியாசத்தை இப்படி புட்டு புட்டு வைத்திருகிறீர்களே. பாராட்டுக்கள் . அப்படி என்றால் ரட்சகன் திரைபடத்தில் வரும் " காதலிலே ரெண்டு வகை - சைவம் ஒன்று அசைவம் ஒன்று - ரெண்டினில் நீ எந்த வகை - இதற்கும் உங்கள் விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும் . இந்த மாதிரி புதிது புதிதாக எழுதுபவர் இந்த உலகத்தி யாரும் இல்லை . உங்களை எந்த வகையில் பாராட்டலாம் என்று தெரியவில்லை//

சைவம் என்றால் சிவம் என்கிற சொல்லின் மறுவலே, இது பலருக்கும் தெரியும். சாப்பாட்டு இராமன்களுக்கு சைவம் என்றால் உணவு என்று பொருள் இருக்கலாம். உங்களுக்கு வேறு எதாவது மறுக்க ஆதாரம் இருந்தால் சொல்லுங்க. இப்படி பொதுவாக இருக்காது என்று சொல்வது ஆதாரம் இல்லை.

பித்தனின் வாக்கு சொன்னது…

அய்யா வழி வழியாக இறைவனுக்கும் இறை அடியார்க்கும் தொண்டு செய்வது என்ற வைணவத்தின் மீது என்னங்க கோபம். அசைவத்துடன் இணைத்து விட்டீர்களே. நல்ல பதிவு. நல்ல கருத்துக்கள். நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

// சாப்பாட்டு இராமன்களுக்கு சைவம் என்றால் உணவு என்று பொருள் இருக்கலாம் //
இப்ப புரியுதா, நீங்க அசைவம் என்ற பதத்தை எப்படி பயன் படுத்தினிர்கள் என்று புரியாமல் நானும்,பலரும் அசைவ உணவாக எடுத்துக் கொண்டேம். அது போலத் தான் நான் பலமுறை நீங்களும் உங்க பகுத்தறிவும் என்று மொத்த இயக்கத்தில் குறிப்பிட்டால் நீங்கள் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டீர்கள். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

/ பித்தனின் வாக்கு said...

அய்யா வழி வழியாக இறைவனுக்கும் இறை அடியார்க்கும் தொண்டு செய்வது என்ற வைணவத்தின் மீது என்னங்க கோபம். அசைவத்துடன் இணைத்து விட்டீர்களே. நல்ல பதிவு. நல்ல கருத்துக்கள். நன்றி./

இதுல என்ன கோவம் கண்டுபிடிச்சிங்கன்னு தெரியல, அசைவம் என்றால் கொச்சையாக வேறு எதுவும் பொருள் இருக்கிறதா என்ன ?

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தனின் வாக்கு said...

// சாப்பாட்டு இராமன்களுக்கு சைவம் என்றால் உணவு என்று பொருள் இருக்கலாம் //
இப்ப புரியுதா, நீங்க அசைவம் என்ற பதத்தை எப்படி பயன் படுத்தினிர்கள் என்று புரியாமல் நானும்,பலரும் அசைவ உணவாக எடுத்துக் கொண்டேம். அது போலத் தான் நான் பலமுறை நீங்களும் உங்க பகுத்தறிவும் என்று மொத்த இயக்கத்தில் குறிப்பிட்டால் நீங்கள் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டீர்கள். நன்றி.//

இராமனுக்கு சாப்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்று தெரியல, அதை வைணவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டார்கள் என்றால் அது வழக்கில் உள்ள பழமொழி என்றே சொல்லுவேன். எனக்கு அதன் பொருள் தெரியாது. சைவம் என்பது சாப்பாட்டு வகையாக மாறிப் போனதால் சாப்பாட்டுடன் தொடர்புடைய இராமனைக் குறிப்பிட்டேன்.

உங்களுக்கெல்லம பகுத்தறிவு இல்லாமல் பகுக்காத அறிவு தான் இருக்கிறதா ? எல்லோருக்கும் பகுத்தறிவு உண்டு, அதைப் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பொருத்தே அவர்கள் பகுத்தறிவு உடையவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.

Kesavan சொன்னது…

//உங்களுக்கெல்லம பகுத்தறிவு இல்லாமல் பகுக்காத அறிவு தான் இருக்கிறதா ? எல்லோருக்கும் பகுத்தறிவு உண்டு, அதைப் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பொருத்தே அவர்கள் பகுத்தறிவு உடையவர்களாகச் சொல்லப்படுகிறார்கள் //

முதலில் பகுத்தறிவு என்றல் என்ன ? அதை சொல்லுங்கள் . கடவுள் இல்லை என்று சொல்லி விட்டு தலைவர்களில் சிலைகளுக்கு சூடம் ஏற்றுவதா ? தெய்வ வழிபாடு கூடாது என்று சொல்லி விட்டு , ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லுவதா , இந்து மத கடவுள்களை பழித்து விட்டு வேறு சமய வழி பாடுகளில் கலந்து கொள்வதா ? எனக்கு புரிய வில்லை ஸ்ரீ கண்ண பிரானே ! புரிய வைத்தால் நன்றாக இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//முதலில் பகுத்தறிவு என்றல் என்ன ? அதை சொல்லுங்கள் . கடவுள் இல்லை என்று சொல்லி விட்டு தலைவர்களில் சிலைகளுக்கு சூடம் ஏற்றுவதா ? தெய்வ வழிபாடு கூடாது என்று சொல்லி விட்டு , ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லுவதா , இந்து மத கடவுள்களை பழித்து விட்டு வேறு சமய வழி பாடுகளில் கலந்து கொள்வதா ? எனக்கு புரிய வில்லை ஸ்ரீ கண்ண பிரானே ! புரிய வைத்தால் நன்றாக இருக்கும்//

சிலை என்பது ஒரு குறியீடு அவ்வளவு தான், நினைவுச் சின்னம் வேண்டுவோர் குறியீடாக அமைத்துக் கொள்கிறார்கள், அந்த நினைவுச் சின்னத்தில் இருக்கும் கற்பனைகள் குறித்து தான் சித்தாந்தங்கள் மாறுபடுது.

அண்ணன் தம்பிக்குள் பகை என்றால் எதிர்த்தவீட்டுக்காரன் விழாவுக்கு கூப்பிட்டால் போகக் கூடாதா ?
:)

ஒன்றே குலம் ஒருவனே தேவன் - இது திருமூலர் குறிப்பிட்டது, அண்ணாவும் பிற்காலத்தில் சொன்னார். ஆனால் அப்படி சொல்வதில் என்ன தவறு என்று தெரியவில்லையே. கடவுள் இருந்தால் அவன் ஒருத்தனாகத்தான் இருப்பான் என்பதாக அண்ணா அவ்வாறு சொன்னார்.

கடவுள் இருந்தால் அவன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டியதில்லை, கிறித்துவனுக்கு ஒருவன், இஸ்லாமியருக்கு ஒருவன், சைவர்களுக்கு ஒருவன், வைணவர்களுக்கு ஒருவன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

Kesavan சொன்னது…

// கடவுள் இருந்தால் அவன் ஒருத்தனாகத்தான் இருப்பான் என்பதாக அண்ணா அவ்வாறு சொன்னார். //

கடவுளே கிடையாது என்பவர்கள் எப்படி கடவுள் இருந்தால் என்ற வார்த்தையை சொல்ல முடியும் . கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர் சொல்லும் நிலையில் இல்லையே . என்றைக்கு கடவுள் இருந்தால் என்று சொன்னாரோ அன்றைக்கு அவருக்கும் கடவுளை பற்றிய நம்பிக்கை இருக்கிறது என்று தான் பொருள் .

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

// கடவுள் இருந்தால் அவன் ஒருத்தனாகத்தான் இருப்பான் என்பதாக அண்ணா அவ்வாறு சொன்னார். //

கடவுளே கிடையாது என்பவர்கள் எப்படி கடவுள் இருந்தால் என்ற வார்த்தையை சொல்ல முடியும் . கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர் சொல்லும் நிலையில் இல்லையே . என்றைக்கு கடவுள் இருந்தால் என்று சொன்னாரோ அன்றைக்கு அவருக்கும் கடவுளை பற்றிய நம்பிக்கை இருக்கிறது என்று தான் பொருள் .//

சொன்னால் சொல்லிட்டுப் போறாங்க அதுல உங்களுக்கு என்ன நட்டம்.

ஷண்முகப்ரியன் சொன்னது…

கடவுள் என்பதே, எப்போதும் நிகழ்காலம் கண்ணன்.

கடந்து விட்ட ஒன்று,நம்மைப் பாதிப்பது நமது நினைவுகளில்தான்.

எந்த வரலாறும் வருத்தத்துக்குரிய ஒன்று,இந்தக் கணத்தை அது பாதிக்கும் போது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்