பின்பற்றுபவர்கள்

25 பிப்ரவரி, 2010

சச்சினுக்கு பாராட்டு குறித்து அஜித் பேச்சு !

ஒட்டுமொத்த பதிவுலகத்திற்கும், அன்பான வாசகர்களுக்கும் வணக்கம்!

இங்கே... இப்போ.. ஐந்தரை அடி இந்தியாவை நம்ம முன்னாடி டெண்டுகல்கர் உருவத்துல பார்க்கிறோம். கிரிக்கெட் ரசிகர்கள் அவர் இரட்டை சதம் எடுத்ததற்காக பாராட்டுகிறார்கள், அதைப் பாராட்ட நான் இங்கே எழுதவில்லை. அப்படி எழுதினால் அது சுயநலம். 30 வருஷத்துக்கும் மேல இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்காகவும், அவரோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்ட ஒரு மாபெரும் மனிதருக்காகத்தான் நான் எழுதுகிறேன். நாங்‌கெல்லாம் எழுதுகிறோம். சச்சினை வாழ்த்த வயசு தேவையில்லை. மன்மோகன் செய்தி குறிப்பில் சச்சினுக்கு வாழ்த்தி நன்றி சொல்லியிருக்காரு. ஒவ்வொரு உலக கோப்பையிலும் இந்தியாவுல சச்சினுக்கு விசில் அடிச்சி நன்றி சொல்கிறோம். அதனால கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின், நம்மை உலக மேடையில் பெருமை படுத்தியவர் சச்சி பல்லாண்டு வாழணும்னு வாழ்த்தி, நன்றி சொல்றேன். நன்றி!

ஐயா.. பதிவுலகில்(ப்ளாக்கில்) எல்லோரும் எவ்‌ளோ எழுதுறோம்னு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாளா எல்லாருக்கும் விளையாட்டு துறை மீது ஒரு கோபம், அவங்க கிரிக்கெட்டை வச்சு சூதாடினதில் கோபம், வெளம்பரத்தில் கோடிக் கணக்கா சம்பாதித்து, மட்டமான பொருளை கூட ஜனங்க தலையில் கட்டிவிடுகிறார்களேன்னு கோபம். ஏன் நாமெல்லாம்... நமக்கு தேவையில்லா விஷயத்துல கிரிக்கெட் வீரர்கள் தலையிடுறோம்னு கோபம். அதுக்கு நாங்க... பதிவர்கள் மட்டும் காரணம் கிடையாது. தம்பி சச்சின் நீங்க எவ்ளோ வெளையாட்டு வெளையாடி இருக்கிங்க. இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டக்கல் இஷ்யூஸ்ல பளாக்கர்ஸ் தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க. ப்ளிஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப ப்ளாக்கராக பொறுப்புல இருக்குற ஒரு சிலர் எங்களை எப்படியாவது சச்சினுக்கு ஒரு வாழ்த்து பதிவு போடுன்னு இல்லாட்டி பின்னூட்டமாவது போடுன்னு டார்சர் பண்ணுறாங்க. அதனாலதான் நாங்க போடுறோம். வலைப்பதிவு ஒரு பொதுவான தளமாக இருக்கணும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க சச்சின் தம்பி. வி ஆர் டயர்ட்.

ஒரு பிரச்னை வரும்போது அரசாங்கம் ரீ-ஆக்ட் பண்றதுக்குள்ளேயே... பதிவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க பதிவு போட்டு இருக்கோம்னு டுவிட்டரில் மெசேஜ் போடுறாங்க. பதிவில இருக்கிற ஒரு சிலர், பதிவர்கள் எல்லாரும் சச்சினுக்கு வாழ்த்து பதிவு போடனும்னு சொல்லி மிர‌ட்டி எழுத வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க தம்பி. வாழ்த்து பதிவு போடாவிட்டால் எங்க பதிவை படிக்க மாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து பதிவு போட வேண்டியிருக்கு. சப்போஸ்... எழுதாவிட்டால்... அத வேற மாதிரி திசை திருப்பி தேசப் பற்று இல்லைனு கிளப்பி விடுறாங்க. ப்ளீஸ் ஹெல்ப் டமில் ப்ளாக் வேர்ல்ட் . வேண்டாம். எங்களுக்கு விளையாட்டு அரசியலோ அரசியல் விளையாடோ வேண்டாம். விளையாட்டு விஷயங்கள்ல பதிவர்கள் அனைவருமே தலையிடணுமா வேண்டாமான்னு நீங்க ‌சொல்லுங்கய்யா. அதுல ப்ளாக்கர்ஸ் தலையிட வேண்டாம். சச்சின் சாதனையை வெளம்பரப் படுத்த செய்தி தாள்கள் இருக்கு, அதை படிக்க மக்கள் இருக்கிறார்கள். நீங்க பாத்துக்குவீங்க. கிரிக்கெட் சாதனை, சோதனைகளில் எங்களைப் போன்ற சாதாரண பதிவர்கள் என்ன செய்ய முடியும். யார் விளையாண்டாலும் வெறும் வாழ்த்து தான் சொல்ல முடியும், எங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் தான் கிரிக்கெட்டை பார்ப்பார்கள். அவர்கள் விசிலடிப்பார்கள். பதிவர்களை எழுதவிடுங்கள். அரசியலையும், விளையாட்டையும் ஒண்ணு சேர்த்து பதிவு அரசியலில் சேர்க்காதீர்கள். நாங்க நிம்மதியா பதிவு எழுதனும். ஏதாவது பண்ணுங்க தம்பி. நாங்க டயர்டா இருக்கோம்.

சச்சின் இரட்டை சதத்துக்கு எல்லோரும் ஆளுக்கு ஒரு பதிவு போடனுமா ? அஜித் பேசிய பேச்சு சரியா, தவறா? என்ற உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பதிவர்களே..!

பிகு : இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனை அஜித் மேடையில் பேசியதன் தழுவலில் எழுதியது.

படம் : நன்றி தினமலர்

26 கருத்துகள்:

பிரியமுடன் பிரபு சொன்னது…

ஏன் ஏன் இப்படி?
?
?

பிரியமுடன் பிரபு சொன்னது…

நீங்க மிரட்டி பின்னுட்டம் போட சொல்வதுண்டா?
?
?
?

வடுவூர் குமார் சொன்னது…

நாளை ஒளிபரப்போகிற(தொலைக்காட்சி) நிகழ்ச்சியில் அஜித் பேசப்போகிறதை எப்படி கண்டுபிடித்தீர்கள்???

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...

நாளை ஒளிபரப்போகிற(தொலைக்காட்சி) நிகழ்ச்சியில் அஜித் பேசப்போகிறதை எப்படி கண்டுபிடித்தீர்கள்???//

குமார் அண்ணே,

லேபிள் மொக்கை, நகைச்சுவைன்னு போட்டு பின் குறிப்பும் போட்டு இருக்கேனே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரியமுடன் பிரபு said...

ஏன் ஏன் இப்படி?
?
?//

ச்சும்மா !

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரியமுடன் பிரபு said...

நீங்க மிரட்டி பின்னுட்டம் போட சொல்வதுண்டா?
?
?
?//

மிரட்டியா ? ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கே !

:)

நட்புடன் ஜமால் சொன்னது…

ஹா ஹா ஹா

அப்பப்ப காமெடி டயமும் வேண்டும்

அஜித் பேசியது சரியே (இந்த பதிவில் உள்ள அஜித்தை சொன்னேன்)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-)))

Kesavan சொன்னது…

இதே மாதிரி ஒரு செய்தியை தின மலரில் படித்து போல் இருகிறதே !!!!!!!!!!!!

Kesavan சொன்னது…

http://cinema.dinamalar.com/cinema-news/1779/special-report/Ajith-Speech-at-Tamil-Nadu-Chief-Minister-Thanksgiving-Function-:-Exclusive-details.htm

இது தானா அது ?

தர்ஷன் சொன்னது…

அஜித் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் நான் அவரை பாராட்டுகிறேன் அதேவேளை நான் போட்ட வாழ்த்துப் பதிவு நானே விரும்பி போட்டது என்பதையும் யாரும் மிரட்ட வில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

மஞ்சள் ஜட்டி சொன்னது…

இதுக்கெல்லாமா ரூம் போட்டு யோசிப்பாங்க??

ஜானு... சொன்னது…

:-)

அப்பாவி முரு சொன்னது…

தலைக்கு என்ன பத்து தலைகள் இருப்பதாக நினைப்பா?

உருட்டி விளையாடிடுவோம்,,

:)

அக்பர் சொன்னது…

நல்ல வேலை இங்க யாரும் அப்படி இல்லைன்னு நினைக்கிறேன்.

கலக்கல் அண்ணா.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நான் பேஸ்மாட்டேன் பேஸ்மாட்டேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அண்ணே என்னோட சச்சின் வாழ்த்து பதிவில் நீங்க கருத்துரை இடலியே !!

இது நியாயமா?. :)))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அய்யோ! அய்யோ!! அய்யோ!!!

பாவம்!

:)

வெற்றி சொன்னது…

யாரும் இவ்ளோ அற்புதமா யார் மனசும் நோகாம தலய கலாய்ச்சிருக்க முடியாது..நல்லா இருக்கு :)

சேட்டைக்காரன் சொன்னது…

ஒழுங்கா சச்சின் கிட்டே ஆட்டோகிராப் வாங்கிட்டு சும்மாயிருக்கிறதை விட்டுட்டு இப்படி ஆட்டோவை வரவழைக்கிறாரே நம்ம தல? :-)

பெயரில்லா சொன்னது…

You were writing thought-provoking blogposts in the recent past. Now there is a sudden departure and slide into wasteful blogs.

What is happening to you?

பெயரில்லா சொன்னது…

Are you become jealouse of bloggers like U.Thamizan and Dondu? They are in the habit of producing such waste of mind.

Be yourself.

cheena (சீனா) சொன்னது…

கோவி - பரவா இல்லையே - அப்படியே எழுதிட்டீங்க - ம்ம்ம்

கோவி.கண்ணன் சொன்னது…

//# Kesavan


இதே மாதிரி ஒரு செய்தியை தின மலரில் படித்து போல் இருகிறதே !!!!!!!!!!!!
6:47 PM, February 25, 2010
#
Kesavan


http://cinema.dinamalar.com/cinema-news/1779/special-report/Ajith-Speech-at-Tamil-Nadu-Chief-Minister-Thanksgiving-Function-:-Exclusive-details.htm//

அது... அதே தான் ஏற்கனவே பின் குறிப்பில் லிங் சேர்த்திருக்கிறேனே.

SanjaiGandhi™ சொன்னது…

ஐந்தரை அடி தமிழ்நாடு.. ஹிஹி.. :)) மறக்க முடியாது போங்கோ.. பெரியாரு கூட மேடைல வந்து செமத்தியா புழந்தாரு.. பரதிராஜா என்னும் மானஸ்தன், இனம் காப்பவர் என்றேல்லாம் புகழோ புகழுன்னு புகழ்ந்தாரு.. மொத்த நிகழ்ச்சியும் செம தமாஷா இருந்தது :)

பித்தனின் வாக்கு சொன்னது…

என்னது ப்லாக்கர்ஸ் கருத்துச் சொல்லக்கூடாதா? என்ன தைரியம்? யாரு கொடுத்தா?
இப்படிச் சொன்னா, என்னை மாதிரி வேலை வெட்டி இல்லாம,அடுத்தவங்களை ஏத்தி விட்டு வேடிக்கைப் பார்க்கும் பதிவர்கள் நிலை என்ன ஆவது?. எங்களுக்கு எப்படிப் பொழுது போகும். எங்களைப் பற்றி நினைக்காமல் பொறுப்பற்ற பேச்சு இது என்று கண்டனம் தெரிவிக்கின்றேன். நன்றி. (ஸ்ஸ்ஸ் அப்பாடா!! சோடா எங்க அப்பு)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்