பின்பற்றுபவர்கள்

3 பிப்ரவரி, 2010

இந்தி திணிப்பின் பக்க விளைவுகள் - மும்பாய் !

ஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு, நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம் என்று முடிவு செய்ததது ஒரு பெரும் நிலப்பரப்பின் கீழ் பிற இன ஆளுமை இல்லாமல் இணைந்திருப்பது தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை.

இந்தியா என்பது ஒரே நாடு என்றாலும் அதன் மானில மொழி பேசுபவர்களுக்கும் சம உரிமை, அவர்களின் அடையாளங்களும் பேணப்படும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை பாதிப்பு ஏற்படும் போது நான் இந்தியன் இல்லை, 'இந்த' மொழி பேசுவன் என்கிற நிலை எடுக்க தூண்டுவதாக, அவர்களின் மொழி மற்றும் நிலத்தை அழித்தல் மற்றும் கையகப்படுத்துதல் என்னும் தேசியம் சார்ந்த நடவடிக்கையால் இயல்பாகவே, எதிர்வினையாகவும் ஏற்பட்டுவிடுகிறது, இன்றைக்கு மகாராஷ்ட்ராவில் நடப்பதும் இது தான். மண்ணின் மைந்தர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு மாநிலத்தினர் எடுத்துக் கொள்ளுதல் அல்லது பங்கிட்டுக் கொள்ளுதல் என்னும் நிலையில் அவர்களது வேலை வாய்ப்புகள், சமூக உயர்வு என்பது கேள்வி குறியாகவே ஆகிறது. மகாராஷ்ட்ரத்தின் தனி அடையாளம் என்பது அம்மாநில மொழிதான், அது பேசப்படுவது குறையும் போது அங்கு வசிக்கும் மண்ணின் மைந்தர்கள் கிளர்ந்தெழுவது இயல்பே.

ஒரே மொழிப் பேசுபவரிடையே கூட குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படும் போது அதன் விளைவுகளாக தனித் தெலுங்கான கோரிக்கைகள் நடந்து வருவதை கண்ணுறுகிறோம். அதிகாரம் பகிர்தல் என்கிற புரிதல் இல்லாமல் அதிகாரம் கைப்பற்றுதல் என்ற நிலைக்கு ஒரு தரப்பு முயலும் போது மற்ற தரப்பு அதிகார இழப்புக்கு ஆளாகிறது. இதுவே பூசல்கள் பலவற்றிற்கும் காரணம்.

தமிழன் மட்டுமல்ல தனது மொழி பாதிக்கப்படும் போது அனைத்து மொழிக்காரனும் கிளர்ந்தெழுவான், ஏனெனில் அவன் மொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தானே இருக்கிறது. வல்லரசு கனவில் இந்தியாவை மேலும் ஒருங்கிணைப்போம் என்று முயற்சிக்கும் அரசியல்வாதிகள் அதை மொழியால் செய்துவிட முடியும் என்று நினைத்து இந்தியை பல்வேறு மாநிலங்களில் திணிக்கிறார்கள். ஏற்கனவே நன்கு பொருளியல் ரீதியில் வளர்ந்திருக்கும் மாநிலங்களில் இந்த திணிப்பு நடைபெறும் போது இந்தி தெரிந்த பிற மாநில மக்கள் அந்த மாநிலத்திற்கு வேலை வாய்ப்புக்கு சென்று அந்த மாநிலங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். மொழிக்கலப்பு மற்றும் பண்பாட்டுக் கலப்பு என அந்த மாநில தனி அடையாளமே இவ்வாறு தான் சிதைக்கப்படுகிறது. ஒரு இந்தியன் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வசிக்க முடியும் என்பது அவனது உரிமை, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே மாநிலத்தில் அனைவரும் குவியும் போது அங்கு பிறந்தவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும்.

தாக்ரேக்கள் செய்வது அரசியலே என்றாலும் கூட அந்த அரசியலைக் கையில் எடுத்தால் அவர்களால் வெற்றிகரமகா அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது. மொழிக்குறித்தான அரசியல் முன்னெடுப்பும், தற்காப்பும் அங்கு தேவையாக இருக்கிறது என்பதால் அவர்கள் அதைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் செயல் குற்றமாக தெரிந்தாலும் மொழி, நிலம் பாதுக்காப்பு தேவை என்னும் சூழல் இருப்பது உண்மை தானே.

ஜெமோ எழுதுகிறார், 'திராவிட இயக்கம் என்பது பிற்பட்ட மக்களுக்காக பிற்பட்டவர்களே உருவாக்கிய இயக்கம் இதே பெயரில் இல்லாவிடினும் இதே போன்ற தேவையில் பிற மாநிலங்களிலும் பிற்பட்ட மக்களின் இயங்கங்கள் தோன்றி அதிகாரத்தைக் கைப்பற்றின' உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அதிகாரம் அப்போது வேறொருவர் அல்லது பெரும்பான்மை பிற்பட்டவர்களுக்கு எதிராக இருந்தது என்பதும் தானே உண்மை. ஒரு இயக்கம் வெற்றிகரமாக வளர்ந்திருந்தால் அதற்கான ஏக்கம், அந்த இயக்கத்திற்கான தேவை அதைச் சார்ந்தவர்களுக்கு இருந்திருக்கிறது அதனால் அவர்கள் அதை வளர்த்தெடுத்தார்கள் என்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். திராவிட இயக்கங்கள் பல்வேறாக பிரிந்தன் காரணம் பிற்பட்டவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகார கைப்பற்றுதலுக்கான, பங்கிட்டுக் கொள்வதற்கான தேவை அல்லது வேட்கை ஏற்பட்டது என்று வைத்துக் கொள்ளலாம். திராவிட இயக்கம் என்பது சாதி சார்பு இயக்கம் இல்லை என்பதால் கவனத்துடன் 'பிற்பட்டவர் இயக்கம்' என்ற சொல்லாடலை ஜெமோ பயன்படுத்தி இருக்கிறார். திராவிட இயக்கத்தின் தேவை மற்றும் அதன் வளர்ச்சி நாம் பார்த்தவை இதில் இயல்புக்கு மாறாக என்று எதுவுமே இல்லை. ஒரு இயக்கம் அதன் நோக்கத்தில், கொள்கையில் இப்போதும் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அது அதிகாரத்தைக் கைப்பற்றியதா என்பது தான் முக்கியம்.

ஒரு இயக்கத்தின் கொள்கை என்பது அந்த இயக்கத்தின் தோற்றம் மற்றும் பெயருக்கான குறைந்த அளவு திட்டம் மட்டுமே, நாளடைவில் அது நிறைவேறி இருக்கும், அல்லது அந்த நேரத்தில் அந்த கொள்கையி்ன் தேவையோ, தீவிரமோ தேவையற்றதாக இருக்கும். இன்று வரை திராவிட இயக்கங்கள் வெற்றிகரமாகவே இயங்குகின்றன, திராவிட இயக்கங்கள் இன்று வரை தேசிய கட்சிகளை தமிழகத்தில் மறு தலை எடுக்காமல் செய்துவிட்டன, இன்னும் கூட செய்து வருகின்றன. காரணம் தேசியம் சார்ந்த வேட்கைக்கு வழிவகை செய்யும் வழியாக, தேசியம் நல்ல நம்பிக்கையை தமிழர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. தேசியத்தில் சிதையுண்டு அல்லது புதையுண்டு போன மாநிலங்களாக வடமாநிலங்கள் தெரிகின்றன. அவர்களின் ஒரே நம்பிக்கை மும்பாய் மகாராஷ்ட்ரா, புனே அங்கு தான் இந்தியுடன் போதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும் வகையில் முன்னேறி இருக்கிறது.

மகாராஷ்ட்ராவுக்கு பதிலாக குஜராத்துக்கு நலிந்தவர்கள் படையெடுக்கும் நிலை வந்தால் மோடி தாக்ரேவாக மாறுவார், தாக்ரேக்களைவிட மூர்க்கமாகவே செயல்படுவார். மாநிலங்களுக்கு சம உரிமையும், மாநில மொழிகளை மதிப்பதும், இந்தியைத் திணிக்காமல் இருப்பதாலும் தான் இந்தியா தேசிய ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முடியும். மற்றபடி அனைத்தும் இந்தியா நாம் அனைவரும் இந்தியர் என்பதெல்லாம் பள்ளி நேரத்தில் உறுதி மொழி எடுக்க மட்டுமே பயன்படும் வெற்று வாய்பாடுகள். தாக்ரேக்கள் சொல்லிக் கொடுக்கும் பாடம் ஏறுமா ? இல்லை பிற மாநிலங்களும் அதே போல் நடந்து கொண்டால் தான் இந்திய தேசியவாதிகளுக்கு புரியுமா ? என்று தெரியவில்லை. மும்பைக்கு அடுத்து பெங்களூரிலும் மொழித்திணிப்பிற்கும், மண்ணின் மைந்தர்கள் குறித்தும் போராட்டங்கள் தொடர வாய்ப்புண்டு. அவர்களும் ஒட்டுமொத்த பெங்களூரும் இந்தி பேசுவதில் நொந்து போய் இருக்கிறார்கள்

26 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/பெங்களூரிலும் மொழித்திணிப்பிற்கும், மண்ணின் மைந்தர்கள் குறித்தும் போராட்டங்கள் தொடர வாய்ப்புண்டு. அவர்களும் ஒட்டுமொத்த பெங்களூரும் இந்தி பேசுவதில் நொந்து போய் இருக்கிறார்கள்/

இருக்கலாம்! ஆனால், தமிழர்கள் மீது தான் அவர்கள் வெறுப்பு திருப்பி விடப்படுகிறது.

மலையாளத்தில், சொல்லவே வேண்டாம்!

ஆந்திராவில் அரவமா என்று கொஞ்சம் நக்கலாகத் தான் கேட்பார்கள்.

ஏன் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கிருமி சொன்னது…

ஆனால் தமிழனுக்கு எங்கே போயிற்று தமிழ் உணர்வு. ஆங்கிலேயனின் தளை போய் ஆங்கிலக் குழையை அல்லவா கடித்துத் துப்பிக்கொண்டிருக்கிறான். பதிவு சூப்பரா இருக்கு. கீப்பிட்டப்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தமிழகத்தில் கூட வடமாவட்டங்களை விட தென்மாவட்டங்கள் பின் தங்கியே உள்ளன.

ஆளுபவர்களின் பாரபட்சம் நாளைய தலைமுறையின் வாழ்க்கைதரத்தை மாற்றி விடுகிறது.

எங்கெல்லாம் புறக்கணிப்பும் அடக்குமுறையும் தொடர்கிறதோ அங்கு புரட்சி நடப்பது இயல்பே.

அக்னி பார்வை சொன்னது…

A very Good Blog at right time.. Though Thackery's method of fight was wrong but the reason was right. See, Now even they cannot stress on hindi education in maharashtra..

Samuel | சாமுவேல் சொன்னது…

//தாக்ரேக்கள் சொல்லிக் கொடுக்கும் பாடம் ஏறுமா ? இல்லை பிற மாநிலங்களும் அதே போல் நடந்து கொண்டால் தான் இந்திய தேசியவாதிகளுக்கு புரியுமா ?//

மோடி, தாக்ரே போன்றவர்கள் பிரிவினை அரசியல் பண்ணுபவர்கள், அவிங்களுக்கு மக்களை மொழி, மதம் அப்படின்னு பிரிச்சா தான் ஓட்டே விழும்....நீங்க அதை மக்களுக்கு நல்லது பண்றாங்கன்னு நினச்சு பாராட்டு பண்றீங்க. சரி...
நீங்க இதை வேற மாதிரி கேட்டிருக்கலாம், தமிழ்நாட்டில் நிறைய பாணி பூரி விக்குறாங்க, கலாசாரம் கெட்டுட்டு வருது ...ஹிந்தி காரனை நாமளும் அடிக்கலாமா ?  மோடி வாகேராகள் பண்ண மத அரசியல் நாமளும் பண்ணலாமா ?

//மற்றபடி அனைத்தும் இந்தியா நாம் அனைவரும் இந்தியர் என்பதெல்லாம் பள்ளி நேரத்தில் உறுதி மொழி எடுக்க மட்டுமே பயன்படும் வெற்று வாய்பாடுகள்.//

வெற்று வாய்பாடுகளா மட்டும் உறுதி மொழி எடுத்தா இப்படி தான் தோணும் போல இருக்கு.....நீங்களும் சீமானும் ஒரே பள்ளிகூடமா ?
ராகுல் காந்தி அறிக்கையை எதிர் விமர்சினம் பண்ணனும்னு முடிவு பண்ணியாச்சு, பண்ணுங்க நல்லா வந்திருக்கு.
 

குறும்பன் சொன்னது…

இது சொன்னா அவங்களுக்கு புரியமாட்டிக்குதே. இந்தி பேசும் மாநிலங்கள் வளமாக இருந்தால் அங்கு போகும் மற்ற மாநிலத்தவருக்கும் இதே நிலை தான். இந்தி அற்புதமா பேசினாலும் அங்கு மற்ற மாநிலத்தவர்கள் வெளி ஆளுங்க தான்.

கட்டபொம்மன் சொன்னது…

மன்னர் அழைத்தும் வராதது ஏனோ ...

வரும் போது அன்பளிப்போடு வாங்க .. மன்னர் சந்தோசப்படுவார் !!

மயில் கிடைத்ததா ...

வஜ்ரா சொன்னது…

//
மகாராஷ்ட்ராவுக்கு பதிலாக குஜராத்துக்கு நலிந்தவர்கள் படையெடுக்கும் நிலை வந்தால் மோடி தாக்ரேவாக மாறுவார், தாக்ரேக்களைவிட மூர்க்கமாகவே செயல்படுவார்.
//

கருணாநிதிக்கும் இது பொருந்தும் தானே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இருக்கலாம்! ஆனால், தமிழர்கள் மீது தான் அவர்கள் வெறுப்பு திருப்பி விடப்படுகிறது.

மலையாளத்தில், சொல்லவே வேண்டாம்!

ஆந்திராவில் அரவமா என்று கொஞ்சம் நக்கலாகத் தான் கேட்பார்கள்.

ஏன் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

12:36 PM, February 03, 2010//

தமிழர்கள் மீதான எரிச்சலுக்கு வெளிப்படையான காரணம் எல்லாவற்றிலும் திறமையாக செயல்படுகிறார்கள் என்ற எரிச்சலாகக் கூட இருக்கும், இது வெளிப்படையானதே.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருமி said...

ஆனால் தமிழனுக்கு எங்கே போயிற்று தமிழ் உணர்வு. ஆங்கிலேயனின் தளை போய் ஆங்கிலக் குழையை அல்லவா கடித்துத் துப்பிக்கொண்டிருக்கிறான். பதிவு சூப்பரா இருக்கு. கீப்பிட்டப்.//

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர் இருவர் ஒருவர் தன் திறமை மதிக்கவில்லை என்று கூறுபவர், மற்றொருவர் எந்த வேலைவாய்ப்பும் கிட்டாதவர்.

கூலி வேலைக்கு மாதம் 20,000 ஊதியம் கிடைத்தால் நம்மவர்கள் ஏன் அரபு நாடுகளுக்கு கூலி வேலைக்குச் செல்லப் போகிறார்கள் ?

எனக்கு தெரிஞ்சு வெளிநாட்டு வாழ்க்கை சொகுசானது என்பதாக செல்பவர்கள் குறைவே.

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

தமிழகத்தில் கூட வடமாவட்டங்களை விட தென்மாவட்டங்கள் பின் தங்கியே உள்ளன.

ஆளுபவர்களின் பாரபட்சம் நாளைய தலைமுறையின் வாழ்க்கைதரத்தை மாற்றி விடுகிறது.

எங்கெல்லாம் புறக்கணிப்பும் அடக்குமுறையும் தொடர்கிறதோ அங்கு புரட்சி நடப்பது இயல்பே.//

தமிழ்நாட்டுக்குள்ளேயே வடக்கு மேலே ஏறுகிறது தெற்கு இறங்குகிறது !
:) அந்த தாழ்வை திருவள்ளுவர் சிலை தூக்கிவிடும் என்று நினைத்து அதுக்குமேல் செய்யமாட்டேன்கிறார்கள் போல. மதுரை அல்லது திருச்சியை துணைத்தலை நகராக மாற்றினால் தமிழகம் நல்ல பொருளாதார வளர்ச்சி காணும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்னி பார்வை said...

A very Good Blog at right time.. Though Thackery's method of fight was wrong but the reason was right. See, Now even they cannot stress on hindi education in maharashtra..//

அதுசரிதான், ஆனால் வன்முறையால் தான் ஒரு பிரச்சனை வெளியே தெரியவருகிறது என்பது நாம் அறிந்துள்ள உண்மை என்பது மறுப்பதற்கில்லை. இல்லாவிடில் பொழுது போகாத மக்கள் போராட்டம் என்று கோசம் எழுப்புகிறார்கள் என்று எள்ளப்படுகிறதே.

உரிமை போராட்டத்தை உணர்ச்சி வடிவில் பார்க்கும் போது தான் அதன் விபரீதம் புரிய வருகிறது. நாம வலி என்றால் இரத்தம் வரவழைப்பது தான் என்பதாக தவறாகவே புரிந்து கொண்டுள்ளோம் அது உளவியல் சிக்கல். நமது போராட்டங்கள் ரத்தமின்றி எதையும் சாதிக்கவில்லை என்பதால் தான் என்னவோ ஒரே ஒரு காந்தியை எப்போதும் உதாரணத்திற்கு வைத்துக் கொள்கிறோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//வஜ்ரா said...

//
மகாராஷ்ட்ராவுக்கு பதிலாக குஜராத்துக்கு நலிந்தவர்கள் படையெடுக்கும் நிலை வந்தால் மோடி தாக்ரேவாக மாறுவார், தாக்ரேக்களைவிட மூர்க்கமாகவே செயல்படுவார்.
//

கருணாநிதிக்கும் இது பொருந்தும் தானே ?//

கருணாநிதி ரிடையர்ட் ஆகப்போகிறார், ஸ்டாலினையும் கொஞ்சம் மனசில வையுங்க. உங்களைப் போன்றோர் அவரைப் பற்றிப் பேசாவிடில் ஸ்டாலின் வருங்கால திமுகத் தலைவரா இல்லையா என்பதில் ஐயம் ஏற்பட்டுவிடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சாமுவேல் | Samuel


//தாக்ரேக்கள் சொல்லிக் கொடுக்கும் பாடம் ஏறுமா ? இல்லை பிற மாநிலங்களும் அதே போல் நடந்து கொண்டால் தான் இந்திய தேசியவாதிகளுக்கு புரியுமா ?//

மோடி, தாக்ரே போன்றவர்கள் பிரிவினை அரசியல் பண்ணுபவர்கள், அவிங்களுக்கு மக்களை மொழி, மதம் அப்படின்னு பிரிச்சா தான் ஓட்டே விழும்....நீங்க அதை மக்களுக்கு நல்லது பண்றாங்கன்னு நினச்சு பாராட்டு பண்றீங்க. சரி...//

அங்க உள்ள பிரச்சனையை தெரிந்து கொண்டு அதில் அரசியல் லாபம் அடைகிறார்கள் என்றே சொல்லி இருக்கிறேன், அவர்கள் செய்வது ஞாயம் என்று சொல்லவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// கட்டபொம்மன் said...

மன்னர் அழைத்தும் வராதது ஏனோ ...

வரும் போது அன்பளிப்போடு வாங்க .. மன்னர் சந்தோசப்படுவார் !!

மயில் கிடைத்ததா ...//

கட்டபொம்மன் திருநெல்வேலிக்காரர் என்று மட்டும் நல்லாவே தெரிகிறது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குறும்பன் said...

இது சொன்னா அவங்களுக்கு புரியமாட்டிக்குதே. இந்தி பேசும் மாநிலங்கள் வளமாக இருந்தால் அங்கு போகும் மற்ற மாநிலத்தவருக்கும் இதே நிலை தான். இந்தி அற்புதமா பேசினாலும் அங்கு மற்ற மாநிலத்தவர்கள் வெளி ஆளுங்க தான்.//

இதைத்தான் கழுதையாக் கத்திக் கொண்டு இருக்கிறார்கள், உங்களை இந்தி கத்துக்கச் சொல்கிறது அவன் பேசுவது உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்குத்தானே அன்றி உங்களுக்கு நன்மை கிடைக்கனும்னு இல்லைன்னு.

:)

Kesavan சொன்னது…

//இன்றைக்கு மகாராஷ்ட்ராவில் நடப்பதும் இது தான். மண்ணின் மைந்தர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு மாநிலத்தினர் எடுத்துக் கொள்ளுதல் அல்லது பங்கிட்டுக் கொள்ளுதல் என்னும் நிலையில் அவர்களது வேலை வாய்ப்புகள், சமூக உயர்வு என்பது கேள்வி குறியாகவே ஆகிறது //

யாருடைய வேலை வாய்ப்பும் சமுக உயர்வும் யாராலும் கெடாது . இன்று மகாராஷ்ட்ராவில் நடக்கும் நிகழ்ச்சிகள் தாக்கரே குடும்பத்தால் நடத்தபடுகிற ஒரு கூத்து என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை . யார் யார் எதிர் கட்சியினராக இருகிறாரோ அவர்கள் எதாவது ஒரு பிரச்சனையை ஆரம்பிப்பார்கள் . ஹிந்தி மொழி திணிப்பால் ஏற்பட்டது என்று சொன்னால் அது சரியல்ல . ஹிந்தி மொழி தமிழ் நாட்டை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு விட்டன . ஒரு காலத்தில் நீங்கள் சொன்ன மாதிரி இது திணிப்பாக இருந்தாலும், இன்று அது ஒரு பிரச்சனையும் அல்ல . முதலில் மொழி என்பது only communication மட்டுமே .
அது தவிர இன்று உள்ள நிலையில் யாரும் மொழியை திணிக்க முடியாது . மக்களை யாரும் ஏமாற்ற முடியாது . ஏன் இதே பிரச்சனையை ஆங்கில மொழி மீது சொல்ல வேண்டியது தானே . அது நமது நாட்டு மொழி அல்லவே . அது உலக மொழியும் அல்லவே . ஏன் அதை எல்லோரும் படிக்க வேண்டும் . இதற்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் . ஏன் என்றால் அதை வைத்து தன நாம் குப்பை கொட்ட வேண்டும் . அது இல்லாமல் நம் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியாது .
இந்திய தேசிய நாட்டிற்கு இந்தி தேசிய மொழி என்று பரவலாக் ஏற்றுகொள்ளப்பட்டது தான். அதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நல்லது தான் . மற்ற மொழியை படிப்பதால் நம் மொழி அழிந்து விடும் என்பதும் தவறான வாதம் . இன்று ஆங்கிலத்தில் எவ்வளவு பிற மொழிகளின் கலப்பு உள்ளது என்பதும் நிறைய பேருக்கு தெரியும் . அதனால் அந்த மொழி அழிந்த விட்டது .

//தாக்ரேக்கள் செய்வது அரசியலே என்றாலும் கூட அந்த அரசியலைக் கையில் எடுத்தால் அவர்களால் வெற்றிகரமகா அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது.//
நிச்சயமாக அதை வைத்து அரசியல் செய்ய முடியாது . ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நடந்ததை வைத்து இன்றும் அதை அரசியல் செய்ய முடியாது என்பதே ஏன் கருத்து. அன்று அரசியல்வாதி சொன்னதை நம்பினார்கள் . இன்று சில பேர் மட்டுமே ( அதுவும் அவர்களுக்கு லாபம் என்றால் மட்டுமே ) அந்த அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா போடுவார்கள்.

//ஒரு இயக்கம் அதன் நோக்கத்தில், கொள்கையில் இப்போதும் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அது அதிகாரத்தைக் கைப்பற்றியதா என்பது தான் முக்கியம்.//

அதன் நோக்கம் மற்றும் கொள்கைக்கு ஏற்ப தான் மக்கள் வாக்கு அளித்தார்கள் .அதிகாரம் வந்த உடன் அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா . ஒன்றும் கிடையாது

// காரணம் தேசியம் சார்ந்த வேட்கைக்கு வழிவகை செய்யும் வழியாக, தேசியம் நல்ல நம்பிக்கையை தமிழர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை.//

தேசியம் ஏற்படுத்த வில்லை என்பது தவறு . இது வெறும் அரசியல் கணக்கே தவிர வேறு ஒன்றும் இல்லை .

//மகாராஷ்ட்ராவுக்கு பதிலாக குஜராத்துக்கு நலிந்தவர்கள் படையெடுக்கும் நிலை வந்தால் மோடி தாக்ரேவாக மாறுவார், தாக்ரேக்களைவிட மூர்க்கமாகவே செயல்படுவார்.//

இதில் ஏன் மோடியை இழுகிறீர்கள் . மற்ற மாநில முதல்வர்களை சொல்ல வேண்டியது தானே . இன்று நம் நாட்டிலேயே திறமையான முதல்வர் என்று பயர் எடுத்தவர் திரு மோடி மட்டுமே . அங்கு நடக்கும் நிர்வாகத்தை சிறிதளவாவது மற்ற மாநிலங்கள் காட்டினால் ஏன் மக்கள் மும்பை போன்ற பெரிய நகரங்களை நாடுகின்றனர் .

Kesavan சொன்னது…

//இதைத்தான் கழுதையாக் கத்திக் கொண்டு இருக்கிறார்கள், உங்களை இந்தி கத்துக்கச் சொல்கிறது அவன் பேசுவது உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்குத்தானே அன்றி உங்களுக்கு நன்மை கிடைக்கனும்னு இல்லைன்னு.//

நீங்கள் ஏன் அப்படி நினைகிறீர்கள். ஹிந்தி என்பது நமது தேசிய மொழியாக ஏற்று கொள்ள பட்டு விட்டது . அதனால் அந்த மொழியை கற்பதால் எந்த தீமையும் இல்லை . நாம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்தந்த மாநில மொழிகளில் பேசுவது முடியாத காரியம் . அனால் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநில மக்களுக்கு ஹிந்தி நன்றாக தெரிகிறது . அதனால் நாம் அதை கற்று கொள்வது நன்மையே . அதை வேண்டாம் என்று சொல்வது சரி அல்ல . எந்த மொழி கற்று கொண்டாலும் நன்மையே . தீமை இல்லை . ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றால் பல வழிகளில் சிந்தித்து பார்க்க வேண்டும் .

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...நீங்கள் ஏன் அப்படி நினைகிறீர்கள். ஹிந்தி என்பது நமது தேசிய மொழியாக ஏற்று கொள்ள பட்டு விட்டது .//

புலிக்கு சொல்லிக் கொடுக்கலாம் அது தான் தேசிய விலங்கு.

Samuel | சாமுவேல் சொன்னது…

//இன்று வரை தேசிய கட்சிகளை தமிழகத்தில் மறு தலை எடுக்காமல் செய்துவிட்டன, இன்னும் கூட செய்து வருகின்றன.//

தமிழ்நாட்டில் தற்போதைய அரசு "மைனோரிட்டி அரசு "(ஜெ பாணியில் படிக்கவும் ..d.m.k காரர்கள் திட்ட கூடாது, mathematics.), "தேசிய கட்சி"யின் ஆதரவில் தான் ஓடிட்டு இருக்கு.

தமிழ்நாட்டின் முக்கிய எதிர் கட்சியின் நாற்காலி கனவுக்கு, முழுக்க முழுக்க "தேசிய கட்சி" தேவை போல இருக்கு ...ரொம்ப கஷ்ட படறாங்க சந்திக்க , அஞ்சு நிமிஷ வணக்கம் சொல்றதுக்கு, எப்பொழுதும் குறை குறும் தேர்தல் ஆணைய விழாவிற்கு டெல்லி வரை போகிட்டு வராங்க.

அட ரெண்டையும் விடுங்க சார் ...தமிழ்நாட்டின் ஓனே அண்ட் ஒன்லி ..'வேட்டைக்காரன்" (பின்னணி மியூசிக் --"நான் அடிச்சா தாங்க மாட்ட.... ) அவர் தேசிய கட்சியின் பதவிக்கு தான் ஆசை பட்டார். :-) (சிரிபிலி தேவையா !) ...இதெல்லாம் இருந்தும் தமிழ்நாட்டில் தேசிய கட்சி மறு தலை எடுக்காமல் இருக்குனு எப்படி சொல்றீர்கள் ?? :-)

Unknown சொன்னது…

//கேசவன் - முதலில் மொழி என்பது only communication மட்டுமே . //

ஐயா கேசவன் அவர்களே அம்மா என்பது only another womanதானோ?

Kesavan சொன்னது…

Interesting
//கேசவன் - முதலில் மொழி என்பது only communication மட்டுமே . //

//ஐயா கேசவன் அவர்களே அம்மா என்பது only another womanதானோ?//

அம்மா என்பது ஒன்று தான், அவர்களை எதன் கூடவும் ஒப்பிட எனக்கு பிடிக்காது . இது அம்மா விற்கான பதில் .
மொழி என்பது communication tool மற்றும் தான் . அது எந்த tool என்பது அவர்கள் தான் decide பண்ண வேண்டும்

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

மிக மிக அருமையான பதிவு நண்பரே !
"மாநிலங்களுக்கு சம உரிமையும், மாநில மொழிகளை மதிப்பதும், இந்தியைத் திணிக்காமல் இருப்பதாலும் தான் இந்தியா தேசிய ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முடியும்"
முத்தாய்ப்பான வரிகள் ! வழி மொழிகிறேன்!
கபில் சிபலுக்கு உங்கள் பதிவை மொழிபெயர்த்து அஞ்சல் செய்யுங்கள் தோழரே !

தயாளன் சொன்னது…

இந்தியாவில் "இந்தியன்" என்று யாராவது இருக்கிறார்களா? உங்கள் மாநிலத்தை(அல்லது மொழியை)சொல்லாமல் உங்களை யார் என்று அடையாளப் படுத்திவிட முடியுமா?. மொழி என்பது (தமிழ் மட்டுமல்ல) வெறும் communication tool மட்டுமல்ல, அது நமது கலாச்சாரத்தைச் சுமந்து வருவது. நம்மை அடயாளப் படுத்துவது.

தயாளன் சொன்னது…

சொல்ல மறந்து விட்டேன், உங்கள் பதிவில் நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் யாவும் மிகச் சரியானதே.

South-Side சொன்னது…

நீங்கள் ஏன் அப்படி நினைகிறீர்கள். ஹிந்தி என்பது நமது தேசிய மொழியாக ஏற்று கொள்ள பட்டு விட்டது . //

யாரால்? அதற்கான ஆதாரம் என்ன? குஜராத் கோர்ட் இந்தி தேசிய மொழி என்பதற்கான சரத்துக்கள் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் இல்லையென்று சொல்கிறதே?

============================

நாம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்தந்த மாநில மொழிகளில் பேசுவது முடியாத காரியம் . அனால் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநில மக்களுக்கு ஹிந்தி நன்றாக தெரிகிறது . அதனால் நாம் அதை கற்று கொள்வது நன்மையே . அதை வேண்டாம் என்று சொல்வது சரி அல்ல . //

எந்த மாநிலம் சென்றாலும் எல்லோருக்கும் ஹிந்தி தெரிகிறது என்பது தவறான தகவல். குஜராத் போய்ப்பாருங்கள்.... பேருந்துப்பலகைகளில் கூட குஜராத்தி மட்டுமே இருக்கும்.....ஆங்கிலமோ , இந்தியோ இருக்காது....

=================================

எந்த மொழி கற்று கொண்டாலும் நன்மையே . தீமை இல்லை . ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றால் பல வழிகளில் சிந்தித்து பார்க்க வேண்டும் .//

இயல்பான , சிம்பிளான தீர்வாக எப்படி யோசித்தாலும் , ஹிந்தி கற்றுக்கொள்வதை விட அனைத்து இந்தியர்களும் ஆங்கிலம் கற்றுக்கொள்வதே சிறந்ததும் இயல்பானதும் ஆகும்.......இந்தியர்கள் தமக்குள் பேசுவதில் எந்த சிரமமும் இருக்காது. இந்தியர்கள் உலகளாவிய முறையில் பேசுவதற்கும் எவ்வித சிரமமும் இருக்காது.

==================================

பீகாரில் பிச்சைக்காரன் கூட இந்தி பேசுவான்........ஆனால் , முன்னேறிய தமிழர்கள் இந்தி பேசுவதில்லை....... ஆக , முன்னெற்றம் மொழியில் இல்லை...மூளையில் இருக்கிறது. இந்தி தெரியாமல் அல்லது கற்றுக்கொள்ள விரும்பாமல் என்னால் பத்து வருடங்களுக்கு மேல் வட இந்தியாவில் வாழ முடிந்திருக்கிறது....!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்