பின்பற்றுபவர்கள்

27 பிப்ரவரி, 2010

கார்த்திக் - ஜெஸ்ஸி - பாஸ்தா !

இளைய சூப்பர் ஸ்டார் என சிம்புவின் அறிமுகத்துடன் துவங்குகிறது படம், பொறியியல் கல்லூரி முடித்து திரையில் இயக்குனராக வாய்ப்புக்கு அலையும் வாலிபனாக சிம்பு, மலையாளம், ஆங்கிலம் கூடவே தமிழ் மிகுதியாக பேசும் சிம்புவை விட வயதில் கூடியவராக த்ரிஷா அறிமுகம் ஆகுகிறார்கள், முதல் சந்திபிலேயே இருவருக்கும் பற்றிக் கொள்கிறதாம், அதை சிம்பு வெளிப்படுத்த துடித்து வெளிப்படுத்துகிறார். மதம், பெற்றோர் எதிர்ப்பு இவைகளை சுட்டிக்காட்டி மறுத்தப்படியே சிம்புவுக்காக ஏங்கும் த்ரிஷா. த்ரிஷாவை விரட்டிக் கொண்டு கேரளா வரை செல்லும் காதல் பின்னர் சென்னை திரும்பும் வழியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் தொடர்வண்டி காட்சிகள். த்ரிஷாவின் வீட்டுக்கு தெரிவதால் காதலுக்கு பலமான எதிர்ப்பு, இடையில் த்ரிஷாவுக்கு தேவலயத்தில் ஆலப்புழையில் திருமணம் நடை பெறும் நேரத்தில் வேண்டாம் என்று ஓடிவரும் த்ரிஷா......எனக்கு ஏன் உன்னை புடிச்சிருக்கு, உன்னை ஏன் நான் காதலிக்கனும் படம் முழுவதும் இதையே திரும்ப திரும்ப பேசி சலிக்க வைக்கிறார்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பம் பெற்றே ஆகவேண்டும் போன்ற படித்தவர்களிடம் எடுபடாத இந்த காலத்திலும் அலைகள் ஓய்வதில்லை மற்றும் பல படங்களில் காட்டிய அதே பார்முலா.....திகட்டுகிறது......போதும் விட்டுடுங்க

படத்தின் இறுதி காட்சியாக காதலர்கள் சேர்ந்தாங்கன்னு சிம்பு எடுக்கும் படத்தின் முடிவாகவும் சேரவில்லை என்பது படத்தின் முடிவாகவும் காட்டுறாங்க படம் முடிவினால் தொங்கினால் எதையாதாவது ஒண்ணை வெட்டிவிட்டு ஒட்டலாம் என்ற திட்டம் போல. கவுதம் மேனன் தமிழ் சினிமாவை ஒலக தரத்திற்கு மாற்றுகிறேன் என்கிற பேரில் முத்த காட்சிகளை படம் முழுவதும் ஓட விடுகிறார். சிறுவர்களையும் பெண்களையும் அழைத்துச் செல்பவர்கள் நெளியக் கூடும். நாயகனும் நாயகியும் அழகானவர்களாகவும் அவங்க இல்லத்து உறுப்பினர்கள் சுமாரனவர்களாகவும் காட்டுவது இந்த படத்திலும் தொடருகிறது. ஏஆர் ரஹ்மான் இசை பாடல்கள் வரி தெளிவாக புரியவில்லை. வரிகள் இருக்கிறது என்பதை ஆங்கில துணை தலைப்புகள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிகிறது (வெளி நாட்டில் வெளியாகும் படங்களில் இவை உண்டு)

சிம்புவுக்கு நண்பராக வரும் கேமராமேன் சிரிப்பை வரவழைக்கும் இயல்பான பேச்சுரை மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தில் சிம்புவும் அவரும் மட்டுமே நன்றாக செய்திருக்கிறார்கள், 75 விழுக்காடு சிம்பு த்ரிஷா காட்சிகள் தான், மற்ற கவுதம் மேனன் படங்களைப் போலவே கதாநாயகனின், நாயகியின் குரல் படம் முழுவதும் பேசுகிறது. கவுதம் மேனனின் ஆக்சன் படங்கள் அளவுக்கு காதல் படங்கள் எடுபடவில்லை. சி செண்டர் எனப்படும் சிறு நகரங்களில் படம் ஒடாது என்றே நினைக்கிறேன். மிகவும் மெதுவாக நகர்கிறது. கல்லூரி மாண மாணவிகளுக்கு த்ரிஷா மேல் ஈர்ப்பு இருக்குமான்னு தெரியவில்லை ஏ பி செண்டர்களிலும் ஓடுமான்னு தெரியவில்லை, தயாரிப்பாளர் உதய நிதியின் கவலை அதை விடுவோம். திருமணம் ஆகாத இளம் பெண்கள் புடவை கட்டுவது இந்த படத்தின் வழியாக மறுபடியும் பேஷனாகலாம், படத்தில் த்ரிஷா புடைவைக் காட்சிகள் நிறைய இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் என்ன சொல்லவருகிறார்கள் என்றே தெரியவில்லை, கிறித்துவ மலையாள பெண்ணை தமிழ் இந்து வாலிபன் காதலித்தால் அவன் நிறைய அலையனும் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது தான் கவுதம் சொல்ல வருகிறாரான்னு தெரியல. படம் முழுவதும் காதல் பிரிவு ஏற்கனவே 80 களில் தென்றலே என்னைத் தொடு ஜெயஸ்ரீ மற்றும் மோகன் நடிப்பில் வெளியாகி இருந்தது, அது சுவையார்வமாக இருந்தது. உதட்டு முத்தம் சென்சார் படாம இருக்க அதை அமெரிக்க சூழலில் எடுக்கலாம் என்பதைத் தவிர கவுதம் அமெரிக்கா வரை படத்தை இழுத்ததற்கு வேறு அழுத்தமான காரணம் தெரியவில்லை. பிரிவின் வலி பிடிச்சிருக்காம், த்ரிஷா அடிக்கடி சொல்கிறார்.

படம் பார்த்தவர்களுக்கு காதுவலியும் காதில் இரத்தம் வராத குறையாக வெளியே முணுகிக் கொண்டே செல்கிறார்கள். படப் பிடிப்பும், சிம்புவின் இயல்பான நடிப்பும், நகைச்சுவையாக பேசும் கேமரா மேனாக வரும் கணேஷ் ஆகியோர் தான் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படி இருக்கிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா ? காதலில் பிசிஸ்க்ஸும் தெரியல கெமிஸ்ட்ரியும் தெரியல. சிம்பு மட்டும் பாஸ். படத்தில் எதையோ பெரிய முடிவாகச் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்பு ஏற்படுத்தி தொடர்ந்து பார்க்க வைத்ததைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயா ? பழைய பாஸ்தா மாவு.பிகு: இந்த படத்தை பதிவர்கள் டொன்லி, ஜோதிபாரதி, விஜய் ஆனந்த், முரு, சரவணன், வெற்றி கதிரவன்,ஜெகதீசன் ஆகியோருடன் பார்த்தேன். யாரும் நல்லா இருக்கிறது என்று சொல்லவில்லை.

35 கருத்துகள்:

yoguji சொன்னது…

ippadi oru unarvu poorvamaana nalla padangalai yaen yaertrukkolla marukkukineergal .....

padam super ... ten times paarpaen........


wow wat a pleasant experience.....

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

எச்சூச்மி,,, என்ட பேர பி.கு வில் இருந்து தூக்கிவிடுங்கள், நான் படம் பிடிக்கலன்னு நம்ம கூட வந்த யார்கிட்டயும் சொல்லல...

இன்று மீண்டும் இந்த படத்தை பார்க்க செல்லலாம் என்று இருக்கிறேன்... -:)


***

பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....

கோவி.கண்ணன் சொன்னது…

//
வெற்றி-[க்]-கதிரவன் said...

எச்சூச்மி,,, என்ட பேர பி.கு வில் இருந்து தூக்கிவிடுங்கள், நான் படம் பிடிக்கலன்னு நம்ம கூட வந்த யார்கிட்டயும் சொல்லல..இன்று மீண்டும் இந்த படத்தை பார்க்க செல்லலாம் என்று இருக்கிறேன்... -://

நீ க்ளைமாக்ஸுக்கு முன்பே எழுந்து போன ஆளு, மீண்டும் பார்த்தாலும் க்ளைமாக்ஸ் மொக்கையாகத்தான் இருக்கும்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//yoguji said...

ippadi oru unarvu poorvamaana nalla padangalai yaen yaertrukkolla marukkukineergal .....

padam super ... ten times paarpaen........
//

உங்களுக்கு பெரிய மனசுங்கோ !

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

எண்டு கார்ட் போடுரவரை சீட்ட விட்டு விலகவில்லை -:)))

ஷண்முகப்ரியன் சொன்னது…

எத்தனை மாறுபட்ட ரசனைகள்,பார்வைகள்,கண்ணன்!

ஜெகதீசன் சொன்னது…

?????????????????????????????????????????????????????????
படம் எனக்கு ரெம்பப் பிடிச்சிருந்தது...
யோவ் நீங்க எப்ப படம் நல்லா இருக்கான்னு என்கிட்ட கேட்டீங்க?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இவ்வளவி விரைவா போட்டாச்சா!


படம் பாக்க அழைக்கும் போதே தெரியும்!

விமர்சனம் சரி!

ஒரே உரையாடல் திரும்பத் திரும்ப வருவதுபோல் காட்சி அமைப்பு செய்து சலிக்கவைத்தது உண்மை.

அதனால் இனி தியேட்டர்காரர்கள் ஆட்களைத் தேடி சல்லடை போட்டு சலிக்கப் போவது திண்ணம்!

கவிஞர் தாமரையின் வரிகளை விழுங்கிய ரகுமானின் இசையும், காட்சியோடு வரும் பாடலும், இல்லாத கதையை விழுங்கும் ரெட் ஜயண்டாக குமிழிட்டு வெடித்ததென்னவோ உண்மை!

தமிழ் உதயம் சொன்னது…

உங்க விமர்சனத்தை படிச்சதால், எனக்கு நூறு ரூபாய் மிச்சம். உங்க ஷேர் ஐம்பது ரூபாயை அனுப்பிடுறேன்.

யாஹூராம்ஜி சொன்னது…

as vetri said, this film is meant for higher secondry school students and college students only.

I think they should have released in Apr14th instead of now.

Kesavan சொன்னது…

எனக்கு டிக்கட் கிடைக்க வில்லை . திங்கள் வரை கிடைகதாம் !!!!!

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

ஏ அண்ணே விமர்சன‌த்துல கலக்கிட்டாருடோய். :-)))

அப்பாவி முரு சொன்னது…

தப்பு., தப்பு...

படம் A செண்டரில் நூறுநாள் ஓடும் எனதான் நான் சொன்னேன்...

(ஐய்யா, யூத்தெல்லாம் சேர்ந்து பெரியவாவை கூட்டாக வாறிவிட்டுடோம்)

அப்பாவி முரு சொன்னது…

எல்லாத்தையும் தெளிவாக நீங்க எழுதிட்டீங்க, அதனால என்னோட பங்கு...

படத்தில் குடும்ப அமைப்புகள், பல காட்சிகள் முன்னமே பலபடங்களில் காட்டப்பட்டது தான். பட்டியலிட்டால்...

☀நான் ஆதவன்☀ சொன்னது…

வியாழக்கிழமையே பார்த்துட்டு பயங்கர டென்ஷன்.

என்னடா இது.... படத்தைப் பத்தி எல்லாரும் சூப்பரா இருக்குன்றாங்களேன்னு ஒரே அதிர்ச்சியா தான் இருந்தது. நீங்க அப்படியே என் கருத்தை சொல்லியிருக்கீங்க. ஆனா சிம்புவுக்கு கூட டயலாக் இல்லாம நடிக்க தெரியல...பல இடங்கள்ல உணர்ச்சியே இல்லாம தேமேன்னு தான் நிக்கிறார் :(

இரும்புத்திரை சொன்னது…

இந்த விமர்சனம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.என்ன செய்ய பிராண்ட் நேம் அப்படி.நான் விமர்சனம் எழுதினால் சண்டை வரும் போட தெம்பில்லாமல் இருப்பதால் இதை என்னுடைய விமர்சனமாக எடுத்து படம் பிடித்திருக்கும் எல்லோரும் அண்ணன் கோவியுடன் சண்டை போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி சொன்னது…

http://twitter.com/gurujegadeesan/status/9718003823

http://twitter.com/gurujegadeesan/status/9718042823

http://twitter.com/gurujegadeesan/status/9718113770

மேலே குறிப்பிட்டுள்ள லிங்க்களை பார்க்கவும்.. :)) #சிண்டுமுடிதல்

அக்பர் சொன்னது…

அண்ணே விமர்சனம் அருமை.

பதின்ம வயது தொடர் எழுதியாச்சு அண்ணா.

thamizan சொன்னது…

ஏனப்பா அவன் அவன் கஷ்ட பட்டு பணத்த செலவு பண்ணி எடுக்கறான் ? நீங்க என்னடான்ன 200௦௦ ருபாய் செலவு பண்ணிட்டு அது சரி இல்லே இது சரி இல்லேன்னு சொல்றீங்க . எழுதறதுக்கு எதாவது கிடைச்சா போதுமே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//thamizan said...
ஏனப்பா அவன் அவன் கஷ்ட பட்டு பணத்த செலவு பண்ணி எடுக்கறான் ? நீங்க என்னடான்ன 200௦௦ ருபாய் செலவு பண்ணிட்டு அது சரி இல்லே இது சரி இல்லேன்னு சொல்றீங்க . எழுதறதுக்கு எதாவது கிடைச்சா போதுமே ?//

ஓட்டலில் கூடத்தான் கஷ்டப்பட்டு சமைக்கிறார்கள், காசு கொடுத்து சாப்பிடும் நீங்கள் சாப்பாட்டில் கல் இருந்தால் ஓட்டல் ஓனரை க(டுப்ப)டிக்க மாட்டீர்களா ?

அவ்ளோ நல்லவரா ? அவ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

////thamizan said...
ஏனப்பா அவன் அவன் கஷ்ட பட்டு பணத்த செலவு பண்ணி எடுக்கறான் ? //

உதயநிதி தயாரிப்பில் வந்த படம் கஷ்டப்பட்ட பணம் என்று நீங்கள் சொல்லி தெரிந்து கொள்கிறேன், தகவலுக்கு நன்றி !

thamizan சொன்னது…

நான் உதய நிதிக்காக பெசலப்பா ? பொதுவா தான் சொன்னேன் ? உங்களுக்கு வயசு ஆகிடுச்சுங்க. அதனால பிடிக்கலை . வயசு பசங்க எவ்வளவு நேரம் கால் வலிக்க நிக்கறாங்க தெரியுமா ? உங்களுக்கு சாப்பாட்டுல கல் கிடைச்சுது . அவங்களுக்கு ???????????????? .ஆமாம் ரொம்ப கஷ்ட பட்டு தான் எடுதிருகிறாரு. இதுல போட்ட பணத்துக்கு மூன்று தலை முறை உதவி பண்ணாங்களே ? அது தெரியாதா ???

சீனு சொன்னது…

ஒரு சைடு விமர்சனமா இருக்கு. கௌதம் மேல கான்டா?

படம் நல்லா இருக்கு விமர்சனம் வருது...

கௌதம் படத்துல "...த்தா"ல்லாம் வரும். அதுக்காகவே போக மாட்டேன்.

டாரன்ட்-ல பாத்துக்கறேன்...

நட்புடன் ஜமால் சொன்னது…

சிம்பு படம் பார்க்க போனதற்கே உங்களுக்கு விருது கொடுக்கனும்ண்ணே

ஜெகதீசன் சொன்னது…

//
வெற்றி said...

http://twitter.com/gurujegadeesan/status/9718003823

http://twitter.com/gurujegadeesan/status/9718042823

http://twitter.com/gurujegadeesan/status/9718113770

மேலே குறிப்பிட்டுள்ள லிங்க்களை பார்க்கவும்.. :)) #சிண்டுமுடிதல்
//
:)))))

இதை விட்டுட்டீங்களே...
http://twitter.com/gurujegadeesan/status/9685055840
இது நேற்று இரவு படம் முடிந்து வெளியே வந்ததும் இட்டது....
:)

பிரியமுடன் பிரபு சொன்னது…

பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....


பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....


பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....


பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....


பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....


பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....


பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....


பி.கு :

பெரியவர் கோவியார், இந்த விமர்சனத்தின் மூலம் மீண்டும் தனக்கு வயதாகிவிட்டதை வெளிபடுத்திருக்கிறார்....

///////////

அதே அதே

நான் படம் பார்க போலாம்னு இருக்கேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷண்முகப்ரியன் said...

எத்தனை மாறுபட்ட ரசனைகள்,பார்வைகள்,கண்ணன்!//

நன்றி ஐயா,

பார்வைகள் பலவிதம் உண்மை தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி-[க்]-கதிரவன் said...

எண்டு கார்ட் போடுரவரை சீட்ட விட்டு விலகவில்லை -:)))//

:) படத்தில கடைசி காட்சி போட்டுவிட்டார்கள் என எழுந்து போனது என்னவாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

?????????????????????????????????????????????????????????
படம் எனக்கு ரெம்பப் பிடிச்சிருந்தது...
யோவ் நீங்க எப்ப படம் நல்லா இருக்கான்னு என்கிட்ட கேட்டீங்க?//

கேட்டேன் கேட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இவ்வளவி விரைவா போட்டாச்சா!//

12 மணி நேரம் சென்று தான் போட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் உதயம் said...

உங்க விமர்சனத்தை படிச்சதால், எனக்கு நூறு ரூபாய் மிச்சம். உங்க ஷேர் ஐம்பது ரூபாயை அனுப்பிடுறேன்.//

செய்யாத செலவு சேமிப்பு !

கோவி.கண்ணன் சொன்னது…

// சீனு said...

ஒரு சைடு விமர்சனமா இருக்கு. கௌதம் மேல கான்டா?

படம் நல்லா இருக்கு விமர்சனம் வருது...

கௌதம் படத்துல "...த்தா"ல்லாம் வரும். அதுக்காகவே போக மாட்டேன்.

டாரன்ட்-ல பாத்துக்கறேன்...//

கவுதம் மேல காண்டு எதுவும் இல்லை. அவருடைய ஆக்சன் படங்களெல்லாம் எனக்கு பிடித்தவையே. குறிப்பாக 'பச்சை கிளி முத்துச் சரம்'

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...

சிம்பு படம் பார்க்க போனதற்கே உங்களுக்கு விருது கொடுக்கனும்ண்ணே//

இன்று இளைய சூப்பர் ஸ்டார். நாளை நாளைய சூப்பர் ஸ்டார்....அவரைப் போய் நீங்க........

கோவி.கண்ணன் சொன்னது…

//thamizan said...

நான் உதய நிதிக்காக பெசலப்பா ? பொதுவா தான் சொன்னேன் ? உங்களுக்கு வயசு ஆகிடுச்சுங்க. அதனால பிடிக்கலை .//

60+ வயது தாத்தாவெல்லாம் 16 வயது பெண்களுடன் சோடி சேர்ந்து நடிக்கிறார்கள். படம் பார்க்கும் எனக்கு வயது மேட்டரே இல்லை.
நான் விடலைகளுடன் தான் படத்திற்கு சென்றேன். என் வயதை வைத்து கிண்டல் செய்யும் உரிமையை நான் எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு மட்டுமே அளிக்கிறேன். மற்றவர்களுக்கு நான் எந்த வயதாக இருந்தால் என்ன ?

//இதுல போட்ட பணத்துக்கு மூன்று தலை முறை உதவி பண்ணாங்களே ? அது தெரியாதா ???//

???????? எந்த தலைமுறைக்கு தினகரன் மதுரை .......???

’டொன்’ லீ சொன்னது…

//பிகு: இந்த படத்தை பதிவர்கள் டொன்லி, ஜோதிபாரதி, விஜய் ஆனந்த், முரு, சரவணன், வெற்றி கதிரவன்,ஜெகதீசன் ஆகியோருடன் பார்த்தேன். யாரும் நல்லா இருக்கிறது என்று சொல்லவில்லை
//

நான் படம் நல்லா இல்லை என்றும் சொல்லவில்லை...:-))))

எனக்கு அந்த படம் பிடித்திருந்தது...

மற்றவர்களே உங்களை துவைத்து காயப்போட்டு விட்டதால்..நான் உங்களை விட்டு விடுகிறேன் :-))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்